Page 237 of 400 FirstFirst ... 137187227235236237238239247287337 ... LastLast
Results 2,361 to 2,370 of 4000

Thread: Makkal thilakam mgr part-11

  1. #2361
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    hortly after the release of Pallandu Vazhga, one of the last films in which the late MGR acted, she became a household name. It is hard to believe that she was just a teenager when she sang the song `Poi vaa nadhi alaiyae.'It was this song, which brought her name and fame, although her earlier hit was `Thaayir chirantha kovilum illai' in the film Agathiar. Playback singer T.K. Kala, who was recently in Tiruchi, recalls her career in the film world and her views on the current trend in the industry with M. Balaganessin.

    "In the initial years, my playback songs were mainly meant for child artistes, but it was MGR who identified my talent and recommended my name to music director K.V. Mahadevan for this song," she recalls, with gratitude.

    She instantly goes down memory lane to narrate an incident that happened at a marriage reception party. "MGR had come to attend the ceremony for a while, but spent about two hours listening to my vocal concert in rapt attention." He successfully persuaded Mr. Mahadevan to get her to lend her voice to a heroin.

    She is a bit unhappy over the current trends in film music, especially over the `modernisation' of the beats and notes of old film songs. Old songs still ruled because they were either rich with some message and melody or situation specific. The remixed tune of `Thottal poo malarum' in the film `New' could not overshadow its original form at any cost, she asserts.

    The lyrics and tune of old films had been meticulously designed so that they could even capture the attention of non-film-goers, bringing the exact environment of a sequence in the film. She sings `Kaniya kaniya mazhalai pesum paienkili' to drive home the point that it refers to romance. She has a piece of advice for music directors of Tamil films. "They should evolve a new style of their own, without prejudice to the existing or old ones. This was the phenomenon observed in the past decades. From the days of P.U. Chinnappa and M.K. Thiyagaraja Bhagavathar, Tamil film music has undergone a rapid change, each with a specific transformation." M.S. Viswanathan and T.K. Ramamurthy introduced light music, which was widely acclaimed and much admired.

    She is all praise for music director G. Ramanathan, popularly known as G.R., who was "quite familiar with the capability of each and every playback singer of yesteryears." This knowledge enabled him to make the right choice for each song. She says that Tamil lyrics would regain their lost glory if sung by playback singers who were familiar with the language.

    courtesy the hindu

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2362
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post


    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

    நமது சகோதரர்களின் உழைப்பில் நமது திரியில் அரிய புகைப்படங்கள் இடம் பெறுகின்றன. அவற்றை பொம்மை படங்கள் என்று சிலர் (எனது வேண்டுகோளை ஏற்று திரிக்கு திரும்பியிருக்கும் நண்பர் திரு.கோபால் அவர்களுக்கு நன்றி.) கூறினாலும் கூட மேலே உள்ள படத்தில் தலைவருடன் இருப்பவர் உண்மையிலேயே ‘பொம்மை’ படத்தை தயாரித்து இயக்கிய எஸ்.பாலச்சந்தர் அவர்கள். இந்த படத்தின் மூலம் திரு.கே.ஜே.ஏசுதாஸ் அவர்களை தமிழுக்கு கொண்டு வந்தார். நடுஇரவில் படத்தையும் தயாரித்து இயக்கியவரும் இவர்தான். ஏவிஎம் தயாரித்து தமிழில் முதலில் பாடல்களே இடம் பெறாத அந்த நாள் திரைப்படத்தை டைரக்ட் செய்தவர் இந்த இசை மேதை.

    யாரையுமே ஆசிரியராக கொள்ளாமல் தானே வீணையை கற்றுத் தேர்ந்தவர். இவரது குடும்பமே ஒரு கலைக் குடும்பம். இவரது சகோதரர் எஸ்.ராஜம் அவர்கள் கர்நாடக சங்கீதப் பாடகர். சகோதரி ஜெயலட்சுமி அவர்களும் நடிகையே. இந்த அபூர்வ புகைப்படத்தை பதிவிட்ட திரு. செல்வகுமார் சார் அவர்களுக்கு நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  4. Likes Russelldvt liked this post
  5. #2363
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. Likes Russelldvt liked this post
  7. #2364
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    டியர் எஸ்வி சார்

    ரகசிய போலீஸ் 115 ஒரிஜினல் பாட்டு புத்தகம் போட்டோ ஏதாவது இருந்தால் பதிவு இட முடியுமா ? அந்த படத்தில் கவிஞர் வாலி எந்த பாடலை எழுதினார் என்று தெரிந்து கொள்வதற்காக தான் இந்த வேண்டுகோள்

    Rgds
    Gk
    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பேரறிஞரின் கருத்தை நிரூபித்து வரும் பண்பாளர் திரு.ஜி.கிருஷ்ணா அவர்களுக்கு, ரகசிய போலீஸ் 115 படத்தில் 6 சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். திரு. வாலி பாடல்கள் எழுதவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், திரு. கண்ணதாசன் மகன் திருமண விழா புகைப்படத்தை வெளியிட்டீருந்தீர்கள். திரு.எஸ்.வி.சார், திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் ஆகியோர் கூறியது போல அவர் கண்ணதாசன் மகன் காந்தி கண்ணதாசன் அவர்கள். தந்தை கண்ணதாசன் பெயரில் பதிப்பகம் நடத்தி தரமான புத்தகங்களை வெளியிட்டு வருகிறார். தலைவர் மீது அபிமானம் கொண்டவர். கடந்த ஜனவரி 17 தலைவரின் பிறந்த நாளன்று அவரது நான் ஏன் பிறந்தேன்? சுயசரிதையை இரண்டு பாகங்களாக வெளியிட்டுள்ளார். நன்றி.


    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  8. #2365
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    [ 31-10-1975 அன்று வெளியான மக்கள் திலகத்தின் ‘பல்லாண்டு வாழ்க காவியத்தை, முதல் நாளே, பரங்கிமலை ஜோதி திரையரங்கில், எங்கள் மன்ற அன்பர்களுடன் கண்டு களித்தேன்.

    ஜோதி திரையரங்கம் திறந்து வெளியிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இதுவே என்பது என் நினைவு.

    சென்னை மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற தலைவராக அப்போது விளங்கிய எங்கள் அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, எங்கள் திருவொற்றியூர் பொன்மனசெம்மல் அன்பர் குழுவினை சார்ந்த தோழர்கள் அனைவரும் ஜோதி திரையரங்கை, ஆலந்தூர் எம். ஜி. ஆர். மன்றத்தினருடனும், அப்போதைய கழக அடலேறுகளுடனும் இணைந்து திரையரங்க வளாகத்தினை நன்கு அலங்கரித்தோம்.

    புதிய திரையரங்கில் மக்கள் திலகத்தின் “பல்லாண்டு வாழ்க” காவியத்தை காணப்போகும் உற்சாகத்தில் எங்கள் மன்ற நண்பர்கள் அனைவரும் திளைத்தோம்.

    எங்கள் மன்றத்தினர் சார்பில், நாங்கள் எங்கள் பங்கிற்கு, சென்னை பூக்கடையில் வாங்கிய பெரிய கூடை நிறைய உதிரிப்பூக்களை எடுத்துக்கொண்டு திரையரங்கில் பெயர் காட்டத் துவங்கியது முதல் புரட்சித்தலைவரின் இன்முகத்தை காண்பிக்கும் வரையில், திரை நோக்கி வீசிக்கொண்டே இருந்தோம்.

    புரட்சித் தலைவரின், வழக்கமான இயல்பான நடிப்பில் அருமையனா கதையமைப்பில் உருவான இப்படம் வி. சாந்தாராம் அவர்களின் “தோ ஆங்கோன் பாரா ஹாத்” இந்திப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது அறிந்த செய்தியே ! புரட்சித் தலைவர் நடித்தால் மட்டுமே, இப்படத்தின் தமிழ் உரிமையை தர முடியும் என்று வி. சாந்தாராம் அவர்கள் தெரிவித்ததாக ஒரு பரபரப்பு செய்தி அப்போது வெளியாயின. திறமையை எங்கிருந்தாலும் அதனை போற்றக்கூடிய நம் பொன்மனச்செம்மல், தி. மு. க. வில் இருந்தபோதே, 1972ம் ஆண்டு கால கட்டத்தில் வி. சாந்தாராம் அவர்களை, விழா ஒன்றின் மேடையில் அவரது காலில் விழுந்து வணங்கினார்.

    அவரது காலில் விழுந்து வணங்க வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், உலக சினிமா வரலாற்றில் நம் இந்திய படங்களுக்கு தனி ரியாதையையும், விருதுகள் பல பெற்று தந்தவருமான சாந்தாராம் அவர்களின் திறமையை மதித்தார் நம் மக்கள் திலகம் அவர்கள். பின்னாளில் அவரது திரைப்படத்தை தழுவி தமிழில் எடுக்கும் ஒரு திரைப்படத்தில் தான் நடிப்போம் என்று கனவில் கூட கருதியிருக்க மாட்டார் நம் புரட்சித்தலைவர்.

    புரட்சித்தலைவரின் கண்களில் தென்படும் அந்த ஒளியின் சக்தியில் வில்லன்கள் மட்டுமா வீழ்ந்தனர். ரசிகர்களாகிய நாமும் அல்லவோ சேர்ந்து வீழ்ந்து விட்டோம். வேறு எந்த நடிகர்களின் கண்களுக்கு இந்த ஈர்ப்பு சக்தி கிடையாது என்பதை உறுதியாக சொல்லும் அளவுக்கு நம் பெருமை மிகுந்த வரலாற்று நாயகன் எம். ஜி. ஆர். அவர்களின் கண்களுக்கு அந்த சாந்த, கருணை ஒளி பொருந்தியிருக்கிறது.

    பேரறிஞர் அண்ணா அவர்களை, அதிக அளவில் பெருமைப்படுத்தி வெளிவந்த இந்த புதுமைக் காவியத்தில் ஆறு வில்லன்கள் வித்தியாசமான பாணியில் நடித்திருந்தனர். அந்த கொடூர வில்லன்களின் அறிமுக காட்சி பயங்கரமாக இருந்தாலும், நமது பொன்மனச்செம்மல் தனக்கே உரிய மனிதாபமான உணர்வில் அவர்களை திருத்தும் நோக்கத்தில், சிறையிலிருந்து விடுவித்து தனியாக அழைத்து செல்லும் தைரியத்தை, வெகு அழகாக வெளிப்படுத்தி தனக்கே உரிய தனி கம்பீரத்தை நிலைநாட்டும் காட்சி மிகவும் ரசிக்கத்தக்கதாய் அமைந்துள்ளது.

    பேரறிஞர் அண்ணா அவர்களின் ஒன்றாம் தம்பி, இரண்டாம் தம்பி, மூன்றாம் தம்பி என்று வரிசைப்படுத்திக் கொண்டு, வில்லன்கள் தங்களை முன்னிறுத்தி கொள்ளும் காட்சியில், தன்னடக்கத்துடன் கடைசி தம்பி என்று நம் புரட்சித்தலைவர் கூறும் காட்சி உண்மையிலேயே ஒரு நெகிழ்ச்சி ஏற்படுத்தும் காட்சியாக தென்படும்.

    என்றைக்குமே என் லட்சியம் தோற்றது கிடையாது என்று சொல்லும்பொழுதும், ஜீப்பின் வேகத்துக்கு ஈடு கொடுத்து, அந்த 57 வயதிலும் நம் எழில்வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் வேகமாக ஓடி வரும் காட்சிக்கும், விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளுக்கும், எழுந்த ரசிகர்களின் கர ஒலி அடங்க வெகு நேரமாயிற்று. தேசத்தின் வரைபடத்தை வைத்து விளக்கமளிக்கும் காட்சி மிகவும் ரசிக்கத்தக்கது.

    நாட்டுப்பற்று, மனிதாபிமானம், அறிஞர் அண்ணா அவர்கள் மீது கொண்ட அளவற்ற பற்று, கொண்ட கொள்கை, இலட்சியம் இவை அனைத்திலும், பேரறிஞர் அண்ணா அவகர்களின் அண்ணாவின் மீது ஆணை, அண்ணாவின் மீது ஆணை என்று கூறிக்கொண்டே ஆறு வில்லன்களும் அடி வாங்கிகொண்டு திரும்பும் காட்சியும், அந்த ஆறு வில்லன்களின் ரேகைகள் அடங்கிய தாள்களை, நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் கிழித்து போடும் காட்சியிலும், மனோகர் தன் தாயையும், தன பிள்ளைகளை அடித்து விரட்டும் காட்சியிலும், ரசிகர்கள உணர்ச்சியின் எல்லைக்கு சென்று கண்கள் கலங்கி விடுவர்.

    இந்த காவியத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் இனிய பாடல்களே. குறிப்பாக “ ஒன்றே குலம் என்று பாடுவோம், ஒருவனே தேவன் என்று போற்றுவோம்” என்ற பாடலை,, மக்கள் திலகம் படப்பாடல்களை பாடும் இசைக்குழுவினர், இறைவணக்கம் பாடலாக இன்றும் முதல் பாடலாக பாடுவர்.

    சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் 1௦௦ நாட்களை வெற்றிகரமாக கடந்து, இதர நகரங்கள் பலவற்றில் 5௦ நாட்களை கடந்த, 1975ம் ஆண்டின் வெற்றிச்சித்திரம் “பல்லாண்டு வாழ்க”

    மக்கள் திலகத்தின் காவியங்களில் இடம் பெற்ற காட்சிகள் ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக எழுத ஆரம்பித்தால் ஒவ்வொரு காவியத்துக்கும் ஒரு திரியின் ஒரு பாகம் அளவுக்கு எழுதிக்கொண்டே இருக்கலாம்.

    [/b]

    அருமையான விமர்சனம் மற்றும் தகவல்கள் திரு.செல்வகுமார் சார். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  9. #2366
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by jaisankar68 View Post
    சங்கே முழங்கு
    மக்கள் திலகத்தின் மகத்தான நடிப்புத் திறமையைக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த படம். ஆரம்பக் காட்சி முதலே மிகுந்த விறுவிறுப்பாகச் செல்லும் படங்களில் ஒன்று. பொம்பள சிரிச்சா போச்சு பாடல் காட்சியிலும், இரண்டு கண்கள் பேசும் மொழியில் படலிலும், குடிப்பது போலே நடிப்பார் பாடல் காட்சியிலும் அவரது நடன அசைவுகள் அமர்க்களமாக இருக்கும்.
    லட்சுமியுடனான காதல் காட்சிகளில் மிகுந்த வித்தியாசம் காட்டியிருப்பார். சண்டைக் காட்சிகள் மிகக்குறைவான படங்களுள் இதுவும் ஒன்று. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் கூர்மையான வசனங்கள் படத்திற்கு மற்றொரு பலம். தான் உயிரையே வைத்திருக்கும் தனது வளர்ப்புத் தந்தையை தான் கொன்றதாக பழிசுமத்தப்பட்டு வழக்கறிஞர் வி.கே.ராமசாமியின் சூழ்ந்சியை அறியாமல் அவர் தந்த யோசனையை ஏற்று பயந்து ஓடி ஒளியும் அப்பாவி பின்னர் அவரையே மடக்கும் அளவுக்கு ஞானம் பெற்று கோர்டில் வாதம் புரியும் காட்சிகள் அமர்க்களம். நான்குபேருக்கு நன்றி பாடல் காட்சியில் அவரது முகபாவங்கள் மிக மிக மிக இயற்கையாக இருக்கும். மேலும் ரயில் செல்வதற்கேற்ப அவரது உடலசைவுகள் அவ்வளவு இயற்கையாக இருக்கும். (பேக்புரஜக்சன் முறையில் படமாக்கப்பட்ட காட்சி இது என்பது பின்னணியை கூர்ந்து கவனித்தால் மட்டுமே புரியும் . அந்த அளவுக்கு மக்கள் திலகத்தின் உடலசைவுகள் தத்ரூபமாக இருக்கும். உடன் பயணிப்பவர் விஷயத்தில் இது கோட்டை விடப்பட்டிருக்கும்.)சிறு பாத்திரத்தில் வந்தாலும் டி.கே.பகவதி அவர்களின் நடிப்பு கச்சிதம். விகேஆரும், அசோகனும் சபாஷ் போட வைக்கின்றனர். தங்கையின் அண்ணனாகவும், மாப்பிள்ளையின் அக்காவாகவும் அவர் நடிக்கும் காட்சி அபாரம். அதிலும் வெறும் வாயிலேயே வெற்றிலை போட்டது போல நடிக்கும் காட்சி அற்புதம். கோர்டில் வாதாடும் காட்சிகள், அசோகனை ஏமாற்றி உண்மைகளை வாங்க பேசும் போதும் அவரது உரையாடல்கள் சுவையானவை . அறிவுக்கூர்மையான வசனங்கள். continuity விஷயத்தில் மிக கவனமாக இருக்கும் மக்கள் திலகம் வெகு அபூர்வமாக சில படங்களில் அதில் தவறியிருப்பார். அதில் இந்தப் படமும் ஒன்று. உதாரணமாக விமான நிலையத்தில் லட்சுமியுடனான தகராறின் போது நீல வண்ண உடையில் காட்சியளிப்பார். ஆனால் அதைத் தொடர்ந்து வரும் சண்டைக் காட்சியில் சிவப்பு உடையில் காட்சியளிப்பார்).வேலைபழு காரணமாக அவரையும் மீறிய சில அசாதாரணங்களில் இதுவும் ஒன்று. சீக்கியராக வரும் காட்சிகளில் அவரது அழகு அசத்தல். அதே போல டி.கே.பகவதி தவறவிட்ட அவரது பெட்டியை ஒப்படைக்கச் சென்ற போது லட்சுமி தன்னை அடையாளம் கண்டு கொள்வாரோ என்ற பதட்டத்தை காட்டும் காட்சியில் அவரது நடிப்பு 100சதவீதம் இயற்கை. மொத்த்த்தில் இந்தப் படத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பு மற்றொரு இமயம்.

    சங்கே முழங்கு விமர்சனம் எழுத வேண்டும் என்று என்னை திரு.எஸ்.வி. சார் கேட்டிருந்தார். ஆனால், நேரமின்மை காரணமாக எழுத முடியவில்லை. தங்களின் அற்புதமான விமர்சனத்துக்கு நன்றி திரு.ஜெய்சங்கர் சார்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  10. #2367
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கோவையில் ஒரே நாளில் தலைவரின் 3 படங்கள் வெளியீடு என்ற இனிக்கும் செய்தியையும் சென்னையில் தலைவர் படம் திரையிடப்படும் செய்தியையும் வெளியிட்டு இன்னும் தமிழ் திரையுலகம் தலைவரின் ஆளுமையில்தான் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ள திரு. திருப்பூர் ரவிச்சந்திரன், திரு. லோகநாதன் சார் ஆகியோருக்கு நன்றி. கோவையில் குடியிருந்த கோயில் வசூல் 1 லட்சத்து 42,000 என்ற தகவலை வெளியிட்டு தலைவருக்கு புகழ் சேர்த்த திரு. ரவிச்சந்திரனுக்கு சிறப்பு நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  11. Likes ainefal liked this post
  12. #2368
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    சாதித்த தலைவர்

    ‘பல்லாண்டு வாழ்க’ இந்த வார்த்தைகளைக் கேட்டாலே எவ்வளவு மகிழ்ச்சி. மங்கல நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் இந்த வார்த்தைகள் வாழ்த்து பெறுவோருக்கு மகிழ்ச்சியையும் வாழ்த்துவோருக்கு மனநிறைவையும் தருபவை. நமக்கோ இது தலைவரின் படம் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி + மனநிறைவு. தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த, சொந்த வாழ்க்கையில் இருந்ததைப் போலவே லட்சியவாதியாக தலைவர் வாழ்ந்து காட்டிய திரைப்படம். (மேலே உள்ள படத்தை பதிவிட்ட திரு.கலியபெருமாள் அவர்களுக்கு நன்றி.)

    இயக்குநர் சாந்தாராம் அவர்களின் ‘தோ ஆங்கேன் பாரா ஹாத்’ படத்தின் தமிழாக்கம். தலைவரின் ரசிகர்களான நமது விருப்பப்படி அமைய வேண்டும் என்பதற்காக தமிழாக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

    பத்திரிகையாளர் மணியன், தனது உதயம் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் தலைவருக்கு நெருக்கமாகவும் ஜோதிடராகவும் இருந்த வித்வான் லட்சுமணன் அவர்களுடன் சேர்ந்து இதயவீணை, சிரித்து வாழவேண்டும் (இந்தப் படத்தில் ஜெமினி அதிபர் வாசனின் மகனும் ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்தவருமான எஸ்.பாலசுப்பிரமணியன் ஒரு பங்குதாரராக இருந்தார். எஸ்.எஸ்.பாலன் என்ற பெயரில் இயக்கமும் அவரே) படங்களை தொடர்ந்து மூன்றாவதாக தயாரித்து வெளியிட்ட படம் பல்லாண்டு வாழ்க. படத்துக்கு இயக்கம் தலைவரின் சம்பந்தி கே.சங்கர். சென்னை (2 தியேட்டர்கள்), மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய ஊர்களிலும் இலங்கையிலும் 100 நாட்களை தாண்டிய வெற்றிக் காவியம். இதயக்கனி முழுமையாக ஓடி முடிந்த பிறகு, பல்லாண்டு வாழ்க வெளியாகியிருந்தால் வெற்றி வீச்சு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

    ‘எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.. அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே..’ என்று தலைவர் பாடிய வரிகளின்படி மனிதர்கள் எவருமே குற்றவாளிகளாக பிறப்பதில்லை. சந்தர்ப்ப, சூழ்நிலைகளால் குற்றம் செய்யும் அவர்களை தங்கள் தவறை உணருமாறு செய்து,கொஞ்சம் கொஞ்சமாக திருத்தி, அந்தப் பணியில் தானும் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து சத்திய வேள்வி நடத்தி, அவர்களை நல்ல மனிதர்களாக சமூக வாழ்க்கைக்கு மீண்டும் திரும்ப வைக்கும் லட்சியவாதியின் கதை. இந்தப் பாத்திரத்துக்கு தலைவரைத் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க முடியாது.

    * கத்தியால் குத்த வரும் திரு. மனோகரை கையை பிடித்து சுழற்றி வீசும் தலைவரின் அட்டகாச அறிமுகக் காட்சியிலேயே உற்சாக ஆரவாரத்தால் தியேட்டர் அதகளப்படும். பின்னர், (கையில் பேப்பர் வெயிட்டை ஸ்டைலாக உருட்டியபடியே)மனோகரின் குடும்பத்தாரை சந்திக்க ஏற்பாடு செய்ய அனுமதி கோரும் கடிதத்தை ஏற்கனவே எழுதி இருப்பதாக கூறிவிட்டு, அருகில் உள்ள காவலரிடம் ‘இங்கு நடந்தது (மனோகரின் செயல்) யாருக்கும் தெரிய வேண்டாம்’ என்று தலைவர் கூறுவதே அவரது உயர்ந்த பண்பையும், லட்சிய நோக்கத்தையும், மனோகருக்கு அதனால் துன்பம் நேர்ந்து விடக் கூடாது என்ற கருணை உள்ளத்தையும் விளக்கிவிடும்.

    * அடுத்து, அவர் தன் பொறுப்பில் அழைத்துச் சென்று திருத்த நினைக்கும் கைதிகளை பார்க்க சிறைக்கு செல்லும் காட்சி. சிறை வாயில் கதவில் பிரம்மாண்ட பூட்டு தொங்கும். ‘தனியொரு மனிதன் திருந்தி விட்டால் சிறைச்சாலைகள் தேவையில்லை...’ என்று நான் ஆணையிட்டால் படத்தில் தலைவர் பாடுவார். ‘சூழ்நிலையின் காரணமாக கருத்துக் குருடர்களாகி குற்றம் இழைத்து விட்ட மனிதர்களை அடைத்து வைக்க உதவுகிறாயா? உன்னை கவனித்துக் கொள்கிறேன்’ என்பதை சொல்லாமல் சொல்வது போல சிறைக்குள் நுழையும் போது அந்த கதவில் தொங்கிக் கொண்டிருக்கும் பிரம்மாண்ட பூட்டை பார்த்து ஒரு தட்டு தட்டி விட்டு செல்வார் பாருங்கள்... வார்த்தையே இல்லாமல் அந்த ஒற்றைத் தட்டலிலேயே ஓராயிரம் அர்த்தங்களை சொல்லும் தலைவரின் நடிப்பு நுட்பத்தை என்னவென்று சொல்ல? சமீபத்தில் திரு.சைலேஷ் பாசு அவர்கள் நான் ஆணையிட்டால் பட டைட்டில் கார்டை பதிவிட்டிருந்தார். அதில் தலைவரை ‘நடிகப் பேரரசர்’ என்று காட்டுவதில் என்ன மிகை இருக்க முடியும்?

    *இந்திய வரைபடத்தின் பின்னால் ஒரு மனித உருவத்தை வரைந்து அந்த படத்தை கிழித்து, அரையும் குறையுமாக வரும் பெண்களை விட்டு படத்தை சேர்க்கச் சொல்வார். வரைபடத்தை சேர்க்கத் தெரியாத பெண்கள், மனித உருவத்தை சரியாக சேர்த்து விடுவார்கள். ‘ஒரு மனிதனின் படத்தை சரியாக பொருத்தி வைத்தால் அதன் பின்னே உள்ள இந்தியாவின் வரைபடம் சரியாக இருக்கும்போது, தனி ஒரு மனிதன் திருந்தினால் இந்த நாடே ஏன் சரியாக இருக்காது?’ என்று அவர்களை தலைவர் மடக்கி புத்தி சொல்லி அனுப்பும் காட்சி....

    *கைதிகள் தப்பியோடிதை அறிந்ததும் அவர்களைத் தேடி ஓடி வருவார். அப்போது அந்த பாழடைந்த பங்களாவின் வாயிலில் இருக்கும் படிக்கட்டுகளில் கால் பதிக்காமல் தாண்டி குதித்து வருவதன் மூலம் அவசரத்தையும் பரபரப்பையும் தலைவர் வெளிப்படுத்தும் காட்சி.......

    * தப்பியோடிய கைதிகள் பங்களாவுக்கே திரும்பி விட்டார்கள் என்பதை அறிந்தவுடன் மேலதிகாரியான கோபாலகிருஷ்ணனிடன், ‘என் பரிசோதனை தோல்வி அடைந்து விட்டது’ என்று எழுதிக் கொடுத்த கடிதத்தை டேபிளில் இருந்து திரும்ப எடுத்து ‘என் லட்சியம் என்றுமே தோற்காது’ என்று கூறி கடிதத்தை அவரது கண் எதிரிலேயே கிழித்துப் போடும்போது தலைவர் முகத்தில் காட்டும் வெற்றிப் பெருமிதம்.....

    *கிளைமாக்சில் லதாவையும் இரண்டு குழந்தைகளையும் வில்லன் கோஷ்டி ஜீப்பில் கடத்திப் போகும்போது ஜீப்பை துரத்திக் கொண்டு அதன் வேகத்துக்கு ஈடு கொடுத்து தலைவர் ஓடும் வேகம்..... (படம் வெளியான தேதி 31-10-1975. அதற்கு மறுநாளில் இருந்து சரியாக 78வது நாளில் அவர் 60 வயதை எட்டிப் பிடிக்க இருந்தார் என்பதை நினைவில் கொண்டு இந்தக் காட்சியைப் பார்த்தால், பிரமிப்பில் இருந்து விடுபட சில நிமிடங்கள் ஆகும் நண்பர்களே. மற்றவர்களை விடுங்கள். நமக்கே உடல் நிலை காலையில் இருப்பது போல மாலையில் இருக்க மாட்டேன் என்கிறது. அந்த வயதில்.... அது சரி... சாதாரண மனிதர்களான நம்மோடு தலைவரை ஒப்பிட்டு பேசுவதே தீது. மனித வடிவில் வந்த அந்த தெய்வ அவதாரத்தால் முடியாதது ஏது?)

    * அந்த ஜீப் கட்டுப்பாட்டை இழந்து ஓடும்போது ஸ்டீரிங்கை என்ன திருப்பியும் பயன் இல்லாததால் தலையைத் திருப்பி பதற்றத்தையும் ஏமாற்றத்தையும் சலிப்பையும் காட்டும் முகபாவம்....

    *மனோகரின் இரண்டு குழந்தைகளுடன் அவரது தாயார் அவரைப் பார்க்க வருகையில், அந்த தாய் அன்போடு தரும் லட்டை வாங்கிச் சுவைக்கும் போது கலங்கும் கண்களுடன் தலைவர் காட்டும் நெகிழ்ச்சி....

    * இரண்டு குழந்தைகளையும் தனக்கு பின் யார் பார்த்துக் கொள்வார்கள்? என்று மனோகரிடம் அவரது தாய் வேதனைப்படும்போது, அந்தக் குழந்தைகள் இங்கேயே இருக்கட்டும் என்று சொல்லும் தலைவரைப் பார்த்து அந்தத் தாய், ‘‘ஏழைகளின் கஷ்டத்தை புரிஞ்சவங்க இந்த உலகத்துலே உன்னைப் போல யாரும் இல்லப்பா. எனக்கு மிச்சம் மீதி ஆயுசு இருந்தா அது உன்னையே சேரட்டும்’ என்று கூறும்போது, உணர்ச்சிப் பெருக்குடன் பெருமிதத்தால் விம்மும் நெஞ்சுடன், தோழர்களின் கைதட்டலால் திரையரங்கமே அதிரும் அந்தக் காட்சி......

    .................என்று நான் ரசித்த காட்சிகள் (இதெல்லாம் சாம்பிள்கள்தான்) ஏராளம். ஒவ்வொன்றையும் பற்றி விரிவாக பின்னர், நேரம் கிடைக்கும்போது (அய்யோ... தலைவரே... ஒரு நாளைக்கு 25 மணி நேரம் என்று இருக்கக் கூடாதா?) தனியே விருந்தாக பரிமாறி அனைவரும் சுவைக்கலாம். இப்போது நான் கூற விரும்புவது படத்தின் காட்சிகளோடு இணைந்த இரண்டு முக்கிய கருத்துக்களை.

    ஒன்று...

    கைதிகளை அன்பால் வசப்படுத்தி பணிய வைக்கும் தலைவரின் அன்பும், சாந்தமும் தவழும் குளோசப்பில் காட்டப்படும் அந்த கண்கள். ஏசுநாதர் வேடம் மிகச் சிறப்பாக அவருக்கு பொருந்தியதற்கு கருணை ஒளியை உமிழும் அந்த காந்தக் கண்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கல்கண்டு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த திரு. தமிழ்வாணனின் மகன் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் பேட்டியை திரு.ஜெய்சங்கர் அவர்கள் சமீபத்தில் பதிவிட்டிருந்தார். திரு.தமிழ்வாணன் அவர்களுக்கு தலைவரைப் பிடிக்காது. அவரை கடுமையாக தாக்கி எழுதியுள்ளார். இருந்தாலும் பழைய கசப்புகளை மனதில் வைத்துக் கொள்ளாமல் தனது இல்ல திருமணத்துக்கு வரவேண்டும் என்று திரு.லேனா தமிழ்வாணன் தலைவரை சந்தித்து அழைப்பு விடுத்ததை ஏற்று பகைவனுக்கு அருளும் நன்நெஞ்சுக்கு சொந்தக்காரரான தலைவர், அந்த திருமண விழாவுக்கு சென்று சிறப்பித்துள்ளதை திரு.லேனா அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

    இதை எதற்கு கூறுகிறேன் என்றால், அந்த கருணை தெய்வத்தை கடுமையாக விமர்சித்த திரு. தமிழ்வாணன் அவர்களே ஒருமுறை கூறினார்...... ‘எம்.ஜி.ஆரை பிடிக்காதவர்கள் அவர் அருகிலே செல்லாதீர்கள். பத்து அடி தொலைவிலேயே இருந்து பார்த்துவிட்டு திரும்பி விடுங்கள். அப்படி அவர் அருகில் சென்றால் உங்களையும் அவர் தனது காந்த சக்தியால் இழுத்து தன் வசமாக்கி விடுவார்’’ என்றார். அப்படிப்பட்ட வசீகர சிரிப்புக்கும் காந்த கண்களையும் கொண்டவர் நம் தலைவர். அந்தக் கண்களை எதிரிகள் சந்தித்தால் தன் காலில் விழுந்து விடுவார்கள், பின்னர், அதனால் அவர்கள் வெட்கப்படுவதோடு, மனமும் புண்படும்என்பதற்காகவே தன் கண்களை மறைத்துக் கொள்ள கறுப்புக் கண்ணாடி அணிந்தாரோ என்னவோ அந்த கருணாமூர்த்தி? இருந்தாலும் ‘மக்கள் திலகத்தை’ நினைக்கும்போது திரு.தமிழ்வாணன் அவர்களை நினைக்காமல் இருக்க முடியாது. ஏனென்றால், தனது பத்திரிகையில் ஒரு வாசகர் கேள்விக்கு பதில் அளிக்கையில் அந்தப் பட்டத்தை தலைவருக்கு வழங்கியதே அவர்தானே!

    இரண்டு.....

    பல்லாண்டு வாழ்க படத்தில் கைதிகளின் பெயர்களை கவனித்தால் ஒரு நுட்பமான உண்மையை உணரலாம். திரு.நம்பியாரின் பெயர் பைரவன், திரு.வீரப்பாவின் பெயர் டேவிட். திரு.குண்டுமணியின் பெயர் காதர். அதாவது குற்றவாளிகள் சந்தர்ப்ப வசத்தால் குற்றம் செய்கிறார்களே தவிர அவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, சாதியையோ சேர்ந்தவர்கள் அல்ல என்பதை விளக்குவதுபோல எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கும். எந்த ஒரு மதத்தை சேர்ந்தவர்களும் புண்படக் கூடாது என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய அந்த மதிநுட்பத்தின் மறுபெயர்.. மக்கள் திலகம்.

    பொதுவாகவே தலைவர் எந்த மதம், இனம், சாதியையும் புண்படுத்தாதவர் என்பதோடு, அதுபோன்ற காட்சிகளையும் தன் படங்களில் அனுமதிக்க மாட்டார். ‘நீதிக்கு தலைவணங்கு’ படத்தில் கோயில் பூசாரியாக வரும் திரு.தேங்காய் சீனிவாசன் அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடுவார். வெறும் துண்டை மட்டும் அணிந்தபடி திறந்த மார்போடுதான் இருப்பார். ஆனாலும் அவரது சாதியை குறிக்கும் எந்த அடையாளங்களும் அவரிடம் காணப்படாது. அவர் எந்த சாதி என்று காட்டமாட்டார்கள். அதுதான் சர்வ சமுதாயக் காவலரான நம் தலைவரின் தனிப் பண்பு.

    அது மட்டுமல்ல, எந்த சாதியையும் புண்படுத்தாததோடு தன் கதாபாத்திரங்கள் மூலம், தான் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவன் என்று அவர் காண்பித்துக் கொண்டதும் இல்லை. ‘நான் அந்த சாதியை சேர்ந்தவன்.... இந்த சாதியை சேர்ந்தவன்’ என்றெல்லாம் சாதிப்பற்றை வெளிப்படுத்தும் பாத்திரங்களை ஏற்க மாட்டார் என்பதோடு, அதுபோன்ற வசனங்களை பேசவும் மாட்டார். திரைப்படத்தில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் என்னதான் நெருங்கிய நண்பர்கள், வேண்டியவர்கள் என்றாலும் கூட அவர்களை, ‘‘வாய்யா.. நாயுடு’, ‘‘என்னடா.... முதலியாரே’’ என்றெல்லாம் அழைக்கும் பழக்கம் தலைவருக்கு இல்லை.

    ‘எல்லைகள் இல்லா உலகம்... என் இதயமும் அதுபோல் நிலவும்...’ என்று பாடிய நம் தலைவரின் இதய விசாலத்துக்கு சாதி, மதம்,...... தமிழன், தெலுங்கன், கன்னடியன், பஞ்சாபி என்ற பிராந்திய வாதம்,....... திராவிடன், ஆரியன், மங்கோலியன் என்ற இன பேதம்,........ மொழி, தேசம் போன்றவை தடைகளாக இருந்ததில்லை. இந்த குறுகிய வேலிகளை எல்லாம் தாண்டிய ஒட்டுமொத்த மனிதத்தின் அடையாளம் நம் தலைவர்.

    சுயலாபங்களுக்காகவோ, அரசியல் ஏற்றங்களுக்காவோ தன்னை ஒரு சாதியின் பிரதிநிதியாகவோ, ஒரு சாதியின் தலைவராகவோ பொன்மனச் செம்மல் காட்டிக் கொண்டதில்லை. அவர் குறுகிய கண்ணோட்டமும் சுருங்கிய மனப்பான்மையும் கொண்ட சாதித் தலைவரல்ல; ‘சாதித்த தலைவர்’.


    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    Last edited by KALAIVENTHAN; 31st October 2014 at 03:15 PM.

  13. Thanks Russellisf thanked for this post
    Likes Russelldvt, Russellisf, ainefal liked this post
  14. #2369
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    RAGASIYA POLICE 115

    Last edited by saileshbasu; 31st October 2014 at 04:14 PM.

  15. Likes Russelldvt liked this post
  16. #2370
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  17. Likes Russelldvt liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •