Results 1 to 8 of 8

Thread: வசுந்தரா...

Threaded View

  1. #1
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like

    வசுந்தரா...

    வசுந்தரா..
    *
    சின்னக் கண்ணன்..
    *
    வசுந்தரா பெயரிடப்படாத குழந்தையாய்ப் பிறந்த போது, உயிருடன் இருக்கிறோம் என்பதற்காக ஒரே ஒரு முறை வீல் என்று அழுது விட்டு நிறுத்தி விட, குழந்தையை எடுத்துப் பார்த்த டாக்டர் பங்காரு அம்மாள் கன்ஃப்யூஸ் ஆனார்.

    “என்னது இது..தொடர்ச்சியா அழணுமோல்லியோ..இது ஏன் இப்படிப் பண்ணுது” எனக் குழப்பமாய்க் கேட்க வாட்ச் பார்த்த நர்ஸ் ஓமனக் குட்டி (வயது 56) “ஒரு வேளை நல்ல நேரம் வரட்டும்னு வெய்ட் பண்ணுதோ என்னவோ…இப்ப 6.59.45. ஏழு மணிக்கு நல்ல நேரம்” எனச் சொல்ல, சரியாய்ப் பதினைந்து செகண்ட் கழித்து குழந்தை மறுபடியும் தொடர்ச்சியாய் அழுதது..

    “நான் சொன்னேனில்லை..இந்தக் குட்டி எல்லாத்தையும் டயத்துக்குச் செய்யுமாக்கும்” என சந்தோஷமாய்ச் சொன்ன ஓமனா அறையின் வெளியில் வந்து கவலையுடன் இருந்த ராமபத்திரரிடம் “ பெண் குழந்தை” எனச் சொல்ல ராமபத்ரர் சந்தோஷமானார்.. அருகிலிருந்த உறவுகளிடம் சாக்லேட்கொடுத்து மகிழ்ச்சியைக் கொண்டாட ஒரு உறவுக்கார வயதான அத்தை ஓ..இன்னிக்கு பரணி நட்சத்திரம் குழந்தை தரணியே ஆள்வா பாரு என்று தனது செண்டிமெண்டைச் சொன்னார்..

    ராமபத்ரனின் முன்னோர்கள் தஞ்சையில் பெரும் பணக்காரர்கள்..எனில் ராமுவும் அப்படியே..அவருக்குச் சொந்தமாய்ப் பல வீடுகள், நிலங்கள், போதாக்குறைக்குத் தஞ்சையிலேயே ஒரு பெரிய ரைஸ்மில் இருந்ததில் பணம் அள்ள அள்ளக் குறையாமல் இருந்தது..

    பிறந்த குழந்தைக்கு வஸீந்தரா என்ற வசு எனப் பெயர் வைக்க, வசுந்தரா மெல்ல மெல்ல வளர்ந்து பள்ளிப் பருவம் எய்தினாள்.. எல்கேஜியில் தஞ்சையில் இருந்த ஒரு பள்ளியில் சேர்த்து விட பள்ளி சென்று வந்த வசு மாலை சமர்த்தாய் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டது..

    “என்னம்மா செய்ற”

    “நாளைக்கு ஸ்கூல்ல என்ன க்ளாஸ்னு பாக்கறேம்ப்பா”

    “என்ன அதுக்குள்ள்யாம்மா”

    “ஆமாம்ப்பா..என்ன செய்யணும்னு ப்ளான் பண்ணிக்கனுமோன்னோ”

    குழ்ந்தையின் அறிவில் ராமபத்ரன் மட்டுமல்ல அவளது கேள்விக்ளில் மனைவி வேதாவிற்கும் பெருமை தான்..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •