Page 2 of 401 FirstFirst 12341252102 ... LastLast
Results 11 to 20 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

 1. #11
  Senior Member Veteran Hubber
  Join Date
  Mar 2010
  Posts
  2,706
  Post Thanks / Like
  Quote Originally Posted by vasudevan31355 View Post
  அடடா!

  'குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட'

  பாகம் 1 இல் பாடல் வீடியோவைப் போட்டு ஒரு வழி பண்ணிட்டார் மதுண்ணா.

  இந்தப் பாடலில் நடிகை சொர்ணா பிளாட்பாரத்தில் ரயிலின் கூடவே ஓடி வர வேண்டும். 'ஷாட்'டைப் பார்த்த நடிகர் திலகம் சொர்ணாவைக் கூப்பிட்டு 'இப்படி ஓடக்கூடாதும்மா... இந்த மாதிரி ஓடணும்... பெண் ஓடுவது போல் நளினமாக இருக்க வேண்டும்' என்று ஒய்யாரமாக ஓடிக் காண்பித்தாராம். யூனிட்டே அசந்து போனதாம்.

  வாணியின் அருமையான பாடல்களில் ஒன்று. ஆனால் வழக்கம் போல எதிர்பார்த்த ஹிட் அடிக்கவில்லை. 'நாலு பக்கம் வேடர் இருந்தால்' குங்குமக் கோலங்கள் அஞ்சாதோ! அம்மம்மா.... என்னாம்மா...சொல்லம்மா
  அருமையான ஆனால் அறியாத தகவல் வாசு சார்
  தகவல் பெட்டகம் சார் நீங்கள்

  சொர்ணா கொஞ்சம் பூசின உடம்பு (உடும்பு).ஓடறது கொஞ்சம் கஷ்டம் கவரிமான் படத்தில் விஜயகுமார் உடன் டென்னிஸ் ஆடுவது போல் ஒரு காட்சி நினைவில் உண்டு சார் வைட் ஸ்கிர்ட் போட்டு கொண்டு . முட்டிக்கு கீழே கால் பார்த்தீங்க னா கெண்டை muscle என்று சொல்வார்களே கமலுக்கும் விக்ரமுக்கும் கை புஜங்கள் போல் இருக்கும்


  முதல் பாகத்தின் இறுதியில் நீங்கள் போட்ட தொகையறா பாடல்
  இன்னும் காதில் ஒலித்து கொண்டு இருக்கிறது
  Last edited by gkrishna; 14th August 2014 at 05:29 PM.
  gkrishna

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #12
  Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
  Join Date
  Apr 2011
  Posts
  9,086
  Post Thanks / Like
  உத்தரவின்றி உள்ளே வா
  உன்னிடம் ஆசை கொண்டேன் வா

  செம ஜாலி மூட் பாடல். ஜஸ்ட் ரிலாக்ஸ் தொடருக்கு ஏற்றது. மிக அருமையாக என்ஜாய் செய்து எழுதியிருக்கிறீர்கள் கிருஷ்ணா.

  இந்தப் பாட்டைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது.
  நடிகர் திலகமே தெய்வம்

 4. #13
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,107
  Post Thanks / Like


  "தாவி வரும் மேகமே என் தாய்நாடு செல்வாயோ
  ஊருலகம் போற்ற வரும் என் உத்தமரைக் காண்பாயோ
  இன்று மணமுடித்த ஏந்திழை போல் நானிங்கே
  சொந்தம் கொண்டாடுவதை சொல்லி விடமாட்டாயோ"

  தமிழ்த் திரையிசையுலகம் என்னும் கன்னி உயிருடன் இருந்தால் தங்களைத் தான் மணநதிருப்பாள் கிருஷ்ணரே.. எங்கிருந்தாலும் இந்தத் தொகையறாவைத் தான் பாடியிருப்பாள்...

  என்ன அசுரத்தனமான ஞானம் என்று தங்களை சொந்தம் கொண்டாடி யாருக்கும் தராமல் தானே வைத்துக் கொண்டிருப்பாள்...

  ஆஹா... உத்தரவின்றி உள்ளே வந்ததுமில்லாமல் எங்கள் தாம்பத்யத்திற்குள் நுழைந்து விமர்சனம் வேறு செய்கிறாயோ என்று அந்த தமிழ் நங்கை கூறும் முன்...

  Escapeடா சாமி.

  அதற்கு முன்

  கிருஷ்ணா சூப்பர் .... உத்தரவின்றி உள்ளே வா பாடலுடன் இத்திரியைத் தொடங்கி இத்திரியில் நுழைவதற்கு யாருடைய உத்தரவும் தேவையில்லை எனக் கூறி விட்டீர்கள்.

  தூள் கிளப்புங்க....
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 5. Thanks gkrishna thanked for this post
 6. #14
  Senior Member Veteran Hubber
  Join Date
  Mar 2010
  Posts
  2,706
  Post Thanks / Like
  உண்மை வாசு சார்
  அந்த தேனாறின் கரையில் பாடலில் ராட்சசி ஒரு சிரிப்பு ஒன்று பாருங்கள்
  நெல்லை சென்ட்ரல் ரிலீஸ் சார் midnight ஷோ திரை அரங்கு பின்னாடி வயக்காடு படம் பார்த்து கொண்டு இருக்கும் போது சிலர் அலறின அலறல் இருக்கே
  gkrishna

 7. #15
  Senior Member Veteran Hubber
  Join Date
  Mar 2010
  Posts
  2,706
  Post Thanks / Like
  வாருங்கள் எங்கள் குருஜி ராகவேந்தர்
  பொங்கும் பூம்புனலாய் வந்து எங்கள் செவி குளிர வழங்குக உங்கள் ஆசியை
  தொடருக உங்கள் பூபாளத்தை
  பொங்கி பிரவாகம் எடுக்கட்டும் உங்கள் இனிய பழைய கானங்கள்
  தப்பி ஓடாதே தங்கமே
  gkrishna

 8. #16
  Senior Member Diamond Hubber chinnakkannan's Avatar
  Join Date
  Apr 2006
  Location
  BOOLOGAM
  Posts
  8,018
  Post Thanks / Like
  ஆதெள கீர்த்தனாரம்பத்திலே..

  வழக்கம் போல சான்றோர்கள்.. என்ன சொல்லியிருக்காங்களாம்..அவங்களும் பெண்ணைப் பற்றித் தான்..

  கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்ற்றியும் ஐம்புலனும்
  ஒண்டொடி கண்ணே உள.. இது வெகு அந்தக்கால வள்ளுவர் வாக்கோன்னோ..

  இந்தக் கால சான்றோர்கள் என்ன சொல்லியிருக்காங்க

  பூடகமாய்ப் பெண்ணின் பொருள்பொதிந்த கோபம்தான்
  ஊடலென நெஞ்சில் உணர்..

  ஆமாம்..லேடீஸ் இருக்காளோன்னோ என்ன ஜென்ம்மோ..எதுக்குக் கோச்சுக்கும்னு தெரியாது.. நம்ம ஆண்வர்க்கம் இருக்கே ரொம்ப கஷ்டம்.. திடீர்னு கோபம் கண்ல அடிக்கும்

  மின்னலெனச் சுட்டுவிட்டு மேவி உயிர்கொள்ளும்
  கண்வழி கோபமும் காண்..

  டபக்குன்னு கோச்சுண்டுட்டாளா.சரி போயேன்னு விட்டுட முடியுமா என்ன.. அப்படி விட்டுடலாம்னு பார்த்தா இன்னும் கஷ்டம்னா ஓய்..அந்தக் கண்ணோரம் ஒரு ஒற்றைத்துளியாய் தெறிக்கும் பாருங்கோ.. பசங்க பாடு கஷ்டம் தான்..

  ஓரந் துளிர்க்கும் ஒருதுளியில் நெஞ்சமும்
  ஈரம்தான் கொண்டே விடும்..

  ஸோ என்ன பண்றது..சின்னக் கண்ணம்மா.. என்னடா கோபம்னு கொஞ்சம் கொஞ்சனும்..அதுக்கு முன்னால என்ன மேட்டர்னு கண்டும் பிடிக்கணும்.. ரொம்ப கஷ்டமான சமாச்சாரம் தான்.. கண்டுபிடிச்சு சமாதானப் படுத்தறதுக்கு சில சமயம்சுலபமாகவும் முடிச்சுடலாம்..ஜஸ்ட் ஒரு இறுக்கப் புடிச்சு ஒரு முத்தா.. சில சமயம் பர்ஸூம் வீக் ஆகச் சான்ஸ்ஸ் இருக்கு..

  அப்படித் தான் ஓய் இந்தப் பாட்டுல ஆத்துக்காரி கோச்சுக்கறா.. ஆம்படையான் என்ன பண்ணுவான்..சரித்திரகாலப் படமோன்னோ..செந்தமிழ்லயே பாடாறன் ஓய்..

  *

  கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த
  மின்னொளியே ஏன் மௌனம்
  வேறெதிலே உந்தன் கவனம்

  இன்சொல் பேசி ஏசிட எண்ணும்
  இதயமிலாதார் கவனம்
  இழந்ததனால் இந்த மௌனம்

  //யோவ் சும்மா சும்மா வெளிய போய்ட்டு வர்றியே..என்னை கவனிக்கிறியாய்யா நீ)

  வண்ணச் சிலையே...
  வண்ணச் சிலையே வளர் பிறையே
  வந்ததறியேன் மனம் குறையேன்

  எண்ணம் வீம்பு
  எண்ணம் வீம்பு மொழி கரும்பு
  என்னை பிரிந்த உம்மனம் இருட்டு


  /என்னை விட்டுட்டு விட்டுட்டு ப் போறீரே..ஒம்ம ஹார்ட் டார்க் தான்/

  கண்ணே போதும் சொல்லம்பு ஆ...
  கண்ணே போதும் சொல்லம்பு
  உன்னை கணமும் பிரியேன் எனை நம்பு

  /சமர்த்து..இந்தக் கால அரசியல் வாதி மாதிரி டபக்குன்னு வாக்குறுதி கொடுத்துடணும்..கொடுத்துடறான் பாருங்கோ/

  உண்மையில் என் மேல் உமக்கன்பு ஆ...
  உண்மையில் என் மேல் உமக்கன்பு
  உண்டென்றால் இல்லை இனி வம்பு

  /ஹப்பாடி சமாதானம் ஆயாச்சு//

  கண்ணில் தழுவுதே குறும்பு
  கனிமொழியே நீ என்னை விரும்பு

  பின்ன என்ன சேர்ந்து பாட வேண்டியதுதானே//

  கண் வழி புகுந்து கருத்தினில் கலந்தே
  கனிவுறும் காதல் ஜோதி
  காண்போமே பாதி பாதி காண்போமே பாதி பாதி
  *
  நன்னா இருக்கா பாட்டு..படம் நம்ம ந.தி படம்னா ந.தியும் ல்லிதாவும்பாடினது.(அப்படித்தானே).என்னது இங்க ஏற்கெனவே பேசிட்டாங்களா..அதனாலே என்ன மறுபடியும் கேட்டுக்குங்களேன்..

  அப்புறம் வரட்டா

  உருவாய் அருவாய் உளதா இலதா..
  .. அருள்வாய் குகனே..

  அன்புடன்
  சி.க..
  Last edited by chinnakkannan; 14th August 2014 at 05:48 PM.

 9. Thanks gkrishna thanked for this post
 10. #17
  Senior Member Veteran Hubber
  Join Date
  Mar 2010
  Posts
  2,706
  Post Thanks / Like
  எதனை தடைவை கேட்டாலும் சலிக்காத தூக்கு தூக்கி பாடல்
  அல்லவா சின்னா

  கொண்டு வந்தால் தந்தை
  கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
  சீர் கொண்டு வந்தால் சகோதரி
  கொலையும் செய்வாள் பத்தினி (இது தான் லலிதா )
  உயிர் காப்பான் தோழன்

  என்ற கருத்தின் அடிப்படையில் வந்த ப(பா)டம்
  Last edited by gkrishna; 14th August 2014 at 05:59 PM.
  gkrishna

 11. #18
  Senior Member Diamond Hubber chinnakkannan's Avatar
  Join Date
  Apr 2006
  Location
  BOOLOGAM
  Posts
  8,018
  Post Thanks / Like
  ஆமாம் க்ருஷ்ணாசார்.. இந்த பாடலென்றில்லை படமும் தான்.. என்னுடைய ஃபேவரிட்ஸ்ல் ஒன்று..

 12. #19
  Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
  Join Date
  Sep 2005
  Location
  Irumbu kOttai
  Posts
  2,529
  Post Thanks / Like
  டியர் வாசு சார்,

  உணமையிலேயே மலைக்க வைக்கும் சாதனைதான் என்பதில் எள்ளளவும் ஐயமேயில்லை. இத்தகைய சாதனையை தலைமையேற்று வெற்றிகரமாக நடத்திய தங்களையும், இச்சாதனைக்கு மிக மிக உறுதுணையாக நின்ற கிருஷ்ணாஜி, ராஜேஷ் சார், ராகவேந்தர் சார், மதுசார், சின்னக்கண்ணன் சார், வினோத் சார், தூக்கத்திலும் என்னை மறக்காத கோபால் சார், முரளி சார் மற்றும் இந்த திரியில் பங்களிப்பு செய்த அனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும், அந்த அளவுக்கு அனைவரும் தங்கள் உழைப்பக் கொட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் நன்றிகள்.

  வேலைப்பளுவினாலும், உடல்நலக் குறைவினாலும் கடந்த சில நாட்களாக பங்கேற்று பதிவுகள் இட முடியவில்லைஎன்றாலும், அனைத்துப்பதிவுகளையும் படித்து முடித்து விட்டேன். மலைத்துப்போனேன் என்பதே உண்மை. எவ்வளவு விவரமான, விஷயமுள்ள பதிவுகள்..!!!. அவற்றையெல்லாம் நீங்கள் அழகாக பட்டியலிட்டு விட்டீர்கள். தமிழ்ப்பாடல்கள் சம்மந்தமான (ஏன்..., கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி சம்மந்தமாகக்கூட) தேவைப்படும் விவரங்களும் இந்த திரிக்குச்சென்றால் கிடைக்கும் என்ற அளவில் பாடல்கள் அலசப்பட்டிருக்கின்றன.

  தங்களின் 'இன்றைய ஸ்பெஷல்' மற்றும் 'ஜஸ்ட் ரிலாக்ஸ்' பாடல் வரிசைகளும், கோபால் அவர்களின் 'ராக ஆலாபனை' பதிவுகளும், ராகவேந்தர் அவர்களின் 'பொங்கும் பூம்புனல்' மற்றும் 'உள்ளத்தை அள்ளித்தா' பதிவுகளும், கிருஷ்ணாஜி, ராஜேஷ், மது, சின்னக்கண்ணன் ஆகியோரின் அருமையான தமிழ் மற்றும் பன்மொழிப் பாடல் ஆய்வுகளும், வினோத் அவர்களின் பொம்மை இதழ் ஸ்டில்களுடன் கூடிய வீடியோக்களும் (சினி டைரி ஆவணப் பதிவுகளுக்கு ஸ்பெஷல் நன்றி வினோத் சார்) திரியை எங்கோ உயரத்துக்கு இட்டுச்சென்றுள்ளது.

  கிட்டத்தட்ட முக்கால்வாசிவரை ஆக்டிவ்வாக இருந்த நான், மேற்கூறிய காரணங்களால் பாகத்தின் இறுதியில் சுறுசுறுப்பாக பங்கேற்க முடியாமல் போனதற்காக பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். மேலும் நான் துவங்கிய 'நாயகியரின் போதைப்பாடல்கள்' வரிசையையும் தொடர்ந்து தர முடியவில்லை. மன்மதலீலைப் பதிவுகளையும் முழுமையாக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. இரண்டாம் பாகத்தில் நிச்சயம் சுறுசுறுப்பாக பங்கேற்க முடியும் என்று நம்புகிறேன்.

  எந்த வித சலசலப்பும், சண்டைகளும் இன்றி திரி கலகலப்பாக சென்றதற்குக் காரணம், நான் பெரியவனா, நீ பெரியவனா என்ற கர்வம் இல்லாமை. பி.சுசீலா - எஸ். ஜானகி சர்ச்சை கூட அருமையாக தவிர்க்கப்பட்டது.

  துவக்கத்தில் ராட்சசி புகழை அதிகம் பாடுவதாக அமைந்த திரி இறுதியில் இசையரசியின் புகழ்க்கொடியை உயர்த்திப்பிடித்ததில் முடிந்திருக்கிறது. முத்தாய்ப்பாக முரளி சார் எழுதிய 'மனம் படித்தேன்' பாடலுக்கான மேலதிக ஆய்வு. (முரளி சார்.., நானெல்லாம் மாங்கு மாங்கென்று நூறு பதிவுகள் எழுதுவதும் சரி, நீங்கள் ஒரு பதிவு எழுதுவதும் சரி. அத்தனை முழுமை உங்கள் பதிவில். 'மனம் படைத்தேன்' என்ற இடத்தில் வரும் ஆலாபனை போலவே 'அம்மம்மா ஆ.ஆ.ஆ. அம்மம்மா காற்றுவந்து ஆடைதொட்டுப்பாடும்' என்ற இடத்திலும் இசையரசி அசத்தியிருப்பார்).

  வாசு சார், ஒவ்வொன்றையும் எப்படிச்செய்ய வேண்டும் என்பதை தங்களிடம் கற்றுக்கொள்வது போலவே 'நன்றிப்பதிவு' எப்படிப்பதிவிட வேண்டும் என்பதையும் தங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு ஒரு முழுமையான நன்றிப்பதிவு. எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு, இறுதியில் ஒரு தனிப்பதிவிட்டு நடிகர்திலகத்துக்கு நன்றி தெரிவித்தீர்கள் அல்லவா?. அங்கு நிற்கிறீர்கள் வாசு சார்.

  அடுத்த பாகத்தை அருமையான 'உத்தரவின்றி உள்ளே வா' பாடலுடன் துவக்கி வைத்திருக்கும் அன்பு கிருஷ்ணாஜி அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்...

 13. #20
  Senior Member Veteran Hubber
  Join Date
  Mar 2010
  Posts
  2,706
  Post Thanks / Like
  Quote Originally Posted by mr_karthik View Post

  அடுத்த பாகத்தை அருமையான 'உத்தரவின்றி உள்ளே வா' பாடலுடன் துவக்கி வைத்திருக்கும் அன்பு கிருஷ்ணாஜி அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்...
  வருக வருக கார்த்திக் சார்
  உங்கள் வரவு நல்வரவு ஆகுக
  உங்கள் ஆதரவை நல்குக

  gkrishna

Page 2 of 401 FirstFirst 12341252102 ... LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •