Page 399 of 401 FirstFirst ... 299349389397398399400401 LastLast
Results 3,981 to 3,990 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #3981
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    இணையத்தில் திரட்டிய தகவல்கள்

    கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த தினம் (அக்.8, 1959) (பிறப்பு ஏப்ரல் 13 1930 ) 29 வயதில் மறைந்து விட்டார்




    இவருடைய பாடல்கள் பெரும்பாலும் கிராமியத்தை தழுவியதாக இருககும். பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். 1955-ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி, சினிமாவில் அழுத்தமான முத்திரையை பதித்தார்.

    189 திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் திடீர் மறைவுச் செய்தியை கண்ணதாசனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 'பட்டுக்கோட்டை சாய்ந்ததா? இல்லை பாட்டுக் கோட்டையே சாய்ந்ததம்மா!' என்று கண்ணதாசன் பட்டுக்கோட்டையார் மறைவு குறித்து மிக உருக்கமாக பாடினார்.

    பாண்டித் தேவன்' என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய பாடலில் சில வரியை இங்கே காணலாம்.

    'சித்தர்களும் யோகிகளும்
    சிந்தனையில் ஞானிகளும்
    புத்தரோடு ஏசுவும்
    உத்தமர் காந்தியும்
    எத்தனையோ உண்மைகளை
    எழுதி எழுதி வச்சாங்க
    என்ன பண்ணி கிழிச்சீங்க!'

    கண்திறந்தது' என்ற படத்தில் மிக புரட்சிகரமான வரிகளை பட்டுக்கோட்டையார் பாடலாக்கி இருக்கிறார்.

    'வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை
    வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்
    வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
    வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்...

    எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
    உழுது ஒளச்சு சோறு போடுறான்.
    எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
    நல்ல நாட்டைக் கூறு போடுகிறான் இவன்
    சோறு போடுறான் அவன்
    கூறு போடுறான்...'

    இதே போல் 'சங்கிலித் தேவன்' என்ற திரைப்படத்தில் தொழிலாளர் மேன்மையை சொல்லுகிற ஒரு அருமையான பாடலை பட்டுக்கோட்டையார் எழுதி இருந்தார்.


    'வீரத்தலைவன் நெப்போலியனும்
    வீடு கட்டும் தொழிலாளி!
    ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின்
    செருப்புத் தைக்கும் தொழிலாளி!
    விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு
    காரு ஓட்டும் தொழிலாளி!
    விண்ணொளிக் கதிரி விவரம் கண்ட
    சர்.சி.வி.ராமனும் தொழிலாளி
    எதற்கும் உழைப்பு தேவை!

    'திருடாதே' திரைப்படத்தில் (மக்கள் திலகத்தின் துடிப்பான நடிப்பை கொண்ட படம் ) குழந்தைக்கு புத்தி சொல்வது மாதிரி பெரியவர்களுக்கே பொதுவுடமை தத்துவத்தின் சாறு எடுத்து கவிதையாக்கி ஊட்டி இருக்கிறார். அதில் சில வரிகளை பாருங்கள்.

    'கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி
    எடுக்கிற அவசியம் இருக்காது.
    இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
    பதுக்கிற வேலையும் இருக்காது.
    ஒதுக்கிற வேலையும் இருக்காது.
    உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
    கெடுக்கிற நோக்கம்
    வளராது மனம்
    கீழும் மேலும் புரளாது
    gkrishna

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3982
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    வாசு சார்

    எல்லோருக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டிய நேரம் இது.

    மனதை மயக்கும் மதுர கானம் பாகம் இரண்டு நிறைய பாடல்களுடன்,

    எஸ்வி சார் அவர்களின் ஆவணங்கள்,

    மது சார் அவர்களின் கண்டுபிடித்து கொடுத்த பாடல்களின் காணொளி,

    ராஜேஷ் சார் அவர்களின் பன்மொழி பாடல்கள்,

    கோபு சார் அவர்களின் நன்றி மற்றும் ஊக்க பதிவுகள்,

    சின்ன கண்ணன் சார் அவர்களின் கவிதை வரிகள் உடன் கூடிய பல பாடல்கள்,

    வெங்கிராம் சார் அவர்களின் பாடல் பதிவுகள்,

    குருஜி ராகவேந்தர் சார் அவர்களின் பொங்கும் பூம்புனல்,

    கார்த்திக் சார் அவர்களின் ரசனையுடன் கூடிய பாடல் வெளியீடுகள்,

    புதிதாக வந்து நிறைய பழைய பாடல்கள் தகவல்களை தந்த பேராசிரியர் ராஜ் ராஜ் சார் அவர்கள்,

    விமர்சனத்துடன் சிலாகிக்க கூடிய திரு கோபால் அவர்களின் பதிவுகள்,

    சிதூர் வாசு சார் அவர்களின் மெலடி கலந்த ஹிந்தி பாடல்கள்,

    முரளி சார் அவர்களின் முக்கியமான பாடல் பதிவுகள்,

    எஸ்எஸ்எஸ் அவர்களின் பதிவுகள் ,

    ரவி கிரண் சார் அவர்களின் பதிவுகள்,

    யுகேஷ் பாபு அவர்களின் பதிவுகள் ,

    திகம்பர சாமியார் என்பது தோற்றம் ,நவராத்திரி என்பது பாத்திரங்கள் என்று விளங்க வைத்த நண்பர் சாரதி அவர்களக்கும்

    (வேறு யாரவது விட்டு போய் இருந்தால் வாசு சார் அவர்கள் நினைவு படுத்து வேண்டுகிறேன் )

    மற்றும் பல சினிமினி தகவல்கள் கலந்து நிறைவடையும் நேரம் இது


    வாய்ப்பு தந்த வாசு சார் அவர்களுக்கும் ஓத்துழைப்பு நல்கிய அனைத்து நெஞ்சகளுக்கும் மனமார்ந்த நன்றி

    மூன்றாவது பாகத்தை தொடங்க இருக்கும் திரு ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்

    என்றும் நட்புடன்

    கிருஷ்ணா
    கூட்டத்தோடு கூட்டமாக போர் புரிந்த அர்த்த ரதனா நான்? வாட்பிடிக்க (பேனா) தெரியாதவர்களோடு கூட்டத்தோடு என்னை ஒப்பிட்ட கிழட்டு சிங்கமே?இனி நீ இருக்கும் வரை நான் போருக்கு வருவதில்லை.:-d:-d:-d
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #3983
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    கோபால் சும்மா சொல்ல கூடாது நீங்கள் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல . அங்கேயுமல்ல .. இனி எங்கேயும் இல்ல நிம்மதியாக இருக்கவும் ..

  6. #3984
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ஆடலுடன் பாடலைக் கேட்டு..



    தமிழ்த்திரை வரலாற்றில் பஞ்சாபி வகைப் பாடல்கள் இடம்பெற்ற அன்றும் இன்றும் என்றும் இந்தப் பாடல் இசையில் ஒரு குதூகலம்! திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் இப்பாடலுக்கு நிச்சயம் இடம் உண்டு! ஆடல் கலையை பயின்று அறிந்து வைத்திருந்த விஜயலட்சுமி அவர்களுடன் எம்.ஜி.ஆர் பிரத்யேகமாக பயிற்சி எடுத்து இந்தக் காட்சியில் ஆடிய நடனம் அந்நாளில் பரபரப்பாக பேசப்பட்டது

    கவிஞர் ஆலங்குடி சோமு எழுதிய உச்சஸ்தாயியில் டி.எம்.செளந்திரராஜனும் பி.சுசீலாவும் இணைந்து பாடிய பாடல் ! இதில் ஆடலும் உண்டு! பாடலும் உண்டு! மெல்லிசை மன்னர் இசையில் புதுமையும் உள்ள முத்திரைப் பாடல்!

    ஆடலுடன் பாடலைக் கேட்டு..
    ரசிப்பதிலேதான்சுகம்சுகம்சுகம்
    ஆசைதரும்பார்வையில்எல்லாம்
    ஆயிரம்எண்ணம்வரும்வரும்வரும்

    பின்னாட்களில் வெளிவந்த விக்ரமனின் புது வசந்தம் திரை படத்தில் இந்த பாடலுக்கு இரவு நேரத்தில் நிலவு வெளிச்சத்தில் லுங்கி கட்டி கொண்டு நடிகர் ஆனந்த பாபு (நடிகர் நாகேஷ் புதல்வர் ) ஆடும் நடனமும் நளினமாக இருக்கும்



    gkrishna

  7. #3985
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    இதே போன்று நடிகர் திலகத்துடன் ஹலம் ஆடும் பஞ்சாபி பாடல்
    மன்னவன் வந்தானடி திரை படத்தில் நம்பியார் வீட்டு வாசலில் ஆடும் பஞ்சாபி நடனமும் அருமையாக இருக்கும்

    'ராஜஸ்தானில் யாரோ ஒருவர் ராஜாவாக பொறந்திருக்கனாம் ரா நைனா '

    gkrishna

  8. Likes Russellmai liked this post
  9. #3986
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மதுர கானம் திரியில் ஒரு கற்பனையான கிசுகிசு

    பிரபல அறிவாளி ஒருவர் தன்னை யாரும் மதிக்கவில்லை என்று சபையை சாபித்து விட்டு அவசரமாக வெளியேறிய நேரத்தில் எதிரே வந்த ஒரு சிங்கத்தை முறைத்து பார்த்தாராம் . சிங்கம்
    அவரை பார்த்து ''அண்ணே என்ன கோபமாக ஓடுகிறீர்கள் என்று கேட்டதற்கு அறிவாளி
    போதுமடா சாமி ..இனி இருக்கிற கொஞ்ச நாள் ''அவரின் '' புகழ் பாடி விட்டு செல்கிறேன் என்று
    கூறினாராம் .
    இப்போது மில்லியன் டாலர் கேள்வி

    யார் ''அவர்'?

    வேலா காப்பாற்று .

  10. #3987
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    கூட்டத்தோடு கூட்டமாக போர் புரிந்த அர்த்த ரதனா நான்? வாட்பிடிக்க (பேனா) தெரியாதவர்களோடு கூட்டத்தோடு என்னை ஒப்பிட்ட கிழட்டு சிங்கமே?இனி நீ இருக்கும் வரை நான் போருக்கு வருவதில்லை.:-d:-d:-d
    நீங்கள் என்ன கிழட்டு புளியா ? சாதாரண புலி அல்ல சாம்பார் புளி (கொட்டை எடுத்ததா? எடுகாததா ? )



    Last edited by gkrishna; 8th October 2014 at 03:24 PM.
    gkrishna

  11. #3988
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    இன்றைய ஸ்பெஷல் (88)

    மாலிள நேரம் மாநதியோரம்
    (மதுஜி! இந்த வார்த்தை சரியா? மாலிள நேரம் அதாவது மாலை இள நேரம் என்பதன் சுருக்கமா! ப்ளீஸ்.விளக்கவும் அல்லது சரி செய்யவும் .)
    கனவே கண்டேனே
    அடடா.. கொஞ்சம் தாமதமாக வந்திருந்தா ரெண்டிலிருந்து மூன்றுக்கு போயிருக்கும் போலிருக்குதே !!

    வாசு-ஜி.. ஏற்கனவே வாத்தியாரையாவும் சொல்லி இருப்பதைக் கண்டேன்.. அது "மாலை நன்னேரம் மா நதியோரம்" என்ற வார்த்தைகள்தான்.

    மேலும் "புதுமலர் விழியே மதுநிற மொழியே" என்பதும் "மது நிகர் மொழியே" என்று இருக்க வேண்டும். ( என்ன இருந்தாலும் மதுன்னு இருக்குதில்லே )

    அருமையாக இரண்டாம் பாகத்தைக் கொண்டு சென்று முழுமை பெற வைத்த கிருஷ்ணா-ஜிக்கும் அடுத்த பாகத்தை ஆரம்பிக்கப் போகும் ராஜேஷுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும், நன்றிகளும்...

    இது போல மதுரகானங்கள் திரி இன்னும் பல பாகங்கள் வெற்றியுடன் முன்னேற இறைவனை வேண்டுவோம்.

    இத்தனை பதிவுகளுக்கு ஒரு திரி போதாதுங்கோ...

    படம் : உண்மையே உன் விலை என்ன
    எம்.எஸ்.விஸ்வநாதன்
    வி.கே.ராமசாமி

    இத்தனை மாந்தருக்கு ஒரு கோயில் போதாது


  12. Likes Russellmai, chinnakkannan liked this post
  13. #3989
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சக்ஸஸ்ஃபுல்லாக திரியைக் கொண்டு சென்று முடித்த கிருஷ்ணா ஜிக்கு ஒரு பெரிய நன்றியுடன்கூடிய ஓ.

    .மதுண்ணா ராஜ்ராஜ் சார் எஸ்.வாசுதேவன் ஆகியோரின் அபூர்வ வீடியோ பாடல்களுக்கும் ராகவேந்திரர் சாரின் அபூர்வ பாடல்களுக்கும் (இந்த பாகத்தில் ஓசைப்படாமல் சிக்ஸர் அடித்து என் மனதை கொள்ளை கொண்டது ராகவேந்திரா சார் தான்! .. வைஷாலி பாடல் வீடியோ ).மதுண்ணா டினா முனிம் பாட்டு..ராஜ்ராஜ் சார் கேட்ட கொஞ்சல் அடுத்த பாகத்தில் எழுதணும்..

    . அஸ் யூஸ்வல் இன்”றைய ஸ்பெஷலின் அசுர உழைப்பு ( மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு பாடல் ஸ்டில் படக் கதை பாட்டு அப்புறம் பாட்டு வீடியோ..இவ்வளவு தானே எனத் தான் நினைக்கத் தோன்றும்.. சுவாரஸ்யம் குறையாமல் எழுதுவது என்பது ஒரு கலை..அதில் நன்கு தேர்ந்தவர் வாசு சார் )- முக்கியமாக பாடல் செலக்ட் செய்வது –என எல்லாவற்றையுமே செம்மையாகச் செய்த வாசு சாருக்கு ஒரு பெரிய ஓ ( நிறைய பாடல்கள் நான் கேட்காதது) (மிஸ் நமீதான்னுல்லாம் சொல்ல மாட்டேனாக்கும்.. இப்போ மிஸ் ப்ரியா ஆனந்த் அல்லது மோனல் கஜ்ஜார்!)

    ராஜேஷின் சுசீலாம்மா பாடல்கள் கன்னட மலையாளப் பாடல்கள் (அது என்ன கே.ஆர்.விஜயா பாட்டு ராஜேஷ்) - கலக்கல்.. அவருக்கும் ஒரு நன்றி.. ராகத் தொடரைத் தொடரப் போகும் கோபால் சாருக்கு வாழ்த்துக்களும் நன்றியும்… எஸ் எஸ் எஸ் தீராத சந்தேகத்தைத் தீர்த்து வைத்தவர்..அவருக்கும் ஒரு ஓ..+ தாங்க்ஸ். வெங்க்கிராம் – இரு பறவைகள் பாடலுக்கு நல்ல ரைட் அப் – நன்றி..

    அப்ப மூணாம் பாகத்துல பார்த்த சாரதி சாருடைய கான் ட்ரிப்யூஷன் நிறையப் பார்க்கலாம்னு பட்சி பட்சி சொல்லுது.
    .

  14. #3990
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    மிக்க நன்றி மது சார் மற்றும் சி கே சார்
    உங்கள் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி
    பாகம் மூன்றிலும் உங்கள் முத்தான மற்றும் சத்தான பதிவுகளை நாடும்

    என்றும் நட்புடன்

    கிருஷ்ணா
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •