Page 51 of 401 FirstFirst ... 41495051525361101151 ... LastLast
Results 501 to 510 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

  1. #501
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    supper still YUKESH SIR

    Quote Originally Posted by Yukesh Babu;114816
    1
    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #502
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks ramamurthy sir for uploading aayirathil oruvan posters of apsara theaters

    what about fans reaction today

  4. #503
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.




  5. #504
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. Likes ainefal liked this post
  7. #505
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  8. #506
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் ''தெய்வத்தாய் '' இன்றுடன் பொன்விழா ஆண்டு நிறைவு நாள் .

    18.7.1964 அன்று வெளிவந்த சத்யா மூவிஸ் முதல் படம் .
    பாலசந்தர் - அறிமுக படம் - வசனம் .
    மாதவன் இயக்கிய முதல் மக்கள் திலகத்தின் படம் .
    100 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம் .

  9. #507
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  10. #508
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1964-ல் வேட்டைக்காரன், என் கடமை, பணக்கார குடும்பம், தெய்வத்தாய், தொழிலாளி, படகோட்டி, தாயின் மடியில் ஆகிய 7 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். இதில் "தெய்வத்தாய்", ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பு.

    இந்தப்படம் தயாரிக்கப்பட்ட காலக்கட்டத்தில், கே.பாலசந்தர் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நாடகம் எழுதி, இயக்குவதில் புகழ் பெற்று விளங்கினார். அவர் எழுதிய "மெழுகுவர்த்தி", "மேஜர் சந்திரகாந்த்" ஆகிய நாடகங்களில் ரசிகர்களிடம் மிகுந்த ஆதரவைப் பெற்றிருந்தன.

    ஒருமுறை "மெழுகுவர்த்தி" நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், பாலசந்தரின் திறமையை வெகுவாகப் பாராட்டியதுடன், அவரைப்போன்ற இளைஞர்கள் படத்துறையில் நுழையவேண்டும் என்று வற்புறுத்தினார்.

    அதன் விளைவாக, "தெய்வத்தாய்" படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு பாலசந்தருக்குக் கிடைத்தது.

    இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்தார். பி.மாதவன் டைரக்ட் செய்தார். இசை: விசுவநாதன் - ராமமூர்த்தி. இது வெற்றிப்படமாக அமைந்தது.

    தேவர் பிலிம்ஸ் தயாரித்த "வேட்டைக்காரன்" படத்தில் மேல் நாட்டு பாணியில் "கவ்பாய்" உடையில் எம்.ஜி.ஆர். நடித்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சாவித்திரி.

    ஆரூர்தாஸ் வசனம் எழுத டைரக்ட் செய்தவர் எம்.ஏ.திருமுகம். இந்தப்படமும், இதே ஆண்டு வெளிவந்த "தொழிலாளி"யும் தேவர் பிலிம்சின் வெற்றிப்படங்கள்.

    வேலுமணி தயாரித்த "படகோட்டி"யில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர்.

    சக்தி கிருஷ்ணசாமியும், ஏ.எல்.நாராயணனும் வசனத்தை எழுதினர். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்த இந்தப் படத்தை டி.பிரகாஷ்ராவ் டைரக்ட் செய்தார். இப்படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

  11. #509
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    "தெய்வத்தாய்", நியாயம், சத்தியம், கடமை இவைகளை கொள்கை உள்ள ஆர்.எம்.வீ. அவர்களுக்கு இந்த படம் ஒரு சவாலாக இருந்தது. தமிழ் சினிமா துறையில் ஆர்.எம்.வீ. அவர்கள் முழுக்க முழுக்க மக்கள் திலகம் அவர்களுடைய கொள்கையை பின்பற்றுபவர். நல்லவர், இவரை நம்பி இந்த படத்தை தயாரிக்கிறேன். இது நிச்சயமாக எனக்கு வெற்றியையும், நல்ல முன்னேற்றமும் கிடைக்கும் என்று மனதிடத்துடன் அந்த படத்தை "சத்யா மூவிஸ்" தயாரித்தது. ஆர்.எம்.வீ. வெளியிட்டார். அந்த படம் 100 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

  12. #510
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1960களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்த வாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது. அந்த நாளைய பல படங்களின் பாடல்களுக்கு இந்த இசை பயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது. எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாக இருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.
    இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியை சுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டு பொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

    இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர் கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும் இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.

    எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன் குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப் பயன்படுத்தியிருப்பார்கள்.

    இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத் தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின் தாளத்துக்கேற்ப, தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி.

    பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரை அட்டகாசமாகச் சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..

    பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26 நிமிடத்தில் மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவது இடையிசையில் மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி 2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம் தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46 நிமிடத்தில் காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09 நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில் பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசை கேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.

    அதேபோல் நாளை நமதேயில் எம்ஜிஆர் லதாவுடன் ரொமாண்டிக் பண்ணும் என்னை விட்டால் யாருமில்லையிலும் பொங்கசைத்தான் முன்நிலைப் படுத்தியுள்ளார் எம்.எஸ்.வி. தனது ஆசானின் எதிர்பார்ப்பை உணர்ந்த பொங்கஸ் கலைஞர் கணேஷும் அவரின் எதிர்பார்ப்புக்கு எந்தக் குறையும் வைக்காமல் அற்புதமாக இசைத்துள்ளார்.

    Courtesy- ilavenirkaalam

  13. Likes gkrishna liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •