Page 373 of 401 FirstFirst ... 273323363371372373374375383 ... LastLast
Results 3,721 to 3,730 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #3721
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    'சரணாலயம்' படத்தில் மெல்லிசை மன்னர் இசை அமைத்த அற்புதமான ஒரு பாடல்

    மலேஷியா வாசுதேவன் மிக அற்புதமாகப் பாடியிருப்பார்.

    எழுதுகிறாள் ஒரு புதுக் கவிதை
    வண்ண இருவிழியால் இந்தப் பூங்கோதை
    இதைவிட இலக்கியம் கிடையாது
    இலக்கண வரம்புகள் இதற்கேது

    நளினியின் நளின நாட்டியம்!? மைக் இல்லாத மோகன்.

    வாழை மடல் போல உடலழகும்
    தங்கம் வார்த்த சிமிழ் போல உதடழகும்
    தஞ்சை கோயில் ரதம் போல நடையழகும்
    வந்து குலவும் வேளையில் மனம் கவரும்

    ரசிக்கக் கூடிய பாடல். ஆர்.சுந்தரராஜன் இயக்கம்தானே.

    வாலி அவர்களின் அற்புத வரிகள்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3722
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    மதுர கானம் மூன்றாவது பதிவை தொடங்க திரு ராஜேஷ் அவர்கள் மிகவும் பொருத்தமானவர் .இந்த கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு
    gkrishna

  4. #3723
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்க் ஆல்..

    வாங்கோ வாங்கோ க்ருஷ்ணாஜி..

    ராஜேஷ்.. மதுர கானத்தில் மாறாமல் மின்னிடும் சுடர் தாரகையே.

    சுசீலாம்மாவின் சூப்பர் ரசிகரே,

    இசையில் உமக்கிசைந்தது பல மொழிகள்..எனில் வருக வருக
    தங்களது நுண்ணுணர்வில் கலந்த பாடல்களைத் தருக தருக
    மூன்றாம் பாகத்தில் எனச் சொல்லி வாய்ப்பளித்த வாசு சாருக்கும் முன்னாள் திரித்தலைவர் ஆகப் போகிற கிருஷ்ணா ஜிக்கும், மற்ற நண்பர்களுக்கும் நன்றி சொல்லிஇந்தச் சிற்றுரையை ( யாரப்பா சோடா கொண்டா) முடிக்கிறேன்..

  5. #3724
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாழை மடல் போல உடலழகும்
    தங்கம் வார்த்த சிமிழ் போல உதடழகும்
    தஞ்சை கோயில் ரதம் போல நடையழகும்
    வந்து குலவும் வேளையில் மனம் கவரும்

    ராஜேஷ் சார்/வாசு சார்

    கண்ணதாசனின் 'அழகே அழகு தேவதை ' பாடலிலும் பெண்ணின் அழகை வர்ணிக்கும் வரிகள் நினைவில் வந்தது .அதே போல் 'நிலவு ஒரு பெண்ணாகி ' பாடலிலும் நிறைய உண்டு .பெண்ணின் உடலை வர்ணிக்காத கவி யாரவது உண்டா ?
    gkrishna

  6. #3725
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வணக்கம் சி கே சார்

    நன்றி உரைக்கு நன்றி
    gkrishna

  7. #3726
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    Tamil Hindu april 2014

    பிரியமானவள், காதலி, மனதில் இருப்பவள் போன்ற பல பொருளை உள்ளடக்கியது, மெஹுபூபா என்ற உருதுக் கவிச் சொல். பல பாடல்களில் நாம் இன்றும் கேட்டுவரும் இந்த சொல்லின் உருவகமான காதலியை எல்லாக் கவிஞர்களையும் போலத் திரைப்பட பாடலாசிரியர்களும் நிலவுடன் ஒப்பிடுவது வழக்கம்.

    இப்படி நிலவுடன் காதலியை ஒப்பிட்டுள்ள ஒரு இந்திப் படப் பாடலும் அதற்கு இணையாகவும் வேறாகவும் விளங்கும் தமிழ்ப் படப் பாடலையும் பார்ப்போம்.

    முதலில், 1965-ல் வெளிவந்த ஹிமாலய் கி கோத் மே என்ற திரைப்படத்திற்காக கல்யாண்ஜி-ஆனந்த்ஜி இசையில், சோகத்தையும் காதல் சுகத்தையும் வசீகரமாக வெளிப்படுத்தும் முகேஷ் பாடிய, ஆனந்த் பக்*ஷி எழுதிய இந்திப் பாடல். சுமார் 638 திரைபடங்களில் 3500க்கும் அதிகமாகப் பாடல் எழுதிய ஆனந்த பக்*ஷிக்கு பிரேக் கிடைத்த பாடல் இது. இந்தப் படத்தின் நாயகன் மனோஜ் குமார், படத்தின் முதன்மை நாயகியான மாலா சின்ஹாவின் மோவாயைப் பிடித்து முகத்தை நிலவாக ரசித்தபடி பாடும் பாடல் இது. இன்று 77 வயதாகும் வாங்காள நடிகையான மாலா சின்ஹா அன்று இந்தி ரசிகர்கள் மத்தியில் ஒரு நிலவைப் போலவே கொண்டாடப்பட்டவர்தான்.



    பாடலின் சில வரிகள்:

    சாந்த் ஸீ மெஹுபூபா ஹோ மேரி
    கப் ஐஸ்சா மைனே சோச்சா தா
    ஹான், தும் பில்குல் ஐஸ்ஸி ஹோ
    ஜைஸ்ஸா மைனே சோச்சா தா
    (சாந்த்)
    ந கஸ்மே ஹை ந ரஸ்மே ஹை
    ந ஷிக்வே ஹை ந வாதே ஹை
    ஏக் சூரத் போலி- பாலி ஹை
    தோ நயனே ஸீதே- ஸாதே ஹை
    ஐஸ்ஸா ஹி ரூப் கயாலோமே தா,
    ஜைஸ்ஸா மைனே சோச்சா தா,

    வழக்கமான இந்திப் பாடல் போல் அல்லாது ஒரு புதிய பாணியில் அமைந்த இந்தக் கவித்துமான பாடலின் பொருள்:

    நிலவை விட அழகாக என்னவள் இருக்க வேண்டும்
    என்று எப்பொழுது நான் நினைத்தேன்.
    ஆம், முழுவதுமாக அப்படியே நீ இருக்கிறாய்.
    நான் எப்படி நினைத்தேனோ அப்படி
    நிலவை விட அழகாக...
    இலக்கணப்படி இல்லை இதிகாசப்படி இல்லை
    இல்லை ஒரு குறை, இல்லை உறுதிமொழி
    நிர்மலமான ஒரு முகம்
    நேர்மையான இரு விழிகள்
    இப்படித்தான் இருந்தது என் உள்ளக் கிடக்கை
    ஆம், அப்படியே முழுவதுமாக இருக்கிறாய்
    எப்படி நான் நினைத்தேனோ அப்படியே
    கவின் மாளிகை வாசக் கனவைக் காணாது
    என் உள்ளத்தில் வசிக்கும் விருப்பத்துடன்
    இந்த உலகில் யார் இருப்பார் (உன்னைத் தவிர என)
    எப்படி நான் நினைத்தேனோ
    ஆம், முழுவதும் அப்படியே நீ இருக்கிறாய்.



    இப்பாடலின் மையக் கருத்துடன் இணைந்தும் வெளிப்படுத்தும் உணர்விலும் நடையிலும் சற்று மாறுபட்டும் விளங்கும் தமிழ்ப் பாட்டு கவிஞர் வாலி எழுதியது. படம்: உலகம் சுற்றும் வாலிபன்

    நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
    நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
    மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ
    மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ
    புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
    பருவம் ஒரு தளமாக போர் தொடுக்க பிறந்தவளோ
    குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
    தேன் சுவையைத் தான் குழைத்து
    கொடுத்ததெல்லாம் இவள்தானோ
    பவளமென விரல் நகமும்
    பசும் தளிர் போல் வளைக்கரமும்
    தேன் கனிகள் இரு புறமும்
    தாங்கி வரும் பூங்கொடியோ
    ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
    யாழிசையின் ஒலியாக வாய்மொழிதான் மலர்ந்தவளோ
    செந்தமிழின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
    பொன்பதத்தில் வார்த்துவைத்த
    பெண்ணுடலை என்னவென்பேன்
    மடல்வாழைத் தொடை இருக்க
    மச்சம் ஒன்று அதில் இருக்க
    படைத்தவனின் திறமை எல்லாம்
    முழுமை பெற்ற அழகி என்பேன்

    gkrishna

  8. Likes Russellmai, rajeshkrv liked this post
  9. #3727
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    Very nice song. Makkal thilagam m.g.r's superb style and face expressions ..omg
    thanks krishnaji

    நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
    நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
    மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ
    மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ
    புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
    பருவம் ஒரு தளமாக போர் தொடுக்க பிறந்தவளோ
    குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
    தேன் சுவையைத் தான் குழைத்து
    கொடுத்ததெல்லாம் இவள்தானோ
    பவளமென விரல் நகமும்
    பசும் தளிர் போல் வளைக்கரமும்
    தேன் கனிகள் இரு புறமும்
    தாங்கி வரும் பூங்கொடியோ
    ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
    யாழிசையின் ஒலியாக வாய்மொழிதான் மலர்ந்தவளோ
    செந்தமிழின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
    பொன்பதத்தில் வார்த்துவைத்த
    பெண்ணுடலை என்னவென்பேன்
    மடல்வாழைத் தொடை இருக்க
    மச்சம் ஒன்று அதில் இருக்க
    படைத்தவனின் திறமை எல்லாம்
    முழுமை பெற்ற அழகி என்பேன்

    [

  10. #3728
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அருவிமகள் அலையோசை - இந்த
    அழகுமகள் வளையோசை..
    பொதிகைமலை மழைச்சாரல் - உந்தன்
    பூவிதழில் மதுச்சாரல்!

    ஜேசுதாஸ் மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி குரலில் இந்த பாடல் இடம் பெற்ற திரை படம் ஜீவநாடி தானே ?



    வீ தக்ஷினாமூர்த்தி இசை என்று படித்தேன் .இந்த திரைபடத்தை பற்றி மேல் தகவல்கள் உண்டா ?

    http://play.raaga.com/tamil/album/jeeva-nadi-t0002138
    Last edited by gkrishna; 4th October 2014 at 11:18 AM.
    gkrishna

  11. Likes Russellmai liked this post
  12. #3729
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு சார்..சரணாலயம் பாட்டெல்லாம்பற்றி முன்பு எழுதியிருந்தேனே..படித்தீர்களா.. எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை நல்ல பாடல்..நன்றி..
    **

    கவிதைன்னா என்ன..

    தவிக்கின்ற நெஞ்சகத்து தாக்கங்கள் எல்லாம்
    கவிதையாய்ப் பொங்குதே காண்..

    இல்லியோ..
    எனில் என்னல்லாம் கவிதை என்று வரும் பாட்டு இருக்கு..
    *

    முதலில் வருவது….

    வெள்ளைப் புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
    நமது கதை புதுக்கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை..
    ( ரஜினி, கொஞ்சம் ரொம்ப எரிந்த ஜோதி (பாவம் சின்னவயதிலேயே மரித்து விட்டார்).. அண்ட் இளையராஜா)

    ஸ்ப்த ஸ்வரதேவி யுணரு.. ம்ம் நினைவில் வருகிறது

    கவிதை அரங்கேறும் நேரம்
    மலர்க்கணைகள்பரிமாறும் தேகம்.. (பாக்யராஜ், முருங்கைக்காய் ஒல்லி ஊர்வசி)

    கீழே வருவது கொஞ்சம் லேட்டஸ்ட் கவிதை…(ஜெயம் ரவி, நாபிக்கமலப் புகழ் சதா!!)

    கவிதையே தெரியுமா
    என் கனவு நீதானடி
    இதயமே தெரியுமா
    உனக்காகவே நானடி
    இமை மூட மறுக்கின்றதே ஆவலே
    இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே

    அப்புறம் எம்.ஜி.ஆர் பாட்டு..இளமை துள்ளிடும் மாலைவெயில் நிற மஞ்சு..

    காற்று வாங்கப் போனேன்
    ஒருகவிதை வாங்கி வந்தேன்..

    மைக் மோஹனுக்கு வாழ்வு.. பலப்பல நல்ல நடிகைகளுடன் நடித்திருப்பார்..அவரும் ரேவதியும் பாடும் பாடல்..

    பாடு நிலாவே தேன் கவிதை பூமலர
    உன் பாடலை நான் கேட்கிறேன்..

    உதயகீதத்தில் இளையராஜா//
    *
    கவிஞர்களுக்குக் கற்பனை எப்படியெல்லாம் வருகிறது பாருங்கள்..
    *
    இந்தப் பாடலில் கவிதையைப் பற்றி என்ன சொல்றார் கமல் சொர்ண புஷ்பத்திடம்..

    வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது
    தென்றல் காற்று வீசுது
    சின்னப் பூ பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்..

    ஹையாங்க் அந்த பஸ் காட்சி, அப்புறம் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் மெல்லிய துணியால் சொர்ண புஷ்பம் அமலாவின் இதழில் தரப்படும் இன்னொரு கவிதை முத்தம்..! ம்ம்
    *
    மகாகவி பாரதியார் என்ன சொல்றார்..

    சிந்து நதியின் மிசை நிலவினிலே
    சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
    சுந்தரத்தெலுங்கினில் பாட்டிசைத்து
    தோணிகளோட்டி விளையாடி வருவோம்னு பாடிட்டு..

    சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
    கேரளத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்..ம்ம்

    *
    நாயகி நாயகனைத் தொலைத்து மலங்க மலங்க கண் மயங்கி மனம் மயங்கி கண்கலங்கி மனம் கலங்கி பார்ப்பவரையும் கொஞ்சம் உருக வைக்கும் பாடல்..எழுதியவர் வைரமுத்து.. வேறுயார்.. வீனஸ் ஐஸ்வர்யா பாடும் பாடல்..

    எங்கே எனது கவிதை கனவில் எழுதி மடித்த கவிதை..
    வெகு அழகானபாடல் வெகு அழகான கவிதை..வெகு அழகான ஐஸ்வர்யா..வெகு அழகான படமாக்கல்,..ம்ம்

    *
    எம்.ஜி.ஆர் எப்படி அளவோடு ரசிக்கிறார் இந்தப் பாட்டுல

    கன்னம் செந்தாமரை சிந்தும் முத்தம் செந்தேன் மழை
    கண்கள் இன்பகடல் குரல் தான் கொஞ்சும் புல்லாங்குழல்
    மங்கை பொன்னோவியம் பேசும்மழலைச் சொல்லோவியம்
    கனிவான நெஞ்சில் உருவான கவிதை என்னென்று சொல்லவோ..

    *

    அப்புறம் சொல்லலைன்னு வெங்க்கி கோச்சுக்கப் போறார்..

    உன்னை எண்ணிப்பார்க்கையில் கவிதை முட்டுது
    அதை அள்ளத் தவிக்கையில் வார்த்தை முட்டுது.. (சரிதானா)

    *

    இந்தப் பாட்டுல இந்தக் கவிஞர் என்ன சொல்றார்..ஆமா யாரு இவர்..

    உளி தேடல்கள் இல்லாமல் சிலையே இல்லை
    விழி தேடல்கள் இல்லாமல் காதல் இல்லை
    மழை தூறல்கள் தேடல்கள் மண்ணைத்தொடும்
    மன வேர் தேடும் தேடல்கள் பெண்ணைத்தொடும்
    தனக்குள்ளே ஓர் தேடல்கள் ஞானம் தரும்
    பேனா மை கொண்ட தேடல்கள் கவிதைதரும்
    விரல் கொண்டாடும் தேடல்கள் இசையைத்தரும்
    விதை கொண்டாடும் தேடல்கள் விடியல் தரும்..

    *

    ரசிகா ரசிகா என மஜ்னு பாடலில் ப்ரசாந்த் ஜோதிகா மும்தாஜ வாயசைக்கும்பாடலை எழுதியவர் கவிஞர் பிறை சூடன் (ஹை..இவரப் பத்தியாருமே எழுதலையே இன்னும்..(நைஸா வெடி போட்டாச்சு))

    *

    காளிதாசன்கண்ண தாசன்கவிதை நீன்னு ஒரு பாட்டும் நினைவுக்கு வருது.என்னபடம்னு நினைவுக்கு வரலை

    விட்டுப்போன பழையகவிதைகளைச் சொல்வீர்கள் தானே

  13. #3730
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கவிதையைப்பற்றி எழுதிப் போஸ்ட் பண்றதுக்குள்ள ஹிந்தி தமிழ்க் கவிதைகள் வந்துடுச்சே..

    நிலவு ஒரு பெண்ணாகி ரொம்ப ப் பிடிச்ச பாட்டாச்சே..

    எஸ்வி சார், கிருஷ்ணாஜி நீங்கள் இட்ட பாடலில் பிழை இருக்கிறது..

    செந்தமிழின் ஒளிகொடுத்துகிடையாது என நினைக்கிறேன்.. அது செந்தணலின் ஒளிகொடுத்து சந்தனத்தில் நிறம் கொடுத்து
    பொன்பதத்தில் வார்த்து வைத்த ந்னு வரும்..!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •