Page 178 of 397 FirstFirst ... 78128168176177178179180188228278 ... LastLast
Results 1,771 to 1,780 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #1771
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார் முரளி சார்
    இருவருமே 1978 1979 கால கட்டத்தை மிகச் சிறப்பாக நினைவில் கொண்டு வந்து விட்டீர்கள். நடிகர் திலகத்தின் திரையுலக வாழ்க்கையில் இன்னொரு வெற்றி இன்னிங்ஸ் தீபம் மூலம் தொடங்கிய கால கட்டம். நடிகர் திலகத்தின் படம் என்ற வகையில் தீபத்தின் வெற்றி சந்தோஷத்தைத் தந்தாலும், நம்மைப் போன்ற ரசிகர்களின் லட்சியப் படமான அவன் ஒரு சரித்திரத்திற்கு வில்லனாக வந்தது மன்னிக்கவே முடியவில்லை. இன்று வரை நம் நினைவில் இதை நினைத்தால் ஒரு லேசான சோக இழை ஓடுகிறது.
    இந்தக் கால கட்டங்களில் புதிய தலைமுறை ரசிகர்கள் நடிகர் திலகத்திற்கு உருவானதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். உணர்ந்திருக்கிறேன். அது விஸ்வரூபம் எடுத்தது திரிசூலம் படம் மூலம் தான்.
    அந்தமான் காதலி படத்தைப் பொறுத்தமட்டில் சென்னை நகர விநியோகஸ்தர்களின் அலுவலகத்திற்கு நாங்கள் நடந்த நடையை அளந்தால் சென்னையிலிருந்து டில்லிக்கு நடையாகவே சென்று திரும்பியிருக்கலாம். ஆனால் அவர்களை மிகவும் பாராட்ட வேண்டும். எங்களுக்கு மிக நன்றாக ஒத்துழைப்புத் தந்து விளம்பரங்களைப் பதிவிட்டார்கள். அது மறக்க முடியாத அனுபவம். சென்னைப் பதிப்பில் வரும் விளம்பரமே எல்லா ஊர்களுக்கும் வரும் என்பதால் எங்களுக்கு பன்மடங்கு மகிழ்ச்சி. இனனும் சொல்லப் போனால் ஒரு சந்தர்ப்பத்தில் வாசகங்களைக் கூட நாங்களே அவர்களின் அலுவலகத்தில் எழுதிக் கொடுத்து அது பிரசுரமானதும் நடைபெற்றுள்ளது.

    இதை எழுதும் இந்த ரசிகருக்கும் தீவிர சிவாஜி பைத்தியம் தொற்ற ஆரம்பித்ததும் இக்காலகட்டத்தில் தான்.

    இது போன்ற மலரும் நினைவுகளை இன்னும் விஸ்தாரமாக கீற்றுக் கொட்டகையில் பகிர்ந்து கொள்வோம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #1772
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கிருஷ்ணா
    கலைவாணரின் நினைவை அருமையாக போற்றியுள்ளீர்கள் பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1773
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்புமிக்க சிக சார்
    தங்கள் உடல்நிலை எவ்வாறுள்ளது.
    உடல்நிலையை கவனிக்கவும்.
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1774
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வினோத் சார்
    அருமையான அதே சமயம் அபூர்வமான அந்நாள் நிழற்படங்கள் தங்களுடைய பங்களிப்பின் மேன்மையை உணர்த்துகின்றன.
    மேலும் தங்கள் பொக்கிஷத்தை எங்களுக்காக திறவுங்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1775
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Rathnakumar (1949)

    NSK sings about " test tube" babies in 1949 ?

    vingnanathai vaLarkka poreNdi......

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  8. #1776
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    அன்பு முரளி சார்/வாசு ஜி /நண்பர் சி கே

    வாசுவின் 'காற்றினிலே வரும் கீதம் ' பதிவு, முரளி சார்,மீண்டும் வாசு சார்,சி கே சார் பதிவுகளின் மூலம் மிக சிறந்த மலரும் நினைவுகளாக வாடா மலர் ஆக பரிமளிக்க செய்து விட்டது 1978 ஆம் ஆண்டு. 1978 ஆம் ஆண்டு ஆரம்பமே அமர்க்களம் . 1977 ஆம் ஆண்டில் தான் தேர்தல் முடிந்து மக்கள் திலகம் முதல்வராக பதவி ஏற்று கொண்டார். 1977 தீபாவளி மறக்க முடியாத அண்ணன் ஒரு கோயில், அதோடு வேடசந்தூர் புயல்,மேலும் நெருக்கடி நிலை தளர்வு காரணமாக கல்லூரியில் போராட்டங்கள் அதன் காரணமாக தேதி அறிவிக்கபடாமல் கால வரையற்ற கல்லூரி விடுமுறை ,அதனால் தள்ளி போன கல்லூரி முதல் செமஸ்டர் தேர்வுகள் எல்லாம் டிசம்பர் இல் முடிந்து 1978 ஆம் ஆண்டு பிறக்கிறது.எங்களுக்கும் இரண்டாம் செமஸ்டர் ஆரம்பம்

    அப்போது எல்லாம் இப்போது போல் ஜனவரி முதல் தேதி கொண்டாட்டங்கள் என்பது எதுவும் கிடையாது. ஜனவரி பிறந்தால் பொங்கல் அதனை ஒட்டி வரும் 3 தினங்கள் விடுமுறை ,அதனால் வெளியாகும் திரைப்படங்கள் ,ஜனவரி 26 அன்று ஏதாவது கே பாலாஜியின் ஹிந்தி திரை படங்களை தழுவி எடுக்கப்பட்ட நடிகர் திலகதின் படம் இப்படி தான் கொண்டாட்டங்கள் இருக்கும். 1978 ஜனவரி பொங்கலுக்கு மக்கள் திலகத்தின் மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் நெல்லை சென்ட்ரலில் ரிலீஸ் . இதனை MMS பாண்டியன் என்று அந்நாளில் சுருக்கி அழைப்பார்கள் 68 தினங்கள் ஓடியதாக கருதுகிறேன்.மெல்லிசை மன்னரின் இனிய கீதங்கள் 'அமுதும் தமிழும் எழுதும் கவிதை','தென்றலில் ஆடும் ','தாயகத்தின் சுதந்திரமே ' நிறைந்த படம்.மார்ச் 24 அன்று நிழல் நிஜமாகிறது ரிலீஸ்.மக்கள் திலக ரசிகர்கள் MMS பாண்டியன் 100 நாட்கள் ஓடாததால் கொஞ்சம் அப்செட். 1977 தேர்தல் கூட்டணியால் மக்கள் திலகம் நடிகர் திலகம் ரசிகர்கள் ஓரளவு ராசியாக இருந்த நேரம். மக்கள் திலகமும் திரை உலகை விட்டு முழு நேர அரசியல் வாதியாக மாறிய நேரம்
    .
    இந்த நேரத்தில் 26 ஜனவரி அன்று கே பாலாஜியின் திரை படத்தை எதிபார்த்து இருந்த எங்களுக்கு முக்தா ஸ்ரீனிவாசனின் 'அந்தமான் காதலி' நெல்லை பூர்ணகலாவில் ரிலீஸ் என்ற உ டன் கொஞ்சம் பயந்தோம். 1974 தீபாவளி வெளியீடு 'அன்பை தேடி' வெற்றியை தேட வேண்டியதாகி அதனால் 3 ஆண்டுகள் 75,76,77 நடிகர் திலகம் படம் எதுவும் எடுக்காமல் இருந்த முக்தா ஸ்ரீனிவாசனின் படம் என்ற உடன் ஒரு பயம். ஏற்கனவே கண் பார்வை போன காதலிகாக வருந்தும் நிறைகுடம்(நெல்லை ராயல்) ,மாலை கண் நோய் தவப்புதல்வன் (நெல்லை ரத்னா) ,கனவுலக மனநோய் அன்பை தேடி (நெல்லை பூர்ணகலா) என்று நோய் வாய்ப்பட்ட முக்தா படம் கொஞ்சம் நெல்லை ரசிகர்கள் அவ்வளவாக முக்தாவின் மீது நாட்டம் இல்லாமல் இருந்த காலம் .அதே 26/1/78 நாளில் கமலஹாசனின் பருவ மழை நெல்லை ரத்னாவில் ரிலீஸ் (மதனோற்சவம் மலையாள டப்பிங்).

    முதல் காட்சி ரசிகர் மன்ற காட்சி வழக்கம் போல் நடிகர் திலகம் தரிசனம் கண்டு படம் நல்ல ரிசல்ட் என்ற களிப்புடன் மாலையில் திரை அரங்கின் வாசலில் நின்று வரிசையில் நின்று கொண்டு இருந்த மற்ற ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடம் படம் பற்றி சிலாகிக்து விட்டு இரவு காட்சி மதனோற்சவம் என்ற பருவ மழையில் நனைந்த மாட புறாவாக திரும்பினோம்.இரவு முழுவதும் சரீனா வாஹாப் (பருவ மழை கதாநாயகி) நினைவுடன் 'அடி லீலா கிருஷ்ணா ' என்று பாடல் அடிகடி நினைவுக்கு வந்து,
    அதிலும் 'பாடும் புல் புல் பாவைகளா
    இது தான் உங்கள் தேவைகளா
    பாடும் புல் புல் பாவைகளா
    இது தான் உங்கள் தேவைகளா' என்ற வரிகளிலும்

    'பூவார் குழலி என்னிடம் வந்தால்
    பொன்னாரம் கொடுப்பேன்
    பூஜை அறையில் ஆசை கலையில்
    புது வேதம் படிப்பேன்
    ஏனடி அழகுப் பெண்ணே
    பாராடி அபலைப் பெண்ணே
    கையில் இல்லாத குற்றம் தானே
    கேட்டாய் பொன்னை

    அடி ரங்கன் சிங்கன் சுப்பன் வரிசையில்
    என்னையும் சேர்த்தாயோ
    நான் நாளது வரையில் ராதா கிருஷ்ணன்
    சொன்னேன் கேட்டாயோ

    பாடும் புல் புல் பாவைகளா
    இது தான் உங்கள் தேவைகளா
    பாடும் புல் புல் பாவைகளா
    இது தான் உங்கள் தேவைகளா' வரிகளிலும்

    மனதை பறி கொடுத்து பாட்டு புத்தகம் வாங்கி வாசு சொன்னது போல் சந்திர மோகனுக்கு பதிலாக நடிகர் திலகத்தை கற்பனை செய்தே பிற நண்பர்கள் உடன் பாடி கழித்த பாடல்.டி எம் எஸ் கொடி கொஞ்சம் தாழ்வாக பறந்த காலம் .அப்போது நெல்லையில் பாடகர்களுக்கு 3 குரூப் டி எம் எஸ் குழு,ஜேசுதாஸ் குழு,எஸ் பி பி குழு என்று நண்பர்களிடம் இருக்கும்.அதே போன்று இசையில் 'மெல்லிசை மன்னர்','இளையராஜா ' (இசை ஞானி,மொட்டை எல்லாம் 80 களுக்கு பின் தான் ).அந்தமான் காதலியில் எஸ் பி பி பாடல் இல்லை என்ற உடன் அந்த நண்பர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தனர்.

    இதற்கிடையில் தியாகம் மார்ச் 4 அன்று நெல்லை பார்வதி ரிலீஸ்.தீபத்திற்கு பிறகு நடிகர் திலகத்திற்கு இளையராஜா இசை .நடிகர் திலகம் பட்டையை போட்டு பட்டையை கிளப்பிய திருவிழா டான்ஸ்,ஜஸ்டின் சண்டை ,'தேன் மல்லி பூவே','உலகம் வெறும் இருட்டு', போன்ற ஜனரஞ்சக பாடல்களால் பார்வதி திரை அரங்கமே அல்லோகலம். இதிலும் பாலா பாடல் கிடையாது. இந்நிலையில்,சிவாஜி ரசிகர்கள் எல்லாம் சந்தோசமாக இருந்த நேரத்தில் நன்றாக ஓடி கொண்டு இருந்த அந்தமான் காதலி எதிர்பாராத விதமாக 51வது நாள் கடைசி என்று செய்தி காதில் இடியாக விழுந்தது. மார்ச் 18 முதல் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த ராமண்ணாவின் 'என்னை போல் ஒருவன் ' நெல்லை பூர்ணகலாவில் ரிலீஸ் என்று செய்தி அறிந்ததும் அந்தமான் காதலி திரைப்பட விநியோகஸ்தர் சுவாமி பிலிம்ஸ் அலுவலகத்திற்கும்,என்னை போல் ஒருவன் திரைப்பட விநியோகஸ்தர் ராணி பிலிம்ஸ் (இதன் அதிபர் திரு மு சூரியநாராயணன் முன்னாள் மேயர் -விஜயா சூரி combines மறுபிறவி,வைரம்,தங்கத்திலே வைரம்,குப்பத்து ராஜா போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர்-மிசா நெருக்கடி கால நிலையில் கைது செய்யப்பட்டு தனக்கும் தி மு க விற்கும் தொடர்பு கிடையாது என்று நாள் இதழ்களில் விளம்பரம் கொடுத்தார் ) அலுவலகத்திற்கும் நாய்கள் போன்று நெல்லை மன்றத்தில் இருந்து சென்றோம். என்னை போல் ஒருவன் படத்திற்கு கொடி கட்ட மாட்டோம்,மன்ற வரவேற்பு பதாகை எதுவும் வைக்க மாட்டோம்,மறியல் போராட்டங்களில் ஈடு படுவோம் என்று எல்லாம் சொல்லி பார்த்தோம். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு தான். ராணி பிலிம்ஸ் விநியோக அலுவலர்களே (அனைவரும் தி மு கழகத்தை சேர்ந்தவர்கள் ) காங்கிரஸ் கொடி கட்டி,நெல்லை தலைமை மன்ற வரவேற்பு பதாகைகளையும் தோரணங்களையும்,வளைவுகளையும் செய்து விட்டனர்.காலத்தின் கட்டாயம் என்பது இதுதான் போலும். இவ்வளவுக்கும் நெல்லை பூர்ணகலா திரை அரங்க நிறுவனர் அந்நாளைய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.நடிகர் திலகத்தின் பரம விசிறி .மேலும் தலைமை மன்ற வரவேற்பு பதாகையை மன்றத்தில் இருந்த ஒருவரே எங்களுடன் அந்தமான் காதலி இறுதி நாள் இரவு காட்சி பார்த்த சிவாஜி மன்ற உறுப்பினரே ராணி பிலிம்ஸ்/திரை அரங்கில் கொண்டு கொடுத்த அவல நிலை .பின்னாளில் இந்த உறுப்பினரே காங்கிரஸ் கட்சியிலும் ,மன்றத்திலும் மிக பெரிய பொறுப்புக்கு வந்த துர்ப்பாக்கிய நிலை .

    சிலர் இப்போது சொல்லலாம்
    'என்னை போல் சிவாஜி ரசிகர் கிடையாது .அவர் படத்தை நான் பார்த்தது போல் யாரும் பார்க்க முடியாது . பார்த்தாலும் என்னை போல் ரசிக்க முடியாது. ரசித்தாலும் என்னை போல் எங்கும் யாராலும் சிலாகித்து எழுத முடியாது போனால் போகிறது என்று தருமி போல் உங்களை எல்லாம் இந்த திரியில் ஒரு பதிவாளராக ஏற்று கொண்டு இருக்கிறோம் ' .என்று

    1978/79/80 கால கட்டத்தில் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்கள் காங்கிரஸ் கட்சியால் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமா ..என்னை போல் ஒருவன் பரபரப்பு எதுவும் இல்லாமல் 45 நாட்கள் ஓடியது

    மார்ச் 24 அன்று பாலச்சந்தர் கமல் இணைந்த 'இலக்கணம் மாறிய கம்பன் ஏமாந்த' கருப்பு வெள்ளை நிழல் நிஜமாகிறது நெல்லை சென்ட்ரல் ரிலீஸ் .பாலா ரசிகர்களும்,மெல்லிசை மன்னர் ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தார்கள் .இதே நேரத்தில் ரஜினி,லதா ,விஜயகுமார் நடித்து என் வீ யார் pictures 'ஆயிரம் ஜென்மங்கள் 'நெல்லை ரத்னாவில் வெளியாகி 'வெண் மேகமாக' வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. ரஜினி,லதா கிசு கிசு பரவலாக பட்டி தொட்டி எங்கும் மாய மூக்குத்தி ஆக பரவி கொண்டு இருக்கிறது.இதற்கு முன்னரே பிப்ரவரியில் ரஜினி ,லதா,விஜி,மஞ்சு,ஜெய் கணேஷ்,வசந்தி(பஞ்ச கல்யாணி) ஜோடிகளில் நெல்லை சிவசக்தியில் வெளியான நடிகர் திலகம் முகாமில் இருந்து பிரிந்து வந்த பி மாதவன் இயக்கிய அருண் பிராசாத் மூவிஸ் சங்கர் சலீம் சைமன் படத்தில் இடம் பெற்ற 'அவனுக்கும் ஆசை வந்து அவளுக்கும் ஆசை வந்தா அரசாங்கம் கூட தடுக்க முடியாது ' என்ற பாடலின் போது பிளந்த விசில் சப்தம் இன்றும் காதை நொய் என்று குடைந்து கொண்டு தான் இருக்கிறது

    ஏப்ரல் 14 நடிகர்திலகம் 'கௌரவ வேடம்' என்று டைட்டில் கார்ட் போட்ட ஆனால் படம் முழுவதும் வரும் 'வாழ்க்கை அலைகள் ' நெல்லை சென்ட்ரல் ரிலீஸ். பாலா சுசீலா இணைந்த குரல்களில் 'உன் கண்களிலோ கனிகள் ' பாடல் நெல்லை வானொலி ஞாயிறு இரவு நேயர் விருப்பம் 8-8.30 நிகழ்ச்சியில் படு பிரபலம் .

    மே மாதத்தில் மீண்டும் நடிகர் திலகத்தின் 'புண்ணிய பூமி' சிவசக்தியில் .இதே நேரத்தில் நெல்லை ரத்னாவில் ஆயிரம் ஜென்மங்கள் 50 நாட்கள் கடந்து விழா கொண்டாடி பின் ரஜினி வில்லனாக நடித்த சந்திர போஸ் இசையில் வெளிவந்த வி சி குகநாதனின் கருப்பு வெள்ளை 'மாங்குடி மைனர்' ரிலீஸ். விஜயகுமார் மக்கள் திலகம் புகழ் பாட ஆரம்பித்த நேரம்.மக்கள் கலைஞர் வர்ணம் மாற ஆரம்பித்த நேரம் .நெல்லை சென்ட்ரலில் நிழல் நிஜமாகிறது 50 நாள் முடிந்து 'வருவான் வடிவேலன் ' வெளியீடு .மெல்லிசை மன்னர் இசையில் லத்து பக்தி பரவசத்துடன் காவடி ஆடிய படம். பெண்களின் அரோகரா சப்தத்தில் ,பாலாவின் 'ஜாய் புல் சிங்கபூர் ,கலர் புல் மலேசிய ' என்று சப்தமில்லாமல் 70 நாட்கள் கடந்த வெற்றி படம்

    ஜூன் தியாகம் 100வது நாள் விழா நெல்லை பார்வதியில் மீண்டும் சிவாஜி ரசிகர்கள் -காங்கிரஸ் கட்சியினர் ரகளை அரங்கேற்றம் . 100வது நாள் மாலை காட்சி காங்கிரஸ் கட்சி விழாவாகவும் ,இரவு காட்சி ரசிகர் மன்ற விழாவாகவும் நடந்தேறியது . நடிகர் திலகத்தின் ஜெனரல் சக்கரவர்த்தி நெல்லை பார்வதியில் தியாகத்திற்கு பிறகு வெளியாகிறது .இதே மாதத்தில் தான் நெல்லை பூர்ணகலாவில் கமல்,ரஜினி நடித்த ஸ்ரீதரின் மீண்டும் முக்கோண காதல் கதை 'ஒரே நாள் உன்னை நாள் ' என்று இளைமை ஊஞ்சல் ஆட ஆரம்பித்தது. நியூ ராயலில் சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் ரஜினி தனி ஹீரோவாக அரங்கேற்றம் ஆகிய நடிகர் திலகத்தின் ஸ்டைல் பாடல் 'நண்டூருது நரியூருது' பைரவி '

    ஜூலையில் நெல்லை ரத்னாவில் வெளியான 'வணக்கத்துக்குரிய காதலியே' விஜி ஸ்ரீதேவி ,ரஜினி ஸ்ரீதேவி இணைவில் வந்த ஞே ராஜேந்திர குமார் கதை .மெல்லிசை மன்னர் இசை -ஜாலி ஆபிரகாம் ஜல்லி அடிக்க ஆரம்பித்த நேரம் . திருலோக் இயக்கம் அவ்வளவாக பரபரப்பை கிளப்ப வில்லை .

    ஆகஸ்ட் பராதி ராஜவின் இரண்டாவது படம் 'கிழக்கே போகும் ரயில்' நெல்லை நியூ ராயல் திரை அரங்கில் மாஞ்சோலை குயிலாக கூவ ஆரம்பிக்க ,பின்னாலேயே மகேந்திரனின் செந்தாழம் பூ நெல்லை சென்ட்ரலில் முள்ளும் மலராக பரிமளிக்க, நெல்லையில் உள்ள எந்த டீ கடைக்கு சென்றாலும் ரசிகர்கள் 15 பைசா டீக்கும் 25 பைசா விவா டீ க்கும் டீ மாஸ்டர் தாடையை கொஞ்சியும் கெஞ்சியும் LP இனிரிகோ ,HMV இசைக்க கேட்ட காலம் .கிழக்கே போகும் ரயில் 100வது நாள் விழா நெல்லை ராயலில் கோலாகலமாக நடந்தேறியது . சுதாகர் என்ற மொக்கை ஹீரோ 'ஆல' மரமான தமிழ் சினிமாவை 'ஆழ'ம் இல்லாமல் 'ஆள' ஆரம்பிக்கிறார் . தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகலாம் என்ற புது விதி நமது தலை விதியாகிறது. பாரதிராஜா ஆரம்பித்த மாற்றம் இன்றும் தொடர்கிறது. 78 களில் ஏற்பட்ட சில கெட்ட மாற்றங்களில் இதுவும் ஒன்று.

    வருகிறது தீபாவளி மாதம் அக்டோபர்
    வந்தார் அய்யா 'இலங்கையில் இளங்குயில் உடன் இன்னிசை பாடிய' எங்கள் பைலட் பிரேம்நாத் .நெல்லை சென்ட்ரல்லில் .பெல்ட் எடுத்து கொண்டு உறுமி நிற்கும் போஸ்டர் கூட நினைவில் இருக்கிறது. நெல்லை சென்ட்ரல் திரை அரங்கில் மாடி ஏறும் போது ஒரு பெரிய கண்ணாடி இருக்கும் .அதற்கு அருகில் வாயிலை பார்த்து ஒரு ஷோ கேஸ் இருக்கும். அதில் இந்த போஸ் உள்ள போஸ்டர் ஒட்டப்பட்டு ரசிகர்களால் மாலை போடப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது .

    78 தீபாவளி கோலாகலத்தை மறக்க முடியுமா ? நெல்லை பூர்ணகலாவில் வண்டிக்காரன் மகன்,சிவசக்தியில் 'தப்பு தாளங்கள்',
    ரத்னாவில் 'மனதிரில் இதனை நிறங்களா ',பார்வதியில் 'தாய் மீது சத்தியம் '.லக்ஷ்மியில் ஜேப்பியாரின் 'தங்க ரங்கன் ' ,பாபுலர் இல் 'சிகப்பு ரோஜாக்கள் ' .கிழக்கே போகும் ரயில் ராயலில் தீபாவளிக்கு தொடர்ந்தது . ரத்னாவில் 10 தினங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் மைல் கல் ருத்ராய்யாவின் 'அவள் அப்படிதான்' 3 தினங்கள் மட்டுமே (3 திங்கள் ஓட வேண்டிய படம்) .கொஞ்சம் தினங்கள் கழித்து மீண்டும் நடிகர் திலகத்தின் தசோலி அம்பு சாக்கடை சந்து என்று அந்நாட்களில் சொல்லப்படும் நெல்லை லக்ஷ்மியில் .நடிகர் திலகத்தின் தெய்வமகன்,பாபு,ஞான ஒளி எல்லாம் இங்கே தான் சாக்கடையில் விழுந்து டிக்கெட் எடுத்து திரை அரங்கு உள் சென்று சட்டையை 'எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது ' சபரிமலை பாடல் போல் எப்போதும் நறுமணம் கமிழும் நெல்லை லக்ஷ்மி கக்கூஸ் இல் பிழிந்து காய போட்டு மேல் சட்டை இல்லாமல் நோஞ்சான் பாடி உடன் பார்த்த களித்த, கழித்த நாட்கள் தான் எத்துனை எத்துனை

    டிசம்பர் இல் நடிகர் திலகத்தின் பரபரப்பு இல்லாமல் நெல்லை நியூ ராயலில் 'ஜஸ்டிஸ் கோபிநாத் ', நெல்லை பார்வதியில் மேற்கத்திய சங்கீதத்தை தமிழ் ரசிகர்களின் நாடி நரம்புகளில் கிடார் கம்பிகளின் மூலமாக ஏற்றிய (டார்லிங் டார்லிங் I லவ் யு) ப்ரியா,நெல்லை ரத்னாவில் ரஜினிகாந்த் - விஜயகாந்த் இணைந்து வந்து இருக்க வேண்டிய இறுதியில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்கள் தாங்கி வந்த மீண்டும் அருண் பிரசாத் மூவிஸ் மாதவனின் 'என் கேள்விக்கு என்ன பதில் '

    இதனை களேபரங்களுக்கும் நடுவில் வெள்ளிகிழமை ஹீரோ ஜெய்

    'டாக்ஸி டிரைவர் (Parvathi),சக்கை போடு போடு ராஜா (Rathna),'உள்ளத்தில் குழந்தையடி' (Sivasakthi),'மேள தாளங்கள்' (central),'முடி சூடா மன்னன் ' (lakshmi),'வாழ நினைத்தால் வாழலாம் '(popular),ராஜ்வுகேற்ற ராணி' (lakshmi),'மக்கள் குரல்' (lakshmi),'இது எப்படி இருக்கு' (sivasakthi),'இளையராணி ராஜலக்ஷ்மி' (rathna)

    சிவகுமார்
    'கண்ணாமூச்சி' (central),'சொன்னது நீதானா ' (rathna),'அதை விட ரகசியம்' (poornakalaa),'சிட்டு குருவி (sivasakthi)(வாசு சிலாகித்து எழுதிய இளைய ராஜாவின் இனிய பாடல்கள் நிறைந்தும் பறக்க முடியாமல் போனது )
    ,'கை பிடித்தவள்' (not in memory),'கண்ணன் ஒரு கை குழந்தை' (lakshmi),'ராதைகேற கண்ணன் ' (rathna)

    முத்துராமன் 'வயசு பொண்ணு (rathna),அவள் தந்த உறவு (pornakalaa),வாழ்த்துங்கள் (sivasakthi),உறவுகள் என்றும் வாழ்க(lakshmi) ,பேர் சொல்ல ஒரு பிள்ளை (parvathi),அன்ன பூரணி (sivasakthi),அச்சாணி (lakshmi) போன்ற படங்கள்

    ஸ்ரீகாந்த் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (central),சதுரங்கம் (sivasakthi)(ரஜினியும் உண்டு),கருணை உள்ளம் (lakshmi),ஒரு வீடு இரு உலகம் (rathna) ,அக்னி பிரவேசம் (central) -கருணை உள்ளம் ஸ்ரீகாந்திற்கு சிறந்த நடிகர் என்ற தமிழ் நாடு அரசு விருது வழங்கியது

    என்று சிந்து பாடி கொண்டு தான் இருந்தார்கள்.

    மிகவும் நீண்டு விட்டது . மன்னிக்க வேண்டுகிறேன்

    இத்தனைக்கும் நடுவில் இரண்டாம் செமஸ்டர்,மூன்றாம் செமஸ்டர் எந்த arrear இல்லாமல் பாஸ் செய்தேன் (கொஞ்சம் sj ப்ளீஸ் பொறுத்தருள்க
    )

    திரைப்படங்களும் arrear இல்லை

    பொறுமையாக படித்த அனைவருக்கும் என் நன்றி

    மலரும் நினைவுகளை மீட்ட வாய்ப்பு அளித்து உங்களுக்கு எல்லாம் ஆப்பு வைத்த நண்பர் வாசு/முரளி/சி கே/கல்நாயக் அவர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்
    Last edited by gkrishna; 29th November 2014 at 06:29 PM.
    gkrishna

  9. #1777
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Sweet memories krishna ji

    thanks

    Quote Originally Posted by gkrishna View Post

    அன்பு முரளி சார்/வாசு ஜி /நண்பர் சி கே

    வாசுவின் 'காற்றினிலே வரும் கீதம் ' பதிவு, முரளி சார்,மீண்டும் வாசு சார்,சி கே சார் பதிவுகளின் மூலம் மிக சிறந்த மலரும் நினைவுகளாக வாடா மலர் ஆக பரிமளிக்க செய்து விட்டது 1978 ஆம் ஆண்டு. 1978 ஆம் ஆண்டு ஆரம்பமே அமர்க்களம் . 1977 ஆம் ஆண்டில் தான் தேர்தல் முடிந்து மக்கள் திலகம் முதல்வராக பதவி ஏற்று கொண்டார். 1977 தீபாவளி மறக்க முடியாத அண்ணன் ஒரு கோயில், அதோடு வேடசந்தூர் புயல்,மேலும் நெருக்கடி நிலை தளர்வு காரணமாக கல்லூரியில் போராட்டங்கள் அதன் காரணமாக தேதி அறிவிக்கபடாமல் கால வரையற்ற கல்லூரி விடுமுறை ,அதனால் தள்ளி போன கல்லூரி முதல் செமஸ்டர் தேர்வுகள் எல்லாம் டிசம்பர் இல் முடிந்து 1978 ஆம் ஆண்டு பிறக்கிறது.எங்களுக்கும் இரண்டாம் செமஸ்டர் ஆரம்பம்

    அப்போது எல்லாம் இப்போது போல் ஜனவரி முதல் தேதி கொண்டாட்டங்கள் என்பது எதுவும் கிடையாது. ஜனவரி பிறந்தால் பொங்கல் அதனை ஒட்டி வரும் 3 தினங்கள் விடுமுறை ,அதனால் வெளியாகும் திரைப்படங்கள் ,ஜனவரி 26 அன்று ஏதாவது கே பாலாஜியின் ஹிந்தி திரை படங்களை தழுவி எடுக்கப்பட்ட நடிகர் திலகதின் படம் இப்படி தான் கொண்டாட்டங்கள் இருக்கும். 1978 ஜனவரி பொங்கலுக்கு மக்கள் திலகத்தின் மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் நெல்லை சென்ட்ரலில் ரிலீஸ் . இதனை mms பாண்டியன் என்று அந்நாளில் சுருக்கி அழைப்பார்கள் 68 தினங்கள் ஓடியதாக கருதுகிறேன்.மெல்லிசை மன்னரின் இனிய கீதங்கள் 'அமுதும் தமிழும் எழுதும் கவிதை','தென்றலில் ஆடும் ','தாயகத்தின் சுதந்திரமே ' நிறைந்த படம்.மார்ச் 24 அன்று நிழல் நிஜமாகிறது ரிலீஸ்.மக்கள் திலக ரசிகர்கள் mms பாண்டியன் 100 நாட்கள் ஓடாததால் கொஞ்சம் அப்செட். 1977 தேர்தல் கூட்டணியால் மக்கள் திலகம் நடிகர் திலகம் ரசிகர்கள் ஓரளவு ராசியாக இருந்த நேரம். மக்கள் திலகமும் திரை உலகை விட்டு முழு நேர அரசியல் வாதியாக மாறிய நேரம்
    .
    இந்த நேரத்தில் 26 ஜனவரி அன்று கே பாலாஜியின் திரை படத்தை எதிபார்த்து இருந்த எங்களுக்கு முக்தா ஸ்ரீனிவாசனின் 'அந்தமான் காதலி' நெல்லை பூர்ணகலாவில் ரிலீஸ் என்ற உ டன் கொஞ்சம் பயந்தோம். 1974 தீபாவளி வெளியீடு 'அன்பை தேடி' வெற்றியை தேட வேண்டியதாகி அதனால் 3 ஆண்டுகள் 75,76,77 நடிகர் திலகம் படம் எதுவும் எடுக்காமல் இருந்த முக்தா ஸ்ரீனிவாசனின் படம் என்ற உடன் ஒரு பயம். ஏற்கனவே கண் பார்வை போன காதலிகாக வருந்தும் நிறைகுடம்(நெல்லை ராயல்) ,மாலை கண் நோய் தவப்புதல்வன் (நெல்லை ரத்னா) ,கனவுலக மனநோய் அன்பை தேடி (நெல்லை பூர்ணகலா) என்று நோய் வாய்ப்பட்ட முக்தா படம் கொஞ்சம் நெல்லை ரசிகர்கள் அவ்வளவாக முக்தாவின் மீது நாட்டம் இல்லாமல் இருந்த காலம் .அதே 26/1/78 நாளில் கமலஹாசனின் பருவ மழை நெல்லை ரத்னாவில் ரிலீஸ் (மதனோற்சவம் மலையாள டப்பிங்).

    முதல் காட்சி ரசிகர் மன்ற காட்சி வழக்கம் போல் நடிகர் திலகம் தரிசனம் கண்டு படம் நல்ல ரிசல்ட் என்ற களிப்புடன் மாலையில் திரை அரங்கின் வாசலில் நின்று வரிசையில் நின்று கொண்டு இருந்த மற்ற ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடம் படம் பற்றி சிலாகிக்து விட்டு இரவு காட்சி மதனோற்சவம் என்ற பருவ மழையில் நனைந்த மாட புறாவாக திரும்பினோம்.இரவு முழுவதும் சரீனா வாஹாப் (பருவ மழை கதாநாயகி) நினைவுடன் 'அடி லீலா கிருஷ்ணா ' என்று பாடல் அடிகடி நினைவுக்கு வந்து,
    அதிலும் 'பாடும் புல் புல் பாவைகளா
    இது தான் உங்கள் தேவைகளா
    பாடும் புல் புல் பாவைகளா
    இது தான் உங்கள் தேவைகளா' என்ற வரிகளிலும்

    'பூவார் குழலி என்னிடம் வந்தால்
    பொன்னாரம் கொடுப்பேன்
    பூஜை அறையில் ஆசை கலையில்
    புது வேதம் படிப்பேன்
    ஏனடி அழகுப் பெண்ணே
    பாராடி அபலைப் பெண்ணே
    கையில் இல்லாத குற்றம் தானே
    கேட்டாய் பொன்னை

    அடி ரங்கன் சிங்கன் சுப்பன் வரிசையில்
    என்னையும் சேர்த்தாயோ
    நான் நாளது வரையில் ராதா கிருஷ்ணன்
    சொன்னேன் கேட்டாயோ

    பாடும் புல் புல் பாவைகளா
    இது தான் உங்கள் தேவைகளா
    பாடும் புல் புல் பாவைகளா
    இது தான் உங்கள் தேவைகளா' வரிகளிலும்

    மனதை பறி கொடுத்து பாட்டு புத்தகம் வாங்கி வாசு சொன்னது போல் சந்திர மோகனுக்கு பதிலாக நடிகர் திலகத்தை கற்பனை செய்தே பிற நண்பர்கள் உடன் பாடி கழித்த பாடல்.டி எம் எஸ் கொடி கொஞ்சம் தாழ்வாக பறந்த காலம் .அப்போது நெல்லையில் பாடகர்களுக்கு 3 குரூப் டி எம் எஸ் குழு,ஜேசுதாஸ் குழு,எஸ் பி பி குழு என்று நண்பர்களிடம் இருக்கும்.அதே போன்று இசையில் 'மெல்லிசை மன்னர்','இளையராஜா ' (இசை ஞானி,மொட்டை எல்லாம் 80 களுக்கு பின் தான் ).அந்தமான் காதலியில் எஸ் பி பி பாடல் இல்லை என்ற உடன் அந்த நண்பர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தனர்.

    இதற்கிடையில் தியாகம் மார்ச் 4 அன்று நெல்லை பார்வதி ரிலீஸ்.தீபத்திற்கு பிறகு நடிகர் திலகத்திற்கு இளையராஜா இசை .நடிகர் திலகம் பட்டையை போட்டு பட்டையை கிளப்பிய திருவிழா டான்ஸ்,ஜஸ்டின் சண்டை ,'தேன் மல்லி பூவே','உலகம் வெறும் இருட்டு', போன்ற ஜனரஞ்சக பாடல்களால் பார்வதி திரை அரங்கமே அல்லோகலம். இதிலும் பாலா பாடல் கிடையாது. இந்நிலையில்,சிவாஜி ரசிகர்கள் எல்லாம் சந்தோசமாக இருந்த நேரத்தில் நன்றாக ஓடி கொண்டு இருந்த அந்தமான் காதலி எதிர்பாராத விதமாக 51வது நாள் கடைசி என்று செய்தி காதில் இடியாக விழுந்தது. மார்ச் 18 முதல் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த ராமண்ணாவின் 'என்னை போல் ஒருவன் ' நெல்லை பூர்ணகலாவில் ரிலீஸ் என்று செய்தி அறிந்ததும் அந்தமான் காதலி திரைப்பட விநியோகஸ்தர் சுவாமி பிலிம்ஸ் அலுவலகத்திற்கும்,என்னை போல் ஒருவன் திரைப்பட விநியோகஸ்தர் ராணி பிலிம்ஸ் (இதன் அதிபர் திரு மு சூரியநாராயணன் முன்னாள் மேயர் -விஜயா சூரி combines மறுபிறவி,வைரம்,தங்கத்திலே வைரம்,குப்பத்து ராஜா போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர்-மிசா நெருக்கடி கால நிலையில் கைது செய்யப்பட்டு தனக்கும் தி மு க விற்கும் தொடர்பு கிடையாது என்று நாள் இதழ்களில் விளம்பரம் கொடுத்தார் ) அலுவலகத்திற்கும் நாய்கள் போன்று நெல்லை மன்றத்தில் இருந்து சென்றோம். என்னை போல் ஒருவன் படத்திற்கு கொடி கட்ட மாட்டோம்,மன்ற வரவேற்பு பதாகை எதுவும் வைக்க மாட்டோம்,மறியல் போராட்டங்களில் ஈடு படுவோம் என்று எல்லாம் சொல்லி பார்த்தோம். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு தான். ராணி பிலிம்ஸ் விநியோக அலுவலர்களே (அனைவரும் தி மு கழகத்தை சேர்ந்தவர்கள் ) காங்கிரஸ் கொடி கட்டி,நெல்லை தலைமை மன்ற வரவேற்பு பதாகைகளையும் தோரணங்களையும்,வளைவுகளையும் செய்து விட்டனர்.காலத்தின் கட்டாயம் என்பது இதுதான் போலும். இவ்வளவுக்கும் நெல்லை பூர்ணகலா திரை அரங்க நிறுவனர் அந்நாளைய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.நடிகர் திலகத்தின் பரம விசிறி .மேலும் தலைமை மன்ற வரவேற்பு பதாகையை மன்றத்தில் இருந்த ஒருவரே எங்களுடன் அந்தமான் காதலி இறுதி நாள் இரவு காட்சி பார்த்த சிவாஜி மன்ற உறுப்பினரே ராணி பிலிம்ஸ்/திரை அரங்கில் கொண்டு கொடுத்த அவல நிலை .பின்னாளில் இந்த உறுப்பினரே காங்கிரஸ் கட்சியிலும் ,மன்றத்திலும் மிக பெரிய பொறுப்புக்கு வந்த துர்ப்பாக்கிய நிலை .

    சிலர் இப்போது சொல்லலாம்
    'என்னை போல் சிவாஜி ரசிகர் கிடையாது .அவர் படத்தை நான் பார்த்தது போல் யாரும் பார்க்க முடியாது . பார்த்தாலும் என்னை போல் ரசிக்க முடியாது. ரசித்தாலும் என்னை போல் எங்கும் யாராலும் சிலாகித்து எழுத முடியாது போனால் போகிறது என்று தருமி போல் உங்களை எல்லாம் இந்த திரியில் ஒரு பதிவாளராக ஏற்று கொண்டு இருக்கிறோம் ' .என்று

    1978/79/80 கால கட்டத்தில் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்கள் காங்கிரஸ் கட்சியால் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமா ..என்னை போல் ஒருவன் பரபரப்பு எதுவும் இல்லாமல் 45 நாட்கள் ஓடியது

    மார்ச் 24 அன்று பாலச்சந்தர் கமல் இணைந்த 'இலக்கணம் மாறிய கம்பன் ஏமாந்த' கருப்பு வெள்ளை நிழல் நிஜமாகிறது நெல்லை சென்ட்ரல் ரிலீஸ் .பாலா ரசிகர்களும்,மெல்லிசை மன்னர் ரசிகர்களும் கொண்டாடி மகிழ்ந்தார்கள் .இதே நேரத்தில் ரஜினி,லதா ,விஜயகுமார் நடித்து என் வீ யார் pictures 'ஆயிரம் ஜென்மங்கள் 'நெல்லை ரத்னாவில் வெளியாகி 'வெண் மேகமாக' வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. ரஜினி,லதா கிசு கிசு பரவலாக பட்டி தொட்டி எங்கும் மாய மூக்குத்தி ஆக பரவி கொண்டு இருக்கிறது.இதற்கு முன்னரே பிப்ரவரியில் ரஜினி ,லதா,விஜி,மஞ்சு,ஜெய் கணேஷ்,வசந்தி(பஞ்ச கல்யாணி) ஜோடிகளில் நெல்லை சிவசக்தியில் வெளியான நடிகர் திலகம் முகாமில் இருந்து பிரிந்து வந்த பி மாதவன் இயக்கிய அருண் பிராசாத் மூவிஸ் சங்கர் சலீம் சைமன் படத்தில் இடம் பெற்ற 'அவனுக்கும் ஆசை வந்து அவளுக்கும் ஆசை வந்தா அரசாங்கம் கூட தடுக்க முடியாது ' என்ற பாடலின் போது பிளந்த விசில் சப்தம் இன்றும் காதை நொய் என்று குடைந்து கொண்டு தான் இருக்கிறது

    ஏப்ரல் 14 நடிகர்திலகம் 'கௌரவ வேடம்' என்று டைட்டில் கார்ட் போட்ட ஆனால் படம் முழுவதும் வரும் 'வாழ்க்கை அலைகள் ' நெல்லை சென்ட்ரல் ரிலீஸ். பாலா சுசீலா இணைந்த குரல்களில் 'உன் கண்களிலோ கனிகள் ' பாடல் நெல்லை வானொலி ஞாயிறு இரவு நேயர் விருப்பம் 8-8.30 நிகழ்ச்சியில் படு பிரபலம் .

    மே மாதத்தில் மீண்டும் நடிகர் திலகத்தின் 'புண்ணிய பூமி' சிவசக்தியில் .இதே நேரத்தில் நெல்லை ரத்னாவில் ஆயிரம் ஜென்மங்கள் 50 நாட்கள் கடந்து விழா கொண்டாடி பின் ரஜினி வில்லனாக நடித்த சந்திர போஸ் இசையில் வெளிவந்த வி சி குகநாதனின் கருப்பு வெள்ளை 'மாங்குடி மைனர்' ரிலீஸ். விஜயகுமார் மக்கள் திலகம் புகழ் பாட ஆரம்பித்த நேரம்.மக்கள் கலைஞர் வர்ணம் மாற ஆரம்பித்த நேரம் .நெல்லை சென்ட்ரலில் நிழல் நிஜமாகிறது 50 நாள் முடிந்து 'வருவான் வடிவேலன் ' வெளியீடு .மெல்லிசை மன்னர் இசையில் லத்து பக்தி பரவசத்துடன் காவடி ஆடிய படம். பெண்களின் அரோகரா சப்தத்தில் ,பாலாவின் 'ஜாய் புல் சிங்கபூர் ,கலர் புல் மலேசிய ' என்று சப்தமில்லாமல் 70 நாட்கள் கடந்த வெற்றி படம்

    ஜூன் தியாகம் 100வது நாள் விழா நெல்லை பார்வதியில் மீண்டும் சிவாஜி ரசிகர்கள் -காங்கிரஸ் கட்சியினர் ரகளை அரங்கேற்றம் . 100வது நாள் மாலை காட்சி காங்கிரஸ் கட்சி விழாவாகவும் ,இரவு காட்சி ரசிகர் மன்ற விழாவாகவும் நடந்தேறியது . நடிகர் திலகத்தின் ஜெனரல் சக்கரவர்த்தி நெல்லை பார்வதியில் தியாகத்திற்கு பிறகு வெளியாகிறது .இதே மாதத்தில் தான் நெல்லை பூர்ணகலாவில் கமல்,ரஜினி நடித்த ஸ்ரீதரின் மீண்டும் முக்கோண காதல் கதை 'ஒரே நாள் உன்னை நாள் ' என்று இளைமை ஊஞ்சல் ஆட ஆரம்பித்தது. நியூ ராயலில் சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் ரஜினி தனி ஹீரோவாக அரங்கேற்றம் ஆகிய நடிகர் திலகத்தின் ஸ்டைல் பாடல் 'நண்டூருது நரியூருது' பைரவி '

    ஜூலையில் நெல்லை ரத்னாவில் வெளியான 'வணக்கத்துக்குரிய காதலியே' விஜி ஸ்ரீதேவி ,ரஜினி ஸ்ரீதேவி இணைவில் வந்த ஞே ராஜேந்திர குமார் கதை .மெல்லிசை மன்னர் இசை -ஜாலி ஆபிரகாம் ஜல்லி அடிக்க ஆரம்பித்த நேரம் . திருலோக் இயக்கம் அவ்வளவாக பரபரப்பை கிளப்ப வில்லை .

    ஆகஸ்ட் பராதி ராஜவின் இரண்டாவது படம் 'கிழக்கே போகும் ரயில்' நெல்லை நியூ ராயல் திரை அரங்கில் மாஞ்சோலை குயிலாக கூவ ஆரம்பிக்க ,பின்னாலேயே மகேந்திரனின் செந்தாழம் பூ நெல்லை சென்ட்ரலில் முள்ளும் மலராக பரிமளிக்க, நெல்லையில் உள்ள எந்த டீ கடைக்கு சென்றாலும் ரசிகர்கள் 15 பைசா டீக்கும் 25 பைசா விவா டீ க்கும் டீ மாஸ்டர் தாடையை கொஞ்சியும் கெஞ்சியும் lp இனிரிகோ ,hmv இசைக்க கேட்ட காலம் .கிழக்கே போகும் ரயில் 100வது நாள் விழா நெல்லை ராயலில் கோலாகலமாக நடந்தேறியது . சுதாகர் என்ற மொக்கை ஹீரோ 'ஆல' மரமான தமிழ் சினிமாவை 'ஆழ'ம் இல்லாமல் 'ஆள' ஆரம்பிக்கிறார் . தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகலாம் என்ற புது விதி நமது தலை விதியாகிறது. பாரதிராஜா ஆரம்பித்த மாற்றம் இன்றும் தொடர்கிறது. 78 களில் ஏற்பட்ட சில கெட்ட மாற்றங்களில் இதுவும் ஒன்று.

    வருகிறது தீபாவளி மாதம் அக்டோபர்
    வந்தார் அய்யா 'இலங்கையில் இளங்குயில் உடன் இன்னிசை பாடிய' எங்கள் பைலட் பிரேம்நாத் .நெல்லை சென்ட்ரல்லில் .பெல்ட் எடுத்து கொண்டு உறுமி நிற்கும் போஸ்டர் கூட நினைவில் இருக்கிறது. நெல்லை சென்ட்ரல் திரை அரங்கில் மாடி ஏறும் போது ஒரு பெரிய கண்ணாடி இருக்கும் .அதற்கு அருகில் வாயிலை பார்த்து ஒரு ஷோ கேஸ் இருக்கும். அதில் இந்த போஸ் உள்ள போஸ்டர் ஒட்டப்பட்டு ரசிகர்களால் மாலை போடப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது .

    78 தீபாவளி கோலாகலத்தை மறக்க முடியுமா ? நெல்லை பூர்ணகலாவில் வண்டிக்காரன் மகன்,சிவசக்தியில் 'தப்பு தாளங்கள்',
    ரத்னாவில் 'மனதிரில் இதனை நிறங்களா ',பார்வதியில் 'தாய் மீது சத்தியம் '.லக்ஷ்மியில் ஜேப்பியாரின் 'தங்க ரங்கன் ' ,பாபுலர் இல் 'சிகப்பு ரோஜாக்கள் ' .கிழக்கே போகும் ரயில் ராயலில் தீபாவளிக்கு தொடர்ந்தது . ரத்னாவில் 10 தினங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் மைல் கல் ருத்ராய்யாவின் 'அவள் அப்படிதான்' 3 தினங்கள் மட்டுமே (3 திங்கள் ஓட வேண்டிய படம்) .கொஞ்சம் தினங்கள் கழித்து மீண்டும் நடிகர் திலகத்தின் தசோலி அம்பு சாக்கடை சந்து என்று அந்நாட்களில் சொல்லப்படும் நெல்லை லக்ஷ்மியில் .நடிகர் திலகத்தின் தெய்வமகன்,பாபு,ஞான ஒளி எல்லாம் இங்கே தான் சாக்கடையில் விழுந்து டிக்கெட் எடுத்து திரை அரங்கு உள் சென்று சட்டையை 'எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது ' சபரிமலை பாடல் போல் எப்போதும் நறுமணம் கமிழும் நெல்லை லக்ஷ்மி கக்கூஸ் இல் பிழிந்து காய போட்டு மேல் சட்டை இல்லாமல் நோஞ்சான் பாடி உடன் பார்த்த களித்த, கழித்த நாட்கள் தான் எத்துனை எத்துனை

    டிசம்பர் இல் நடிகர் திலகத்தின் பரபரப்பு இல்லாமல் நெல்லை நியூ ராயலில் 'ஜஸ்டிஸ் கோபிநாத் ', நெல்லை பார்வதியில் மேற்கத்திய சங்கீதத்தை தமிழ் ரசிகர்களின் நாடி நரம்புகளில் கிடார் கம்பிகளின் மூலமாக ஏற்றிய (டார்லிங் டார்லிங் i லவ் யு) ப்ரியா,நெல்லை ரத்னாவில் ரஜினிகாந்த் - விஜயகாந்த் இணைந்து வந்து இருக்க வேண்டிய இறுதியில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்கள் தாங்கி வந்த மீண்டும் அருண் பிரசாத் மூவிஸ் மாதவனின் 'என் கேள்விக்கு என்ன பதில் '

    இதனை களேபரங்களுக்கும் நடுவில் வெள்ளிகிழமை ஹீரோ ஜெய்

    'டாக்ஸி டிரைவர் (parvathi),சக்கை போடு போடு ராஜா (rathna),'உள்ளத்தில் குழந்தையடி' (sivasakthi),'மேள தாளங்கள்' (central),'முடி சூடா மன்னன் ' (lakshmi),'வாழ நினைத்தால் வாழலாம் '(popular),ராஜ்வுகேற்ற ராணி' (lakshmi),'மக்கள் குரல்' (lakshmi),'இது எப்படி இருக்கு' (sivasakthi),'இளையராணி ராஜலக்ஷ்மி' (rathna)

    சிவகுமார்
    'கண்ணாமூச்சி' (central),'சொன்னது நீதானா ' (rathna),'அதை விட ரகசியம்' (poornakalaa),'சிட்டு குருவி (sivasakthi)(வாசு சிலாகித்து எழுதிய இளைய ராஜாவின் இனிய பாடல்கள் நிறைந்தும் பறக்க முடியாமல் போனது )
    ,'கை பிடித்தவள்' (not in memory),'கண்ணன் ஒரு கை குழந்தை' (lakshmi),'ராதைகேற கண்ணன் ' (rathna)

    முத்துராமன் 'வயசு பொண்ணு (rathna),அவள் தந்த உறவு (pornakalaa),வாழ்த்துங்கள் (sivasakthi),உறவுகள் என்றும் வாழ்க(lakshmi) ,பேர் சொல்ல ஒரு பிள்ளை (parvathi),அன்ன பூரணி (sivasakthi),அச்சாணி (lakshmi) போன்ற படங்கள்

    ஸ்ரீகாந்த் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (central),சதுரங்கம் (sivasakthi)(ரஜினியும் உண்டு),கருணை உள்ளம் (lakshmi),ஒரு வீடு இரு உலகம் (rathna) ,அக்னி பிரவேசம் (central) -கருணை உள்ளம் ஸ்ரீகாந்திற்கு சிறந்த நடிகர் என்ற தமிழ் நாடு அரசு விருது வழங்கியது

    என்று சிந்து பாடி கொண்டு தான் இருந்தார்கள்.

    மிகவும் நீண்டு விட்டது . மன்னிக்க வேண்டுகிறேன்

    இத்தனைக்கும் நடுவில் இரண்டாம் செமஸ்டர்,மூன்றாம் செமஸ்டர் எந்த arrear இல்லாமல் பாஸ் செய்தேன் (கொஞ்சம் sj ப்ளீஸ் பொறுத்தருள்க
    )

    திரைப்படங்களும் arrear இல்லை

    பொறுமையாக படித்த அனைவருக்கும் என் நன்றி

    மலரும் நினைவுகளை மீட்ட வாய்ப்பு அளித்து உங்களுக்கு எல்லாம் ஆப்பு வைத்த நண்பர் வாசு/முரளி/சி கே/கல்நாயக் அவர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்

  10. #1778
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    வாசு, முதலில் பைலட்டிற்கு டிக்கட் கிடைக்காமல் ஓ.டி கமரில் சிவகுமாரின் 'கண்ணாமூச்சி' பார்த்தோம். அசோகன் பூதமாக நடித்திருப்பார். ஆமாம் இந்த படத்தோட பாடல்களை இங்கே அலசியாச்சா?
    நன்றி கல்நாயக் சார்,

    நீங்கள் 'கண்ணாமூச்சி' படம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது மேலும் என் பழைய நினைவுகளை (நடிகர் திலகம் அல்லாது) கிளர்ந்து எழச் செய்து விட்டது.

    நான் அப்போது கடலூர் துறைமுகம் அதாவது கடலூர் ஓ.டி (கடலூர் ஓல்ட் டவுன்) இல் தான் தங்கியிருந்தேன். ரங்கப்ப செட்டி தெரு என்பதுதான் எங்கள் தெருவின் பெயர். தெருக்கள் பெரும்பாலும் ஜாதிப் பெயர்களில் இருக்கும். இருசப்ப செட்டி தெரு, காசு கடை வீதி, சுண்ணாம்புக்காரத் தெரு, பள்ள வானியா சந்து, சராங்கு தெரு என்றெல்லாம் இருக்கும். பாட்டி வீடு அங்கே தான். அது மட்டுமல்ல. ஓ.டியில் இருந்த ஒரே ஒரு திரையரங்கும் அதுதான். திரையரங்கு 'கமர்' கள்ளக்கடத்தல் புகழ் மஸ்தான் அவர்களுடையது. (நாங்கள் வீட்டுக்குள் திருடன் வந்தால் கூட திருடர் வந்தார் என்றுதான் மரியாதையாகச் சொல்லுவோம். கல்நாயக்கிற்கு பதில் போட்டால் நமக்குக் கூட நகைச்சுவை தானாக வருகிறதே).பக்கத்தில் பச்சையாங்குப்பம் என்ற கிராமத்தில் சுகந்தி என்ற டூரிங் தியேட்டர் இருந்தது.

    நீங்கள் சொன்னது போல 'கண்ணாமூச்சி' ஓ.டியில் வெளியானது. நான் அப்போது பி.யூ.சி. படித்துக் கொண்டிருந்தேன். கடலூர் ஆர்டஸ் காலேஜில்தான்.

    'கண்ணாமூச்சி' சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து மகிழ்ந்த படம்.

    சிவக்குமார், லதா, சுருளி, மனோரமா என்று செம காமெடி. பூதம் படம் என்பதால் மந்திர தந்திர காட்சிகள் நிறைய.

    இந்தப் படத்தில் பூதமாக நடித்தவர் அசோகன் அல்ல. அது உங்கள் தவறுமல்ல. அலாவுதினும் அற்புத விளக்கும் படத்தில் அசோகன் 'ஆலம்பனா' என்று பூதமாக மொட்டை அடித்து இழுத்து இழுத்துப் பேசியதால் வந்த வினை. அதற்கு முன் பூதம் என்றால் 'ஜாவர்' சீதாராமன் தான். 'பட்டணத்தில் பூதம்' படத்தின் பூதம். திருவிளையாடலையும், எங்க வீட்டுப் பிள்ளையையும் தினசரிப் பேப்பரில் பார்த்து ரசித்த பூதம்.

    இப்போது விஷயத்திற்கு வருகிறேன். 'கண்ணாமூச்சி'யில் பூதமாக நடித்தவர் பழம்பெரும் நாடக நடிகர் உடையப்பா அவர்கள். தேவர் இனத்தைச் சார்ந்ததால் உடையப்ப தேவர் என்றும் சொல்வார்கள். ஆஜானுபாகுவான உயரமான தோற்றம். தெள்ளத் தெளிவான தமிழ் உச்சரிப்பு. பட்டிகாட் டு வலுவான விவசாயி போன்ற தோற்றம். அதிகம் சினிமாவில் பரிச்சயம் ஆகாதவர். நல்ல நாடக நடிகர். கிராம பெரிய மனிதர், பஞ்சாயத்துத் தலைவர் போன்ற வேடங்களில் வருவார். நடக்க உலகில் மிகவும் புகழ் பெற்றவர்.

    'கண்ணாமூச்சி' படம் முழுதும் பூதம் கேரக்டருக்கான ஒரு வசனம் சொல்லுவார். அம்சமாக இருக்கும்.

    'ஈசாவாக்யம் இதம் சர்வம்'

    என்பதுதான் அது. அற்புதமான வேடப் பொருத்தம்.

    வி.குமார்தான் இப்படத்திற்கு இசை.

    'கண்ணே உலகமே பள்ளிக் கூடம்' என்ற அருமையான பாடலும், 'பொன்னை நான் பார்த்ததில்லை' என்ற இன்னொரு அற்புதமான பாடலும் மனதை மயக்கும். குமார் பியானோ இசையில் வல்லவர். எனவே நாங்கள் அவரை 'பியானோ' குமார் என்றுதான் செல்லமாக அழைப்போம். தான் இசையமைத்த எல்லா படங்களிலும் பியானோ இசையுடன் கூடிய பாடல்களைத் தர அவர் மறக்க மாட்டார்.

    புகழ் பெற்ற

    'உன்னிடம் மயங்குகிறேன்
    உள்ளத்தால் நெருங்குகிறேன்'

    என்ற 'தேன் சிந்துதே வானம்' படத்தில் ஜேசுதாஸ் பாடிய, பியானோவுடன் கூடிய இனிமையான பாடலைத் தந்தவர் நம் குமார் என்பது பலருக்கும் தெரியும்.

    இப்போது மீண்டும் உடையப்பா பற்றி. இவர் நம் நடிகர் திலகம் நடித்த 'நாம் பிறந்த மண்' படத்திலும் நடித்துள்ளார். இப்போது ஈஸியாகப் புரிந்து கொள்ளலாம். நடிகர் திலகத்தின் (சந்தனத் தேவர்) தங்கை 'படாபட்'டை ஆங்கிலேயே அதிகாரி கெடுத்துவிட , 'படாபட்' இறந்து போவார். நடிகர் திலகம் அந்த அதிகாரியைப் பழி வாங்க வீறு கொண்டு எழுவார். அந்தக் காட்சிக்குத் தோதாக ஒரு நாடகம் நடக்கும். ('காவல் தெய்வம்' படத்தில் வரும் உணர்ச்சிமிகு நாடகம் போல) துரௌபதியை துச்சாதனன் துகில் உரிந்தவுடன் பீமன் கதை கொண்டு கோபமுற்று அந்த நாடகத்தில் பாடுவான்.

    'பாரதத்தில் ஒரு போர் நடக்கும்
    சத்தியம் சத்தியம்
    பார்த்தனோடு ஒரு தேர் நடக்கும்
    இது சத்தியம் சத்தியம்'

    அந்த நாடகக் காட்சியில் பீமனாக வெகு கம்பீரமாக நடிப்பவர்தான் உடையப்பா அவர்கள். சில படங்களிலேயே நடித்திருப்பார். இப்போது கேட்ச் செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    'நாம் பிறந்த மண்' டைட்டிலில் உடையப்பா பெயர் இருப்பதைக் கவனியுங்கள்.

    'கண்ணாமூச்சி' படம் பற்றி இன்னொருமுறை விரிவாக முழுதும் எழுதுகிறேன்.

    பழைய நினைவலைகளை கிண்டி விட்டதற்கு நன்றி கல்நாயக் சார். ஒரு நல்ல நடிகரை நினைவு கூறச் செய்து அதை எல்லோருக்கும் தெரியப்படுத்த வைத்ததற்கும் சேர்த்து நன்றி!

    இப்போது 'நாம் பிறந்த மண்' படத்தில் உடையப்பா பீமனாக கர்ஜிக்கும் ஸ்டில் உங்களுக்காக இதோ.

    உங்களுக்காக 'கண்ணாமூச்சி' திரைப்படத்திலிருந்து ஒரு அருமையான பாடல் வீடியோவாக.

    'பொன்னை நான் பார்த்ததில்லை'

    Last edited by vasudevan31355; 29th November 2014 at 07:57 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1779
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா!

    ருத்ர தாண்டவம் ஆடி விட்டீர்களே!

    என்ன ஒரு ஞாபக சக்தி! அபாரம். எவ்வளவு நினைவலைகள்.!

    நம் உறுப்பினர்கள் அனைவராலும் நமது மதுர கானங்கள் திரி தகவல் களஞ்சியமாக திகழ்வது பெருமைக்குரிய விஷயம். எதிர்கால சந்ததியினர் நமது திரியப் பாரத்தாலே பழைய தமிழ் சினிமா பற்றி பாடல்கள் மட்டுமல்லாது அத்துணை இதர தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம் என்ற அளவிற்கு திரி பீடு நடை போடுவது உங்களைப் போன்றவர்கள் ஒவ்வொருவரின் ஈடு இணையில்லாத உழைப்பே.

    உங்கள் உழைப்புக்குத் தலை வணங்குகிறேன்.

    போற்றிப் பாதுகாக்கப் படவேண்டிய பதிவு. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes Russellmai liked this post
  13. #1780
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //மலரும் நினைவுகளை மீட்ட வாய்ப்பு அளித்து உங்களுக்கு எல்லாம் ஆப்பு வைத்த நண்பர் வாசு/முரளி/சி கே/கல்நாயக் அவர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்//

    ஆப்பு இல்ல கிருஷ்ணா! நெல்லை சூப்பு.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •