நீண்ட குறுந்தொடர். பூவின் பாடல்கள் 6: "பூமாலை நீயே, புழுதி மண் மேலே"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~
பராசக்தியில் வந்த சோகப் பாடல். பின்னர் வரும் நீதி மன்ற காட்சி வசனத்திற்கு வலுக்கூட்டி அழைத்துச் செல்லும் பாடல். இசைத் தாலாட்டு: ஆர். சுதர்சனம். ஸ்ரீரஞ்சனி-க்காக பாடியவர் டி.எஸ். பகவதி என்று கொடுத்திருக்கிறார்கள். பூமாலை எப்படியெல்லாம் உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது என்பதற்கு இந்தப் பாடல் வரி ஒரு சாட்சி. தாய் தன் குடும்ப பெருமை எடுத்துச் சொல்லி தற்போதைய நிலைமையை சொல்லி தன் குழந்தையின் நிலைமை இப்படியிருக்கிறதே என்று சொல்லி வருந்தும்போது... இதை விட என்ன சொல்ல முடியும். நல்ல வரிகள்.