Page 15 of 401 FirstFirst ... 513141516172565115 ... LastLast
Results 141 to 150 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #141
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    கிருஷ்ணா ஜி...

    நான் நெனச்சேன்... நீங்க சொல்லிட்டீங்க..

    அதாங்க நமக்குள்ளே இருக்கற அதிசயம்...

    தூக்குத்தூக்கி வசனம் ஞாபகம் வருதா...
    அதே அதே சபாபதே
    சட்டம்பிள்ளை வெங்கட்ராமன்

    நிழல் - சினிமா இதழ் ஆசிரியர் திருநாவுகரசு
    இன்னும் வந்து கொண்டு இருக்கிறதா சார்
    Last edited by gkrishna; 15th August 2014 at 03:23 PM.
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #142
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    டி.எம்.எஸ். பி.சுசீலா, எஸ்.பி.பாலா எஸ்.ஜானகி, ஏ.எல்.ராகவன் எல்.ஆர்.ஈஸ்வரி .... இந்த வரிசையில் டூயட் பாடல்களுக்கென்று தனி இணையாக புகழ் பெற்ற குரல்கள் ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம்.. அது என்னவோ இவர்கள் இரண்டு பேரும் இணைந்து பாடிய பாடல்களின் இனிமையே தனி.

    ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் பாடிய பாடல்களைக் கேட்க வேண்டுமென்றால்

    1. மாலை 3.30 மணியிலிருந்து 5.30 மணி வரை கேட்க வேண்டும்
    2. அதுவும் மலைப்பிரதேசத்தில் கேட்க வேண்டும்
    3. சுற்றி யாரும் இருக்கக் கூடாது.
    4. டேப் ரிகார்டரில் இந்தப் பாட்டைப் போட்டு ஓட விட்டு தரையில் ஜமக்காளம் விரித்து கூடவே ஏதேனும் கொறிக்கத் தீனியை வைத்துக் கொண்டு சாய்ந்த நிலையில் கண்ணை மூடிக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு கால பாட்டுக்கும் ஒவ்வொரு சூழ்நிலையில் தான் கேட்க வேண்டும்.

    அப்படி ஒரு வரிசையைத் தரலாம் என இருக்கிறேன். தொடக்கமாக

    இளைய பிறவிகள் படத்திலிருந்து கார்காலம் இது கார்காலம்... சங்கர் கணேஷ் இசையில்..

    http://www.inbaminge.com/t/i/Ilaya%20piravigal/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. Likes Russellmai, chinnakkannan liked this post
  5. #143
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல் - ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் ஸ்பெஷல்

    இந்த வரிசையில் கை நாட்டு திரைப்படத்திலிருந்து ஊரெங்கும் உன்னைத் தேடுதோ ... இசை சந்திரபோஸ்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #144
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல் - ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் ஸ்பெஷல்

    கதை கதையாம் காரணமாம் திரைப்படத்திற்காக மெல்லிசை மன்னரின் இசையில் அதிகம் வெளிவராத இனிமையான பாடல்.

    கையைத் தந்தேன் தொட்டுக் கொள்ள..

    பாடல் வரிகள் வைரமுத்து அவர்கள்..

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Likes Russellmai liked this post
  8. #145
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    வெறும் பகிர்வு தான் இந்த பதிவு

    பிலிமாலயா 1994 இதழில் வந்த இசை அமைப்பாளர் இளைய ராஜா அவர்களிடம் கண்ட வித்தியாச நேர்காணல் (இசை இல்லாமல் )



    டாக்டர் இளையராஜாவிடம் கேட்கும் கேள்விகள் இசையைப் பற்றியதாகத்தான் இருக்க வேண்டுமா? அரசியல், சமூக, இலக்கிய சிந்தனைகள் கொண்ட அவரிடம் சற்றே வித்தியாசமான கோணத்தில் கேள்வி கேட்டால் என்ன?

    எனவே, இசையிலிருந்து ஒதுங்கி நின்று இன்னும் சொல்லப்போனால் திரையுலகிலிருந்தே தள்ளி நின்று கேட்ட சில கேள்விகளுக்கு துணிச்சல் கலந்த தன் பாணியில் பதிலளிக்கிறார் ராஜா.

    ஆரம்ப காலத்தில் உங்களிடம் இருந்த அரசியல் உணர்வு இன்னும் அப்படியே உள்ளதா? கம்யூனிச சிந்தனையில் வளர்ந்தவர் நீங்கள் இன்று சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்டிருக்கும் கம்யூனிச வீழ்ச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இன்றைய இந்திய கம்யூனிச கட்சிகளைப் பற்றி என்ன கருத்து கொண்டிருக்கிறீர்கள்?

    இயற்கையின் அமைப்பே கணத்திற்குக் கணம் மாறுகின்ற வகையில் அமைந்துள்ளது. கொஞ்ச நேரம் ஒரு நிலையில் உட்கார்ந்திருப்பவன், அந்த நிலையிலிருந்து மாறினால் அதில் ஒரு சுகம் காண்கிறான் இல்லையா? அந்த கொஞ்ச நேரத்திலே கூட ஒரு மாற்றம் அவசியமாகிறது. அதுதான் மனித மனம், அதற்கு ரஷ்யா, இந்தியா, ஜெர்மனி என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது. உலகில் எந்தக் கொள்கையாக இருந்தாலும் ஜனங்கள் இதைத்தான் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என வரையறுக்கும்போது அதுவே சர்வாதிகாரமாக ஆகி, அதிலிருந்து விடுபட வேண்டும் எனும் உணர்வு மக்களுக்குத் தோன்றுவது இயல்பு. வீடுகளில் கூட அதிகக் கண்டிப்புடன் வளர்க்கப்படும் பிள்ளை வீட்டை விட்டு ஓடுவதில்லையா? அது போலத்தான் இதுவும். அன்று ரஷ்யாவில் வந்த கம்யூனிசம் என்வாழ்வை மாற்றவில்லை. அதுபோலவே வீழ்ச்சியும்.

    நீங்கள் சிம்பொனி இசையமைத்தது பற்றி பாராளுமன்றத்தில் முதன்முதலாக புகழ்ந்து பேசியவர் வை. கோபால்சாமி. அவர் திமுகவிலிருந்த பிரிந்து வந்து விட்டதைப் பற்றி

    தி.க.வை இரண்டு கட்சிகளாக தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் தி.க. தி.மு.க. என்ற பெயரில் பிரித்து நடத்தினார்கள். அந்த தி.மு.க.வை இன்று மூன்று கட்சிகளாக அ.தி.மு.க. வென்றும், கலைஞர் தி.மு.க., வைகோ தி.மு.க. என நடத்துகிறார்கள். மொத்தத்தில் தமிழ்நாட்டை தி.க.தான் ஆளுகிறது. நீண்டகாலமாக.

    தூய்மையான அரசியல் இயக்கங்கள் சினிமாக்காரர்களின் முற்றுகையால்தான் கீழ்த்தரமான சூழலுக்கு ஆளாயிற்று என்ற குற்றச்சாட்டைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

    தூய்மை என்ற சொல் இறைவன் ஒருவனுக்கே உரியது. நாம் அழுக்காக இருக்கிறோம் என்ற காரணத்தால்தான் தூய்மை என்பதை நாம் சுட்டிக் காட்டுகிறோம். இதில் அரசியல் என்ன? சினிமா என்ன? பிறப்பே தூய்மை கெட்டதால் வந்ததுதானே?

    உங்களுக்கு ஆளும் கட்சி தவிர மற்ற கட்சியினர் பாராட்டு விழா எடுத்துவிட்டார்கள். அந்த தவிர்ப்புக்கு காரணம் ஊகிக்க முடிகிறதா?

    பாராட்டு என்பதே ஊக்கப்படுத்துவதற்காக உபயோகப்படுத்தப்படுவது. ஊக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டிருப்பவனைப் பாராட்ட வேண்டிய தேவை இல்லை. நடக்கமுடியாத குழந்தை ஒன்றை கைதட்டி உற்சாகப்படுத்தி நடக்க வைக்க நடைவண்டி பழக்குவதில்லையா? நான் இவைகளை ஏற்றுக் கொண்டது நடக்க முடியாதவன் என்பதால் அல்ல. நான் எல்லோருக்கும் பொதுவானவன்.

    தமிழ், தமிழன் என்றெல்லாம் குரல் கொடுப்பது பற்றி உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன? இன உணர்வு அவசியமா?

    தமிழர்கள் தமிழ் என்று குரல் கொடுக்காமல் தெலுங்கு என்றா குரல் கொடுப்பார்கள்? மனிதநேய உணர்வு ஒன்றே அவசியம்.

    மதம் நம்மைப் பிரித்துவிடும் என்ற பயம் உங்களுக்கும் ஏற்படுகிறதா? இந்தியா இந்துக்களின் நாடு என்பது ஜீரணிக்க முடிகிறதா?

    வேறுபட்ட மதங்கள் தோன்றுவதே பிரிப்பதற்குத்தானே. மனிதன் என்ற உணர்விலிருந்து நாம் ஏதோ ஒரு இனத்தையும், மதத்தையும் சார்ந்தவர்கள் எனக் கற்பனை செய்து கொள்வதில் என்ன லாபம்? மதங்கள் இறைவனை அடையும் வழி என்கிறார்கள். பாதைகள் ஊர் ஆகுமா? மதங்கள் இறைவனில்லை. மதங்கள் நமது விருப்பு வெறுப்புகள்.

    இன்று திராவிட கட்சிகள் பல விதங்களில் உடைந்து போய் தனது உண்மையான முகத்தைத் தொலைத்துவிட்டு பரிதாபமாக நிற்கிறதே. அனுதாபப்படுகிறீர்களா?

    இரண்டாவது கேள்விக்கான பதில் இதற்குப் பொருந்தும்.

    ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டுகிறீர்களே வயதும், வசதியும் தான் இறை நம்பிக்கையை அதிகப்படுத்துகின்றன என்ற தத்துவ அடிப்படையிலா?

    வயதும் வசதியும் உள்ள எத்தனையோ பேர் ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லாதவர்களாக இருக்கிறார்களே. அதை நீங்கள் காணவில்லையா? நிலையில்லாது சுற்றிக்கொண்டிருக்கும் சூரியன் நிலைத்திருக்கும் வானத்தைத்தானே சுற்ற வேண்டியிருக்கிறது. நாம் எல்லோரும் நிலையில்லா உலகத்தில் வாழ்வதால்தான் நிலையான தன்மையை வாழ்க்கை முறையிலும், மன அமைப்பின் முறையிலும் விரும்புகிறோம்.

    உங்கள் எதிர் முகாமிலிருந்து எக்கச்சக்கமான ஏவுகணைகள் தொடுத்தும் ஏன் மௌனியாக இருக்கிறீர்கள்?

    அதற்கு அவர்களுக்கு நேரம் இருக்கிறது. எனக்கு நேரம் இல்லை. மேலும் அவர்கள் தங்களை யார் என்று காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள். நான் ஏன் அதைத் தடுக்க வேண்டும்? எனக்கு வேறு வேலை இருக்கிறது.

    புகைப்படம் எடுப்பதை பொழுது போக்காக கொண்டுள்ள தாங்கள் எந்த மாதிரியான காட்சிகளை சிறை பிடிக்க விரும்புகிறீர்கள்?

    இயற்கை காட்சிகளை.

    திரையுலகில் தொடர்பில்லாத மற்ற எவருடனாவது பொழுதைக் கழிப்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறீர்களா?

    ஆம். சாமியார்களிடம். ஆனால் நேரமில்லை.

    இன்றைக்கிருக்கும் பொருளாதார, அரசியல், சமூகச் சூழ்நிலையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்ல மாற்றம் அமையும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

    இப்போதிருக்கும் ஆட்சி உங்களுக்குப் பிடிக்கவில்லை. அல்லது மாற்றம் வேண்டும் என்பது உங்கள் கேள்வியிலேயே தெரிகிறது. எத்தனை மந்திரிசபைகள் மாறிய போதும் மக்களின் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை என்பது அடிப்படையான உண்மை. எந்தக் கட்சி வந்தாலும் அவர்களுக்கு உள்ள எதிர்ப்பைச் சமாளிக்கவே நேரம் சரியாகப் போய் விடுகிறது.

    உண்மையில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை எந்தக் கட்சியாலும் மாற்ற முடியாது. சூழ்நிலை அப்படி. அந்தந்த குடும்பத்தில் உள்ளவர்களே உழைத்துப் பாடுபட்டு அவர்களின் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஏமாற்றாது, உண்மையுடன் நமக்காகப் பாடுபடுவது நம்மை விட்டால் வேறு யார்?


    இசை ரசிகர்களின் நீண்ட நாள் தாகத்தை நிறைவேற்றும் வண்ணம் உங்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினர் டாக்டர் பட்டம் கொடுத்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    திறமைக்குக் கிடைக்கும் பரிசு ஒன்றே அதற்குரிய தகுதியைப் பெறுகிறது. திறமையின்றி சிபாரிசின் மூலமாக வாங்கிக் கொள்ளும் பரிசு. அதற்குரிய சிறப்பையும் இழந்து, பரிசு பெற்றவனையும் அது கேவலப்படுத்தி விடுகிறது. பல்கலைக்கழகத்தினரே என்னை அணுகி கேட்டதால், மறுப்பது மரியாதையாகாது என்ற உணர்வோடு. இந்த டாக்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டேன். தவிர இந்த பட்டங்களிலும் பதவிகளிலும் எனக்கு மோகமில்லை. காரணம் இந்த உடம்பையே ஒரு சுமையாக எண்ணி வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்.

    சமுதாயத்தை நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் ஒரு இசை அமைப்பாளராகிய நீங்கள், எந்த இசையமைப்பாளருக்கும் கிடைக்காத செல்வாக்கைப் பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை எல்லாதரப்பிலும் பெற்றிருக்கும் நீங்கள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று m.l.a. ஆகவோ m.p.ஆகவோ ஆகி மக்களின் வளர்ச்சிக்காக ஏன் பாடுபடக் கூடாது?

    என்னைச் சாக்கடையில் தள்ளப் பார்க்கிறீர்களா? நான் முன்னமேயே குறிப்பிட்டது போல் யார் பதவிக்கு வந்தாலும் பதவிக்கு வந்தவரின் வாழ்க்கைத் தரம் மாறுமே தவிர மக்களின் வாழ்வில் மாற்றம் வராது. மேலும் வளர்ச்சி என்பதே அழிவுதான். நன்றாக யோசித்துப் பாருங்கள். குழந்தையாக இருந்து சிறுவனாகும் வளர்ச்சி குழந்தைப் பருவம் அழிந்ததால் வந்தது. சிறுவனாக இருந்து வாலிபனாகும் வளர்ச்சி சிறு பருவம் அழிந்ததால் வந்தது. வாலிபனாக இருந்து தந்தையாகும் வளர்ச்சி. வாலிபப் பருவம் அழிந்ததால் வந்தது. தந்தையாக இருந்து தாத்தாவாகும் வளர்ச்சியும், அதற்கு முன்னிருந்த நிலை அழிந்ததால் வந்தது.

    இன்னும் நன்றாகச் சொன்னால், ஒரு கட்சியின் உச்சகட்ட வளர்ச்சி நாற்காலிதான். பதவியை அடைந்த கட்சி அதற்குமேல் வளரவே முடியாது. பதவியை விட்டு அந்தக் கட்சி என்றைக்குமேலேயோ, கீழேயோ முன்னாள் அமைச்சர், அல்லது முன்னாள் எம்.பி. என்று போட வேண்டும். என்னை எடுத்துக் கொள்ளுங்கள். நான் கிழவனாக ஊன்றுகோலின் உதவியுடன் இருந்தாலும் சாகும்வரை நான் இளையராஜா தான். அதில் ஒரு மாற்றமும் முன்னாள், இன்னாள் என்று வராதல்லவா?


    இப்படி ஒரு மேடை கிடைத்தால் இதையெல்லாம் சொல்லலாமே என்று இதயத்தில் எதையாவது தேக்கி வைத்திருக்கிறீர்களா?

    எந்தவொரு கட்சியையும் நம்பாதீர்கள். எந்தவொரு தலைவனையும் நம்பாதீர்கள். எந்த மதத்தையும் சாராதீர்கள். நீங்களே உங்கள் உலகம். திக்கு இல்லாது போனால்தான் தெய்வம் துணையிருக்குமே தவிர, எதை எதையோ நம்பி சுய பலத்தை இழந்தவனைத் தெய்வமும் கண்டு கொள்ளாது.

    நமக்காக உழைக்க நம்மை விட்டால் வேறு யாருமில்லை. ஒரு தலைவனை நீங்கள் ஏற்கும் போது, எதிர்பார்க்கும் பொழுது உங்கள் மேல் உள்ள நம்பிக்கை குறைந்து உங்கள் சுயபலம் போய்விடுகிறது. உங்களையே நீங்கள் நம்புங்கள். வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.


    நன்றி : பிலிமாலயா 1994
    gkrishna

  9. #146
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் பாடிய பாடல்களைக் கேட்க வேண்டுமென்றால்

    1. மாலை 3.30 மணியிலிருந்து 5.30 மணி வரை கேட்க வேண்டும்
    2. அதுவும் மலைப்பிரதேசத்தில் கேட்க வேண்டும்
    3. சுற்றி யாரும் இருக்கக் கூடாது.
    4. டேப் ரிகார்டரில் இந்தப் பாட்டைப் போட்டு ஓட விட்டு தரையில் ஜமக்காளம் விரித்து கூடவே ஏதேனும் கொறிக்கத் தீனியை வைத்துக் கொண்டு சாய்ந்த நிலையில் கண்ணை மூடிக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
    அருமை ராகவேந்தர் சார்

    கொறிக்க நொறுக்கு தீனி, மலை பிரேதேசம், ஜமுக்காளம் (பவானி)

    தப்ப நினைக்க வில்லை என்றால் தொட்டு கொள்ள ஊறுகாய் எதாவது உண்டா ?
    gkrishna

  10. #147
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    காதலிக்க நேரமில்லை 50வது பொன்விழா ஆண்டு



    [ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படங்கள் இன்று மீண்டும் கவனம் பெறத் தொடங்கியுள்ளன. 1960-களில் வெளிவந்த பல படங்கள் காலத்தால் வெல்ல முடியாத காவியங்களாக இன்றும் மிளிர்கின்றன. அப்படிப்பட்ட ஒரு படம்தான் காதலிக்க நேரமில்லை. இயக்குநர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் 1964-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி வெளிவந்த இப்படம் முழு நீள நகைச்சுவை கலந்த காதல் படம். இந்தப் படத்துக்கு இன்று வயது 50.

    தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த படம். முக்கோணக் காதல் கதைக்குப் பெயர் போன இயக்குநர் ஸ்ரீதர் இந்தப் படத்தில் காமெடியைக் கையில் எடுத்து விலா எலும்பு நோக சிரிக்க வைத்தார். முத்துராமனும் ரவிச்சந்திரனும் செய்யும் காமெடி கலாட்டாக்கள், அவர்களுக்கு இணையாக காமெடி செய்யும் காஞ்சனா, ராஜஸ்ரீ, சினிமா எடுக்கிறேன் என்று பாலையாவுக்குப் பேய் கதை சொல்லும் நாகேஷ், இன்னும் சச்சு, ராகவன் என்று இந்தப் படத்துக்கு உயிர் கொடுத்தவர்கள் பலர்.

    இந்தக் காவியத்தை இசை மூலம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி மெருகேற்றினார்கள். மாடி மேலே , என்ன பார்வை, உங்கள் பொன்னான கைகள், அனுபவம் புதுமை, நாளாம் நாளாம், மலரென்ற முகமொன்று, காதலிக்க நேரமில்லை, நெஞ்சத்தை அள்ளிஅள்ளித் தா ஆகிய எட்டுப் பாடல்களும் இன்றும் என்றும் ரசிகர்களைக் கிறங்கடிக்கும் பாடல்கள்.

    இப்படிப் பல பெருமை பெற்ற காதலிக்க நேரமில்லை பொன்விழாக் கொண்டாட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் நாளை (16-8-14) மாலை 6:30 மணிக்கு நடக்கிறது. நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் முயற்சியில் நடைபெறும் இந்த விழாவில் காதலிக்க நேரமில்லை படத்தில் பங்கெடுத்த நட்சத்திரங்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள்.

    இதுபற்றி ஒய்.ஜி. மகேந்திரன் கூறும்போது, அந்தக் காலத்தில் எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய படம் இது. இதுவரைக்கும் இந்தப் படத்தை 180 முறை பார்த்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை இடம் பெற்ற படமும் இதுதான். இப்படி ஒரு காவியத்தைத் தந்த இயக்குநர் ஸ்ரீதரைப் பாராட்டி 2005-ம் ஆண்டு பாராட்டு விழா நடத்தினேன். இப்போது இந்தப் படத்துக்கு விழா எடுக்கிறோம். இந்தப் படத்தில் பங்கெடுத்த கலைஞர்கள் விழாவில் கவுரவிக்கப்பட இருக்கிறார்கள். விழாவில் காதலிக்க நேரமில்லை படப் பாடல்கள் ஆர்கெஸ்ட்ரா மூலம் இசைக்கப்படும். இடையிடையே படத்தின் காட்சிகள் திரையிடப்படும் என்றார்.

    ஆல்பா மைண்ட் பவர் நிறுவனம் முதன்மைப் புரவலராக இருந்து, இந்நிகழ்ச்சியை வழங்க, காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ், அசோக் குரூப், ஹுண்டாய் மோட்டார் பிளாசா கிண்டி, வெற்றி ரியல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.
    gkrishna

  11. #148
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அம்பிகா லெமன் பிக்கிள், 777 கடாரங்காய் ஓகே..நல்லா இருக்கும்.. க்ராண்ட் ஸ்வீட்ஸ்ல சம் டைம் மாவடு நல்லா இருக்கும்..ஆமா எதுக்கு ஊறுகாய்

    **

    எனக்கென்னமோ குரு பாட்டு தான் நினைவுக்கு வருது..

    எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா...

  12. #149
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    Tamil Hindu Independence day

    பிற இந்திய மொழித் திரைப்பாடல்களைவிட மிகச் சிறந்தவை எனப் போற்றத்தக்க பல சுதந்திர உணர்வுப் பாடல்கள் தமிழ்த் திரையில் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவையெல்லாம் மற்ற மொழிகளில் உள்ளதுபோல், ஒரு குறிப்பிட்ட படத்திற்காக எழுதப்பட்ட பாடல்கள் அல்ல. இந்த வினோத நிலைக்கு இரண்டு சுவையான காரணங்கள் உள்ளன.

    முதலாவது, இந்திய சுதந்திரம் என்பது இப்போதைக்குச் சாத்தியமல்ல என்ற அவநம்பிக்கையில் நாடே துவண்டு கிடந்த தருணத்தில், ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்தச் சுதந்திரம் அடைந்துவிட்டோம் போன்ற வரிகள் மூலம் பரவசம் ஏற்படுத்திய பாரதியின் சுதந்திர உணர்வுப் பாடல்கள். இந்திய சுதந்திரம், இந்திய தேசியக் கொடி, தேசத் தலைவர்கள், அவர்களின் தியாகம் ஆகியவை பற்றி மட்டுமின்றி, அஞ்சி அஞ்சிச் சாவார், இவர் அஞ்சாதப் பொருள் இல்லை அவனியிலே போன்ற வரிகள் வாயிலாக அன்றைய மக்களின் இயலாமை பற்றியும் பாரதி எழுதிய ஏராளமான பாடல்களைக் காப்புரிமை இன்றி எடுத்துப் பயன்படுத்தும் வாய்ப்பு தமிழ்த் திரைப் படங்களுக்கு இருந்தது. இதனால் காலத்தால் அழியாத ஏராளமான சுதந்திர உணர்வுத் திரைப் பாடல்கள் தமிழ்ப் படங்களில் ஒலித்திருக்கின்றன.

    இரண்டாவது காரணம் தமிழ் உணர்வோடு தொடர்புடையது. திரையிசைக் கவிஞர்களின் பொற்காலம் என்று கொண்டாடப்பட்ட 50, 60-களில் கோலோச்சிய திரைப்படப் பாடலாசிரியர்கள் பலரும் - பின்னாளில் தேசிய மற்றும் ஆன்மிகவாதியாக மாற்றம் கொண்ட கண்ணதாசன் உட்பட பலரும்- திராவிட, தமிழக உணர்வுகளுக்கே அப்போது அதிக முக்கியத்துவம் அளித்தார்கள். எனவே இந்தக் காலகட்டத்தில் படத்துக்காகவே எழுதப்பட்ட தேசியப் பாடல்கள் குறைவாகவே இருந்தன.

    உணர்வின் அடிப்படையில் தமிழ், இந்தித் திரைப்பாடல்கள் பல விதங்களில் ஒன்றுபட்டாலும், அவற்றை வெளிப்படுத்தும் முறையில், பாரதியின் பாடல்களைத் தவிர்த்து நோக்கினால், வேறுபடுகின்றன வழக்கப்படி முதலில் இந்திப் பாடல்.

    ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும்கூடப் பாடப்படும் உணர்வையும் பொருளையும் உள்ளடக்கிய இந்தப் பாடல், திலீப் குமார், வைஜயந்திமாலா நடித்து

    1964-ல் வெளிவந்த லீடர் என்ற வெற்றிப் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஷகீல் பதாயீ எழுதி, திலீப் குமாரின் திரைக் குரல் எனப் போற்றப்பட்ட முகமது ரஃபி பாடியுள்ள உணர்ச்சி மிக்க இப்பாடலின் இசை அமைப்பாளர் நௌஷாத்.

    பாடல்:

    அப்னி ஆஜாதீ கி ஹம் ஹர் கிஜ் மிட்டா சக்தே நஹீன்

    சர் கட்டா சக்தே ஹைன் லேக்கின் சர் ஜுக்கா சக்தே நஹீன்

    ஹம்னே சதியோன் மே யே ஆஜாதீ கி நேமத் பாயீ ஹைன் நேமத் பாயீ ஹைன்

    சேக்டோன் குர்பானியான் தேக்கர் யே தௌலத் பாயீ ஹைன் யே தௌலத் பாயீ ஹைன்

    ... ... ...

    பொருள்:

    எங்கள் சுதந்திரத்தை நாங்கள் எதற்காகவும் இழக்க முடியாது.

    (எங்கள்) தலையை வெட்ட இயலுமேயன்றி அடிபணியச் செய்ய முடியாது.

    நாங்கள் எத்தனையோ காலமாகப் போராடி இந்தச் சுதந்திரத்தின் உரிமையைப் பெற்றுள்ளோம்

    எண்ணற்ற தியாகங்கள் மூலம் இந்தப் பொக்கிஷத்தைப் பெற்றுள்ளோம்

    (அஞ்சாத) புன்னைகையுடன் எங்கள் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டுகளை ஏற்றுள்ளோம்

    எத்தனை அவலங்களைத் தாண்டிய பிறகு இந்தச் சொர்க்கம் எங்களுக்குக் கிடைத்தது

    சுய லாபத்திற்காக நாங்கள் எங்கள் தன்மானத்தை இழக்க முடியாது

    எங்கள் சுதந்திரத்தை நாங்கள் எதற்காகவும் இழக்க முடியாது

    அநீதி என்ன, மக்களுடைய நம்பிக்கைகளுக்கு எதிராகச் செல்ல முடியுமா?

    எவரும் வர முடியாது அனல் காற்றின் எதிரில்

    அனல் காற்றின் எதிரில்

    அமைதிக்கு எதிரியாக லட்சம் சிப்பாய்கள் வரட்டும்.

    லட்சம் சிப்பாய்கள் வரட்டும்

    நிற்க முடியாது எங்கள் ஒற்றுமைக்கு முன்

    எங்கள் ஒற்றுமைக்கு முன்

    எதிரிகள் அசைக்க முடியாத கற்கள் நாங்கள்

    கற்கள் நாங்கள்

    எங்கள் சுதந்திரத்தை நாங்கள் எதற்காகவும் இழக்க முடியாது.

    (எங்கள்) தலையை வெட்ட இயலுமேயன்றி அடிபணியச் செய்ய முடியாது.

    இனி தமிழ்ப் பாடல்.

    மற்ற எல்லா உணர்வைப் போன்றே விடுதலை உணர்வையும் பாரதிக்கு அடுத்தபடியாக அழகாக வெளிப்படுத்தித் தமிழ்த் திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கண்ணதாசனின் இப்பாடல் இடம் பெற்ற படம் ஆயிரத்தில் ஒருவன்.

    முதன்முதலாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இணைந்து நடித்து 1965-ல் வெளிவந்த இந்த மாபெரும் வெற்றிப் படம் கேப்டன் ப்ளட் என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் எனக் கூறப்பட்டது.

    விடுதலை உணர்வை ஆழமாக வெளிப்படுத்தும் கண்ணதாசனின் வரிகளுக்கு டி.எம். சௌந்தரராஜனின் உணர்ச்சிகரமான உச்சரிப்பு, விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பொருத்தமான இசை, காட்சி அமைப்பு ஆகியவை இப்பாடலைக் காலத்தால் அழியாத சுதந்திர கீதமாக ஆக்கின.

    அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்

    இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

    ஒரே வானிலே ஒரே மண்ணிலே

    ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

    காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே

    கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே

    காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே

    காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

    தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே

    சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

    வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே

    போகும்போது வேறு பாதை போகவில்லையே

    கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை

    கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை

    அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை

    அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

    ஒரே வானிலே ஒரே மண்ணிலே

    ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

    சுதந்திர தினம், சுதந்திர உணர்வு என்றால் பாரதியாரின் பாடல்களுக்கு அடுத்தபடியாக உடனடியாக அனைவருக்கும் தோன்றும் இந்தப் பாடல் சுதந்திர இந்தியாவில் பிறந்த மகத்தான விடுதலை கீதம் என்று சொல்வதற்குத் தகுதியானது.

    gkrishna

  13. Thanks Russellmai thanked for this post
  14. #150
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்

    ஹிந்துவில் வந்த ஆயிரத்தில் ஒருவன் - பாடல் பற்றிய பதிவு அருமை .

    ராகவேந்தரா சார் - பொங்கும் பூம்புனல் பதிவுகள் அருமை .

    காதலிக்க நேரமில்லை - பொன் விழா தகவலுக்கு நன்றி .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •