Page 101 of 401 FirstFirst ... 519199100101102103111151201 ... LastLast
Results 1,001 to 1,010 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1001
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    THANKS TO ALL - 10 DAYS -1000 POSTINGS - 15,000 VIEWERS. SUPER .



    Last edited by esvee; 25th August 2014 at 11:42 AM.

  2. Thanks gkrishna thanked for this post
    Likes Russellmai, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1002
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    உயர்திரு கோபால் அவர்களுக்கு,

    உலகத்திலேயே முதன்முறையாக எங்களுக்கு கவிதை எழுதி கௌரவம் சேர்த்திருக்கும் தங்களுக்கு எங்கள் இனத்தின் சார்பில் நன்றிகள்.

    நீங்கள் வருத்தப்பட்டிருப்பது அனைத்தும் ஒப்புக்கொள்ளக்கூடியதே. எங்கள் மூதாதையர்கள் உங்கள் அரிய ஆவணங்களை தின்று அழித்தது அநியாயமே. அதற்காக இப்போது பழிதீர்க்கும் வண்ணம் காகிதமே இல்லாத உலகமாக மாற்றிக்கொண்டு வருகிறீர்கள். வருங்காலத்தில் எங்கள் சந்ததியினரின் வாழ்வாதாரத்தை நினைத்தால் அச்சமாகவே இருக்கிறது. ஏற்கெனவே எங்கள் இல்லங்கள் அனைத்தும் தமிழர்கள் குடியிருப்பை ஆக்ரமித்த சிங்களர்கள் போல அரவங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன.

    எங்கள் நிலையையும் தமிழுலகுக்கு உணர்த்திய தங்களுக்கு மீண்டும் நன்றி.

    காகிதம் தின்னி கரையான் (தலைவர்)
    மரம் தின்னி கரையான் (செயலாளர்)
    அகிலஉலக கரையான்கள் சங்கம்.

  5. Likes Gopal.s, gkrishna liked this post
  6. #1003
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (61)

    நேற்றைய விடுமுறைக்கும் சேர்த்து 'இன்றைய ஸ்பெஷலி'ல் ஓர் அருமையான பாடலைப் பார்க்கப் போகிறீர்கள்.

    உங்களுக்கு மனது சரியில்லையா? சோகமாய் இருப்பது போல் உணருகிறீர்களா? போரடிக்கிறதா? உறசாகம் குறைந்து களையிழந்து காணப்படுகிறீர்களா?

    கவலையே படாதீர்கள்.

    இன்றைய இந்தப் பாடலை 'புக்மார்க்' செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது 'கிளிக்'குங்கள். கரை புரண்ட உற்சாக வெள்ளம் உங்களை சூழ ஆரம்பிப்பதை நீங்கள் உணரலாம்.

    நான் மிக மிக அனுபவித்து ரசித்து ரசித்து எழுதிய பதிவு இது. 'இன்றைய ஸ்பெஷலி'ல் மிக மிக சந்தோஷமாக நான் இட்ட பதிவும் கூட.


    படம்: துலாபாரம்



    மூலக்கதை: தோப்பில் பாஸி

    வசனம்: 'சவாலே சமாளி' புகழ் 'மல்லியம்' ராஜகோபால்.

    இசை: தேவராஜன்

    ஒளிப்பதிவு: நம்முடைய பி.என்.சுந்தரம்.

    தயாரிப்பு: ராமண்ணா

    இயக்கம்: வின்சென்ட்


    'துலாபாரம்' படத்தில் டேம் பிக்னிக் செல்லும் கல்லூரி மாணவ மாணவிகள். இளமை பொங்கத் துள்ளும் கல்லூரி மாணவன் 'நவரசத் திலகம்' முத்துராமன். படு கியூட்டாக. இதுவரை எந்தப் படத்திலும் பார்த்திராத வகையில் படு ஸ்டைலாக, உற்சாகம் கரைபுரண்டோட செம ஜோர் அண்ணாச்சி. அருமையாக 'tuck in' செய்யப்பட்ட சிறுசிறு கட்டங்கள் அடங்கிய கைகள் மடித்துவிடப்பட்ட செக்டு ஷர்ட். அதற்கு தோதாக 'நச்'சென்று பொருந்தும் வகையில் பிளிட் வைத்து தைக்கப்பட்ட டைட் பேன்ட். பேண்டின் சைடு பாக்கெட்டுகள் இரண்டும் விரிந்து கொடுத்து கொள்ளை அழகாக இருக்கும் முத்துராமனுக்கு. முத்துராமன் அதைவிட அருமையான அழகாக, படு ஸ்லிம்மாக, கல்லூரி மாணவனைப் போல் இருப்பார் இந்தப் பாடலில்.

    கண்களை கசக்கி கசக்கிப் பார்த்தேன். முத்துராமனா அது?! அடேங்கப்பா! என்ன ஒரு துள்ளல்! என்ன ஒரு உற்சாகக் கொண்டாட்டம்! என்ன ஒரு சுறுசுறுப்பு! துறுதுறுப்பு! இப்படி இவரைப் பார்ப்பதே அபூர்வம். சிருங்கார ரசம் சொட்ட சொட்ட, ஜாலியாக ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும், இளசுகளைக் கலாய்த்துக் கொண்டும் மனிதர் அமர்க்கள அநியாயம் பண்ணி விட்டார் போங்கள். சில இடங்களில் எம்ஜிஆர் அவர்களை ஞாபகப்படுத்தும் விதமாக அவர் ஸ்டைலில் ஆக்ஷன்கள், கை அசைப்புகள் வேறு.

    'இளம் கொடிவிட்ட பூவென இடைவிட்ட பூவுக்கு
    ஆசையை விரிப்பேனா'

    இந்த வரிகள் வரும் இடத்தில் பேண்ட் சைட் பாக்கெட்டுகளின் இரு பக்கங்களிலும் கட்டைவிரல்களால் கிடுக்குப் பிடி பிடித்து, ஸ்டைலாக துள்ளாட்டம் போட்டபடியே ஒரு அருமையான நடை நடப்பார் பாருங்கள் முத்துராமன். நிஜமாகவே அசந்து போவீர்கள். ராஜாங்கம் நடத்துவார் 'நவரசத் திலகம்' அவர்கள். (அப்படியே பின்னாட்களில் அவர் மகன் கார்த்திக் நடப்பது போலவே குறும்பு கொப்பளிப்பதை நன்றாக கவனிக்கலாம்! விதை ஒன்று போட்டால் துரை ஒன்றா முளைக்கும்?) அதே போல பாடலின் இடையிசையின் போது ஓட்டமும், நடையுமாக அவர் நடப்பது இன்னும் அருமை.


    கல்லூரி மாணவிகளாக ஊர்வசி சாரதாவும், கட்டழகி காஞ்சனாவும். இணைபிரியா தோழிகளாக இருவரும் கைகளை இணைத்தபடியே.

    முத்துராமன் தங்களை சுற்றி சுற்றி வந்து பாடும் போதெலாம் அதுவும் இரட்டை அர்த்தம் தொனிக்க அவர் பாட, அதை தோழியர் இருவரும் புரிந்து கொண்டு வெட்கப்பட்டு ஓடுவதும், திரும்பிக் கொள்வதும் சுகமோ சுகம். 'சிரிப்போ இல்லை நடிப்போ' என்று முத்து பாடும் போதெல்லாம் காஞ்சனாவும் சாரதாவும் 'இல்லை' என்பது போல ஜாலியாக தலையாட்டுமிடம் அப்படியே அள்ளும் சுகம். அதுவும் 'விழிப்போ... வலை விரிப்போ' என்னும் போது காஞ்சனா நாக்கைத் துருத்தி, சற்று வெளியே நீட்டி முத்துவை பழித்துக் காட்டி கேலி செய்யும்போது பார்க்கும் அனைவரும் அம்பேல்! என்ன அழகான பழிகாட்டல்!

    'பார்க்கின்ற நெஞ்சுக்கு பால் தருவாள்
    என்று பாத்திரம் படைத்தானோ'

    என்ற கவிஞனின் பொல்லாக் காம வரிகளின் போது அதைப் புரிந்து கொண்டு காஞ்சனா வெட்கத்துடன் முன்னழகை மறைத்து பின்னழகைக் காட்டி, அதே சமயத்தில் சட்டென்று சாரதாவையும் திருப்பிவிடுவது ரசமான இடம்.

    'அந்த பனிமுத்துத் துளிகளைப் பருகிடவே
    எனை மாத்திரம் படைத்தானோ'

    என்று முத்துராமன் பாடும்போது அதைப் புரிந்து கொண்டு காஞ்சனா சாரதாவிடம் 'பார்த்தியா?' என்பது போல ஒரு பார்வை பார்த்து, பின் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் பெண்மைக்கே உண்டான வெட்க அமைதி காப்பார். காஞ்சனா கொடிகட்டுவார் இந்தக் காட்சியில்.

    இப்பாடலுக்கு அர்த்தம் கேட்டீர்களானால் வண்டி வண்டியாக எழுதலாம். அவ்வளவு அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன இந்தப் பாடலில். காமரசம் சொட்டும் இப்பாடலை சற்றும் விரசமில்லாமல் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. அதே சமயத்தில் கவிஞனும் பாடகனும், நடித்தவர்களும், இசையமைப்பாளரும் ஒருசேர வெற்றி பெற்ற பாடல் இது.


    மலையாள தேவராஜனின் மயக்கும் இசையில் பாடல்கள் அனைத்தும் மாம்பழச் சுவை.

    இப்படத்தின் டைட்டில் பாடல் வாழ்விலே மறக்க முடியாத மகோன்னதப் பாடல்.

    சாரதாவும், காஞ்சனாவும் 'கல்லூரி' விழாவில் பாடும்

    'வாடி தோழி கதாநாயகி'

    ஜேசுதாசின் எவர்க்ரீன் பாடல்

    'காற்றினிலே பெருங்க காற்றினிலே'

    பாடகர் திலகமும், பாடகியர் திலகமும் அருமையாகப் பாடி அமைதியாக நம் கண்களில் நம்மையறியாமலேயே கண்களில் நீரை வரவழைத்த, நம் நெஞ்சில் ஆழ ஊடுருவிய காவியப்பாடல்



    'பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
    பால் பொங்கல் பொங்குது கண்ணீரிலே'

    'சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப் புலவர் காத்த தமிழ்'

    என்று நம் மனதில் ஆழமாய் ஊறிவிட்ட பாடல்கள்.


    இன்னொன்று.'ஊர்வசி' விருது என்றாலே சாரதாதான் என்று உடனே நாம் நினைக்குமளவிற்கு மலையாளத்திலேயும்,தமிழிலேயும் 'துலாபாரத்'தில் அருமையாக நடித்து சிறந்த தேசிய நடிகை விருது
    பெற்ற, நடிகர் திலகம் தமிழில் நாயகியாக 'குங்கும'த்தில் அறிமுகப்படுத்திய சாரதாவை மறக்க முடியுமா?


    சரி! 'இன்றைய ஸ்பெஷல்' பாடலுக்கு வந்து விடுவோம்.

    பாடகர் திலகத்தின் பட்டை கிளப்பும் 'கணீர்'க் குரலில்,


    இனி பாடலின் வரிகள்

    சிரிப்போ இல்லை நடிப்போ
    இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
    விழிப்போ வலை விரிப்போ
    எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ

    சிரிப்போ இல்லை நடிப்போ
    இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
    விழிப்போ வலை விரிப்போ
    எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ
    சிரிப்போ ஹோஹோஹோஹஹோ

    சிரிப்போ

    கோபுரக் கலசத்தைக் கூந்தலில் மறைக்கும்
    கோலத்தை ரசிப்பேனா
    கோபுரக் கலசத்தைக் கூந்தலில் மறைக்கும்
    கோலத்தை ரசிப்பேனா
    இளம் கொடிவிட்ட பூவென இடைவிட்ட பூவுக்கு
    ஆசையை விரிப்பேனா
    அந்த ஆற்றினில் மிதப்பேனா
    ஆற்றினில் மிதப்பேனா

    சிரிப்போ இல்லை நடிப்போ
    இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
    விழிப்போ வலை விரிப்போ
    எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ
    சிரிப்போ

    ஊர்வலம் போகின்ற தேவியர் மேனியை
    நான் வலம் வருவேனா
    ஊர்வலம் போகின்ற தேவியர் மேனியை
    நான் வலம் வருவேனா
    அவர் ஒரு பக்க ஜாடையை கலைவட்ட மேடையை
    ஓவியம் வரைவேனா
    அவர் ஒரு பக்க ஜாடையை கலைவட்ட மேடையை
    ஓவியம் வரைவேனா
    அதில் என் உள்ளத்தை வரைவேனா
    உள்ளத்தை வரைவேனா

    சிரிப்போ இல்லை நடிப்போ
    இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
    விழிப்போ வலை விரிப்போ
    எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ
    சிரிப்போ

    பார்க்கின்ற நெஞ்சுக்கு பால் தருவாள்
    என்று பாத்திரம் படைத்தானோ
    பார்க்கின்ற நெஞ்சுக்கு பால் தருவாள்
    என்று பாத்திரம் படைத்தானோ
    அந்த பனிமுத்துத் துளிகளைப் பருகிடவே
    எனை மாத்திரம் படைத்தானோ
    அந்த பனிமுத்துத் துளிகளைப் பருகிடவே
    எனை மாத்திரம் படைத்தானோ
    இதுதான் வாழ்க்கை என்றுரைத்தானோ
    வாழ்க்கை என்றுரைத்தானோ

    சிரிப்போ இல்லை நடிப்போ
    இது சிங்காரப் பொன்னூஞ்சல் அழைப்போ
    விழிப்போ வலை விரிப்போ
    எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ

    ஹஹ்ஹஹ்ஹஹ்ஹ ஹோ.


    Last edited by vasudevan31355; 25th August 2014 at 01:55 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Thanks Gopal.s thanked for this post
    Likes madhu, chinnakkannan, Russellmai liked this post
  8. #1004
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டுடன் படத்தை போட்டாச்சுப்பா.(பாகம் 1 இல்) ஆனாலும் நன்றாக எழுதியுள்ளாய். (எனக்கு முத்துராமன் போன்றோரை புகழும் பொறுமை இருப்பதில்லை.)



    என்னுடைய பள்ளி நாள் தேசிய கீதம் இதுவும்,எங்கெல்லாம் வளையோசையும் .
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #1005
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வினோத் சார்,

    தாங்கள் அனைத்து திரிகளிலும் பதித்து வரும் ஆவணங்கள் அனைத்தும் அருமையோ அருமை. உண்மையிலேயே கிடைத்தற்கரியவை.

    இப்போது நாம் பார்த்து பாராட்டும் பழைய படங்களைஎல்லாம், அவை வெளியான காலங்களில் விமர்சனம் என்ற பெயரில் எப்படி போட்டு தாளித்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது வியப்பாக உள்ளது.

    தங்கள் சிரமமான, சிரத்தையான, சிறப்பான பதிவுகளுக்கு மிக்க நன்றி...

  10. #1006
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks ESVEE for all the exhibits here,Gemini and Ravi threads.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #1007
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    இன்றைய ஸ்பெஷல் (6)

    நேற்றைய விடுமுறைக்கும் சேர்த்து 'இன்றைய ஸ்பெஷலி'ல் ஓர் அருமையான பாடலைப் பார்க்கப் போகிறீர்கள்.

    உங்களுக்கு மனது சரியில்லையா? சோகமாய் இருப்பது போல் உணருகிறீர்களா? போரடிக்கிறதா? உறசாகம் குறைந்து களையிழந்து காணப்படுகிறீர்களா?

    கவலையே படாதீர்கள்.

    இன்றைய இந்தப் பாடலை 'புக்மார்க்' செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது 'கிளிக்'குங்கள். கரை புரண்ட உற்சாக வெள்ளம் உங்களை சூழ ஆரம்பிப்பதை நீங்கள் உணரலாம்.

    நான் மிக மிக அனுபவித்து ரசித்து ரசித்து எழுதிய பதிவு இது. 'இன்றைய ஸ்பெஷலி'ல் மிக மிக சந்தோஷமாக நான் இட்ட பதிவும் கூட.

    விடலையில் ரசித்த பாடலை முதுமையிலும் ரசிக்க வைக்கும் பாடல்
    யாருக்கு முதுமை
    யாருக்கோ ?

    அருமை வாசு சார்

    கிருஷ்ணா
    gkrishna

  12. #1008
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அன்பு எஸ்வி சார்

    கார்த்திக் அவர்கள் சொன்னது போல் இப்போது நாம் (அணைத்து) ரசிக்கும் அனைத்து படங்களும் பாடல்களும் அக்கால கட்டங்களில் எப்படி விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளன என்பதற்கு நீங்கள் இடும் பத்திரிகை ஆவணங்கள் அனைத்தும் சாட்சி
    இதயம் அட்டை படம் கோழி கூவுது விஜி தானே சார்
    gkrishna

  13. Thanks Richardsof thanked for this post
  14. #1009
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    23 ஆகஸ்ட் சென்னை பார்க் ஹோட்டல் அரங்கில் திரு மோகன் ராம் அவர்கள் பாலையா அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் மற்றும் சென்னை 375 heritage சார்பாக அருமையான உரை ஒன்றை நிகழ்த்தினார் .நம்மவர் திரு முரளி அவர்களும் கலந்து கொண்டார்.

    அதில் அவர் பகிர்ந்து கொண்ட ஒரு செய்தி

    காதலிக்க நேரமில்லை திரை படத்தில் முதலில் செல்லப்பா (நாகேஷ்) கதாபாத்திரம் என்பதே கிடையாது .2 ஹீரோ மற்றும் 2 heroines அவர்கள் சகோதரிகள் என்ற லவ் subject தான் கதை. கிட்டத்தட்ட 3000 அடி எடுக்கப்பட்டது. பின்னர் ஒருநாள் நடிகர் திலகத்தின் சகோதரர் திரு சண்முகம் அவர்கள் அழைப்பின் பேரில் ஸ்ரீதர் மற்றும் கோபு இருவரும் நடிகர் திலகத்தின் அன்னை இல்லத்திற்கு விரைகிறார்கள் . அங்கு திரு தாதா மிராசி அவர்கள் புதிய பறவை திரை படத்தின் கதையை ஸ்பெஷல் எபக்ட் உடன் சொல்வதை பார்த்து ஆர்வமாகி திரும்பி வரும் போது திரு ஸ்ரீதர் அவர்கள் கதா ஆசிரியர் கோபு அவர்களிடம் எப்படியாவது இந்த கதை சொல்லும் காட்சி ஒன்றை காதலிக்க நேரமில்லை திரை படத்தில் புகுத்திவிட வேண்டும் என்று கூறியதின் பேரில் திரு கோபு அவர்கள்,சகோதரிகள் இருவருக்கும் ஒரு சகோதரரை அவர் திரை படம் எடுப்பது போலவும் அந்த திரை படத்திற்கு பினன்சியர் ஆன தனது தந்தையிடமே இந்த கதை சொல்லும் காட்சியை சிறப்புற அமைத்து ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்ததாகவும் மேலும் இதனால் ஒரு காதல் subject திரை படம் கிளாஸ்சிகல் ஹாஸ்ய திரை (பாடமாக) படமாக மாறியதாகவும் மிக அழகாக விளக்கினார்
    gkrishna

  15. Likes Russellmai, Richardsof liked this post
  16. #1010
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like



  17. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •