Page 279 of 401 FirstFirst ... 179229269277278279280281289329379 ... LastLast
Results 2,781 to 2,790 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2781
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    THANKS KRISHNA SIR


  2. Likes gkrishna liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2782
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    டினா முனிம் அமோல் பலேகர்
    எனக்கு பதான் பதான் மெயின்1979 நினைவு உண்டு சி கே சார்




    ராஜேஷ் ரோஷன் மியூசிக்
    gkrishna

  5. #2783
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார் அழகான பாட்டு.. தாங்க்ஸ்.. இதே படத்தில் தானே தன தன்னன ப்யார் கரோ என்ற வேகப் பாடல் வரும்?

  6. #2784
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    ஜெயலலிதா இரட்டை வேடம் - படம் - "நீ" ,

    நேற்று சன் லைப்-இல் கிளைமாக்ஸ் பார்த்தேன்...
    ஒரு ஜெயலலிதா நல்ல குணவதி கணவனை நினைத்து அடிக்கடி மயக்கம் போடும் கேரக்ட்டர்...
    மற்றொருவர் உல்லாச வாழ்க்கை வாழ்பவர். எல்லோருக்கும் ஆள் மாறட்ட குழப்பம்.
    இறுதியில் ஒருவர் ஜெயசங்கருடன் இணைவார் ...மற்றொருவர் போலீஸ்வசம்..

    ராட்சசி பாடிய "வந்தாலென்ன " பாடல் அருமை...
    வீடியோ கிடைக்கவில்லை


    ,

  7. Likes Russellmai liked this post
  8. #2785
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by sss View Post
    ஜெயலலிதா இரட்டை வேடம் - படம் - "நீ" ,

    நேற்று சன் லைப்-இல் கிளைமாக்ஸ் பார்த்தேன்...
    ஒரு ஜெயலலிதா நல்ல குணவதி கணவனை நினைத்து அடிக்கடி மயக்கம் போடும் கேரக்ட்டர்...
    மற்றொருவர் உல்லாச வாழ்க்கை வாழ்பவர். எல்லோருக்கும் ஆள் மாறட்ட குழப்பம்.
    இறுதியில் ஒருவர் ஜெயசங்கருடன் இணைவார் ...மற்றொருவர் போலீஸ்வசம்..

    ராட்சசி பாடிய "வந்தாலென்ன " பாடல் அருமை...
    வீடியோ கிடைக்கவில்லை
    ,
    சூப்பர் sss சார்
    நீ படத்தில் நல்ல சில பாடல்கள் உண்டு என்று நினைவு
    'வெள்ளி கிழமை விடியும் வேளை வாசலில் கோலம் இட்டேன் '
    'ஒன்டே ஒன் பாய் ஒன் கேர்ள் ஹனி மூன் ' pbs நாகேஷ் டான்ஸ் எல்லாம் சேர்ந்து கலக்கும்
    ராமண்ணா இயக்கம்
    gkrishna

  9. #2786
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (75)

    75 ஆவது சிறப்புப் பதிவு

    இன்றைய ஸ்பெஷலில் அன்றைய அமர்க்களமான பாடல். இலங்கை வானொலியில் கலக்கிய ஒரு பாடல்.

    இசைக்காகவும், குரலுக்காகவும், நடிகையர் திலகம் சாவித்திரியின் நடனத்திற்காகவும், 'நடிப்பிசைப் புலவர்' கே.ஆர்.ராமசாமியின் இடை வசனத்திற்காகவும் மிகவும் புகழ் பெற்ற பாடல்.




    நாயகன் திருமணம் ஆனவன் என்றாலும் இன்னொருத்தியின் அழகுக்கும் அன்புக்கும் அடிமை ஆகிறான். அவளுக்காக நிறைய பொருள் சம்பாதிக்கிறான். ஆனால் விதிவசத்தால் சிறைத்தண்டனை பெறுகிறான். உடல்நிலை சரியில்லையென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து தப்பித்து தன் காதலியைப் பார்க்க ஓடோடி வருகிறான்.

    ஆனால் அவன் அங்கு காதலியைக் கண்ட நிலை.... கொடுமை!

    அங்கு அவன் காதலி இன்னொருவனுடன் கும்மாளமிட்டுக் கொண்டிருக்கிறாள். அவளின் புதுக் காதலன் இசைக்கருவியுடன் இசை மீட்ட, அவள் அழகாக நடனமாடுகிறாள். பார்த்த முன்னாள் காதலன் தப்புக் கணக்கு போடுகிறான். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு நடன நிகழ்ச்சிக்கு அவள் அங்கு ஒத்திகை பார்க்கிறாள். அவள் போதாத காலம் அந்த நேரம் அவன் அங்கு சேர்கிறான். இப்போது அவள் என்ன சொன்னாலும் அவன் நம்பப் போவதில்லை. அவன் கண்கள் அவனை ஏமாற்றாதே!

    இந்தக் கொடுமையைக் கண்டு துப்பாக்கியுடன் வருகிறான். பாடி ஆடிக் கொண்டிருக்கும் அவளும், அவள் தோழனும் இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைகிறார்கள். அவன் துப்பாக்கியைக் காட்டி அவளை தொடர்ந்து ஆடச் சொல்கிறான். அவள் புதுத் தோழனை இசைக்கருவியை இசைக்கச் சொல்கிறான். உயிருக்கு பயந்து அவள் ஆட, இவன் தொடர்ந்து மிரட்ட, ஆட்டம் பாடலுடன் வேகமெடுக்கிறது. துப்பாக்கி தன்னை குறி வைக்க அவள் சுழன்று சுழன்று ஆடுகிறாள். நிற்காமல் ஆடுகிறாள். இசைக்கருவி வைத்து இசைக்கும் அவள் தோழனுக்கு தோளில் துப்பாக்கி குண்டு பரிசாக விழுகிறது. அப்போதும் அவன் வாசித்தே தீர வேண்டும். ஏனென்றால் துப்பாக்கி முனையில் இருவர் உயிரும் ஊசலாடுகிறதே!

    அவள் ஆடுகிற வரைக்கும் ஆடி மயங்கி விழுகிறாள். அவளை வார்த்தைகளால் துப்பாக்கிக்கு பதிலாகக் கொன்றுவிட்டு "உங்களைக் கொன்றால் எனக்குத்தான் அவமானம்... என் தாய், என் மனைவி கற்றுத் தராத பாடத்தை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்து விட்டீர்கள்" என்று வெறுப்புடன் அவர்களிடம் கூறிவிட்டு வெளியேறுகிறான்.


    இதுதான் பாடலின் சிச்சுவேஷன். நாயகனாக கே.ஆர்.ராமசாமி, ஆடும் நாயகியாக, நாட்டியத் தாரகையாக நடிகையர் திலகம், அவள் தோழனாக பாலையா. 'செல்லப் பெண்' என்ற படத்தில்தான் இத்தகைய அருமையான சிச்சுவேஷன் பாடல்.

    மூவர் கூட்டணியில் முத்தான பாடல். சந்தோஷமாக அமைதியாக ஆரம்பிக்கும் பாடல் ராமசாமி துப்பாக்கியுடன் வந்ததும் ஜெட் வேகமெடுக்கிறது நம் மதுர கானம் திரி போல. சாவித்திரியின் பயந்து நடுங்கும் வேக ஆட்டம் அற்புதமான ஒன்று. காதலி துரோகம் செய்ததை குத்திக்காட்டி ராமசாமி பேசும் வசனங்கள் அழியாப் புகழ் பெற்றவை. அந்தக்காலத்தில் அனைவருக்கும் இவ்வசனங்கள் மனப்பாடம்.

    இசைக்கருவி கொண்டு வாசிக்கும் பாலையாவை ராமசாமி துப்பாக்கியால் தோளில் சுட்டவுடன் "ஐய்யய்யோ" என்று அவர் அப்பாவியாக பயந்து அலறும் விதமே தனி. அப்புறம் 'வாசிக்கிறேன் வாசிக்கிறேன்' என்று அவர் தொடை நடுங்கி அலறுவது ரொம்ப பிரபலம்.

    ஜிக்கியின் அற்புதக் குரல்வளம். அருமையான மாடுலேஷன்கள். இன்பமும் துன்பமுமாக மாறி மாறி விறுவிறுவென்று ஒலிக்கும் அந்த ஜிகினாக் குரல். ஆபத்தை பாடலின் இடையே உணர்த்தும் அற்புத மியூசிக். சுழன்று சுழன்று சுனாமியாய் ஆடும் சாவித்திரி, இடையே அழகாக செருகப்பட்ட வீறுகொண்ட ராமசாமியின் 'கணீர்' வசனங்கள் என்று அனைத்தும் நிறையப் பெற்ற அம்சமான பாடல்.


    ஜாவர் சீத்தாராமன் திரைக்கதை வசனம் எழுத, அப்போதைய ஏ.வி.எம்மின் ஆஸ்தான இசை அமைப்பாளர் சுதர்சனம் இசையமைக்க, ஏ.வி.எம்.பேனர் இப்படத்தைத் தயாரிக்க, உடுமலை நாராயணகவி, கே.பி.காமட்சிசுந்தரம் பாடல்களை இயற்ற, எம்.வி.ராமன் இயக்கிய படம் 'செல்லப்பிள்ளை'. 1955 ஆம் ஆண்டு வெளிவந்த படம் இது.



    இனி பாடலின் முழு வரிகள்

    மதனா எழில் ராஜா நீ வாராயோ
    பருவமிதே பயனிதுவே
    இன்பம் தாராயோ

    மதனா எழில் ராஜா நீ வாராயோ
    பருவமிதே பயனிதுவே
    இன்பம் தாராயோ

    என்னைப் போல ஒரு பெண்ணை
    உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ
    இளமை பேரழகும் இனி
    என்றும் வாய்ப்பதுண்டோ
    வாழ்வில் என்றும் வாய்ப்பதுண்டோ

    என்னைப் போல ஒரு பெண்ணை
    உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ
    இளமை பேரழகும் இனி
    என்றும் வாய்ப்பதுண்டோ
    வாழ்வில் என்றும் வாய்ப்பதுண்டோ

    தருணமிதுவே பாராயோ
    கருணை புரிந்து வாராயோ
    தருணமிதுவே பாராயோ
    கருணை புரிந்து வாராயோ
    பருவமிதே பயனிதுவே
    இன்பம் தாராயோ

    மதனா எழில் ராஜா நீ வாராயோ
    பருவமிதே பயனிதுவே
    இன்பம் தாராயோ

    மின்னல் இடையழகும், அன்ன நடையழகும் கண்டு


    (அப்படியே ராமசாமியைக் கண்டு அதிர்வில் சாவித்திரி ஸ்டாப்)

    (இப்போது வசனம்)

    சாவித்திரி: ஆங்! நீங்களா?!

    கே.ஆர்.ராமசாமி: (துப்பாக்கியை நீட்டியபடி) ஏன் நிறுத்திவிட்டாய்? ஆடு! (பாலையாவைப் பார்த்து) ம்...வாசி

    (பாலையா 'கெக்கே பிக்கே' என்று அசடு வழிய)

    கே.ஆர்.ராமசாமி: ஏன் கோவேறு கழுதை போல் கனைக்கிறாய்? காதல் அகராதியில் இன்னும் பல ஏடுகள் புரட்ட வேண்டுமே என்று சிந்திக்கிறாயா? குப்பை மேட்டில் முளைத்த காளானைப் போல சிதறப் போகிறது உன்னுடைய சிந்தனை பீடம்.

    சாவித்திரி: (நடுவில் இடைமறித்து) இல்லீங்க...ஒத்திகை.

    கே.ஆர்.ராமசாமி: ஷட்-அப். (ஆங்கிலம் வேற) கற்பின் கலங்கரை விளக்கமே! காதலின் பொதுக் களஞ்சியமே! பாடியே சாகும் அன்னப் பட்சி போல் நீ ஆடியே சாக வேண்டும். ம்... ஆடு. (துப்பாக்கி மேல் நோக்கி சுடுவார்)

    (பாடல் தொடரும்)

    மின்னல் இடையழகும், அன்ன நடையழகும்
    கண்டும் மறுப்பதேனோ
    உனையே நான் நினைந்தே மனம் உருகுதல் சரிதானோ
    மனமும் உருகுதல் சரிதானோ


    (பின்னால் வாசித்துக் கொண்டிருக்கும் பாலையாவுக்கு விழுமே தோளில் ஒரு துப்பாக்கி சூடு!)

    பாலையா: (வலி தாங்க மாட்டாமல் அலறி) அய்யய்யய்யையோ....ஐயய்யோ! எம்மா! ஐயய்யோ! வாசிக்கிறேன்! வாசிக்கிறேன். வாசிக்கிறேன். (என்னமாய் அலறுவார் மனிதர்!)

    (பாடல் தொடரும்)

    மின்னல் நடையழகும் அன்ன நடையழகும்
    கண்டும் மறுப்பதேனோ
    உனையே நான் நினைந்தே
    மனம் உருகுதல் சரிதானோ
    மனமும் உருகுதல் சரிதானோ
    தருணமிதுவே பாராயோ
    கருணை புரிந்து வாராயோ
    தருணமிதுவே பாராயோ
    கருணை புரிந்து வாராயோ
    பருவமிதே பயனிதுவே
    இன்பம் தாராயோ

    மதனா எழில் ராஜா நீ வாராயோ
    பருவமிதே பயனிதுவே
    இன்பம் தாராயோ


    கே.ஆர்.ராமசாமி: ஏன்? காலால் இட்டதை தலையால் செய்து வந்த காதலன் இப்படி பேசுகிறானே என்று ஆச்சரியப் படுகிறாயா? ஊராரின் பேச்சை உதறித் தள்ளி, உன் பொருட்டு வீடு, வாசல், வேண்டியவர்கள், எல்லாவற்றையும் துறந்து, உன் சந்தோஷ வாழ்வுக்காக சட்டத்தின் வரம்பையும் மீறி, பணம் தேடிக் கொண்டு வந்த நாயகனா இப்படி பேசுகின்றான் என்று சிந்திக்கிறாயா? ம்...ஆடு.

    (துப்பாக்கியைக் கண்டு பயந்தபடி காதலனை முறைக்கும் சாவித்திரியின் அபார பார்வை. உயிருக்கு பயந்து, நிலைதடுமாறி, வேக வேகமாக பம்பரமாகச் சுழன்று அவர் ஆடும் ஆட்டம் படு மிரட்டல். 'நடிகையர் திலகம்' நடிகையர் திலகம்தான்)

    (பாடல் அதனுடன் சேர்ந்த ஆடல் படு வேகமெடுக்க ஆரம்பிக்கும்)

    என்னைப் போல ஒரு பெண்ணை
    உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ
    இளமை பேரழகும் இனி
    என்றும் வாய்ப்பதுண்டோ
    வாழ்வில் என்றும் வாய்ப்பதுண்டோ


    கே.ஆர்.ராமசாமி: ம்..வாசி! ம்...ஆடு! ம்...ஆடு! ம்..

    என்னைப் போல ஒரு பெண்ணை
    உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ
    இளமை பேரழகும் இனி
    என்றும் வாய்ப்பதுண்டோ
    வாழ்வில் என்றும் வாய்ப்பதுண்டோ


    (ஆஹா! இந்த இடத்தில் ஒலிக்கும் அந்த அற்புத அருமையான இசையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அவ்வளவு வேகம்... அவ்வளவு விறுவிறுப்பு)

    Last edited by vasudevan31355; 20th September 2014 at 09:37 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Thanks Russellmai thanked for this post
  11. #2787
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Location
    Adayar, Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    Mr. Vasudevan
    Mr. Krishna
    Mr. Rajesh
    Mr. Karthik
    Mr. Madhu
    Mr. Gopal
    Mr. Raj Raj
    Mr. Chinna Kannan
    Mr. Esvee

    all your articles are very very good. Particularly the special articles are very informative.

    I am fully enjoying this forum with rare videos, rare photos, unknown informations and all.

    Thanks.

    stl

  12. #2788
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Location
    Adayar, Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    Mr. Krishna

    a small request.

    when you recap any article in copy & paste method, please put the courtesy on top of the post.

    we are reading it as your own article, surprising about you, but at the end we find it was written by somebody and copy & paste from somewhere.

  13. Thanks Gopal.s thanked for this post
    Likes Gopal.s liked this post
  14. #2789
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு,

    செல்ல பிள்ளை ஒரு வித்தியாச படம். இதில் ஒரு காமெடி பாடல்.குண்டு பசவப்பா கரி பசவப்பா கண் மூடி தூங்கப்பா என்று..டி.எம்.எஸ் பாடுவார்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  15. #2790
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Location
    Adayar, Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    Mr. Vasudevan

    your 'today special' articles are excellent and very enjoyable.
    stl

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •