Page 190 of 401 FirstFirst ... 90140180188189190191192200240290 ... LastLast
Results 1,891 to 1,900 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1891
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like



  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1892
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like



  4. Likes Russellmai, gkrishna liked this post
  5. #1893
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    அந்த ராஜி தெரியலை..
    நடிகர் திலகத்தின் நான் வாழ வைப்பேன் படத்தில் கால் ஊனமான தங்கை ஆக வருவார் 'எந்தன் பொன் வண்ணமே அன்பு பூ வண்ணமே ' பாடலில் வருவார்
    gkrishna

  6. Thanks chinnakkannan thanked for this post
  7. #1894
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    Thanks to Tamil Hindu



    தமிழ்த் திரையில் சாதனை படைத்த பல நட்சத்திரங்களின் முதல்படம் பாதியில் கைவிடப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆரும் இதற்கு விதிவிலக்கல்ல.எம்.ஜி.ஆர். நடிப்பில் முதலாவதாக வந்திருக்க வேண்டிய படம் ‘சாயாதேவி’.

    40களில் புகழ்பெற்றிருந்த நாராயணி கம்பெனி என்ற பட நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஹஸ்வந் நந்தலால் இயக்கிய படம். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக அந்தப் படத்தில் நடித்தார் குமுதினி. படம் ஓரளவு வளர்ந்த நிலையில், எம்.ஜி.ஆர். மீது தயாரிப்பாளர்களுக்குத் திருப்தியில்லை.

    அவரை மாற்ற வேண்டும் என்று இயக்குநரை வற்புறுத்த ஆரம்பித்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் பாடி நடிப்பதில்லை என்பதுதான் தயாரிப்பாளர்களுக்குக் குறையாகப்பட்டது. ஆனால் இயக்குநர் ஒப்புக்கொள்ளவில்லை. “ராமச்சந்திரனை மாற்ற முடியாது. வேண்டுமென்றால் குமுதினியை மாற்றுங்கள்” என்று உறுதியாகக் கூறி விட்டார்.

    ஆனால் தயாரிப்பாளர்கள் குமுதினியை மாற்ற விரும்பவில்லை. நன்றாகப் பாடி, அற்புதமாக நடிக்கும் குமுதினி அன்று இரண்டு மெகா வெற்றிப் படங்களில் நடித்துவிட்ட முன்னணிக் கதாநாயகி.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை ஒட்டிய ‘அத்திகல்’தான் குமுதினியின் சொந்த ஊர். ஐந்து வயதிலேயே கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சிபெற்ற குமுதினியின் இயற்பெயர் கல்யாணி காந்திமதி.

    திருவிதாங்கூர் மன்னர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நடந்தது கல்யாணியின் இசை அரங்கேற்றம். பத்துவயதில் இத்தனை பாட்டுத்திறனா என்று வியந்த மன்னர். அரங்கேற்ற மேடையிலேயே சிறுமி கல்யாணிக்குத் தங்கப் பதக்கம் அணிவித்துப் பாராட்ட நெகிழ்ந்துபோயினர் பெற்றோர்.

    மகளின் இசைத் திறமையை மேலும் வளர்க்க எண்ணி, மதுரைக்குக் குடிபெயர்ந்தது கல்யாணியின் குடும்பம். மதுரையில் பல இசை விற்பன்னர்களிடம் பாரம்பரிய இசை பயின்ற அவர் 12 வயதுமுதல் கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார்.

    டி.ஆர்.மகாலிங்கம் பரிந்துரைத்த திறமையாளர்பின்னாளில் மிகப்பெரிய நடிகராக மிளிர்ந்த டி.ஆர். மகாலிங்கம் உச்சஸ்தாயில் பாடக்கூடியவர். மதுரை பாய்ஸ் நாடக கம்பனியில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் வாரிசு என்று 15 வயதில் புகழடைந்திருந்த அவர், ஒருமுறை கல்யாணியின் கச்சேரியைக் கேட்டார்.

    மைக் செட் வந்திருந்த தொடக்க காலம் அது. கல்யாணி உச்சஸ்தாயில் பாடியதும், குரலின் கம்பீர பாவமும், பாடும்போது இயல்பாகத் தோன்றிய முகபாவனைகளும் அவரைக் கவர்ந்துவிட்டன. கல்யாணியின் கச்சேரியில் கூட்டம் அலைமோதியதையும் கண்டார்.

    அந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படங்களுக்கு, நாடகங்களில் பாடி, நடிக்கும் நடிகர்களையே தேர்வு செய்தார்கள். ஆனால் குமுதினி கச்சேரியோடு நிறுத்திக்கொண்டார். நாடகங்களில் நடிக்கவில்லை. திருமணமும் ஆகிவிட்டது. இருப்பினும் அவரது பாடும் திறமைக்காக சினிமா வாய்ப்பு தேடி வந்தது.

    கே.சுப்ரமணியம் இயக்கத்தில் 1939-ம் ஆண்டு வெளியான ‘ தியாக பூமி’ திரைப்படம், சுந்தந்திரப் போராட்ட உணர்வுகளைக் கிளறியதால், பிரிட்டீஷ் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது. என்றாலும் தடையை மீறி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது அந்தப் படம்.

    அதற்குக் கிடைத்த வெற்றியை மனதில் வைத்து, இந்தியில் வெற்றிபெற்ற ஒரு சரித்திரப் படம் ‘தியாகபூமி’யின் தலைப்புச் சாயலுடன் ‘மாத்ருபூமி’ என்ற படமாகத் தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இந்தப் படத்துக்கு வாள் வீச்சு, குதிரையேற்றம் இவற்றோடு பாடவும் தெரிந்த திறமையான கதாநாயகியைத் தேடிக்கொண்டிருந்தார் படத்தின் இயக்குநர் ஹெச்.எம்.ரெட்டி. இதைக் கேள்விப்பட்ட டி.ஆர்.மகாலிங்கம், கல்யாணி காந்திமதியைப் பற்றி எடுத்துக் கூற, உடன் மதுரை சென்று அவரைப் பார்த்தனர். நாடகங்களில் கூட நடித்திராத நிலையில் சினிமாவில் நடிக்க மறுத்துவிட்டார்.

    ஆனால் கல்யாணியின் கணவர் “ எல்லோருக்கும் சினிமா வாய்ப்பு தேடி வராது” என்று உற்சாகம் தரவே, களறியும் வாள் வீச்சும் கற்றுக்கொள்ள கேரளம் சென்றார். நாராயணன் நாயர் என்பவரிடம் ஒரே மாதத்தில் கற்றுக்கொண்டார். பிறகு கிண்டி குதிரைப் பந்தய மைதானத்தில் குதிரையேற்றம் பயிற்றுவிக்கப்பட்டது.

    குமுதினி ஆனார் கல்யாணி‘மாத்ருபூமி’யில் டி.எஸ். சந்தானம், பி.யு.சின்னப்பா ஏ.கே.ராஜலெட்சுமி ஆகியோருடன் படத்தின் கதாநாயகியாக நடித்தார் கல்யாணி காந்திமதி.

    இந்தப் படத்தில் கதாநாயகியின் கதாபாத்திரப் பெயர்தான் ‘குமுதினி ’. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு கல்யாணி காந்திமதி, குமுதினி ஆனார். அறிமுகப் படத்திலேயே எடுத்த ஆக்*ஷன் அவதாருக்கு நாலாபக்கமிருந்தும் பாராட்டுகள் மலையாகக் கொட்டின.

    குமுதினியின் இரண்டாம் படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.டி நடித்து 1941-ம் ஆண்டு வெளியான ‘அசோக்குமார்’.

    ஆனால் அதில் கண்ணாம்பா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் அரசகுமாரனாக நடித்த எம்.கே.டியின் காதலி ‘காஞ்சனமாலை’யாக அபலைப் பெண் கதாபாத்திரத்தில் எம்.கே.டிக்கு இணையாகப் பாடி நடித்தார். மூன்றாவதாக அவர் நடித்து கைவிடப்பட்டதுதான் ‘சாயாதேவி’ திரைப்படம்.

    சாயாதேவியில் எம்.ஜி.ஆருடன் நடிக்க முடியாமல்போனாலும் ‘ஸ்ரீமுருகன்’ படத்தில் சிவபெருமானாக நடித்த எம்.ஜி.ஆருடன் பார்வதியாகத் தோன்றி நடித்து எம்.ஜி.ஆர் மதித்த முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஆனார்.

    நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் குமுதினி நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அம்மாவாக ‘வியட்நாம் வீடு’, ‘சிவந்தமண்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தவர்.

    தமிழ்சினிமாவில் தனித்தடம் பதித்த ‘ஒளவையார், ‘மணிமேகலை, ‘பூம்பூகார், ‘பத்ரகாளி, ‘வியட்நாம் வீடு, ‘சிவந்தமண், ‘சொல்லத்தான் நினைக்கிறேன், ‘ஒரு வீடு ஒரு உலகம்’ உள்ளிட்ட பல படங்களில் ‘கலைமாமணி’ டி.வி. குமுதினியின் முத்திரை நடிப்பைக் காண முடியும்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அம்மாவாக ‘வியட்நாம் வீடு’ - பத்மினியின் அம்மாவாக என்று நினைவு

    மேலே படத்தில் இருப்பவர் நடிகை சாந்த குமரி .வசந்த மாளிகை திரை படத்திலும் அம்மாவாக வருவார் . கட்டுரையாள(ஆ)ர்(வல) கோளறு
    தவறை திருத்திய வாசு சார் அவர்களுக்கு நன்றி
    Last edited by gkrishna; 6th September 2014 at 11:36 AM.
    gkrishna

  8. Likes Russellmai liked this post
  9. #1895
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    thanks to thinakaran


    முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு- நடிப்புலக மாமேதையைச் சந்தித்த முதல் இரு தினங்களிலேயே அவர் தன்நெஞ்சார நேசிக்கும் ஒரு நண்பனாகும் பாக்கியம் பெற்றேன். அவர் என்னை எனது ரசிகர் என்று பகிரங்கமாய் வானொலியில் சொன்னதால், தொழில் ரீதியாக பலரது எரிச்சல் பொறாமைகளுக்கு நான் பலியானாலும், மறுபுறம் ‘பைலட் பிரேம்நாத்’ படப்பிடிப்புக் குழுவினர் மத்தியில், எனக்குப் பெரும் மதிப்பும் சர்வசுதந்திரமும் கிடைத்தது. ஒருநாள், நடிகர் திலகம் தன் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க ரண்முத்து ஹோட்டலின் 3ம் மாடியில் கடற்கரைப் பக்கமாக அமைந்துள்ள ‘டெரஸ்’ எனப்படும் திறந்த வெளித்தளத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    வேடிக்கை பார்க்கச் சென்றிருந்த என்னுடன் அன்றைய இளம் நடிகை ஸ்ரீதேவி பேசிக் கொண்டிருந்தார். மொட்டை மாடியிலிருந்து இயக்குநர் திருலோகச்சந்தர் கேமரா கோணத்தைச் சரி பார்த்துக் கொண்டிருக்க நேரமும் ஓடிக்கொண்டிருந்தது.

    நானும் ஸ்ரீதேவியும் கடற்கரைப்பக்கமாக அமைந்த கட்டைச்சுவரில் சாய்ந்து கடலலைகளைப் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் ஏதோ சந்தடி கேட்டுத் திரும்பிப்பார்த்தால் புகைப்படக் கலை நிபுணர் ஸ்டில்ஸ் சாரதி ஒரு ‘ட்ரைபொட்டில்’ தன் கமராவைப் பொருத்தி எங்கள் இருவரையும் படமெடுக்க ஆயத்தமாகவும் அருகில் நடிகர் திலகம் கமரா கோணத்தைச் சரிபார்த்துக் கொண்டும் இருப்பதையும் கண்டு திகைத்துவிட்டோம்.

    கோமாளிகளில்



    நாம் திரும்பியதும், நடிகர் திலகம் “ஐயய்யோ திரும்பிட்டாங்களே... திரும்பிட்டாங்களே... அருமையான இந்தக் காதல் காட்சியைப் படம்பிடித்து ஹமீத்தோட பொண்டாட்டிக்கு காட்டி ஒரு கலாட்டா பண்ணலாம்னு இருந்தேனே...” என்று ஒரு குழந்தையைப் போல் குதிக்க ஆரம்பித்தார். எத்தனை பெரிய கலைமேதை. அவருக்குள்ளும் ஒரு குறும்புக்காரக் குழந்தை மனம் இருப்பதைக் கண்டு வியந்தேன்.


    அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு “அப்படியொரு படத்தை விட உங்களோடு சேர்ந்து ஒரு படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியதும் அன்போடு என் தோளில் கைபோட்டு அரவணைத்தபடி போஸ் கொடுத்தார். அப்படத்தை என் மனைவிக்கும் காட்டி நடந்ததைச் சொல்லி சிரித்து மகிழ்ந்தோம்”

    என்று தமது ஃப்ளாஷ்பேக் அனுபவங்களை ஹமீத் சொல்லத் தொடங்கினார்.



    “இசைஞானி இளையராஜாவின் ஆரம்பக்காலம். 1977ல் இலங்கைக்கு அவரை முதன் முதலாக அழைத்து வந்தவர் நடிகர் பிரசாந்தின் அப்பா. தியாகராஜன். வானொலி நிலையத்தில் நானும் சில அறிவிப்பாளர்களும் சேர்ந்து அவரைப் பேட்டி கண்டோம். பேட்டி முடிந்தபின், இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னால் நின்று ஒரு படம் எடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

    நானும் ராஜகுருசேனாதிபதி, கனகரத்தினமும் சேர்ந்து நிற்க அப்படத்தை எடுத்தவர் பிரசாந்தின் அப்பா தியாகராஜன். அதன்பின், ‘பேசிக்கொண்டிருங்கள் வந்து விடுகிறேன்’ என்று சொல்லிப்போன தியாகராஜனும் அவர் சென்ற வாகனமும் திரும்பிவரத் தாமதமாகவே பேச்சின் சுவாரசியத்தில் எங்களையும் மறந்து போன நானும் இளையராஜாவும், கால்நடையாகவே வானொலி நிலையம் அமைந்திருந்த டொரிங்டன் சதுக்கத்திலிருந்து புல்லர்ஸ் ரோட் வழியாக பம்பலப்பிட்டியையும் கடந்து அவர் தங்கியிருந்த வெள்ளவத்தைக்கு நடந்தே சென்றோம். ம்... அது ஒரு காலம்...?

    தான் கடந்து வந்த வாழ்க்கை பாதையைப் பற்றி ஹமீத் என்ன நினைக்கிறார்?

    “எத்தனையோ முகங்களை பார்த்திருக்கிறேன். நான் வாழ்ந்த காலத்தில் நான் கற்ற அனுபவபாடங்கள் ஏராளம்.

    வாழும் காலத்தில் நாம் எதையாவது சாதித்தால்தான் பின்னால் பேசப்படுவோம். அதை நான் முடிந்தளவு செய்து வருகிறேன். இந்த வாழ்க்கை இனிமையானது. நல்லதை மட்டும் தேர்ந்தெடுத்து வாழ்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்று கூறி முடித்துக் கொண்டார்.
    gkrishna

  10. Likes Russellmai, madhu liked this post
  11. #1896
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ராதாசலூஜா கொஞ்சம் வித்யாச அழகு.. நடிப்பு என்று பார்த்தால் கொஞ்சம் கஷ்டம் தான்..
    குமுதத்தில் வெளிவந்த "தோ ரஹா" விமரிசனத்தில் "அனில் தாவன் அழகன்.. ராதா சலூஜா நடிகை" என்று சொல்லியிருப்பாங்க..

    பாலூட்டி வளர்த்த கிளி பாடலை எம்.எஸ்.வி.யே முதலில் பாடியதாகத்தான் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்படியும் நடந்திருச்சா ? கிளிக்கு ரெக்க மொளச்சா இப்படித்தான் !!

    இலங்கை வானொலி அறிவிப்பாளர் குரல்கள் எல்லாமே மனதில் பதிந்தவைதான். ஒவ்வொருவரைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆசைதான். காத்திருக்கிறேன்.

  12. Thanks chinnakkannan thanked for this post
  13. #1897
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Enjoy the fantastic song from HERO. Starrig Jackie & Meenakshi Seshadri. One of the best composition from LP and the movie becomes instant Siliver Jubilee hit for

    the beauty of Meenakshi.


  14. #1898
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    திரையரங்க தகவல்கள் அற்புதம்.
    எனக்கு சென்னை திரையரங்குகள் தெரியாது , எனக்கு மதுரை திரையரங்குகள் மட்டுமே தெரியும்

    செண்ட்ரல், சிந்தாமணி,ஜெயராஜ், சரஸ்வதி,, மதி, அலங்கார், விஜயலெட்சுமி , தங்கம் என எல்லா திரையரங்கிலும் படங்கள் பார்த்த ஞாபகம்.

    நினைவூட்டலுக்கு நன்றி

  15. #1899
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    Rajesh Sir

    Madurai old theatres ....just recall old memories...


    chinthamani



    central

  16. #1900
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    NEW CINEMA


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •