Page 290 of 401 FirstFirst ... 190240280288289290291292300340390 ... LastLast
Results 2,891 to 2,900 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2891
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    இன்றைய பொங்கும் பூம்புனல் அருமை வேந்தர் சார்

    வெளி வராத படங்களில் இருந்து பாடல்களை அள்ளி தந்து உள்ளீர்கள்.
    இளையராஜாவின் அதிகாரம் பட பாடல் நினைவில் உண்டு

    ராகங்கள் மாறுவதில்லை பாடலும் அருமை
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2892
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    MSV - FILE

  4. #2893
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    MSV- FILE

  5. #2894
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (77)

    'இன்றைய ஸ்பெஷலி'ல் 'பெண்ணே நீ வாழ்க' படப் பாடல்.



    ஜெய்சங்கர் நடித்து பெண்ணே நீ வாழ்க, மகனே நீ வாழ்க, பெண்ணை வாழ விடுங்கள் போன்ற பல 'வாழ்க' படங்கள் அப்போது நிறைய வந்ததால் எந்தப் படத்தில் எந்தப் பாட்டு என்று ஒரே குழப்பமாக இருக்கும்.

    'பெண்ணே நீ வாழ்க' 'மக்கள் கலைஞர்' ஜெயசங்கர், கே.ஆர்.விஜயா, விஜயகுமாரி நடித்தது. இயக்கம் பி.மாதவன். இசை. 'திரை இசைத் திலகம்' கே.வி.மகாதேவன். 1967-இல் வெளிவந்த இப்படத்தின் பாடல்களை வாலி எழுதியிருந்தார்.



    'உயிர் நீ.. உனக்கொரு உடல் நான்' என்ற இன்னொரு அருமையான பாடலை சுசீலா பாடியிருப்பார். நமது ராஜேஷ்ஜி நேற்று 'சகுந்தலா' என்ற மலையாளப் படத்திலிருந்து 'பிரியதமா' என்ற பாடலை அளித்தாரே! அதே போல இந்தப் பாடலிலும் கே.ஆர்.விஜயாவுக்கும் சகுந்தலா போன்ற வேடம்.




    'இன்றைய ஸ்பெஷல்' பாடலில் நாயகனுக்கு நாயகி மீது சந்தேகம் போல. அழகாக, கள்ளம் கபடமற்று தன் காலைத் தொட்டு இழுக்கும் அந்த மழலையின் அழகில், சிரிப்பில் மயங்கி அதனிடம் தன் மனக் குமுறலை அமைதியாகக் கொட்டுகிறான். அவனுக்கு அந்த மழலையின் மேல் கோபமில்லை. ஆனால் 'யார் வீட்டுத் தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜாப் பூ?' என்று சந்தேகம் கிளப்புகிறான். 'தெய்வமும் நேரில் வராததால் அதுவும் சாட்சி இல்லை... குழந்தையும் பேசத் தெரியாததால் அதுவும் சாட்சி இல்லை... யாரைச் சொல்லியும் பயன் இல்லை... என் வழக்கு தீராது' என்று வெதும்புகிறான்

    அவளுக்குத் தெரியாமல் அவன் குழந்தையுடன் நெருக்கமாக இருப்பதைக் கண்டு அவள் தன் நிலையை விளக்கி பாட ஆரம்பிக்கும் போது அவன் குழந்தையை விட்டு போலித்தனமாக நழுவுகிறான்.

    அவளோ 'உன் சந்தேகத்தால் நான் தனிமரமாக நிற்கிறேன். ஆனால் உன்னைத் தழுவி நிற்கும் அந்த தளிர்க்கொடி உனக்கும் எனக்குமான பழக்கத்தில் பிறந்தது' என்று பாடல் மூலமாக அவனுக்கு தான் நிரபராதி உணர்த்துகிறாளோ!

    மிக மிக அமைதியான அருமையான பாடல். பாடலில் வரும் மழலை நெஞ்சை அள்ளுகிறது. சந்தேகக் கண் கொண்டு ஜெய் வருத்திப் பாடுவதும், அதற்கு விஜயா பதில் தருவதும் அருமை.

    பாடகர் திலகமும், இசையரசியும் மிக ஆழ்ந்து அமைதியாக அர்ப்பணிப்புடன் இப்பாடலை பாடி அசத்தி இருப்பார்கள். நம் மனதிற்குள் மிக அம்சமாக இப்பாடல் நகூரம் போட்டு அமர்ந்து கொள்ளும்.


    இனி பாடலின் வரிகள்.

    பொல்லாத புன்சிரிப்பு
    போதும் போதும் உன் சிரிப்பு
    பொல்லாத புன்சிரிப்பு
    போதும் போதும் உன் சிரிப்பு
    யார் வீட்டுத் தோட்டத்திலே
    பூத்ததிந்த ரோஜாப் பூ
    பொல்லாத புன்சிரிப்பு
    போதும் போதும் உன் சிரிப்பு
    யார் வீட்டுத் தோட்டத்திலே
    பூத்ததிந்த ரோஜாப் பூ
    பொல்லாத புன்சிரிப்பு

    மங்கையரைப் பார்த்ததுண்டு
    மனத்தைக் கொடுத்ததில்லை
    மலர்களைப் பார்த்ததுண்டு
    மாலையாய் தொடுத்ததில்லை
    மணக்கோலம் பார்த்ததுண்டு
    மாப்பிள்ளையாய் ஆனதில்லை
    மணக்கோலம் பார்த்ததுண்டு
    மாப்பிள்ளையாய் ஆனதில்லை
    யார் வீட்டுத் தோட்டத்திலே
    பூத்ததிந்த ரோஜாப் பூ

    பொல்லாத புன்சிரிப்பு

    தெய்வம் ஒரு சாட்சி என்றால்
    நேரிலே வருவதில்லை
    பிள்ளை மறு சாட்சி என்றால்
    பேசவே தெரியவில்லை
    யாரைச் சொல்லி என்ன பயன்
    என் வழக்கு தீரவில்லை
    யாரைச் சொல்லி என்ன பயன்
    என் வழக்கு தீரவில்லை
    யார் வீட்டுத் தோட்டத்திலே
    பூத்ததிந்த ரோஜாப் பூ

    பொல்லாத புன்சிரிப்பு

    உன்வீட்டுத் தோட்டத்திலே
    ஒருமரம் தனிமரமாம்
    தனிமரம் தவிக்கக் கண்டு
    தளிர்க்கொடி தழுவியதாம்
    ஒன்றுக்கொன்று மாலையிட்டு
    அன்று முதல் பழகியதாம்
    ஒன்றுக்கொன்று மாலையிட்டு
    அன்று முதல் பழகியதாம்
    பழகிய பழக்கத்திலே
    பூத்ததிந்த ரோஜாப் பூ

    பொல்லாத புன்சிரிப்பு
    போதும் போதும் உன் சிரிப்பு
    யார் வீட்டுத் தோட்டத்திலே
    பூத்ததிந்த ரோஜாப் பூ
    பொல்லாத புன்சிரிப்பு


    Last edited by vasudevan31355; 23rd September 2014 at 10:35 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Thanks Russellmai thanked for this post
  7. #2895
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    மேனகா நடித்த சாவித்திரி திரைப்படம் பற்றி சி கே குறிப்பிட்டு இருந்தார்

    1980இல் பரதன் இயக்கத்தில் மேனகா நடித்து வெளியான 'சாவித்ரி' திரைப்படம் எதிர்ப்பு அலையை சந்தித்தது. வயோதிகரை மணந்து கொள்ளும் இளம் அந்தணப் பெண் வேறு ஜாதியைச் சேர்ந்த ஒரு இளைஞனோடு உறவு கொள்வதாக எடுக்கப்பட்ட அந்த படத்தை தடை செய்யக் கோரி பிராமண சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது தமிழக வரலாற்றில் முதல் முறை.

    'வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன் ' வாணியின் அருமையான பாடல். நடுவில் ஒரு இடத்தில வெறுமையான சிரிப்பு ஒன்று சிரிப்பார்
    அருமையாக இருக்கும். மெல்லிசை மன்னரின் இசை
    gkrishna

  8. #2896
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    காலம் என்று ஒரு படம். சங்கர் கணேஷ் இசை அமைத்தது
    நடிகை மேனகா இடைகுரலில் மலேசிய வாசுதேவன் பாடிய 'மஞ்சளுக்கு சொந்தக்காரி' என்ற பாடல்

    http://www.mediafire.com/listen/8gl4...nthakkaari.mp3
    gkrishna

  9. Likes Russellmai liked this post
  10. #2897
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்

    பாடகர் திலகம்,கண்ணிய பாடகி அமைதியாக பாடும் பாடல்
    .சிலோன் ரேடியோ ஹிட் மதியம் 3 மணி பூவும் போட்டும் மங்கையர் மஞ்சரி நிகழ்ச்சியில் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் இந்த பாடலை விளக்கி கூறியது இப்போது நினைவிற்கு வருகிறது . துஷ்யந்தன் சகுந்தலை காதல் கதை எத்துனை படங்களில் எப்படி எப்படி எல்லாம் பாடல்களாக பயன்படுத்தப்பட்டு உள்ளது .
    நல்லதொரு பாடலை நினைவு படுத்தி விட்டீர்கள்

    ஜெய்சங்கர் நடித்த சில படங்கள் பஞ்சவர்ணக்கிளி, வல்லவன் ஒருவன், இருவல்லவர்கள்,பெண்ணே நீ வாழ்க, நான் யார் தெரியுமா,பூவா தலையா,மன சாட்சி,நிலவே நீ சாட்சி,மாணவன்,வீட்டுக்கு ஒரு பிள்ளை,அக்கரைப் பச்சை,கல்யாணமாம் கல்யாணம் ஆகியவை. என் நினைவுக்கு வந்தவை
    Last edited by gkrishna; 23rd September 2014 at 10:50 AM.
    gkrishna

  11. #2898
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி கிருஷ்ணா சார்.

    மேனகா பற்றிய மேலதிகப் பதிவுகள் நன்று. எனக்கு 'நெற்றிக்கண்' படத்தில் ரஜனி, மேனகாவின் 'ராமனின் மோகனம்' ஜானகி மந்திரம் ரொம்பப் பிடிக்கும். ராஜா சக்கரவர்த்தியாக மாறி பின்னிப் பெடலெடுப்பார். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதே!

    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes Russellmai liked this post
  13. #2899
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    'மெல்லிசை மன்னரி'ன் இன்னொரு அருமையான ,ஆனால் மறக்கப்பட்ட பாடல். இதுவும் மேனகா நடித்ததுதான். நம் தலைவர் படம் 'கீழ் வானம் சிவக்கும்' படம்தான் அது. 'ஜென்டில்மேன்' சரத்பாபுவுடன் மேனகா பாடும் டூயட். பாடலின் ஆரம்ப இசை அழகு நீளம். மேனகா பார்த்தால் நடிகை போலவே இருக்க மாட்டார். வெரி சிம்பிள். காய்கறி மார்கெட்டில் நாம் அன்றாடம் சந்திக்கும் பெண் போல. இப்பாடலுக்கு நன்றாக நடனமாடுவார். சுத்தமாக மறந்து விட்ட பாடல். முதல் நாள் தீபாவளி ரசிகர் காட்சியில் (26.10.1981) டீக்கடையில் நல்ல வியாபாரம். காட்சியில் தலைவர் இல்லை அல்லவா!

    நான் கூட பின்னாளில்தான் பார்த்து ரசித்தேன். ரொம்ப அபூர்வ பாடல். ஒளிப்பதிவு அம்சம். குளுமை.

    உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

    Last edited by vasudevan31355; 23rd September 2014 at 11:20 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes Russellmai liked this post
  15. #2900
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    மேனகா வை மறக்காத விஸ்வாமித்ரர் வாசு சார்

    அபூர்வ பாடல் கீழ் வானம் சிவக்கும் நினைவு கூர்ந்து உள்ளீர்கள்
    அது தான் வாசு (தில்லு முல்லு நாகேஷ் )
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •