Page 1 of 24 12311 ... LastLast
Results 1 to 10 of 243

Thread: கீற்றுக் கொட்டகை

Hybrid View

 1. #1
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like

  கீற்றுக் கொட்டகை  கீற்றுக் கொட்டகை  "எங்க ஊர்.... லிருந்து ..... போகும் சாலையில் .... வது கிலோ மீட்டரில்.... பக்கம் திரும்பும் சாலையில் ஊர் எல்லையில் பெயர்ப் பலகையோடு துவங்கும்... அங்கிருந்து கொஞ்ச தூரம் போனால் .... என்ற பாட்டு லேசாக காதில் விழ ஆரம்பிக்கும்... உள்ளே போகப் போக பாட்டு சத்தம் பெரிசாகக் கேட்கும்... சாயங்காலம் 5.00 மணிக்கு அது அடையாளம்... ஜனங்க சாரை சாரையாக நடந்து இடது பக்கம் மலைமேட்டுப் பக்கம் செல்வார்கள் ... திரும்பிப் பார்த்தால் தொலைவில் கூட்டம் கூட்டமாக மக்கள் நின்று கொண்டிருப்பார்கள்.. மாலைக் காட்சி டிக்கெட் கொடுக்கும் நேரம்... "  இப்படியெல்லாம் அந்தக் காலத்து நினைவுகள் நம் ஒவ்வொருவர் மனதிலும் அவ்வப்போது நிழலாடிக் கொண்டிருக்கும்.. என்னதான் DTS CUBE System Multiplex Online booking with snacks என்றெல்லாம் நவீன மயமாக்கலில் சினிமா உழன்றாலும் அன்றைய தலைமுறையினர் நினைவில் மூழ்கித் திளைப்பதும் இன்றைய தலைமுறை காணத் துடிப்பதும் அந்த டூரிங் டாக்கீஸ் அனுபவங்கள்...

  இந்த அனுபவம் சினிமா பார்ப்பதோடு நின்று விடுமா என்ன... அந்த மாட்டு வண்டியில் விளம்பரத் தட்டி, கிராமஃபோன் ரிக்கார்டில் பாட்டு ஒலிப்பது, பிட் நோட்டீஸ் விநியோகம், என பல்வேறு விதங்களில் அந்தக் கால ரசிகர்களின் நெஞ்சில் பல நினைவுகள் சுற்றிச் சுழலும்.

  இதையெல்லாம் நாம் இங்கே பகிர்ந்து கொள்வோமே...

  ஒரு மேற்கோளுக்காக...

  எம்.பி.உதயசூரியன்

  ஊருக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு வெட்டவெளியில்தான் டூரிங் டாக்கீஸ் இருக்கும். ‘டெண்டு கொட்டாய், கீத்துக்கொட்டகை’ என்ற செல்லப்பெயர்களும் உண்டு. கூப்பிடுதூரத்திலுள்ள அக்கம்பக்கத்து மக்களின் போக்கிடமும், பொழுதுபோக்கிடமும் இது ஒன்றுதான். ஒவ்வொரு சாயங்காலமும் கூரைக்கு மேல் கட்டியிருக்கும் டபுள் குழாய் ஸ்பீக்கரில் ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ என்று சீர்காழியின் பாட்டு போட்டதுமே ‘ஆஹா...கொட்டாயில படம் போடப்போறாங்கப்பா’ என்று ஊர் மக்களுக்குள் ஓர் உற்சாகப் பரபரப்பு பற்றிக்கொள்ளும். அடுத்து ரெண்டு, மூணு பாடல்கள் ஓடி ‘கோடிமலைதனிலே கொடுக்கும் மலை எந்த மலை’ பாட்டு கேட்டதுமே ‘விறுவிறுவென ஜனம் டூரிங் தியேட்டருக்கு ஓட்டமும் நடையுமாக படையெடுக்கும். பாடலின் முடிவில் படுவேகமாக ஒலிக்கும் ‘பனியது மழையது நதியது கடலது’ வரிகள் வந்தால் போதும்... டிக்கெட்டை வாங்கிக்கொண்டு பாந்து செல்வார்கள். காரணம்- இந்தப் பாட்டு முடிந்ததுமே படம் ஓடத்தொடங்கும்.

  அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பாகவும் இருக்கிறது...கொஞ்சம் சிரிப்பாகவும் இருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து 1 கி.மீ. தூரத்திலிருந்தது ‘பாண்டியன்’ டூரிங் டாக்கீஸ். லீவுக்கு மதுரையிலிருந்து அத்தை மகன்களும், பெரியம்மா பசங்களும் வந்துவிடுவதால் எங்களுக்கான ஒட்டுமொத்த ஜாலியும் ‘பாண்டியன்’தான். மதுரையில் பெரிய தியேட்டர்களில் 2 ரூபா 90 காசுக்கு படம் பார்த்த அவர்களுக்கு, வெறும் 25 காசில் டூரிங் டாக்கீஸில் படம் பார்த்தபோது ஏற்பட்ட பிரமிப்பை வார்த்தையில் சொல்ல வராது. அதோடு ஏகப்பட்ட பிரமிப்பும் உண்டு. அரை டிக்கெட்டுகளும், தரை டிக்கெட்டுகளுமாக சகலரும் சமத்துவமாக உட்கார்ந்து ரசிக்கும் மணல் தரை டிக்கெட் 25 காசுதான். ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டின் விலை 50 பைசா. சோல்வதற்கு மட்டுமே இது சோகுசாக இருக்கும். மற்றபடி ஒரு நீளமான மர பெஞ்ச்தான் ஃபர்ஸ்ட் க்ளாஸ். ஒரு ரூபாக்கு வி.ஐ.பி.டிக்கெட்டும் உண்டு. அதில் ஒரே ஒரு சேர் மட்டுமே இருக்கும். ஊர்ப்பெருசுகளுக்கு மட்டுமே இது ரிசர்வ் செயப்பட்டது. ஒரு படத்திற்கு நாலு இடைவேளை விடுவார்கள். ‘ஏன் இந்த ஊர்ல மட்டும் நாலு இடைவேளை விடறாங்க?’ என்றெல்லாம் ‘மதுரைப் பசங்க’ நிறைய கேள்விகள் கேட்பார்கள். அப்போதெல்லாம் ‘ரீல் மாத்தறாங்கப்பா’ என்று எங்கள் ஊர் சிறிசு, பெரிசுகள் சகஜமாகச் சொல்வார்கள்.

  இரவு 7 மணிக்கு, பிறகு 10 மணிக்கு என ரெண்டு காட்சிகள் ஓடும். அதை ‘முதலாவது ஆட்டம், ரெண்டாவது ஆட்டம்’ என்று சொல்வார்கள். பிள்ளை குட்டிகள், பெண்கள் பெரும்பாலும் முதலாவது ஆட்டத்திற்கு வருவார்கள். வேலை வெட்டிக்குப் போவரும் ஆண்கள்தான் ரெண்டாவது ஆட்டம் போவார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த பழைய படங்களை ‘மெருகு குலையாத புத்தம்புது காப்பி’ என்ற கவர்ச்சியான விளம்பரத்துடன் கலர்ஃபுல் போஸ்டர்கள் ஒட்டி ரசிகர்களை வலைவீசி இழுப்பது டூரிங் டாக்கீஸ்களுக்கே உரிய தனி சாமர்த்தியம். அதிலும் அந்த போஸ்டர் ஒட்டப்படும் வீட்டுச்சுவற்றின் சொந்தக்காரர்களுக்கு மட்டும் ஓசி பாஸ் கொடுக்கப்படும். அந்த பாஸுடன் சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர்கள் பகுமானமாக வருவதைப் பார்த்து... சுவரில்லாத சாமான்யர்கள் தங்களுக்குள் ‘கயா முயா’ என்று முனகிக்கொள்வதைக் கேட்க சுவாரஸ்யமாக இருக்கும்.

  இப்படிப்பட்ட கலகலப்பான சூழலில் படம் பார்க்கும் அனுபவம் பரவசமானது. திரையில் படம் ஓட ஓட... தரையில் ஆங்காங்கே மணல் சீட்டுகள் உருவாகும். முன்னால் உட்கார்ந்திருப்பவரின் தலை மறைத்தால், அதை அட்ஜஸ்ட் செய்வதற்கேற்ற உயரத்தில் மணலைக் குவித்து மேடாக்கி உட்கார்வார்கள். இதனால், பின்னாலிருக்கும் இன்னொரு ரசிகர் அதைவிட உசரத்தில் மணல் சீட் போட்டு அசர வைப்பார். சமயங்களில் இந்த ‘மண்ணாசை’ ‘அந்நாட்டு மன்னர்களுக்குள்ளே’ சண்டை சச்சரவுகளில் முடிவதும் உண்டு. இதற்கிடையே சாப்பாட்டு தட்டு சைஸுக்கு ஒரு முறுக்கு விற்பார்கள். இந்த ‘மெகா முறுக்கு’ டூரிங் டாக்கீஸில் மட்டுமே மெல்லக்கிடைத்ததே தவிர, இன்றுவரை வேறெங்குமே கிடைத்ததாக யாருமே சொல்லக் கேட்டதில்லை.

  ‘வெள்ளிக்கிழமை விரதம்’, ‘ஆதிபராசக்தி’ ‘தெவம்’ போன்ற பக்திப் படங்கள் ஓடும்போது செம அமர்க்களமே நடக்கும். பக்திப் பரவசமான காட்சிகள் வரும்போது... பார்த்துக்கொண்டிருக்கிற பல பெண்களுக்கு திடீரென அருள் வந்துவிடும். அதுவரை அப்பிராணியாக பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்கள்...தடாலடியாக ‘டேஏஏஏஏஎ’ என்று பெருங்குரலெடுத்து சத்தமிட்டு, வெறித்த முழிகளோடு, நாக்கைத் துருத்திக்கொண்டு சாமியாடுவார்கள். அவ்வளவுதான்...அருள் குரல் கேட்ட அடுத்த நொடியே படம் நிறுத்தப்பட்டு லைட் போடப்படும். சுற்றியுள்ளவர்கள் சாமியை சாந்தப்படுத்த முயற்சி செய்வார்கள். அப்படியும் சாந்தமாகவில்லை என்றால், உள்ளூர் பூசாரி வந்துதான் வேப்பிலை அடித்து சாமியை மலையேறச் செய்வார். இதுபோல அடிக்கடி ‘சாமியாடல்கள்’ நடப்பதைப் பார்த்து உஷாராகி விட்டார் டாக்கீஸ் ஓனர். ஒருகட்டத்தில் பக்திப்படங்கள் போடும்போதெல்லாம் உள்ளூர் பூசாரிக்கு ‘ஸ்பெஷல் பாஸ்’ கொடுத்து வரச்சொல்லிவிட்டார். வழக்கம்போல பெண்களுக்கு சாமி வந்ததும், விபூதியும் பையுமாக ரெடியாக இருக்கிற பூசாரி, ‘சாமியை’ மந்திரித்து மலையேறச் செய்துவிடுவார்.

  இந்த இடைவேளையில் சுடச்சுட முட்டை போண்டா, முறுக்கு, டீ, காபி யாவாரமும் சூடு பிடித்து, கேண்டீன்(?)காரர் செம லாபம் அள்ளுவார். படம் விட்டு பொடிநடையாக வீடு திரும்பும் மக்கள், மனசு விட்டுப் பேசி அரட்டை அடித்துச் சிரித்தபடி நடக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. எத்தனையோ டூரிங் டாக்கீஸ்கள் இன்றைக்கு கல்யாண மண்டபம், காம்ப்ளக்ஸ், ஃப்ளாட்டுகள் என்று அடையாளம் மாறிப் போனது போல, ‘பாண்டியன்’ டூரிங் டாக்கீஸ் இருந்த இடத்தில் இப்போது மர அறுவை மில் ஓடுகிறது.
  .
  இன்று சாதி, மத, அரசியல் என பல விஷயங்கள் மக்களை கூறு போடத் துடித்தாலும், அவர்களை ‘ஒரு தாய் மக்களாக’ அன்று ஒரே கூரையின்கீழ் ஒன்று சேர்த்து வைத்த பெருமை டூரிங் டாக்கீஸுக்கு உண்டு. அப்போதெல்லாம் டூரிங் டாக்கீஸுக்குள் முட்டை போண்டா விற்பவர் இப்படிக் கூவியழைப்பார்: ‘போனா வராது...பொழுதுபோனா கிடைக்காது’ என்று. என் பால்ய வயதில் டூரிங் டாக்கீஸ் தந்த சுகானுபவம் கூட அப்படித்தான். அன்றைக்குப் போன அந்தப் பொற்காலம் இனி வராது; விதவிதமாகப் பொழுது போனாலும் அந்த இனிமைகள் இப்போது கிடைக்காது.

  நன்றி: ‘புதிய தலைமுறை’
  மேற்காணும் கட்டுரைக்கான இணைப்பு http://chudachuda.blogspot.in/2012/01/blog-post.html
  Last edited by RAGHAVENDRA; 6th October 2014 at 09:04 PM.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #2
  Senior Member Diamond Hubber venkkiram's Avatar
  Join Date
  Jan 2009
  Posts
  5,153
  Post Thanks / Like
  நல்ல நோக்கம்தான் திரு ராகவேந்தர்.. வாழ்த்துக்கள். ஆனால் போகப் போக இதுவும் சிவாஜியின் புகழ் பாடும், சிலாகிக்கும் இடமாக மாறிவிடக் கூடும் என்றே கணிக்கிறேன். 'மனதை கவரும் மதுர கானங்கள்' என்ற திரியிலேயே பாட்டைத் தவிர மற்றதையும் அலசத் தொடங்கிவிட்டோம். சிவாஜிக்கென்று பல்வேறு திரிகள் இருந்தாலும் அவரது சமீபத்திய பிறந்த நாள் தின வாழ்த்துக்களால் 'மனதை கவரும் மதுர கானங்கள்' திரிப் பக்கங்கள் பல நிரம்பி வழிந்தது. எனிவே.. கீற்றுக் கொட்டகை திரியும் எந்தவழியில் பயணிக்கப் போகிறது என கொட்டகையின் வெளியெ நின்றுகொண்டே கவனிக்கிறேன். வாழ்த்துக்கள்!
  சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

 4. #3
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  50களின் இறுதியில் ஒரு கல்கி வார இதழில் வெளிவந்த மடாதிபதி மகள் திரைப்படத்திற்கான விளம்பரத்தின் நிழற்படம்  இவ்விளம்பரம் பதிக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளவாறு ஸ்த்ரீ புமான் என்ற வார்த்தைகளைப் பற்றி குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. புமான் என்கிற வார்த்தை ஆணினத்தைக் குறிப்பதாக தெரிகிறது. வித்தியாசமான விளம்பரமாகவே தென்படுகிறது.

  நன்றி http://tamilpokkisham.blogspot.in/20...urce=BP_recent
  Last edited by RAGHAVENDRA; 6th October 2014 at 09:21 PM.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 5. #4
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  இவ்விளம்பர நிழற்படங்களில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ள பவானி என்ற திரைப்படம் வெளிவந்ததா என்பது நினைவில்லை..

  நன்றி- http://venkatnagaraj.blogspot.com/20...og-post_1.html
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 6. #5
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  மிக்க நன்றி வினோத் சார்... தங்களுடைய வருகைக்கு...

  ஆவணத்திலகம் பம்மலாரைப் போன்று தாங்களும் அள்ளி வழங்கும் ஆவணங்கள் தமிழ்த்திரையுலக வரலாற்றையே எடுத்துச் சொல்லும் வல்லமை படைத்தவை. தங்களுடைய அரிதான ஆவணங்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 7. #6
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  ஆமாம் வினோத் சார்..

  தரை டிக்கெட், பெஞ்சு, சேர் மற்றும் சோஃபா என்று நான்கு விதமாக இருக்கைகள் பிரிக்கப் பட்டிருக்கும். அதிக பட்சம் 200 சதுர அடிக்கு மிகாத அளவில் மத்தியில் ஒரு கட்டிடம் இருக்கும். மேல் தளத்தில் ப்ரொஜக்டரும் கீழ்த்தளத்தில் அலுவலகமும் இருக்கும். அவ்வளவு தான். இதை விட்டால் கழிப்பறைகள் மட்டும் தான் கட்டிடம். மற்றபடி பொதுவாக மூங்கிலில் தான் கொட்டகை வேயப்பட்டிருக்கும். பார்வையாளர் திசையிலிருந்து பார்த்தால் இடது புறம் தாய்மார்களுக்கும் வலது புறம் பொதுவாகவும் மக்கள் தரை டிக்கடெ்டிலும் பெஞ்சு வகுப்பிலும் அமர வைக்கப்படுவார்கள்.

  ஊர்ப்பெரிய மனிதர்கள், நாட்டாமை போன்ற சமுதாயத்தின் உயர்மட்ட மக்களுக்கு சோஃபா இருக்கை. சில சமயம் அவர்கள் வந்தபின் தான் படமே போடுவார்கள்.

  படம் ரீல் ரீலாக இருக்கும் ஒரு பெட்டியில் அதிக பட்சம் மூன்று ரீல்கள் அடங்கும். ஒவ்வொரு பெட்டியும் ப்ரிண்ட் மாற்றி மாற்றிப் போடும் போதும் படம் நிறுத்தப்பட்டு விளக்குகள் எரியும். அவ்வேளையில் சிற்றுண்டி, தேநீர் என வியாபாரம் அமோகமாக இருக்கும்.

  ... நினைவுகள் தொடரும்...தொடரட்டும்....
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 8. #7
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் பாட்டுப்புத்தகத்தின் முகப்பு  நன்றி காலச்சுவடு இணையதளம் http://www.kalachuvadu.com/issue-126/page40.asp
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 9. #8
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  தமிழ்த்திரையுலகம் கால காலமாக நன்றிக்கடன் பட்டிருக்கும் ஆவணம்..  சென்ற தலைமுறையானாலும், இன்றைய தலைமுறையானாலும் நாளைய தலைமுறையானாலும் கடந்த காலத் தமிழ்த்திரையுலகைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் மேற்காணும் புத்தகத்தைத் தொகுத்தளித்த வித்தகர்

  ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள்

  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 10. #9
  Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
  Join Date
  Apr 2011
  Posts
  9,086
  Post Thanks / Like
  Quote Originally Posted by venkkiram View Post
  நல்ல நோக்கம்தான் திரு ராகவேந்தர்.. வாழ்த்துக்கள். ஆனால் போகப் போக இதுவும் சிவாஜியின் புகழ் பாடும், சிலாகிக்கும் இடமாக மாறிவிடக் கூடும் என்றே கணிக்கிறேன். 'மனதை கவரும் மதுர கானங்கள்' என்ற திரியிலேயே பாட்டைத் தவிர மற்றதையும் அலசத் தொடங்கிவிட்டோம். சிவாஜிக்கென்று பல்வேறு திரிகள் இருந்தாலும் அவரது சமீபத்திய பிறந்த நாள் தின வாழ்த்துக்களால் 'மனதை கவரும் மதுர கானங்கள்' திரிப் பக்கங்கள் பல நிரம்பி வழிந்தது. எனிவே.. கீற்றுக் கொட்டகை திரியும் எந்தவழியில் பயணிக்கப் போகிறது என கொட்டகையின் வெளியெ நின்றுகொண்டே கவனிக்கிறேன். வாழ்த்துக்கள்!
  வெங்கிராம் அய்யா!

  என்ன இது? இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன். என்ன இது? என்ன பதிவு இது?

  இதுவரை மிக மிக உங்கள் விஷயத்தில் பொறுமை காத்தேன். கிட்டத்தட்ட ஓராண்டுகளுக்கு மேலாக நாகரீகம் கருதி. நீங்கள் ஹப்பில் எனக்கு சீனியர் என்ற மரியாதையில் மிக மிக அமைதியாய் இருந்தேன். நீங்கள் குட்டக் குட்டக் குனிகிறான் வாசு என்று என் மீது மீண்டும் தப்புக் கணக்குப் போட்டு மேலும் குட்ட நினைத்து மேற்கண்ட பதிவை அளித்துள்ளீர்கள்.

  குட்டு வாங்கிக் குனிந்தவன் நிமிர்ந்தால் என்ன ஆகும் என்று அகிலம் போற்றும் 'அறிவு ஜீவி'யான உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

  உங்களுக்கு ஒரு கதை தெரிந்திருக்குமே! பாம்பு ஒன்று ஆண்டவனின் கட்டளையை ஏற்று தன் சுபாவத்தைக் காட்டாமல் ஒதுங்கியிருந்ததாம். அதுவரை அந்தப் பாம்புக்கு பயந்த மக்கள் இனி பாம்பு நம்மை ஒன்றும் செய்யாது என்று அடித்து துன்புறுத்த ஆரம்பித்தார்களாம். பரிதாபமாக அந்த பாம்பு தன் நிலையை ஆண்டவனிடம் முறையிட்டதாம். அதற்கு இறைவன் 'அட பாம்பே! உன்னை கடிக்க வேண்டாமென்று தான் சொன்னேனே தவிர சீற வேண்டாம் என்று சொல்லவில்லையே"' என்றாராம்.

  அது போல எல்லாவற்றுக்கும் பேசாமடந்தையாகி விட்டால் இப்படித்தான் செய்வீர்கள். திரும்ப குணத்தைக் காட்டினால்தான் சும்மா இருப்பீர்கள் போல் இருக்கிறது.

  நீங்கள் நடிகர் திலகம் திரியில் என்னை மறைமுகமாக மோசமாக தாக்கி எழுதிய பதிவுகள் கண்டும் பேசாமல் விலகி விட்டேன். திரியை ஆக்கிரமிப்பு செய்கிறேன் என்று நாக்கூசாமல் எழுதினீர்கள். பொறுத்துக் கொண்டேன். கடினப் பட்டு பதிவுகள் போடுகிறேன் என்று இங்கு பதிவுகள் வருகின்றன என்று கேலி பேசினீர்கள். அதையும் பொறுத்துக் கொண்டேன். அதுவுமல்லாமல் நான் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் உங்களை மதுர கானம் திரிக்கு வரவேற்றும் இருக்கிறேன். உங்களுடைய சில பதிவுகளை ரசித்து பாராட்டியும் இருக்கிறேன்.

  ஒரு பதிவை முழுமையாக, நேர்மையாக, ஆத்மார்த்தமாக அளிக்க என்னென்ன சிரமங்கள் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் நீங்கள் இரட்டை வரி வம்பு வள்ளுவர் ஆயிற்றே. உங்களுக்கு அந்த அருமை பெருமையெல்லாம் எங்கே தெரியப் போகிறது? ஒருவருடைய உழைப்பை கேலி பேசி அதில் மகிழ்ந்து அற்ப சுகம் காணும் உங்களுக்கு நீதி நியாயமெல்லாம் எங்கே தெரியப் போகிறது? புரியப் போகிறது? அடுத்தவன் உழைப்பை கேலி பேசினவர் எவருமே அதன் பலனை அனுபவிக்காமல் போனதில்லை.

  ஒரு படத்தை எடுத்து அதை பலதடவை பார்த்து அதன் கதை எழுதி அந்தப் படத்தின் காட்சிகள் வசனங்கள் பாடல்கள் எழுதி அதை முடிந்தவரை தவறில்லாமல் டைப் செய்து தவம் போலத் தர முயன்று பாருங்கள். குறைந்தது மூன்று நாட்களாவது ஆகும். அப்போது அந்த வலி தெரியும் உங்களுக்கு. இதில் நக்கல், நையாண்டி, கேலிப் பேச்சு வேறே. உங்களுக்கே அருவருப்பாய் இல்லை? உங்கள் மனசாட்சி உங்களைக் குத்த வில்லை?

  உங்களுக்கு என்ன...எவனும் ஒழுங்காக எழுதிவிடக் கூடாது.. யாரும் வளர்ந்து விடக்கூடாது... எந்தத் திரியும் புகழ் பெற்றுவிடக் கூடாது. உடனே எங்கிருந்தாலும் ஒரு 3 வரியைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்து விட வேண்டியது. அதைக் கெடுக்க வேண்டியது. இது ஒன்றுதானே தங்களுக்குக் கைவந்த கலை. உழைப்பை மதிக்காத உங்களையெல்லாம் என்ன சொல்வது? அட் லீஸ்ட் மதிக்க வேண்டாம். அதை மாசு படுத்தாமல் இருந்தால் போதாதா?

  பெரிய நக்கீரன் என்று உங்களுக்கு நினைப்போ?

  இப்போது மீண்டும் அதே மாதிரி மிக மோசமாக hurt செய்யும் ஒரு பதிவை அளித்துள்ளீர்கள்.

  நீங்கள். ரொம்ப ஜென்டிலாக பதிவுகள் இடுவது போல் இரண்டு மூன்று வரிகளில் அடுத்தவர்களை ஆயுசு முழுக்க நினைத்து வருத்தப் படுமளவிற்கு புண்படுத்தி வருகிறீர்கள். (இதற்கு கோபால் எவ்வளவோ தேவலை. மனதில் உள்ளதை ஒளிவு மறைவு இல்லாமல் நேரிடையாகச் சொல்லிவிடுவார்). அதனுடைய வலி பாதிக்கப் பட்டவர்களுக்குத்தான் தெரியும்.

  இப்போது பகிரங்கமாகவே விஷயத்திற்கு வருகிறேன்.

  நீங்கள் உங்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்? திரியில் ஏன் இப்படி வம்பளக்கத் திரிகிறீர்கள்?

  உங்களை யாரும் தட்டிக் கேட்கவில்லை என்ற தைரியமா? இல்லை எது போட்டாலும் பேசாமல் வாய்மூடி மௌனியாய் இருந்து விடுகிறான் வாசு என்று இளக்காரமா? கிள்ளுக் கீரையாய் நினைத்து விட்டீர்களா?

  நடிகர் திலகமே தெய்வம் என்று நினைத்து நடிகர் திலகம் திரியில் என் ஆத்மார்த்தமான பதிவுகளை நாள் அளித்து வந்துள்ளேன். கால, நேரம் எதுவும் பாராமல் நடிகர் திலகம் புகழ் ஒன்றுதான் முக்கியம் என்று என் மனசாட்சிக்குக் கொஞ்சமும் விரோதம் இல்லாமல் அங்கு என் இதய தெய்வத்திற்கு உழைத்து வந்தேன். அது எல்லோருக்கும் ஏன் உங்கள் மனசாட்சிக்கும் தெரியும்.

  ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்?

  அது பொறுக்கமாட்டாமல் மானசீகமாக நான் போட்ட பதிவுகளை, அதற்கு நானுழைத்த உழைப்பைக் கேவலப்படுத்தி இப்போது போலவே அப்போதும் ஒரு பதிவை இட்டீர்கள். இப்போதுதான் காரணம் அதற்குப் புரிகிறது. நடிகர் திலகத்தின் மீது தங்களுக்கு இருக்கும் வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும்.

  இப்போது பகிரங்கமாகச் சொல்கிறேன். நடிகர் திலகம் திரியில் நான் பதிவிடாமல் இதுவரை விலகி நிற்பதற்கு வெங்கிராம் என்ற நீங்கள்தான் முழுக் காரணம். இதை நான் முரளி சாரிடமும் சொல்லி இருக்கிறேன். கோபால் சார், மற்ற நண்பர்களிடமும் சொல்லி இருக்கிறேன்.

  இப்போது 'மதுர கானங்கள்' திரியில் வந்து உங்கள் வேலையைக் காட்ட வந்திருக்கிறீர்கள்.

  'மதுர கானங்கள்' திரியில் நடிகர் திலகம் பிறந்த நாள் அன்று நடிகர் திலகத்தைப் பற்றிய அபூர்வ செய்திகள், இதுவரை வெளியிடப்படாத படங்கள் வெளியிட்டேன். நீங்கள் ஒரு உண்மையான ரசிகராய் இருந்தால் சிவாஜி ரசிகராய் இல்லை) இல்லை ஒரு சாதாரண ஆறறிவு கொண்ட மனிதனாய் இருந்தால்கூட அந்த உலகப் புகழ் பெற்ற நடிகரின் அரிய புகைப்படங்களைப் பார்த்து பெருமிதம் கொண்டிருந்து இருப்பீர்கள்.

  தமிழகத்தின் பெருமையை தன் நடிப்பால் உலகமறியச் செய்த முதல் உலக மகா உன்னத நடிகன். அவர் பெருமையை அவர் பிறந்த நாள் அன்று நான் பதிவிட்டால் உங்கள் வயிறும் உள்ளமும் எரிகின்றது. கேட்டால் மதுர கானங்களுக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று சால்சாப்பு வேறு. என்னே உங்கள் ரசனை! என்னே உங்கள் தமிழ்ப் பண்பு!

  எல்லாமே தலைப்பிட்டபடிதான் நடக்கிறதா? பல்வேறு கொள்கைகளைக் கொண்ட ஒன்றுக்கொன்று முரண்பட்ட வெவ்வேறு தொலைகாட்சி சானல்கள் கூட அக்டோபர் 1 நடிகர் திலகம் பிறந்தநாள் அன்று அந்த மாபெரும் நடிகரை போட்டி போட்டுக் கொண்டு நினைவு கூர்கின்றன. அவர் நடித்த படங்களையும் அவர் பாடல்களையும் போட்டு அவர் புகழ் பாடுகின்றன. பத்திரிகை உலகம் ஒட்டு மொத்தமும் அவர் பிறந்த நாளை நினைவு படுத்தி மகிழ்கின்றன. ஒரு உன்னத தமிழ் நடிகனுக்கு அனைவரும் அளிக்கும் அன்பு அங்கீகாரம் அது. சினிமா ஸ்பெஷல் என்று போட்டது வரும் விகடனில் கூட சினிமாவைத் தவிர வேறு விஷயங்களும் வருவதுண்டே!

  அது போல மதுர கானங்கள் திரியில் அன்று ஸ்பெஷலாக நடிகர் திலகத்தின் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு பதிவுகள் அளிக்கப்பட்டது. நான்தான் முழுக்க முழுக்க சில பக்கங்கள் பதிவிட்டேன். மேற்சொன்ன ஊடகங்களே நடிகர் திலகத்தின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் போது மதுர கானங்கள் திரியில் அதுவும் நடிகர் திலகத்தின் பக்தனான நான் எப்படிக் கொண்டாட வேண்டும்? என்னை விடுங்கள். ஒரு ரசிகனாக, ஒரு தமிழனாக கொண்டாடினேன் என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். அதில் என்ன தப்பு? அதில் என்ன உங்களுக்கு வயிற்றெரிச்சல்...பொறாமை?.

  கிருஷ்ணா சார் சொன்னது போல இன்றைய ஸ்பெஷல் என்ற தொடரில் இதுவரை 3 நடிகர் திலகத்தின் பாடல்களை மட்டுமே அலசியுள்ளேன். ஏன் நூறு பாடலுமே நடிகர் திலகத்தின் பாடல்களாக நான் எடுத்து அலசக் கூடாதா? அப்படியே போட்டாலும் அதை ரசிக்கத்தான் இங்கு ஆட்கள் இருக்கிறார்களே ஒழிய உங்களைப் போல் கெடுக்கும் கோணல் புத்திக்கார்கள் யாரும் இல்லை. இதிலிருந்தே தெரியவில்லை. ஒரு உலகப் புகழ் பெற்ற நடிகனைப் பற்றிப் பதிவு போட்டால் உங்களுக்குப் பொறுக்கவில்லை. உங்கள் நெஞ்சு கொதிக்கிறது. வெட்கம் சார். தமிழன் என்று சொல்லவே வேதனையாய் இருக்கிறது. அது கூடப் பரவாயில்லை. அதைப் பற்றி மதுரகானங்கள் திரியில் கூட உங்களால் பதிய முடியவில்லை. 'கீற்றுக் கொட்டகையில்' போய் கோழையாய் பதிகிறீர்கள். ஏன்? எனக்கு நேரிடையாக எழுதுவதுதானே? ராமராஜனையும, ரேகாவையும் நெக்குருக நீங்கள் நெஞ்சில் வைத்துப் போற்றும்போது (உங்கள் அறிவார்ந்த ரசனைக்கு என் தலை சாய்த்த வணங்க்கங்கள்) கலைக்கடவுள் நடிகர் திலகத்தை நாங்கள் எப்படிப் போற்ற வேண்டும் என்று நீங்களே கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இதுகூடவா அபார மேதையான உங்களுக்குத் தெரியாது?


  மதுர கானங்கள் திரியில் ஆயிரக்கணக்கில் பாடல்கள் அனைவராலும் ஒற்றுமையோடு அற்புதமாக அலசப்பட்டுள்ளன. அதெல்லாம் உங்கள் கண்களுக்குப் புலப்படவில்லையா? உங்களுக்கு என்ன கண் அவுட்டா? த்சொ.. த்சொ...ஒவ்வொருவரும் தங்கள் உயிரைக் கொடுத்து இங்கு உழைத்து இந்தத் திரியை உயரத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். மது அண்ணா, ராஜேஷ், சின்னக் கண்ணன் சார், கிருஷ்ணா சார், ராகவேந்திரன் சார், கார்த்திக் சார், கோபால் சார், முரளி சார் என்று சகோதர உணர்வோடு சண்டை சச்சரவுகள் எதுவும் இல்லாமல் ஜாலியாக சந்தோஷமாக இங்கு பதிவிட்டு வருகிறார்கள். எண்பது சதவீதம் பாடல்கள் என்றால் மற்ற சினிமா விஷயங்கள் மீதி. இதில் என்ன தவறு? இங்கு இருக்கும் அனைத்து சீனியர்களுக்கும் தெரியும் அவர்களுக்கு நான் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் தருகிறேன் என்று.

  இப்படி யாராவது சந்தோஷமாக இருந்தாலோ, திரிகள் உழைப்பால் வளர்ந்தாலோ உங்களுக்குப் பிடிக்குமா?


  நீங்கள் விமர்சனம் செய்யுங்கள். இந்தப் பதிவு சரியில்லை இது வேறு மாதிரி இருக்கலாம் என்று. அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்பது கூட தெரியாத மூடன் அல்ல நான். ஆனால் உங்களைப் போல குதர்க்க புத்தி, நொட்டை புத்தி எல்லாம் எங்களுக்குத் தெரியாது.

  இனியாவது பதிவாளர்களை புண்படுத்தாத புத்தியை அந்த ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.

  மேற்கொண்டு நீங்கள் இப்படி மறைமுகமாக இப்படியெல்லாம் வேதனைப்படுத்தும் பதிவுகள் இட்டால் உங்கள் ரேஞ்சைவிட கீழே இறங்க நானும் தயார். அப்படியும் தரம் தாழ்ந்து என்னால் எழுத முடியும். ஆனால் அதனை நான் விரும்பவில்லை. ஆனால் நடிகர் திலகம் திரியிலிருந்து விலகி அமைதியாய் இருந்தது போல் இருந்து விடுவேன் என்று கனவு மட்டும் காணாதீர்கள். இப்போதும் உங்கள் மேல் கொஞ்ச நஞ்ச மதிப்பும், மரியாதையும் நெஞ்சின் ஒரு ஓரத்தில் வைத்துள்ளேன். தயவு செய்து அதையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

  அதிக கோபத்துடனும், அதைவிட அதிக வருத்தத்துடனும்

  நெய்வேலி வாசுதேவன்.
  Last edited by vasudevan31355; 7th October 2014 at 08:58 PM.
  நடிகர் திலகமே தெய்வம்

 11. #10
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,032
  Post Thanks / Like
  வினோத் சார்
  தங்களுடைய பங்களிப்பின் மூலம் இத்திரியின் மவுசு கூடி வருகிறது. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும் வாழ்த்துக்களும்.
  அன்புடன்
  ராகவேந்திரன்
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Page 1 of 24 12311 ... LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •