Results 1 to 7 of 7

Thread: இளையராஜா- King of Vibrating Veenai

Threaded View

  1. #1
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    இளையராஜா- King of Vibrating Veenai

    இப்பதிவில் இளையராஜாவின் சினிமா பாடல்களில் இசைக்கப்படும் வீணை நாதங்களை பார்க்கப்போகிறோம்.









    வீணை இசைக் கருவிகளின் ராணி என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.இதன் முன்னோடி யாழ் என்ற இசைக்கருவி. திருவள்ளுவர் “குழல் இனிது யாழ் இனிது” என்று ஒரு குறளில் சொல்லி இருக்கிறார். ”மாசில் வீணையும்”அப்பர் பாடி இருக்கிறார்.



    கல்வி கடவுள் சரஸ்வதியும் கையில் வீணையுடன். நாரதர் கையிலும் வீணை உண்டு.ராவணன் வீணை சாம கானப்ரியன்.அகஸ்தியரும் வீணை வாசிப்பார்.





    சில எண்ணங்கள்:



    பொது வழக்கில் கருவிகள் "வாசிக்கப்பட்டாலும்" வீணையின் நாதம் ஸ்பெஷலாக “மீட்டெடுக்கப்படுகிறது”

    இதயத்தின் அருகே வைத்து மீட்டுவதால் ஆத்மார்த்தமாகவும் ஆழமாகவும் நாதம் வருகிறதோ?
    பழைய படங்களில் பொதுவாக இது பரத நாட்டியத்திறகும், பக்திக்கும் நிறைய வாசிக்கப்பட்டிருக்கிறது.அடுத்துதான் டூயட் வருகிறது.


    இளையராஜாவிற்கு முன்பு எல்லாம் 90%நேரடியாக வாசிக்கப்பட்டிருக்கும். fusion கம்மி.

    பொது வழக்கில் பெண்ணுக்கு வீணையும் ஆணுக்கு புல்லாங்குழலும் தொடர்புப்படத்தப்படுகிறது
    இதிலும் சோகம்,மகழ்ச்சி,தியானம்,புல்லரிப்பு,கனிவு இத்யாதி உணர்ச்சிகள் மீட்டெடுக்கப்படுகிறது
    நேரடியாக,சந்தில் சிந்து,மின்னல்,நீண்ட,துளி எல்லா அளவுகளிலும் வீணை நாதம் ராஜா இசையில் கோர்க்கப்படுகிறது.

    வயலினை exploit செய்தார் போல் இதை செய்யமுடியாது என்று என் கணிப்பு.முடிந்தவரை exploit செய்திருக்கிறார்
    இளையராஜாவின் வீணை நாதம்............


    பேசுதல்/நெகிழ்தல்/உருகுதல்/சிரித்தல்/வெட்கப்படுதல்/புலம்புதல்/சிலிர்த்தல்/அழுதல்/விரகதாபம் எல்லாம் இசைக்கிறது.

    எல்லாவற்றிலும் “ஆத்மா” இருக்கிறது.








    வீணையில் வாசிக்கப்படும் கர்நாடக இசையைக் கேட்பது ஒரு தனி சுகம்.அது ஒரு கடல்.கேட்பது எனக்கு சுலபம். எழுதுவதற்கு பண்டித ஞானம் இல்லை.





    போவதற்கு முன்......

    Veenai Ennule.mp3


    துணை இருப்பாள் மீனாட்சி(1977)-சுகமோ ஆயிரம்
    Veenai Sugamoaayiram.mp3

    ஆறிலிருந்து அறுபதுவரை (1979)-கண்மணியே காதல்
    VeenaiKanmaniye.mp3

    தீபம்(1977) -அந்தப்புரத்தில் ஒரு மகாராணி
    சாமந்திப் பூக்கள் மலர்கிறது.இரு சந்தன தேர்கள் அசைகிறது வீணையின் மீட்டலில்.0.21-0.24 வீணை வயலின் நாதப் பின்னல்கள் அருமை.இதுதான் மேஸ்ட்ரோவின் கற்பனை வளம்.
    Veenai Anthapurathill.mp3

    கண்ணே கலைமானே(1988)-நீர்விழ்ச்சி தீ மூட்டுதே
    வித்தியாசமான மீட்டல்,தாளம்.அளவெடுத்து வீணையும் தாளமும் இசைக்கப்படுகிறது.
    VeenaiNeervizhchi-KanneKalai.mp3

    இசைஞானிக்குப் பிடித்த பழைய பாடல்.பாக்கியலஷ்மி(1961)
    மாலைப்பொழுதில் மயக்கத்திலே.இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

    இதில் 0.07-.10 அண்ட் 0.11-0.14 மீட்டல்களை கவனியுங்கள்.இதில் இன்ஸ்பயர் ஆகிறார் மேஸ்ட்ரோ.
    VeenaiMalaipozhuthin.mp3

    பிறகு தன் இசையில் கற்பனை கலந்து fusion ஆகி வருகிறது.
    அது பகவதிபுரம் ரயில்வேகேட்(1983)- காலை நேரக்காற்றே
    இதில் 0.02-0.04 அண்ட் 0.07-0.08 கவனியுங்கள்.மற்றொரு கருவி என்ன பெயர்? யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
    Veenai Kalainera katre.mp3



    நீங்கள் கேட்டவை(1984)-ஓ வசந்த ரோஜா
    இசைப் பூச்சரத்தில் மூன்று இடங்களில் அழகாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது.
    Veenai-O Vasantha Raja.mp3

    சிந்துபைரவி(1985)-பூமாலை வாங்கி வந்தேன்
    VeenaiPoomaalai-Sindhu.mp3

    புதிய வார்ப்புகள்(1978)-தம்தனனம் தனனம்
    வீணையும் வயலின்களும் உரையாடுகிறது. வித்தியாசமான துளிகள். வயலின் இசை உணர்ச்சிக்களுக்கு தோதாக வீணையின் நாதமும்.
    Veenai thamthananam.mp3

    கன்னிராசி(1985)-சுக ராகமே சுக போகமே
    VeenaiSugaRagame.mp3

    அலைகள் ஓய்வதில்லை(1981)-காதல் ஓவியம்
    அட்டகாசமான Fusion.இசையின் போக்கு வெஸ்டர்ன் கிளாசிகலாக போகிறது.ஆனால் இடையே நம்ம ஊர் வீணை நாதம் இணைக்கப்பட்டு மீண்டும் வெஸ்டர்ன் கிளாசிலாக போகிறது.வேறோரு உலகத்திற்கு தூக்கிச் செல்லும் இசை.பிரமிக்க வைக்கிறார் மேஸ்ட்ரோ.
    Veenai NathiyiladumKathal Oviyam.mp3

    இரண்டாவது ஆடியோ(இதில் துண்டாகிவிட்டது)
    Veenai Kathal Oviyam.mp3

    பழசிராஜா(2009)-குன்னத்தே
    நாதத்தில் எத்தனைக் கனிவு.வயலினும் கனிவுக்கு பணிகிறது.அபாரம்.
    VeenaiPazhazi-Kundrathu.mp3

    இளமைகோலம்(1980)-ஸ்ரீதேவி என் வாழ்வில்
    VeenaiSridevienvazhvil.mp3

    மீண்டும் கோகிலா(1981)-சின்னஞ்சிறு வயதில்
    0.06-0.09 மீட்டல் ஏதோ சொல்கிறது.
    VeenaiChinnachiru-Vaya.mp3

    எத்தனை கோணம் எத்தனைப் பார்வை(1983)-அலைப்பாயுதே கண்ணா
    Veenai- Alaipayuthe Kanna.mp3

    நிழல்கள்(1980)தூரத்தில் நான் கண்ட
    Veenai Dhooraathil.mp3

    வைதேகி காத்திருந்தாள்(1984)-இன்றைக்கு ஏனிந்த
    நாட்டியத்திற்கு ஏற்ப வீணை இசை. 0.19-0.31 வரும் ஒரு நாதம் (வீணை அல்ல) உருக்குகிறது.வயோலா என்று யூகம்.

    Veenai Indraikkuenintha.mp3


    ராஜபார்வை(1981)-அழகே அழகே
    VeenaiAzhake azhake.mp3

    வியட்நாம் காலனி(1994) - கைவிணையை ஏந்தும் கலை
    சிதார் மாதிரி இருக்கிறது. வீணை?
    VeenaiVietnam Colony.mp3

    மோகமுள்(1995) சொல்லாயோ வாய் திறந்து
    எனக்குப்பிடித்த ஒன்று.Full of emotions.0.18ல் சொட்டும் வீணை நாதம் stunning
    Veenai-Sollaayo-Moga.mp3

    பயணங்கள் முடிவதில்லை(1982)-தோகை இள மயில் ஆடி
    "அன்னமே இவளிடம் நடைபழகும்..இவள் நடை அசைவில் சங்கீதம் உண்டாகும்...”இசையில் காட்டுகிறார்.

    VeenaiThogaiIlamayil.mp3

    நான் பாடும் பாடல்(1984)-பாடும் வானம்பாடி
    VeenaiPaadumVanam.mp3

    உனக்காவே வாழ்கிறேன்(1986)-இளம்சோலை பூத்ததோ
    தமிழ்ப்படங்களில் காதலியை பரத நாட்டியம் ஆட விட்டு கதாநாயகன் ஜிப்பா சால்வையோடு (ரொமப் அனுபவித்து)பாடுவது ஆயிரம் காலத்துப் பயிர் ஆகிவிட்டது. மாத்துங்கப்பா..!

    VeenaiThogaiIlamayil.mp3

    பத்ரகாளி(1977) - கண்ணன் ஒரு கைக்குழந்தை
    Veenai-KannanOru.mp3

    தீர்த்தக்கரையினிலே(1987)-விழியில் ஒரு கவிதைப் படித்தேன்
    சின்னத் துளிகள் அருமை.
    Veenai- Vizhiyil Oru.mp3

    கோயில்புறா(1981) வேதம் நீ
    Veenai Vedham nee.mp3

    நாயகன்(1987)-நீ ஒரு காதல் சங்கீதம்
    Veenai Neeorukathal.mp3

    காதல் ஓவியம்(1981)நதியில் ஆடும் பூவனம்
    Veenai NathiyiladumKathal Oviyam.mp3


    எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் இசையில் “வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை கண்டு”படம்: வாழ்வு என் பக்கம்(1976).ரசிப்பது இதன் மெலடி/பாட்டின் கவித்துவம்/ஒரு ஹம்மிங்.
    Veena(MSV) Veenai Pesum.mp3


    டெயில் பீஸ்


    பைனாகுலர் வைத்துப்பார்க்கிறேன் கடந்த 12 வருடத்தில் எவ்வளவு பாட்டுக்களில்(ராஜாவையும் சேர்த்து)வீணை நாதம் வந்திருக்கிறது என்று.சினிமா கதையெல்லாம் மாறிப் போய்விட்டது.நல்லதோர் வீணை செய்தேன்.அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ..சொல்லடி சிவசக்தி?

    Thanks to RA

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •