Page 368 of 397 FirstFirst ... 268318358366367368369370378 ... LastLast
Results 3,671 to 3,680 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

 1. #3671
  Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
  Join Date
  Apr 2011
  Posts
  9,084
  Post Thanks / Like
  இதோ நடிகர் திலகம் அமர்க்களமாக பாலாவின் குரலில் சுஜாதாவிடம் கேலி செய்கிறாரே!

  'கருடா சௌக்கியமா' படத்தில் ராகவேந்திரன் சாருக்கும், எனக்கும் மிகப் பிடித்தமான ஒரு பாடல். இனி உங்களையும் அடிமையாக்கும்.

  'சந்தன மலரின் சுந்தர வடிவில் உனை நான் காணுகிறேன்' பின்னணியில் வரும் ஹம்மிங் அமர்க்களம்.

  Last edited by vasudevan31355; 13th May 2015 at 09:40 AM.
  நடிகர் திலகமே தெய்வம்

 2. Thanks RAGHAVENDRA thanked for this post
  Likes gopu1954, kalnayak, RAGHAVENDRA liked this post
 3. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 4. #3672
  Senior Member Veteran Hubber
  Join Date
  Feb 2012
  Location
  Indonesia
  Posts
  4,126
  Post Thanks / Like
  வாசு,  என் தம்பியான நீ, என் மகனின் வர போகும் திருமணத்திற்கு(மூத்தவன்) முகாந்திரமாக, இப்போதே ஏக்க சக்க சந்தனம் கொடுத்து விட்டாய்.என்ன ஒரு தேர்வு. சந்தன சிலையே, பழனி சந்தன என்று. பிளந்து கட்டி விட்டாய்.  என் தம்பி படத்தை திருப்பி பார்க்கும் முடிவில்,நேரமின்மையால் தட்டட்டும் பாடலை பார்த்தேன். உன் எழுத்தை படித்த பின் ,இதை பார்த்ததால், நம்ப மாட்டாய் ,5 முறை திரும்ப திரும்ப ,நீ எழுதிய நுண்மைகளை ரசித்தேன். உன்னையும் ,பார்த்தசாரதியையும் விட்டால் இப்படி எழுத எங்களுக்கு யார் இருக்கிறார்கள்? மனதை மயக்க ஆரம்பித்து விட்டாய்.
  Last edited by Gopal,S.; 13th May 2015 at 09:57 AM.
  நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
  http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

 5. Thanks vasudevan31355 thanked for this post
  Likes kalnayak, vasudevan31355 liked this post
 6. #3673
  Senior Member Diamond Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  9,187
  Post Thanks / Like
  திலக சங்கமம் & Sivaji Ganesan - Definition of Style 20

  இருவர் உள்ளம்

  நடிகர் திலகம் திரை இசைத் திலகம் இணையில் வசந்த மாளிகைக்குப் பிறகு மிக அதிகமாக மக்களிடம் சென்றடைந்த காதல் பாடல்கள் இடம் பெற்றது இருவர் உள்ளம் திரைப்படம் என்றால் அது மிகையில்லை. வசந்த மாளிகை வரும் வரையில் இந்தப் படமே மிகவும் அதிகமாக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது.

  அதுவரை இருந்த நடிகர் திலகத்தின் நடிப்பில் வேறோர் பரிமாணத்தைக் கொண்டு வந்தவர் இயக்குநர் எல்.வி.பிரசாத் அவர்கள். இயக்குநர்களுக்கான நடிகராக விளங்கிய நடிகர் திலகத்தின் நடிப்பில் பல்வேறு புதிய பரிமாணங்களைக் கொண்டு வரவேண்டியது அவர்கள் பொறுப்பு என்கின்ற வகையில் நடிப்பை அள்ளி அள்ளி வழங்கியவர் நடிகர் திலகம். இதில் Subtle Acting என்றால் என்ன வென்றும் அதில் எவ்வாறு வித்தியாசங்களைக் கொண்டு வர முடியும் என்றும் நிரூபித்தவர்.

  இருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பிரசாத் அவர்கள் பூர்த்தி செய்யத் தவறவில்லை. இதற்கென்றே அழகு சிரிக்கின்றது பாடலை வைத்தார். குறிப்பாக பறவைகள் பலவிதம் ஒரு காதல் மன்னனாக அந்தப் பாத்திரத்தை சித்தரிக்க உதவியது என்றால் இந்தப் பாடல் ரசிகர்களின் ஆவலைத் தீர்ப்பதற்காகவே படமாக்கப்பட்டது எனலாம்.

  திரை இசைத்திலகத்தின் மிகச் சிறந்த புலமைக்கு எடுத்துக் காட்டு இப்பாடல். அருமையான அக்கார்டினுடன் துவங்கும் பாடலில் இசைக் கருவிகள் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். கோபால் சொன்னது போல் இந்த தீம் மியூஸிக் எனப்படும் இசையை இந்தப் பாடலில் சரணத்தில் சற்றே வித்தியாசமாக பயன்படுத்தி யிருப்பார். டி.எம்.எஸ். பி.சுசீலா இணையில் அவர்களின் மகுடத்தில் மற்றுமோர் வைரக்கல் இப்பாடல்.

  கவியரசரின் வரிகள் காலத்தை வென்று நிற்பவை. இலக்கிய ரசம் சொட்டுபவை. ஆனாலும் என்ன அந்தக் கால தணிக்கை அதிகாரிகள் இலக்கியத்தை ரசிக்கும் மனநிலையில் இல்லையே.. என்ன தப்பு கண்டு பிடிக்கலாம் என காதிலும் விளக்கெண்ணெய் வைத்து துருவி துருவிப் பார்த்தார்கள்.

  அவர்களுக்கு ஆண்மை விழிக்கக் கூடாதாம். அள்ளி அணைக்கக் கூடாதாம். அந்தக் காலத் தணிக்கை அதிகாரிகளை இந்தக் காலப் பாடல்களைத் தணிக்கை செய்யச் சொன்னால்.. ஹ்ம்... ஒரு பாடலாவது மிஞ்சுமா... தெரியவில்லை.

  தணிக்கைக்கு முன் அழகு சிரிக்கின்றது பாடல்...

  http://gaana.com/album/iruvar-ullam

  தணிக்கையில் மாற்றப் பட்டு படத்தில் இடம் பெற்ற பாடல்..  மக்கள் தலைவரின் ஸ்டைலைக் காணக் காணப் பரவசம்...

  இதில் ஒரு விசேஷம் குறிப்பிட வேண்டும்...

  நாயகி அமர்ந்திருக்க நாயகன் கை தூக்கி எழுப்பும் காட்சி... நடிகர் திலகம் எத்தனை படங்களில் இந்த மாதிரி காட்சிகளில் நடித்துள்ளார் என ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டும். ஏனென்றால் அதிலும் ஏராளமான வித்தியாசங்களை சித்தரித்துள்ளார்.

  இந்தப் பாடலில் மிகவும் சற்றே குனிந்து எழுப்புகிறார். புதிய பறவையில் சிட்டுக்குருவி பாடல், எங்கள் தங்க ராஜாவில் இரவுக்கும் பகலும் பாடல், பார்த்தால் பசி தீரும் படத்தில் கொடியசைந்ததும் என ஏராளமான பாடல் காட்சிகள். ஒவ்வொன்றிலும் ஒரு விதம்.

  அதே போல் வண்டு வருகின்றது என்ற வரியின் போது மெதுவாக நாயகியிடம் செல்லும் உத்தி..

  ஆசை துடிக்கின்றது என அருவியின் பின்னணியில் நின்று கொண்டு தோளைச் சிலுப்பி புன்னகைக்கும் வசீகரம்...

  குளித்து வருகின்றது என்று நாயகி சொல்லும் போது அந்தக் கூந்தலை எடுத்து முகர்ந்து பார்க்கும் குசும்பு..

  அவள் பின்னால் செல்லும் நடையழகு..

  மஞ்சத்தில் அமரும் முன் ஒர் நடை... அமரும் போது பக்கவாட்டில் பார்க்கும் குறும்புப் பார்வை..

  இப்போது தான் அந்த வரிகள் ஆண்மை விழிக்கின்றது என நாயகன் கூற அள்ளி அணைக்கின்றது என நாயகி உரைக்கிறாள்.. இதை மாற்றி ஆர்வம் பிறக்கின்றது, அன்பே அழைக்கின்றது என படத்தில் மாற்றி விட்டனர்...

  ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர் திலகத்தை ரசிக்க வேண்டிய பாடல் காட்சி...
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 7. Thanks vasudevan31355 thanked for this post
 8. #3674
  Senior Member Veteran Hubber
  Join Date
  Feb 2012
  Location
  Indonesia
  Posts
  4,126
  Post Thanks / Like
  கலை வேந்தன்,  உங்களின் ஊக்கம், சமூக நிகழ்வுகளுடன் நீங்கள் கொடுக்கும் பதிவுகள் அருமை. உங்களுக்கு நன்றி.  ரவி,  பிளந்து கட்டி கொண்டிருக்கிறாய். உன்னுடைய பதிவுகளை தொடர்ந்து ரசித்து வருகிறேன். நடிகர்திலகம் திரியில் நிறைய எழுது. உன் தலை ரசிகனாக நானிருக்கிறேன்.  சின்ன கண்ணன்./கல்நாயக்,  உங்களை பிரித்து பார்க்க முடியாத அளவு சேதுராமன்-பொன்னுசாமி போல இரட்டை நயனம். மதுர கானத்தை சுவாரஸ்யம் ஆக்கி விட்டீர்கள். ரவி சொன்னது போல நைசாக நாமும் நுழையலாம் என்று பார்த்தால் ,பயமாக உள்ளது. அந்தளவு பிரமாத படுத்துகிறீர்கள். தமிழின் தரம் நமது திரிகளால் உயர்ந்து வருவது எனக்கு மகிழ்ச்சியே. நான் பார்வையாளனாக தொடர்வதில் சுவையே . (ரவி நீயும் என்னுடன் உட்காராமல் ஆட்டத்தில் தொடரு. என்னுடன் கொஞ்சூண்டு பட்சணம், அரை கப் காப்பிதான் உள்ளது. வெளியில் உட்கார்ந்தால் பங்கு தர ஏதுமில்லை.)
  நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
  http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

 9. Thanks vasudevan31355 thanked for this post
  Likes kalnayak, vasudevan31355 liked this post
 10. #3675
  Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
  Join Date
  Apr 2011
  Posts
  9,084
  Post Thanks / Like
  ராதா சுரேஷிடம்

  'சந்தனக் காடு... நானும் செந்தமிழ் ஏடு' என்று கொஞ்சும் அதியற்புத பாடல்.

  'வெள்ளை ரோஜா'வின் 'சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும்நேரம்'

  நடிகர் திலகமே தெய்வம்

 11. Likes gopu1954, kalnayak, chinnakkannan liked this post
 12. #3676
  Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
  Join Date
  Apr 2011
  Posts
  9,084
  Post Thanks / Like
  சிவகங்கை சீமையில் அற்புத நடனத்துடன் ஒலிக்கும் அதியற்புத கானம்

  'சாந்து பொட்டு தளதளங்க

  சந்தனப் பொட்டு கமகமங்க'

  நடிகர் திலகமே தெய்வம்

 13. Likes gopu1954, kalnayak, chinnakkannan liked this post
 14. #3677
  Senior Member Seasoned Hubber g94127302's Avatar
  Join Date
  Jun 2012
  Posts
  1,641
  Post Thanks / Like
  ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 47


  வாசு - welcome back . சந்தன பாடல்கள் அதிகமாக வர வேண்டி , மீண்டும் கதிரவனை நாடுகிறேன் . பெயரோ சந்திரன் - ஆனால் காதலி அவனை வர்ணிப்பதோ " இளம் சூரியன் என்று " - சந்திரன் அழகுதான் - ஆனாலும் அவனால் இளம் சூரியனின் அழகின் முன் எடுபடுவதில்லை .

  Posted by others in Youtube :

  இந்தப் பாடலில் இசைக் கருவிகளைக் குறைந்த அளவே பயன்படுத்தியிருக்க்கிறார் மெல்லிசை மன்னர் என்று தோன்றுகிறது - பாடல் முழுவதும் அவர் நடத்தியிருக்கும் கச்சேரிக்கு இசைக்கருவிகள் தடங்கலாக இருக்கக்கூடாது என்பதாலோ என்னவோ!

  மிக எளிமையான் துவக்க இசை. கட்டியம் கூறும் குழல் இசை (பாடல் முழுவதிலுமே, புல்லங்குழலின் இனிமைதான் தூக்கி நிற்கிறது.) ஒரு பிரம்மாண்டமான இசை வேள்வி நடக்கப்போகிறது என்பதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் மெல்ல, மென்மையாக ஆர்ப்பாட்டமில்லாமல் இசைத்துவிட்டுப் போகிறது துவக்க இசை.

  இது சற்றே நீளமான ஆனால் சிறிதும் அலுப்புத் தட்டாத பாடல். பாடலின் மையப் பகுதியில் மெல்லிசை மன்னருக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. 'இந்த நீளமான பாடலின் சுருக்கத்தை அளித்தால் என்ன? '

  எப்படி அளிப்பது? ஒரு ஹம்மிங் மூலமாகத்தான்!

  ஆஹாஹாஹா.......

  என்ன ஒரு ஹம்மிங் (இதற்கு சரியான தமிழ்ச் சொல் இருக்கிறதா?)
  இந்த ஹம்மிங்கைக் கேட்கும்போது காற்றில் லேசாக மிதப்பது போன்ற உணர்வைத் தருகிறது. இங்கே நாயகி இப்போதுதான் காதலின் உணர்வை அறியத் தொடங்கியிருக்கிறாள்.

  பகவத் கீதையை முழுமையாகப் படிக்க முடியாதவர்கள், 'ஸர்வ தர்மான் பரித்யஜ்ய...' என்ற சரம ஸ்லோகத்தை மட்டும் படித்தால் போதும் என்று சொல்வார்கள். அது போல், இந்தப் பாடலை முழுமையாகக் கேட்க நேரம் இல்லாவிட்டால், இந்த ஹம்மிங்கை மட்டும் கேட்டுப் பாடல் முழுவதையும் கேட்ட உணர்வைப் பெறலாம்!

  பாடல் ஒரு ஹம்மிங்குடன் முடிகிறது. இந்த ஹம்மிங் சற்று அழுத்தமாக அமைந்திருப்பதைக் கவனிக்கலாம். நாயகியின் தயக்கமான் துவக்கம், முழுமையான ஆனந்ததில் முடிவதை ஹம்மிங் மாறுபாடு உணர்த்துகிறது.

  பெரும்பாலும், நாயகனுக்கு ஒரு விதமான் பல்லவி, நாயகிக்கு சற்றே வேறுபாடான பல்லவி (அனுபல்லவி?) என்று அமைக்கும் மெல்லிசை மன்னர், இந்தப் பாடலில், நாயகன் நாயகி இருவருக்கும் ஒரே விதமான பல்லவியை அமைத்து (வரிகள் வேறுபட்டபோதிலும்), இருவருக்கும் வெவ்வேறு விதமான சரணஙளை அமைத்திருப்பது புதுமை!

  இந்தப் பாடலைக் கேட்கும்போது, இது காற்றினிலே வருக் கீதம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஒரு இனிமையான தென்றல் நம்மைத் தீண்டி விட்டுப் போவது போன்ற உணர்வு!

  பாடலைப் பற்றி ஒரே வரியில் சொல்வதானால்

  மெல்லிசை மன்னரின் மாணிக்கக் கற்கள் பதித்த வாலியின் வைர வரிகள்!

  என் கருத்துக்கள் :

  எளிமையான வரிகள் - நெஞ்சை துவட்டிவிடும் வார்த்தைகள்

  " இளம் சூரியன் உன் வடிவானதோ , செவ்வானமே உன் நிறமானதோ !!"

  ஒரு பெண் ஒரு ஆணை வர்ணிக்கும் போது , சற்று புதுமையாகவும் , வியப்பாகவும் , இன்பமாகவும் இருக்கின்றது அல்லவா ?!

  திரு K .V அவர்களை சுண்டி இழுத்து இங்கு வந்து பதிவுகள் போட வைக்கும் பாடல் இது .... 15. Thanks vasudevan31355 thanked for this post
  Likes vasudevan31355, kalnayak liked this post
 16. #3678
  Senior Member Diamond Hubber chinnakkannan's Avatar
  Join Date
  Apr 2006
  Location
  BOOLOGAM
  Posts
  8,018
  Post Thanks / Like
  ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

  கோபால்..வாங்க வாங்க..எப்போ கல்யாணம் ..உங்க குடும்பத்துல..ம்ம் உங்களுக்கெல்லாம் ந.தி பத்தி வாசு எழுதினது மட்டும் தான் தெரியுமா.. அவர்ர் ஆனந்தனை பத்தி எப்படி ஜோரா எழுதியிருந்தார் தெரியுமா.. நன்றி..எம்பி.என் பொன்னுசாமியோ சேது ராமனோ..அவரது மகன் என் கூடப் படித்தவர்..என்னுடன் படிப்பை முடித்து நான் படித்த கல்லூரியிலேயே வேலைக்கும் சேர்ந்து விட்டார்.. அவரது கல்யாணம் மதுரை மிட்லண்ட் ஹோட்டல் (இப்போதும் அந்தப் பெயரா தெரியவில்லை.. தானப்ப முதலிதெரு பாண்டியன் சூப்பர் மார்க்கெட் கடந்து வலதுகைப்புறம் இருக்கும் என நினைக்கிறேன்..முரளி சரியா) அங்கு நடந்தது எண்பத்து மூன்றில். கல்யாணத்துக்கு வாசித்தவர்...செவேலென்ற ஓங்கு தாங்கான உடம்பு கழுத்தில் மின்னும் கெட்டி கெட்டியனா தங்க செயின் ப்ரேஸ்லெட் என்ன இவையெல்லாம் விட ரசித்து வாசித்த விதமென்ன..யார் தெரியுமா.. நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்..

  ராகவேந்தர் ..அழகு சிரிக்கின்றது ஒரிஜினலை ஈவ்னிங்க் தான்கேட்க வேண்டும்..வெகு அழகான எனக்குப் பிடித்த்த பாடல்.. நதி எங்கே போகிறதுவும் தான்..(ஆனால் இவை எல்லாம் ப்ளாக் அண்ட் ஒய்ட்ல் எடுக்கப்பட்ட்து ஏமாற்றமே ம்ம் அந்தக் காலம்)

  வாசு .. அதானே பார்த்தேன்..சரம் சரமா சந்தனம் தடவி (ஹி ஹி நான் சந்தனம்னு எழுதினவுடனே புரிஞ்சுக்கிட்டீஙக்ளே) அசத்திட்டீங்க.. ரஞ்சிதா பாட்டு பார்க்கணும் ஓய்..இதுவரை பார்த்ததில்லைன்னு நினைக்கிறேன்..

  ஆனாக்க ஒண்ணு என்னன்னாக்க....


  அது ஒரு நிலாக் காலம் இல்லை இல்லை..சூரியன் உச்சமாய் க் காய்கின்ற மார்ச்சோ ஏப்ரலோ என நினைவு..கல்லூரி முடித்த சமயம்.. டூர் என்று பெங்களூர் ஊட்டி மைசூர் என குடும்பத்துடன் .. நான், அம்மா அப்பா அண்ணன் அம்புட்டுதான்.. ஒரு கார்..எல்டிசி.. என..

  டீடெய்லாக எழுத ஆசை..அது பின்னால்..

  ஊட்டி.. பொடானிகல் கார்டன்.. அம்மா அப்பா சுற்றாமல் ஓரிடத்தில் அமர்ந்து விட..அண்ணா எதோ பெர்மிஷன் ஃபார் எண்ட்ரி என டிராவல்ஸ் ட்ரைவருடன் சென்று விட..சின்னக் கண்ணன் என்ன செய்தான்..சுற்றினான்..

  ஓரிடத்தில் கும்பல்.. பார்த்தால் ஷீட்டிங்க்..

  வாசு..சொன்னால் நம்ப மாட்டீர்கள்..சந்தனக் கலர் குர்த்தா (பள பளா) பின் அனியாயத்துக்கு செந்நிறப் பவுடராய் முகத்தில் அப்பி கொஞ்சம் அழகு கம்மியாய் ராதா.. பச்சை பேண்ட் பச்சை கோட் போட்டு சின்னப் பையனாய் சுரேஷ்.. வெ.ரோ ஷீட்டிங்..எடுத்த பாட்டு நீங்கள் சொன்னது தான்..எடுத்த வரி..அதுவும் நீங்கள் சொன்னது..

  சந்தனக் காடு செந்தமிழ் த் தூது..

  கிட்டத்தட்ட ஆறோ ஏழோ தடவை..எடுத்தார்கள்.. ஒரே மாதிரி கஷ்டப்பட்டு ராதா சிரிக்க அடுத்தலைன்ன்..

  மான் விழி மாது.. சொல்லிக்கொண்டே கண்ணாடியைக் கழற்ற வேண்டும் என ஒருவர் சொல்லிக் கொடுக்க (!) அதன் பிரகாரம் சுரேஷ் பெர்ஃபக்டாய் நடிக்க அதற்கும் ஒரு ஆறு தடவை டேக்.. ஹாஆஆவ் என்று எனக்கு கொட்டாவி அப்போதும் வந்தது இப்போது நினைத்தாலும் வருகிறது..

  அப்புறம் மொத்தமாய் மூன்று மணி நேரம் ஷீட்டிங்.. நான் அப்படியே பொடி நடையாய் பொடானிகல் கார்டனைச் சுற்றி வந்து பின் அப்பா அம்மாவை ப் போய்ப்பார்த்து போலாமா கேட்கும் போது அண்ணாவும் வந்து விட்டார்..பின் கிளமபும் போது பார்க்கையில் இரு நடனக் கலைஞர்கள் படிக்கட்டுகளில் எப்படி ஓடி வரவேண்டும் என ராதாவுக்கும் சுரேஷீக்கும் சொல்லிக் கொடுக்க அதன் படி அவர்கள் ஓடிவந்ததைத் தொலைவாய் ப் பார்த்து பை.. சொன்னேன்..

  காலங்கார்த்தால கிளறி விட்டதற்குத் தாங்க்ஸ் அண்ட் பாடல்களுக்கும் தாங்க்ஸ்..
  Last edited by chinnakkannan; 13th May 2015 at 10:48 AM.

 17. Likes kalnayak liked this post
 18. #3679
  Senior Member Diamond Hubber chinnakkannan's Avatar
  Join Date
  Apr 2006
  Location
  BOOLOGAM
  Posts
  8,018
  Post Thanks / Like
  //" இளம் சூரியன் உன் வடிவானதோ , செவ்வானமே உன் நிறமானதோ !!" // ரவி.. நல்ல வரிதேன்... ஆனாலும் இது போங்கு.. ஆயிரம் கைகள் நீட்டின்னு சூரியன் பாட்ல போடறது..இது சந்திரன் பாட்டுதானாக்கும்.. ரைட்டப்பும் நன்று...நன்றிங்க்ணா

 19. #3680
  Senior Member Senior Hubber kalnayak's Avatar
  Join Date
  Oct 2004
  Location
  Chennai
  Posts
  963
  Post Thanks / Like
  யாராவது சொல்லுவீங்கன்னு ரொம்பவே எதிர்பார்த்தேனுங்க. யாரும் சொல்லலீங்களா, பார்த்தேன், சரி நாம்பளே சொல்லிப் போடலாமுன்னு. இந்தாங்க இன்னொரு சந்தனப் பாட்டு. ராசாவோட இசையில ஒரு அருமையான பாட்டுங்க:

  .........-`҉҉-
  -`҉҉..)/.-`҉҉-
  ....~.)/.~
  ........~.

 20. Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •