Page 301 of 401 FirstFirst ... 201251291299300301302303311351 ... LastLast
Results 3,001 to 3,010 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #3001
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பத்மினி பற்றிய பல விவரங்களை வழங்கிய கிருஷ்ணாஜிக்கு, புகைப்படங்கள் வழங்கிய வாசு சாருக்கு நன்றி.

    கிருஷ்ணா ஜி.. விகடன் பேட்டியில் நானோஅய்யர் அவரோ கள்ளர் நடக்கிற காரியமா என வந்திருந்ததாக நினைவு..இதையே என் ஒரு கதையில் (2003 இல் ) உபயோகப் படுத்தியிருந்தேன்..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3002
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மதுண்ணா..இது பரவால்லியா -முன்பு எழுதிப் பார்த்த நவராத்திரிக்கவிதை..பழசு

    கொலுவிருக்கும் கடைசிப் படிக்க்ட்டுச்
    செட்டியார் கேட்டார்
    ’ஏன் இந்த தடவை அஞ்சு படி தான்
    வெச்சுருக்கா மாமி?

    கல்யாண கோஷ்டி நாதஸ்வர வித்வான்
    ‘தெரியலை ஓய்.. அது சரி
    அந்த வைர மூக்குத்தி மாமி பார்த்தீரா’

    ‘அதுவா இந்த மாமியோட தூரத்து உறவாம்...
    போன தடவைக்கு முந்தின தடவை வந்தா..
    அவ பட்டுப் புடவை க்ரே வித் ரெட் பார்டர்
    சும்மா ஜிலுஜிலுன்னு...
    நன்னா இருக்கோன்னோ..’

    இரண்டாம்படிக்கட்டில் இருந்த ராதா
    ‘ஏங்க.. கல்யாணத்துக்கும்
    கூட்டிட்டுப் போமாட்டேங்க்றீங்க..
    கீழே கிரிக்கெட் மாட்ச் வச்சுருக்கா..
    அதுக்கும் மாட்டேங்கறீங்க..
    பக்கத்துல மஹாபலிபுரம் பீச் செட்
    அங்கயாவது போலாமே..’

    கிருஷ்ணன் புன்னகைத்து..
    ‘நானா மாட்டேங்கறேன்..
    கீழே பார்.. மூணாம் படிக்கட்டில
    எல்லாஅவதாரமும் நின்னுண்டிருக்கு..!
    அது சரி
    யாரந்தக் குழந்தை..
    சிகப்பு தாவணி பட்டுப் பாவடை
    போட்டுண்டு
    ஏதோ எட்டு ஸ்வரத்துல பாடுது..
    நம்ம ஊர் கோபிகையோட சாயல் தெரியுது..’
    ராதா முறைத்துக் கிள்ள

    கீழே இருந்த பலராமர்
    ‘ஏய் எங்களை கிண்டல் ஏதும் பண்ணலையே..’

    நாலாம் படிக்கட்டில் இருந்த
    கன்னுக்குட்டி அம்மாவிடம்
    ‘இன்னிக்கும் கொண்டக்கடலை சுண்டல் தானாம்..
    அம்மா போரடிக்குது
    பேசாம வேற கொலுக்குப் போலாமா.
    இந்த பாரேன் அந்தச் சின்னப் பையன்
    என்னைத் தொட வர்றான்...’

    கவலைப்படாதே யானை மாமாக்கிட்ட
    சொல்றேன்..
    ஓய் என் புள்ள பயப்படுது..”

    “ஒண்ணும் ஆவாது..
    பேசாம பசுவா லட்சணமாத்
    தலை குனிஞ்சு இரு..
    இந்தப் பக்கம்
    அஷ்ட் லஷ்மி வேறு இருக்காங்க்..
    எதிர்ல பார்த்தியா
    சில மாமாக்கள்
    சீரியஸா கோல்ட் ரேட்,ஷேர்ஸ்னு
    பேசிக்கிட்டிருக்காங்க ..
    நல்லா இருக்கு...
    கேக்க விடாம இந்தப் பாட்டுதான் தடுக்குது..
    அட் ஒருவ்ழியா பாட்டு முடிஞ்சா
    ம்ம் இன்னொரு மாமி பாடறாளே..
    என்ன தவம் செய்தனை...
    புதுசாபாடலாமில்ல.. ..

    அருகிலிருந்த மயில்
    ரொம்பத் தான் சினிமா பார்க்கறே..
    என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமில்ல..’

    ஷ்.. சத்தம்போடாமச் சமர்த்தா
    வந்தவாளைப் பார்த்துண்டு
    சும்மா இருங்கோ..
    என்றார் முதற்படிக்கட்டுப் பிள்ளையர்ர்..

    ‘எனக்குப் பொண் பார்த்திண்டிருக்கேன்..
    உங்க பேச்சு எனக்குத்
    தொந்தரவா இருக்கு...!”

    *

  4. Likes Russellmai liked this post
  5. #3003
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    "எனக்குப் பொண் பார்த்திண்டிருக்கேன்..
    உங்க பேச்சு எனக்குத்
    தொந்தரவா இருக்கு...!”

    நீங்க இப்படிசொல்லிட்டதால் நாங்க ஒன்றும் பேச முடியவில்லை சிக்கா..

  6. Likes chinnakkannan liked this post
  7. #3004
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    அன்புள்ள மது சார்,
    உங்கள் சந்தோசம் என் பாக்கியம்.

    உங்கள் மற்ற வேண்டுகோள் பாடல்கள் என்ன, ஏதோ இரண்டு பாக்கி என்று சொன்ன ஞாபகம்,. என்னிடம் இருக்கிறதா பார்க்கிறேன்...

  8. #3005
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ஒரு கவிஞனின் கடமை அன்றைய தினத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்ல.. சமுதாயத்தின் நாளைய தேவைகளையும் கணக்கில் கொண்டுதான் படைப்பியலில் ஈடுபடவேண்டும். முண்டாசுக்கவிஞன் பாரதியின் கவிதைகள் வேள்வித்தீயை மனதில் வளர்த்து விடுதலை தாகத்தை மேலும் தூண்டியது.. சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆனந்தப்பள்ளு பாடியவன் அவனன்றோ? மொழியின்மீதுள்ள பற்றால், இனத்தின்மீதுள்ள பாசத்தால்.. பாரதி வழிவந்த பாவலன் பாரதிதாசன் புரட்சிக்கவிஞர் என்னும் அடைமொழி அடைந்ததும் அவர்தம் எண்ணப்பயிரில் ஊடுருவிக்கிடந்த உயிரோட்டம் எல்லாம் இனமொழி உணர்வை மக்கள் மனதில் அதீதமாய் வளர்த்ததன்றோ?

    வழிவழி வந்த கவிஞர் பரம்பரையில் கண்ணதாசன் என்னும் கவிமன்னவன் தன் கருத்துக்களை முத்துக்களாய் பதித்ததெல்லாம் திரைப்பாடல்கள் முதலான தன் களங்கள் எல்லாவற்றிலும்தான்! பச்சை விளக்கு திரைப்படத்தில்.. அவர் பாடல் எழுதிய போது.. கேள்வி பிறந்தது அன்று.. என்கிற பாடல் எண்ணத்தில் மலர்ந்திருக்கும் அழகினைப் பாருங்கள். எத்தனை எத்தனை சிந்தனைச் சிறகுகள் கவிதை வானத்தில் வலம்வருகின்றன.. காணுங்கள்..

    ஒரு சராசரி திரைப்படப்பாடலாசிரியரால் இத்தனை வளமான கருத்துக்களை கோர்த்தெடுக்க முடியாது.

    தீண்டாமைச் சட்டம் வந்ததனை பாட்டுவரிகளால் பதித்து வைத்திடும் சாதுர்யம் அவருக்கல்லவா கைவந்தது?

    அறிவியல் உலகின் கண்டுபிடிப்புகள்.. கவிஞரின் கையில் வார்த்தெடுக்கப்பட்ட வரிகளாய் மாறும்போது அதில் மலர்ந்திடும் உண்மைகள் எத்தனை எத்தனை?

    தனியுடைமைக்கும் பொதுவுடைமைக்கும் விளக்கங்கள் திரைப்பாடலிலும் தரமுடியும் என்று நிறுவ வருகிறார்.. கண்ணதாசன்!

    ஆம்.. கேள்வி பிறந்தது அன்று.. அதற்கான பதில்கள் கிடைத்தன இன்று!!

    பாடல்: கேள்வி பிறந்தது அன்று
    திரைப்படம்: பச்சை விளக்கு
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    ஆண்டு: 1964
    கேள்வி பிறந்தது அன்று நல்ல
    பதில் கிடைத்தது இன்று
    ஆசை பிறந்தது அன்று
    யாவும் நடந்தது இன்று


    ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ? ஓ
    ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ? ஓ
    அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ?
    என்றொரு காலம் ஏங்கியதுண்டு
    இன்று கிடைதது பதில் ஒன்று
    இன்று எவனும் பேதம் சொன்னால்
    இரண்டு வருடம் ஜெயில் உண்டு.

    கேள்வி பிறந்தது அன்று நல்ல
    பதில் கிடைத்தது இன்று
    ஆசை பிறந்தது அன்று
    யாவும் நடந்தது இன்று

    வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா? ஆ
    வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா? ஆ
    மாண்டு கிடக்கும் மனிதனின் மேனி மறுபடி எழலாமா?
    என்றொரு காலம் ஏங்கியதுண்டு
    இன்று கிடைத்தது பதில் ஒன்று
    ஞானம் பிறந்து வானில் பறந்து
    மீண்டு வந்தான் உயிர் கொண்டு

    கேள்வி பிறந்தது அன்று நல்ல
    பதில் கிடைத்தது இன்று
    ஆசை பிறந்தது அன்று
    யாவும் நடந்தது இன்று

    குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும் ம்
    குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும் ம்
    குறை தெரியாமல் உறவு கொண்டாலே வாழ்வும் சுவையாகும்
    படித்த மாந்தர் நிறைந்த நாட்டில் பார்க்கும் யாவும் பொதுவுடமை
    நல்ல மனமும் பிள்ளை குணமும் நமது விட்டின் தனி உடைமை

    கேள்வி பிறந்தது அன்று நல்ல
    பதில் கிடைத்தது இன்று
    ஆசை பிறந்தது அன்று
    யாவும் நடந்தது இன்று



    gkrishna

  9. Thanks Russellmai thanked for this post
    Likes chinnakkannan liked this post
  10. #3006
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    முத்தழகு பாடலை இப்போது தான் கேட்டேன்
    அருமை மது சார் /sss சார்

    நன்றி
    gkrishna

  11. #3007
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    பத்மினி பற்றிய பல விவரங்களை வழங்கிய கிருஷ்ணாஜிக்கு, புகைப்படங்கள் வழங்கிய வாசு சாருக்கு நன்றி.

    கிருஷ்ணா ஜி.. விகடன் பேட்டியில் நானோஅய்யர் அவரோ கள்ளர் நடக்கிற காரியமா என வந்திருந்ததாக நினைவு..இதையே என் ஒரு கதையில் (2003 இல் ) உபயோகப் படுத்தியிருந்தேன்..
    பத்மினி நாயர் வகுப்பை சேர்ந்தவர் என்று தான் நினைவு சி கே சார்
    gkrishna

  12. Thanks chinnakkannan thanked for this post
  13. #3008
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    thanks to tamilmurasu

    'என் இனிய பொன் நிலாவே...'

    'ராஜ ராஜ சோழன் நான்...'

    'நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்..'

    'பூங்காற்று .. புதிதானது..'

    'கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்..'

    'வானெங்கும் தங்க விண்மீன்கள் விழியிமை மூட..'

    'அந்த நாள் ஞாபகம்..'

    'எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..'

    'கண்ணம்மா.. காதலெனும் கவிதை சொல்லடி..'


    - இப்படி எத்தனையோ இனிமையான மேற்கத்தேய இசையின் ஆளுமையுடன் கூடிய பின்னணி இசையுடன் பாலு மகேந்திராவுக்காக இசைஞானி அற்புதமாக அமைத்த பாடல்களில் இடம்பெற்ற கிட்டாரில் தனது கைவண்ணத்தைக் காட்டியது. இந்தப்படத்தில் அவருக்கு அருகில் தோழமையுடன் நிற்கும் இசைஞானியின் இசைத்தளபதிகளில் ஒருவரும் அவரின் ஆஸ்தான கிட்டார் கலைஞருமான மதிப்புக்குரிய சதாசுதர்சனம் சதா.



    நடிகர் திலகத்தின் முதல் படமான பராசக்தியின் இசையமைப்பாளரான காலம் சென்ற சுதர்சனத்தின் புதல்வரான இவரின் இசைஞானியுடனான பயணமானது அப்பழுக்கில்லாதது.

    ஒரு தோழனாக, இசைத்தளபதியாக, சகோதரனாக. உறவினனாக . ரசிகனாக, மொத்தத்தில் அவரை நன்றாகப் புரிந்து கொண்ட ஒருவனாக அவருடன் தோளோடு தோளாக நிற்கும் கலைஞன். தன்னிடம் பயிலும் மாணவர்களையே 'சார்' என்று அழைக்கும் இந்தப் பெரிய மனிதர் மிகச் சிறந்த மனிதர். என்று அவருடன் பழகிய ஒருவரல்ல இருவரல்ல பலர் சொல்வதுண்டு


    இசைஞானி மேற்கத்தேய இசையையும் கிட்டாரையும் பயின்ற தன்ராஜ் மாஸ்டரிடம் அவர் கூடவே பயிலச் சென்றவர் இந்தக் கலைஞர்.




    இசைஞானி படங்களுக்கு அமைத்த பின்னணியிசைகளில் உள்ளத்தை வருடும் உணர்ச்சிக் கொந்தளிப்பை தனது கிட்டார் மூலம் கொட்டிய மேதை.

    மௌனராகத்தில் இவர் வாசித்த பின்னணியிசை இன்றுவரை மூளைக்குள் புகுந்து குத்துக்கல்லாட்டம் அமர்ந்திருக்கிறது. அசைக்கவே முடியவில்லை.

    பாலு மகேந்திரா என்ற இசை ரசிகன் மறைந்து போன இந்த வேளையில் அவருக்காக, அவரின் கற்பனையை புரிந்து கொண்டு இயற்கையை இன்னும் இன்னும் தனது கிட்டாரால் அழகாக்கிய சதா. அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தங்களைப் போன்றோருக்கு நம்மை போன்ற கடைகோடி ரசிகர்களால் நன்றி என்ற சொல்லைத்தவிர, வேறு என்னத்தைத்தான் தர முடியும்?
    gkrishna

  14. Likes Russellmai liked this post
  15. #3009
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    thanks to Ravi Auditya

    சினிமா ஹம்மிங தேவதைகள்

    தமிழ் சினிமாவில் ”ஹம்மிங்”(வாயசைப்பு இசை?) என்பது பாடலின் தவிர்க்க இயலாத ஒரு அங்கம் ஆகிவிட்டது.அதுவும் ஒரு இசைக்கருவியாய் பாடலுக்கு அழகைக்கூட்டுகிறது.படங்களின் பின்னணிக்கும் பல வித ஹம்மிங் கொடுக்கப்படுகிறது.



    பழைய காலத்துப் பாடல்களில் ”ஹம்மிங்” கம்மி. ஆனால் ஆலாபணை (ராகத்தை மேல்/கிழ் இழுத்துப் பாடுதல்) என்பது ஹம்மிங் மாதிரிதான்.காரணம் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு இசைக்கப்பட்டது.

    அடுத்து பாடும் இடத்திலேயே மைக் பிடித்து ரிகார்ட் செய்தார்கள்.பின்னணி இசைப்பவர்கள் பாடுபவர்கள் பின்னலேயே ஓட வேண்டும்.பின்னாளில்தான் தியேட்டர் ரிகார்டிங் வந்தது.

    மெல்லிசை திரைக்கு வந்த பிறகு .ரவுண்டு கட்டி ஹம்மினார்கள்.எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்தில் அதிகம் என்று சொல்லலாம்.

    இது சோகம்/காதல்/வீரம்/மகிழ்ச்சி/விரகதாபம்/காமம்/மழலை போன்ற முக்கியமான உணர்ச்சிகளைப் பிரதிபலிக்க பெரும்பாலும் படங்களில் பயன்படுத்தப்படுகிறது.

    பெணகள்/ஆண்கள் குழுக்களாக பாட்டில் தோன்றும்போது கோரஸ் கொடுக்கிறார்கள்.இதைத் தவிர்த்து பேய்/சுடுகாடு/நடுகாடு/நடுஇரவு/ என்று விதவித ஹம்மிங்.

    தமிழ்ப் படங்களில் ”வெள்ளை உடை ஆவி ஹம்மிங்” ரொம்ப விசேஷமானது.(நெஞ்சம் மறப்பதில்லை,துணிவே துணை/யார் நீ,அதே கண்கள்)

    பயங்கரத்திற்கும் (horror) (குரல்?) கொடுப்பதுண்டு.சிவப்பு ரோஜாக்கள் படத்தில் தோட்டத்தில் இருந்து ஒரு பிணத்தின் கை எழும்போது வரும் ஆணின் முரட்டு ஹம்மிங் பயமுறுத்தும்.

    இந்த ஹம்மிங் 95% சதவீதம் பெண் குரல்கள்தான்.காரணம்? மனதை கொள்ளைக்கொள்ளும் உணர்ச்சி பொங்கி வழிவதுதான். காதல்/ஒரு வித உருக்கம்/சோகம் போன்ற பல ரசங்களும் தெறிக்கும்.தேவதைகளின் மொழி இந்த ஹம்மிங்.

    நிறைய ஆங்கில படங்களிலும் இது உண்டு.அது ஒரு மாதிரி வெள்ளைக்காரி ஹம்மிங்.டைட்டானிக் படத்தில் கூட நம்ம மேஸ்ட்ரோவின் சாயலுடன் பின்னணியில் தேவதைகளின் ஹம்மிங் .காதல் உணர்வுகள்?

    காட்சியில் வீசும் காற்றின் ஒலியே மனதில் அதிர்வுகளை ஏற்படுத்து.”Hello..Jack !". பிறகு ஆரம்பிக்கும் soul strirring ஹம்மிங்!

    எல்.ஆர்.ஈஸ்வரி ஹம்மிங்கிற்கே அவதாரம் எடுத்தவர்.இவர் குரல் அப்படி வசீகரிக்கிறது.அடுத்து ஜானகி? இவர்களின் பழைய பாடல்களின் ஹம்மிங் மனதை வருடுகிறது.

    சில பாடல்களில் கொஞ்சம்தான் ”ஹம்”மும்.பழைய பாடல்களில் இருக்கும் “பழசு” மற்றும் " வெகுளித்தனம் " மனதை கொள்ளையடிக்கிறது.

    'பவளக்கொடியிலே முத்துகள் பூத்தால் '
    கல் எல்லாம் மாணிக்க கல் ஆகுமா
    நாம் ஒருவரை ஒருவர்
    அம்ம்மம்மா கேளடி தோழி
    காற்றுகென்ன வேலி

    மேல் சொன்ன பாடல்கள் எல்லாம் சில சாம்பிள் மட்டுமே

    நண்பர்கள் தொடரலாம்
    gkrishna

  16. Likes Russellmai liked this post
  17. #3010
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    டி.எம்.எஸ்ஸுக்கு சுசீலா ஹம்மிங் கொடுத்த "வெள்ளிக்கிண்ணம்தான்" பாடலும் சுசீலாவுக்கு டி.எம்.எஸ் ஹம்மிங் கொடுத்த "கண்களினால் காண்பதெல்லாம்" பாடலும் நினைவுக்கு வருகின்றன. ஒன்று நடிகர் திலகத்துக்கு... இன்னொன்று மக்கள் திலகத்துக்கு... ஒன்று படத்தில் இடம் பெற்றது. இன்னொன்று படத்தில் இடம் பெறவில்லை. ஒன்று "உயர்ந்த மனிதன்" .. இன்னொன்று "நாடோடி".

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •