Page 77 of 401 FirstFirst ... 2767757677787987127177 ... LastLast
Results 761 to 770 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #761
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்



    ஒரு விரல் .... தமிழ்த் திரையுலகிற்கு இரு நட்சத்திரங்களின் அறிமுக திரைப்படம் ... தேங்காய் சீனிவாசன் மற்றும் கிருஷ்ணா ராவ் இருவரும் அறிமுகமான வெற்றித் திரைப்படம்... அனைத்துத் திரங்குகளிலும் நல்ல வசூல் பெற்று வெற்றி வாகை சூடிய படம்..

    வேதாவின் இசை இப்படத்தின் வெற்றியில் மிகப் பெரும் பங்கு பெற்றது என்றால் மிகையில்லை..

    இந்தப் படத்தில் இடம் பெற்ற இசையரசியின் சோலோ பாடலான மல்லிகை மொட்டு நம்மை மெய் மறக்கச் செய்யும்..

    கேளுங்கள்..

    http://www.inbaminge.com/t/o/Oru%20Viral/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #762
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,



    'ஒரு விரல்' படத்தில் இன்னொரு மறக்க முடியாத பாடல். பாடகர் திலகமும் சுசீலாம்மாவும் கலக்கி எடுக்கும் பாடல்.

    உங்கள் தேவை என்னவென்று தெரியும்
    இந்தப் பாவை நெஞ்சம் துணை புரியும்
    இங்கு தேவை தேவை கொஞ்சம் பொறுமை
    எங்கு ஓடிப் போகும் இந்த இளமை

    நடிகர் திலகமே தெய்வம்

  5. Thanks Russellmai thanked for this post
  6. #763
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'ஒரு' விரல் படம் பற்றி ராண்டார் கை 'தி ஹிந்து' வில் எழுதிய கட்டுரை

    http://www.thehindu.com/features/cin...cle3900844.ece
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #764
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய இரவு ராட்சஸி பாடல் பாடகர் திலகத்தோடு கொஞ்சிப் பாடும் பாடல்

    மனோரமாவிற்கு ஈஸ்வரி அவர்களின் குரல். உடன் நாகேஷ் பாடகர் திலகத்தின் குரலில்.

    நடுவில் வரும் இடையிசை கொஞ்சம் 'அன்பே வா' படத்தின் 'புதிய வானம் புதிய பூமியை' ஞாபகப்படுத்தும்.

    'சக்கரம்' திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு அபூர்வப் பாடல் இது.

    'நான் 16 தாண்டி 17 போறேன்
    பார்த்துகிட்டு நிக்கிறியே மாமா
    என் பருவத்த போக விடலாமா'

    அந்த மாமா இந்த பாடகி வாயில் எப்படியெல்லாம் புகுந்து ஜாலம் செய்யுது!

    ம்ம்ம்மாமா.... அடேயப்பா! அலட்சிய கர்வி.

    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes gkrishna, Russellmai liked this post
  9. #765
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    [
    ஒரு விரல்

    வேதாவின் இசை இப்படத்தின் வெற்றியில் மிகப் பெரும் பங்கு பெற்றது என்றால் மிகையில்லை..

    இந்தப் படத்தில் இடம் பெற்ற இசையரசியின் சோலோ பாடலான மல்லிகை மொட்டு நம்மை மெய் மறக்கச் செய்யும்..

    கேளுங்கள்..

    http://www.inbaminge.com/t/o/Oru%20Viral/
    இதோ பாடலின் வீடியோ... நடிப்பவர் வி.ஆர்.திலகம்


  10. Likes Russellmai, rajeshkrv liked this post
  11. #766
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற வகையில்,நமது மாற்று திரி நண்பர்களுடன், விக்கியும் கிளம்பி விட்டது. நாமெல்லாம் இளையராஜா இசையமைத்த முதல் படம் அன்னக்கிளி என்றுதானே நம்பி கொண்டிருந்தோம்?இல்லை இல்லை என்று அறைகிறது விக்கி. 1970 களின் தமிழ் பட வரிசையில் 1973 இல் வந்த பெத்த மனம் பித்து ,இளையராஜா இசையாம்? டி.வீ. சேனல் கள் அடிக்கும் கூத்து போதாது என்று இது வேறே.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #767
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வேதா.


    நாமெல்லாம் கொண்டாடும் வேதாசலம் என்ற வேதாவை பற்றி ,தமிழ் இசை அமைப்பாளர் வரிசையில் குறிப்பிட படவில்லை.விக்கி குறிப்பும் இல்லை.


    முதலில் பல படங்களுக்கு சொந்தமாகவே அருமையான இசை கொடுத்தார்.(பார்த்திபன் கனவு,சித்ராங்கி)என்ன செய்வது?விதியின் கொடுமை.வெற்றி கைகொடுக்கவில்லை.1963 இல் மாடர்ன் தியேட்டர் உடன் கை கோத்தவர் ,1965 வல்லவனுக்கு வல்லவன் முதல் புதிய பாதை கண்டார். பிரபல ஹிந்தி மெட்டு,ஆங்கில மெட்டுக்கள். ஆயிரம் பேர் அதை பண்ணியிருந்தாலும்,வேதா போல வெற்றி எத்தனை பேருக்கு கிடைத்தது?எதை,எப்படி எடுத்து ,எப்படி package பண்ணுவது என்பதுடன் ,Back Ground music அருமையாக பண்ணியிருந்தார். கர்நாடகம்,ஹிந்துஸ்தானி,.மேற்கத்திய இசைகளில் நன்கு பரிச்சயம் உள்ளவர் என்று கேள்வி. வருடத்திற்கு,இரண்டு மூன்றுக்கு மேல் கிடைக்காமல் அல்லாடி ,மாடர்ன் தியேட்டர் அதிபரிடம் மாத சம்பளம்.
    ஏ.வீ.எம், பீ.எஸ்.வீ படங்களுக்கும் பண்ணியுள்ளார்.

    எனக்கு தெரிந்து நான் திரட்டியவை.(குறிப்புகள் எங்கும் இல்லை)

    1956- மர்ம வீரன் (அறிமுகம்)

    1958- அன்பு எங்கே ,மணமாலை.

    1959- சொல்லு தம்பி சொல்லு,சுமங்கலி.

    1960-எங்கள் செல்வி,பார்த்திபன் கனவு.

    1962- நாகமலை அழகி,யாருக்கு சொந்தம்,கண்ணாடி மாளிகை.

    1963- யாருக்கு சொந்தம்,கொஞ்சும் குமரி.

    1964- சித்ராங்கி,அம்மா எங்கே.

    1965- வழிகாட்டி, வல்லவனுக்கு வல்லவன்,ஒரு விரல் .

    1966- யார் நீ, இரு வல்லவர்கள்,வல்லவன் ஒருவன்.

    1967- காதலித்தால் போதுமா,அதே கண்கள்,எதிரிகள் ஜாக்கிரதை.

    1969- நான்கு கில்லாடிகள்,பொண்ணு மாப்பிள்ளை,உலகம் இவ்வளவுதான்,மனசாட்சி .

    1970- சி.ஐ.டீ சங்கர்.

    1971- ஜஸ்டிஸ் விஸ்வநாதன் (கடைசி??!!)

    குறிப்பிட வேண்டிய பல பாடல்கள்.

    டிங்கிரி டிங்காலே, பூவில் வண்டு, பழகும் தமிழே,கண்ணாலே நான் கண்ட,இதய வானின்,ஆசை வந்த பின்னே,பாப்பா பாப்பா கதை கேளு,ஆயிரம் பேர் வருவார்,நெஞ்சினிலே நினைவு முகம்,இன்று வந்த சொந்தமா,மனம் என்னும் மேடை ,ஓராயிரம் பார்வையிலே,பாரடி கண்ணே,பொழுதும் விடிந்தது,நான் மலரோடு தனியாக,ஆசையா கோபமா , பார்வை ஒன்றே, டிக்கிரிக்கு டிக்கிரிக்கு,நானே வருவேன்,என் வேதனையில்,பொன் மேனி தழுவாமல்,இன்னும் பார்த்து ,பளிங்கினால்,அம்மம்மா,எந்தன் நெஞ்சம் யாரை கண்டு,லவ் லவ்,கண்ணுக்கு தெரியாதா,பொம்பளை ஒருத்தி,வா அருகில் வா,என்னென்னவோ நான்,நீயாக எனை தேடி,அப்பா பக்கம் வந்தா,எனக்கொரு ஆசை,நேருக்கு நேர்,இங்கு தேன்நிலவு,ஜிலுக்கடி ஜிலுக்கடி,செவ்வானத்தில் ஒரு,நெஞ்சுக்கு நிம்மதி,மணமகன் அழகனே,இவ்வளவுதான் உலகம்,லவ் பண்ணுங்க சார்,ஏழு தினங்கள்,ஆயிரம் வடிவில், கோட்டை நமது,நாணத்தாலே கன்னம் ,இது நீரோடு செல்கின்ற.
    Last edited by Gopal.s; 22nd August 2014 at 09:41 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. #768
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    கிருஷ்ணா ஜி . வருக வருக..
    கோபால் ஜி, வேதா பற்றிய கட்டுரை அருமை. எனக்கு பிடித்த படம் அதே கண்களில் அவரது அனைத்து பாடல்களும் அருமை

    ராகவ் ஜி .. பொ.பூ வழக்கம் போல் அருமையோ அருமை

    ஸ்ரீபிரியா பற்றிய நீண்ட விளக்கமான அலசல் போல .., சி.க போட்ட தூபமா.. இருந்தாலும் மற்ற எத்தனையோ மண்டுக்களுக்கு மத்தியில் இவர் கொஞம் நடிப்பார் ... மொத்தமாக கழித்து கட்டி விட முடியாது கார்த்திக் ஜி

  14. #769
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    வாசு ஜி,

    கிருஷ்ணா ஜி சமீபத்தில் காத்திருந்த மல்லி மல்லி பாடலை போட்டு 80-90’களின் இசையரசி பாடல்களை நினைவூட்டிவிட்டார்
    அதன் விளைவு

    இதோ இன்னொரு தாலாட்டு “மூடடி வாசற்கதவை கண்கள் தான் பட்டு விடுமே”



    அரும்பருப்பா சரம் தொடுத்த .. என்ன அருமையான பாடல்




    இது மட்டுமல்லாது எனக்கு அரண்மனைக்கிளியில் நட்டுவச்ச ரோசாச்செடி பாடலும் மிகவும் பிடிக்கும்

    மானுக்கு மேலழகு மயிலுக்குத்தான் வாலழகு பெண்ணுக்கு எது அழகு கூறு மச்சான்



  15. Likes gkrishna, Russellmai liked this post
  16. #770
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    அருமையான பாடல்களை பொங்கும் பூம்புனல் - பதிவுகளில் வழங்கி வரும் ராகவேந்திரன் சார் நன்றி
    ஒருவிரல் - இதுவரை கேட்காத பாடலை பதிவிட்ட வாசு அவர்களுக்கு நன்றி .
    எம்ஜிஆர் ரசிகர்களே எதிர் பார்காத நவரத்தினம் பாடலை பதிவிட்ட கோபாலை எப்படி .....?

    சி,கே சார் , கிருஷ்ணா சார் , மது சார் , கார்த்திக் சார் [ சந்திரோதயம் -பாடல் -அலசல் ] மிக்க நன்றி .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •