Page 6 of 25 FirstFirst ... 4567816 ... LastLast
Results 51 to 60 of 243

Thread: கீற்றுக் கொட்டகை

  1. #51
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    நான் அங்கு வந்தால் என்னுடைய டாமினேஷன்தான் அதிகம் இருக்கும். என் உள்ளம் பாராட்டையே எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும். 'ராமர்' புகழ் பாடும் 'மங்கி' (அதாவது ஹனுமானை சொன்னேன்பா) என்னை மிதித்து உரைத்தது. அது பாட்டுக்கும் அது வேலையைச் சரியாகச் செய்து விட்டு ஓடியே விட்டது.
    அன்பு வாசு சார்,

    இது மதுர கானம் திரியின் முதல் பக்கத்தில் வந்த தங்கள் பதிவு.

    என்னுடைய பெயரிலும் 'ராம்' இருப்பதால் இதுவரை முழுவிவரம் தெரியாமல் மறுகிக் கொண்டிருந்தேன். இப்போது சம்மந்தப் பட்டவர் பெயரை மட்டைக்கு இரண்டு கீற்றாக உடைத்து சொல்லி விட்டீர்கள்.

    இனி நிம்மதி அடைந்தேன். நன்றி.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #52
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    நன்றி புதிய பார்வை



    இன்று (08/10/59 )பட்டுகோட்டையார் நினைவு தினம்

    இளவேனிற்காலம். சித்திரை மாதம். விவசாய விளைச்சல் வீட்டில் செழிப்பையும் விதைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் உழவர்கள் தங்கள் தாய்மண்ணை வணங்க ‘நல்ஏர்’ பூட்டப் புறப்பட்டனர். விளை நிலங்களை அடைந்தனர். ஏர்களின் நுகத்தடிகளில் காளைகள் பூட்டப்பட்டன. பூஜைக்குரிய பொருட்கள் வாழை இலைகளில் வைக்கப்பட்டன. சூரிய வழிபாடும் இறை வழிபாடும் உழவுப்பெண்களின் கரம்பட்டு நம்பிக்கைச் சுடராய் ஒளிவீசியது.
    நிலங்களில் இறங்கிய உழவர்கள் - தனக்குத் தெரிந்த பாடல்களைப் பாடியபடி சந்தோஷக் கூச்சலிட்டு காளைகளைப் ‘போடா ராஜா! போடா ராஜா’ என்று தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்த அழுத்தமாய் ஓடிய ஏர்களின் ஆழத்தில் பூமித்தாய் பூரித்துப் போயிருந்தாள்.
    இவைகளை ரசித்தபடி வரப்பின் மேல் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது மெல்லிய காற்றாய் வயல்களினூடே வந்தது பாடல் ஒன்று. அந்தப் பாடல்...

    “சும்மா கெடந்த நிலத்தைக் கொத்தி
    சோம்பலில்லாம ஏர்நடத்தி
    கம்மாக்கரையை ஒசத்திக் கட்டிக்
    கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டிச்
    சம்பா பயிரைப் பறிச்சு நட்டுத்
    தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
    நெல்லு வெளைஞ்சிருக்கு --_- வரப்பும்
    உள்ளே மறைஞ்சிருக்கு _- அட
    காடு வெளைஞ்சென்ன மச்சான் - நமக்குக்
    கையுங் காலுந்தானே மிச்சம் (அட)
    இப்போ - காடுவெளையட்டும் பொண்ணே நமக்கு
    காலமிருக்குது பின்னே!”
    என்ற வரிகள் எனது சிந்தனையில் ஏரோட்ட நான் உழவு நண்பனை அழைத்து - என்னய்யா நல்லேர் அதுவுமா எம்.ஜி.யார் பாட்டப் பாடுறியே! என்று கேட்க அவனோ சிரித்துக் கொண்டே “எம்ஜியார் பாட்டு தான்யா! ஆனா? அந்த பாட்டை எழுதினவர் யார் தெரியுமா? எங்காளு!’’ என்று புதிர் போட்டுப் பதில் சொன்னான் - எழுதியவர் பெயரையும் சொன்னான்.

    நான் பிரமித்துப் போய் அந்தப் பாட்டுக் கோட்டையின் பாதச்சுவடுகளைத் தேடிப் புறப்பட்டேன்.

    அவர்தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்!

    ‘மகாகவி’ என்றால் பாரதியாரையும், ‘புரட்சிக் கவிஞர்’ என்றால் பாரதிதாசனையும், ‘கவியரசு’ என்றால் கண்ணதாசனையும் குறிப்பதுபோல் ‘மக்கள் கவிஞர்’ என்றால் அச்சொற்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தையே சாரும்.

    மக்களோடு பழகி, மக்களின் பழக்க வழக்கங்களையும் உற்றுக் கவனித்து, மக்களின் கோபதாபங்களைத் தமது பாடல்களில் வடித்ததால் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ‘மக்கள் கவிஞர்’ என்று குறிக்கப் படுகிறார். இந்த மகத்தான பட்டத்தை பட்டுக்கோட்டையாருக்குக் கொடுத்த பெருமை இலக்கியப் பேராசான் ஜீவாவைச் சேரும்.



    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வெற்றிகளுக்குத் தோள்கொடுத்துத் துணை நின்ற ஜீவா, “விவசாயி. மாடு மேய்ப்பவன், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முருக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, மிஷின் டிரைவர், தண்ணிவண்டிக்காரன். அரசியல்வாதி, பாடகன், நடிகன், நடனக்காரன் என பதினாறு தொழில்களில் ஈடுபட்டு கவிஞரானவர் பட்டுக்கோட்டையார்’’ என்று குறிப்பிடுகிறார்.

    கல்யாணம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பக்கமுள்ள சங்கம்படைத் தான் காடு என்ற கிராமத்தில் அருணாசலம் - விசாலாட்சி தம்பதிகளுக்கு 13.04.1930-இல் இரண்டாவது மகனாய்ப் பிறந்தார்.

    அருணாசலம் பிள்ளையிடம் மண்டிக் கிடந்த கவிதைப்பயிர் மூத்தமகன் கணபதி சுந்தரத்திடமும் - இளைய மகன் கல்யாணத் திடமும் துளிர்விடத் துவங்கியது.இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கல்யாணம் அண்ணன் கணபதி சுந்தரம் தந்த ஊக்கத்தினாலும் உற்சாகத் தினாலும் கவிதைகளும் எழுதலானார். அதுமட்டுமின்றி எட்டு வயதிலேயே அண்ணன் எழுதிக்கொடுத்த சுயமரியாதைப் பாடல்களை மேடைகளில் பாடலானார். பாடல்களைப் பாடியதின் விளைவு தஞ்சை மாவட்டத்தில் திராவிட இயக்கத்தின் வீச்சு - கல்யாணத்தைச் சுயமரியாதைப் பாடல்கள் எழுதத் தூண்டியது.
    “நல்லதைச் சொன்னா நாத்திகளா?’’ என்று தொடங்கும் பாடலை எழுதி அண்ணனிடம் பாராட்டும் பெற்றார்.
    கல்யாணம் ஒருமுறை வயல்வெளிகளிக்குச் செல்கிறார். வயலைப் பார்த்துவிட்டுத் திரும்புகிறார். வழியில் ஏரிக்கரையிலிருக்கும் வேப்பமர நிழலில் இளைப்பாற அமர்கிறார். அப்போது கெண்டை மீன் ஒன்று துள்ளிக் குதிப்பதும் - தெரித்த நீர்த்திவலைகள் அருகி லிருக்கும் தாமரை இலைமேல் விழுந்து கிடப்பதும்...

    “ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக்குஞ்சே -_ கரை
    ஓரத்தில் மேயாதே கெண்டைக்குஞ்சே!
    தூண்டில்காரன் வரும் நேரமாச்சு _- ரொம்பத்
    துள்ளிக் குதிக்காதே கெண்டைக்குஞ்சே!’’

    என்று கவிதையாய் மலர்ந்தது. இந்த கவிதையைக் கல்யாணம் எழுதியபோது அவருக்கு வயது பதினான்கு. இதுவே அவருடைய முதல் கவிதை.

    அந்தக் காலத்தில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் குத்தகை நிலங்களிலே பயிரிட்டு வாழும் சூழல். விளைந்தாலும் விளையா விட்டாலும் ஒப்புக்கொண்டபடி விவசாயிகள் குத்தகை நெல்லை அளந்து கொட்ட வேண்டும். இல்லையேல் வீட்டிலுள்ள பண்டம் பாத்திரங்களும் - ஆடுமாடுகளும் அபகரித்துச் செல்லப்படும்.

    இந்தக் கொடுமையான நிகழ்ச்சிகளைக் கல்யாணம் பார்த்திருக்கிறார், - சிந்தித் திருக்கிறார். கொடுமைகளைத் தகர்க்க மிராசுதார்களின் கொட்டத்தை அடக்க பொதுவுடைமை இயக்கம் தஞ்சை மாவட்டத்தில் நடத்திய போராட்டங்களும் கல்யாணத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
    தோழர் சீனிவாசராவ், களப்பால்குப்பு, வாட்டாகுடி இரணியன், சிவராமன் போன்றோர் போராட்ட மறவர்களாகப் புறப்பட்டபோது களம் புகுந்ததுடன் இயக்கம் தடை செய்யப்பட்டபோது தலைவர்களின் தலைமறைவு வாழ்க்கைக்கும் உதவியிருக்கிறார். தேர்தலில் வெற்றிபெற கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரமும் செய்திருக்கிறார்.

    விவசாய சங்கக் கலை நிகழ்ச்சிகள் - நாடகங் களுக்குப் பாடல் எழுதிய அனுபவம் _ இவை களால் கவிஞர், நடிகர் டி.எஸ். துரைராஜ் மூலம் சக்தி நாடகசபாவில் சேர்த்து நடித்தார்; டி.எஸ்.பி., என் தங்கை, முதல் ரௌடி, கவியின் கனவு ஆகிய நாடகங்களில் நடித்தார். கவியின் கனவு நாடகத்தில் ராஜகுருவாக நடித்ததால் ‘ராஜகுரு சுந்தரம்’ என்றும் அழைக்கப் பட்டார்.

    புதுவையில் நாடகம் நடத்தியபோது புரட்சிக்கவிஞரின் தொடர்பு ஏற்பட - பாவேந்தரைச் சந்திப்பதிலும் - அவருடைய படைப்புகளை நகல் எடுப்பதிலும் கல்யாணம் ஈடுபட்டார். நாடகக் கம்பெனி நலிந்து போனதால் பாரதிதாசனிடமே உதவியாள ராகச் சேர்ந்து அவரது ‘குயில்’ பத்திரிகையில் பணியாற்றத் தொடங்கினார். பாவேந்தர் பாரதிதாசனின் தொடர்பு கல்யாணத்தின் சினிமா உலகப் பயணத்திற்கு அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்தது.
    ‘ஜனசக்தி’ இதழ் நவம்பர் புரட்சி மலராக வெளிவந்தபோது நவம்பர் புரட்சியை வரவேற்று-

    “புதிய ஒளி வீசுது பார்
    இமயம் தாண்டிப்
    புன்சிரிப்புக் காட்டுது பார்
    இன்பம் அங்கே’’

    என்று தொடங்கும் கவிதைதான் அச்சில் வெளிவந்த முதல் கவிதை. இந்தக் கவிதை ‘ஜனசக்தி’ நவம்பர் 7, 1954ஆம் ஆண்டு வெளிவந்தது.
    கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும் - நாடகத் திரைப்பட இயக்குநருமான டி.கே. பாலச்சந்தரும் அவரது நண்பர்களும் திண்டுக்கல்லில் நடக்க இருந்த விவசாயிகள் சங்க மாநாட்டில் நாடகம் ஒன்றை அரங்கேற்ற விரும்பினார்கள்.

    மயிலை நித்யானந்தம் நாடகத்தை எழுத பட்டுக்கோட்டையார் பாடல்கள் எழுத - டி.கே. பாலசந்தர் இயக்கத்தில் 1954 ஆகஸ்ட் முதல் நாள் திண்டுக்கல் காந்தி மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மத்தியில் ‘கண்ணின் மணிகள்’ நாடகம் அரங்கேற்றப் பட்டது.
    பட்டுக்கோட்டையார் இந்த நாடகத்திற்குப் பாடல்கள் எழுதியதோடு போலீஸ்காரனாக வும் நடித்தார். கவிஞரின் பாடல் வரிகளுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் பாராட்டும் குவிய நாடகத்தைப் பார்த்து ரசித்துப் பாராட்டிப் பேசிய இலக்கியப் பேராசான் ஜீவா “பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள் மக்கள் கவிஞனுக்குரிய அடையாளமாகத் திகழ்கின்றன’’ என்றதுடன் பட்டுக்கோட்டையாரை மகாகவி பாரதியின் தகுதிக்கு உயர்த்தி “நீ, மீண்டும் தோன்றிய பாரதியடா?’’ என்று மனமுவந்து பாராட்டினார்.

    பாடல் எழுதத் தொடங்குமுன் ‘வாழ்க பாரதிதாசன்’ என்று எழுதிவிட்டு பாடல் எழுதும் வழக்கத்தைக் கவிஞர் ஏற்படுத்திக் கொண்டார்.
    1954-ல் படித்த பெண் என்ற திரைப் படத்தின் பாடல் எழுதும் வாய்ப்புப் பெற்றார் கவிஞர். இந்தப் படத்தில் -
    “காபி ஒண்ணு எட்டனா
    கார்டு சைசு பத்தனா
    காண வெகு ஜோராயிருக்கும்
    காமிராவைத் தட்டினா’’
    என்ற பாடலையும்,
    “வாடாத சோலை
    மலர்பூத்த வேளை!’’
    என்ற பாடலையும் எழுதினார். இந்தப்படம் 1956இ-ல் தான் வெளிவந்தது.

    இதே ஆண்டில் துவக்கப்பட்டு 1955இ-ல் வெளியான ‘மகேஸ்வரி’ என்ற படம் பட்டுக்கோட்டையாரின் பாடலுடன் வெளிவந்த முதல்படம் என்ற பெருமையைப் பெற்றது.மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைப்பில் ‘பாசவலை’ படத்திற்குப் பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல்கள் அவருக்குப் பேரும் புகழையும் தேடித்தந்தன.

    பட்டுக்கோட்டையாருக்கும் ஆத்திக் கோட்டை கோவிந்த வேளாளர் மகள் கௌரவம்பாளுக்கும் 11.-9.-1957இ-ல் பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

    சினிமாவில் கவிஞர் பரபரப்பாகப் பாடல்கள் எழுதி வந்தாலும் ‘ஜனசக்தி’ இதழில் கவிதைகள் எழுதுவதையும் தொடர்ந்தார்.
    வாரக் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் - வள்ளி தண்ணீர் பாய்ச்சச் செல்கிறாள். - அங்கிருந்த மிராசு அவளைத் தடுக்கிறார். தண்ணீர் பாய்ச்ச -முடியாத கவலையோடு திரும்புகிறாள். - மறுநாள் வயலுக்குச் செல்கிறாள் தண்ணீர் நிறைந்து கிடக்கிறது. எப்படி நடந்தது இந்த அதிசயம்? கணவன் நாகனிடம் வள்ளி சொல்கிறாள்:-

    “நண்டு செஞ்ச தொண்டு மச்சான்
    நாட்டு நிலைமையை நல்லாப் பாத்தது
    ஏற்றத் தாழ்வை ஒழிக்க வரப்பில்
    போட்டது வளையை புரட்சி நண்டு
    பாய்ந்தது தண்ணீர் பரவி எங்குமே
    காய்ந்த பயிர்களும் கதிரைக் கக்கின’’

    என்று தனது கவிதையில் ‘புரட்சி நண்’டை அறிமுகம் செய்கிறார் உழவுக் கவிஞர் கல்யாணம்.

    சுமார் ஆறு ஆண்டுகளுக்குள் திரைப் படத் துறையில் வெற்றிச்சிகரத்தை எட்டி - சினிமா போஸ்டர்களில் பாடலாசிரியர் பெயரையும் வரவழைத்து, ‘டைட்டிலில்’ பாடல்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் என்று வரும்போது அரங்கில் பலத்த கைத்தட்டல் களையும் பெற்ற கவிஞருக்கு 16.08.1959-இல் லட்சக்கணக்கான தொழி லாளிகள் - விவசாயிகள் -பொதுமக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் கோவையிலுள்ள முற்போக்கு மன்றங்கள் சார்பில் ‘மக்கள் கவிஞர்’ என்ற மாபெரும் பட்டம் வழங்கப்பட்டது. இதே ஆண்டில்தான் பட்டுக்கோட்டையாருக்கு மகனும் பிறந்தான்.

    எம்.ஜி.ஆர் படங்களுக்கு பல கவிஞர்கள் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். அவை களில் முற்றிலும் வேறுபட்ட சிந்தனையில் எழுதப்பட்ட பாடல்கள் பட்டுகோட்டையார் பாடல்களே என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இதற்குச் சான்றாக,
    “ஏற்றமுன்னா ஏற்றம்
    இதிலேயிருக்குது முன்னேற்றம்’’
    “சின்னப்பயலே சின்னப்பயலே
    சேதிகேளடா’’
    “உறங்கையிலே பானைகளை
    உருட்டுவது பூனைக் குணம்’’
    “சூழ்ச்சியிலே சுவரமைத்து
    சுயநலத்தால் கோட்டை கட்டி’’
    “தூங்காதே தம்பி தூங்காதே
    சோம்பேறி என்ற பெயர் வாங்காதே’’
    “சும்மா கெடந்த நிலத்தைக் கொத்தி
    சோம்பலில்லாம ஏர் நடத்தி’’
    “திருடாதே! பாப்பா திருடாதே’’
    போன்ற பாடல்கள் திகழ்கின்றன. இந்தப் பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கும் பட்டுக்கோட்டையாருக்கும் மக்கள் மத்தியில் தனியாசனம் பெற்றுத் தந்தன.

    சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், டி.ஆர். மகாலிங்கம், எஸ்.எஸ். ராஜேந்திரன், சரோஜாதேவி, சாவித்திரி, சந்திரபாபு போன்ற கலைஞர்கள் பட்டுக்கோட்டையார் பாடல்களுக்கு வாயசைத் திருக்கின்றனர்.

    டி.எம். சௌந்தர்ராஜன், சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், ஜிக்கி, பி. சுசிலா போன்ற பின்னணிக் கலைஞர்கள் பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.

    ஸ்ரீதர் இயக்குநராகவும், ஏ.எம். ராஜா இசையமைப்பாளராகவும், வின்சென்ட் ஒளிப்பதிவாளராகவும் அறிமுகமான ‘கல்யாணப் பரிசு’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழா தான் பட்டுக்கோட்டையார் கலந்துகொண்ட இறுதி விழாவாகும்.

    கே. இளந்தீபன்
    புதிய பார்வை | ஜூலை 1 - 15, 2014
    gkrishna

  4. Likes Russellmai liked this post
  5. #53
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சுந்தரபாண்டியன் சார்
    வருக வருக... தங்கள் வரவு இத்திரிக்கு மேலும் பலம் சேர்க்கும்.
    டூரிங் டாக்கீஸ் தீப்பற்றி எரிந்த அந்த செய்தி அந்நாளில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
    அதனைப் பற்றிய தகவல் இந்நாளைய மக்களுக்கு அபூர்வமானதாகும்.
    தொடர்ந்து தங்களின் பங்களிப்பை வேண்டுகிறேன்.
    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #54
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கிருஷ்ணாஜி
    பட்டுக்கோட்டையாரின் நினைவு நாளில் அவரைப்பற்றிய கட்டுரை பொருத்தம். பல தகவல்களின் களஞ்சியமாக விளங்குகிறது அக்கட்டுரை.
    மிக்க நன்றி. தொடர்க..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #55
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. Thanks Russellisf thanked for this post
    Likes Russellmai, rajeshkrv, Russellisf liked this post
  9. #56
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post

    அன்பு வாசு சார்,

    இது மதுர கானம் திரியின் முதல் பக்கத்தில் வந்த தங்கள் பதிவு.

    என்னுடைய பெயரிலும் 'ராம்' இருப்பதால் இதுவரை முழுவிவரம் தெரியாமல் மறுகிக் கொண்டிருந்தேன். இப்போது சம்மந்தப் பட்டவர் பெயரை மட்டைக்கு இரண்டு கீற்றாக உடைத்து சொல்லி விட்டீர்கள்.

    இனி நிம்மதி அடைந்தேன். நன்றி.
    நன்றி ஆதிராம்! இப்போதுதான் அந்தப் பதிவினை மதுர கானம் திரியின் முதல் பக்கத்தில் சென்று வாசித்தேன். எனது பெயரை வைத்து வசை பாடியிருக்கிறார். வாசிக்க சுவையாகவே இருக்கு.

    "நான் அங்கு வந்தால் என்னுடைய டாமினேஷன்தான் அதிகம் இருக்கும். என் உள்ளம் பாராட்டையே எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும். 'ஹானஸ்ட்' உள்ள அறிவுஜீவி ராஜாக்கள் உரைத்தது. ராமர் புகழ் பாடும் மங்கி (அதாவது ஹனுமானை சொன்னேன்பா) என்னை மிதித்து உரைத்தது. அது பாட்டுக்கும் அது வேலையைச் சரியாகச் செய்து விட்டு ஓடியே விட்டது."

    இதுவரை இந்தப் பதிவினை வாசிக்காமலையே 'மதுர கான' திரியினை தொடர்ந்து படித்தும், அங்கங்கே பங்கெடுத்தும் வந்திருக்கிறேன் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஆச்சர்யமாக இருக்கிறது. அவரை சிவாஜி திரியில் பங்கெடுக்காமல் தடுத்ததாக அவர் நினைக்கும் எனது பதிவு - நான் நேற்று மதுர கானத்தில் மேற்கோள் காட்டிய பதிவே. அது இன்றும் சிவாஜி பாகம் 12-ல் அப்படியேதான் இருக்கிறது. மாடரேட்டர் நீக்கியதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டு ஒரு ஜோடிக்கப்பட்ட ஒன்றாகவே கருதத் தோன்றுகிறது. எனிவே, நான் யாரைக் குறிப்பிட்டு அப்போதைக்கு அப்படியொரு கருத்தினை, அதுவும் பதிவர் ஹானஸ்ட் ராஜ் சொன்ன கருத்திற்கு வழிமொழியும் வகையில் பதிவிட்டேன் என்பது இப்போது நினைவில்லை. மதுரகானம் திரியின் முதல் பக்கத்தை முன்பேயே நான் வாசித்திருந்திருக்கலாம். அப்போதே அவ்வகையான புரிதலை சரிசெய்திருக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கலாம். ஒருவிதத்தில் எனக்கும் நிம்மதியே. இனியாவது அவர் சிவாஜி திரியில் இணையட்டும். அதற்கு ஒரு வாய்ப்பாக இந்த சர்ச்சை அமைந்துவிட்டது. பரவாயில்லை.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  10. #57
    Senior Member Diamond Hubber HonestRaj's Avatar
    Join Date
    Aug 2008
    Posts
    7,900
    Post Thanks / Like
    innaikuthan indha post paththi theriya vandhadhu...

    nadigar thilagathin miga periya fan Vasudevan avargalukku oru situation narrate panren:

    - oru theater'la 500 paer padam parkkuranga
    - sivaji nadicha oru super padam
    - 495 perukku padam arumaiya pidichirukku.. no objection..
    - 5 perkku pidichirundhalum oru sila kuraigal.. pidikkalai.. eppadi venumnalum eduthukkalam..

    ippo Vasudevan avargal nadigar thilagathin idathil irundhal enna seiveer?
    * indha 495 paerukkaga thodarndhu padangalil nadipeergala? .. illai
    * andha 5 paerkkaga field'il irundhu vilagividuveergala?

    idharkku badhil sollunga.. adhukkapuram nan melum post panren...


  11. #58
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Madurai new cinema theatre... many many movies


  12. Likes Russellmai liked this post
  13. #59
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    அந்நாளில் பிரம்மாண்டமாகவும் கம்பீரமாகவும் காட்சியளித்த விஜயா வாஹினி படப்பிடிப்பு அரங்கத்தின் நுழைவாயில்... தற்போது ஆஸ்பத்திரி, நட்சத்திர ஹோட்டல், வணிக வளாகம் என மாறி விட்டது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Likes rajeshkrv, Russellmai liked this post
  15. #60
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    அன்பே வா படப்பிடிப்பின் போது விஜயம் செய்த நேபாள மன்னரும் ராணியும்...அவர்களுடன் எம்.ஜி.ஆர், ஏவிஎம், இயக்குநர் ஏ.சி.திருலோக்சந்தர், சரோஜா தேவி, மற்றும் பலர்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Likes rajeshkrv liked this post
Page 6 of 25 FirstFirst ... 4567816 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •