Page 27 of 401 FirstFirst ... 1725262728293777127 ... LastLast
Results 261 to 270 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #261
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    ஷோலா அவுர் ஷப்னம்

    தமிழில் நிலாப்பெண்ணே என்ற ஒரே படத்துடன், ஹிந்திப்படவுலகில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டி, மிகக்குறைந்த வயதிலேயே இவ்வுலகை விட்டு மறைந்த எழில்தேவதை திவ்யபாரதியின் கடைசிப்படம். கோவிந்தாவின் மிகச்சிறப்பான நடிப்பில் வந்த அருமையான படம். போலீஸ் கமிஷனரின் மகள் திவ்யபாரதியை பணயக்கைதியாக காட்டுக்குள் வைத்திருக்கும் கோவிந்தா மீது திவ்யாவுக்கு காதல் ஏற்பட, ஆனால் தன் தங்கையின் சாவுக்குக் காரணமாக இருந்த கும்பலைப்பழிவாங்கும் நோக்கத்தில் இருக்கும் கோவிந்தா, திவ்யாவின் காதலை ஏற்க மறுத்து ஒதுக்க, திவ்யா பாடும் பாடல் 'tu pagal premi awara' .

    இரண்டு சரணங்கள் பாடிய பிறகும் கோவிந்தா திவ்யாவின் காதலை ஏற்க மறுத்து அவரைப்பிடித்து தள்ளிவிட, சோகமும் விரக்தியும் அடைந்த திவ்யா பாடும் கடைசி சரணம் (இது திவ்யபாரதியின் கடைசிப்படம் என்பதாலும்) நம் மனதை அதிகமாகவே தாக்கும். அந்த கடைசி சரணத்தின் அர்த்தம் (நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டது)

    நான் உன்னை விட்டு வெகுதூரம் போகிறேன்
    இனி நீ என்னை எப்படி அழைத்தாலும்
    திரும்பி வரமாட்டேன்... வரவே மாட்டேன்....

    அன்பான திரி நண்பர்கள் இப்பாடலுக்கான வீடியோவை இணையுங்களேன்...
    Last edited by mr_karthik; 16th August 2014 at 05:25 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #262
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    தாலாட்டு படப் பாடல்

    மல்லிகைப் பூப்போட்டு கண்ணனுக்கு மங்கல நீராட்டு
    ராஜபாண்டியன், விஜயஸ்ரீ
    டி.எம்.எஸ்., சூலமங்கலம் ராஜலக்ஷ்மி



    விளக்கில்லாமல் கணக்கெழுதி


  4. Likes chinnakkannan, Russellmai liked this post
  5. #263
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    ஷோலா அவுர் ஷப்னம்

    நான் உன்னை விட்டு வெகுதூரம் போகிறேன்
    இனி நீ என்னை எப்படி அழைத்தாலும்
    திரும்பி வரமாட்டேன்... வரவே மாட்டேன்....

    அன்பான திரி நண்பர்கள் இப்பாடலுக்கான வீடியோவை இணையுங்களேன்...
    இந்தப் பாடலா ?


  6. Likes chinnakkannan liked this post
  7. #264
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    துணி அலமாரிக்குள் வைத்த கைக்குட்டை ஒன்று முன்னால் வைக்கப்படும் துணிகளால் பின்னால் தள்ளப்பட்டு காணாமல் போய்விடும். அதுபோல புதுப்புது பதிவுகளால் பழைய கோரிக்கை ஒன்று மறைந்து விடக்கூடும் என்ற அச்சத்தில் இழ்ழ்ழ்ழ்ழுது முன்னால் வைத்து விடுகிறேன்

    Quote Originally Posted by madhu View Post
    ஹி ஹி... ( அசட்டுச் சிரிப்பு + தலை சொ....)

    அதாகப்பட்டது கேட்டதை எல்லாம் கொடுக்கும் சிந்தாமணி, காமதேனு, கற்பக விருட்சம், அட்சய பாத்திரம் போல
    இங்கே நம்ம நண்பர்கள் இருப்பதால்...

    என் அடுத்த ரிக்வெஸ்டை வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

    "கடவுள் தந்த செல்வம்" என்பது படத்தின் பெயர் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை..

    பானுமதி நடித்து பாடிய

    "உன்னோடு என் நெஞ்சமே ஒன்றாய் ஊஞ்சலாடுதடா
    நீ ஆடினால் நான் ஆடுவேன் நிழல் போலுனை காத்திடுவேன்"

    என்ற பாடல் எங்கும் தென்படவில்லை. கிடைத்தால் கேட்டு ரசிக்கலாம்.

    கோரிக்கையை வைத்து விட்டேன்.. ப்ளீஸ் அன்பர்களே !!

  8. #265
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    God,Madhu,This is this is the limit.You are a magician.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #266
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    Tamil The HIndu

    இயக்குநர் கே.பாலசந்தரின் மகன் பால கைலாசம் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 54.

    இயக்குநர் கே.பாலசந்தரின் மூத்த மகன் பால கைலாசம். பி.கே என்று திரையுலகில் எல்லோராலும் அழைக்கப்பட்டவர். பொறியியல் துறையில் பட்டப்படிப்பை முடித்த அவர், அமெரிக்கா சென்று ஆடியோ சவுண்ட் துறையில் பட்டம் பெற்றவர். படிப்பை முடித்து சென்னை திரும்பியதும் மின்பிம்பங்கள் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். சின்னத்திரையில் ரயில் ஸ்நேகம், மர்மதேசம், கையளவு மனசு உள்ளிட்ட பல சீரியல்களை தயாரித்தார். இவர் சின்னத்திரையில் தயாரித்த பெரும்பாலான சீரியல்களை அவரது தந்தை கே.பாலசந்தர், நாகா போன்றவர்கள் இயக்கினர்.

    சினிமாவில் பல நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களை பாலசந்தர் அறிமுகப்படுத்தியதுபோல, சின்னத்திரையில் பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்திய பெருமை பி.கே.க்கு உண்டு.

    சென்னையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட காலகட்டத்திலேயே சின்னத்திரை தொடர் தயாரித்தவர். தொலைக் காட்சித் தொடர்கள் ஒளிபரப்பாகத் தொடங்கிய தொடக்க காலத்தில் லைவ் சவுண்ட் என்ற தொழில் நுட்பத்தை சின்னத்திரையில் கொண்டுவர ஊக்குவித்தவர். இந்திரா சவுந்தர்ராஜன் போன்றவர் களின் கதைகளை தரமான சின்னத்திரை தொடர்களாகக் கொடுத்தவர். கடந்த சில ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஆலோசகராக இருந்தார்.

    இந்நிலையில், நிமோனியா காய்ச்சலால் நுரையீரல் பாதிக்கப் பட்டு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். வெள்ளிக்கிழமை மதியம் அவர் காலமானார்.

    பால கைலாசத்தின் உடல் மயிலாப்பூரில் கே.பாலசந்தரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணிக்கு பெசன்ட் நகரில் இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. மறைந்த பால கைலாசத்துக்கு கீதா என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    மின்பிம்பங்கள் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் கைலாசம். சின்னத்திரையில் ரயில் ஸ்நேகம், மர்மதேசம், கையளவு மனசு உள்ளிட்ட பல சீரியல்களை தயாரித்தார். இவர் சின்னத்திரையில் தயாரித்த பெரும்பாலான சீரியல்களை அவரது தந்தை கே.பாலசந்தர், நாகா போன்றவர்கள் இயக்கினர்.

    gkrishna

  10. Thanks Gopal.s thanked for this post
  11. #267
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    // இந்தப் பாடலா ? //


    டியர் மது சார்,

    வாவ்...., இதுதான். இதுவேதான்.

    அனைத்துலக திவ்யபாரதி ரசிகர்கள் சார்பாக பிடியுங்கள் ஒருகோடி நன்றிகளை.

  12. #268
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நண்பர் கார்த்திக் நடிகை திவ்ய பாரதி அவர்களை பற்றி எழுதி இருந்த பாடல் சில நினைவுகளை மீட்டியது.

    நடிகை திவ்யபாரதி (25 February 1974 5 April 1993)
    மொத்தமே 19 வருஷம் 35 நாட்கள் தான் இந்த பூ உலகில் வாழ்ந்தார்
    நடிகை திவ்யபாரதி தனது 14வது வயதில் (1988 ம் ஆண்டு) குனஹோன் கா தேவதா படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்னர் விலக்கப்பட்டு
    (பின்னர் இந்த படம் அசாருதீன் 2வது மனைவி சங்கீத பிஜலாணி நடித்து வெளிவந்தது ) இப்படியாக 2 ஆண்டுகள் சினிமாவில் அறிமுகம் ஆகாமலேயே 1990 வரை 2 ஆண்டுகள் நிறைய படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு விலக்கப்பட்டு இறுதியில் வெங்கடேஷின் பொப்பிலி ராஜா தெலுகு திரை படத்தில் அறிமுகம் ஆகிறார். படம் சூப்பர் duper ஹிட்.இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் .தமிழில் வாலிபன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது
    தி Gods must be crazy போல் கார்ட்டூன் மிருகங்கள் நடித்து வெளி வந்தது [ப].3 வருஷம் 21 படங்கள் [/ப]என்று கொடி கட்டி பறந்து தன்னுடைய 19 வது வயதில் பால்கனியில் இருந்து விழுந்து இறந்து போனார். அவர் பாதியில் விட்டு போன படங்களை எல்லாம் பின்னாட்களில் அவர் ஜாடையில் இருந்த நடிகை ரம்பாவை வைத்து முடித்ததாக 1994 கால கட்டத்தில் (கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்) பேசப்பட்ட தகவல்

    அவர் நடித்த முதல் படமான பொப்பிலி ராஜ படத்தில் இருந்து பாலாவும்,எஸ் ஜானகியும் பாடும் ஒரு நல்ல காமெடி ஆன மெலடி பாடல்




    gkrishna

  13. Likes Gopal.s liked this post
  14. #269
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Laadlaa (தமிழ் இல் ரஜினியின் மன்னன் )

    நடிகை திவ்யபாரதி இறப்பதற்கு சில நாட்கள் முன் எடுத்த படத்தின் விடியோ காட்சிகள்

    பிறகு இந்த காட்சிகள் ஸ்ரீதேவி வைத்து reshoot செய்யப்பட்டது

    http://www.youtube.com/embed/YPYzuifkhGg?
    gkrishna

  15. #270
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நடிகை காஞ்சனாவின் பிறந்த நாள் இன்று . இந்த தகவலை நினைவு ஊட்டிய நண்பர் எஸ்வி அவர்களுக்கு நன்றி .

    காஞ்சனா-பிறப்பு-16.8.1939-வயது-72-ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இவரது குடும்பம் இருந்தது.பின்னாளில் இவரது குடும்பம் சென்னையில் குடியேறியது. சென்னையில் தான் இவர் பிறந்தார்.இயற்பெயர் வசுந்தரா தேவி.இதே பெயரில் அப்போது நடிகையொருவர் இருந்ததனால் ஸ்ரீதர் காஞ்சனா என பெயரை மாற்றினார். தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் இந்திப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.நடிக்க வருவதற்கு முன் விமானப் பணிப்பெண்ணாக இருந்தவர்.இவரது விமானத்தில் ஒரு முறை இயக்குநர் ஸ்ரீதர் பயணம் செய்த போது இவரைக் கண்டறிந்து 1964-இல் காதலிக்க நேரமில்லை படம் மூலம் திரையுலகுக்குக் கொண்டு வந்தார்.1980 வரையில் கதாநாயகியாக நடித்தார்.பின்னர் குறிப்பிட்ட வேடங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துவந்தார்.தற்போது முழு நேர ஆன்மீக வாதியாகிவிட்டார். சென்னையின் மையப்பகுதியான தியாகராய நகரில் இவருக்கு உரிமைப்பட்ட 4 கிரவுண்ட் நிலத்தை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து அந்த வழக்கு 25 வருடங்களுக்கும் மேலாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று இறுதியில் இவருக்கு சாதகமாக தீர்ப்பானது. சுமார் 22 கோடி மதிப்பிலான அந்த சொத்தை 2010-ஆம் ஆண்டு இவர் திருப்பதி-திருமலை தேவஸ்தானத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்



    சிவந்த மண் திரை படத்தில் இடம் பெற்ற பாடகர் திலகம் கண்ணிய பாடகி குரல்களில்

    இந்த பாடல் பாடுவதற்கு மிகவும் கஷ்டபட்டதாகவும் பின்னர் இஷ்டதெய்வங்களை வணங்கி வேண்டி பின் பாடியதாகவும் ஆனந்த விகடன் பேட்டியில் திரு சௌந்தரராஜன் அவர்கள் கூறிய நினைவு உண்டு . சற்று வசன நடையில் அமைந்த பாடல்களில் இதுவும் ஒன்று

    ஒரு நாளிலே...என்னவாம்...உறவானதே...தெரியுமே...
    கனவாயிரம்...நினைவானதே...
    வா வெண்ணிலா...வா வெண்ணிலா இசையோடுவா
    மழை மேகமே அழகோடு வா
    மஹராணியே மடிமீது வா (2)
    வந்தால்...அணைக்கும்...சிலிர்க்கும்...ம்ஹ்ம்ம் துடிக்கும்...

    நாளை வரும் நாளை என நானும் எதிர்பார்த்தேன்
    காலம் இது காலம் எனக் காதல் மொழி கேட்டேன்
    போதை தரும் பார்வை எனை மோதும் அலை மோதும் (2)
    போதும் எனக் கூறும்வரை பூவே விளையாடு
    வரும் நாளெல்லாம் இது போதுமே (2)

    மஞ்சம் இது மஞ்சம் என மார்பில் விழி மூடு
    கொஞ்சும் இதழ் சிந்தும் என் நெஞ்சில் ஒரு கோடு
    தஞ்சம் இது தஞ்சம் எனத் தழுவும் சுவையோடு (2)
    மிஞ்சும் சுகம் யாவும் வரவேண்டும் துணையோடு
    வரும் நாளெல்லாம் இது போதுமே (2)

    (ஒரு நாளிலே)

    gkrishna

  16. Likes chinnakkannan, Russellmai, Gopal.s liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •