Page 36 of 400 FirstFirst ... 2634353637384686136 ... LastLast
Results 351 to 360 of 4000

Thread: Makkal thilakam mgr part-11

  1. #351
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like

    ''உலகம் சுற்றும் வாலிபன் ''

    1970 ............நினைவலைகள் ......

    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் முதல் அறிவிப்பு

    ''உலகம் சுற்றும் தமிழன் ''

    இசை - குன்னக்குடி வைத்தியநாதன்

    இயக்கம் - ப . நீலகண்டன் .


    பின்னர் ஏற்பட்ட மாற்றம்

    ''உலகம் சுற்றும் வாலிபன் ''

    இசை - எம்,எஸ், விஸ்வநாதன் .

    முதலில் ஜெயலலிதா நடிப்பார் என்றும் லக்ஷ்மி என்றும் , ராஜஸ்ரீ அல்லது வேறு நடிகைகள் நடிக்க கூடும் என்ற
    பல செய்திகள் வந்த வண்ணம் இருந்த நேரத்தில் மஞ்சுளா - லதா - சந்திர கலா என்ற மூன்று கதா நாயகிகள் நடிக்கிறார்கள் என்பதை மக்கள் திலகம் உறுதி செய்தார் .

    மெல்லிசை மன்னரின் கடுமையான உழைப்பில்

    டி .எம் எஸ்

    எஸ்.பி .பாலசுப்ரமணியம்

    ஜேசுதாஸ்

    சுசீலா

    ஈஸ்வரி

    ஜானகி

    பிரபல பாடலாசிரியர்கள் கண்ணதாசன் - வாலி - புலமைபித்தன் வரிகளில்

    இனிய குரல்களில் 10 பாடல்கள பதிவு செய்யப்பட்டது .

    1970 செப்டம்பர் மாதம் ''எங்கள் தங்கம் '' படத்தை முடித்து விட்டு உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காகமக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய குழுவினர்களோடு கீழ் திசை நாடுகள் பயணம் செய்வதை முன்னிட்டு தினத்தந்தி - முரசொலியில் வாழ்த்துக்கள் விளம்பரம் வந்தது . பிரபல தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை விளம்பரமாக தந்தார்கள் .

    தொடரும் ...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #352
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று காலை தந்தி தொலைகாட்சியில் ''உலகம் சுற்றும் வாலிபன் '' டிஜிடல் வடிவில் விரைவில் வர உள்ளது என்று படத்தின் சில காட்சிகள் - பாடல்களுடன் விளம்பரம் செய்தார்கள் . அதே போல் மெகா டிவியில் இன்று இரவு சினிமா செய்தியில் தகவல் கூறினார்கள் .


  4. #353
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    அருமையான பதிவு சைலேஷ் சார் அட்டகாசம்

    Quote Originally Posted by saileshbasu View Post
    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  5. #354
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    கலியபெருமாள் சார் தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது தொடருங்கள்
    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post


    Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
    Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  6. #355
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    திண்டுக்கல் மலரவன் அவர்கள் மிக சிறப்பாக நடத்திய மக்கள்திலகம் பிறந்த நாள் விழா மற்றும் அண்ணா பிறந்த நாள் விழா நிகழ்வின் போட்டோகலை அருமையாக இரவிச்சந்திரன் பதிவு செய்ததற்கு மிக அழகாக விளக்கம் தந்த செல்வகுமார் சார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    கடந்த 15ஆம் தேதி மக்கள் திலகத்தின் ஆசான் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழா திண்டுக்கல் நகரில், மனித நேய மாணிக்கம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு மற்றும் அறக்கட்டளை (பதிவு எண் : 4/774/2011) செயலாளர் திரு மலரவன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புரட்சித்தலைவரின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக மிக திறம்பட பணியாற்றிய திரு அரங்கநாயகம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

    இவ்விழாவில் -

    சென்னையிலிருந்து திருவாளர்கள் சந்திரசேகர் ( அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம்) மற்றும் ஜெயராமன் அவர்களும்,
    கோவையிலிருந்து திருவாளர்கள் சா. துரைசாமி (ஒய்வு பெற்ற பொறியாளர்), ஏ. எஸ்.கண்ணன், கணபதிதாஸ், கே.எஸ். ராஜன், மற்றும் திருமதி பெரிய நாயகி ஆகியோரும்,

    மதுரையிலிருந்து, தனி வாகனத்தில் பயணித்த திருவாளர்கள் தமிழ்நேசன், மாரியப்பன், பாலு உட்பட 30 அன்பர்களும்,

    திருச்சியிலிருந்து திருவாளர்கள் முல்லை மூர்த்தி, ஆட்டோ சரவணன், மாந்துறை கலியபெருமாள்,

    தூத்துக்குடியிலிருந்து திரு. டி. டி. செல்வன் முதலானோரும்,

    எம்.ஜி. ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனத்தலைவர் திரு. கோவை குமார் போன்றோரும்,

    திண்டுக்கல் மாநகரிலிருந்து ஏராளாமான எம். ஜி. ஆர். பக்தர்களும், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


    செய்தியினை புகைப்படங்களுடன் பதிவிட்ட திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !


    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  7. #356
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    super vinodh சார்
    Quote Originally Posted by esvee View Post
    NALLA NERAM - MALAYALAM POSTER

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  8. #357
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    புத்தர் கோவில் சண்டை காட்சிகளில் இருந்து இன்னும் விடுபடவே இல்லை கலைவேந்தன் சார். அதற்குள் எங்களை ஹோட்டல் துசிதானியில் மிதக்க வைத்து விட்டீர்கள். மிக அருமையான வார்த்தை ஜாலத்தில் மிக அட்டகாசமாக பதிவை அளித்ததற்கு மிக்க நன்றி தொடரட்டும் தங்களின் இதுபோன்ற பதிவுகள்
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    ஹோட்டல் துசிதானி


    நண்பர்களுக்கு வணக்கம், பாராட்டு தெரிவித்த திரு. லோகநாதன் சாருக்கு நன்றிகள்.


    உலகம் சுற்றும் வாலிபன் பற்றி நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன் என்று கூறினாலும் படத்தின் மறுவெளியீடு பற்றி தகவல் அறிந்ததும் எழுந்த நினைவலைகளின் தாக்கம் தந்த பாதிப்பில் இருந்து விடுபடமுடியவில்லை. நேற்று ஹோட்டல் துசிதானியின் பிரம்மாண்டத்தையும் தலைவர் அதை படமாக்கியிருக்கும் நேர்த்தியையும் கூறியிருந்தேன்.


    பணி முடித்து வீட்டுக்கு சென்று உறங்கும் நேரத்திலும் துசிதானி ஹோட்டலை படம் வெளியானபோது பார்த்து ரசித்த பிரமிப்பு நினைவுக்கு வந்தது. அந்த ஹோட்டலை திரையில் பார்க்கும் முன்பு வரை அப்படிப்பட்ட பிரம்மாண்ட ஹோட்டலை நான் பார்த்ததில்லை. 1973ல் படம் வெளியானபோது 1 ரூபாய் 10 காசு கொடுத்து பார்த்த எனக்கு அப்போது அந்த ஹோட்டலில் சிறிது நேரம் தங்கியிருந்த உணர்வு. ரசிகனையும், காசு கொடுத்து படம் பார்க்கும் மக்களையும் என்றுமே ஏமாற்றியதில்லை தலைவர்.


    நேற்று உறங்கும் நேரத்தில் சுழன்ற இந்த நினைவுகளின் தொடர்ச்சியாக ஹோட்டல் காட்சியின் கடைசியில் தாய்லாந்து நடிகை மேட்டா ருங்ரட்டாவிடம் தலைவர் கூறும் வார்த்தைகளும் எந்த சூழ்நிலையில் அந்த வார்த்தைகள் என்னை ஆக்கிரமித்தன என்பதும் நினைவுக்கு வந்து என் தூக்கத்தைப் போக்கி கலங்கடித்தன. அதை கடைசியில் சொல்கிறேன்.


    சனி, ஞாயிற்றுக்கிழமைகள் எனக்கு வழக்கமாக விடுமுறை நாட்கள் என்றாலும் பணியில் ப்ராஜக்ட்டை அவசரமாக முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக நாளையும் நாளை மறுநாளும் அலுவலகத்துக்கு வரவேண்டிய சூழல். பணி நெருக்கடியான நேரத்திலும் நமக்கு எல்லாம் ‘டீம் லீடர்’ ஆன நம் தலைவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் ஹோட்டல் துசிதானி பற்றி சின்ன அலசல்.


    சொம்சாய் வீட்டில் தலைவர் விடைபெறும் போதே, நாங்கள் ஹோட்டலுக்கு கிளம்புகிறோம் என்று தலைவர் கூறுவார். எந்த ஹோட்டல் என்று மேட்டா (படத்தில் மேத்தா) கேட்க, துசிதானி என்பார் தலைவர். அதை மீண்டும் ‘துசிதானி?’ என்று மேத்தா கண்கள் விரிய கூறும்போதே, தலைவரை ஒருதலையாய் விரும்பும் அவர் அங்கு செல்வதற்குத்தான் கேட்டுத் தெரிந்து கொள்கிறார் என்பது நமக்கு புரியும்.


    அடுத்த காட்சி முதல் துசிதானியின் ராஜாங்கம் ஆரம்பம். ஹோட்டலின் முன் அறையில் இருந்து வாயிலை கேமரா பார்க்கும் கோணம் நாமே உள்ளிருந்து வாயிலைப் பார்ப்பது போலிருக்கும். பிரம்மாண்ட கண்ணாடிக் கதவுகளுக்கு வெளியே வேகமாக வந்து நிற்கும் சொகுசுக் கார். அதிலிருந்து அலங்கரிக்கப்பட்ட அழகுப் பதுமையாக வரும் மேத்தா. வரும்போதே அவர் ஓடி வருவது தலைவரைப் பார்க்க அவரது ஆவலை வெளிப்படுத்துவதாக இருக்கும்.


    கதவைத் திறந்து ஓட்டலுக்குள் நுழைந்து முன் அறையைத் தாண்டி வெல்வெட் பாதையில் ‘‘மிஸ்டர் ராஜ்’’ என்று அழைத்தபடி அவர் ஓடி வரும்போது அந்த வராண்டாவின் நீளம் புலப்படும். வாராண்டா முடிவில் ஏழெட்டு படிகள் ஏறி அவர் வரும்போது மேலே பேப்பர் படித்தபடி பாக்கு வண்ண ஸ்டிரைப்டு கோட்டில் தலைவர் படு ஸ்மார்ட் & அழகு. அவருக்கு எந்த வண்ணம்தான் பொருந்தாது? வந்ததும் தமிழ் பண்பாட்டின்படி வணக்கம் என்று மேத்தா கூற, பதிலுக்கு பண்பாட்டின் காவலரான நமது தலைவரும் அவர்களது மொழியில் ‘சவாலி’ என்று குமிழ்நகையுடன் குனிந்து வணக்கம் சொல்லும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஜொலிக்கும் சிலையாக நிற்கும் மேத்தாவை தலைவர் சுற்றி வந்து பியூட்டி புல் என்பார். அந்தப் பார்வையில் ஆபாசம் இருக்காது. திருமண அலங்காரத்தில் இருக்கும் தங்கையை அண்ணன் பார்த்து ரசிப்பதுபோல இருக்கும். காட்சிப்படி மேட்டாவிடம் தலைவர் சகோதர பாசத்துடன்தான் பழகுவார். அதனாலேயே, இந்த பாசப் பார்வை. அவரது காதல் பார்வை எப்படி கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்பது நாம் அறியாததல்ல.


    பின்னர், மேத்தா கையில் வைத்திருக்கும் பொம்மையைப் பார்த்து என்ன இது? என்று செம்மல் கேட்க அவர் தட்டுத் தடுமாறி ‘என் .... பிரசண்டேஷன்’ என்று கொச்சையாய் சொல்வதும் அழகு. (இப்போதைய படங்களில் தமிழ் நடிகைகளுக்கே டப்பிங் குரல் தேவைப்படும் நிலையில் தலைவர் துணிந்து தமிழை தாய் மொழியாக கொள்ளாத மேட்டாவின் குரலிலேயே அவரை தட்டுத் தடுமாறியாவது பேச வைத்திருப்பார்.) பதிலுக்கு தலைவர் ‘‘நானும் உனக்கு ஒரு பரிசு வச்சிருக்கேன்’’ என்று கூறியதும் ‘‘கொடு ..... கொடு’’ என்று கூறும் மேத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு தலைவர் ஓடுவார். அந்த ஓட்டத்துக்கு ஈடு கொடுக்கும் மெல்லிசை மன்னரின் அசத்தலான பின்னணி இசை. அந்த இடத்தில் இருந்து மீண்டும் நீளமாக ஓட்டலின் பாதை போய்க் கொண்டே இருக்கும். எவ்வளவு நீளமான பாதை என்பதை உணர்த்தும் வகையில் மேட்டாவை ‘எவ்வளவு தூரம்? முடியல’ என்று சிணுங்கச் செய்திருப்பார். அதற்கு தலைவர் ‘‘வா. வா... அடிப்பேன்’’ என்று செல்லமாக கையை ஓங்குவதில் அன்னியோன்னியம் தெரியும்.


    அதை வராண்டாவையும் தாண்டி ஓடி வருகையில் மற்றொரு சிறிய வாராண்டா. இங்கு கேமராவை ‘லோ ஆங்கிளில்’ வைத்து படம் பிடித்திருப்பார் தலைவர். காரணம் காட்சியும் அழகாகத் தெரிவதோடு, அந்த இடத்தின் அலங்காரமான வேலைப்பாடுள்ள விதானம் தெரியும். சிறிய சிறப்பு கூட தலைவரின் கண்களில் இருந்து தப்பாது. அதை ரசிகர்களுக்கு விருந்தாக்கவும் தவறமாட்டார்.


    அதையும் தாண்டி பெரிய ஓப்பன் ஸ்பேஸ். அந்த இடத்தில் கேமரா கோணம் வைக்கப்பட்டுள்ள இடம் சூப்பர். நாகேஷூம் சந்திர கலாவும் எதிரெதிரே நாற்காலியில் அமர்ந்திருக்க, மேட்டாவின் கையைப் பிடித்தபடி அங்கும் தலைவர் ஓடி வருவார். அந்த நீண்ட பாதையில் ஓடி வருவதற்கே இவ்வளவு நேரம் ஆகிறதென்றால் நடந்து வந்தால் எவ்வளவு நேரம் ஆகும்? என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.


    இங்கு கேமரா கோணம் வைக்கப்பட்ட இடம் சூப்பர் என்று சொன்னேனே. விளக்குகிறேன். அந்த வியூவில் இருந்து பார்த்தால் இவர்கள் 4 பேருக்கும் பின்னே, பிரம்மாண்டமாக பச்சையும் நீலமுமாய் நீச்சல் குளம். அதற்கும் அந்தப் பக்கத்தில் எதிர் கரையில் பீறிட்டு அடிக்கும் நீருற்றுக்கள் கண்ணுக்கு ரம்மியமான காட்சி. இப்போதுதான் துசிதானியின் முழு பிரம்மாண்டமும் நமக்கு தெரியும்.


    சமீபத்திய ஆண்டுகள் வரை சென்னையிலேயே கூட 14 மாடி எல்ஐசி கட்டிடம்தான் பிரம்மாண்டம். அப்போதைய படங்களில் சென்னை என்றால் முதலில் சென்ட்ரல் ஸ்டேஷனையும் (கதாபாத்திரம் தென் மாவட்டங்களில் இருந்து ரயிலில் வருவதாக இருந்தால் கூட) பின்னர், எல்ஐசியையும் காட்டுவது வழக்கம். அதற்கே, நம் மக்கள் வாய் பிளப்பார்கள். அந்த கால கட்டத்தில் எல்ஐசியை விட பிரம்மாண்டமாய் நூற்றுக்கணக்கான அறைகளுடன் பல அடுக்கு மாடிகளுடன் எழும்பி நிற்கும் துசிதானியின் கம்பீரம்.... அத்தனை அழகையும் அந்த லோ ஆங்கிளில் கேமராவுக்குள் அடக்கிய தலைவரின் மதிநுட்பம். நான் நேற்றே சொன்னதுபோல தலைவர் பன்முகத் தன்மை கொண்டவர். வெறும் நடிகர் என்று மட்டுமே அவரை அளந்தால் தோற்றுத்தான் போவோம். திரைத்துறையின் சகலமும் தெரிந்து, அடி, முடி காணமுடியாதபடி விஸ்வரூபம் எடுத்து நின்ற சகலகலா வித்தகர் அவர்.


    பாங்காக்கில் இப்போது அந்த ஹோட்டல் இருக்கிறதா? என்று தெரியவில்லை. வாழ்க்கையில் பாங்காக் செல்ல வாய்ப்பு கிடைத்து ஹோட்டலும் இருந்தால் நிச்சயம் துசிதானியில் தங்காமல் திரும்ப மாட்டேன்.


    பின்னர், தலைவர் சந்திரகலாவை தனது மனைவி என்று அறிமுகம் செய்தவுடன் காதல் தோல்வியால் மேட்டா அழ, அப்போது தலைவர் சொல்லும் வார்த்தைககளும் அது என்னை ஆக்கிரமித்த சூழலும் என் தூக்கத்தைப் போக்கி கலங்கடித்தன என்று ஆரம்பத்தில் சொன்னேனே. அந்த வைர வரிகள்...


    ‘‘உலகத்தில் நாம நினைக்கிறது எல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்க முடியாது. இயற்கையின் தீர்ப்புக்கு நாம் கட்டுப்பட்டே ஆகணும். நடந்து விட்ட முடிவுக்கு புதிய தொடக்கத்தை தேடி நாம அலையவே கூடாது’’


    எத்தனை அர்த்தமுள்ள, கருத்தாழம் மிக்க வாழ்க்கையின் தத்துவத்தை விளக்கும் வார்த்தைகள். (வசனம் - சொர்ணம்) கதைப்படி காதல் தோல்விக்கான வார்த்தைகள் மட்டுமல்ல, இழப்பு, ஏமாற்றம், விரக்தி, சோகம் என்ற உணர்வுகளில் நாம் சிக்கியிருக்கும்போது நமக்கு ஆறுதல் அளிக்கும் இந்த வார்த்தைகள் மனப்பாடம் செய்து பின்பற்றப்பட வேண்டியவை.


    நண்பர்களுக்கும் இந்த வரிகள் நினைவிருக்கும். எந்த துயரமான நேரங்களில் நினைத்துக் கொண்டீர்களோ தெரியாது. என்னைப் பொறுத்தவரை தலைவர் நம்மை விட்டு உடலால் மறைந்த அந்த நேரத்தில் அவரது குரலில் இந்த வார்த்தைகள்தான் என் காதுகளில் ரீங்காரமிட்டு ஓரளவுக்கு என்னை ஆற்றுப்படுத்தின. நேற்றிரவு என் தூக்கம் வெகுநேரம் தொலைந்ததற்கு இந்த நினைவுதான் காரணம்.


    சமீபத்தில் நண்பர் யுகேஷ்பாபு தலைவரின் இறுதி ஊர்வலக் காட்சியைப் பார்த்து அழுது விட்டதாக கூறியிருந்தார். சத்தியமான வார்த்தைகள். அந்தக் காட்சியை காணும் இதயமுள்ள யாரும் அழத்தான் செய்வார்கள். நெஞ்சு வெடிக்கும் அந்த துயரத்தை நினைத்தால்... இப்போதும் என் கண்கள் கசிகின்றன. விழித்திரைகளை நீர்த்திரை மறைக்க... இனி எழுத என்னாலாகாது. சந்திப்போம்.


    அன்புடன் : கலைவேந்தன்

    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  9. #358
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
    முருகா மூன்றெழுத்து மந்திரம் - எம்.ஜி.ஆர். மூன்றெழுத்து மந்திரம்.



  10. #359
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவர் .எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "
    190 வது நாள் சுவரொட்டி -சென்னை மாநகர் முழுவதும்
    பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.

  11. #360
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like

    உலகம் சுற்றும் வாலிபன் - நினைவலைகள்

    உலகம் சுற்றும் வாலிபன் - நினைவலைகள் ... தொடர்ச்சி ..

    மக்கள் திலகம் தன்னுடைய குழுவினருடன் வெளிநாடுகளில் வெற்றிகரமாக படபிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய அவருக்கு மாபெரும் வரவேற்பு தரப்பட்டது . வெளிநாடு செல்லும் முன்கொடுத்த வழி அனுப்பு விழாவை விட வரவேற்பு விழா சிறப்பாக நடந்தது .


    உலகம் சுற்றும் வாலிபன் - படக்காட்சிகள் -ஷூட்டிங் நிலவரம் ,பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் - கதை பற்றிய தகவல்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டது . அதில் நடித்தவர்கள் - தொழில்நுட்ப வல்லுனர்கள் ஒருவர் கூட வாலிபன் பற்றி ஒரு வார்த்தை தெரிவிக்கவில்லை

    1971ல் மக்கள் திலகம் அவர்கள் பொம்மை சினிமா இதழில் ''திரைக்கடல் ஓடி திரைப்படம் எடுத்தோம் '' என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதினார். பொம்மை இதழ் மூலம் ரசிகர்கள்உலகம் சுற்றும் வாலிபன் - வெளிநாட்டில் எடுக்கப்பட்ட நிழற் படங்கள் - படமாக்கப்பட்ட விதம் பற்றிய அனுபவங்கள் அறிந்தனர் .

    1971 மத்தியில் இரண்டு பாடல்கள் முதல் முறையாக இசைத்தட்டு விற்பனைக்கு வந்தது .

    1. சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

    2. லில்லி மலருக்கு கொண்டாட்டம் .....

    1971 தீபாவளிக்கு உலகம் சுற்றும் வாலிபன் திரைக்கு வருவதாக இருந்தது . பின்னர் மாறி வந்தஅரசியல் சூழ் நிலையில் 1971 நாடாளுமன்ற - சட்ட மன்ற தேர்தல்கள் - ரிக்ஷாக்காரன் மாபெரும்வெற்றி தொடர்ந்து நீரும் நெருப்பும் வெளியீடு .

    அரசியல் மாற்றங்கள் மற்றும் எதிர்பாராத சோதனைகள் போன்ற நெருக்கடிகளால் உலகம் சுற்றும் வாலிபன் - தயாரிப்பில் தேக்கம் ஏற்பட்டு 1971ல் வரமுடியாமல் , 1972லும் திரைக்கு வரமுடியாமல் 1973ல் திரைக்கு வந்தது .

    இடைப்பட்ட நேரத்தில் கிளம்பிய வதந்திகள்

    எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் - நெகடிவ் சேதமடைந்து விட்டது .
    எக்காரணம் முன்னிட்டும் படம் திரைக்கு வராது .எம்ஜிஆர் இந்த படத்தை கை விட்டு விட்டார் .
    1972 அக்டோபரில் மக்கள் திலகம் அரசியல் வானில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவான நேரத்தில் மிகவும் பொறுமையுடன் உலகம் சுற்றும் வாலிபன் - படத்தின் அத்தனை செய்திகளையும் ரகசியமாக வைத்திருந்தார் . ஒருபக்கம் தொடர்ந்து புதிய படங்கள் ஒப்பந்தம் .மறு பக்கம் புதிய இயக்கத்தின் வளர்ச்சியில் ஈடுபாடு . மத்தியில் ஆளும் கட்சியின் அராஜகம்எல்லாவற்றையும் இன்முகத்துடன் எதிர்கொண்டு உலகம் சுற்றும் வாலிபனை 11.5.1973 அன்றுதிரைக்கு வர ஏற்பாடுகள் செய்து அதிலும் மாபெரும் வெற்றி கண்டார் .

    தொடரும் ....
    Last edited by esvee; 27th September 2014 at 08:51 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •