Page 365 of 401 FirstFirst ... 265315355363364365366367375 ... LastLast
Results 3,641 to 3,650 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #3641
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சரஸ்வதி பூஜை சிறப்புப் பாடல்.

    'குழந்தையின் கோடுகள் ஓவியமா
    இந்தக் குருடன் வரைவது ஒரு காவியமா
    நினைந்ததை உரைத்தேன் புலவர்களே
    குற்றம் நிறைந்திருந்தாலும் அருளுங்களேன்'

    'கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்
    சில காவியப் பொருள்களைத் தூது விட்டாள்
    தூது விட்டாள்

    கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்

    அலை என்னும் எண்ணங்கள் ஓட விட்டாள்
    அதை ஆயிரம் அவையில் பாட விட்டாள்
    பாட விட்டாள்'



    காளிதாசனாக 'காவிய நாயகன்'
    'சரஸ்வதியின் மைந்தன்'

    என் சொல்ல!

    காவியங்கள் அரங்கேற்றும் கம்பீரம். நடிகர் திலகம் மகாகவியாக அமர்ந்து தன் காவியங்களை அரங்கேற்றுவதை இந்த ஒரே பாடலில் அற்புதமாக வடிவமைத்திருப்பார்கள்.

    நடுவில் அப்படியே நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் சுசீலா அம்மா

    'காதல் மனம் கொண்ட பாசம்
    இந்த கவிஞனின் மேக சந்தேசம்
    தூது செல்லும் ஒரு மேகம்
    அதை சொல்வது மேக சந்தேசம்

    சூரசம்ஹார சம்பவம்

    கவி சொல்லும் குமார சம்பவம்
    தாரகன் மீண்ட சம்பவம்
    கவி தந்த குமார சம்பவம்
    குமார சம்பவம்'

    அனுபவித்தால்தான் புரியும். உடல் சிலிர்க்க வைக்கும் பாடல்.


    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks Russellmai thanked for this post
    Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3642
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சரஸ்வதி பூஜை சிறப்புப் பாடல் 2

    நல்லதொரு மனைவியாய் நாயகி கொலு வைத்து குத்து விளக்கேற்றி தன் தலைவனைப் பற்றிப் பாடுகிறாள்.

    'கலைமகள் அலைமகள் மலைமகள் மூவரும் உலவிடும் ராத்திரி
    நவராத்திரி

    எந்தன் தலைவனை அழகிய இளைஞனை முதன் முதல் தரிசித்த ராத்திரி

    நவராத்திரி சுபராத்திரி'


    காமத்தால் கெட்டழிந்த நாயகன் நோயுற்று, தவறை உணர்ந்து, மனைவியின் மாண்பு கண்டு, மனதுக்குள் வேதனையுடன் பாடுகிறான்.

    'ஒருமகள் அழகிய திருமகள் என இவன் தரிசித்த ராத்திரி நவராத்திரி'

    'நாள்தோறும் நான் கண்டேன் சிவராத்திரி
    எந்த நங்கைக்கும் நான் சொந்தம் சில ராத்திரி
    பாவங்கள் நான் செய்தேன் பகல் ராத்திரி
    அதன் பலன் கண்டேன் உனைக் கண்ட முதல் ராத்திரி'

    'வெள்ளிரதம்' படத்தின் மிக அருமையான பாடல். 'மெல்லிசை மாமன்னர்' நெஞ்சை உருக்கும் வண்ணம் போட்ட பாடல். புன்னகை அரசியும், விஜயகுமாரும் அமைதியான நடிப்பில் மனத்தைக் கொள்ளை கொள்வார்கள். ஜெயச்சந்திரனும், சுசீலாம்மாவும் அனுபவித்து உணர்ந்து பாடியிருப்பார்கள்.

    ராத்திரி ராத்திரி என்று முடியும் பாடல் மட்டுமல்ல. அற்புதமான வரிகளைக் கொண்ட பாடல். கதைக் களத்தை கானத்திலேயே உணர்த்தும் பாடல். அருமையிலும் அருமை.

    Last edited by vasudevan31355; 2nd October 2014 at 09:14 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes Russellmai liked this post
  6. #3643
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜேஷ்ஜி

    இன்று ஒருநாள் நான் நீங்களாக உங்கள் அனுமதி தேவை. ஒரு அருமையான கன்னடப் பாடல் கேட்டேன். தங்களுக்குப் பிடித்த அபிநய சரஸ்வதி பாடும் பாடல் இசையரசியின் குரலில்.

    'லஷ்மி சரஸ்வதி' கன்னடப் படத்தில்.

    'நூறு வருஷா பாழிரி'. (ரைட்டா ராங்கா? எனக்கு கன்னடம் தெரியாதே! )

    (என்னை ரொம்பத்தான் கெடுத்து வைத்திருக்கிறீர்கள்)

    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes chinnakkannan liked this post
  8. #3644
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங் ஆல்..

    அனைத்து நண்பர்களுக்கும் சி.கவின் காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள்

    வாசு சார்..மிக்க நன்றி.. ராதே உனக்குக் கோபம் ஆகாதடி அண்ட் ச.பூ சி.பா க்கும் நன்றிகுழந்தையின் கோடுகள் ஓவியமா
    இந்தக் குருடன் வரைவது ஒரு காவியமா
    நினைந்ததை உரைத்தேன் புலவர்களே
    குற்றம் நிறைந்திருந்தாலும் அருளுங்களேன்' வெகு அழகிய பாடல்..

    இது கண்ணதாசன் என நினைக்கிறேன்..தவறாகக் கூட இருக்கலாம்..ஏனெனில் படம் முழுக்க ஊடாடிய மரபுக் கவிதைகள் எல்லாம் கு.மா. பாலசுப்பிரமணிய்ன் என்று நினைவு..

    அன்னையே எம்மில் அரும்புலவர் யாரென்று
    இன்னமுத வாயால் இயம்பு..

    என்ன ஒரு ஸிம்ப்பிள் வெண்பா..சொல்வது நடிகர் திலகம் கம்பீரமாய்..

    காளி - தண்டியே கவி தண்டியே கவி..

    கண் மூக்கு வாய் எல்லாம் துடிதுடிக்க காளிதாஸ் ந.தி - அன்னையே அப்படி எனில் நான்..

    காளி.. நீயே நான் நானே நீ.. (பின் பொங்கும் உணர்ச்சிப் பிரவாகம் முகத்தில்..)

    காலங்காத்தால காளிதாஸையும் அவங்களோட முறைப்பெண்ணையும், எல்.வியையும் நினைவு படுத்தனுமா (ஹையா..இன்றைக்கான வெடி போட்டாச்சு)

    ராஜ்ராஜ் சார் மகான் காந்தி மகானுக்கு நன்றி..

    மதுண்ணா காந்தி முழுப்படத்தை ப் போட்டதற்கும் நன்றி..அந்தப் படத்தில் ஜாலியன் வாலா பாக் நினைத்தாலே பகீர் என்கும்.. சிலவருடங்கள் முன் நேரில் சென்று பார்த்தபோது தான் புரிந்தது..எவ்ளோ சின்னக் குறுகலான கிணறு தெரியுமா..

    ராஜேஷ் பாடல்களுக்கு நன்றி.. இன்னும் ஹோம் வொர்க் பண்ணித் தான் பாட்டெல்லாம் பார்க்கணும்

    அப்புறம் வரட்டா..

  9. #3645
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (84)

    'இன்றைய ஸ்பெஷல்' பகுதியில் 'கும் நாம்' இந்தியைத் தழுவி எடுத்த 'நாளை உனது நாள்' படத்திலிருந்து மிக மிக அட்டகாசமான ஒரு பாடல்.

    உமாரமணன் பாடிய இப்பாடல் என்னை அநியாயத்திற்கு கவர்ந்த பாடல். என்ன ஒரு அழகான குரல்வளம்!


    கார்த்திக் சார் எழுதினாரே 'அதே கண்கள்' திரைப்படத்தில் என்னென்னவோ நான் நினைத்தேன்' பாடல் கடற்கரையில் அழகாகப் படம் பிடிக்கப்பட்ட ஒரு சில பாடல்களில் என்று. அது போல இந்தப் பாடலும் கடற்கரையில் ரொம்ப அழகாகப் படமாக்கப் பட்டுள்ளது.





    விஜயகாந்த், நளினி ஒரு ஜோடி

    ஜெயசங்கர், 'அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் விடுகதை போட்ட அகல்யா இன்னொரு ஜோடி. (பொருத்தம் ஒட்டாது)

    செந்தாமரை தனியாக.



    பாடல் அகல்யாவுக்கு பிகினி உடையில். இடையில் டான்ஸ் விஜிக்கும், நளினிக்கும்.


    இளையராஜா அமர்க்களப்படுத்தி பின்னியெடுத்திருப்பார். இப்பேர்ப்பட்ட பாடலை யாருமே கண்டு கொள்ளவில்லை. அவ்வளவு இனிமையான பாடல். ஏன் பிரபலமாகவில்லை என்பது மாறாத வடுவாக மனதில் பதிகிறது. இப்படத்தில் வரும் இன்னொரு பாடலான 'வெண்ணிலா ஓடுது' பாடல் கூட ஓரளவிற்கு ஹிட்டான பாடல்.

    இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் வரிசையில் இந்தப் பாடலும் ஒன்று என்று நான் ஆணித்தரமாகக் கூறுவேன். அதுவும் உமா ரமணன் 'ல்லாலலா ல்லாலலா' என்று கொஞ்சம் விட்ட மாதிரி விட்டு பின் அற்புதமாக ஹம்மிங் செய்வது ஹம்சம்.


    இனி பாடலின் வரிகள்.

    அலை அலையாய் பல ஆசைகளே
    அடி இளமையிலே இந்த இளமையிலே
    இரவினில் பூக்கள் பூக்கலாம்
    விடிந்ததும் வாடிப் போகலாம்
    இடையினில் காலம் மாறலாம்
    இளமையும் ஓடிப் போகலாம்
    பிறவியில் நானும் கூட பூவின் ஜாதிதான்

    அலைஅலையாய் பல ஆசைகளே
    அடி இளமையிலே இந்த இளமையிலே

    செவ்வாழை போலிரண்டு கால் நடக்க
    ல்லாலலா ல்லாலலா
    செம்மீனைப் போலிரண்டு கண் சிரிக்க
    ல்லாலலா ல்லாலலா

    நதி போல் நானும் நடைதான் போட
    கொடி போல் மேலே கனிதான் ஆட
    இளகிய மாலைப் பொழுதினிலே
    வாலிபமே வா நான் அணைக்க

    அலைஅலையாய் பல ஆசைகளே
    அடி இளமையிலே இந்த இளமையிலே

    ஆகாயம் மின்னுகின்ற பூங்குருவி
    ல்லாலலா ல்லாலலா
    அம்மாடி நானும் ஒரு தேனருவி
    ல்லாலலா ல்லாலலா

    சிறகை நானும் விரித்தேன் இங்கே
    நினைத்தால் போதும் பறப்பேன் அங்கே
    பொழுதொரு பாடல் படித்திருப்பேன்
    ராத்திரியில் வா நீ ரசிக்க

    அலை அலையாய் பல ஆசைகளே
    அடி இளமையிலே இந்த இளமையிலே

    இரவினில் பூக்கள் பூக்கலாம்
    விடிந்ததும் மாறிப் போகலாம்
    இடையினில் காலம் மாறலாம்
    இளமையும் ஓடிப் போகலாம்
    பிறவியில் நானும் கூட பூவின் ஜாதிதான்

    ஹம்மிங்.





    மதுஜி,

    கொடுமைஜி. இந்த வீடியோவில் டூரிங் டாக்கீஸில் ரெண்டாவது ஆட்டம் 'ஆயிரம் தலைவ்ங்கிய அபூர்வ சிந்தாமணி' படம் பார்க்கும் போது கட்டாகி கட்டாகி எகிறுமே... அது போல அப்படியே பாடல் காட்சிகள் தவ்வி தவ்வி பாடலின் சில வாக்கியங்கள் ஸ்வாஹா. முன்னம் டேப் ரெகார்டரில் கேட்டதை ஞாபகம் வைத்து எழுதினேன்.


    இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்தப் பாடலின் ஆடியோவைக் கொடுத்திருக்கும் எல்லா தளங்களும் இந்தப் பாடலுக்குப் பதிலாக 'அலை அலையாக' என்ற 'கண்ணோடு கண்' படத்தின் பாடலைக் கொடுத்து தப்பும் தவறுமாக படுத்தி இருக்கிறார்கள். என்னத்த சொல்ல!
    Last edited by vasudevan31355; 2nd October 2014 at 08:18 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes Russellmai liked this post
  11. #3646
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு,



    கடை விரித்தோம் கொள்வாரில்லை என்று அசல் சரக்குகளை விற்றும் போணியாகாதவர்களுக்கு, ஆறுதல் வாசு ,கார்த்திக் போன்றவர்களே. இப்போதுதான்(இரண்டு நாட்களாக) வாசு போன்றவர்களின் தின பதிவுகளை நிம்மதியாக படிக்க முடிகிறது. சிஸ்டம் நிரந்தரமாக பெயில் ஆக கடவதாக.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #3647
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //நெஞ்சம் மறக்காமல் நெஞ்சில் குடிகொண்டவரை
    நெஞ்சு நிறையப் பாராட்டிய அன்பு நெஞ்சம் கொண்ட // தாங்க்ஸ் வாசுசார்.. போன பதிவுலையே கோட் பண்ணி சொல்லியிருக்கணும்..

    அப்புறம் ஐ-6 இங்கே கிட்டத் தட்ட ரூ 45000 க்கு விற்கப் படுகிறது.. வர்றச்சே கொண்டு வரட்டா..

    கோபால் சார்..கார்த்திக் சார் தான் இப்போதெல்லாம் வருவதில்லையே.. ஏன்..

  13. #3648
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு சார்.. கும் நாம் நாளை உனது நாளாக சக்தி தியேட்டரில் போட்டார்கள்..குட்டி ஏசி தியேட்டர் 350 பேர் கெபாசிட்டி என நினைக்கிறேன்.. நார்மலாக அந்தக்கால மதுரையில் படம் ஆரம்பிக்கும் முன் ஏசி போடுவார்கள் பின் நிறுத்தி விடுவார்கள்..எனில் நான் போனது மதியக் காட்சி..படமும் த்ரில்லர்..கும் நாம் பார்த்ததில்லை..எனில் சுவாரஸ்யமாகப் பார்க்க, ஏசி நிறுத்தி ஃபேன் மட்டும் சோகையாய் கொஞ்சம் காற்றனுப்பி எங்கள் வெக்கையைக் குறைத்துக் கொண்டிருந்த போதில்..டபக்..கரெண்ட் கட் (படம் 90 பெர்சண்ட் முடிந்த நேரம்) பின் ஜெனரேட்டர் போட்டுப் ஒரு நிமிடத்தில் மறுபடியும் திரை இருளுக்குப் போக.. நாங்கள் வெய்ட் வெய்ட் வெய்ட்பண்ணி (கிட்டத்தட்ட 40 நிமிடம்- வரும் வரும் என்) (ஏனெனில் ஜெனரேட்டரும் ரிப்பேர் என்றார்கள்) சட்டை பேண்ட் எல்லாம் தொப்பலாக.. வரவேயில்லை..

    இன்று வரை அந்தப் படத்தைத் திரும்பப் பார்க்கவில்லை..க்ளைமாக்ஸ் வில்லன் யார் என்று மட்டும் நண்பனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்..

    இந்தப் பாட்டு பார்த்துச் சொல்கிறேன்..அதுவும் கேட்டுக்கேட்டு டைப்படித்த பாடல்.. நானும் நிறைய பாட்டிற்கு அவ்வண்ணம் செய்திருக்கிறேன்.. ஆனா வாசு சார்.. படத்தோட முதல் சீட்டு சீட்டு என்ற அனுராதா பாட்டை ப் போடாமல் போனீர்களே ( நல்லவேளை ) அகெய்ன் தாங்க்ஸ்..

  14. #3649
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  15. Likes Russellmai liked this post
  16. #3650
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    EN VIRUPPA PADAL

  17. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •