Page 13 of 401 FirstFirst ... 311121314152363113 ... LastLast
Results 121 to 130 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #121
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    காதல் என்ற அந்த வார்த்தை இருக்கிறதே.. ம்ம் எவ்ளோ தடவை எடுத்தாலும்பேசினாலும் எவ்வித வயதினர்க்கும் ம்க்கும் என்னை மாதிரி சின்னப் பையன்/பெண்கள் தவிர எல்லாருக்கும் ஒரு முறுவல்., ஒரு ஸ்வீட் நினைவு அல்லது ஒரு சோக நினைவு எனக் கொண்டு வந்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை அல்லவா (ஹப்பா எவ்ளோ நீள வாக்கியம்)
    அதுவே ஒரு இளம் பெண்ணின் மனது காதலில் விழுந்து விடுகிறது என்றால் என்ன ஆகும்

    கண்களில் கனவு மின்னும்
    …கன்னமும் சிவந்து நிற்கும்
    மண்ணிலே கால்கள் தாவா
    ..மாதுளம் இறக்கை கட்டி
    விண்ணிலே பறக்கப் பார்த்து
    ..வேட்கையில் நாணம் கொள்ளும்
    எண்ணமும் உணர்வும் அந்த
    ..எத்தனுள் சென்ற தாலே..

    ஆமா.. எல்லாம் இவ கனவு காணுவா…கடைசில பாருங்க..காதலனை எத்தன், படவாங்கறா..இது என்னவாக்கும் நியாயம்..

    ஆனால் அந்தக் காலத்திலும் இந்தக் காலத்திலும் சரி பூவின் கால் பூ அறியும்கறாப்புல (ஹை..இது நல்லா இருக்கே) ஒரு தலைவி என்று இருந்தால் ஒரு தலைவன் உண்டு (இது என்ன பெரிய விஷயம்) அதைத் தவிர தோழி என்பது கண்டிப்பாய் உண்டு..அதுவும் அந்தத் தோழி.தலைவியின் மாற்றத்தை டபக்கென்று கண்டு பிடித்துவிடுவாள்..

    பனியா ஐயோ குளிரும் என்பாள்
    …பாட்டுப் பாட வாடி என்றால்
    கனிந்த இதழைக் குவித்துக் கொஞ்சம்
    ..கவிதைத் தனமாய் வேண்டாம் என்பாள்
    வனிதை இவளோ இன்றோ மழையில்
    ..வாகாய் நனைந்தாள் உணர்ந்தா ளில்லை
    தனியாய்ச் சென்றாள் சிரித்தாள் நெஞ்சத்
    ..தவிப்பும் ஏது கேட்க வேண்டும்..

    கேக்கறா..பதில் வருது..பின் என்ன.. தொடர்ந்த காதல் சந்திப்புக்களில் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகுது..அப்போ என்னவாம் கல்யாணத்தைப் பத்திக் கனவு.. ஸோ தோழிக்கும் என்ன அவளைச் சீண்டி விடறதுல ஜாலி தான் இல்லை..

    அந்தக்காலத்துல ஒரு பாட்டு ஒரு படத்துல வருது..

    என்னவாக்கும் அது..

    **
    என்னடி சின்னப் பெண்ணே எண்ணம் எங்கே போகுது
    பள்ளியறை மோகமா துள்ளிவிழும் வேகமா..
    *
    படம் தேன்மழை பாடியவர் எம்.எஸ். ராஜேஷ்வரின்னு நினைக்கிறேன்.. படத்தில் பாடுபவர் சச்சு.. உடன் கனவு கண்டு அனிச்சப் பூவாய் சிரிக்கும் பெண்ணாக கே.ஆர் விஜயா..ம்ம் பாட்டு வரிகள் கிடைக்கலை..

    நல்ல பாட்டு..லிங்க் இதோ இப்போ வரப்போகுதே ரா,வா,ம கோ கி கிட்ட இருந்து..
    ..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #122
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    லீலாவதி- வயது-76. கர்நாடக மாநிலம், பெல்தங்காடியில் 1938-இல் பிறந்தவர். தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்குத் திரைப்பட பழம்பெரும் நடிகை. நடிகை மட்டுமல்லாது தயாரிப்பாளர், எழுத்தாளர், கொடையாளி. இவர் பிரபலமான நடிகர்கள் ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், எம்.ஜி.ஆர்., என்.ரி.ராமராவ், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், சங்கர் நாக், கமலஹாசன், சிரஞ்சீவி, வி.ரவிச்சந்திரன், சுதீப் ஆகியோருடன் நடித்துள்ளார். இவரது முதல் தமிழ்ப் படம் பட்டினத்தார். வளர்பிறை, அவள் ஒரு தொடர் கதை, அவர்கள், நான் அவனில்லை (ஜெமினிகணேசன்), புதிர் போன்ற பல தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். கன்னடத்தில் 400 படங்கள் உட்பட 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்தவற்றில் கன்னடத்தில் நாகரகாவு, தமிழில் அவர்கள் படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவை. லீலாவதிக்கு ஃபிலிம்பேர் விருது கன்னட மாநில அரசின் விருது 1999-இல் ராஜ்குமார் விருது போன்ற பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கின்றன. ஆரம்பத்தில் நாடக்குழுவில் பல்வேறு நாடகங்கள் நடித்துள்ளார். 1958-இல் ஆரம்ப காலங்களில் கதாநாயகியாகவும் பின்னர் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். கன்னடத்தில் இவரது முதல் படம் மாங்கல்ய யோகா. பக்த பிரகலாதா, ராஜா மலையசிம்மன், அப்பா ஆ குடுகி, தர்ம விஜயா, தஸாவதாரா, ராணி ஹொன்னம்மா, கந்த்ரேடு நோடு போன்றவை இவர் நடித்த துவக்க கால கன்னடப் படங்கள்.

    அவள் ஒரு தொடர்கதை திரைபடத்தில் சுஜாதாவின் அம்மாவாகவும் அவர்கள் படத்தில் சுஜாதாவின் மாமியாராகவும் மிக அருமையாக நடித்து இருப்பார் .ராஜேஷ் சார் மது அண்ணா வாசு சார் மேல் அதிக தகவல்கள் கொடுக்க வேண்டுகிறேன்




    gkrishna

  4. Likes Russellmai liked this post
  5. #123
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    காதல் என்ற அந்த வார்த்தை இருக்கிறதே.. ம்ம்
    என்னடி சின்னப் பெண்ணே எண்ணம் எங்கே போகுது
    பள்ளியறை மோகமா துள்ளிவிழும் வேகமா..
    *
    படம் தேன்மழை பாடியவர் எம்.எஸ். ராஜேஷ்வரின்னு நினைக்கிறேன்.. படத்தில் பாடுபவர் சச்சு.. உடன் கனவு கண்டு அனிச்சப் பூவாய் சிரிக்கும் பெண்ணாக கே.ஆர் விஜயா..ம்ம் பாட்டு வரிகள் கிடைக்கலை..

    நல்ல பாட்டு..லிங்க் இதோ இப்போ வரப்போகுதே ரா,வா,ம கோ கி கிட்ட இருந்து..
    ..
    அது 'என்னடி செல்ல பெண்ணே ' இல்லையோ சி க
    http://www.inbaminge.com/t/t/Then%20...kannu.vid.html

    விடியோ லிங்க் கிடைக்கவில்லை
    வாசு சார் இடம் கேட்டு பாப்போம்

    முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில்
    காதல் மன்னன் ஜெமினி கே ஆர் விஜய நடித்த படம்
    அருமையான காமெடி நாகேஷ் சோ இணைந்து
    (டாக்டர் நிரஞ்சன் குமார் அமெரிக்க டாக்டர் )
    Last edited by gkrishna; 15th August 2014 at 02:08 PM.
    gkrishna

  6. #124
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    தேன் மழை சித்ரா & கோ காமெடி நினைவில் இருக்கணுமே சி கே சார்
    gkrishna

  7. #125
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இவரால் பாதிக்க பட்ட பல நல்ல இயக்குனர்களை எனக்கு தெரியும். இளையராஜா ,கொஞ்சம் இலக்கிய ரசனை உண்டு என்றாலும், நல்ல படங்களை பெரும்பாலும் உணர முடியாதவர் என்று இவர் நெருங்கிய நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன்.



    இவருடைய அளவு மீறிய அகந்தை இவருக்கு எமனாக அமைந்தது.



    இவர் ஒரு நல்ல இசையமைப்பாளர் என்பதையோ,அருமையான Re Recording Genius என்பதையோ நான் குறை சொல்ல மாட்டேன். செல்வராஜ்- பாரதிராஜாவின் அருமையான உழைப்பில் உருவான காவியத்தை ,இவர் உணராதது ,இவர் மன வளர்ச்சி குறைபாட்டை வெளிச்சமிடுகிறது என்பதை இவர் உணரவில்லை போல.

    மேலும்,இவர் சொன்னது இசை துறைக்கு மட்டும் பொருந்துவது இல்லையே? எல்லா வேலை பார்க்கும் எல்லோருமே,எல்லாவற்றையும் மனதுக்கு பிடித்தா செய்கிறோம்?மனதுக்கு ஒவ்வாத விஷயத்தையும் perfect ஆகத்தானே செய்து கொண்டிருக்கிறோம்?இதில் என்ன தன்னை பற்றி மட்டும் அகந்தை பேச்சு?
    Last edited by Gopal.s; 15th August 2014 at 02:21 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #126
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹையோ..அந்தக் காமடி.. கர்ணனும் சோழனும் எப்படிப்பா சந்திச்சுப்பாங்க, அதானே.. நாகேஷ் சோ ..மறக்க முடியாது..அப்புறம் அந்த சோ..அப்பா ரோலில் கொஞ்சம் வித்தியாசப் படுத்தி இருப்பார்..

  9. #127
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நம்ம குருஜி ராகவேந்தர் இணைத்து உள்ளார் தேன் மழை பாடல்களை

    திரு டி.கே. ராமமூர்த்தி அவர்களின் இரண்டாவது படம் - முக்தா பிலிம்ஸின் தேன் மழை
    ஆண்டு 1966



    பாடல்கள்

    நெஞ்சே நீ போய் சேதியை சொல்ல - பி.சுசீலா - வாலி
    ஒளி வடிவம்
    http://www.youtube.com/embed/C176zdjh-3s?
    ஒலி வடிவம் -
    http://ww.raaga.com/player4/?id=2326...27003298327327

    விழியால் காதல் கடிதம் - டி.எம்.எஸ், பி.சுசீலா - வாலி
    ஒளி வடிவம்
    http://www.youtube.com/embed/Gd-a-Eogpcc?
    ஒலி வடிவம் -
    http://ww.raaga.com/player4/?id=1549...54130200576037

    கல்யாண சந்தையிலே - பி.சுசீலா - நா. பாண்டுரங்கன்
    ஒலி வடிவம்
    http://ww.raaga.com/player4/?id=2326...56562785618007

    ஆரம்பமே இப்படித்தான் - பி.சுசீலா, எஸ். சரளா - வாலி
    ஒலி வடிவம்
    http://ww.raaga.com/player4/?id=2326...30589475762099

    என்னடி செல்லகண்ணு - எஸ்.சரளா -ஆலங்குடி சோமு
    ஒளி வடிவம்
    http://www.youtube.com/embed/1g5jVV2tUOo?
    ஒலி வடிவம்
    http://ww.raaga.com/player4/?id=2326...61199398804456
    Last edited by gkrishna; 15th August 2014 at 02:22 PM.
    gkrishna

  10. #128
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இவரால் பாதிக்க பட்ட பல நல்ல இயக்குனர்களை எனக்கு தெரியும். இளையராஜா ,கொஞ்சம் இலக்கிய ரசனை உண்டு என்றாலும், நல்ல படங்களை பெரும்பாலும் உணர முடியாதவர் என்று இவர் நெருங்கிய நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன்.

    இவருடைய அளவு மீறிய அகந்தை இவருக்கு எமனாக அமைந்தது.

    இவர் ஒரு நல்ல இசையமைப்பாளர் என்பதையோ,அருமையான Re Recording Genius என்பதையோ நான் குறை சொல்ல மாட்டேன். செல்வராஜ்- பாரதிராஜாவின் அருமையான உழைப்பில் உருவான காவியத்தை ,இவர் உணராதது ,இவர் மன வளர்ச்சி குறைபாட்டை வெளிச்சமிடுகிறது என்பதை இவர் உணரவில்லை போல.
    உண்மை கோபால் சார்
    ஹென்றி டேனியல் (விஸ்வநாதனின் உதவியாளர்) இவரிடம் மிகவும் அவமானப்பட்டார் என்று கேள்வி பட்டு உள்ளேன்
    gkrishna

  11. #129
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    உண்மை கோபால் சார்
    ஹென்றி டேனியல் (விஸ்வநாதனின் உதவியாளர்) இவரிடம் மிகவும் அவமானப்பட்டார் என்று கேள்வி பட்டு உள்ளேன்
    இவர் அவமான படுத்தியவர்கள் லிஸ்ட் சொல்லி மாளாது. யுவன்,கார்த்திக்,பவதாரிணி மட்டுமே விதிவிலக்கு.



    இவர்,அன்றைய வளரும் இசையமைப்பாளர்களை எதிரி போல நடத்தி அவமான படுத்திய விதம்,எந்த விதத்திலும் இவருக்கு ஆன்மீக பெருமையை அளிக்கவொன்னாதது.



    அப்போது உச்சத்தில் இருந்த எம்.எஸ்.வீ ,இவரை பெருந்தன்மையோடு நடத்தி அங்கீகரிக்கவில்லையா?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #130
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    'கேட்டு பார் கேட்டு பார் ' மாடி வீட்டு மாப்பிள்ளை கேட்டு உள்ளீர்களா cinna kannan sir

    பாடகர் திலகம் சுசீலாவின் அருமையான கோரஸ்

    gkrishna

  13. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •