Page 261 of 401 FirstFirst ... 161211251259260261262263271311361 ... LastLast
Results 2,601 to 2,610 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2601
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post

    Vettaru papanasathukku vadakka ? therka ? ( kapisthalam vadakkil..thirukkaugavur therkil )
    thirukkarugaavur (thirukkaLaavur) vazhiyaathaan enga oorukku pogaNum. appo therkkuthaane !

    power of attorney koduthaa pochchu! aanaal kaasu varaadhu!
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2602
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    என்னதான் வாத்தியாரையா வந்திருக்கார் என்றாலும் அங்கமுத்து, டி.ஆர்.ராஜகுமாரி பற்றியே பேசிக்கிட்டு இருப்பது சுதந்திரப் போராட்ட காலத்துக்கே போயிட்ட மாதிரி ஆயிடிச்சு.

    அதனால்தான் இந்தப் படங்கள்



    அப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்



    தவமணி தேவி ( யாருன்னு வாசு ஜி, கிருஷ்ணா ஜி, கோபால் ஜி எல்லாரும் சொல்லுவாங்க )

    சிக்காவின் கதறலில் ஒரு கழிலடி நெடுஞ்சீர் மாணவப்பா ( ஏன்.. ஆசிரியப்பாதான் இருக்கணுமா ? ) வந்து விழப்போகுது.

  4. Likes chinnakkannan liked this post
  5. #2603
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    பாடல் சுசீலா அல்ல ஈஸ்வரி என்ற திருத்ததிற்கும்,ஏற்கனவே போடப்பட்டது என்ற தகவலுக்கும் நன்றி மது சார் . நீங்கள் நச்சதேரேயன் என்றால் கோபகார கௌசிக மாமுனி யார் ?,உண்மை பேசும் ஹரிச்சந்திரன் நான்

    rajraj sir

    ஒரு அணா என்பது ஆறு பைசா என்று நினைவு . அதில் இருந்து தான் 50 பைசா நாணயத்திற்கு எட்டு அணா என்று சொல்வார்கள் என்றும் நினைவு
    3 1/2 அணாவிற்கு இனிப்பு காரம் காபி மூன்றும் கிடைத்து உள்ளது .அதே நேரத்தில் தரை டிக்கெட் விலையும் அவ்வளவு தான்.
    எவ்வளவு பெரிய தகவல் இந்த திரிக்கு இன்று கிடைத்து உள்ளது . 4 அணா அல்லது 31 பைசாகளில் தரை டிக்கெட் பார்த்த அனுபவம் உண்டு.
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் சோழ நாடு ஈன்று எடுத்த முத்தமிழ் வேந்தர் . அவர்களே

    நீங்கள் எங்களை எல்லாம் வாழ்த்துங்கள்.
    gkrishna

  6. Likes chinnakkannan liked this post
  7. #2604
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    என்னதான் வாத்தியாரையா வந்திருக்கார் என்றாலும் அங்கமுத்து, டி.ஆர்.ராஜகுமாரி பற்றியே பேசிக்கிட்டு இருப்பது சுதந்திரப் போராட்ட காலத்துக்கே போயிட்ட மாதிரி ஆயிடிச்சு.

    அதனால்தான் இந்தப் படங்கள்



    அப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்

    தவமணி தேவி ( யாருன்னு வாசு ஜி, கிருஷ்ணா ஜி, கோபால் ஜி எல்லாரும் சொல்லுவாங்க )

    சிக்காவின் கதறலில் ஒரு கழிலடி நெடுஞ்சீர் மாணவப்பா ( ஏன்.. ஆசிரியப்பாதான் இருக்கணுமா ? ) வந்து விழப்போகுது.

    அய்யா இவங்க அந்நாளைய கவுச்சி ராணி ஆச்சே
    gkrishna

  8. #2605
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சி நடிகை-தவமணி தேவி



    சிங்களத்துக் குயில் என்று அழைக்கப் பட்ட யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த தவமணி தேவியின் தென்னிந்தியத் திரைப் பிரவேசம் உண்மையில் தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 1930களிலே அதாவது ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தமிழ்த் திரையுலகில் புகுந்து கவர்ச்சி காட்டி நடித்து பலரது புருவங்களை உயர வைத்தவர். ஆடல், பாடல், நடிப்பு ஆகியவற்றுடன் கவர்ச்சியையும் சேர்த்துக் கொடுத்தவர். இன்னும் சொல்லப் போனால் தமிழ்த் திரையுலகிற்கு முதன் முதலில் கவர்ச்சியை அறிமுகப் படுத்தியவர் இவராகத்தான் இருக்கவேண்டும். இவரின் வரவிற்குப் பின்னரே பின்னாளில் திரையுலகில் ஒளிவீசிய சிலரது திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்திருக்கிறது. ரி.ஆர். ராஜகுமாரி, மாதுரிதேவி, அஞ்சலி தேவி... எனப் பலரை இந்த வரிசையில் சேர்க்கலாம்.


    யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தையார் இலங்கையில் பாரிஸ்ரர் தொழிலில் முன்னணியில் திகழ்ந்தவர். தவமணி தேவியின் திறமையை அவதானித்த பெற்றோர்கள் இவரை பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் படிப்பதற்காக ஊக்குவித்தார்கள்.

    உடுத்தியிருக்கும் பாவாடை நிலத்தைக் கூட்ட, மண் பார்த்துப் பெண்கள் நடந்த காலம் அது. அந்தக் கால கட்டத்திலேயே காற் சட்டையுடன் துணிச்சலாக நடிக்க வந்த பெண்மணி. அழகான குரலும், பார்த்தவுடன் கவரும் தோற்றமும், பழகும் விதமும், கதைக்கும் தன்மையும் தவமணி தேவிக்கு திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ரி.ஆர்.சுந்தரம் மொடேர்ன் தியேட்டர்ஸ் என்ற சினிமா கலையகத்தை உருவாக்கி அந்த நிறுவனத்துக்கான முதல் திரைப்படத்தை தயாரிக்கும் வேளையில் அதில் நடிக்கும் வாய்ப்பு தவமணி தேவிக்குக் கிடைத்தது.

    சதிஅகல்யா என்ற அந்தத் திரைப்படத்தில் அவருக்கு அகலிகை வேடம். இந்தத் திரைப்படத்தை தயாரிக்கும் வேளையில் ரி.ஆர்.சுந்தரம் பத்திரிகையாளர்களை அழைத்து தனது படத்தின் கதாநாயகியான தவமணிதேவியை அறிமுகப் படுத்தினார். பத்திரிகையில் பிரசுரிப்பதற்காக ரி.ஆர்.சுந்தரம் கொடுத்த தவமணியின் புகைப்படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் ஆச்சரியப் பட்டுப் போனார்கள். நீச்சல் உடையில் ஒய்யாரமாக சாய்ந்திருந்த தவமணி தேவியின் அந்தப் புகைப்படம் அவர்களது புருவங்களை உயர வைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைத்தான் ஏனெனில் பெண்கள் இழுத்துப் போர்த்தி சேலை உடுத்தும் காலம் அதுவாக இருந்தது. அந்த படம் எனக்கு கிடைக்க வில்லை ஆகவெ அதனை பதிவிடவில்லை மன்னிக்கவும்

    தவமணி தேவியின் அந்தப் புகைப்படம் பத்திரிகைகளில் பிரசுரமானபோது அது பலரது பார்வையைக் கவர்ந்தது. வசிட்டரின் மனைவியான அகலிகையாக நடிக்கப் போகும் பெண் இப்படி உடுத்தலாமா? என்பது போன்று பல விதமான விமர்சனங்களும் கூடவே எழுந்தன. 1930களில் ஒரு ஆசியப் பெண்ணை நீச்சல் உடையில் பத்திரிகைகளில் காண்பது அதுவே முதல் தடவையாக இருந்திருக்கும். இது போதாதா தவமணி தேவி பிரபல்யமாவதற்கு?

    சதிஅகல்யா படப்பிடிப்பு தொடங்க முன்னரே தவமணி தேவி மிகப் பிரபல்யமாகி விட்டிருந்தார். ஆகவே 1937இல் வெளியான மொடேர்ன் தியேட்டர்ஸின் சதிஅகல்யா பெரு வெற்றி பெற்றதுக்கு தனியாகக் காரணம் எதுவும் சொல்லத் தேவையில்லை. சதி அகல்யா வெற்றிக்குப் பின் தவமணி தேவி நடித்த மற்றுமொரு வெற்றித் திரைப்படம் வனமோகினி. இந்தத் திரைப்படம் 1940 இல் வெளிவந்தது. கொலிவூட்டில் டோர்தி லமோர் நடித்துப் பிரபல்யமான யங்கிள் என்ற திரைப்படத்தினையே தமிழில் வனமோகினி என்று எடுத்தார்கள். இதில் வனமோகினியாக ஆங்கிலத்தில் டோர்தி லமோர் உடுத்த கவாய் நாட்டுப் பாணியிலான உடையை இடுப்பில் கட்டி இவர் நடித்திருந்தார். இவர் தனது நடிப்போடு காற்றில் ஆடும் சிறு உடையின் மத்தியில் தனது உடல் அழகையும் காட்டிக் கொண்டது அன்றைய கால கட்டத்தில் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்திருக்கும். இவரது இந்தத் திரைப்படம் பரபரப்பாகப் பேசப்பட்டது மட்டுமல்லாமல் பெரு வெற்றியையும் ஈட்டிக் கொண்டது. அறுபது வருடங்கள் கழிந்தாலும் தென்னகத் திரையுலகில் இன்னமும் வனமோகினி பேசப்படுகிறதென்றால் அன்றைய காலகட்டத்தில் வனமோகினி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?

    1941இல் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான மற்றுமொரு திரைப்படம் வேடாவதி அல்லது சீதாஜனனம். இதில் இவர் சீதையாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தை திரையுலகம் தனது முக்கியமான குறிப்பில் இட்டிருக்கின்றது. காரணம் என்னவெனில் அன்று திரைப்படங்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்காத எம்.ஜி.ஆர். இதில் இந்திரஜித்தாக சிறு வேடம் ஏற்று நடித்திருந்தார். ஆக எம்.ஜி.ஆர். படப்பட்டியலில் வேடாவதியும் இணைந்து கொண்டது.

    தவமணி தேவி நடித்த மற்றுமொரு வெற்றித் திரைப்படம் வித்யாபதி. யூபிட்டர் பிக்ஸர்ஸ் சார்பில் ஏ.ரி.கிருஸ்ணசாமி எழுதி இயக்கியிருந்தார். ஆண்களைக் கவருவதற்காகவே இந்தத் திரைப்படம் தயாரிக்கப் பட்டதாக அன்று இந்தத் திரைப்படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்தன. இந்தத் திரைப்படத்தில் தேவதாசி மோகனாம்பாள் என்ற பாத்திரத்தில் தவமணி தேவி நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் மேற்கத்திய பாணியிலான இவரது நடனங்களும் பாடல்களும் இடம் பெற்றிருந்தன. இப்பொழுது வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களின் ஆங்கிலத் தலைப்புகளுக்காவும் பாடல்களில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்காவும் பட்டிமன்றங்களும் விவாதங்களும் வைத்துக் கொள்கிறோம். தமிழ் இனி செத்துவிடும் என்று தலையில் வேறு அடித்துக் கொள்கிறோம். 1946இல் வெளிவந்தை வித்யாபதி படத்தில் தவமணி தேவி பாடி ஆடிய பாடல் இப்படி வருகிறது,

    அதோ இரண்டு Black eyes!
    என்னைப் பார்த்து Once, twice!
    கண்ணைச் சிமிட்டி Dolly!
    கை கட்டி Calls me!
    Is it true your eyes are blue?
    I'll fall in love with you!
    I will dance for you!

    இந்தப் பாடலில் வரும் ஆங்கில வரிகளை தவமணி தேவியே எழுதியதாக பின்னாளில் இயக்குனர் ஏ.ரி.கிருஸ்ணசாமி அவர்கள் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கின்றார்.


    இவர் நடித்து பெரும் புகழையும் வெற்றியையும் ஈட்டிக் கொடுத்த அடுத்த திரைப்படம் 1948இல் வெளியான ராஜகுமாரி. இந்தத் திரைப்படத்தினை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதி இயக்கியிருந்தார். இலங்கையின் தலைநகர் கொழும்பில்தான் ஏ.எஸ்.ஏ.சாமி தனது படிப்பினை முடித்திருந்தார். ஏ.எஸ்.ஏ.சாமி அவர்கள் பின்னாளில் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியதொன்று. ராஜகுமாரி திரைப்படத்தையும் யூபிட்டர் நிறுவனமே தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்துக்கு ஒரு பெருமையிருக்கிறது. பின்னாளில் தமிழகத்தை ஒன்றன் பின் ஒன்றாக ஆண்ட மூன்று தமிழக முதலமைச்சர்களின் திரையுலகப் பிரவேசம் இந்த நிறுவனத்தினூடாகத்தான் நிகழ்ந்திருக்கின்றது. 1949இல் வெளியான யூபிட்டர் நிறுவனத்தின் வேலைக்காரி திரைப்படத்திற்கு கதை எழுதியவர் அறிஞர் அண்ணா ஆவார். யூபிட்டரின் ராஜகுமாரி திரைப்படத்திற்கு கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதியிருந்தார். அதில் முதன் முதலாக எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

    தவமணி தேவிக்கு ராஜகுமாரி திரைப்படத்தில் நாயகனை மயக்கும் ராணி வேடம். இவரின் மெய்ப் பாதுகாவலராக சான்டோ எம்.எம்.சின்னப்பாதேவர் நடித்திருந்தார். இந்தத் திரைப்படமே இவரின் திரையுலகப் பிரவேசமாக அமைந்தது.

    ராஜகுமாரி திரைப்படத்தில் தவமணி தேவி உடுத்தியிருந்த ஆடை பெரும் கவர்ச்சியாக இருந்ததால் படப்படிப்பு நடந்து கொண்டிருந்த இடத்திலேயே இவருக்கும் இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமிக்கும் இடையில் பெரும் சர்ச்சைகள் நடந்திருக்கின்றன. அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற தவமணி தேவியின் சில காட்சிகள் தணிக்கைக் குழுவின் கத்தரிக்கு இரையானது. ராஜகுமாரி திரைப்படம் பெரும் வெற்றியை ஈட்டிய போது அதில் நாயகனாக நடித்த எம்.ஜி.ஆரின் புகழை மேலும் உச்சிக்குக் கொண்டு போனது. அதன் கதை வசன கர்த்தாவான கலைஞர் மு.கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகம் சிறந்த வசன கர்த்தா என்னும் ஒரு அங்கீகாரத்தையும் தந்தது. ஆனால் இந்தத் திரைப்படத்தின் வெற்றி தவமணி தேவிக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. இந்தத் திரைப்படத்தின் பின்னர் அவரது திரையுலக வரலாறு இறங்கு முகமாகவே இருந்திருக்கின்றது. இந்த நிலையில் இவரில் பெரும் மாற்றங்கள் தென்படத் தொடங்கியது.ராஜகுமாரி திரைப்படத்தின் குறுந்தகடு இப்போதும் கிடைக்கின்றது விருப்பமுள்ளவர்கள் வாங்கிப் பார்க்கலாம்

    இந்த நிலையில் தவமணி தேவி 1962இல் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கோடிலிங்க சாஸ்திரியை காதலித்து மணந்து கொண்டார். திரைப்படத் துறையை விட்டு முற்றாக விலகி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். இராமேஸ்வரத்தில் தனது இறுதி வாழ்க்கையைக் கழித்த தவமணி தேவி அவர்கள் தனது 76வது வயதில் 10.02.2001இல் காலமானார்.

    1990களில் அதாவது திரைப்படத்துறையை விட்டு தவமணிதேவி அவர்கள் வெளியேறி பல ஆண்டுகளுக்குப் பின் தென்னிந்தியாவில் இருந்து வெளிவரும் ஒரு பிரபல வார இதழ் தவமணி தேவியைப் பற்றி இப்படி எழுதியிருந்தது.

    சுதந்திரத்திற்கு முன் தமிழ்த் திரைப்படவுலகில் புதிதான பூங்காற்று ஈழத்திலிருந்து ஜிவ்வென்று பிரவேசித்தது. தமிழ்ப்பட இரசிகர்கள் அந்த புதுமுகத்தைக் கண்டு ஆனந்தித்தனர், அதிசயித்தனர், பரவசப்பட்டுப் போயினர். படத்தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்குக் கதாநாயகியாக ஒப்பந்தச் செய்ய ஆவலாக இருந்தனர்.

    1937இல் தனது 15வது வயதில் திரைப்படத்துறையில் நுழைந்த தவமணி தேவியின் படங்கள் இன்றும் பேசப்படுகின்றதென்றால் அவர் எந்தளவு பதிவுகளை தமிழ்த் திரையுலகில் விட்டுச் சென்றிருக்கின்றார் என்பதை உணர முடிகின்றது.

    Thanks to Raman sir
    Last edited by gkrishna; 18th September 2014 at 11:55 AM.
    gkrishna

  9. Likes Russellmai, chinnakkannan liked this post
  10. #2606
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    dear madhu sir

    இந்த பாடல் இங்கு இன்னும் போடப்படவில்லை தானே ?videio irukkaa ?

    அதோ இரண்டு Black eyes!
    என்னைப் பார்த்து Once, twice!
    கண்ணைச் சிமிட்டி Dolly!
    கை கட்டி Calls me!
    Is it true your eyes are blue?
    I'll fall in love with you!
    I will dance for you!
    gkrishna

  11. #2607
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    சோழ நாடு ஈன்று எடுத்த முத்தமிழ் வேந்தர் . அவர்களே

    நீங்கள் எங்களை எல்லாம் வாழ்த்துங்கள்.
    I don't know how to act (naatakam) ! No 'muththamizh' ! I have always been a well wisher for youngsters !
    vaazhga vaLamudan. That was what MGR wrote when he autographed a book for me !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  12. #2608
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    பாருங்கய்யா
    மக்கள் திலகம் இவருக்கு கை எழுத்து போட்டு கொடுத்து இருக்கார்
    பெரிய ஆளுங்க இவரு . ஏகப்பட்ட சரக்கு வைச்சு இருக்காரு .கொஞ்ச கொஞ்சமா (நான் படத்தில் எஸ் எ அசோகன் சொல்வது ) முடிச்சுகள் அவுருது
    gkrishna

  13. #2609
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    dear madhu sir

    இந்த பாடல் இங்கு இன்னும் போடப்படவில்லை தானே ?videio irukkaa ?

    அதோ இரண்டு Black eyes!
    என்னைப் பார்த்து Once, twice!
    கண்ணைச் சிமிட்டி Dolly!
    கை கட்டி Calls me!
    Is it true your eyes are blue?
    I'll fall in love with you!
    I will dance for you!
    நான் இப்போதான் கேள்விப்படுகிறேன் கிருஷ்ணா ஜி.. !

  14. #2610
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    பாருங்கய்யா
    மக்கள் திலகம் இவருக்கு கை எழுத்து போட்டு கொடுத்து இருக்கார்
    பெரிய ஆளுங்க இவரு . ஏகப்பட்ட சரக்கு வைச்சு இருக்காரு .கொஞ்ச கொஞ்சமா (நான் படத்தில் எஸ் எ அசோகன் சொல்வது ) முடிச்சுகள் அவுருது
    அவர் கிட்டே வாத்தியார் கையெழுத்து போட்ட புத்தகம் இருக்கலாம்.
    என் கிட்டே வாத்தியாரையாவே கையெழுத்து போட்ட புத்தகம் இருக்கே !!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •