Page 133 of 401 FirstFirst ... 3383123131132133134135143183233 ... LastLast
Results 1,321 to 1,330 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1321
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ராட்சசி ரசிகர்களுக்காக

    அவர் பிச்சு உதறிய பாடல்




    அதே போல் குன்னக்குடியின் இன்னொரு அற்புத கானம்

    தலைவா தவப்புதல்வா பாடல் ..


  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1322
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    சலீம் என்ற நடன இயக்குனர் , குறிப்பாக 70,80’களில் தெலுங்கு பட உலகில் கொடி கட்டி பறந்தவர்
    சுமார் 941 படங்களுக்கு நடன இயக்குனராக வேலை செய்தவர். சிரஞ்சீவி, என்.டி.ஆர் என அமர்க்களப்படுத்தியவர்

    அவர் மறைந்தபோது யாருமே கண்டு கொள்ளவில்லை பாவம்

    இதோ அவரது நடன இயக்கத்தில் சிரஞ்சீவியும் மாதவியும் தூள் கிளப்பும் கைதி படப்பாடல்
    பாலுவும் இசையரசி பட்டய கிளப்புகிறார்கள்




  5. Likes Russellmai, gkrishna liked this post
  6. #1323
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கிருஷ்ணா,



    தங்கள் "எல்லை கோட்டை" தாண்டி தரமான, நேர்த்தியான (இரவலாக இருந்தாலும் உபயோகமான) பதிவுகளை துவங்கியுள்ளதற்கு நன்றிகள். சச்சின் இப்போதுதான் ரசிக்க தக்க டெஸ்ட் மேட்ச் விளையாட ஆரம்பித்துள்ளார்.



    குருதத் ஒரு யுக கலைஞன். மேதைகளுக்கே உரிய சுய அழிப்பு அவரை,இளமையிலேயே துடைத்தெறிந்து விட்டது.



    நான் 80 களில் இவரின் அத்தனை படங்களும் திரையிட்ட வாரங்களை ,அஜித் ஹரியுடன் பகிர்ந்த நாட்கள் நினைவில் எச்சிலூர வைக்கும் இனிமை. பியாசா, காகஸ் கீ பூல் சாஹித் பேபி அவுர் குலாம் காலத்தை மீறிய காவியங்கள். பியாசா ஆஸ்கார் பெற்றிருக்க வேண்டியது.தன் சிலையை தானே உடைப்பு செய்யும் மனிதன். காகஸ் கி பூல் அப்படியே இதயத்தை கண்ணீரால் கனக்க செய்யும் காவியம். கொஞ்சம் வெளியிலெடுத்து பிழிந்து காய வைத்தாலே சுயம் பெரும்.



    சிவாஜியின் ஆதர்சம் கூட.
    Last edited by Gopal.s; 28th August 2014 at 08:36 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. Thanks gkrishna thanked for this post
  8. #1324
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

    Kannukku virunthu

    49 ஆண்டுகளுக்கு முன் வந்த புதமை சித்திரம்
    புதுமை இயக்குனரின் அற்புத படைப்பு
    கண்ணை கவரும் உள் அரங்கம் - காட்சிகள் .
    பிரமாண்ட ஒளிப்பதிவு - இனிமையான இசை
    பாடகி ஈஸ்வரியின் மயக்கும் குரல்
    அறிமுக நாயகியின் அட்டகாசமான முக பாவங்கள் - நடனம்
    அறிமுக நாயகனின் எழிலான தோற்றம் - அமைதியான நடிப்பு
    எல்லா சிறப்பு அம்சங்கள் நிறைந்த இனிய பாடல் .
    இன்றைய பாடல் - எல்லோருக்கும் பிடித்த பாடல் .
    மனதை மயக்கும் மதுர கானம் .


  9. #1325
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    ஆஹா... பாடல் ரிக்வெஸ்ட் வச்சு நாளாயிடுச்சு.. இன்னைக்கு அப்ளிகேஷன் போட்டுர வேண்டியதுதான்..

    அந்தக் காலத்து இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை நிகழ்ச்சிகளில் வழங்கப்ப்ட்ட பாடல்களைக் கேட்டவர்கள் மட்டுமே அனேகமாக இந்தப் பாடலை நினைவு கூர முடியும் என நினைக்கிறேன்.

    எத்தனையோ முறை ஒலிபரப்பப் பட்டபோதும் அறிவிப்பாளர் இந்தப் பாடல் இடம் பெற்ற படத்தின் பெயரைக் கூற மறந்த காரணம் ஏனென்று அப்போதும் புரியவில்லை. இப்போதும் புரியவில்லை. இது தனிப் பாடலாகவும் தோன்றவில்லை.

    ஆண் குரல் ஏ.எம்.ராஜா. பெண் குரல் தெரியவில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தளத்தில் அது ஆண்டாள் என்பவரால் பாடப்பட்டது என்று சொல்லி அனேகமாக "நாலு வேலி நிலம்" படமாக இருக்கலாம் என்றும் சொன்னாங்க. ( ஏனெனில் அந்தப் படத்தில் ஆண்டாள் ஏ.எல்.ராகவனுடன் "நம்பினார் கெடுவதில்லை" என்ற பாடலைப் பாடி இருக்கிறார்).

    ஆனால் அந்தப் படத்தின் பாடல்களிலும் இது இடம் பெறவில்லை.

    நண்பர்களே.. இந்தப் பாடலைப் பற்றிய விவரங்கள்...( கண்டிப்பா கொடுப்பீங்க ) ஆடியோ..( கிடைக்கலாம் ). வீடியோ ( சான்ஸே இல்லைன்னுதான் தோணுது ) ஆகியவற்றுக்காக வெயிட்டிங்.....

    ஓ.. என்ன பாட்டுன்னே சொல்லவில்லையே.. அந்த நாளில் கேட்ட பாடலின் வரிகளை நினைவிலிருந்து எழுதுவதால் தவறுகள் இருக்கலாம். மன்னிச்சுக்குங்க..

    ராகம் : கானடா அல்லது தர்பாரி கானடா

    ( கோபால் ஜி... உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம் )

    வானம்பாடிகள் போலே பிரேம கானம் பாடி ம்கிழ்வோம் - நாமே

    ( வானம்பாடிகள் )

    நாணற் கானிலே தென்றல் உலாவ நாதம் பிறந்திடுதே
    ஜீவ நாதம் பிறந்திடுதே
    வானிலே முகில் கூடிடவே மாமயில் ஆடிடுதே
    நடனம் மாமயில் ஆடிடுதே - நாமே


    ( வானம்பாடிகள் )

    மெல்லலை துள்ளும் கொள்ளிடப் பெண்ணாள் வீணையை மீட்டுகிறாள்
    இதய வீணையை மீட்டுகிறாள்
    அன்னை காவிரி செல்வி இவள் அன்பினை வாழ்த்துகிறாள்
    நமது அன்பினை வாழ்த்துகிறாள் - நாமே

    ( வானம்பாடிகள் )

  10. #1326
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங் ஆல்..

    நேத்துக்கு காலையிலும் பின் இரவிலும் பார்க்க முடியவில்லை.. ஒரு ஸாரி..இன்னிக்கும்கொஞ்சம் டைட் ஒர்க் தான்..

    இருந்தாலும் வேக வேகமாகக் கண்ணூடிப் பார்த்ததில்

    தாவணித் தோரணமாய்ப் படங்கள்..பாடல்கள்.. அழகு..

    இன்னும் நிறையச் சொல்ல ஆசை தான் ..இடையில் வரப் பார்க்கிறேன்..

    //வேண்டுமானால் ஒரு தலைப்பை வைத்துக் கொள்ளுங்கள். இலக்கியத் தமிழும் இசைத் திரையும் எனக் கூட...// ஞான சம்பந்தன் ஒரு டூர் போல பையன்கள் பெண்களை அழைத்து குற்றாலம் இன்ன பிற இடங்களுக்கு அழைத்துச் செல்வது போல ஒரு புத்தக்ம் எழுதியிருக்கிறார்.. இலக்கியமும் கொஞ்சம் சினிமாவும் என்னவோ தலைப்பு..ம்ம்
    .. ராகவேந்தர் சார் ..நான் ஏற்கெனவே நான்கு நோட்ஸ் எடுத்து வைத்திருக்கிறேன்.. நேரம் தான் உண்டாக்க வேண்டும் எழுதுவதற்கு..என்னை ஞாபகமாய் மறந்த கோபாலல் சாருக்கு ஒரு நன்றி

  11. #1327
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அண்ணன் மாரே தம்பி மர்ரே எல்லா ஜி மாரே கோ மாரே (நல்ல வேளை கோ என்று டைப் அடித்தேன் சோ என்று அடித்தால் அர்த்தம் மாறி விடும் )
    இந்த விளக்குமர்ரின் காலை வணக்கம்

    திருநெல்வேலியில் பிட் படம் ஓடும் கலைவாணி திரை அரங்கு என்று உண்டு . அதை எல்லோரும் களவாணி என்றே அழைப்பார்கள் . அந்த திரை அரங்கில் டிக்கெட் கொடுக்கும் பெல் அடிக்கும் வரை கவுன்ட்டர் ஈய் ஆடும் .பெல் அடித்த உடன் எங்கே இருந்து தான் கூட்டம் வரும் தெரியாது .ஸ்கூல் தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர்க்கு தெரியாமல் ,உதவி தலைமை ஆசிரியர் ஸ்கூல் தலைமை ஆசிரியர்க்கு தெரியாமல் , வாத்திமார்கள் இந்த இருவருக்கும் தெரியாமல் இதுக்கு நடுவில் என்னை போன்ற விளக்குமார் ஸ்கூல் பாய்ஸ் இந்த வாத்திமார்கள்,உதவி தலைமை ஆசிரியர்,ஸ்கூல் தலைமை ஆசிரியர் இவர்களுக்கு தெரியாமல் டிக்கெட் எடுத்து உள்ளே போனால் ஒரே இருட்டு படம் போட்டு விடுவார்கள் . ஒருத்தர் மேல ஒருத்தர் விழுந்து பெஞ்சை தேய்த்து கொண்டே நடுவில் உட்கார்ந்து இருப்பவரின் ...யையும் சேர்த்து தேய்த்து கொண்டே சீட் தேடி உட்கார்ந்தால் பக்கத்தில் இருப்பவரிடம் கேட்கும் கேள்வி 'எவ்வளுவு நேரம் ஆச்சு ' .பக்கத்தில் இருப்பவர் சொல்லும் பதில் 'இன்னும் சீன் வரலே .'
    பிரதிபா,ரேஷ்மா,ஷகீலா,பிரமீள உடன் ராஜகத துரக பதாதிகள் வெற்றி,சாஜன்,பிரதாப சந்திரன்,தினேஷ் மாஸ்டர் இப்படி எல்லாரும்
    மாறி மாறி வருவார்கள் படத்தில்தான் . இடைவேளை வரும் .லைட் போட்டு பார்த்தால் HM பக்கத்தில் AHM அவர் பக்கத்தில் வாத்திமார்கள் ,
    அடுத்த சீட் நாங்க . 'திருடன்க்கு தேள் கொட்டினால்' மூச் சத்தம் வாராது HM .இடைவேளை முடிந்து படம் போட்ட உடன் நம்ம படம் ஆரம்பிக்கும் 10 நிமிஷம் தான்.திரை அரங்கமே காலி .ஆனால் இந்த 10 நிமிஷம் ஆ நிமிஷம் தான் HM கையில் இருக்கும் வேர்கடலை ,AHM கையில் இருக்கும் பொட்டுகடலை பாக்கெட் விறு விறு என்று வாய்க்கு போகும் . அவ்வளுவு டென்ஷன் . rectangle abtuse angle ஆகி 120-150 இருக்கும் நான் bp யை சொன்னேன் படம் முடிந்து வெளி வரும் போது டிக்கெட் கொடுக்கும் காலி (அதாவது காளி) பய
    'ஏலே க்ரிஷ்ணறு தக்காளி (முதல் எழுத்து சபை மரியாதை கருதி மாற்றப்பட்டு உள்ளது ) பள்ளிடம் (பள்ளிகூடம்) இன்னிக்கு இங்கேயா
    விளங்கும் . ஏதோ என்னயை இந்த காளியை காலி ன்னாரு உங்க HM .இன்னைக்கு அவர் காலி அவர் நம்பர் என்னல

    காலையில் இந்த ரணகளம் ஆகாது .

    அப்புறும் இந்த பாவாடை தாவணி பாடல்கள் வழங்கிய magic மது gee ,
    விக்டரி வினோத் gee மற்றும் எல்லா கீ (நெய்களுக்கும் ) மனமார்ந்த நன்றி . 'தலை' வணங்குகிறேன்

    நன்றி அறிவிப்பு கூட்டம்

    தலைமை - வாசுவார்
    முன்னிலை - கோபாலார்

    திடல் - மனதை கவரும் மதுர கானங்கள் பாகம் இரண்டு

    பொருள் - பாவாடை தாவணியில் சிறந்து விளங்குபவர்கள் அந்நாள் நடிகைகளே

    வாழ்த்துரை: குருஜி ராகவேந்தர் ,ராஜேஷார்,இரும்புகோட்டை கார்திகார்

    கவிதை வாசிப்பவர் - muscat சி கே யார்

    வாழ்த்து பெறுபவர்கள் - magic மது அண்ணா ,விக்டரி வினோத் ஜி

    நன்றி உரை கிருஷ்ணா

    எதாவது விட்டு போச்சா
    gkrishna

  12. #1328
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (63)

    'இன்றைய ஸ்பெஷலி' ல்



    அன்று திரும்பிய இடங்களிலெல்லாம் எதிரொலித்த சூப்பர் ஹிட் பாடல். அனைத்து வானொலிகளிலும் தினம் தினம் ஒலித்த உற்சாகப் பாடல். பாகுபாடின்றி அனைவரும் ரசித்த ஒரு பாடல். பாலாவின் மணிமகுடத்தில் வைரமாய் பதிந்த பாடல். நம் நெஞ்சங்களில் நிறைந்த பாடல்.)


    படம்: மஞ்சள் குங்குமம் (1973)
    பாடல்: 'வாலிப கவிஞர்' வாலி
    இசை: சங்கர் கணேஷ்
    பாடியவர் : பாலா )


    கொள்ளை அழகு கொஞ்சும் ரவிச்சந்திரன். இந்தப் படத்தில் பிளாக் அண்ட் ஒயிட்டில் ரொம்ப ரொம்ப சுந்தரனாகத் தெரிவார். உடம்பும் படு ஸ்லிம். சொந்த மனைவி ஷீலாவுடனான பாடல். ரவியைப் பொருத்தவரையில் இது டூயட். ஷீலாவைப் பொருத்தவரை இது சோகம்.

    நர்ஸ் ஷீலாவை விரட்டி விரட்டிக் காதலிக்கும் ரவி. பிடி கொடுக்காத ஷீலா. ஆனால் தனக்கு ஏற்பட்ட நோயினால் மரண வாசலை எதிர் நோக்கும் ஷீலா. ஆனால் ரவியிடம் காதலை சூழ்நிலை காரணமாக சொல்லிவிட, ரவி மகிழ்ச்சித் தாண்டவம் ஆடி 'இதுவரை உன் காதலை என்னிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தாயே' என்ற அர்த்தத்தில் பாட, ஆனால் அது ஷீலாவைத் தாக்கியுள்ள நோயை அவர் ரவியிடம் சொல்லாமல் மறைக்கும் அர்த்தத்தை நமக்கு உணர்த்தும் அருமையான வரிகள். ' என்னடா இது இப்படியா கதை'?! என்று படம் பார்த்தவர்கள் என்னை ஒரு பிடிபிடித்துவிடப் போகிறீர்கள்?

    நான் இந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்தப் பாடலுக்கான காட்சியையும், பாடல் வரிகளையும் வைத்து என் மனதில் இப்படத்தின் கதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்தது. அது ஓரளவிற்கு சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். (கார்த்திக் சார் இருக்கும் போது எனக்கென்ன பயம்?))


    நோயின் கொடுமை தாளாமல் தள்ளாடித் தள்ளாடி மயங்கி விழப் பார்க்கும் ஷீலா. ரவி தன்னிடம் நெருங்கி வரும்போது அதை மறைக்குமிடம் பரிதாபம். அது தெரியாமல் காதல் வெற்றி பெற்றதே என்று ரவியின் அளவு கடந்த உற்சாக வெள்ளம். 'பிளாக் அண்ட் பிளாக்' பேண்ட் ஷர்ட்டில் ரவி கண் கவருவார். அந்த நடையும், ஓட்டமும், துள்ளலும், சுறுசுறுப்பும் நம்மை 'ரவி ரவிதான்' என்று சந்தோஷக் கூப்பாடு போட வைக்கின்றன. முகம் வசீகரம். (ஷீலா ஏன் மயங்க மாட்டார்?)



    நடிகர் திலகத்தை பாலோ பண்ணி அதே போல் விக், உடை வகையறாக்கள் என்றாலும் அது இவர் ஒருவருக்குப் பொருந்துவது போல வேறு யாருக்கும் பொருந்த வில்லையே! அழகான நடிகர் திலக ஜெராக்ஸ். (திருப்பதி லட்டு கிடைக்காத பட்சத்தில் தி.நகர் லட்டு கிடைத்ததைப் போல)

    பூங்காக்களிலும், மெரினாவிலும் படமாக்கப்பட்ட பாடல். உச்சி வெயிலில் படமாக்கியிருப்பார்கள். ரவி நிழலுருவம் மிகச் சிறியதாக விழும்.



    பொலிவிழந்த ஷீலா பாடலுக்கு ஒரு மைனஸ் பாயிண்ட். கதை அப்படி இருக்கையில் ஒன்றும் செய்வதற்கில்லை.

    வாலி கதை புரிந்து அதற்கேற்றவாறு பிளந்துகட்டியிருப்பார்.)


    சங்கர் கணேஷின் மிகச் சிறந்த பத்துப் பாடல்களில் இப்பாடலும் இடம் பெறலாம். அற்புதமான இசைக்கருவிகளை ஆர்ப்பாட்டமாக உபயோகித்து காலத்தால் அழியாத காவியப் பாடலாக இரட்டையர்கள் இதைத் தந்து விட்டார்கள். இசைக்கருவிகளின் உன்னத ஆர்ப்பாட்டம். முக்கியமாக பாடலினூடே நிறைந்து வரும் அந்த புல்லாங்குழல் ஓசை. பாடல் முடிவடைந்தவுடன் நிறைவு தரும் அந்த இனிய ஓசை.

    (எப்படிப்பட்ட பாடல்களையெல்லாம் தந்த திறமைசாலிகள்! கெடுத்துக் குட்டிச் சுவராக்கிய பெருமை தேவருக்கே உண்டு. சும்மா ஆட்டுக்கும், மாட்டுக்கும் 'டொன் டொன் டொய்ங்' பின்னணி போட வைத்து உருப்பட விடாமல் செய்த புண்ணியம். அப்புறம் இளையராஜாவின் போட்டியை சமாளிக்க 'கன்னிப் பருவத்திலே' கொடுத்து அது ஹிட்டாகித் தொலைக்க, டிராக் மாறியதால் நமக்குத்தான் நஷ்டம் நிறைய.)

    சரி! எல்லோரையும் சொல்லியாயிற்று. இப்பாடலின் ஹீரோ யார்? ரவியா? ரவி இரண்டாவதுதான்.)


    'பாடும் நிலா' பாலுதான் இப்பாடலின் ஹீரோ. மனிதர் மனதை அப்படியே கொள்ளை கொண்டு விட்டார். வேகம், தெளிவு, வைப்ரேஷன்ஸ், கம்பீரம், உற்சாகம், சந்தோஷம், ஹைபிட்ச், குழைவு, நெளிவு, சுளிவு என்று அமர்க்களமோ அமர்க்களம். அதுவும் 'ராதா' என்று முடிக்கும் போது தரும் அதிர்வுகள் அருமை. 'சொல்ல நா... ணம் வந்ததோ' அந்த 'நா' வுக்குப் பிறகு சின்ன இடைவெளிவிட்டு 'ணம்' தொடருவது பிரமாதம். இது ரவியின் சொந்தப்படம் என்று சொல்வார்கள்.)

    என் காதல் கண்மணி
    ஏதேதோ நினைத்தாளோ
    சொல்ல நாணம் வந்ததோ
    சொல்லாமல் மறைத்தாளோ
    ராதா ராதா ராதா

    என் காதல் கண்மணி
    ஏதேதோ நினைத்தாளோ
    சொல்ல நாணம் வந்ததோ
    சொல்லாமல் மறைத்தாளோ
    ராதா ராதா ராதா

    (இடையிசை அமர்க்களம்)

    என் வீட்டுத் தோட்டத்தின் புது மல்லிகை
    எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை
    என் வீட்டுத் தோட்டத்தின் புது மல்லிகை
    எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை
    வாடாத மலரே தேயாத நிலவே
    வாடாத மலரே தேயாத நிலவே
    நாள்தோறும் என்னோடு உறவாட வா
    ராதா ஆஆ.......... ஆ

    என் காதல் கண்மணி
    ஏதேதோ நினைத்தாளோ
    சொல்ல நாணம் வந்ததோ
    சொல்லாமல் மறைத்தாளோ
    ராதா ராதா ராதா

    (ஷீலாவுக்கு வரப் போகும் ஆபத்தை முன்னமேயே அருமையாக உணர்த்தும் இசை)

    கண்ணுக்குள் விளையாடும் கலை அன்னமே
    காலத்தில் அழியாத எழில் வண்ணமே
    கடல் வானம் யாவும் தடம் மாறினாலும்
    கடல் வானம் யாவும் தடம் மாறினாலும்
    மாறாத நிலை கொண்ட மனம் உண்டு வா
    ராதா ஆஆ.......... ஆ

    என் காதல் கண்மணி
    ஏதேதோ நினைத்தாளோ
    சொல்ல நாணம் வந்ததோ
    சொல்லாமல் மறைத்தாளோ
    ராதா ராதா ராதா

    உன் நெஞ்சம் பொன் நெஞ்சம் அறியாததோ
    உனதெல்லாம் எனதென்று தெரியாததோ
    பனி தூங்கும் விழியே
    பால் போன்ற மனமே
    பனி தூங்கும் விழியே
    பால் போன்ற மனமே
    வருங்காலம் நமதென்ற முடிவோடு வா
    ராதா ஆஆ.......... ஆ

    என் காதல் கண்மணி
    ஏதேதோ நினைத்தாளோ
    சொல்ல நாணம் வந்ததோ
    சொல்லாமல் மறைத்தாளோ
    ராதா ராதா ராதா


    Last edited by vasudevan31355; 28th August 2014 at 10:30 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes Russellmai liked this post
  14. #1329
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ராஜேஷ் சார்
    நடன இயக்குனர் சலீம் பற்றி சொல்லி இருந்தீர்கள்
    பாட்டும் பரதமும் படத்தில் நடிகர் திலகத்திடம் ஒரு சீட்டு கொடுத்து 'அடி என்னடி ராக்கம்மா ' பாட சொல்வாரே அவர்தானே நடன இயக்கனர் சலீம்

    october 19,2011

    VETERAN choreographer Saleem, who choreographed dances for leading Tamil films actors like MGR, Sivaji Ganesan, N.T. Rama Rao and Dilip Kumar, died in Chennai on Friday following a prolonged illness, Tamil Nesan reported.

    He was 80 and is survived by his wife and two daughters.

    Saleem had worked in over 300 films in various Indian dialects and choreographed dances for over 20,000 songs.

    He also worked with current Tamil superstars Rajnikanth and Kamal Haasan.

    Saleem's last work was the popular song Aattama Therottama in Captain Prabhakaran.
    gkrishna

  15. #1330
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்
    இந்த மஞ்சள் குங்குமம் ரவி ஷீலா ஜோடி
    பட்டாபிராமன் இயக்கம் என்று நினைவு அப்போது பட்டு என்ற பெயரில் இயக்கி கொண்டு இருந்தார்
    ரவி பணக்கார வீட்டு பிள்ளை .ஷீலா nurse என்று நினைவு .அவரை ரவி விரும்புவார் .ஆனால் ரவியின் அப்பா TK பகவதி என்று நினைவு வீட்டை விட்டு துரத்தி விடுவார் . ரவி ஷீலாவை திருமணம் செய்து கொள்வார் .ரவியின் அப்பா விருப்பபடி ரவியை வக்கீல் ஆக்கி காட்டுவார். ஆனால் அதற்காக தன வாழ்கையை தியாகம் செய்து கொள்வார் .இறுதியில் அவருக்கு கான்செர் நோயில் வந்து இறந்து போவார் மஞ்சள் குங்குமத்துடன்

    சங்கர் கணேஷ் பாலா ரவி combination அருமையான பாடல்
    பின்னாட்களில் நீயா 'ஒரு கோடி இன்பம்' போன்று சூப்பர் ஹிட்
    ரவி ஷீலா திருமணத்திற்கு பின் வந்த முதல் படம் என்றும் நினைவு

    இந்த படத்தை பற்றி பட்டு சொன்ன ஒரு கமெண்ட் நினைவில் உண்டு
    'ஷீலாவை தமிழ் நாட்டு ரசிகர்கள் வில்லி வேடத்தில் தான் ஏற்றுக்கொண்டு உள்ளார்கள் . கதாநாயகி ஆக அல்ல அதனால் தான் படம் தோல்வி

    படம் தோல்வி ஆனாலும் இந்த பாடல் அந்நாளைய சிலோன் ரேடியோவில் போட்டு போட்டு தேய்த்த பாடல்
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •