Page 24 of 25 FirstFirst ... 1422232425 LastLast
Results 231 to 240 of 243

Thread: கீற்றுக் கொட்டகை

 1. #231
  Senior Member Veteran Hubber
  Join Date
  Feb 2012
  Location
  Indonesia
  Posts
  4,127
  Post Thanks / Like
  சிவாஜி ரசிகர்கள் பெருந்தன்மையாக கண்டு கொள்ளாமல் விடுவதால் அவிழ்த்து விடுகிறார் மூட்டைகளை.  நீரும் நெருப்பும் படத்துக்கு கூட்டமாம். பாபுவுக்கு இல்லையாம். விட்டால் 15 நாள் ஓடிய என் கடமை கூட கூட்டத்தில் சேர்ந்து விடும் போல.  4 theatre இல் நூறு நாள் கண்ட கர்ணன் தோல்வி. 3 theatre மட்டும் நூறு நாள் கண்ட ஆயிரத்தில் ஒருவன் வெற்றி. கோவையில் 45 நாள் நெருங்காத,ஒரே theatre இல் ஓடிய படகோட்டி மெகா வெற்றி என்று சொல்லும் போக்கு கீற்று கொட்டகையிலும் விதைக்க படுவது கண்டிக்க தக்கது. சொன்னால் உண்மையை பாரபட்சமில்லாமல் சேருங்கள். மாற்று முகாம் நாலு படங்களை குறிப்பிட்டு,எங்களின் ஒரு படத்தை உளு உளாங்காட்டிக்கு சொல்லும் தந்திர நடுநிலைமை வேண்டாமே!!!
  நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
  http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Location
  Advertising world
  Posts
  Many
   

 3. #232
  Senior Member Platinum Hubber esvee's Avatar
  Join Date
  May 2012
  Location
  BANGALORE
  Posts
  15,120
  Post Thanks / Like
  இங்கேயுமா கோபால்

  சரி . நான் சென்னையில் இருந்த நேரத்தில் நேரிடையாக பார்த்த கூட்டத்தை பற்றி எழுதினேன் .
  நீரும் நெருப்பும் - முதல் நாள் மக்கள் வெள்ளத்தை பார்த்தது பற்றிதான் எழுதினேன் . நான் பார்க்காதஒன்றை குறிப்பிடவில்லை . அதே நேரத்தில் நான் பார்த்த எங்க மாமா - சவாலே சமாளி பற்றியகுறிப்பை கவனிக்க வில்லையா ? முடிந்தால் உங்கள ''கதைகளை '' அவிழ்த்து விடவும் .

  காதும் உண்டு .பூவும் உண்டு .நீங்கள்தானே எங்களுக்கு வழி காட்டி .

 4. #233
  Senior Member Veteran Hubber
  Join Date
  Mar 2010
  Posts
  2,706
  Post Thanks / Like

  ஆனந்த விகடன் / 07 Mar, 2012 / ஸ்டார் இன்றே கடைசி!

  ஸ்டார் இன்றே கடைசி!

  முக்கால் நூற்றாண்டு பழமை வாய்ந்த சென்னை திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டர், பிப்ரவரி 29-ம் தேதியோடு மூடப்பட உள்ளது என்பது திரைப்பட ரசிகர்களுக்கு வருத்தம் தரும் செய்தி. 52 வருடங்களாக இங்கு பணிபுரியும் ராஜசேகரன், ஸ்டார் தியேட்டர் அனுபவத்தை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.  ''1952-ம் ஆண்டு டிக்கெட் கலெக்டரா வேலைக்குச் சேர்ந்து, புக்கிங் கிளார்க் ஆகி, இப்ப மேனேஜரா இருக்கேன். மௌனப்படங்கள் வந்த காலத்தில் ஆரம்பிச்ச தியேட்டர் இது. அப்ப இந்த தியேட்டர் பேரு 'சினிமா பாப்புலர். பேசும் படங்கள் வெளிவந்தப்பதான் 'ஸ்டார் டாக்கீஸ்னு பேரை மாத்தினாங்க. ஆரம்பத்துல தமிழ்ப் படங்களைவிட இந்திப் படங்கள்தான் இங்க அதிகமா ரிலீஸ் ஆச்சு. ஸ்ரீபிரகாசா, ஜெயசாமராஜ உடையார், பிஷ்ணுராம் மேதி, கே.கே.ஷா, பிரபுதாஸ் பட்வாரி உள்ளிட்ட முன்னாள் தமிழக கவர்னர்கள் மற்றும் அறிஞர் அண்ணா, என்.வி.நடராஜன், ஜெமினிகணேசன்னு இங்க படம் பார்த்த பிரபலங்களோட லிஸ்ட் ரொம்பவே பெருசு. ஜெயலலிதா மேடம் குழந்தையா இருக்கும்போது அவங்க அம்மா சந்தியாகூட இங்க படம் பார்க்க வந்திருக்காங்க. வி.என்.ஜானகி, விஜயகுமாரி, எம்.என்.ராஜம் இந்த மூணு பேரும் அடிக்கடி இங்க படம் பார்ப்பாங்க.

  தர்மேந்திரா நடிச்ச 'யாதோன் கி பாரத் படம் தொடர்ந்து 400 நாட்கள் ஓடுச்சு. இதைக் கேள்விப் பட்ட தர்மேந்திரா, இங்க வந்து படம் பார்த்துட்டு பாராட்டினார். இந்தப் படத்தைப் பார்த்துட்டுத்தான் எம்.ஜி.ஆரைவெச்சு 'நாளை நமதே படம் எடுத்தாங்க. அதுவும் இங்க 100 நாளைக்கு மேல ஓடுச்சு. திலீப், வைஜெயந்தி மாலா பாலி நடிச்ச 'மதுமதியும் 400 நாள் ஓடுச்சு. 'சந்திரலேகா, 'பெற்றால்தான் பிள்ளையா, 'ரோசாப்பூ ரவிக்கைக்காரினு இங்க ரிலீஸ் ஆகி 100 நாட்களைக் கடந்த படங்கள் ஏராளம்.

  தியேட்டர் ஆரம்பிச்சப்ப 921 சீட் இருந்துச்சு. அப்புறமா 818 சீட்டா மாத்தி அமைச்சாங்க. அந்தக் காலத்திலேயே ஏ.சி. தியேட்டர்ங்கிற பெருமை ஸ்டாருக்கு உண்டு. கட்டுப்படி ஆகாததால ஏ.சி-யை எடுத்துட்டோம்.அப்ப டிக்கெட் எல்லாம் அணா கணக்குத்தான். எனக்குத் தெரிஞ்சு நாலே முக்கால் அணா, 10 அணா, 15 அணாவுக்கு டிக்கெட் வித்து இருக் கோம். இப்ப டிக்கெட் ஏழு ரூபா, 25 ரூபா, 35 ரூபா.

  17 வருஷத்துக்கு முன்ன வரை புதுப்படங்கள்தான் ரிலீஸ் செஞ்சோம். 1995-ல் டி.டி.எஸ். தொழில்நுட்பம் அறிமுகம் ஆனப்ப, பணம் இல்லாததால இங்க அந்த சிஸ்டத்தைக் கொண்டுவர முடியலை. அதுல இருந்து ஏற்கெனவே ரிலீஸ் ஆன படங்களையே எடுத்து ஓட்டுறோம். இங்க படம் பார்க்க வர்றவங்க எல்லாருமே அடித்தட்டு மக்கள்தான். சனி, ஞாயிறுனா கூட்டம் கொஞ்சம் அதிகமா வரும். மத்தபடி கலெக்ஷன் கம்மிதான்'' என்றவரைத் தொடர்கிறார் டாக்கீஸ் நிர்வாகத்தைக் கவனிக்கும் டி.ஏ.ராஜகோபால்.

  'எம்.ஜி.ஆர்., ரஜினி, சூர்யா படங்களை எப்பப் போட்டாலும் கூட்டம் வரும். அதனால அவங்க படங்களை அடிக்கடி ஓட்டுவோம். 'பெற்றால்தான் பிள்ளையா படம் ஓடிக்கிட்டு இருந்த நேரம், எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்ட சம்பவம் நடந்துச்சு. அந்த விஷயம் இங்க படம் பார்த்துட்டு இருந்தவங்களுக்கு எப்படியோ தெரிஞ்சு நாற்காலிகளை உடைச்சு, திரையைக் கிழிச்சு டாக்கீஸையே நாசம் பண்ணினாங்க. இருந்தாலும் ரெண்டு நாள்லயே எல்லாத்தையும் சரிபண்ணி மறுபடியும் படத்தை ஓட்டினோம். இந்த மாதிரி ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்து இருக்கு. சமீபத்தில்கூட 'மன்னன் படத்தில் விஜயசாந்தி ரஜினியை அடிக்கிற ஸீன்ல ரசிகர் ஒருத்தர் விஜயசாந்தியை செருப்பால் அடிக்கிறதா நெனைச்சு திரையையே கிழிச்சுட்டாரு. ஆனால், இதுவரை நாங்க ஒருமுறைகூட போலீஸ்கிட்டப் போனது இல்ல. ஏன்னா, என்னதான் தகராறுகள் நடந்தாலும் ரசிகர்கள்தான் எங்க பலம். ஆனா லும் கலெக்ஷன் கம்மியா இருக்கி றதாலதான் டாக்கீஸை மூடறோம்.

  தேவானந்த் நடிச்ச 'டாக்ஸி டிரைவர் படம் ஓடினப்ப, என் அப்பா டாக்கீஸ் நிர்வாகத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்தார். அப்ப அவர் சென்னை டாக்ஸி டிரைவர்களுக்கு ஒரு காட்சியை இலவசமா ஓட்டினாரு. இப்ப கடைசி படமான பாட்ஷாவையும் சென்னை ஆட்டோ டிரைவர் களுக்கு இலவசமா ஓட்டி னோம்.

  நான் உள்பட இங்க வேலைபார்க்கிற பெரும்பாலானவங்க ரெண்டு மூணு தலைமுறையா ஸ்டார் டாக்கீஸ்லதான் வேலை செய்யறோம். ஒரே இடத்துல
  இத்தனை வருஷமா இருந்துட்டு இப்ப பிரியப்போறோம்னு நினைச்சாலே வருத்தமாத்தான் இருக்கு'' என, அவர் சொல்லும்போதே அங்கு உள்ள ஊழியர்கள் தங்களை அறியாமல் அழுதனர்

  gkrishna

 5. #234
  Senior Member Veteran Hubber
  Join Date
  Mar 2010
  Posts
  2,706
  Post Thanks / Like

  ஆனந்த விகடன் / 22 Feb, 2012 / போஸ்டர்ல நாங்க மாஸ்டர்

  'இந்த 15 பேரின் உழைப்புதான் எங்க முதலீடு!'' - தன் அருகே பசை வாளிகளுடன் நின்று இருந்த இளைஞர்களைக் கைகொள்ளாமல் கட்டி அணைத்துச் சிரிக்கிறார் நந்தகுமார். சென்னையில் கலை, இலக்கியம், அரசியல், நாளிதழ், வார இதழ் எனப் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் தங்கள் சுவரொட்டிகளை ஒட்ட நாடும் ஒரே நபர்!  'இன்னைக்கு சென்னையில போஸ்டர்னா அது நாங்க ஒட்டினதாத்தான் இருக்கும். நாங்க மட்டுமேதான் ஒட்டுறோம்னே எழுதிக்கங்க. அதுக்குக் காரணம், எங்க அப்பா ஆறுமுகம். அவர் 1951-ல் இந்த போஸ்டர் தொழில்ல இறங்கினார். அப்ப இந்தத் தொழில்ல இங்க நிறையப் பேர் இருந்தாங்க. 'நான் தாம்பரம்... நீ ராயப்பேட்டைனு ஏரியா வாரியா அவங்களுக்குள்ள பிரிச்சுக்கிட்டுத் தொழில் பண்ணினாங்க. அப்ப எங்க அப்பா வசம் மவுன்ட் ரோடு ஏரியா இருந்தது. காலப்போக்கில் மத்தவங்க இந்தத் தொழில்ல இருந்து வெவ்வேற தொழிலுக்குப் போயிட்டாங்க. இப்ப சென்னையில நாங்க மட்டும்தான் இந்தத் தொழில்ல இருக்கோம். எங்க அப்பாவுக்குப் பிறகு நான் தனியா வந்து ஒட்டின முதல் போஸ்டர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'சிவாஜி பட ஆடியோ ரிலீஸ்.
  அரசியல் பொதுக்கூட்டம், சினிமா பூஜை, ஆடியோ ரிலீஸ், பட ரிலீஸ், புது டி.வி. நிகழ்ச்சினு விதம்விதமான போஸ்டர்கள் தினமும் சாயங்காலம் 6 மணிக்கு எங்க கைக்கு வரும். நைட் 9 மணிக்கு மேல்தான் எங்க வேலையே தொடங்கும். விடியவிடிய ஓட்டினா பளபளனு பொழுது விடியறப்ப சென்னை முழுக்கவும் போஸ்டர் ஒட்டி முடிச்சிருப்போம். என் சர்வீஸ்ல ஒரு முறைகூட 'இந்தப் போஸ்டரை லேட்டா ஒட்டிட்டீங்கனு எந்தப் புகாரும் வந்தது இல்லை. சமயங்கள்ல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்னு சம்பந்தப்பட்ட பட டீமும் எங்களோட வரும். தாணு, எஸ்.ஜே.சூர்யானு பலர் தங்களோட பட ரிலீஸ் சமயத்துல கூடவே வந்து உற்சாகப்படுத்துவாங்க. அவங்களும் பசை தடவி எங்களோட சேர்ந்து போஸ்டர் ஒட்டுறதெல்லாம்கூட நடக்கும். விஜய் நடிச்ச 'குருவி பட 100-வது நாள் விழாவில் 'பட வெற்றிக்கு இவங்களும் ஒரு காரணம்னு மேடையில் கூப்பிட்டு ஷீல்டு கொடுத்தார் தயாரிப்பாளர் உதயநிதி. இது எங்க உழைப்புக்குக் கிடைச்ச அங்கீகாரம்.

  சமயங்கள்ல, 'என்ன நந்து சார், ராயப்பேட்டை பக்கம் நம்ம பட போஸ்டரை நேத்து பாத்தேன். அதுக்குள்ள நம்ம போஸ்டர் மேல வேறொரு போஸ்டரை ஒட்டிட்டீங்களே?னு சில சினிமாப் பிரபலங்கள் குறைபட்டுக்கொள்வதும் நடக்கும். போஸ்டர் எக்கச்சக்கமா குவியும்போது இந்த மாதிரி நடப்பதும் உண்டு. அதேபோல், 'எங்க போஸ்டர்மேல உங்க பசங்க போஸ்டர் ஒட்டிட்டாங்கனு அப்பப்ப அரசியல்வாதிகள் சண்டைக்கு வருவாங்க. பேசி சமாதானம் செய்வோம். போலீஸ் கெடுபிடியும் அதிகமா இருக்கும். இதெல்லாம் இந்தத் தொழில்ல சகஜம் சார்'' என்று சிரிப்பவர், ''இவங்க எங்க மாமா. அப்பாகூட ஆரம்பகாலத்துல இருந்து இந்தத் தொழில்ல இருந்தவங்க'' என்று தன் தாய் மாமன் ராஜசேகரை நமக்கு அறிமுகப்படுத்தினார்.  'எனக்கு இப்ப 80 வயசு. 50 வருஷத்துக்கும் மேல் இந்தத் தொழில்ல இருந்தேன். இந்த வயசுலயும் நான் உங்களைப்போல யூத்தா இருக்குறதுக்கு, இந்தப் போஸ்டர் வேலையும் ஒரு காரணம். இப்ப எல்லாம் வண்டியில போஸ்டரை வெச்சுக் கட்டிக்கிட்டுப் போறாங்க. அப்ப எல்லாம் சைக்கிள்தான். ராயப்பேட்டையில் கிளம்பினா பெரியமேடு, தாம்பரம்னு சைக்கிள் சவாரிதான். இப்போ நினைச்சுப் பார்த்தாச் சிரிப்பும், அழுகையும் வர்ற அளவுக்கு ஏகப்பட்ட அனுபவங்கள். ஒருதடவை பிரதமர் நேரு, தி.மு.க-வை விமர்சனம் பண்ணிப் பேசி இருந்தார். அந்தச் சமயத்தில் அவர் தமிழ்நாட்டுக்கு வந்தார். இங்க உள்ள காங்கிரஸ்காரங்க நேருவை வரவேற்று போஸ்டர் அடிச்சுக் கொடுத்து ஒட்டச் சொன்னாங்க. தி.மு.க. ஆட்களோ, நேருவை எதிர்த்துக் கண்டன போஸ்டர் அடிச்சுக் கொண்டுவந்து ஒட்டச் சொன்னாங்க; தர்மசங்கடமாப் போச்சு. வேற வழி இல்லாம ரெண்டு போஸ்டர்களையும் வளைச்சு வளைச்சு ஒட்டினோம். போலீஸ் எங்களைத் துரத்தினதும் சந்துபொந்துனு ஓடி ஒளிஞ்சதையும் நினைச்சா இப்பவும் சிரிப்புதான் வருது. எந்தத் தொழிலையும் ரசிச்சு செஞ்சா கண்டிப்பா ஜெயிக்கலாம்கிறதுக்கு நாங்கதான் தம்பி உதாரணம்!'' என்ற ராஜசேகரின் முகத்தில் உழைப்பின் பெருமிதம்.  gkrishna

 6. #235
  Senior Member Veteran Hubber MGRRAAMAMOORTHI's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  A, A
  Posts
  4,383
  Post Thanks / Like

  தற்போது ஓடிக்கொண்டு உள்ளது
  அன்புடன்
  வேலூர் எம்ஜிஆர் இராமமூர்த்தி


  என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

 7. #236
  Senior Member Veteran Hubber MGRRAAMAMOORTHI's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  A, A
  Posts
  4,383
  Post Thanks / Like
  அன்புடன்
  வேலூர் எம்ஜிஆர் இராமமூர்த்தி


  என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

 8. #237
  Senior Member Veteran Hubber
  Join Date
  Mar 2010
  Posts
  2,706
  Post Thanks / Like
  gkrishna

 9. Likes gopu1954 liked this post
 10. #238
  Senior Member Veteran Hubber
  Join Date
  Mar 2010
  Posts
  2,706
  Post Thanks / Like
  gkrishna

 11. Likes gopu1954 liked this post
 12. #239
  Senior Member Veteran Hubber
  Join Date
  Mar 2010
  Posts
  2,706
  Post Thanks / Like


  இவர் கொலைசெய்யப்பட்டது நிஜம்.
  எம்.கே.டி, என்.எஸ்.கே இன்னும் சிலரும் சிறைக்குச் சென்றதும் நிஜம்.
  ஆனால் கொலையாளி யார் என்பது இன்றைக்காவது தெரியுமா?
  gkrishna

 13. Likes gopu1954 liked this post
 14. #240
  Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
  Join Date
  Apr 2011
  Posts
  9,086
  Post Thanks / Like
  காலை 10 மணிக் காட்சி பக்கா அனுபவங்கள்.  'மன்மத லீலை' கமலின் காமக் குதிரை போல் 70-களின் பக்கம் திரும்பி மனம் ரிவர்ஸ் அடிக்கிறது. என்ன பொன்னான தருணங்கள்! குடும்ப பாரமறியா குதூகல வாழ்க்கை. நல்லது கெட்டது அவ்வளவாகத் தெரியாத வயது. 'சினிமாவுக்குக் கூட்டிப் போ' என்றால் அப்போது அவன்தான் கெட்ட பையன். கோலி, கிட்டி விளையாண்டு, சோர்வுக்கு கோலி சோடா உடைத்து, காலி பண்ணின ஜாலி காலமது.

  விஷயத்திற்கு வருகிறேன். காலைக் காட்சி என்று தனியே அப்போது போடுவார்கள். நான் எட்டாவது படிக்கும் போதே 'சனி, ஞாயிறு காலை பத்து மணி காட்சிக்கு மட்டும்' என்று நீலக்கலர் பவுடரில் பிரஷ்ஷால் தோய்த்து எழுதிய எழுத்துக்கள் ஒரு வால் போன்ற நீள்பேப்பரில் போஸ்டரின் மேல் எழுதி கிராஸாக ஒட்டப்பட்டிருக்கும். தனியாகவே அது நன்றாகத் தெரியும்.

  காலை பத்துமணிக் காட்சி என்றாலே தெலுங்கு டப்பிங் படங்கள்தாம் கோலோச்சும். காந்தாராவ், என்.டி.ஆர் இந்த இரண்டு ஹீரோக்களின் படங்கள் வாராவாரம் எங்கள் கடலூர் கமரில் 10.00 மணிக் காட்சிக்கு திரையிடப்படும். படம் ஒரு வாரத்திற்கு முன் மெயின் பிக்சரின் இடைவேளையின் போது டிரைலராக காட்டப்படும்.

  விட்டலாச்சார்யாவின்

  'மன்னனைக் காத்த மாவீரன்'

  என்று பழுப்புக் கலர் ப்ரின்ட்டில் டிரைலர் போடுவார்கள். இடைவேளையில் வெளியே 10 பைசா டீயை அரை ஜான் அளவு கிளாசில் முழுக்கப் பார்த்து 'நிறைய கொடுத்திருக்கான் டோய்' என்று மனசில் சந்தோஷப்பட்டு குடித்தால் ஐந்தாறு முனரில் கிளாஸ் காலியாயிடும். (ஆமா! முனருக்கு பெரிய ' று' வா சின்ன 'ரு' வா?... பேச்சு வழக்கு வார்த்தைதானே அது?) டீ குடித்து முடிப்பதற்குள் 'திடு'மென பத்து மணிக்காட்சி படம் டிரைலராக ஓட, 'டங்.. டங்' என்ற கத்திச் சத்தம் கேட்க, வேகவேகமாக இருட்டில் ஓடி, அனைவர் கால்களையும் மிதித்து, திட்டு வாங்கி இருக்கையை தேடித் பிடித்து அமர்ந்து, முன்னாடி இருக்கையில் அமர எத்தனிப்பவர்களை 'மறைக்கிறான் பார்'' என முறைத்து, மனதுக்குள் வசை பாடி, என்.டி. ஆரைக் கண்டவுடன் எக்காளக் குதூகலமிட்டது அந்தக் காலம்.  ஒரு நான்கைந்து நட்சத்திர ஷேப் வடிவங்கள் சிறிதும், பெரியதுமாய் லாங் ஷாட்டிலும், ஷார்ட் ஷார்ட்டிலும் தூர தூர போய், கிட்ட கிட்ட வந்து ஒளிர, அதன் நடுவே 'மாயா ஜாலங்கள் நிறைந்தது' என்று எழுத்துக்கள் 360 டிகிரி ஆங்கிளில் சுற்றி வரும். பார்க்கும் போது மனம் பரவசமடையும். பெரும்பாலும் ராஜநாளா தான் ஹீரோவிடம் கத்திச் சண்டை செய்து 'லெக்கின்ஸ்' கிழிந்து நிற்பார் பரிதாபமாக. அப்படியே அடுத்த காட்சியாக ராஜஸ்ரீயோ இல்லை விஜயலலிதாவோ ஸ்டுடியோ செட்டில் வெட்டப்பட்ட சின்ன குளத்தில் அழுக்குத் தண்ணியில் வெள்ளை உடை தரித்து 'ஓ...என் மதன ராஜா' என்று டிராக் பாடுபவர்களின் பின்னணயில் பாடுவார்கள். அப்போது அரங்கு திடீரென்று நிசப்தமாகி விடும். உச்சக்கட்ட மாணவப் பருவமாதலால் நம்மையறியாமல் இருக்கையில் நாம் உயருவோம். பின்னால் இருப்பவர் நம் தலையில் தட்டி 'மறைக்குது....குனிந்து உட்கார்' என்று மிரட்டுவார்.

  திடீரென்று குளியல் காட்சி மறைந்து அகோர உருவம் ஒன்று ராட்சஸனாக வந்து அவதாரம் எடுத்த ஆண்டவன் போல வந்து நின்று தடித்த குரலில் வசனம் பேசும். அப்படியே நாயகனை 'அலேக்'காகத் தூக்கி வீசும் போது நம் நெஞ்சமெல்லாம் நடுங்கும்.

  'பயங்கரக் காட்சிகள் நிறைந்தது' என்று எழுத்துக்கள் மின்னியவாறு வந்து போகும்.

  உடனே ஒரு டூயட்.  'ஏ... பெண்ணே! அழகுப் பெண்ணே!' என்று ஆலமர விழுதைப் பிடித்து காந்தாராவ் தொங்கி வருவார். சம்பந்தமே இல்லாமல் படுகவர்ச்சியாக காபரே உடை அணிந்து ஜோதிலஷ்மி இடுப்பை கிரைண்டராக மாற்றுவார். கொட்டாயில் சும்மா விசில் பிச்சி உதறும்.

  'கவர்ச்சி நடனங்கள் நிறைந்தது' என்று எழுத்துக்கள் ஓடியாரும்.

  அடுத்து காட்சி மாறி கண் தெரியாத நாயகனின் அம்மா சென்டிமெண்ட் வசனம் பேசுவார்கள். வசனம் பேசி முடித்தவுடன்தான் நம் காதுகளில் அது கேட்கும். 'ச்சூடம்மா' என்பது வசனகர்த்தாவின் சாதுர்யத்தால் 'பாரம்மா' என்று கேட்கும். 'பாடல்கள் புரட்சிதாசன்' என்று டைட்டில் வரும்.

  ஒன்றா.... இரண்டா.. இப்படி மாயாஜாலப்படங்கள் வரிசயாக. தியேட்டர் கண்டிப்பாக நிரம்பி விடும். பெண்கள் யாருமே வரமாட்டார்கள். போஸ்டரில் கூட்டத்தை இழுக்க 'தெலுங்கு எம்.ஜி.ஆர்' காந்தாராவ் நடித்தது' என்று பட்டமெல்லாம் புத்திசாலித்தனமாக கொடுத்திருப்பார்கள்.

  மன்னனைக் காத்த மாவீரன்,

  வீரவாள்,

  மாயத்தீவு ரகசியம்,

  பட்டி விக்கிரமாத்தன்,

  காவேரி மன்னன்,

  மாய மோதிரம்,  இந்த மாதிரி ராஜ மந்திரக் கதைகள் நிறைந்த படமே ஆரமபத்தில் காலைக் காட்சிப் படங்களாக வெற்றிநடை போட்டு ஆந்திரக் கதாநாயகர்களை ஈஸியாக தமிழ் பாமர ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி நெஞ்சில் பதிய வைத்தன.

  இதில் இன்றுவரை அதிசயக்கும் விஷயம் என்னவென்றால் காந்தாராவ், ராமாராவ் அணியும் அன்றைய உடலின் நிறத்தை அப்படியே காட்டும் 'லெக்கின்ஸ்' உடைகள்தான். இதுபற்றி எங்களிடம் விவாதமே நடக்கும். அது 'எலாஸ்டிக் டிரஸ்' என்று ஒருவன் சாதிப்பான். 'போடா முண்டம்... பின்னால 'ஜிப்' இருக்கும்டா... நம் கண்ணுக்கு அது தெரியாம மறைச்சி காண்பிப்பாங்க'.... என்று இன்னொருவன் புத்திசாலியாவான்.

  எப்படியோ இப்படி ஒரு டைட்டான உடை அணிந்த தெலுங்கு நாயகரின் கஷ்டத்தை நாம் பாராட்டத்தான் வேண்டும். எப்படித்தான் அதை அணிந்து நடித்தார்களோ!

  பின் ஒரு கட்டத்தில் ரசிப்பு முன்னேற்றத்தின் காரணமாக நவீன சமூக படங்கள் மாயாஜாலப்படங்களை தள்ளி ஓரம் கட்டிவிட்டு அவைகளின் இடத்தைப் பிடித்தன.  இப்போது கிருஷ்ணாதான் 74,75 களின் காலைக்காட்சி ஹீரோ. போஸ்டரில் துப்பாக்கி பிடித்தபடி கிருஷ்ணா வீரமாக போஸ் கொடுக்க, கீழே விஜயலலிதா டைட் பேன்ட் போட்டு, மேலே ஷர்ட் போட்டு அதை முடிச்சியும் போட்டு இடுப்பில் கைவைத்தபடி டான்ஸ் போஸ் கொடுப்பார். அப்புறம் கிருஷ்ணா வில்லனுடன் மோதுவது போல ஒரு காட்சியும் அதில் இருக்கும். கத்திச் சண்டைகளையும், மாய வேஷங்களையும் பார்த்து சலித்து, புளித்துப் போன போது புது தீபாவளி துப்பாக்கி 'டுமீல்...டுமீல்' சப்தம் காதுகளுக்குள் இனிமையாக விழுந்தது.

  நாகேஸ்வரராவ் 'சோகராவ்' என்பதால் காலைக் காட்சிகளில் அவருக்கு இடம் இல்லை.  இந்தப் படங்களில் பழைய வில்லன்கள் இருக்க மாட்டார்கள். சத்யநாராயணா, பிரபாகர் ரெட்டி என்று வில்லன்கள் 'கௌபாய்' ரேஞ்சில் துப்பாக்கி பிடித்து ஓரிரு பெண்களை கற்பழித்து, 'கேம்ப்ளிங்' விடுதி நடத்தி, அதில் காபரே ஆடவிட்டு, பல கொலைகள் செய்து, நம்பிக்கை துரோகம் செய்து காட்டிக் கொடுத்த தன் கூட்டத்து ஆளை முதலை வாயில் தள்ளி, மற்றவர்களுக்கும் அதே நிலைமைதான் என எச்சரித்து எக்காளமும், கும்மாளமும் இடுவார்கள்.

  வெட்டவெளி சென்னை மகாபலிபுரம் தார் ரோட்டில், சவுக்குத் தோப்புகள் சரமாரியாய் சைடில் வளர்ந்து கிடக்க, ஒப்பன் ஜீப்பில் வில்லன் ஜீப்பை துரத்துவார் ஹீரோ. ஜீப்களின் டயர் திரும்பும்போது 'குளோஸ்-அப்' ஷாட் அதம் பறக்கும். வெத்து ரோடு 'விர்'ரென்று பறக்கும் வளைவுகளில் வந்த ஷாட்களே திரும்பத் திரும்ப வரும். அதைக் கண்டு பிடித்து பெயர் வாங்கி விடுவேனாக்கும். ஹ.. ஹ. ஹீரோ' கிருஷ்ணா வந்து (இவர் தெலுங்கு 'ஜேம்ஸ் பாண்ட்') வில்லன்களுடன் படம் முழுக்க பத்து சண்டைகள் போட்டு, இறுதியில் போலிசிடம் பிடித்துக் கொடுத்து படத்தின் முதல் டூயட் பாடலை இறுதியில் மீண்டும் நாயகியுடன் சேர்ந்து நான்கு வரி பாடி நம்மை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு அனுப்புவார்.

  இப்படி

  மோசக்காரனுக்கு மோசக்காரன்,

  கில்லாடிக்குக் கில்லாடி;

  துடிக்கும் துப்பாக்கி,

  கத்திக்குத்து கந்தன்

  சென்னையில் சி.ஐ.டி 77

  (இந்தப் படத்தில் கிருஷ்ணாவுக்கும், வில்லனுக்கும் கைபலப் பரிசை போட்டி ஒன்று நடக்கும் சூதாட்ட விடுதியில். இருவரும் அவரவர்கள் கைகளை டேபிள் மீது வைத்து கோர்த்து வலது பக்கமும் இடதுபக்கமும் ஒருவரை ஒருவர் சாய்த்து மிஞ்சப் பார்ப்பார்கள். இதில் என்ன விசேஷம் என்றால் வலது பக்கம், இடது பக்கம் இரு பக்கங்களிலும் பெரிய கொடுக்கு கொண்ட தேள்கள் சில நகர்ந்து கொண்டிருக்கும். வில்லன் கிருஷ்ணாவின் கைகளை பிடித்து சாய்த்து அப்படியே ஜெயிப்பது போலக் கொண்டு போகும் போது தேள்கள் கொடூரமாய் கிருஷ்ணாவின் கையைக் கொட்ட எக்கும். பார்க்கும் நாங்கள் படுடென்ஷனாக நகம் கடிப்போம். பின் பதிலுக்கு கிருஷ்ணா வில்லனின் கைகளை சாய்த்து இறுதியில் தேள் வில்லன் கைகளைக் கொட்டும்போது நம் முகத்தில் சின்னா தமன்னாவைப் பார்த்தால் எவ்வளவு சந்தோஷப்படுவாரோ அதைவிட சந்தோஷ ரேகைகள் எங்கள் முகத்தில் படர்ந்த காலம் அது.

  அடுத்த நாள் திங்களன்று ஸ்கூலில் பத்து மணிக் காட்சி பார்த்த கதை நடக்கும். சுற்றி அனைத்து நண்பர்களும் காதில் ஈ புகுவதைக் கூட கவனியாமல் கதை கேட்பார்கள். இதில் நண்பர்கள் கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா?

  'படத்துல எத்தனை சண்டைடா?'  ஏன்னா அத்தனை பசங்களுக்கும் சண்டைக் காட்சின்னா அவ்வளவு உயிர். எட்டு சண்டைகளாவது ஒரு படத்தில் இருக்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு சண்டைக் காட்சிகள் அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு பசங்களுக்குப் பிடிக்கும்.

  அப்புறம் ஹீரோக்கள் டாமினேஷன் போரடிச்சுப் போய் ஹீரோயின்கள் கட்டிப் பிடித்து ஸ்டன்ட் பண்ணி, ரிவால்வார் பிடித்து 'டுமீல்' பண்ணி எதிரிகளை துவம்சம் செய்தார்கள். குறிப்பாக ஜோதிலஷ்மி, விஜயலலிதா. இந்தப் படங்களுக்கு கூட்டம் எக்ஸ்ட்ராவாக வரும். இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பார்ப்போம். கவர்ச்சிக் காட்சிகள் வேறு அதிகம்.  ரிவால்வார் ரீட்டா,

  கன் பைட் காஞ்சனா

  இப்படி படங்கள் வந்து சக்கைப் போடு போடும்.

  இதுவல்லாமல் கன்னட ராஜ்குமார் தமிழ் பேசுவார். அவர் படங்களுக்குத் தக்கவாறு' கோவாவில் சி.ஐ.டி, பெங்களூரில் சி.ஐ.டி, காட்டுக்கு ஒரு தோட்டக்காரன்' என்று சாமர்த்தியமாக வியாபாரத் தந்திரப் பெயர் சூட்டிவிடுவார்கள்.

  பக்த ஆஞ்சநேயா, ஸ்ரீ ராம ஹனுமான் யுத்தம், லட்சுமி கடாட்சம் என்று பக்திப் படங்களும் அவ்வப்போது காலைக் காட்சியில் மிளிருவதுண்டு.

  பத்துமணிக் காட்சி முடிந்து ஞாயிறு அன்று மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்குப் போனால் பாட்டி 'எங்கேடா போயிட்டு வர்றே?' என்று தன் அதிகாரத்தைக் காட்டும்.

  'இன்னைக்கி ஸ்கூல்ல்ல 'ஸ்பெஷல் கிளாஸ்' பாட்டி' என்று கூசாம பொய் சொல்லிட்டு, மீன் நடுமுள்ளை மட்டும் விட்டுவிட்டு, 'முதல் மரியாதை' தலைவர் கணக்காய் இழுத்து இழுத்து உறிஞ்சி ருசித்து சாப்பிட்டது மறந்து போகுமா?  அப்புறம் இதெல்லாம் போரடிச்சுப் போய் இங்கிலிபீஷ் படங்கள் தமிழ்ப்படுத்தப்பட்டன. காட்ஜில்லா, கிங்காங் என்று இப்படி படங்கள். 'இன்னா சொல்லு... இங்கிலிஷ்காரன் இங்கிலிஷ்காரன்தான்... அவனை மாதிரி எடுக்க முடியாது... என்று காந்தாராவை புகழ்ந்து பேசிய வாய் அப்படியே தடம் புரளும்.

  இதன் நடுவில் நாகேஷ் இங்கு பிரபலம் என்பதால் அவர் நடித்த தெலுங்குப் படங்கள் தமிழாக்கம் செய்து வெளியிடப்படும். 'நகைச்சுவை நாயகன்' நாகேஷ் என்று போஸ்டர் அடித்து வந்த 'நியூவேவ்' பாணி படம் ஒன்றை நான் அப்போது ரசித்துப் பார்த்திருக்கிறேன். கீழே 'இது ஒரு நியூவேவ் படம்' என்று போஸ்டரில் படித்தது நினைவிருக்கிறது. ஆனால் படத்தின் பெயர் நினைவில்லை. ஆனால் நிறைய கவர்ச்சி நாயகிகள்.

  அப்புறம் பேய்ப்பட வரிசையில் டப்பிங்கில் பேயோட்டம் ஓடியது 'கதவைத் தட்டிய மோகினிப் பேய்'.

  காந்தாராவ், ராமாராவ் இவர்களெல்லாம் அரச கதைகளிலிருந்து மீண்டு வந்து கால மாற்றம் காரணமாக 'பாண்ட்' பாணியில் துப்பாக்கி பிடித்து தோற்றுப் போனார்கள். காந்தாராவ் பேன்ட் சூட் அணிந்தால் யார் பா ர்ப்பார்கள்? அவருக்கு விட்டலாச்சார்யா பாணி டிரஸ்தான் பொருத்தம். பின்னாளில் நரசிம்மராஜு அதைத் தக்க வைத்துக் கொண்டார்.

  ஆனால் கிருஷ்ணாவை வெல்ல வேறு எந்த நாயகர்களின் துப்பாக்கிகளும் இல்லை. அவர் இளமை மாறா தனிக்காட்டு 'சுடு'ராஜா.

  'மெக்கனாஸ் கோல்ட்' தாக்கத்தில் மனைவி விஜயநிர்மலா எடுத்த 'மோசக்காரனுக்கு மோசக்காரன்' படம் தெலுங்கிலும், தமிழிலும் சக்கை போடு போட்டது.

  இதற்கு மேல் எழுதினால் கோபால் 'கொல்டி...அவன் வேலையைக் காட்டிவிட்டான் என்று 'அறம்' பாடுவார்.

  இத்தோடு விட்டு விடுகிறேன் என் காலை காட்சி அனுபவங்களை.

  நீங்களும் மல்லாந்து படுத்து பழசை அசை போட்டு, உங்க காலைக் காட்சி அனுபவங்களை எழுதுங்களேன்.

  நம்ம கிருஷ்ணா சாருக்கு இப்படிப்பட்ட பதிவுன்னா ரொம்ப பிடிக்கும். மனுஷர் சிக்க மாட்டேன் என்கிறார்.
  நடிகர் திலகமே தெய்வம்

 15. Likes gopu1954 liked this post
Page 24 of 25 FirstFirst ... 1422232425 LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •