Page 5 of 25 FirstFirst ... 3456715 ... LastLast
Results 41 to 50 of 243

Thread: கீற்றுக் கொட்டகை

  1. #41
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    நல்ல நோக்கம்தான் திரு ராகவேந்தர்.. வாழ்த்துக்கள். ஆனால் போகப் போக இதுவும் சிவாஜியின் புகழ் பாடும், சிலாகிக்கும் இடமாக மாறிவிடக் கூடும் என்றே கணிக்கிறேன். 'மனதை கவரும் மதுர கானங்கள்' என்ற திரியிலேயே பாட்டைத் தவிர மற்றதையும் அலசத் தொடங்கிவிட்டோம். சிவாஜிக்கென்று பல்வேறு திரிகள் இருந்தாலும் அவரது சமீபத்திய பிறந்த நாள் தின வாழ்த்துக்களால் 'மனதை கவரும் மதுர கானங்கள்' திரிப் பக்கங்கள் பல நிரம்பி வழிந்தது. எனிவே.. கீற்றுக் கொட்டகை திரியும் எந்தவழியில் பயணிக்கப் போகிறது என கொட்டகையின் வெளியெ நின்றுகொண்டே கவனிக்கிறேன். வாழ்த்துக்கள்!
    வெங்கிராம் அய்யா!

    என்ன இது? இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன். என்ன இது? என்ன பதிவு இது?

    இதுவரை மிக மிக உங்கள் விஷயத்தில் பொறுமை காத்தேன். கிட்டத்தட்ட ஓராண்டுகளுக்கு மேலாக நாகரீகம் கருதி. நீங்கள் ஹப்பில் எனக்கு சீனியர் என்ற மரியாதையில் மிக மிக அமைதியாய் இருந்தேன். நீங்கள் குட்டக் குட்டக் குனிகிறான் வாசு என்று என் மீது மீண்டும் தப்புக் கணக்குப் போட்டு மேலும் குட்ட நினைத்து மேற்கண்ட பதிவை அளித்துள்ளீர்கள்.

    குட்டு வாங்கிக் குனிந்தவன் நிமிர்ந்தால் என்ன ஆகும் என்று அகிலம் போற்றும் 'அறிவு ஜீவி'யான உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

    உங்களுக்கு ஒரு கதை தெரிந்திருக்குமே! பாம்பு ஒன்று ஆண்டவனின் கட்டளையை ஏற்று தன் சுபாவத்தைக் காட்டாமல் ஒதுங்கியிருந்ததாம். அதுவரை அந்தப் பாம்புக்கு பயந்த மக்கள் இனி பாம்பு நம்மை ஒன்றும் செய்யாது என்று அடித்து துன்புறுத்த ஆரம்பித்தார்களாம். பரிதாபமாக அந்த பாம்பு தன் நிலையை ஆண்டவனிடம் முறையிட்டதாம். அதற்கு இறைவன் 'அட பாம்பே! உன்னை கடிக்க வேண்டாமென்று தான் சொன்னேனே தவிர சீற வேண்டாம் என்று சொல்லவில்லையே"' என்றாராம்.

    அது போல எல்லாவற்றுக்கும் பேசாமடந்தையாகி விட்டால் இப்படித்தான் செய்வீர்கள். திரும்ப குணத்தைக் காட்டினால்தான் சும்மா இருப்பீர்கள் போல் இருக்கிறது.

    நீங்கள் நடிகர் திலகம் திரியில் என்னை மறைமுகமாக மோசமாக தாக்கி எழுதிய பதிவுகள் கண்டும் பேசாமல் விலகி விட்டேன். திரியை ஆக்கிரமிப்பு செய்கிறேன் என்று நாக்கூசாமல் எழுதினீர்கள். பொறுத்துக் கொண்டேன். கடினப் பட்டு பதிவுகள் போடுகிறேன் என்று இங்கு பதிவுகள் வருகின்றன என்று கேலி பேசினீர்கள். அதையும் பொறுத்துக் கொண்டேன். அதுவுமல்லாமல் நான் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் உங்களை மதுர கானம் திரிக்கு வரவேற்றும் இருக்கிறேன். உங்களுடைய சில பதிவுகளை ரசித்து பாராட்டியும் இருக்கிறேன்.

    ஒரு பதிவை முழுமையாக, நேர்மையாக, ஆத்மார்த்தமாக அளிக்க என்னென்ன சிரமங்கள் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் நீங்கள் இரட்டை வரி வம்பு வள்ளுவர் ஆயிற்றே. உங்களுக்கு அந்த அருமை பெருமையெல்லாம் எங்கே தெரியப் போகிறது? ஒருவருடைய உழைப்பை கேலி பேசி அதில் மகிழ்ந்து அற்ப சுகம் காணும் உங்களுக்கு நீதி நியாயமெல்லாம் எங்கே தெரியப் போகிறது? புரியப் போகிறது? அடுத்தவன் உழைப்பை கேலி பேசினவர் எவருமே அதன் பலனை அனுபவிக்காமல் போனதில்லை.

    ஒரு படத்தை எடுத்து அதை பலதடவை பார்த்து அதன் கதை எழுதி அந்தப் படத்தின் காட்சிகள் வசனங்கள் பாடல்கள் எழுதி அதை முடிந்தவரை தவறில்லாமல் டைப் செய்து தவம் போலத் தர முயன்று பாருங்கள். குறைந்தது மூன்று நாட்களாவது ஆகும். அப்போது அந்த வலி தெரியும் உங்களுக்கு. இதில் நக்கல், நையாண்டி, கேலிப் பேச்சு வேறே. உங்களுக்கே அருவருப்பாய் இல்லை? உங்கள் மனசாட்சி உங்களைக் குத்த வில்லை?

    உங்களுக்கு என்ன...எவனும் ஒழுங்காக எழுதிவிடக் கூடாது.. யாரும் வளர்ந்து விடக்கூடாது... எந்தத் திரியும் புகழ் பெற்றுவிடக் கூடாது. உடனே எங்கிருந்தாலும் ஒரு 3 வரியைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்து விட வேண்டியது. அதைக் கெடுக்க வேண்டியது. இது ஒன்றுதானே தங்களுக்குக் கைவந்த கலை. உழைப்பை மதிக்காத உங்களையெல்லாம் என்ன சொல்வது? அட் லீஸ்ட் மதிக்க வேண்டாம். அதை மாசு படுத்தாமல் இருந்தால் போதாதா?

    பெரிய நக்கீரன் என்று உங்களுக்கு நினைப்போ?

    இப்போது மீண்டும் அதே மாதிரி மிக மோசமாக hurt செய்யும் ஒரு பதிவை அளித்துள்ளீர்கள்.

    நீங்கள். ரொம்ப ஜென்டிலாக பதிவுகள் இடுவது போல் இரண்டு மூன்று வரிகளில் அடுத்தவர்களை ஆயுசு முழுக்க நினைத்து வருத்தப் படுமளவிற்கு புண்படுத்தி வருகிறீர்கள். (இதற்கு கோபால் எவ்வளவோ தேவலை. மனதில் உள்ளதை ஒளிவு மறைவு இல்லாமல் நேரிடையாகச் சொல்லிவிடுவார்). அதனுடைய வலி பாதிக்கப் பட்டவர்களுக்குத்தான் தெரியும்.

    இப்போது பகிரங்கமாகவே விஷயத்திற்கு வருகிறேன்.

    நீங்கள் உங்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்? திரியில் ஏன் இப்படி வம்பளக்கத் திரிகிறீர்கள்?

    உங்களை யாரும் தட்டிக் கேட்கவில்லை என்ற தைரியமா? இல்லை எது போட்டாலும் பேசாமல் வாய்மூடி மௌனியாய் இருந்து விடுகிறான் வாசு என்று இளக்காரமா? கிள்ளுக் கீரையாய் நினைத்து விட்டீர்களா?

    நடிகர் திலகமே தெய்வம் என்று நினைத்து நடிகர் திலகம் திரியில் என் ஆத்மார்த்தமான பதிவுகளை நாள் அளித்து வந்துள்ளேன். கால, நேரம் எதுவும் பாராமல் நடிகர் திலகம் புகழ் ஒன்றுதான் முக்கியம் என்று என் மனசாட்சிக்குக் கொஞ்சமும் விரோதம் இல்லாமல் அங்கு என் இதய தெய்வத்திற்கு உழைத்து வந்தேன். அது எல்லோருக்கும் ஏன் உங்கள் மனசாட்சிக்கும் தெரியும்.

    ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்?

    அது பொறுக்கமாட்டாமல் மானசீகமாக நான் போட்ட பதிவுகளை, அதற்கு நானுழைத்த உழைப்பைக் கேவலப்படுத்தி இப்போது போலவே அப்போதும் ஒரு பதிவை இட்டீர்கள். இப்போதுதான் காரணம் அதற்குப் புரிகிறது. நடிகர் திலகத்தின் மீது தங்களுக்கு இருக்கும் வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும்.

    இப்போது பகிரங்கமாகச் சொல்கிறேன். நடிகர் திலகம் திரியில் நான் பதிவிடாமல் இதுவரை விலகி நிற்பதற்கு வெங்கிராம் என்ற நீங்கள்தான் முழுக் காரணம். இதை நான் முரளி சாரிடமும் சொல்லி இருக்கிறேன். கோபால் சார், மற்ற நண்பர்களிடமும் சொல்லி இருக்கிறேன்.

    இப்போது 'மதுர கானங்கள்' திரியில் வந்து உங்கள் வேலையைக் காட்ட வந்திருக்கிறீர்கள்.

    'மதுர கானங்கள்' திரியில் நடிகர் திலகம் பிறந்த நாள் அன்று நடிகர் திலகத்தைப் பற்றிய அபூர்வ செய்திகள், இதுவரை வெளியிடப்படாத படங்கள் வெளியிட்டேன். நீங்கள் ஒரு உண்மையான ரசிகராய் இருந்தால் சிவாஜி ரசிகராய் இல்லை) இல்லை ஒரு சாதாரண ஆறறிவு கொண்ட மனிதனாய் இருந்தால்கூட அந்த உலகப் புகழ் பெற்ற நடிகரின் அரிய புகைப்படங்களைப் பார்த்து பெருமிதம் கொண்டிருந்து இருப்பீர்கள்.

    தமிழகத்தின் பெருமையை தன் நடிப்பால் உலகமறியச் செய்த முதல் உலக மகா உன்னத நடிகன். அவர் பெருமையை அவர் பிறந்த நாள் அன்று நான் பதிவிட்டால் உங்கள் வயிறும் உள்ளமும் எரிகின்றது. கேட்டால் மதுர கானங்களுக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று சால்சாப்பு வேறு. என்னே உங்கள் ரசனை! என்னே உங்கள் தமிழ்ப் பண்பு!

    எல்லாமே தலைப்பிட்டபடிதான் நடக்கிறதா? பல்வேறு கொள்கைகளைக் கொண்ட ஒன்றுக்கொன்று முரண்பட்ட வெவ்வேறு தொலைகாட்சி சானல்கள் கூட அக்டோபர் 1 நடிகர் திலகம் பிறந்தநாள் அன்று அந்த மாபெரும் நடிகரை போட்டி போட்டுக் கொண்டு நினைவு கூர்கின்றன. அவர் நடித்த படங்களையும் அவர் பாடல்களையும் போட்டு அவர் புகழ் பாடுகின்றன. பத்திரிகை உலகம் ஒட்டு மொத்தமும் அவர் பிறந்த நாளை நினைவு படுத்தி மகிழ்கின்றன. ஒரு உன்னத தமிழ் நடிகனுக்கு அனைவரும் அளிக்கும் அன்பு அங்கீகாரம் அது. சினிமா ஸ்பெஷல் என்று போட்டது வரும் விகடனில் கூட சினிமாவைத் தவிர வேறு விஷயங்களும் வருவதுண்டே!

    அது போல மதுர கானங்கள் திரியில் அன்று ஸ்பெஷலாக நடிகர் திலகத்தின் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு பதிவுகள் அளிக்கப்பட்டது. நான்தான் முழுக்க முழுக்க சில பக்கங்கள் பதிவிட்டேன். மேற்சொன்ன ஊடகங்களே நடிகர் திலகத்தின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் போது மதுர கானங்கள் திரியில் அதுவும் நடிகர் திலகத்தின் பக்தனான நான் எப்படிக் கொண்டாட வேண்டும்? என்னை விடுங்கள். ஒரு ரசிகனாக, ஒரு தமிழனாக கொண்டாடினேன் என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். அதில் என்ன தப்பு? அதில் என்ன உங்களுக்கு வயிற்றெரிச்சல்...பொறாமை?.

    கிருஷ்ணா சார் சொன்னது போல இன்றைய ஸ்பெஷல் என்ற தொடரில் இதுவரை 3 நடிகர் திலகத்தின் பாடல்களை மட்டுமே அலசியுள்ளேன். ஏன் நூறு பாடலுமே நடிகர் திலகத்தின் பாடல்களாக நான் எடுத்து அலசக் கூடாதா? அப்படியே போட்டாலும் அதை ரசிக்கத்தான் இங்கு ஆட்கள் இருக்கிறார்களே ஒழிய உங்களைப் போல் கெடுக்கும் கோணல் புத்திக்கார்கள் யாரும் இல்லை. இதிலிருந்தே தெரியவில்லை. ஒரு உலகப் புகழ் பெற்ற நடிகனைப் பற்றிப் பதிவு போட்டால் உங்களுக்குப் பொறுக்கவில்லை. உங்கள் நெஞ்சு கொதிக்கிறது. வெட்கம் சார். தமிழன் என்று சொல்லவே வேதனையாய் இருக்கிறது. அது கூடப் பரவாயில்லை. அதைப் பற்றி மதுரகானங்கள் திரியில் கூட உங்களால் பதிய முடியவில்லை. 'கீற்றுக் கொட்டகையில்' போய் கோழையாய் பதிகிறீர்கள். ஏன்? எனக்கு நேரிடையாக எழுதுவதுதானே? ராமராஜனையும, ரேகாவையும் நெக்குருக நீங்கள் நெஞ்சில் வைத்துப் போற்றும்போது (உங்கள் அறிவார்ந்த ரசனைக்கு என் தலை சாய்த்த வணங்க்கங்கள்) கலைக்கடவுள் நடிகர் திலகத்தை நாங்கள் எப்படிப் போற்ற வேண்டும் என்று நீங்களே கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இதுகூடவா அபார மேதையான உங்களுக்குத் தெரியாது?


    மதுர கானங்கள் திரியில் ஆயிரக்கணக்கில் பாடல்கள் அனைவராலும் ஒற்றுமையோடு அற்புதமாக அலசப்பட்டுள்ளன. அதெல்லாம் உங்கள் கண்களுக்குப் புலப்படவில்லையா? உங்களுக்கு என்ன கண் அவுட்டா? த்சொ.. த்சொ...ஒவ்வொருவரும் தங்கள் உயிரைக் கொடுத்து இங்கு உழைத்து இந்தத் திரியை உயரத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். மது அண்ணா, ராஜேஷ், சின்னக் கண்ணன் சார், கிருஷ்ணா சார், ராகவேந்திரன் சார், கார்த்திக் சார், கோபால் சார், முரளி சார் என்று சகோதர உணர்வோடு சண்டை சச்சரவுகள் எதுவும் இல்லாமல் ஜாலியாக சந்தோஷமாக இங்கு பதிவிட்டு வருகிறார்கள். எண்பது சதவீதம் பாடல்கள் என்றால் மற்ற சினிமா விஷயங்கள் மீதி. இதில் என்ன தவறு? இங்கு இருக்கும் அனைத்து சீனியர்களுக்கும் தெரியும் அவர்களுக்கு நான் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் தருகிறேன் என்று.

    இப்படி யாராவது சந்தோஷமாக இருந்தாலோ, திரிகள் உழைப்பால் வளர்ந்தாலோ உங்களுக்குப் பிடிக்குமா?


    நீங்கள் விமர்சனம் செய்யுங்கள். இந்தப் பதிவு சரியில்லை இது வேறு மாதிரி இருக்கலாம் என்று. அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்பது கூட தெரியாத மூடன் அல்ல நான். ஆனால் உங்களைப் போல குதர்க்க புத்தி, நொட்டை புத்தி எல்லாம் எங்களுக்குத் தெரியாது.

    இனியாவது பதிவாளர்களை புண்படுத்தாத புத்தியை அந்த ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.

    மேற்கொண்டு நீங்கள் இப்படி மறைமுகமாக இப்படியெல்லாம் வேதனைப்படுத்தும் பதிவுகள் இட்டால் உங்கள் ரேஞ்சைவிட கீழே இறங்க நானும் தயார். அப்படியும் தரம் தாழ்ந்து என்னால் எழுத முடியும். ஆனால் அதனை நான் விரும்பவில்லை. ஆனால் நடிகர் திலகம் திரியிலிருந்து விலகி அமைதியாய் இருந்தது போல் இருந்து விடுவேன் என்று கனவு மட்டும் காணாதீர்கள். இப்போதும் உங்கள் மேல் கொஞ்ச நஞ்ச மதிப்பும், மரியாதையும் நெஞ்சின் ஒரு ஓரத்தில் வைத்துள்ளேன். தயவு செய்து அதையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

    அதிக கோபத்துடனும், அதைவிட அதிக வருத்தத்துடனும்

    நெய்வேலி வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 7th October 2014 at 07:58 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #42
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திரு ராகவேந்தர் அவர்களுக்கு
    கீழ்க்கண்ட வேண்டுகோள் இங்கே பதிவிடுவதற்கு நீங்கள் அனுமதிப்பீர்கள் என்ற எண்ணத்துடன் பதிவிடுகின்றேன்
    டியர் கிருஷ்ணா,
    தங்களுடைய வருகைக்கும் மேலான பங்களிப்பிற்கும் என் உளமார்ந்த நன்றியும் வரவேற்பும் வணக்கங்களும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அனுமதியெல்லாம் கேட்பதெல்லாம் டூ மச் சார்.. இது நம் ஒவ்வொருவருக்குமான திரி.

    அதுமட்டுமல்லாமல் விதிப்படியே பார்த்தாலும் கூட திரியைத் துவங்குவது நம்முடைய விருப்பம் என்றாலும் கூட அதில் பதிவுகளை அனுமதிப்பது, நீக்குவது, எடிட் செய்வது போன்ற அனைத்துமே அந்தத் திரிக்கென உள்ள மாடரேட்டரின் பொறுப்பாகும். இன்னும் சொல்லப் போனால் திரியைத் துவங்கியவர்களால் அதை முடக்க முடியாது.

    தொடர்ந்து தங்களின் மேலான பங்களிப்பினைத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #43
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வினோத் சார்
    தங்களுடைய பங்களிப்பின் மூலம் இத்திரியின் மவுசு கூடி வருகிறது. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும் வாழ்த்துக்களும்.
    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #44
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    தங்களுடைய வாழ்த்துக்கு என் உளமார்ந்த நன்றி. தங்களுடைய மேலான பதிவுகளை இத்திரியிலும் ஆவலுடன் எதிர்நோக்குகின்றேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #45
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கீற்றுக் கொட்டகை என்பது நவீன மயமான சினிமாவிற்கு முந்தைய பரிமாணம். கிட்டத்தட்ட 70களின் முற்பகுதி வரையில் தமிழ் சமுதாயத்தின், குறிப்பாக கிராமங்களின் ஒரு அடையாளச் சின்னமாக விளங்கியது. அவற்றின் பிம்பங்கள் அவற்றின் பிரதிபலிப்புகளெல்லாம் கருப்பு வெள்ளைகளாகவே பெரும்பாலும் அமைந்தன. அந்நாளைய நட்சத்திரங்களைத் தங்கள் வாழ்வுடன் மக்கள் இணைத்துப் பார்க்கும் பாலங்களாக விளங்கியவை கீற்றுக் கொட்டகைகள். சினிமாவை சராசரி மனிதனின் உறவாகவே அமைத்தவை கீற்றுக் கொட்டகைகள். மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த பெருமை கீற்றுக்கொட்டகைகளுக்கே உரித்தான சிறப்பு. எவ்வளவு தான் நவீன மயமாக்கல் சினிமாவின் பல்வேறு துறைகளில் வந்தாலும் - அது ஒப்பனையாகட்டும், சண்டைக்காட்சிகளாகட்டும், ஒளிப்பதிவாகட்டும், படத்தொகுப்பாகட்டும் அல்லது எந்தவிதத் துறையாக இருந்தாலும் அது எந்த வடிவில் தயாரிக்கப் பட்டாலும் மக்களின் உள்ளத்தில் புகுந்து உறவாடும் நெருக்கத்தை நவீன மயமாக்கப்பட்ட திரையரங்குகள் தருவதில்லை என்பது உண்மை. ஆயிரம் மல்டிப்ளெக்ஸ் வளாகங்கள், ஏராளமான நவீன திரையரங்குகள் வந்தாலும் மக்களால் ஒன்றிப் போக முடியவில்லை என்பது உண்மை.

    அப்படிப்பட்ட உணர்வு பூர்வமாக மக்களின் மனதில் இடம் பிடித்த கீற்றுக் கொட்டகைத் திரையரங்குகளின் மூலம் மக்களின் ஆழ்மனதில் தங்களுக்கென்று நிரந்தரமான இடங்களைப் பிடித்தவர்கள் சிவாஜியும் எம்.ஜி.ஆரும். இதற்கு மாற்றுக்கருத்து கிடையாது. இந்த இருவரின் ஆளுமையால் தான் இன்றும் தமிழ் சினிமா வாழ்ந்து கொண்டிருக்கிறது.

    இவர்கள் நடிகர்கள் என்ற நிலைமையத் தாண்டி மக்களிடையே தலைவர்கள் என்ற அந்தஸ்தைப் பெற்று விட்டவர்கள். அதையும் தாண்டி இறைவனாகவே போற்றப்படுபவர்கள். மக்களால் தங்கள் குடும்பதில் ஒருவராகப் போற்றி வணங்கப் படுபவர்கள்.

    தமிழிலுள்ள எந்த ஒரு ஊடகமும் இவர்கள் இருவரைத் தவிர்த்து தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழ் பேசும் நல்லுலகம் எங்குமே தழைக்கமுடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.

    இந்தியாவிலுள்ள எந்தப் பகுதி ஊடகமாக இருந்தாலும் அவரவர் பகுதியைச் சார்ந்த திரை நட்சத்திரங்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் போன்றவற்றை அனுசரித்து அந்த நாள் முழுவதுமே அவர்களுக்கென ஒதுக்குகின்றன.

    இன்னும் சொல்லப் போனால் வட இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் அந்த குறிப்பிட்ட நாள் முழுதும் ஒரு லோகோவைப் போல அந்த நட்சத்திரத்தின் நிழற்படத்தை நாள் முழுதும் தங்கள் ஒளிபரப்பில் இணைத்து விடுகின்றன. வானொலிகளோ அன்று முழுதும் அல்லது குறைந்த பட்சம் குறிப்பிட்ட கால அளவிலாவது அந்த நட்சத்திரத்தைப் பற்றி நேரம் ஒதுக்கி தகவல்கள் ஒலிபரப்புகள் என தங்கள் அஞ்சலியை செலுத்துகின்றன.

    இந்த அடிப்படையில் பார்த்தாலும் சிவாஜி, எம்ஜிஆர் இல்லாமல் பழைய தமிழ்ப் படங்களைப் பற்றிய எந்த விவாதமும் நிறைவடையாது.

    இது இயல்பாகவே அமைந்து விடும். இயல்பாகவே இடம் பெறும். இயல்பாகவே நடைபெறக்கூடிய உணர்வுடன் கலந்த விஷயமாகும்.

    இந்த அடிப்படையில் ஒவ்வொரு பதிவாளரும் தங்களுடைய விருப்பம் அபிமானம் சார்ந்த வகையில் பதிவுகளை அந்த குறிப்பிட்ட நாட்களில் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாத ஒன்றாகும்.

    இதற்கு இத்திரியும் விதிவிலக்காகாது என்பதே என் தனிப்பட்ட அபிப்ராயம்.
    Last edited by RAGHAVENDRA; 7th October 2014 at 10:16 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #46
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவிகிரண்சூர்யா சார் /கிருஷ்ணா சார்/வாசுதேவன் சார்/ராகவேந்திரன் சார்

    தங்கள் புரிதலுக்கும், உண்மையின் பக்கம் தங்கள் கருத்துக்களைப் பதித்தற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

    உள்ளங்கைகளால் சூரியனை மறைக்கலாம் என்ற நப்பாசை இனியும் பலிக்காது. 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பது பழமொழி. தேன் கூட்டில் கைவைத்தால் இப்படித்தான்.

    அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #47
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    அதுமட்டுமல்ல, சிவாஜி வெறியர்கள், எம்.ஜி.ஆர் வெறியர்கள் எல்லாம் இருக்கத்தான் செய்வார்கள்.. கமலுக்கு தினுசு தினுசாக திரிகள் இருக்கத்தான் செய்கின்றன நாளுக்கு ஒரு ப்ட்டத்துடன் நீட்டி முழக்கி திரியின் பெயர்கள் வளர்ந்து கொண்டுதான் உள்ளன.. இதையெல்லாம் நிறுத்தி விட முடியாது.

    கீற்று கொட்டகையோ டூரிங் டாக்கீஸோ படம் பார்த்தது என்னவோ எம்.ஜி.ஆர்,சிவாஜி,ஜெமினி,எஸ்.எஸ்.ஆர் படங்கள் தானே .. அந்த அனுபவங்களும் அந்த சூழலில் இந்த மாதிரி திரையரங்கங்களில் நடந்த விஷயங்களை பற்றி பேசவே இந்த திரி என்பது என் அபிப்ராயம்..

    அவரவர் அவருக்கு பிடித்த நடிகரின் படங்களை கீற்று கொட்டகையிலோ டூரிங்டாக்கீஸிலோ பார்த்தை எழுதத்தான் செய்வார்கள் ..
    கொட்டகையின் மூங்கில் கம்பியையும் அழுது வடியும் பல்பை பற்றியுமா எழுதுவார்கள் ...

  9. #48
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அருமையாக சொன்னீர்கள் ராஜேஷ்ஜி!

    நான் கூட கீற்றுக் கொட்டகையின் வெளியே நின்று கொண்டே கவனித்தது உண்டு. அதாவது குற்றம் கண்டுபிடிக்க அல்ல. இரு திலகங்களின் படத்திற்கு கூட்டம் அதிகமாகி கொட்டகைக்கு வெளிப்புறம் நின்று பாதி திரை தெரிந்தும் தெரியாமலும் பார்த்த அனுபவங்களைச் சொல்கிறேன். அழுக்குப் படிந்த அந்த வெண் மஞ்சள் திரையில் தேய்ந்து போன படச் சுருள் காட்சிகளைக் காண்பதே தனி சுகம்.

    அது போல தீபாவளி என்றாலும் சிவாஜி எம்ஜிஆர் படங்கள்தாம். அன்று மட்டும் 4 காட்சிகள் உண்டு. கீற்றுக் கொட்டகையின் நீள் பக்கவாட்டு வெளிச்சம் வரும் பகுதிகளை தார் சாக்குகள் தொங்க விட்டு திரையரங்கை இருட்டாக்க முயற்சி செய்திருப்பார்கள்.

    படம் படுமங்கலாகத் தெரியும். ஆனால் விசில், கைத்தட்டல்கள் அள்ளும்.

    இங்கு இருக்கும் நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நடிகர் திலகம் படத்தை டூரிங் டாக்கீஸில் பார்த்த அனுபவத்தை எழுதி கிழுதி விடப் போகிறீர்கள்? அப்புறம் உங்க கதி அதோகதிதான். அதெல்லாம் கீற்றுக் கொட்டகைக்கு சம்பந்தமில்லாத சமாச்சாரங்கள்.

    ராஜேஷ் சார் சொன்னது போல கேண்டீன் டீ, முறுக்கு, ஸ்பீக்கர், ஓப்பன் டாய்லட், மண் குவியல், குடித்து விட்டு தகராறு அடிதடி, சண்டை இப்படியாக கீற்றுக் கொட்டகையுடன் சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டும் எழுதுங்கள்.

    இன்னொரு கண்டிஷன். யாரும் ஒன்றிரண்டு பதிவுக்கு மேல் போடாதீர்கள். அப்புறம் கீற்றுக் கொட்டகையை நீங்கள் ஆக்கிரமித்து விட்டதாக பழி வரும். இந்தப் பாவமெல்லாம் உங்களுக்குத் தேவையா? நீங்கள் கும்பலில் நுழைந்து டிக்கெட் எடுத்த அனுபவத்தையும் எழுதக் கூடாது. இவன் கஷ்ட்டப்பட்டு டிக்கெட் எடுத்தான் என்று எழுதுகிறான் என்று உங்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடக்கும்.

    உங்களிடம் பாதுகாப்பு கவசம் இருக்கிறதா? திரியில் எழுத உங்களுக்கு ஆசை இருந்தால் தயவு செய்து அதை அணிந்து கொண்டு எழுத வரவும். இல்லை என்றால் உங்கள் நிலை பரிதாபமே.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #49
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    ஓவியர் ஜீவா...

    வே.ஜீவானந்தன் இயற்பெயர். ஓவியர் ஜீவா என்ற பெயரில் உலக திரைப்படங்களை பற்றி 'ரசனை' மாத இதழில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் எழுதி வருகிறார். அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் ஒரு தொகுப்பாக 'திரைச்சீலை' என்ற பெயரில் திரிசக்தி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கின்றன.

    வழக்கறிஞர் என்றாலும் ஓவியராகவே அதிகம் அறியப்பட்டவர். கோவையில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சித்ரகலா அகாடமி என்ற அமைப்பின் மூலமாக ஓவிய இயக்கத்தில் தீவிர பங்கு கொண்டு...ஏராளமான ஓவியர்களின் கலை பயணத்தை சீரமைத்த பெருமை உண்டு.
    திரைப்படங்கள் சார்ந்த சூழலிலேயே வளர்ந்ததினால் அவற்றின் மீது ஆழ்ந்த காதல் உண்டு. குடும்பச்சூழல் கோவையிலேயே முடக்கிப் போட்டாலும் , வீட்டிலிருந்து இரண்டு ஒளிப்பதிவாளர்களை தந்திருக்கிறார். ஒருவர், இந்தியிலும் புகழ் பெற்றிருக்கும் இளைய சகோதரன் மணிகண்டன், இன்னொருவர் இப்போதுதான் 'ஓடிவா' மூலம் கால் பதித்திருக்கும் மகன் ஆனந்த்.

    ஓவியர் ஜீவா தன்னுடைய கொட்டகை அனுபவத்தை இங்கே நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்.

    திரையரங்கங்களுக்கும் எனக்கும் தொப்புள் கொடி உறவு இருந்தது என்றால் சிரிப்பார்கள். திரையரங்கங்களுக்கு முன் வைக்கப்படும் பெரிய பேனர்களும் கட் அவுட்டுகளும் வரைவது என் தந்தையின் தொழிலாக இருந்தது. பின்னர் என் தொழிலாகவும் மாறியது. நகரத்தில் பிறந்து வளர்ந்ததால் டூரிங் தியேட்டர் அனுபவங்கள் இருந்ததில்லை. ஆனாலும் அதை ஒத்த தியேட்டர்கள்தான் அப்போது இருந்தன. நான் ஒரு தரை டிக்கட் 43 பைசா பையன். பள்ளி இறுதி ஆண்டு படிக்கும்போதுதான் பென்ச் டிக்கட் ஆன 75 பைசாவுக்கு முன்னேறினேன். தரை டிக்கட் என்பது முதுகுக்கு சாய்மானம் இல்லாத நீள் பெஞ்சுகள். திரைக்கு வெகு அருகில். பென்ச்சில் அமர மனமில்லாதவர்கள் தீ என்று எழுதப்பட்ட சிவப்பு நிற மணல் பக்கெட்டுகள் மறைக்காமல் தரையில் படுத்துக்கொண்டும் படம் பார்க்கலாம். புகை பிடிக்க கூடாது என்று சிலைடுகள் முழங்கினாலும் பீடி புகை நிறைந்திருக்கும். போலீஸ் எப்போதுமா பிடிப்பதற்கு வருவார்கள்..? தரை டிக்கட்டுகளிலிருந்து பார்க்கும்போது திரை ஒரு குறிப்பிட்ட கோணத்தில்தான் தெரியும். இன்றும் என் நினைவு அடுக்கிலிருக்கும் படங்கள் மனக்கண்ணில் அப்படித்தான் தெரிகின்றன.

    அப்போதெல்லாம் தியேட்டர்கள்தான் கோவை போன்ற நகரங்களில் ஒரே பொழுதுபோக்கு சாதனம். புது படங்களுக்கு, அதுவும் பெரிய நடிகர்கள் படங்களுக்கு கூட்ட நெரிசல் தாங்காது. முன்பதிவு இல்லாத வகுப்புகளுக்கு வரிசைகள் பிதுங்கி வழியும். இரண்டு மணிநேரம் முன்னால் வந்து கியூவில் காத்து நிற்பது என்பது சர்வ சாதாரணம். தவமாய் தவமிருப்பார்கள் ரசிகப்பெருமக்கள்.பொழுது போகவேண்டாமா...கடலை, பர்பி போன்ற சாதனங்களை ஆட்கள் விற்று வந்தாலும்...குட்டி குட்டி சூதாட்டங்கள்தான் மெயின். நாடா குத்துதல், மூணு சீட்டு, பர்பி சீட்டு குலுக்கல் என்று பொழுது போக நிறைய ஐட்டங்கள். சில சமயங்களில் இருந்த காசை அங்கேயே தொலைத்துவிட்டு கியூவிலிருந்து விலகிப்போகிறவர்கள் உண்டு. மனதிடம் மிக்கவர்கள் இந்த விளையாட்டுக்களில் கலந்து கொள்ளாமல் சுவற்றில் நாணயங்களை கொண்டு விதவிதமான வடிவங்களை ஆழ செதுக்கி தங்கள் கலை திறமையை வெளிப்படுத்துவர். டிக்கட் கவுண்டர் திறந்ததுதான் தாமதம், அத்தனை ஒழுங்கும் பறந்து விடும். முண்டியடிப்பவர்களும், தலைக்கு மேல் ஏறி பயணம் செய்பவர்களும் தங்கள் திறமையை காட்ட துவங்கி விடுவார்கள். பெரிய நடிகர்களின் படங்களுக்கு இவற்றை ஒழுங்குபடுத்த சில சமயம் போலீசார் வரவழைக்கப்பட்டிருப்பார்கள். இல்லாவிட்டால் யார் வேண்டுமானாலும் கையில் ஒரு தடியுடன் வந்து கியூவில் நிற்பவர்களை அடிக்கலாம். எதிர்ப்புணர்வே இல்லாமல் அடி வாங்கிக் கொள்வார்கள். ஒரு கோவை தியேட்டரில் வாசலில் ஐஸ்கிரீம் கடைக்காரர், கேண்டீன்காரர்கள் எல்லோரும் வந்து எங்களை சகட்டு மேனிக்கு அடிப்பதுண்டு. தியேட்டருக்குள் பாய்ந்ததும் இடம் பிடிக்கவேண்டும். என்னை போன்ற நோஞ்சான்களுக்கு முன் வரிசைதான் கிடைக்கும். கழுத்தை வளைத்து திரையை பார்க்கவேண்டும்.

    காண்டீன்கள் தியேட்டர்களின் முக்கிய அங்கம். தட்டை முறுக்கு, தேங்காய் பர்பி, தேங்காய் பிஸ்கட், கடலை உருண்டை, சோடா கலர், காபி போன்றவைதான் விற்கப்படும் . தட்டுகளில் ஏந்தி உரக்க கூவிக்கொண்டு விற்பனையாளர்கள் தியேட்டருக்குள் சுற்றிக் கொண்டிருப்பார்கள், படம் ஓடாதபோதுதான்! ஒவ்வொரு தியேட்டருக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல் ஐட்டம். சென்ட்ரல் தியேட்டர் கீரைவடையும் காப்பியும் மகா பிரசித்தம். ஆங்கிலப்படங்களை திரையிட்டு வந்த ரெயின்போவில் குறைந்த விலைக்கு பப்சும் காப்பியும் கிடைக்கும். ஸ்ரீபதி தியேட்டரில் முட்டை பஜ்ஜி புகழ் பெற்றது. இதை போட்டுக்கொண்டிருந்தவர் ஸ்ரீபதி முத்து என்றே புகழ் பெற்றார். கம்பெனி பாட்டு புத்தகங்கள் அப்போது தியேட்டர்களில் விற்கப்படும். சில தயாரிப்பாளர்கள் இதிலும் புதுமை புரிவார்கள். சீட்டு கட்டு வடிவத்திலும் ரிக்கார்ட் வடிவத்திலும் கூட பாட்டு புத்தகங்கள் விற்கப்பட்டன. இந்தி பாட்டு புத்தகங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    அப்போது தினமும் மூன்று காட்சிகள்தான். சனி ஞாயிறுகளில் காலை காட்சி இருக்கும். அதிலும் பழைய படங்களையும் திரையிட்டு குறைந்த கட்டணத்தில் காட்டுவார்கள். சில தியேட்டர்களில் பழைய இந்திப்படங்கள் காட்டுவதுண்டு. சாந்தாராம் படங்களை கோவையிலும் சத்யஜித் ராய் படங்களை சென்னையிலும் இப்படித்தான் பார்த்தேன். ஸ்ரீபதி தியேட்டரில் எண்பதுகளில் இன்டெர் ஷோ என்று ஒரு காட்சி இரவு எட்டு மணிக்கு போட்டதுண்டு...பாஸ்பைண்டர், ஜானுச்சி போன்ற மேதைகளின் உலகப்படங்களை சப் டைட்டில்களுடன் சக ருசி உள்ளவர்களுடன் பெரும் திரையில் பார்த்த்த பொற்காலம் அது. கோவையில் தியேட்டர்களுக்கு இருந்த இன்னொரு கவர்ச்சி சினிமா பேனர்களும் கட் அவுட்டுகளும். சென்னை ஓவியர்களுக்கு ஈடாக இங்குதான் அற்புதமாக வரையப்படுகிறது என்று திரைத்துறையில் சொல்லப்படுவதுண்டு.

    சைக்கிள் டிக்கட் என்று ஒரு பிரிவு அப்போது தியேட்டர்களில் இருந்தது. ஒரு சைக்கிளுக்கு ஒரு டிக்கெட். நமக்கு பதில் சைக்கிள் கியூவில் நிற்கும். எம்ஜியார், சிவாஜி படங்களுக்கு இந்த கியூ கிலோமீட்டர் கணக்கில் சில சமயங்களில் நீளும்.டிக்கட் கொடுக்கும் சமயத்தில் வண்டிக்கு உரியவர்கள் அதை தள்ளிக்கொண்டு சென்று அதற்குரிய கவுண்டரில் டிக்கட் வாங்குவார்கள்.. அதிலும் சில சமயங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டு பெடல்கள் இன்னொரு வண்டியின் பெடல்களுடன் பின்னிப் பிணைந்து ஒரே ரகளைதான்! மெக்கென்னாஸ் கோல்ட் போன்ற புகழ் பெற்ற ஆங்கிலப்படங்களுக்கும் இதே நிலைதான்.
    டிலைட் தியேட்டர் முதலாளி அப்போது ராம் சொரூப் சேட்டு. இந்தி திரைப்பட உலகின் பெரும் புள்ளிகளுடன் நெருக்கமானவர். ஓவ்வொரு வாரமும் இந்திப்படங்கள் மாறும். பம்பாயிலிருந்து போட்டோ கார்டுகள் வந்துவிட்டால் தியேட்டரிலிருந்து என் தந்தையை அழைக்க ஆள் வரும். சில சமயம் என்னை அனுப்பிவிடுவார். அலுவலக அறையில் மேஜை நாற்காலி இருந்தாலும், சேட் தரையில் ஒரு பெரிய மெத்தை விரித்து , திண்டுகள் சகிதம் படுத்துக்கொண்டிருப்பார். புகைப்படங்களை கொடுத்து யாரை பெரிதாக வரையவேண்டும்...யாரை வரையத்தேவை இல்லை என்றெல்லாம் உத்தரவிடுவார். அவர் சொன்னதை இந்த அதிகபிரசங்கி கேட்டதேயில்லை. எனக்குத்தான் அந்த படங்களின் கதை தெரியுமே. அவர் சொன்னதை மறுத்து..இந்த நடிகருக்குத்தான் கதையில் முக்கியத்துவம்...ஆகவே அவரைத்தான் பெரிதாக போடவேண்டும், இதில் நாயகிக்குத்தான் நல்ல பெயர்..அவரை பெரிதாக வரையலாம் என்று விளக்குவேன். சேட்டுக்கு எப்போதும் இது ஒரு ஆச்சரியம். ஒன்று..அவரை யாரும் மறுத்து பேசுவதில்லை. இரண்டு இந்த கருப்பு நிற பொடியன் இந்தி படங்களை பற்றி இவ்வளவு தெரிந்திருக்கின்றானே என்று.

    அவருக்கு என் மீது தாளா அன்பு பிறந்துவிட்டது. பிரத்தியேகமான வண்ண இந்தி திரைப்பட பாட்டு புத்தகங்களை ஒவ்வொரு பட ரிலீசின்போதும் என்னை அழைத்து கொடுப்பார். என் தந்தையை அங்கு வரக்கூடாது என்று உத்தரவிட்டு விட்டார். 'இனிமேல் ஆர்டர் வாங்க அவன்தான் வரவேண்டும்' என்று உத்தரவு. ' அவன் காலேஜ் முடிக்கட்டும், பம்பாயில் ராஜ்கபூரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேர்த்துவிடுகிறேன்' என்று வேறு யாரும் கேட்காமலேயே வாக்களித்துவிட்டார். என் தந்தைக்கு பிடித்தது கிலி. பின்னே கலெக்டராக வரவேண்டிய மகன் சினிமா இயக்குனராவதா என்று பயந்து எம்.ஏ.படிக்க சென்னைக்கு துரத்திவிட்டுவிட்டார்.

    திரை அரங்கங்களை பற்றி எழுதிக்கொண்டே போகலாம். சலிக்காது என்பது மட்டும் நிச்சயம்!
    http://thamizhstudio.com/others_tt_4.php தமிழ் ஸ்டூடியோ.காம் இணைய தளத்திலிருந்து...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #50
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எங்கள் கிராமத்து டூரிங் டாக்கீஸில் [ 1964-1969] தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட
    தெலுங்கு பக்தி படங்கள் - மாயஜால படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன .என் .டி .ஆர் - காந்தா ராவ் - ராஜநாளா மிகவும் பிரபலமானவர்கள் . அதே போல் தமிழ் பக்தி படங்கள் மிகபெரிய வரவேற்பை பெற்றன .எம்ஜிஆர் - சிவாஜி படங்களுக்கு பிறகு ஜெய் சங்கர் - ரவிசந்திரன் படங்கள்நன்கு ஓடியது .

Page 5 of 25 FirstFirst ... 3456715 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •