Page 172 of 401 FirstFirst ... 72122162170171172173174182222272 ... LastLast
Results 1,711 to 1,720 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1711
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    இன்றைய நமது சினிமா, காட்சிகளையும், ஒலியையும் உயிரோட்டமாகக் கொண்ட ஒரு மீடியா என்பதே சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் இருக்கிறது என்று கருதுகிறேன். வசனமே இல்லாமல்கூட ஒரு படத்தை ரசனைக்கு உரியதாகப் படைக்க முடியும். ஆனால், அத்தகைய முயற்சியில் ஈடுபடும் ஒரு கலைஞனுக்குக் கற்பனைத் திறன் அதிகமாகத் தேவைப்படுகிறது - மகேந்திரன்.

    தமிழ் சினிமாவில் சாதனை படைத்த படைப்பாளிகளில் மகேந்திரன் குறிப்பிடத் தகுந்தவர். தமிழ் சினிமாவில் யதார்த்தமான படங்கள் எப்போதாவது ஒருமுறை வருவதுண்டு. அவற்றில் 1970-கள் வரை குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை: ஏழை படும் பாடு (1950), அவன் அமரன் (1958), பாதை தெரியுது பார் (1960), கலைக்கோவில் (1964), உன்னைப் போல் ஒருவன் (1965), ஆலயம் (1967), புன்னகை (1971) எனச் சில. 1978-ல் முள்ளும் மலரும் என்ற மிகச் சிறந்த படைப்பின் மூலம், யதார்த்தப் படங்களுக்கு ஒரு சிறந்த பாதையை அமைத்துக் கொடுத்தவர் இயக்குநர் மகேந்திரன். இன்று பிறந்தநாள் காணும் அவரை யதார்த்த சினிமாவின் ஆசான் என்று வாழ்த்துவது தகும்.
    டைரக்டர் எரி வான் ஸ்ட்ரோஹிம் 1920-களில் (படம்: தி கிரீடு, 1923) தொடங்கிவைத்த பாணி, ஒரு கற்பனைக் கதையை, யதார்த்தப் பாணியில் படமாக்குவது. ஏறத்தாழ 55 வருடங்களுக்குப் பிறகு, அதைத் தமிழ் சினிமாவில் கடைப்பிடித்து, தொடர்ந்து 12 படங்களை அதே பாணியில் தந்தவர் மகேந்திரன்.

    மகேந்திரன் 1977வரை கதை-திரைக்கதை-வசனகர்த்தாவாகப் பல படங்களில் பணியாற்றியவர். தங்கப்பதக்கம் (1974), வாழ்ந்து காட்டுகிறேன் (1975), வாழ்வு என் பக்கம் (1976) போன்ற வெற்றிப் படங்கள் இதற்கு உதாரணங்கள். பெயர் பெற்ற வசனகர்த்தாவான அவர் இயக்கிய முதல் படத்தில் வசனங்களே குறைவு என்பதே அவர் எப்படிப்பட்ட படம் எடுக்க ஆசைப்பட்டார் என்பதை விளக்குகிறது.

    அவர் இயக்கிய 12 படங்களில் (முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு, மெட்டி, அழகிய கண்ணே, கை கொடுக்கும் கை, கண்ணுக்கு மை அழகு, ஊர் பஞ்சாயத்து மற்றும் சாசனம்) பல தேசிய அளவில் பாராட்டப்பட்டவை. முள்ளும் மலரும் (1978), உதிரிப் பூக்கள் (1979), மற்றும் நெஞ்சத்தைக் கிள்ளாதே (1980) ஆகியவை 30 வருடங்களுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவில், யதார்த்தப் படங்களுக்கான வழிகாட்டிகளாக இருந்துவருகின்றன. இந்த மூன்று படைப்புகளுடன், ஜானி (1980), நண்டு (1981), சாசனம் (2006) ஆகியவை என்னுள் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

    முள்ளும் மலரும்
    சினிமா ஒரு விஷுவல் மீடியம் என்பதைத் தமிழ் சினிமா மறந்து, பாடல்களிலும், பக்கம் பக்கமாக வசனங்கள் பேசுவதிலும் திளைத்தது. 47 வருடங்கள் இப்படிக் கடந்த பின், குறைவான வசனங்களுடன், காட்சிப் படைப்பின் மூலமும், பின்னணி இசை மூலமும் கதையை நகர்த்தி, மாபெரும் புரட்சியைச் செய்தது இப்படம். தேசிய விருதுகளுக்கு இப்படம் அனுப்பப்படாவிட்டாலும், இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டு, பெரும் பெயரைப் பெற்றது.

    உதிரிப் பூக்கள்
    யதார்த்தமும் அழகியலும் கலந்த இப்படம், நூற்றாண்டு கால இந்திய சினிமாவின் 100 சிறந்த படங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது. சாடிஸ்டான ஒருவனை முன்னிறுத்தி, கடைசிவரை அவனின் கதாபாத்திரத் தன்மையை மாற்றாமல், அதற்கான தண்டனையை அவன் பெறுவது ஒரு புதுமை. மிகக் குறைந்த வசனங்களுடன், பின்னணி இசை மூலம் ஒரு சிக்கலான மனநிலை சம்பந்தப்பட்ட படத்தைத் தந்தது மகேந்திரனின் சிறப்பான இயக்கத்துக்குச் சான்று. இப்படமும் தேசிய விருதுகளுக்கு அனுப்பப்படவில்லை. ஆனால், இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டுப் பெயர் பெற்றது.

    நெஞ்சத்தைக் கிள்ளாதே
    தேசிய விருதுக்கு அனுப்பப்பட்ட மகேந்திரனின் முதல் படம், மூன்று விருதுகளைப் பெற்று வந்தது. காட்சிப் படைப்பும், ஒளிப்பதிவும், பின்னணி இசையும் ஒரு படைப்பை உன்னத இடத்துக்குக் கொண்டுசெல்ல முடியும் என்று மகேந்திரன் மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். தன்னம்பிக்கை உள்ள பெண்ணின் காதலைக் கவிதையாகச் சொல்லி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். வணிக வெற்றியுடன், பல விருதுகளைக் குழுவினருக்குப் பெற்றுத் தந்த இப்படம், உயர்ந்த தரத்திற்காக என்றென்றும் பேசப்படும்.

    ஜானி
    இரட்டை வேடங்கள் உள்ள இப்படத்தில் இரண்டையுமே நல்ல கதாபாத்திரங்களாகப் படைத்து, அதில் ரஜினிகாந்தின் சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்தார் மகேந்திரன். தேவியின் பண்பட்ட நடிப்பிலும், காட்சி அமைப்பிலும், அற்புதமான ஒளிப்பதிவிலும், இசையிலும் மிளிர்ந்த இந்தப் படம், அழகான வெகுஜனக் கவிதை.

    நண்டு
    வடக்கத்தியக் கலாச்சாரத்தையும், இந்தி மொழியையும் (இரண்டு முழுமையான இந்தி பாடல்களைப் படத்தில் வைத்து) தைரியமாகவும் அதே சமயம் சரியாகவும் உபயோகப்படுத்திய படம். நோய்வாய்ப்பட்ட ஒருவன் தனக்கான ஆதரவையும் காதலையும் தமிழ்நாட்டில் பெறுகிறான். சொந்த ஊரில் இது அவனை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மகேந்திரன் அழுத்தமாகச் சொல்லியிருப்பார்.

    சாசனம்
    செட்டிநாடு என்கிற சமூகத்தின் பழக்கவழக்கங்களையும், வாழ்க்கையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்த படம். குறைந்த செலவில், நிறைவாக எடுக்கப்பட்ட இப்படம், சரியான நேரத்தில் வெளிவந்திருந்தால், பல சாதனைகளைச் செய்திருக்கும்.
    இவருக்கு, இதுவரை, தேசிய அளவில் பத்ம விருது அங்கீகாரம் தராதது வருத்தம் தருகிறது. பிறமொழிகளில் இவரை விடவும் குறைவான சாதனைகள் புரிந்தவர்கள் பத்ம விருதுகளைப் பெறும்போது, தமிழ் சினிமாவின் தரம் உயர அதிகம் பங்களிப்பு செய்த இவருக்கு அத்தகைய அங்கீகாரம் விரைவில் கிடைக்க இந்த நேரத்தில் பிரார்த்திக்கிறேன்.

    அவரின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக, சினிமா துறையில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள, அவரின் புத்தகமான சினிமாவும் நானும் என்ற புத்தகத்தையும் குறிப்பிடலாம். சினிமா துறையில் நுழைய விரும்புபவர்களும், அதில் உள்ளவர்களும், கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம்.
    இந்தப் புத்தகத்தில், மறக்க முடியாத பெருமைக்குரிய படங்கள் என்பவை, வெற்றியும் கண்டு, காலத்தால் அழியாதவையாக மக்கள் மனத்தில் நிலைத்து நிற்கும். அத்தகைய பெருமைக்குரிய படங்கள் நமது மண்ணின் பெருமையையும் கலாச்சாரத்தையும், நம் மக்களின் நிஜமான வாழ்வையும் பிரதிபலிப்பவையாக இருக்கும். அவை நமது மண் சார்ந்த இதர கலைகளின் மகிமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் என்று மகேந்திரன் சொல்லியிருக்கிறார்.
    இந்த ஆசானின் படைப்பாற்றலைத் தமிழ் சினிமா மீண்டும் ஒரு திரைப்படம் மூலம் காணப் போகிறது என்ற செய்தி மகிழ்ச்சி தருகிறது.

    From Tamil Hindu
    gkrishna

  2. Likes chinnakkannan, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1712
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கலைக்கோவில் (1964),ஆலயம் பார்த்ததில்லை ..எப்படி இருக்கும்..


    திடுமென பானுப்ப்ரியாவின் முதல்படம் நினைவுக்கு வந்த்து..மெல்லப் பேசுங்கள்..வசந்த் கதானாயகன் என நினைவு..செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு, காதல் சா..கா..து..உயிர் போ..கா..து என அழகுப் பாடல்கள்..பாரதிராஜா அல்லது இளையராஜாவின் சொந்தப் படம்..படம் சரியாகப் போகாததால் பானுப்ரியா தெலுகுக்குப் போய் சித்தாரா என்னும் படமோ என்னவோ கிருஷ்ண வம்சியால் மோதிரக்கை குட்டு வாங்கி பின் பாடும் பறவைகள் (தெலுகில் இருந்து தமிழில் டப் செய்யப் பட்டு) மூலமாகமறுபடி தமிழ் மார்க்கெட்பிடித்தார் என நினைக்கிறேன்.. பாடும் பறவைகளில் கூட இரண்டு நல்ல பாடல்கள்..கீரவாணி, ஏகாந்த வேளை..ம்ம்

  5. #1713
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வாருங்கள் மதுஜி.

    வந்தவுடனேயே அமர்க்களமான பாடல்கள் வந்து விழுகின்றன. உச்சம் 400 பூக்கள். ரொம்ப நாள் இப்படித்தான் இருக்க வேணும் என்று கற்பனை பண்ணி வைத்திருந்த பாட்டு. பரவாயில்லை. கற்பனைக்கு வெற்றிதான்.

    ஆனால் உற்சாக பாலாவின் அந்த தேன் மதுரக் குழைவுக் குரலுக்கு முத்து தூள் கிளப்பியிருக்க வேண்டாமோ! சரியான அசமந்தம். இப்பத்தான் 'துலாபாரம்' படத்தில் 'சிரிப்போ இல்லை நடிப்போ'வில் மனிதர் பிச்சி உதறியிருந்ததை வானாளாவ புகழ்ந்து எழுதியிருந்தேன். இங்கு மனிதர் முகத்தில் கரி பூசி விட்டாரே!

    நீங்கள் சொன்னது போல் எது எப்படி இருந்தால் என்ன? அட்டகாசமான மியூசிக்கும், பாலாவின் பட்டை கிளப்பும் குரலும், 'பாபி பாபி பாபி' கோரஸும் இந்தப் பாடல் என்றும் வாழ்க என்று கூப்பாடு போட வைக்குதே.

    அநியாயத்துக்கு உங்களுக்கு தேங்க்ஸ் மதுஜி.

    கொலம்பியாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.பல முத்தான பாடல்கள் கிடைக்க அந்த நிறுவனம் ஸ்டோர் செய்து வைத்த ஒளி நாடாக்கள்தான் காரணம். இன்று கிடைக்காத பல பொக்கிஷங்களை நாம் அந்த நிறுவனம் தரும் படங்கள், மற்றும் பாடல்கள் மூலம் ரொம்ப ஈசியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட அபூர்வ பாடல்களை தரவேற்றும் அருமை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து இங்கே அளிக்கும் பணியைச் செவ்வனே செய்யும் தங்களுக்கும் கோடி நன்றிகள்.

    ஆங். மறந்து விட்டேனே. அந்த கருப்பு ஹிப்பி கட்டழகன் நம்ம 'ஜூனியர் பாலையா' மது சார்.
    Last edited by vasudevan31355; 2nd September 2014 at 08:38 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Thanks madhu thanked for this post
  7. #1714
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    வாடைக் காற்றம்மா... வாடைக்காற்றம்மா... வாலிப மனசை நாளுக்கு நாளாய் வாட்டுவதென்னம்மா... என்ற இந்தப் பாட்டுத் தான் நம் மக்களுக்கு வாடைக் காற்று என்றால் உடனே நினைவுக்கு வரும். ஆனால் இலங்கை வானொலியின் வாடைக்காற்றி நினைவில் வைத்து அருமையாக படைத்த தங்களின் ஆற்றலை என்னென்பது.

    சென்னை நகர மக்களைப் பொறுத்த வரையில் வாடைக்காற்றம்மா பாடலை அதிகம் பேர் கேட்டிருக்க வாய்ப்பில்லை. 70 களின் பிற்பகுதியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சென்னை நகரில் இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் கேட்கவில்லை. அப்போது அலைவரிசை மாற்றம் ஏற்பட்டிருந்தது. 60களிலிருந்தே சிற்றலையில் தான் கேட்டு வந்த காலம். சிற்றலையில் ஒலி சீராக இருக்காது. மீடியம் வேவ் எனப்படும் அலைவரிசையில் சீராக இருக்கும். இலங்கை வானொலியின் மீடியம் வேவ் வானொலி நெல்லை கன்னியாகுமரி தொடங்கி அதிகபட்சம் விழுப்புரம் திண்டிவனம் எனப்படும் சுற்று வட்டாரம் வரையில் மட்டுமே கேட்கும். சென்னையில் மிகவும் கஷ்டம். சிற்றலையில் மட்டுமே கேட்கும். அதுவும் இலங்கை வானொலியின் தமிழ் சேவை 2 .. இது தான் திரைப்படப் பாடல்களை அதிகம் ஒலிபரப்பு செய்யும் அலைவரிசை..சென்னை நகரில் சிற்றலையில் காலையில் கொஞ்ச நேரமும் மாலையில் கொஞ்ச நேரமும் மட்டுமே கேட்கும். எஞ்சிய நேரங்களில் அலைவரிசை ஒன்று ஒலிபரப்பாகும்.
    இந்த கால கட்டத்தில் இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை இரண்டை அதிகம் கேட்க முடியாமல் அவதிப்பட்ட துரதிருஷ்டசாலிகள் சென்னை மக்கள். எப்போதாவது வெளியூருக்கு போகும் சந்தர்ப்பம் கிடைத்தால் மட்டுமே இலங்கை வானொலி கேட்க முடிந்தது.

    இந்த கால கட்டத்தில்தான் வாடைக் காற்று படமும் பாடலும் மிகப் பெரிய புகழடைந்தது. வெளியூரிலிருந்து வரும் நண்பர்கள் இப்பாடலைப் பற்றி சொல்லும் போதெல்லாம் நாம் கேட்க முடியவில்லையே என வருந்தியதுண்டு. அதன் பின் இலங்கை வானொலியின் ஒலிபரப்பு படிப்படியாக சென்னையில் குறைந்து விட்டது.

    எப்படியோ அந்தக் காலத்தில் ஓரிரு முறை கேட்க நேர்ந்த பாடலை இப்போது வழங்கி என்னைப் போன்ற ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்த வாசு சாருக்கும், மேலதிக விவரங்கள் தந்த கிருஷ்ணாஜி அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1715
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    நான் தங்களுடன் 1000000000000000000000000 சதவிகிதம் உடன் படுகிறேன்.
    நானும் தான் நான் 10000000000000000000000000000000000000000000000000 00000000000000000 சதவிகிதத்திற்கும் மேலே உடன்படுகிறேன்

  9. #1716
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    கலைக்கோவில் (1964),ஆலயம் பார்த்ததில்லை ..எப்படி இருக்கும்..

    'கலைக்கோயில்' காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் இருந்தும் ஏனோ தானோ என்று எடுக்கப்பட்டு பொருத்தமற்ற நடிகர்களின் தேர்வினால் 'கொலைக் கோயில்' ஆனது.

    'ஆலயம்' ஆர்ட் மூவி ரேஞ்சுக்கு ஓர் அருமையான படம். மேஜரின் பண்பட்ட நடிப்பு. பாடல்களும் ஓ.கே.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Thanks chinnakkannan thanked for this post
  11. #1717
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மிக்க நன்றி ராகவேந்திரன் சார். தங்கள் ஆதரவும், ஆசீர்வாதமும் என்றும் எங்கள் துணை நிற்கும். இரண்டு நாட்களாக தங்கள் 'பொங்கும் பூம்புனல்' பார்க்காமல் என்னவோ போல் உள்ளது, ப்ளீஸ்.
    Last edited by vasudevan31355; 3rd September 2014 at 07:58 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #1718
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வணக்கம் ராஜேஷ்ஜி.

    எங்கே அவ்வளவாகக் காணோம். நல்ல கன்னடப் பாடல் ஒன்று வழங்குங்கள். பார்த்து நாட்களாகி விட்டது. ராட்சசி பாடலும் முடிந்தால்.
    (உங்கு உன்னடா செல்வமே'போல வெகு வித்தியாசமாய்)
    நடிகர் திலகமே தெய்வம்

  13. #1719
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க.சார்,

    'மெல்லப் பேசுங்கள்' வசந்த். என்னுடைய மைத்துனருக்கு மிக நெருங்கிய நண்பர். அதனால் எனக்கும் நண்பரானார். என்னுடைய மைத்துனர் சென்னை வந்தால் இருவரும் வசந்த் வீடு சென்று அவரை கட்டாயம் பார்த்து விட்டுதான் வருவோம். மிக நல்ல மனிதர். ஏனோ காலன் அவரை சீக்கிரம் அழைத்துக் கொண்டான்.



    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes Russellmai liked this post
  15. #1720
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பாடும் பறவைகள்' படத்தில் அனைவருக்கும் பிடித்த கீரவாணி பாடல். டப்பிங் பட பாட்டு போலவே தெரியாது. அவ்வளவு அற்புதமாக இசை அமைத்திருப்பார் இளையராஜா. சூப்பர் ஹிட் பாடல் வரிசையை சேர்ந்தது.

    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •