Page 391 of 401 FirstFirst ... 291341381389390391392393 ... LastLast
Results 3,901 to 3,910 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #3901
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நன்றி மது சார்
    டிரேட் மார்க் ரகசியத்தை வெளியிட்டதற்கு நன்றி
    gkrishna

  2. Likes madhu liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #3902
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    மக்கள் திலகமும்,கலைச்செல்வியும் இணைந்து நடித்த படம் என் அண்ணன் . இதன் இறுதி சண்டை காட்சி மக்கள் திலகமும் நெல்லை அருகே உள்ள சிமெண்ட் தொழில் சாலை ஒன்றில் நடந்தது. அந்த வகையில் மறக்கமுடியாத படம் .

    டி எம் சௌந்தர் ராஜனும் ,எஸ்.ஜானகியும் இணைந்து பாடும் பாடல்.

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடிக்கும் திரைப்படத்தில் இதுபோன்ற கனவுக்காட்சிகளும் பாடல்களும் மிகப் பிரபலமான காலக்கட்டத்தில் அவர்தம் ரசிகர்களுக்கு ஒவ்வொரு பாடலும் தேனில் நனைந்த பலா சுளை தான். கண்ணதாசன் வார்த்தைகள் வழங்க.. திரை இசை திலகம் கே.வி.மகாதேவன் இசையில் முகிழ்த்து வரும் பாடலிது!

    இலை மறை காய் விஷயங்களை நயமாய் எடுத்துரைக்கும் கவிஞரின் சாதுரியம் சபாஷ் போட வைக்கிறது! விரசமில்லாமல் நடக்கும் காதல் விருந்தை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாமே!

    கண்ணனின் நீலம் கடல் நீலம் என்று கார்மேகவண்ணனைப் பாடிய கண்ணதாசன்.. காதலியின் கண்களிலும் நீலத்தைக் கண்டுபிடித்ததை அப்பட்டமாகச் சொல்லும் அட்டகாசமான பாடல்!

    பாடல் முழுவதும் பின்னணியில் நீல நிறத்தில் பதிவு ஆகி இருக்கும்

    வானும் கடலும் நீல நிறம் என்பதற்கு காதலன் சொல்லும் காரணம் காதலியின் கண் நீலம் என்பதால் .
    தாமரையின் சிவப்பு இதழ்கள் காதலியின் இதழ்கள்

    காதலியின் இதழ்கள் சிவந்ததற்கு யார் காரணம் ?

    வேல்களின் அழகுக்கு காரணம் காதலியின் விழி கொடுத்த அழகு
    காதலியின் கருங்கூந்தலின் விளையாட்டு தான் முகில்
    காதலியின் தளிர் மேனியே காதலனின் கவிதை விளையாட்டு

    கோயிலின் சிலையையும் ,நதியின் வளைவுகளையும் காதலியின் அழகுக்கும் நடிக்கும் சொல்லும் கவிஞரின் கற்பனை .இன்னும் வேண்டுமோ விளக்கம் .பாடலுக்கு செல்வோமே அனுபவிக்க

    நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
    காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
    வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
    காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்

    தாமரை பூவிலே உன் இதழ்கள் தந்ததென்ன சிவப்போ
    வேல்களின் அழகையே என் விழிகள் தந்ததாய் நினைப்போ
    அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ
    உங்கள் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ
    (நீல நிறம் )

    இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர்
    அழகோ இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ
    அந்த நதி என்ன உனை கேட்டு நடை போட்டதோ
    இன்று அதை பார்த்து உன் நெஞ்சம் இசை போட்டதோ
    (நீல நிறம் )

    கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ
    கோபுரக் கலசமே என் உருவில் வந்ததை நினைப்போ
    இது தடை இன்றி விளையாடும் உறவல்லவா
    அதில் தமிழ் கூறும் உவமைகள் சுவையல்லவா
    (நீல நிறம் )

    gkrishna

  5. Likes chinnakkannan liked this post
  6. #3903
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    gkrishna

  7. Likes Russellmai liked this post
  8. #3904
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    gkrishna

  9. Likes Russellmai liked this post
  10. #3905
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    gkrishna

  11. Likes Russellmai liked this post
  12. #3906
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    gkrishna

  13. Likes Russellmai liked this post
  14. #3907
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்

    என் அண்ணன் படத்தில் இடம் பெற்ற நீல நிறம் ...பாடலை பற்றிய உங்களது கருத்தும் , ரசனையும் பாராட்டுக்குரியது.

    மக்கள் திலகம் பாடிய பாடல் ''கடவுள் ஏன் கல்லானான் '' எந்த காலத்திற்கும் பொருத்தமான பாடல் .

  15. #3908
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வெங்கிராம் அய்யா அவர்கள் 'கீற்றுக் கொட்டகை' திரியில் பதித்த பதிவும், அதற்கு என் பதிலும்.

    Quote Originally Posted by venkkiram View Post
    நல்ல நோக்கம்தான் திரு ராகவேந்தர்.. வாழ்த்துக்கள். ஆனால் போகப் போக இதுவும் சிவாஜியின் புகழ் பாடும், சிலாகிக்கும் இடமாக மாறிவிடக் கூடும் என்றே கணிக்கிறேன். 'மனதை கவரும் மதுர கானங்கள்' என்ற திரியிலேயே பாட்டைத் தவிர மற்றதையும் அலசத் தொடங்கிவிட்டோம். சிவாஜிக்கென்று பல்வேறு திரிகள் இருந்தாலும் அவரது சமீபத்திய பிறந்த நாள் தின வாழ்த்துக்களால் 'மனதை கவரும் மதுர கானங்கள்' திரிப் பக்கங்கள் பல நிரம்பி வழிந்தது. எனிவே.. கீற்றுக் கொட்டகை திரியும் எந்தவழியில் பயணிக்கப் போகிறது என கொட்டகையின் வெளியெ நின்றுகொண்டே கவனிக்கிறேன். வாழ்த்துக்கள்!
    வெங்கிராம் அய்யா!

    என்ன இது? இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன். என்ன இது? என்ன பதிவு இது?

    இதுவரை மிக மிக உங்கள் விஷயத்தில் பொறுமை காத்தேன். கிட்டத்தட்ட ஓராண்டுகளுக்கு மேலாக நாகரீகம் கருதி. நீங்கள் ஹப்பில் எனக்கு சீனியர் என்ற மரியாதையில் மிக மிக அமைதியாய் இருந்தேன். நீங்கள் குட்டக் குட்டக் குனிகிறான் வாசு என்று என் மீது மீண்டும் தப்புக் கணக்குப் போட்டு மேலும் குட்ட நினைத்து மேற்கண்ட பதிவை அளித்துள்ளீர்கள்.

    குட்டு வாங்கிக் குனிந்தவன் நிமிர்ந்தால் என்ன ஆகும் என்று அகிலம் போற்றும் 'அறிவு ஜீவி'யான உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

    உங்களுக்கு ஒரு கதை தெரிந்திருக்குமே! பாம்பு ஒன்று ஆண்டவனின் கட்டளையை ஏற்று தன் சுபாவத்தைக் காட்டாமல் ஒதுங்கியிருந்ததாம். அதுவரை அந்தப் பாம்புக்கு பயந்த மக்கள் இனி பாம்பு நம்மை ஒன்றும் செய்யாது என்று அடித்து துன்புறுத்த ஆரம்பித்தார்களாம். பரிதாபமாக அந்த பாம்பு தன் நிலையை ஆண்டவனிடம் முறையிட்டதாம். அதற்கு இறைவன் 'அட பாம்பே! உன்னை கடிக்க வேண்டாமென்று தான் சொன்னேனே தவிர சீற வேண்டாம் என்று சொல்லவில்லையே"' என்றாராம்.

    அது போல எல்லாவற்றுக்கும் பேசாமடந்தையாகி விட்டால் இப்படித்தான் செய்வீர்கள். திரும்ப குணத்தைக் காட்டினால்தான் சும்மா இருப்பீர்கள் போல் இருக்கிறது.

    நீங்கள் நடிகர் திலகம் திரியில் என்னை மறைமுகமாக மோசமாக தாக்கி எழுதிய பதிவுகள் கண்டும் பேசாமல் விலகி விட்டேன். திரியை ஆக்கிரமிப்பு செய்கிறேன் என்று நாக்கூசாமல் எழுதினீர்கள். பொறுத்துக் கொண்டேன். கடினப் பட்டு பதிவுகள் போடுகிறேன் என்று இங்கு பதிவுகள் வருகின்றன என்று கேலி பேசினீர்கள். அதையும் பொறுத்துக் கொண்டேன். அதுவுமல்லாமல் நான் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் உங்களை மதுர கானம் திரிக்கு வரவேற்றும் இருக்கிறேன். உங்களுடைய சில பதிவுகளை ரசித்து பாராட்டியும் இருக்கிறேன்.

    ஒரு பதிவை முழுமையாக, நேர்மையாக, ஆத்மார்த்தமாக அளிக்க என்னென்ன சிரமங்கள் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் நீங்கள் இரட்டை வரி வம்பு வள்ளுவர் ஆயிற்றே. உங்களுக்கு அந்த அருமை பெருமையெல்லாம் எங்கே தெரியப் போகிறது? ஒருவருடைய உழைப்பை கேலி பேசி அதில் மகிழ்ந்து அற்ப சுகம் காணும் உங்களுக்கு நீதி நியாயமெல்லாம் எங்கே தெரியப் போகிறது? புரியப் போகிறது? அடுத்தவன் உழைப்பை கேலி பேசினவர் எவருமே அதன் பலனை அனுபவிக்காமல் போனதில்லை.

    ஒரு படத்தை எடுத்து அதை பலதடவை பார்த்து அதன் கதை எழுதி அந்தப் படத்தின் காட்சிகள் வசனங்கள் பாடல்கள் எழுதி அதை முடிந்தவரை தவறில்லாமல் டைப் செய்து தவம் போலத் தர முயன்று பாருங்கள். குறைந்தது மூன்று நாட்களாவது ஆகும். அப்போது அந்த வலி தெரியும் உங்களுக்கு. இதில் நக்கல், நையாண்டி, கேலிப் பேச்சு வேறே. உங்களுக்கே அருவருப்பாய் இல்லை? உங்கள் மனசாட்சி உங்களைக் குத்த வில்லை?

    உங்களுக்கு என்ன...எவனும் ஒழுங்காக எழுதிவிடக் கூடாது.. யாரும் வளர்ந்து விடக்கூடாது... எந்தத் திரியும் புகழ் பெற்றுவிடக் கூடாது. உடனே எங்கிருந்தாலும் ஒரு 3 வரியைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்து விட வேண்டியது. அதைக் கெடுக்க வேண்டியது. இது ஒன்றுதானே தங்களுக்குக் கைவந்த கலை. உழைப்பை மதிக்காத உங்களையெல்லாம் என்ன சொல்வது? அட் லீஸ்ட் மதிக்க வேண்டாம். அதை மாசு படுத்தாமல் இருந்தால் போதாதா?

    பெரிய நக்கீரன் என்று உங்களுக்கு நினைப்போ?

    இப்போது மீண்டும் அதே மாதிரி மிக மோசமாக hurt செய்யும் ஒரு பதிவை அளித்துள்ளீர்கள்.

    நீங்கள். ரொம்ப ஜென்டிலாக பதிவுகள் இடுவது போல் இரண்டு மூன்று வரிகளில் அடுத்தவர்களை ஆயுசு முழுக்க நினைத்து வருத்தப் படுமளவிற்கு புண்படுத்தி வருகிறீர்கள். (இதற்கு கோபால் எவ்வளவோ தேவலை. மனதில் உள்ளதை ஒளிவு மறைவு இல்லாமல் நேரிடையாகச் சொல்லிவிடுவார்). அதனுடைய வலி பாதிக்கப் பட்டவர்களுக்குத்தான் தெரியும்.

    இப்போது பகிரங்கமாகவே விஷயத்திற்கு வருகிறேன்.

    நீங்கள் உங்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்? திரியில் ஏன் இப்படி வம்பளக்கத் திரிகிறீர்கள்?

    உங்களை யாரும் தட்டிக் கேட்கவில்லை என்ற தைரியமா? இல்லை எது போட்டாலும் பேசாமல் வாய்மூடி மௌனியாய் இருந்து விடுகிறான் வாசு என்று இளக்காரமா? கிள்ளுக் கீரையாய் நினைத்து விட்டீர்களா?

    நடிகர் திலகமே தெய்வம் என்று நினைத்து நடிகர் திலகம் திரியில் என் ஆத்மார்த்தமான பதிவுகளை நாள் அளித்து வந்துள்ளேன். கால, நேரம் எதுவும் பாராமல் நடிகர் திலகம் புகழ் ஒன்றுதான் முக்கியம் என்று என் மனசாட்சிக்குக் கொஞ்சமும் விரோதம் இல்லாமல் அங்கு என் இதய தெய்வத்திற்கு உழைத்து வந்தேன். அது எல்லோருக்கும் ஏன் உங்கள் மனசாட்சிக்கும் தெரியும்.

    ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்?

    அது பொறுக்கமாட்டாமல் மானசீகமாக நான் போட்ட பதிவுகளை, அதற்கு நானுழைத்த உழைப்பைக் கேவலப்படுத்தி இப்போது போலவே அப்போதும் ஒரு பதிவை இட்டீர்கள். இப்போதுதான் காரணம் அதற்குப் புரிகிறது. நடிகர் திலகத்தின் மீது தங்களுக்கு இருக்கும் வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும்.

    இப்போது பகிரங்கமாகச் சொல்கிறேன். நடிகர் திலகம் திரியில் நான் பதிவிடாமல் இதுவரை விலகி நிற்பதற்கு வெங்கிராம் என்ற நீங்கள்தான் முழுக் காரணம். இதை நான் முரளி சாரிடமும் சொல்லி இருக்கிறேன். கோபால் சார், மற்ற நண்பர்களிடமும் சொல்லி இருக்கிறேன்.

    இப்போது மதுர கானங்கள் திரியில் வந்து உங்கள் வேலையைக் காட்ட வந்திருக்கிறீர்கள்.

    மதுர கானங்கள் திரியில் நடிகர் திலகம் பிறந்த நாள் அன்று நடிகர் திலகத்தைப் பற்றிய அபூர்வ செய்திகள், இதுவரை வெளியிடப்படாத படங்கள் வெளியிட்டேன். நீங்கள் ஒரு உண்மையான ரசிகராய் இருந்தால் சிவாஜி ரசிகராய் இல்லை) இல்லை ஒரு சாதாரண ஆறறிவு கொண்ட மனிதனாய் இருந்தால்கூட அந்த உலகப் புகழ் பெற்ற நடிகரின் அரிய புகைப்படங்களைப் பார்த்து பெருமிதம் கொண்டிருந்து இருப்பீர்கள்.

    தமிழகத்தின் பெருமையை தன் நடிப்பால் உலகமறியச் செய்த முதல் உலக மகா உன்னத நடிகன். அவர் பெருமையை அவர் பிறந்த நாள் அன்று நான் பதிவிட்டால் உங்கள் வயிறும் உள்ளமும் எரிகின்றது. கேட்டால் மதுர கானங்களுக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று சால்சாப்பு வேறு. என்னே உங்கள் ரசனை! என்னே உங்கள் தமிழ்ப் பண்பு!

    எல்லாமே தலைப்பிட்டபடிதான் நடக்கிறதா? பல்வேறு கொள்கைகளைக் கொண்ட ஒன்றுக்கொன்று முரண்பட்ட வெவ்வேறு தொலைகாட்சி சானல்கள் கூட அக்டோபர் 1 நடிகர் திலகம் பிறந்தநாள் அன்று அந்த மாபெரும் நடிகரை போட்டி போட்டுக் கொண்டு நினைவு கூர்கின்றன. அவர் நடித்த படங்களையும் அவர் பாடல்களையும் போட்டு அவர் புகழ் பாடுகின்றன. பத்திரிகை உலகம் ஒட்டு மொத்தமும் அவர் பிறந்த நாளை நினைவு படுத்தி மகிழ்கின்றன. ஒரு உன்னத தமிழ் நடிகனுக்கு அனைவரும் அளிக்கும் அன்பு அங்கீகாரம் அது. சினிமா ஸ்பெஷல் என்று போட்டது வரும் விகடனில் கூட சினிமாவைத் தவிர வேறு விஷயங்களும் வருவதுண்டே!

    அது போல மதுர கானங்கள் திரியில் அன்று ஸ்பெஷலாக நடிகர் திலகத்தின் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு பதிவுகள் அளிக்கப்பட்டது. நான்தான் முழுக்க முழுக்க சில பக்கங்கள் பதிவிட்டேன். மேற்சொன்ன ஊடகங்களே நடிகர் திலகத்தின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் போது மதுர கானங்கள் திரியில் அதுவும் நடிகர் திலகத்தின் பக்தனான நான் எப்படிக் கொண்டாட வேண்டும்? என்னை விடுங்கள். ஒரு ரசிகனாக, ஒரு தமிழனாக கொண்டாடினேன் என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். அதில் என்ன தப்பு? அதில் என்ன உங்களுக்கு வயிற்றெரிச்சல்...பொறாமை?.

    கிருஷ்ணா சார் சொன்னது போல இன்றைய ஸ்பெஷல் என்ற தொடரில் இதுவரை 3 நடிகர் திலகத்தின் பாடல்களை மட்டுமே அலசியுள்ளேன். ஏன் நூறு பாடலுமே நடிகர் திலகத்தின் பாடல்களாக நான் எடுத்து அலசக் கூடாதா? அப்படியே போட்டாலும் அதை ரசிக்கத்தான் இங்கு ஆட்கள் இருக்கிறார்களே ஒழிய உங்களைப் போல் கெடுக்கும் கோணல் புத்திக்கார்கள் யாரும் இல்லை. இதிலிருந்தே தெரியவில்லை. ஒரு உலகப் புகழ் பெற்ற நடிகனைப் பற்றிப் பதிவு போட்டால் உங்களுக்குப் பொறுக்கவில்லை. உங்கள் நெஞ்சு கொதிக்கிறது. வெட்கம் சார். தமிழன் என்று சொல்லவே வேதனையாய் இருக்கிறது. அது கூடப் பரவாயில்லை. அதைப் பற்றி மதுரகானங்கள் திரியில் கூட உங்களால் பதிய முடியவில்லை. 'கீற்றுக் கொட்டகையில்' போய் கோழையாய் பதிகிறீர்கள். ஏன்? எனக்கு நேரிடையாக எழுதுவதுதானே? ராமராஜனையும, ரேகாவையும் நெக்குருக நீங்கள் நெஞ்சில் வைத்துப் போற்றும்போது (உங்கள் அறிவார்ந்த ரசனைக்கு என் தலை சாய்த்த வணங்க்கங்கள்) கலைக்கடவுள் நடிகர் திலகத்தை நாங்கள் எப்படிப் போற்ற வேண்டும் என்று நீங்களே கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இதுகூடவா அபார மேதையான உங்களுக்குத் தெரியாது?

    மதுர கானங்கள் திரியில் ஆயிரக்கணக்கில் பாடல்கள் அனைவராலும் ஒற்றுமையோடு அற்புதமாக அலசப்பட்டுள்ளன. அதெல்லாம் உங்கள் கண்களுக்குப் புலப்படவில்லையா? உங்களுக்கு என்ன கண் அவுட்டா? த்சொ.. த்சொ...ஒவ்வொருவரும் தங்கள் உயிரைக் கொடுத்து இங்கு உழைத்து இந்தத் திரியை உயரத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். மது அண்ணா, ராஜேஷ், சின்னக் கண்ணன் சார், கிருஷ்ணா சார், ராகவேந்திரன் சார், கார்த்திக் சார், கோபால் சார், முரளி சார் என்று சகோதர உணர்வோடு சண்டை சச்சரவுகள் எதுவும் இல்லாமல் ஜாலியாக சந்தோஷமாக இங்கு பதிவிட்டு வருகிறார்கள். எண்பது சதவீதம் பாடல்கள் என்றால் மற்ற சினிமா விஷயங்கள் மீதி. இதில் என்ன தவறு? இங்கு இருக்கும் அனைத்து சீனியர்களுக்கும் தெரியும் அவர்களுக்கு நான் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் தருகிறேன் என்று.

    இப்படி யாராவது சந்தோஷமாக இருந்தாலோ, திரிகள் உழைப்பால் வளர்ந்தாலோ உங்களுக்குப் பிடிக்குமா?

    நீங்கள் விமர்சனம் செய்யுங்கள். இந்தப் பதிவு சரியில்லை இது வேறு மாதிரி இருக்கலாம் என்று. அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்பது கூட தெரியாத மூடன் அல்ல நான். ஆனால் உங்களைப் போல குதர்க்க புத்தி, நொட்டை புத்தி எல்லாம் எங்களுக்குத் தெரியாது.

    இனியாவது பதிவாளர்களை புண்படுத்தாத புத்தியை அந்த ஆண்டவன் உங்களுக்கு அருளட்டும்.

    மேற்கொண்டு நீங்கள் இப்படி மறைமுகமாக இப்படியெல்லாம் வேதனைப்படுத்தும் பதிவுகள் இட்டால் உங்கள் ரேஞ்சைவிட கீழே இறங்க நானும் தயார். அப்படியும் தரம் தாழ்ந்து என்னால் எழுத முடியும். ஆனால் அதனை நான் விரும்பவில்லை. ஆனால் நடிகர் திலகம் திரியிலிருந்து விலகி அமைதியாய் இருந்தது போல் இருந்து விடுவேன் என்று கனவு மட்டும் காணாதீர்கள். இப்போதும் உங்கள் மேல் கொஞ்ச நஞ்ச மதிப்பும், மரியாதையும் நெஞ்சின் ஒரு ஓரத்தில் வைத்துள்ளேன். தயவு செய்து அதையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

    அதிக கோபத்துடனும், அதைவிட அதிக வருத்தத்துடனும்

    நெய்வேலி வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 7th October 2014 at 07:55 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes kalnayak, JamesFague, Russellmai liked this post
  17. #3909
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post

    வாசு ஜி,
    பல திரிகளில் சிலருக்கு இதே வேலை .. அவர்கள் ஒரு திரியை தொடங்கி நடத்தவேண்டியது தானே.. கிடைத்த இடத்தில் எல்லாம் ராஜா புகழையும் அவரது விருப்பத்திற்குள்ளானவர்களின் புகழை அவரும் பாடிக்கொண்டுதான் இருக்கிறார்.. எதற்கு அடுத்தவர்களை குத்தி பார்க்கும் எண்ணமோ பழக்கமோ தெரியவில்லை ... எந்த திரிக்கு சென்றாலும் சிலரை வம்பிழுப்பது என்பது கைவந்த கலையாகி விட்டது. நாம் நம் பதிவுகளை இட்டால் கூட அதற்கு நேராக ஏதோ ஒன்றை பதிக்கவேண்டும் என்ற எண்ணம்

    நானும் தெரியாமல் தான் கேட்கிறேன் அவரும் ஹப் மெம்பர். அவருக்கு வேண்டிய திரியை தொடங்கி பதிவுகள் இடவேண்டியது தானே.. அதை விட்டு விட்டு இது என்ன வேலை என்று தெரியவில்லை ..

    உங்கள் பதிலடி பதிவு நன்று ..

  18. Thanks vasudevan31355 thanked for this post
    Likes JamesFague liked this post
  19. #3910
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    வாசுதேவன் அய்யா! நீங்க எழுதிய நீண்டதொரு பதிவினைப் பார்த்து வருத்தப் பட்டேன். என்னால் தான் நீங்கள் சிவாஜி திரியில் எழுதுவதை நிறுத்தினீர்கள் என்பதை நம்பமுடியல. தகுந்த ஆதாரம் இருந்தால் எடுத்துப் போடவும். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மன்னிப்பு கேட்கிறேன். சிவாஜி பற்றியெல்லாம் எனக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது. சில நேரங்களில் சிவாஜி பற்றிய பதிவுகளின் குவியல்கள் திகட்டுவது போல எனக்குத் தோன்றியதெல்லாம் இந்த தலைமுறை இடைவெளியின் பார்வைக் கோளாறே என உணர்கிறேன். எழுபதுகளின் இறுதியில் பிறந்த எனக்கு ஆரம்பத்தில் சிவாஜியை முழுமனதாக எற்றுக்கொள்ள சில மனத் தடைகள் (அவரது எண்பதுகளின் படங்கள்) இருந்தாலும் முதல்மரியாதை,தேவர் மகன் பற்றிய மையத்தின் பல்வேறு கட்டுரைகளை வாசித்து அவரது கருப்பு வெள்ளை வேர்களைத் தேடிச் சென்று தெளிந்து மனதளவில் நடிப்பிற்கு இலக்கணமே சிவாஜிதான் என துலங்கிவிட்டேன். இந்த மாற்றமே சிவாஜி பற்றிய திரிகளில் எனது கவனத்தை கொண்டுவந்தது. நேற்று கூட ஒரு மூத்த பத்திரிக்கையாளர் சிவாஜியின் நடிப்பை விமர்சித்த போது "தட்டையான புரிதல்" என பதிலளித்தேன்.

    மற்றபடி எனது ஹப் பதிவு வரலாற்றிலேயே இதுபோல ஒரு பெரிய எதிர்ப்பு..நீண்ட (வசை)பதிவுகள் வந்ததில்லை. நான் அந்த அளவுக்கு (வசை பாடக்கூட) ஒர்த் கிடையாது என்றே புரிந்துகொள்கிறேன். இனி என் பதிவுகள் சிவாஜி பற்றிய திரியிலும் சரி, மதுர கானங்கள் திரியிலும் சரி இருக்காது. நீங்களும் பழையபடி சிவாஜி திரியிலேயே பதிவுகளை தொடருங்கள். வாழ்த்துக்கள். மற்றபடி, நீங்கள் என்னை "ஆனால் நடிகர் திலகம் திரியிலிருந்து விலகி அமைதியாய் இருந்தது போல் இருந்து விடுவேன் என்று கனவு மட்டும் காணாதீர்கள்." இப்படியெல்லாம் பேசுவீர்கள் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் நான் மேலே குறிப்பிட்டுள்ளது படி, நான்தான் நீங்கள் சிவாஜி திரியில் எழுதாதற்கு காரணம் என்பதே நீங்கள் சொல்லித்தான் தெரியும். இந்த அளவுக்கு சென்றுவிட்ட பிறகு, லாவணி பாடி என் தரப்பு கருத்துகளையும் இங்கே வைக்க விரும்பல. ஒரு முற்றுப்பெறாத உரையாடலாக இதை இப்படியே முடித்துக் கொள்ளவே ஆசைப்படுகிறேன்.

    -----

    திரு ராகவேந்திரா.. சர்ச்சைக்குரிய எனது பதிவினை கீற்று கொட்டகை திரியிலிருந்து நீக்கிவிடுமாறு கோருகிறேன். என் பதிவு இந்த அளவுக்கு ஒரு அதிர்வினை ஏற்படுத்தும் எனத் தெரியாமல் போய்விட்டது. பறவையின் எச்சம் போல அது அங்கு தனித்து காணப்படுகிறது. அழுக்கினை சுத்தப் படுத்திவிடுங்கள். அப்போதுதான் கீற்றுக் கொட்டகையும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

    நன்றி.

    ----
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •