Page 9 of 401 FirstFirst ... 78910111959109 ... LastLast
Results 81 to 90 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #81
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'சிவந்த மண்' சில காட்சிகள்.

















    Last edited by vasudevan31355; 15th August 2014 at 11:37 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes Russellmai, Richardsof liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #82
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    SUTHANTHIRA VETGAI PAADAL


  5. #83
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    ANOTHER SONG ABOUT FREEDOM


  6. #84
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவந்த மண்- 1969 -சில நினைவுகள்.

    ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.

    தமிழ் திரை பட உலக சரித்திரத்திலேயே இவ்வளவு hype உடன் வெளியான இரண்டே படங்கள் சந்திரலேகா, சிவந்த மண் .இரண்டும் பெரும் பொருட்செலவில் தயாரிக்க பட்ட பிரம்மாண்டங்கள். முதல் முறை வெளிநாட்டில் தமிழ் படம். ஹேமமாலினி நடிப்பதாக இருந்த படம்.(கஸ்டடி battle கோர்ட் கேஸ் இருந்ததால் ஹேமா மாலினி நடிக்க முடியவில்லை. பெரிதும் வருந்தி தமிழில் ஒரே படம்தான் நடிப்பேன்.அது சிவாஜி கணேசனுடன்தான் என்று பேட்டி கொடுத்தார்). 1967 என்று நினைவு. சிவாஜி,ஸ்ரீதர் கலந்து கொண்ட கூட்டத்தில் ,ஸ்ரீதர் இந்த படத்தை அறிவித்து ,தமிழிலேயே முத்த காட்சி இடம் பெற போகும் முதல் படமாக இருக்கும் என்றார். பின்னால் பேசிய சிவாஜி, அதெல்லாம் சரிதான்,என் மனைவி இருக்கும் போதா இதை சொல்வது என்று ஜோக் அடித்தார். தமிழ் நாடே திரு விழா கோலம் பூண்டு இந்த படத்தை வரவேற்றது. சிவாஜி வேறு ஆனந்த விகடனில் "அந்நிய மண்ணில் சிவந்த மண்" என்ற தொடர் எழுதி இருந்தார்.

    சிவந்த மண் போல் பிரம்மாண்டம் கொண்ட படம் ,இந்திய திரையுலகம் இது வரை கண்டதில்லை. வெளி நாடுகள்(அதுவும் ஐரோப்பிய) படபிடிப்பு, கப்பல்,ஹெலிகாப்ட்டர், காட்டாறு,சுழல் மேடை என்று ஏக தட புடல். படமும் மிக மிக பிரம்மாண்ட வெற்றி படமாய் பத்து திரையரங்குகளில் நூறு நாள் கண்டது. பெரும்பான்மையான திரையரங்குகளில் ஐம்பது நாட்களும், repeat ரன்களில் பிரமாதமாய் ஓடி(பைலட் தியேட்டரில் 80 களில் 75 நாட்கள்)

    எனக்கு தெரிந்த எந்த சிவாஜி படத்திலும்,heroine அறிமுகம் ஆகும் முதல் காட்சி இவ்வளவு அமர்க்களமாய் வரவேற்பு பெற்றதில்லை.(காஞ்சனா போன் பேசும் காட்சி). சிவந்த மண்ணின் சிறப்பே அதுவரை வந்த action படங்களில் இருந்து மாறு பட்டு ,கதாநாயகன் திட்டமிடுவார். வில்லன் ரியாக்ட் செய்வார். திட்டங்கள் படு சுவாரஸ்யமாய் ,படம் விறு விறுப்பாய் செல்ல உதவும். மூன்று மணி நேர இன்ப பயணம்.helocopter fight , கப்பல் வெடிகுண்டு காட்சி,தொடரும் சேஸிங், பட்டத்து ராணி, ரயில் பால வெடிகுண்டு காட்சி, அமர்க்களமாய் மாறி மாறி ஊசலாடும் உச்ச காட்சி என்று தமிழில் வெளி வந்த மிக மிக சிறந்த action ,adventure படமாய் இன்றளவும் பேச படுகிறது.

    எம்.எஸ்.விஸ்வநாதனின் பங்களிப்பு இந்த படத்தின் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்தியது.(கார்த்திக் சார் சொன்னது போல் அவரின் மிக சிறந்த படம்)ஒரு ராஜா ராணியிடம், முத்தமிடும் நேரமெப்போ, ஒரு நாளிலே உறவானதே,பட்டத்து ராணி, பாவை யுவராணி கண்ணோவியம்,சொல்லவோ சுகமான என்று ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை பாணி,ஒவ்வொரு நாட்டு இசை கோர்ப்பு, பின்னணி இசை(முக்கியமாய் கப்பலில் ராதிகா டான்ஸ்,மாறும் காட்சிகளுகேற்ப மாறும் இசை,) ஹாட்ஸ் ஆப் எம்.எஸ்.வீ சார். உங்களுக்கு கடன் பட்டுள்ளோம்.

    சிவாஜி இந்த படத்தில் மிதமான make -up ,natural hair style , rugged ,manly , subtle உடையலங்காரங்களில் படு படு படு இளமையாய், handsome ஆக இருப்பார்.காஞ்சனா பொருத்தமான ஜோடி. என் தூக்கத்தை பல இரவுகள் கெடுத்த romance சீன் ஒரு நாளிலே உறவானதே. ஒரு ஷாட்டில் கட்டி அணைத்து, சிவாஜி சொக்கி போவார்.எந்த வேடத்திலும் ,எப்படிபொருந்துகிறார் சிவாஜி?? அராபிய உடையிலும் !!! action ,ரொமான்சில் கூட சிவாஜியிடம் யாரும் நெருங்க முடிந்ததில்லை.

    ஹெலிகாப்ட்டர் காட்சி ,கப்பல் காட்சி, ஜெயில் சண்டை காட்சிகள் மிக மிக சிறப்பாக வந்திருக்கும். தேங்காயுடன் விமான சண்டை,செஞ்சி கிருஷ்ணனுடன் ஆற்றில் சண்டை, உச்ச கட்ட பலூன் சண்டைகள் சொதப்பல். (ஷ்யாம் சுந்தர் down down ) .வெளி நாட்டு காட்சிகள் சிறப்பாக படமாக்க பட்டிருக்கும்.(ஓடம் பொன்னோடம் படமாக்கம் படு மோசம் . பனி சறுக்கு காட்சியில் இசை உச்ச வேகம் பிடிக்கையில் skate செய்து கொண்டிருப்பவர் நின்று விடுவார்!!)

    ஸ்ரீதரின் திரைக்கதையமைப்பு புத்திசாலிதனமாய்,விறு விறுப்புடன் இருக்கும். இயக்கம் கேட்கவே வேண்டாம். சிவாஜி-ஸ்ரீதர் இணைவில் மிக சிறந்த படைப்பு இதுதான்.அடிமை பெண்ணிற்கு போட்டியாக வந்திருக்க வேண்டியது ,தீபாவளிக்கு தள்ளி போனது. அதனால் என்ன,நமக்குதான் தீபாவளி ராசியாயிற்றே.!!! இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சிவாஜி பிலிம்ஸ் ஒரு படத்தை கீழை நாடுகளில் (ஜப்பான் உள்ளிட்ட) படமாக்க திட்டமிட்டு ,திட்டம் கசிந்து விட்டதால்,மாற்று முகாம் அள்ளிதரித்த அவசர கோலத்தில் முந்தி கொண்டது.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. Likes rajeshkrv liked this post
  8. #85
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    சிவந்த மண் தகல்வகள் அருமை கோபால் ஜி, வாசு ஜி .. நடிகர் திலகத்தின் படங்கள் அருமை அருமை ..

  9. #86
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மெல்லிசை மன்ன்ர் எம்.எஸ்.வி. பட்டிதொட்டியெங்கும் ஒலிபெருக்கிகளில் "நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்.. நான்..." என்று முழங்கிக்கொண்டிருந்த காலம் அது.

    பெரும்பாலும் அதன் வரிகளுக்காக அறியப்படும் இந்தப் பாடல் தமிழ்த் திரையிசை உலகில் ஜாஸ் பயன்பாட்டில் ஒரு மைல்கல். பெருங்குழு ஜாஸ் (Big Band Jazz)வடிவத்தை முழுமையாக அடியொற்றி அமைந்த பாடல் இது. துவக்கத்திலேயே ஜாஸின் அற்புத சாத்தியங்களை எம்.எஸ்.வி தெளிவாக எட்டியிருப்பார். முன்னீடு முடிந்து சௌந்தர்ராஜன் துவங்குமுன் ஒரு நொடிக்கு ஒரு சிறிய கிடார் ஒலி வந்துவிட்டுப் போகும். கிட்டத்தட்ட நானும் இருக்கிறேன் என்று ஆரம்பத்திலேயே அறிவித்துவிடுவதைப்போல. இதற்காகவே நான் பல தடவைகள் முன்னீட்டை மாத்திரம் பல தடவைகள் கேட்டிருப்பேன். நினைத்ததை... நடத்தியே... முடிப்பவன் - என்று ஒருவகையில் நீட்டி முழக்கிப்பாடுவது பெரும்பாலான செவ்வியல் இசைவடிவங்களில் வராது. அவை ஒற்றைத்தாளகதியில் சீரான ஒட்டத்தில்தான் வரும். ஜாஸில் இந்தக் கட்டுப்படற்ற தன்மை அதன் தனித்துவத்திற்கு முக்கிய காரணம். 'என்னிடம் மயக்கம்" என்று சொன்னவுடன் அதைத் தொடர்ந்துவரும் ட்ரம்பெட்டின் இசை ஸ்விங் வடிவத்தின் அமைப்பு.

    கொஞ்சம் நீளமான பாடல் இது. கிட்டத்தட்ட ஏழு நிமிடங்களுக்கு வரும். இதில் டி.எம்.எஸ் குரலுக்குப் பதிலாக ஒரு ட்ரம்பெட்டையும், ஈஸ்வரி குரலுக்குப் பதிலாக ஒரு சாக்ஸஃபோனையும் மாற்றிப்போட்டிருந்தால் எப்படியிருக்கும் என்று பலநாட்கள் நான் கற்பனை செய்துபார்த்திருக்கிறேன். முதல் இடையீட்டில் வரும் கிட்டாரின் இசைவும் அதனுடன் இணைந்துவரும் பெண்களின் சேர்குரலிசையும் அற்புதமாகக் கையாளப்பட்டிருக்கும். இந்தவகை பெண்களின் சேர்குரலிசை ஒருவகையில் எம்.எஸ்.வியின் முத்திரையாக மாறிப்போனது. உலகம் சுற்றும் வாலிபன் (பச்சைக்கிளி), ரிக்ஷாக்காரன் (அழகிய தமிழ் மகள்), போன்ற பல படங்களில் இந்தவகை பெண்களின் சேர்குரலிசையை எம்.எஸ்.வி அற்புதமாகக் கையாண்டிருப்பார். முதலாவது இடையீடு அற்புதமான இசைக்கலவைகளால் ஆனது.

    பெரும்பாலான பெருங்குழு ஜாஸ்களில் வரும் வடிவத்தைப்போல பாடல் முழுவதும் சௌந்தர்ராஜன் அல்லது எல்.ஆர். ஈஸ்வரி பாடும் இடங்களில் ஒரே வகையான தாளத்தை (மிகவும் எளிமையானது)க் கையாண்டு முழுக்கவனமும் பாடுபவரின் குரலின்மீது படியும்படி இசை ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். இதன் இறுதியில் தாளகதி மாறி, பிற வாத்தியங்கள் சேரும்பொழுது ஒருவித துள்ளலுடன் ட்ரம்ஸ் அந்த மாற்றத்தை வழிநடத்தும். இதுபோன்ற வடிவத்தை பல ஜாஸ் இசைகளில் கேட்கமுடியும். இந்த முறைதான் தனித்தனியாக ஒவ்வொரு வாத்தியக் கலைஞர்களும் தங்களின் விசேடத்திறனைக் காட்டினாலும் இசை ஒருவித சீரற்ற (ஆனால் நியதியான) ஒட்டத்தில் இருக்க உதவுகிறது.

    பாடலின் இன்னொரு முக்கியமான இடம் இரண்டாவது இடையீட்டிற்கு முன் வருவது. வழக்கமாக பல்லவி ஒருமுறைதான் நம் திரைப்படங்களில் இடையில் வந்துபோகும். ஆனால் இதில் சற்றும் எதிர்பாராத விதமாக "நினைத்ததை நடத்தியே..." என்று மூன்று முறை மாறிமாறி வந்துவிட்டுப் போகும். இது ஜாஸின் சுயகற்பனை வடிவம். (ஆனால் டி.எம்.எஸ். இதிலெல்லாம் விசேடமாக எதையும் செய்யாமல் ஒரே மாதிரி திரும்பத்திரும்பப் பாடிக்கொண்டிருப்பது கொஞ்சம் அபத்தமாக இருக்கும். வேறு சுய கற்பனையுள்ள பாடகர் இந்த இடத்தில் வைரமாக ஜொலித்திருக்க முடியும். டி.எம்.எஸ்ஸிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்றுதான் தோன்றுகிறது).

    முதல் இடையிட்டில் கிட்டார், ட்ரம்பெட், சேர்குரலிசை என்று கலவையாக வரும். ஆனால் இரண்டாவது இடையீட்டில் இதற்குச் சற்றும் மாறாக பெரும்பாலும் ட்ரம்ஸ் மாத்திரமேயாக, பின்னர் தனியாக சேர்குரலிசை என்று வேறு வடிவத்தில் வரும். திரும்பவும் மூன்றாவது இடையீட்டில் பழைய வடிவம் திரும்ப வரும். அந்தக் காலங்களில் பாடல் முழுவதும் ஒரே சீரான ஒட்டத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். (உதாரணமாக கே.வி.மகாதேவனின் பல பாடல்களில் ஒரே வகையான இடையீட்டு இசைதான் இருக்கும் அதேதான் திரும்பத்திரும்ப வந்து போகும்). இப்படிப்பழக்கப்படிருந்த காதுகளுக்கு இந்தப் பாடல் ஒரு வித்தியாசமான, புரியாத புதிராகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    எல்.ஆர். ஈஸ்வரி குரலைப்பற்றி இந்தத் தொடரில் நிறையவே சொல்ல வேண்டியிருப்பதால் இங்கே எதுவும் சொல்லப்போவதில்லை. விசேடம் என்ன என்று புரியவேண்டுமென்றால் "முதல் நாள்..." என்று வரும் இரண்டாவது சரணத்தில் அவரது குரலின் சிக்கலான வடிவத்தை உன்னிப்பாகக் கேட்டுப்பாருங்கள்.


    மொத்தத்தில் எம்.எஸ்.வி தமிழ்த் திரையிசையின் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஒரு அற்புதமான பெருங்குழு ஜாஸ் பாடலைத் தந்திருக்கிறார். அந்தக் காலத்தின் தமிழ்த் திரையிசைப் பாடல்களுடன் ஒப்பிட்டுப்பார்க்க இது ஒரு அசுர சாதனைதான். இதில் வரும் கிடார், ட்ரம்ஸ், ட்ரம்பெட் இசைகளைத் தனித்த்னியாக நிறுத்தி நிதானித்துக் கேட்டுப்பார்ப்பவர்களுக்கு எம்.எஸ்.வியின் அற்புதக் கற்பனை பிரமிப்பூட்டும் என்பது நிச்சயம்.

    COURTESY - NET
    Last edited by esvee; 15th August 2014 at 10:18 AM.

  10. #87
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சரி! சரி! இரு திலகங்களும் அவரவர்கள் பங்கை அவரவர்கள் சிறப்பாகவே செய்தார்கள். போட்டி பொறாமைகளுக்கு இன்று முதல் விடுதலை அளிப்போம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #88
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    குட்மார்னிங்க் நண்பர்காள்.. ஹாப்பி இண்டிபெண்டன்ஸ் டே..

    லீவ்ங்கறதால லேட்டாத் தூங்கி லேட்டா எழுந்திருச்சா நிறையபக்கங்கள்..வாசு சாரோட ரங்கா ரங்கையா பத்தி நேத்தே சொல்லியிருக்கணும்.இன்னிக்கு நன்றி.

    ஒவ்வொண்ணா பார்க்கணும்..டபக்குன்னு கண்ணில் பட்டது சிவந்த மண்..அதிகம் பேச ப படாத பாடல் ஒண்ணு இருக்கே

    பார்வை யுவ ராணி கண்ணோவியம்.. ரொம்ப நல்ல பாட்டு.. ந.தி.காஞ்ச். அழகு..

    ஏகப்பட்ட ஹிந்திப் பாடல்களில் மனதுள் எழும்பி டிஸ்டர்ப் செய்தது.. நா கோயி உமங்க் ஹை..

    அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் - சமீபத்தில் ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் சொல்லியிருந்த பேட்டியில் அதில் நடித்த துணை நடிகர்களில் 95 % உயிருடன் இல்லை என எழுதியிருந்தார்..காலத்தின் இயற்கை..கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது..ஆனால் பாட்டு நல்லபாட்டு..

    ம்ம் நிறைய எழுத வேண்டும்..

    அனைவருக்கும் என் சுதந்திர தின வாழ்த்துக்கள் .

  12. #89
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜேஷ் சார்,

    'கானக் குயிலி'ன் சோகத்தில் ஒலிக்கும் ஒரு அபூர்வ பாடல். 'செல்லப் பிள்ளை' படத்தில். அதிகம் பிரபலமாகாத பாடலென்றாலும் சோகம் அருமை.



    http://www.inbaminge.com/t/c/Chella%20Penn/
    நடிகர் திலகமே தெய்வம்

  13. #90
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பூர்ணிமா ஜெயராம் விதி பாடல் தாங்க்ஸ்.. இருப்பினும் மலையாள்ப் பாடல் இரண்டு மஞ்ஞில் விரிந்த பூக்களில் விழியோரம் நிலா வருண்ணு அண்ட் ஓளங்கள் ஒரு பாட்டு (தமிழிலும் அந்தப் பாட்டு வந்திருக்கிறது நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது)

    பொஙுகும் பூம்புனல் ராகவேந்தர் சார், ராஜேஷின் கானங்கள், எல்.ஆர்.இ இன் பாட்டு பை மதுண்ணா, வாசுதேவன் சாரின் காணொளிகள்.. அருமை..ஒரு சில பார்த்தேன்..எல்லாவற்றையும் நிதானமாகப் பார்க்க வேண்டும்..கோபால் அஸ் யூஸ்வல் சிவந்த மண் ரைட் அப் நைஸ்..

    க்ருஷ்ணா ஜி காணோமே..

Page 9 of 401 FirstFirst ... 78910111959109 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •