Page 23 of 25 FirstFirst ... 132122232425 LastLast
Results 221 to 230 of 243

Thread: கீற்றுக் கொட்டகை

 1. #221
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  இந்தியாவின் முதல் திரையரங்காகக் கருதப்படும் கொல்கத்தா எல்ஃபின்ஸ்டன் திரையரங்கு

  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 2. Likes gopu1954 liked this post
 3. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 4. #222
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like


  எர்ணாகுளம் பத்மா திரையரங்கம்..

  தற்போது இயங்குகிறதா தெரியவில்லை..
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 5. Likes gopu1954 liked this post
 6. #223
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  பையனூர் திவ்யா திரையரங்கம் கேரளா  Variety Hall Cinema Talkies Coimbatore, 1914  above image courtesy: The Hindu website
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 7. Likes gopu1954 liked this post
 8. #224
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like


  சென்னை அண்ணாசாலையில் தற்போது அண்ணா சிலை அமைந்துள்ள இடம் - பல ஆண்டுகளுக்கு முந்தைய தோற்றம்..

  நிழற்படத்தில் நடு நாயகமாகத் தெரியும் ஓர் கட்டிடம்.. அதன் இடப்புறம் ஒட்டியவாறு திரும்பும் தெரு தான் எல்லீஸ் சாலை. திரையிலிருந்து நோக்கும் போது இடப்புறம் திரும்பும் சாலை வாலாஜா சாலை. ஒரு மனிதர் குனிந்து நின்றிருக்கும் சாலை அண்ணா சாலை சென்ட்ரலை நோக்கி செல்லும் திசை.

  மின்சாரம் தற்போது போல் பூமிக்கடியில் அல்லாமல் உயரமான கம்பங்களினூடே செல்வதைக் காணலாம்.

  இந்த இடத்தைப் பற்றி மெல்லிசை மன்னர் டி.கே.ராம மூர்த்தி அவர்களின் எண்ண அலைகள்... ஹிந்து நாளிதழின் இணையப் பக்கத்திலிருந்து..

  T.K. Ramamurthi on a sylvan Mount Road, accompanying MKT Bhagavathar on the violin and the simple joys of walking along the seashore.

  When they bombed Madras in 1942, the Japanese failed to inflict significant losses. The attack, however, succeeded in robbing residents of their peace. Fear of more attacks resulted in a massive exodus. Many turned their backs on the city for good, selling their properties for a trifle. I also fled the city with all my possessions, a violin in one hand and a bed in the other.

  As I boarded a train for Trichinopoly my pocket was picked and I was set back by Rs. 150, received as settlement from my employer, an agency of Columbia Graphophone Company. After spending six months in Thiruvidaimaruthur, I returned to Madras. Rented rooms in areas around Mount Road defined living for me as I worked with companies that had offices on this arterial road.

  The Government House had a glitter all its own for its Banqueting Hall — later called Rajaji Hall — where balls were organised for the British. On rare occasions, its doors were opened to Indian entertainment, a notable case being MKT Bhagavathar's concert to raise funds for people affected by the evacuation — accompanying him on the violin was an honour for me.

  When I worked for HMV Gramophone Company, housed in Khaleel Mansions, opposite Spencer's, I was allowed to stay in a room that was attached to our workplace — imagine an office on Mount Road ringed by trees. The land where Rani Seethai Hall and the South Indian Film Chamber Theatre stand today was a dense mango grove overrun with snakes. Across the road, a Corporation park — which gave way to the Woodlands Drive-In — contributed to the sylvan environment. Greenery of this kind gave me a sense of the familiar, when I came to Madras in 1932, as a ten-year-old leaving behind a Trichinopoly that was largely untouched by modernity. My family lived on Neeli Veeraswami Chetty Street, which further promoted the illusion of living in a tradition-bound small town. My father, Krishnaswamy played the violin for the various projects of Shining Stars Society, which gave theatre fans the pleasure of listening to plays through gramophone records.

  Whenever I worked for the Society, I received a rupee as daily remuneration. With this earning, I would indulge in an ice-cream that attracted children to Spencer's — a small circular building in those days. Slurping on the ice-cream I would walk along the rushing waves on the beach from Marina to Santhome. When I returned drenched in sea water, my father would give me a sound thrashing.

  When I was on my own, I stayed at a room in Royapettah. There was no dearth of hotels in and around Mount Road. Officer's Hotel, opposite Midland Theatre, was patronised by vegetarians and I bought a monthly coupon book. Wherever one turned, there was a cinema. Most importantly, there was Musee Musicals, where I could get strings for my violin. For a youngster who enjoyed music, films, good food and Nature, there was no better place.

  BIO T.K. Ramamurthi Born in 1922, he has achieved distinction as a Tamil film music composer and violinist. He reached the height of his career during the 1950s and 1960s, when he teamed up with M.S. Viswanathan. MSV and he scored film music under the name of Viswanathan-Ramamurthi. The two went their separate ways in 1965 and reunited to compose music for a film in Tamil in 1995. Ramamurthi has worked as music director for 700 films, including Malayalam and Telugu. He shares the title Mellisai Mannar with MSV.

  I REMEMBER Listening to the radio was a community ritual. The cone speakers installed by the radio station were a big hit.
  நன்றி .. ஹிந்து நாளிதழின் இணைய தளம்..http://www.thehindu.com/features/met...cle2449928.ece
  Last edited by RAGHAVENDRA; 26th October 2014 at 03:57 PM.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 9. Likes gopu1954 liked this post
 10. #225
  Senior Member Platinum Hubber esvee's Avatar
  Join Date
  May 2012
  Location
  BANGALORE
  Posts
  15,120
  Post Thanks / Like
  இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

  சென்னை -அண்ணா சிலை வைப்பதற்கு முன் இருந்த மவுண்ட் ரோடு நிழற் படம் மிகவும் அருமை .நான்

  சென்னையில் படித்த நேரத்தில் [ may 1969- march -1972] மறக்க முடியாத இடம் -அண்ணா சாலை . அங்கிருந்த

  புகழ் பெற்ற திரைஅரங்கங்கள் . ஜெமினி அருகே வைக்கபட்டிருந்த பதாகைகள் - கட் அவுட் மற்றும் வர இருக்கும் புது

  படங்களின்பதாகைகள் கண்களுக்கு விருந்து . அன்றைய காலங்களில் டிக்கெட் முன் பதிவிற்கு முதல் நாள் இரவே

  திரை அரங்கை முற்றுகையிட்ட ரசிகர்கள் கூட்டம் . ஆரவாரங்கள் . மறக்க முடியாத நாட்கள் .

  அண்ணா சாலையில் என் அனுபவத்தில் நான் பார்த்த ரசிகர்களின் ஆராவார கூட்டம் - திரு விழா சில முக்கிய

  அரங்குகள் - படங்கள் பற்றிய ஒரு மினி குறிப்பு

  [ may 1969- march -1972]

  1969

  மிட்லண்ட் - அடிமைப்பெண்

  குளோப் - சிவந்த மண்

  சித்ரா - நம்நாடு

  சாந்தி - தெய்வமகன்

  1970

  பிளாசா - மாட்டுகார வேலன்

  வெலிங்டன் - எங்க மாமா

  மிட்லண்ட் - என் அண்ணன்

  பராகன் - தேடி வந்த மாப்பிள்ளை

  சித்ரா - எங்கள் தங்கம்

  தேவி பாரடைஸ் - சொர்க்கம்

  சாந்தி - எங்கிருந்தோ வந்தாள்


  1971

  குளோப் - குமரிகோட்டம்

  தேவி பாரடைஸ் - ரிக்ஷாக்காரன்

  தேவி பாரடைஸ் - நீரும் நெருப்பும்

  சாந்தி - சவாலே சமாளி

  மிட்லண்ட் - வீட்டுக்கு ஒரு பிள்ளை

  1972

  தேவி பாரடைஸ்- ராஜா

  வெலிங்டன் - சங்கே முழங்கு

  சித்ரா - நல்ல நேரம்

  பிளாசா - ஞானஒளி

  31.3.1972 குட் பை டு சென்னை .

  1.4.1972 முதல் 31.3.1975 வேலூர் கல்லூரி நாட்கள் .

  வேலூர் திரை அரங்கு அனுபவங்கள் பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்

 11. Likes Yukesh Babu liked this post
 12. #226
  Senior Member Platinum Hubber esvee's Avatar
  Join Date
  May 2012
  Location
  BANGALORE
  Posts
  15,120
  Post Thanks / Like
  MADURAI - CHINTHAMANI -1970


 13. Thanks Yukesh Babu thanked for this post
 14. #227
  Senior Member Veteran Hubber
  Join Date
  Mar 2010
  Posts
  2,706
  Post Thanks / Like
  படித்ததில் பிடித்தது

  வானொலி

  எனக்கு தெரிந்த முதல் ரேடியோ கோடம்பாக்கத்தில் வடபழனி ஆண்டவர் கோவில் பகுதியில் நங்கள் வசித்தபோது தான்.

  அப்போது மார்கோனியை எனக்கு பரிச்சயமில்லை. தெரியாது. பின்னால், நுங்கம்பாக்கத்தில் தான் மார்க்கோனி என்கிற ரேடியோ கண்டுபிடித்தவர் அறிமுகமானார். அதற்கு காரணம் ஸ்ரீ விஜயராகவன் சார். ஏனென்றால் அவர் தான் எட்டாவது வகுப்பில் எனக்கு சயன்ஸ் வாத்தியார்.

  ரேடியோ நான் இலவசமாக கேட்டது முதலில் கேசவ நாயர் டீ கடையில் தான். அதுவும் சாயந்திரம் ரூபவாகினி என்று ரேடியோ சிலோன் நிகழ்ச்சியை எல்லோரும் ஆவலாக கேட்பதை அறிந்து அதை வைத்திருப்பார். மயில் வாகனன் என்பவர் நீளமாக பேசுவார். நிறைய கிராமங்கள் ஆசாமி பேர்கள் எல்லாம் சொல்லி விட்டு அப்புறம் தான் ஏ. எம். ராஜா, கண்டசாலா, திருச்சி லோகநாதன், சிதம்பரம் ஜெயராமன் போன்றோர் பாட விடுவார். விரும்பிக் கேட்ட நேயர்கள் குடும்பங்களின் பெயர்கள் விசித்தரமாக இருக்கும். நடு நடுவே கேட்கவிடாமல் சுசித்ராவின் குடும்பம் என்று ஒரு நிகழ்ச்சியை ஹார்லிக்ஸ் நிறுவனம் இடையில் செருகும்.

  ஆகாசவாணி என்று ஒரு சிவரஞ்சனி ட்யூன் வெகுநாள் என்னை கவர்ந்தது. அந்த ட்யூனை பாடிக்கொண்டே சைக்கிளில் சுற்றியது நினைவிருக்கிறது

  ரேடியோவை வீட்டில் பார்த்தது முதலில் சூளைமேட்டில் சம்பகம் மாமி வீட்டில். முத்து சாமி மாமா சாதுவாக காணப்பட்டாலும் கோபக்காரார். அவர் மகன் மாலி அறையும் குத்தும் வாங்கும்போது நான் தெரிந்து கொண்ட விஷயம் இது. மாமா ஒரு மர்பி ரேடியோ வைத்திருந்தார். பெரிதாக இருக்கும். அதன் தலையிலிருந்து ஒரு வயர் ஜன்னலை கடந்து மொட்டை மாடிக்கு போகும் அங்கு ஒரு மூங்கில் கொம்பில் ஐக்கியமாகும். ரேடியோவை அடிக்கடி வலது இடது பக்கமாக மாற்றி மாற்றி திருப்பினால் கொர கொர சப்தம் கொஞ்சம் குறைத்து கேட்கும் அவ்வளவுதான். கோரகொரவிற்கு இடையே இருமிக்கொண்டே மகாராஜா ஆப் விஜயநகர் விஜி என்று ஒருவர் பந்து எப்படி ஒருவன் போட்டான் எங்கே போகவேண்டிய அது எப்படி மார்க்கம் திரும்பி கிரிக்கெட் குச்சியில் படாமல் ப்ராரப்தமாக அந்த மட்டையாளன் காலையே சுற்றியது. அதனால் அவன் வெளியேறியது. எத்தனை தூரம் பந்து எகிறியது. எங்கே அடித்தார்கள் அதை யார் துரத்தியது. அதற்குள் எவன் தலை தெறிக்க அங்கும் இங்குமாக ஓடினான் என்றெல்லாம் சொல்வார். ஜனங்களின் சப்தம் கொரகொரவோடு ஐக்கியம் ஆகி ஒரே களேபரமாக இருக்கும். மாலி ஒருநாள் அந்த ரேடியோவை எங்கோ திருகி அதன் உள்ளேயிருந்து சப்தம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்க முயன்றபோது ரேடியோ இறந்து விட்டது. மாமா அன்று அவனைப் பின்னி விட்டார். இவ்வளவு அடி வாங்கி மாலி துடிக்கும்போது சும்மயிருந்த ரேடியோ, மாமா அதன் தலையில் ஒரு தட்டு தட்டி ஒரு குலுக்கு குளுக்கினவுடன் உயிர் பெற்றது. கொரகொர அதிகமாகவே கேட்டது. நான் அதிக நேரம் ரேடியோ பக்கத்தில் ஒரு கும்பலே நெருக்கி அடித்து கேட்டுக்கொண்டிருப்பதை பார்த்தது ஜனவரி 30 1948 அன்று. காந்தி இறுதி ஊர்வலம் அநேக திருவாசக தேவார ஆழ்வார் பாசுரங்கள் வயலின் வீணை அழுகை களுக்கு இடையே ஒலிபரப்பின போது. அண்ணல் காந்தி பற்றி அறியாத தெரியாத பருவம் எனக்கு. எனவே அவர்கள் என்ன கேட்கிறார்கள் ஏன் ரேடியோ அழுகிறது என்று தெரியவில்லை. அதன் அழுகை ஓலம் என்னை ஈர்க்கவில்லை.

  நான் வாங்கின முதல் ரேடியோ ரீசா என்று கிண்டியில் ஒரு ரேடியோ தொழிற்சாலையிலிருந்து. ரங்கராஜன் என்று ஒத்தைனாடியாக ஒரு மனிதர். நாம் ஏதோ கேட்டால் அவர் எங்கோ யோசித்துக்கொண்டே பாதி பதில் சொல்பவர். அவர் அந்த ரேடியோ கம்பனியின் க்வாலிடி கண்ட்ரோல் பரிசோதனை செய்து ஒரு சிறு காகிதத்தில் கையெழுத்துப்போட்டு ஒவ்வொரு ரேடியோ முதுகிலும் ஒட்டி அனுப்புபவர். அவர் வீட்டுக்கு அடிக்கடி படையெடுத்து ஒரு ரேடியோ சல்லிசான விலையில் தரச்சொன்னேன். நூற்று முப்பது ரூபாய்க்கு ஒரு நல்ல ரேடியோ தருகிறேன் வா என்று கிண்டிக்கு தொழிற்சாலைக்கு வரச்சொன்னதால் அங்கே சென்று அவரை பார்த்தேன். என்னை துளியும் கவனிக்காமல் நிற்கவே வைத்துவிட்டு யாரிடமோ பேசிக்கொண்டே சென்று விட்டார். ஆங்கே சிலையானேன். பிறகு வந்தார்.

  'நீ 'எப்போ வந்தாய்?''

  ''குண்டாக வழுக்கை தலையோடு ஒருவருடன் பேசிக்கொண்டே நீங்கள் காபி குடித்தபோது''

  ''ஒ அவரா. சரி எதற்கு வந்தாய்?''

  ''ரேடியோ தருவதாக ரெண்டு நாள் முன்பு இன்று வரச் சொன்னீர்கள்.''

  ''இருக்காதே. சரி எந்த ரேடியோ வேண்டும்?

  ''நீங்கள் இதோ இந்த மாடல் நல்லது என்று சொன்னீர்கள் என்று அவர் எழுதிக்கொடுத்த ஒரு நம்பரை அவரிடமே காட்டினேன்.''
  இடது சுண்டுவிரலால் காதைக் குடைந்து கொண்டே, '' இது இப்போது வருவதிலையே. எதற்கும் பார்க்கிறேன்''

  சற்று நேரத்தில் ஒரு அட்டைப்பெட்டியோடு அது வந்தது. ஏகப்பட்ட பார்மாலிட்டி. கடைசியில் பல கைஎழுத்துகள், ரிஜிஸ்டர்கள் அதன் பெயரை எழுதிக்கொள்ள வெளியே தூக்கிக்கொண்டு வந்தேன். அன்றிரவு ரங்கராஜன் வந்து அதைப் பொருத்திகொடுக்க ரேடியோ பாடியது. முதலில் எங்களுக்கு நெல் பயிர் செய்வது எப்படி என்று ஒருவர் சொல்லிக்கொடுக்க, அப்புறம் தெலுங்கில் எங்கோ ஒரு நிகழ்ச்சி, தொடர்ந்து வேறொரு ஸ்டேஷனில் திருப்பி யானைக்கு அரிக்குமா என்று சிலர் தங்களுக்குள்ளேயே பேசுவது கேட்டோம். என் அப்பாவுக்கு ரேடியோ பிடித்து விட்டது. பிபிசி வருமாடா இதில் என்று ஷார்ட் வேவ் ஸ்டேஷன்கள் தேடினார். அலை அலை யாக ஒ வென்ற சப்தம். வெறுத்துப்போய் ''இந்த சனிக்கு எவ்வளவு கொடுத்தாய்?'' என்று திட்டு கிடைத்தது.

  அதற்கப்புறம் பல வருஷங்களில் ட்ரான்சிஸ்டர் என்று புதிதாக ரேடியோ உருமாறியது. அதை எல்லோர் வீட்டிலும் விஜிபி போன்ற நிறுவனங்கள் மாதாந்திர தவணையில் கொடுத்தார்கள். அது கொஞ்சம் நன்றாக பாடியது. கொரகொர அப்பவும் சிற்றலை ஸ்டேஷன்களில் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. இதை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் தூக்கிச் செல்லமுடிந்தது. ac dc வால்வ் ரேடியோக்கள் மறைய ஆரம்பித்தன. பினாகா கீத் மாலா கேட்டு ரபி, முகேஷ் லதாவெல்லாம் நிறைய அர்த்தம் புரியாமல் இந்தியில் கேட்டிருக்கிறேன்.

  பல வருஷங்கள் ஓடிய பின் பாக்கெட் ட்ரான்சிஸ்டர்கள் வர ஆரம்பித்தன. கையில் வைத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் பாட்டு கேட்க ஆரம்பித்தோம். ராஜி அத்தையால் இந்த அதிசயத்தை நம்ப முடியவில்லை. ''அட இந்த பயல் கையிலே ஒரு சின்ன பொட்டியில் தியாகராஜ பாகவதரே பாடுகிறாரே'' என்று அதிசயித்தது ஞாபகம் வருகிறது.

  ரேடியோக்கள் டெலிவிஷன் வரும் வரை ஏக போகமாக அரசாண்டன. இன்று அவை தனித்வத்தொடு இயங்க காணோம்.
  gkrishna

 15. Likes gopu1954 liked this post
 16. #228
  Senior Member Veteran Hubber RavikiranSurya's Avatar
  Join Date
  Jan 2014
  Posts
  2,912
  Post Thanks / Like
  Quote Originally Posted by esvee View Post
  இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

  சென்னை -அண்ணா சிலை வைப்பதற்கு முன் இருந்த மவுண்ட் ரோடு நிழற் படம் மிகவும் அருமை .நான்

  சென்னையில் படித்த நேரத்தில் [ may 1969- march -1972] மறக்க முடியாத இடம் -அண்ணா சாலை . அங்கிருந்த

  புகழ் பெற்ற திரைஅரங்கங்கள் . ஜெமினி அருகே வைக்கபட்டிருந்த பதாகைகள் - கட் அவுட் மற்றும் வர இருக்கும் புது

  படங்களின்பதாகைகள் கண்களுக்கு விருந்து . அன்றைய காலங்களில் டிக்கெட் முன் பதிவிற்கு முதல் நாள் இரவே

  திரை அரங்கை முற்றுகையிட்ட ரசிகர்கள் கூட்டம் . ஆரவாரங்கள் . மறக்க முடியாத நாட்கள் .

  அண்ணா சாலையில் என் அனுபவத்தில் நான் பார்த்த ரசிகர்களின் ஆராவார கூட்டம் - திரு விழா சில முக்கிய

  அரங்குகள் - படங்கள் பற்றிய ஒரு மினி குறிப்பு

  [ may 1969- march -1972]

  1969

  மிட்லண்ட் - அடிமைப்பெண்

  குளோப் - சிவந்த மண்

  சித்ரா - நம்நாடு

  சாந்தி - தெய்வமகன்

  1970

  பிளாசா - மாட்டுகார வேலன்

  வெலிங்டன் - எங்க மாமா

  மிட்லண்ட் - என் அண்ணன்

  பராகன் - தேடி வந்த மாப்பிள்ளை

  சித்ரா - எங்கள் தங்கம்

  தேவி பாரடைஸ் - சொர்க்கம்

  சாந்தி - எங்கிருந்தோ வந்தாள்


  1971

  குளோப் - குமரிகோட்டம்

  தேவி பாரடைஸ் - ரிக்ஷாக்காரன்

  தேவி பாரடைஸ் - நீரும் நெருப்பும்

  சாந்தி - சவாலே சமாளி

  சாந்தி - BABU

  மிட்லண்ட் - வீட்டுக்கு ஒரு பிள்ளை

  1972

  தேவி பாரடைஸ்- ராஜா

  வெலிங்டன் - சங்கே முழங்கு

  சித்ரா - நல்ல நேரம்

  பிளாசா - ஞானஒளி

  31.3.1972 குட் பை டு சென்னை - WHEN DID THIS MOVIE COME ? JAISHANKAR (or) RAVICHANDRAN ? I HAVE NOT HEARD ABOUT THIS FILM SIR ! IS THIS IN LINE WITH REVOLVER RITA, JACKPOT JANGO etc., ? I searched in You Tube also...am unable to see anything..Kindly Post Link. Good Title ...Is this a suspense film (or) action?

  1.4.1972 முதல் 31.3.1975 வேலூர் கல்லூரி நாட்கள் .

  வேலூர் திரை அரங்கு அனுபவங்கள் பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்
  .....
  Last edited by RavikiranSurya; 28th October 2014 at 08:20 PM.
  "நடிகர் திலகம்" "செவாலியே" "பத்மஸ்ரீ" "பத்மபூஷன்" சிவாஜி கணேசன் -
  THE ONLY WONDER OF WORLD CINEMA AND THE BOX OFFICE SAMRAAT SINCE 1952 !

  உலக நடிகர்களிலேயே வல்லரசு எனப்படும் அமெரிக்காவின் அதிபராம் திரு JOHN F KENNEDY கலாசாரா தூதுவராக கௌரவித்த ஒரே இந்திய நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

  நான்குகண்டங்களின் அரசாங்கத்தாலும் பட்டமும் பதவியும் கொடுத்து கௌரவிக்கப்பட்ட ஒரே உலக நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.

  THE WORLD's MOST PRODUCER & DISTRIBUTOR FRIENDLY HERO..!

 17. #229
  Senior Member Veteran Hubber
  Join Date
  Mar 2010
  Posts
  2,706
  Post Thanks / Like
  இசை அமைப்பாளர் எம் பீ எஸ் என்று அன்புடன் அழைகபடும் எம் பீ ஸ்ரீநிவாசன் அவர்களின் மதுரை வாழ்கை - மின் அஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்ட தொழிற் சங்க நண்பர் வங்கி ஊழியர் திரு எஸ் வீ வேணு அவர்களுக்கு நன்றி

  வென்னீரும் -காபி வாசனையும் ...!!!
  காஸ்யபன்
  (75 வயது அன்பர், நண்பர் எழுத்தாளர் காஸ்யபன் நாகபுரியில் இருப்பவர். சிறப்பான பழைய நினைவுகளைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துபவர்....)

  இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசன் மறைந்த தோழர் எம்.ஆர் .வெங்கடராமன் (மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளராக இருந்தவர்) அவர்களின் சகோதரரின் மகன் !

  இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர் ! கட்சியின் மத்திய தலைமை அவ்ரை மாணவர் இயக்கத்தை கட்டி வளர்க்க தமிழகத்திற்கு அனுப்பியது!மதுரை மண்டையன் ஆசாரி சந்தில் கட்சி அலுவலகத்தில்தங்கி பணியாற்றி வந்தார் ! அங்கு இவரைப் போன்ற இளைஞர்களை கட்டி மேய்க்க குருசாமி நாயனா இருந்தார் !

  முழுநேர ஊழியர்களுக்கு கட்சி அலவன்சு கொடுக்கும் ! மாதம் 10 /-ரூ லிருந்து 15 /- ரூ கொடுப்பார்கள் ! அது கொடுப்பதற்குள்"தாவு"தீர்ந்துவிடும் ! 20தேதிக்குமெல்தான் அது பற்றியே பேசுவார்கள் !

  எம்.பி எஸ் அவ்ர்களுக்கு அப்படி இல்லை ! அவர் மத்தியகமிட்டி ஊழியர் ! டெல்லியிலிருந்து மாதம் 20/- ரூ 8ம் தேதி மணியார்டர் வந்து விடும் ! அது பற்றி அவரே விவரிக்கிறார் :

  " என் சேக்காளி தோழர்கள் அன்று காலையிலேயே குளித்து விடுவார்கள் ! கட்சி ஆபிசுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடப்போம் ! இருப்பே கொள்ளாது ! வாசல எட்டி எட்டி பார்ப்போம் ! 12 மணிக்குபொஸ்ட்மான் வருவார் ! மணியார்டர் வந்து வாங்கியதும் நாங்கள் காணாமல் போய்விடுவோம் ! மண்டையன் ஆசார சந்திலிருந்து போனால் டவுன்ஹால் ரோடு ! அங்கு தேப்பக்குளத்தில் கம்பி வேலி போட்டிருப்பார்கள்அதையும்தாண்டிமேற்கேபோனால் சுல்தானியாஹோட்டல்! பிரியாணி ஒரு பிளேட் 12 அணா ! ஆளுக்கு அரைபிளேட்! சுக்கா வறுவல் 2 அணா ! சாப்பிட்டுவிட்டு சிகரெட்டு ! திருமலை நாயக்கர் பேரன்கள் மாதிரி கம்பீர நடைபோடுவோம் "

  "இரவுகையேந்துபவன் ! ஒரு அணாவுக்கு இரண்டு இட்லி ! ஆளுக்கு எட்டு இட்லி விளாசுவோம் ! அன்று எல்லோருக்குமாக நாலு ரூ ஆகும் ! ஒரு நாலைந்து நாள் ஓடும்!"

  "அப்புறம் !கிடைச்சா சாப்பாடு!

  "இல்லைனா ?"

  "பைத்தியமே ! அது தாண்ட கட்சி வாழ்க்கை ! "

  ( 80 களின் பிற்பகுதியில் கோவையில் த\.மு.எ.ச.இசை பயிற்சிமுகாம் நடத்தியது ! அதை நடத்தி தந்தவர் எம்.பி எஸ் ! அப்போது அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது )

  இ ரவில் அரை பட்டினியோடுதன் படுப்போம் ! காலையில் எழவே மனசு வராது ! அழுக்குப்பாயில் புரளுவோம் ! காலையில் டீகாபி குடிக்க காசு கிடைக்காது !

  "டேய் ! என்திங்கடா !"என்றுகுருசாமி நாயனா சத்தம் போடுவார் ! அவர் அடுப்பு பத்தவச்சு வென்நீர் போடும் சலனம் கேட்கும் ! அடி ச்சுப்பிடிச்சு எந்திரிச்சு முகம் கால் கழுவுவோம் ! மண்டையன் ஆசாரி சந்து வாசலில் நிற்போம் !"

  "உள்ளெ எட்டி எட்டி பாப்போம் !"

  "நாயனா ஒரு தட்டில் ஐந்து அலுமினிய டம்ளரோடு வருவார் !"

  "கிருஷ்ணா காப்பில காபி பொடி அரைக்கான ? "

  "வாசன தூள் பறக்குது நாயனா "

  "அத மோப்பம் பிடிச்சுக்கிட்டே இந்த வென்னிய குடிங்கடா "

  "நாங்களும் அதை குடிப்போமே "

  ( எம்.பி எஸ் அவர்களின் நேர்காணல் செம்மலரில் அப்போது வெளிவந்தது ! மிக விரிவாக அவர் சொன்னத எல்லாம் எழுதியிருக்கிறேன் )
  gkrishna

 18. Likes gopu1954 liked this post
 19. #230
  Senior Member Veteran Hubber
  Join Date
  Mar 2010
  Posts
  2,706
  Post Thanks / Like
  படித்ததில் பிடித்தது

  காவியம் பல்சுவை மாத இதழில் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் அவர்கள் எழுதிய கட்டுரை

  அனுபவங்கள் வெறும் நிகழ்ச்சிகள் அல்ல!-ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்

  வாழ்க்கையில் எது நமக்குக் கிடைக்கிறதோ இல்லையோ, நல்லதும் கெட்டதுமாய் நிறைய அனுபவங்கள் கிடைக்கின்றன. அனுபவங்கள் பலருக்கு நிகழ்ச்சிகளாக இருக்கிறபோது சிலருக்கு மட்டுமே அந்நிகழ்ச்சிகள் அனுபவங்களாக இருக்கின்றன. பட்டறிவு என்று அனுபவத்தைச் சொல்வதுண்டு. அதற்கும் ஒரு காரணமிருக்கிறது. பட்ட பிறகுதான் பலருக்கு அறிவே வருகிறது. எனவேதான் பட்ட(அ)றிவு.

  பார்த்தது கோடி
  பட்டது கோடி
  சேர்த்தது என்ன
  சிறந்த அனுபவம்


  என்பார் கவியரசர் கண்ணதாசன். குனிந்து போகவும் என்ற அறிவிப்பைக் காட்டிலும் நிமிர்ந்து நடந்து நெற்றியைப் பெயர்த்துக்கொண்ட அனுபவம்தான் அடுத்த முறை நம்மை கவனமாக இருக்கச் செய்கிறது என்றால் அடிபட்ட அந்த அறிவுதான் பட்டறிவு.

  அனுபவங்கள் நமது அறிவை விசாலப்படுத்தினால் கூட அசட்டுத்தனங்களைக் குறைப்பதில்லை என்று பில்லிங்ஸ் என்ற ஆங்கில அறிஞ--ன் ஒருவன் சொல்லியிருக்கிறான். இனிமேல் எவனையும் நம்பக்கூடாது என்று பட்ட பிறகு கிடைக்கிற அனுபவம் சிலநேரங்களில் நல்ல மனிதர்களையும் நம்பவிடாமற் செய்துவிடுகிறது. மோசமான முதல் அனுபவம் அடுத்தவரிடம் நாம் அசட்டுத்தனமாக நடந்து கொள்கிற அறிவைத்தான் அநேகமாக நமக்குப் புகட்டுகிறது. எனவே அனுபவம் அறிவுமாகும், அசட்டுத்தனமும் ஆகும்.

  அனுபவங்களை நமக்கு அதிகமாகக் கற்றுத் தருபவை அவமானங்களும், தோல்விகளும், துரோகங்களும்தான். பரிவட்டமும், பளபளப்பான வரவேற்புகளும், வெற்றிகளும், வந்து குவிகிற புகழும் அனுபவங்கள் என்கிற கணக்கில் கருதப்படுவதில்லை. அவையெல்லாம் நம் அகங்களைக் குளிர்விக்கிற புறம் தொடர்பான நிகழ்ச்சிகள் மட்டுமே.

  அதுபோல நுகர்வதைப் பலர் அனுபவம் என்று கருதிக் கொண்டிருப்பார்கள். உண்பது, உறவு கொள்வதெல்லாம் நுகர்தலே தவிர அனுபவங்கள் ஆகா. வேளாண்மைதான் அனுபவமே தவிர வெந்ததை உண்பதல்ல. காதல்தான் அனுபவமே தவிர கட்டியணைப்பதல்ல. எது நமக்குக் கிடைக்கிறது என்பது அனுபவமல்ல. எப்படி அதை, எதில் அதைப் பெறுகிறோம் என்பதே அனுபவம்

  பயணம் என்பது ஒரு வினை, செயல். புறப்பட்ட இடத்திலிருந்து வேறு ஒரு இடத்துக்குப் போய்ச் சேர்வது. புறப்பட்ட நேரத்திலிருந்து போய்ச்சேர்கிற வரை நாம் தூங்கிவிட்டால் பயண நோக்கம் முடிந்து விட்டதாகப் பொருள். ஆனால் விழித்திருந்து வழியில் நகர்கிற மரங்கள், வளர்ந்திருக்கிற வரலாற்றுச் சின்னங்கள், விழியில் விழுகிற காட்சிகள், அருகில் வந்தமர்கிற சக பயணியுடன் உரையாடல் இவற்றில் ஈடுபாடு காட்டினால் அனுபவம் கிடைக்கும். பார்ப்பதும் பகிர்வதும் தருகிற அனுபவத்தைப் பலர் பகலில் கூடப் பயண நேரத்தில் படுத்துறங்கிக் கழித்து விடுவார்கள். எனவே பயணிப்பதிலும் அதிகமாய்ப் பயண அனுபவம் பெறுதலே பயனுள்ளது.

  படித்தல் என்பதுகூட ஓர் அனுபவம்தான். பள்ளியில், கல்லூரியில், பல்கலைக் கழகத்தில், பயிற்சிக்கூடத்தில் என வளரும் செவி வழிக் கற்றல், புத்தகங்கள் படித்தல் என்னும் அனுபவத்தில் படித்தலுக்கும் அப்பாலும் பல அனுபவங்கள் சேர்ந்து கொள்ளும். பசுமை நிறைந்த நினைவுகள் அனுபவ உணர்வுகளாய் நம் நெஞசங்களில் நிறைந்து கிடக்கும். பள்ளிக்கு வெளியில்கூட நமக்குக் கிடைக்கும் பாடம், ஏட்டறிவுக்கு அப்பால் நாம் ஏற்றுக்கொள்கிற பட்டங்களாகவும், பட்டறிவாகவும் இருக்கக்கூடும். நல்லதும் கெட்டதுமாக நாளும் நமக்கேற்படும் அனுபவங்களில் நல்லவை பயன்படும் என்றால் அல்லாதவை அனுபவப் பாடம் தரும்.

  அனுபவங்களாகக் கருதப்படுபவை பெரும்பாலும் நாம் இழப்பவை பற்றியதுதான். அனுபவங்களை நாம் அதிகமாய்ச் சந்திப்பது தோல்விகளில்தான். தோல்விகளிலிருந்து நாம் நிரம்பக் கற்றுக் கொள்கிறோம். உலகிலேயே அதிகமான மனிதப் பயன்பாட்டு சாதனங்களைக் கண்டுபிடித்திருக்கிற தாமஸ் ஆல்வா எடிசன் விபத்துகளில் விரக்தி அடைந்ததில்லை. தோல்விகளில் துவண்டு போனதில்லை. ஒருமுறை அவருடைய ஆய்வுக்கூடத்தில் தீவிபத்து ஏற்படுகிறது. அறை முழுதும் பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் சிரித்துக் கொண்டிருந்தார். என் தவறுகள் எரிந்து கொண்டிருக்கின்றன. அவற்றைத் தவிர்ப்பதற்கான அனுபவத்தை இந்த விபத்து எனக்குக் கற்றுத் தந்துவிட்டது. அடுத்தமுறை இந்தத் தவறுகளைத் தவிர்ப்பேன் என்றார் அவர்.

  ராபர்ட் ப்ரூஸ் என்கிற அரசன் தோல்விக்கு மேல் தோல்வியைச் சந்திக்கிறான். ஒவ்வொரு முறையும் மேலேற முயற்சித்து விழுந்து விழுந்து எழும் சிலந்தி அவனுக்கு ஓர் அனுபவத்தைப் புகட்டுகிறது. வெற்றி பெறுகிறான். கணித மேதை இராமானுஜம் கணக்கு பாடத்தில் தோற்ற அனுபவத்திற்குச் சொந்தக்காரர். அடுத்த வெற்றியை அவருக்குக் கணிதம் மட்டும் கற்றுத்தரவில்லை, தோல்விகளும் கற்றுத் தந்தன.

  விபத்துகள் நிகழ்கிறபோது விலை மதிப்புள்ள செல்வங்கள் பாழாகலாம். ஆனால் அதற்கான காரணங்களும், தவிர்த்தல்களும் அடுத்தடுத்த இழப்புகளைத் தடுக்க உதவுகின்றன. விபத்து எனும் அனுபவம் ஒரு நிகழ்ச்சியாக மட்டுமே விளங்கப் பட்டிருந்தால் அந்நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுமேயன்றி தவிர்க்கப்படுவதில்லை. சுனாமி, ஜப்பானியர்களுக்கு நிரம்பவே கற்றுத்தந்துள்ளது. ஹிரோஷிமா- நாகசாகி அனுபவங்கள் இன்றும் அவர்களை கவனமாக இருக்கச் செய்திருக் கிறது. கடுமையாக உழைக்கச் செய்திருக்கிறது. அன்றாடம் நமக்கேற்படும் விபத்துகள் அனுபவங் களாகி அடுத்தடுத்த விபத்துகளைத் தடுக்கும் வழிவகைகளை யோசிக்கச் செய்கின்றன.

  அவமானங்கள்கூட சிலருக்கு அன்றாட வாழ்வில் ஏற்படுகிற நிகழ்ச்சியாக இருக்கும். அவமானப்படுவதுகூட ஒருவகையான அனுபவம் தான். அவமானங்களைத் தாங்கிக் கொள்வது ஆய கலைகள் அறுபத்து நான்கோடு அறுபத்தைந்தாவது கலை என்பார் --ஞானபாரதி வலம்புரி ஜான் அவர்கள். உலகில் அவமானங்களால் நொடிந்து போகிறவர்களும், ஒடிந்து விழுகிறவர்களும் அநேகர். ஆனால் விழித்தெழுகிறவர்களும் வாழ்ந்து காட்டுகிறவர்களும் இச்சமூகத்தில் இல்லாமலில்லை.

  தேவகுமாரனாகத் தொழப்படுகிற ஏசுபிரானுக்கு நேராத அவமானமா? இரண்டு திருடர்களோடு அவரைச் சிலுவையில் அறைந்ததோடு நீ தேவகுமாரனல்லவா. கிரீடம் வேண்டுமா என்று முள்கிரீடத்தை அணிவித்து அவமானப் படுத்தினார்கள். அது ஒரு நிகழ்ச்சியாக மட்டும் கருதப்படவில்லை. உயிர்த்தெழுந்த அதிசயத்தோடு உன்னதமான தெய்வீக அனுபவம் ஆனது. ஆப்பிரிக்காவில் அண்ணல் காந்திக்கு நேராத அனுபவமா! முதல் வகுப்புப் பயணச் சீட்டுடன் பயணித்த அவரை நடுவழியில் இறக்கிவிட்டு அவமானப்படுத்திய வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடியது அவரை உலகப் போராளி களுக்கெல்லாம் உன்னதமான வழிகாட்டியாகவும் கையேந்திய ஆயுதங்களாக அஹிம்சையையும், சத்யாகிரஹத்தையும் உலகத்திற்கு உணர்த்திற்று.

  நம்பிக்கை துரோகங்கள்கூட அனுபவங்கள்தான். அவற்றை வெறும் நிகழ்ச்சிகளாகக் கொள்ளாத வர்கள் எழுந்து விடுகிறார்கள். ஏனையோர் விழுந்தே கிடக்கிறார்கள். எதிரிகள் நமக்குக் கற்றுத் தருகிற அனுபவங்களை விட நம்பிக்கை துரோகிகளே அதிகமாகக் கற்றுத் தருகிறார்கள். அறிவும், அனுபவமும் வெவ்வேறானவை. அனுபவம்

  அறிவைப் புகட்டலாம். நிச்சயமாக அறிவு அனுபவத்தை தராது. அனுபவம் நமக்கு அவசியமானது. அதற்காக எல்லாவற்றையும் அனுபவங்களினால் பெற வேண்டுமென்பதுமில்லை. ஆம், எல்லாவற்றிற்கும் அனுபவங்கள் அவசியமென்பது மில்லை. ஒருவர் நன்றாகப் பணியாற்றுவார் என்பதற்குப் பத்தாண்டு அனுபவம் உதவலாம். ஒருத்தி நன்றாகக் குடும்பம் நடத்துவாள் என்பதற்கு முன்னனுபவம் இல்லாதிருப்பதே முக்கியமானது.

  எல்லாமும் அனுபவங்கள்தான். அவற்றுள் நல்லவை மட்டுமே நமக்கு வேண்டியவை. அல்லாதவை அகற்றப்பட வேண்டியவை. மகராஜபுரத்தின் இசையில் மயங்கிய அனுபவத்தை எல்லோரிடமும் சொல்லி மகிழலாம். ஆனால் சரோஜாவுடன் (கற்பனைப் பெயர்) செலவழித்த இரவை யாரிடம் சொல்ல முடியும்? வெளிநாடு போய்வந்த விவரத்தை வரிவரியாக எழுதலாம். விஸ்கி அடித்த விவரத்தை விவரிக்கக்கூடுமா? மாமனார் வீட்டுக்குப் போய் வருவது மருமகனுக்குப் பெருமை. மத்திய சிறைக்குப் போய் வந்ததில் என்ன பெருமை இருக்க முடியும்?

  ஓர் அனுபவத்தில் நமக்குப் பெருமை இல்லையென்றால் அந்த இழிவான அனுபவத்தைச் சொல்லத் தயங்குவது போல அந்த அனுபவத்தைப் பெறக் கூச்சப்பட வேண்டும். தவிர்க்கவும் வேண்டும். எது நமக்குப் பயன் தருகிற அனுபவமோ, எது நமக்குப் பெருமை தருமோ, அதற்கு மட்டுமே ஆசைப்பட வேண்டும். இதுவே அனுபவங்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம் என்பதற்கான அடையாளங்கள். எனவேதான் அனுபவசாலிகள் எல்லாம் அறிந்தவர்கள் என்கிற அந்தஸ்தை சமூகத்தில் பெற்றிருக்கிறார்கள். நம்மைப் பக்குவப்படுத்துகிறவை அனுபவங்களாகும். நல்லது கெட்டதை நமக்கு அறிவிக்கிறவையும் அவைதான். எதையும் ஏற்கவும், தவிர்க்கவும் அனுபவங்களே நமக்குக் கற்றுத்தருகின்றன. அனுபவத்தை நாம் ஆசான் எனும்போது கவியரசர் கண்ணதாசன் மட்டும் அதை ஆண்டவன் என்கிறார்.

  அனுபவித்தேதான் அறிவது வாழ்வெனில்
  ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்
  ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி
  அனுபவம் என்பதே நான்தான் என்றான்

  என்பார் அவர். அனுபவம் குறித்த புரிதலை அற்புதமாக வெளிப்படுத்திய கவிஞ-ர் அவர். எது அனுபவம் என்கிற தெளிவை அவரது கவிதையை முழுமையாகப் படிப்போர் புரிந்துகொள்வர்.

  வாழ்க்கை அனுபவம் சார்ந்தது. அனுபவம் வாழ்க்கை சார்ந்தது. ஒன்றிலிருந்து ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். என்றாலும் இரண்டுக்கும் இடையில் சன்னமான வேறுபாடு உள்ளது. அதைப் புரிந்துகொள்ளவே ஓர் அனுபவம் வேண்டும். அறிவும் வேண்டும். அனுபவமும் வாழ்க்கையும் நம் ஆசான்கள். அனுபவம் நமக்குத் தேர்வை நடத்தி விட்டுப் பாடம் தருகிறது. வாழ்க்கையோ பாடம் நடத்தி விட்டு தேர்வை வைக்கிறது.
  gkrishna

 20. Likes gopu1954 liked this post
Page 23 of 25 FirstFirst ... 132122232425 LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •