Page 311 of 401 FirstFirst ... 211261301309310311312313321361 ... LastLast
Results 3,101 to 3,110 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #3101
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Kadalamma (1963)



    நடிகை ராஜஸ்ரீ Gracy என்ற பெயரில் நடித்த மலையாள சல சித்ரம்

    A M Raja and P.Suseela instant hit devarajan music -vayalar lyrics

    gkrishna

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3102
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    Maalaimalar

    'என் மானசீக குரு சி.ஆர்.சுப்பராமன்' இளையராஜா புகழாரம் சனிக்கிழமை,

    'இளம் வயதிலேயே என் மான சீக குருவாகத் திகழ்ந்தவர் சி.ஆர்.சுப்பராமன்' என்று இளையராஜா கூறினார்.

    நாகேஸ்வரராவ்-சாவித்திரி நடித்த 'தேவதாஸ்' படத்துக்கு இசை அமைத்தவர், சி.ஆர்.சுப்பராமன்.

    எம்.கே.தியாகராஜ பாகவதர்- பானுமதி நடித்த 'ராஜமுக்தி', என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்னில் உருவான லலிதா, பத்மினி, பாலையா நடித்த 'மணமகள்', பானுமதி -நாகேஸ்வரராவ் நடித்த 'லைலா மஜ்னு' உள்பட ஏராளமான படங்களுக்கு இசை அமைத்தவர் சி.ஆர்.சுப்பராமன்.

    அவர் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    'ஏவி.எம். ஸ்டூடியோவிலும், ஜுபிடர் ஸ்டூடியோவிலும் அவர்களுக்கு என்று இசைக் குழுக்கள் இருந்தன. மற்ற ஸ்டூடியோக்களில் இசைக் கலைஞர்களைத் தனியாக அழைத்துதான் வாசிக்கச் செய்து, பதிவு செய்ய வேண்டும்.

    அதெல்லாம் போய் விட்ட காலத்தில் அல்லவா நான் திரை உலகுக்கு வந்தேன்! அந்தக் காலப் பெருமைகளை, அனுபவம் மிக்க பெரியவர்கள் சொல்வது ஒரு பாடமாகவே இருக்கும்.

    குறிப்பாக, என் முதல் `மானசீக குருநாதர்' சி.ஆர்.சுப்பராமன் பின்னணி இசை கம்போஸ் செய்வது அற்புதமான காட்சியாக இருக்கும் என்று அறிந்திருக்கிறேன்.

    பின்னணி இசை (ரீரிகார்டிங்) அமைப்பதற்கான காட்சியை சுப்பராமனுக்கு திரையிட்டுக் காட்டுவார்கள். 10 நிமிடம் திரையில் ஓடும் படத்தைப் பார்த்து விட்டால், பியானோ முன் வந்து உட்கார்ந்து விடுவாராம். இரண்டு கைகளாலும் அவர் வாசிக்க, அதை `நோட்ஸ்' எடுக்க வலது புறம் விசுவநாதனும் ராமமூர்த்தியும் இடது புறம் கோவர்த்தனும், ஸ்ரீராமுலுவும் அமர்ந்து கொண்டு, சுப்பராமன் வாசிக்க வாசிக்க எழுதிக் கொள்வார்களாம்.

    எதை எந்த வாத்தியத்திற்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டு, பிரித்துக் கொடுத்து ரிகர்சல் பார்க்கும்போது, `ஏய்! இந்த நோட்சை தப்பா கொடுத்தது யாரு? இங்கே வா!' என்று அழைத்து அதை மீண்டும் பியானோவில் வாசித்துக் காட்டி சரி செய்வாராம்.

    வாசிப்பதை நோட்ஸ் எழுதுபவர்கள் எல்லோரும் திறமைசாலிகள். அவர்கள் எழுதுவதிலும் தவறு வர, அதை ஞாபகமாய்ச் சரி செய்தார் என்றால், அவருடைய ஞானத்தை என்ன சொல்வது?

    முப்பத்தி இரண்டு வயதே வாழ்ந்த அவர், எவருக்கும் இணை இல்லாத மேதை.

    ஆனால் ஆர்மோனிய பெட்டி மீது `விஸ்கி' பாட்டிலும், சிகரெட் பாக்கெட்டும் இருக்குமாம்!

    அன்றைய காலக்கட்டத்தில் மட்டும் அல்ல, சினிமா கலைஞர்களுக்குப் புகழ் வரவர, குடியும், காமவெறியும்தான் உயர்ந்த சுகபோக நிலையாகவும், அதிலேயே சுகித்திருப்பதே நல் வாழ்க்கையாகவும் இருக்கிறது.

    சி.ஆர்.சுப்பராமன் இசை அமைத்த பாடல்கள் மிகவும் `பாப்புலர்' ஆனதால், பொறாமை கொண்டவர்கள் அவரை `டப்பா மியூசிக் டைரக்டர்' என்று கூறி வந்தார்கள். சினிமா இசையை டப்பா இசை என்று சங்கீத வித்வான்கள் கேலியாகக் கூறுவது அக்கால வழக்கம்.

    கலைவாணர் என்.எஸ். கே.யும், சி.ஆர்.சுப்பராமனும் நல்ல நண்பர்கள். என்.எஸ்.கே.யிடம் சுப்பராமன் இதுபற்றி கூறி வருத்தப்பட, `கவலைப்படாதே, சுப்பராமா! உன்னுடைய சங்கீத ஞானத்தைக் காட்டுவதற்காகவே ஒரு படம் எடுக்கிறேன்' என்று கூறி, `மணமகள்' என்ற படத்தைத் தயாரித்தார்.

    அதில் அத்தனையும் கர்நாடக சங்கீதப் பாடல்கள். அத்தனை பாடல்களையும் வைரமணிகள் போல் ஒளி வீசும் வண்ணம் இசை அமைத்திருந்தார். உடுமலை நாராயண கவி எழுதியிருந்த பாடல்கள் மறக்க முடியாதவை. 'எல்லாம் இன்பமயம்' என்ற பாடலில்,

    மலையின் அருவியிலே - வளர்
    மழலை மொழிதனிலே
    நிலவின் ஒளியாலும்
    குழலின் இசையாலும்
    நீலக்கடல் வீசும் அலையாலுமே!
    கலைஞன் சிலையிலும் கவிதைப் பொருளிலும்
    கானமா மயிலின் ஆடல் அறுசுவையில்
    காதலோடு மனிதனின் புலன் காண்பதெல்லாம் இன்பமயம்!

    - சிம்மேந்திர மத்திம ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை யாரால் மறக்க இயலும்!


    மகாகவி பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே' பாடலுக்கு அவர் ராகமாலிகையில் இசை அமைத்தார். உயிரையே கொள்ளைகொள்ளும் உன்னதமான பாடல். இத்தனை காலம் கடந்தும், அதற்கு மேல் இதோ ஒரு ராகமாலிகை என்று யாராலும் சுட்டிக் காட்ட முடியாத அளவுக்கு இசையை அறிந்தவர், சுப்பராமன்.

    `டப்பா சங்கீதம்' என்று சங்கீத வித்வான்கள் கூறி வந்த சினிமா சங்கீதத்தை உயர்த்தி, அதை அப்படியே திருப்பிப் போட வைத்தது சி.ஆர்.சுப்பராமனின் இசை. சினிமா பாடலை சங்கீத மேடைக்கு கொண்டு போக வைத்த நிலைமை, சி.ஆர்.சுப்பராமன் காலத்தில்தான் ஏற்பட்டது. இன்றைய இளம் வித்வான்களில் யார் 'சின்னஞ்சிறு கிளியே' பாடவில்லை?

    சரளமான நடைபோல வந்த பாட்டுக்கு, இத் தனை மகத்துவம்.சி.ஆர்.சுப்பராமனின் 'வர்ணமெட்டால்' வந்தது. அதை யாரும் மறுக்க முடியாது; மறக்கவும் முடியாது.

    என் மானசீக குருவே-உம்மை என்றும் வணங்குகிறேன்' இவ்வாறு இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

    சில மலையாளப் படங்களில் பணியாற்ற இளையராஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுபற்றி அவர் கூறியதாவது:-

    'சில மலையாளப் படங்களுக்கு கிட்டார் வாசிக்க சான்ஸ் வந்தது. '12 பி' பஸ்சில் வடபழனிக்குச் சென்று, ஏவி.எம்.மிலோ, பரணியிலோ, ரேவதியிலோ நடக்கும் ரெக்கார்டிங்குக்கு நடந்து போவேன். முடிந்ததும் கடைசி '12 பி' பஸ்சில் திரும்பி வந்து சேருவேன். மலையாள இசை அமைப் பாளர் யாராக இருந்தாலும், பாடல் பதிவின் போது 'கண்டக்ட்' செய்பவர் சேகர் அவர்கள்தான். அவர் தன்ராஜ் மாஸ்டரின் மாணவர். அதை விட ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை என்று கூறினால் நன் றாகத் தெரியும்.

    எல்லா இசை அமைப்பாளர்களுக்கும் 'பிஜிஎம்' (பேக்ரவுண்ட் மியூசிக்) சேகர் தான் செய்து கொடுப்பார். மாஸ்டர் தேவராஜனிடம் மட்டும் அவர் 'கண்டக்ட்' மட்டும் செய்வார்.

    அவர் 'பிஜிஎம்' மட்டும் செய்யும் படங்களில் சில இடங்களை குறிப்பிட்டு, 'நீ இந்த இடத்தில் வாசித்து விடு' என்பார். எனக்காக கம்போஸ் செய்ய மாட்டார்.

    மற்ற அனைவருக்கும் நோட்ஸ் கொடுத்து விட்டு, எனக்கு மட்டும் ஒன்றும் சொல்லாமல், 'வாசித்து விடு' என்று சுதந்திரமாக விட்டு விடுகிறாரே, ஏன் என்று யோசிப்பேன். நான் தன்ராஜ் மாஸ்டரின் மாணவன் என்பதால்தான் என்னிடம் இவ்வளவு நம்பிக்கை என்று தெரிந்தது. ஒத்திகையைப் பார்க்கும் யாராவது இசை அமைப்பாளர்கள், கிட்டாரில் ஏதாவது மாற்ற வேண்டும் என்று என்னிடம் வந்தால், அவரை சேகர் கூப்பிட்டு, 'அதெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. `டேக்'கின் போது சரியாக -நன்றாகவே வரும்' என்று சொல்லி, என் அருகே யாரையும் நெருங்க விடமாட்டார். அவ்வளவு நம்பிக்கை.

    அவர் தனியாக இசை அமைத்த எந்த ஒரு படமும் சரியாக அமையவில்லை. அதுபற்றி அவர் வருந்தியும் நான் பார்த்தது இல்லை. தன் தந்தையின் ஆசியால் ரஹ்மான் பெரும் அளவில் பேரும், புகழும் பெற்றார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை.'

    இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.
    gkrishna

  5. Likes chinnakkannan, Russellmai liked this post
  6. #3103
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    இது "பணம்" படத்தில் வந்தது.

    அண்ணா , என்.எஸ்.கே. போன்றவர்களுக்கு அன்று
    ஆஸ்தான கவிபோல் விளங்கிய அருமையான கவிஞர்
    உடுமலை நாராயணகவி எழுதியது :


    எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்
    எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

    உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்
    அரசன் முதல் ஆண்டியும் ஆசை படும் இந்த பணத்தை
    எங்கே தேடுவேன், பணத்தை எங்கே தேடுவேன்
    கருப்பு மார்கெட்டில் கலந்து கொண்டாயோ
    கஞ்சன் கைகளில் சிக்கிகொண்டாயோ
    கிண்டிரேஸில் சிக்கி கிருகிருத்தாயோ
    அண்டின பேர்களை ரெண்டும் செய்யும்
    பணத்தை பணத்தை எங்கேதேடுவேண்
    எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

    பூமிக்குள் புதைந்து புதையலானாயோ......
    பொன்நகையாய் பெண்மேல் தொங்குகின்றாயோ
    சாமிகள் அடிகளில் சரண்புகுந்தாயோ
    சன்யாசி கோலத்தோடு உலவுகின்றாயோ
    பணத்தை எங்கே தேடுவேன்
    எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

    திருப்பதி உண்டியலில் சேர்ந்துவிட்டாயோ
    திருவன்னாமலை குகைபுகுந்தாயோ
    இரும்பு பெட்டிகளில் இருக்கின்றாயோ
    இரக்கமுள்ளவரிடம் இல்லத பணமே
    உன்னை என்கே தேடுவேன்
    தேர்சலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
    தேக சுகத்திற்க்காக ஊட்டி சென்றாயோ

    சுவற்றிக்குள் தங்கமாய் பங்க்குவிட்டாயொ

    சூடம் சாம்பிரானியாய் கரந்துவிட்டாயோ

    உலகம் செழிக்க உதவும் பணமே உன்னை எங்கே தேடுவேன்

    எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்
    எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

    gkrishna

  7. Thanks Russellmai thanked for this post
  8. #3104
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நவராத்திரி ஸ்பெஷல்

    சமயபுரத்து அம்மன் சன்னிதியில், வெள்ளைக்காரத் துரை (மேஜர் சுந்தரராஜன்) அட்டகாசம் செய்யும் போது, அம்மை நோய் தாக்கி அலறுவார்!
    அப்போது, மனம் திருந்தி, வேண்டுதல் மேற்கொள்ள, துன்பம் தீருவார்! அந்த நேரத்தில் உதிக்கும் பாட்டு இது! இசையரசி சுசீலாம்மாவின் இன்குரலில்..

    படம்: ஆதிபராசக்தி
    குரல்: பி.சுசீலா
    இசை: கே.வி.மகாதேவன்
    வரிகள்: உடுமலை நாராயண கவி

    ஆனந்த பைரவி ஒரு சுகமான ராகம்

    நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே
    மீனாட்சி என்ற பெயர் எனக்கு

    கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்
    விசாலாட்சி என்ற பெயர் வழக்கு
    கோனாட்சி பல்லவர் தம் குளிர்சோலை காஞ்சி தன்னில்
    காமாட்சி என்ற பெயர் எனக்கு
    கொடும் கோலாட்சி தனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர்
    கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு
    ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும் அது
    நீரோடும் பாதை தன்னைக் குறிக்கும் - நிற்கும்

    ஊர் மாறி, பேர் மாறி, கரு மாறி, உரு மாறி,
    ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்!
    ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்!

    gkrishna

  9. Thanks Russellmai thanked for this post
  10. #3105
    Junior Member Regular Hubber
    Join Date
    Oct 2005
    Location
    KUALA LUMPUR
    Posts
    13
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    இது "பணம்" படத்தில் வந்தது.

    அண்ணா , என்.எஸ்.கே. போன்றவர்களுக்கு அன்று
    ஆஸ்தான கவிபோல் விளங்கிய அருமையான கவிஞர்
    உடுமலை நாராயணகவி எழுதியது :


    எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்
    எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

    உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்
    அரசன் முதல் ஆண்டியும் ஆசை படும் இந்த பணத்தை
    எங்கே தேடுவேன், பணத்தை எங்கே தேடுவேன்
    கருப்பு மார்கெட்டில் கலந்து கொண்டாயோ
    கஞ்சன் கைகளில் சிக்கிகொண்டாயோ
    கிண்டிரேஸில் சிக்கி கிருகிருத்தாயோ
    அண்டின பேர்களை ரெண்டும் செய்யும்
    பணத்தை பணத்தை எங்கேதேடுவேண்
    எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

    பூமிக்குள் புதைந்து புதையலானாயோ......
    பொன்நகையாய் பெண்மேல் தொங்குகின்றாயோ
    சாமிகள் அடிகளில் சரண்புகுந்தாயோ
    சன்யாசி கோலத்தோடு உலவுகின்றாயோ
    பணத்தை எங்கே தேடுவேன்
    எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்

    திருப்பதி உண்டியலில் சேர்ந்துவிட்டாயோ
    திருவன்னாமலை குகைபுகுந்தாயோ
    இரும்பு பெட்டிகளில் இருக்கின்றாயோ
    இரக்கமுள்ளவரிடம் இல்லத பணமே
    உன்னை என்கே தேடுவேன்
    தேர்சலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
    தேக சுகத்திற்க்காக ஊட்டி சென்றாயோ

    சுவற்றிக்குள் தங்கமாய் பங்க்குவிட்டாயொ

    சூடம் சாம்பிரானியாய் கரந்துவிட்டாயோ

    உலகம் செழிக்க உதவும் பணமே உன்னை எங்கே தேடுவேன்

    எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்
    எங்கே தேடுவேன் , பணத்தை எங்கே தேடுவேன்


    This song was written by Kaviarasu Kannadhasan.
    Mahendra Raj

  11. Thanks gkrishna thanked for this post
  12. #3106
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by mahendra raj View Post
    This song was written by Kaviarasu Kannadhasan.
    thanks for the information mahendera raj sir

    while verifying some of the sites it was informed that this song was written by N.S.Krishnan himself and sung .
    some other sites informed it was written by udumalai . like this some sites informed it was written by kannadasan .

    in this blog http://athiyamaan.blogspot.in/2008/10/blog-post.html mentioned as udumalai



    in G.Ragavan's site it was like this

    பணம் என்றே ஒரு திரைப்படம். அதற்கு முன் எம்.எஸ்.விசுவநாதன் தனியாக இசையமைத்திருந்தாலும் மெல்லிசை மன்னர்கள் இருவருமாக இணைந்து இசையமைத்த முதற்படம் பணம். அவர்கள் இசையில் இந்தப் படத்தில் ஒரு பாடல். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனே எழுதிப் பாடிய பாடலிது.

    எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்
    பணத்தை எங்கே தேடுவேன்
    உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்
    அரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை எங்கே தேடுவேன்
    கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ
    கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ
    கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ
    திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ
    திருவண்ணாமலை குகை புகுந்தாயோ
    தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
    தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ

    நகைச்சுவையாக வரிகள் இருப்பது போலத் தோன்றினாலும் பாடலில் பணம் பதுங்கியிருக்கும் இடங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரியும். கலைவாணர் என்ற பெயர் பாடலை எழுதியவருக்குப் பொருத்தமே.

    in The Hindu Randor Guy's review it was like this

    The lyrics for all the songs were written by Srinivasan's brother, ace lyricist Kannadasan, with the exception of one song, which was written by Bharathidasan, the rebel poet of Pondicherry.

    hence this confusion .
    Last edited by gkrishna; 25th September 2014 at 05:59 PM.
    gkrishna

  13. #3107
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'அம்மாடி.... உழைக்கும் கை ஓங்க வேண்டும். (பெத்த மனம் பித்து)

    Last edited by vasudevan31355; 25th September 2014 at 07:05 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes Russellmai liked this post
  15. #3108
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மணி மகுடம் (1966)
    டி.எம். சௌந்திரராஜன், பி.சுசீலா
    இசை: ஆர்.சுதர்சனம்
    பாடல்: கண்ணதாசன்




    பாடல்: ஆதவன் உதித்தான் மலை மேலே

    டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
    இந்த அழகு கோபுர சிலை மேலே
    அதவன் உதித்தான் மலை மேலே
    இந்த அழகு கோபுர சிலை மேலே

    சுசீலா: இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
    ஆட நினைக்குது ஆசை மனம்
    அது அறியாதோ வரும் அஸ்தமனம்

    டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே

    டி.எம்.எஸ்: அழகிய மலர்கள் சிரிக்கின்றன

    சுசீலா: அவை அடுத்த உலகை நினைக்கின்றன
    டி.எம்.எஸ்: அழகிய மலர்கள் சிரிக்கின்றன

    சுசீலா: அவை அடுத்த உலகை நினைக்கின்றன

    டி.எம்.எஸ்: பழகிய கிளிகள் துடிக்கின்றன
    பழகிய கிளிகள் துடிக்கின்றன

    சுசீலா: எங்கோ பறக்க சிறகை விரிக்கின்றன.....(சிரிப்பு)

    டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே

    டி.எம்.எஸ்: வானில் பறக்குது வெள்ளைப் புறா.... ஆ......
    வானில் பறக்குது வெள்ளைப் புறா

    சுசீலா: வேடன் வலையை விரித்தது அறியாமல்

    டி.எம்.எஸ்: வானில் பறக்குது வெள்ளைப் புறா

    சுசீலா: வேடன் வலையை விரித்தது அறியாமல்

    டி.எம்.எஸ்: ஆடிக் களிக்குது தோகை மயில்
    ஆடிக் களிக்குது தோகை மயில்

    சுசீலா: தன் ஆட்டம் முடிவது தெரியாமல்.....
    தன் ஆட்டம் முடிவது தெரியாமல்....

    டி.எம்.எஸ்: இதயம் எதையோ நினைக்கின்றது

    சுசீலா: அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?

    டி.எம்.எஸ்: இதயம் எதையோ நினைக்கின்றது

    சுசீலா: அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?

    டி.எம்.எஸ்: புதிய பாதை தெரிகின்றது...
    புதிய பாதை தெரிகின்றது

    சுசீலா: அது போகும் பொழுதே முடிகின்றதே

    டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
    இந்த அழகு கோபுர சிலை மேலே

    சுசீலா: இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
    அது அறியாதோ வரும் அஸ்தமனம்

    டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே

    Last edited by vasudevan31355; 25th September 2014 at 07:15 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. #3109
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    'அம்மாடி.... உழைக்கும் கை ஓங்க வேண்டும். (பெத்த மனம் பித்து)
    வாசு சார்

    வாங்க வாங்க வாங்க

    இந்த பாட்டை எப்படி பிடிச்சீங்க . பெத்த மனம் பித்து - எல்லோரும் சொல்லும் பாட்டு - 'காலம் நமக்கு தோழன் '
    gkrishna

  17. #3110
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நான் வந்தபாதை மான் வந்தது - manimagudan 1966

    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •