Page 5 of 401 FirstFirst ... 345671555105 ... LastLast
Results 41 to 50 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

  1. #41
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் படங்கள் என்றுமே திரையீட திரையீட வசூலில் குறைவில்லாத அட்சய பாத்திரம்



    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    எங்கள் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் நடித்த காவியமாம் " எங்கள் வீட்டு பிள்ளை "


    ஏற்படுத்திய வரலாறு காணாத சாதனை காணீர் :

    சென்னை நகரையே வலம் வந்து சுமார் மூன்று மாத காலம் ஓடியது.


    06-08-1982 முதல் சென்னை சரவணா மற்றும் குரோம்பேட்டை வெற்றி ஆகிய அரங்குகளில் தினசரி 4 காட்சிகளுடன் ஒரே நேரத்தில் வெளியாகி, சரவணா அரங்கில் முதல் 28 காட்சிகளும் அரங்கு நிறைந்தது.

    13-08-82 முதல் சென்னை செலக்ட் அரங்கில் திரையிடப்பட்டது. சரவணா அரங்கில் 2வது வெற்றிகரமான வாரம் தொடர்ந்தது.

    20-08-82 செலக்ட் அரங்கிலும் முதல் 28 காட்சிகள் அரங்கு நிறைந்தது. சென்னை செலக்ட் அரங்கில் 2வது வெற்றிகரமான வாரம் தொடர்ந்தது.

    27-08-82 முதல் சென்னை சித்ரா (தினசரி 4 காட்சிகள் ) மற்றும் ஸ்ரீனிவாசா (தினசரி 3 காட்சிகள் ) அரங்குகளில் திரையிடப்பட்டது. இரண்டு அரங்கிலும் முதல் வாரத்தில் அனைத்து காட்சிகளும் (முறையே 28 மற்றும் 21 காட்சிகள் ) அரங்கு நிறைந்தது.

    03-09-82 அன்று இரு அரங்குகளிலும் ( சித்ரா மற்றும் ஸ்ரீனிவாசா அரங்குகளில் ) இரண்டாவது வாரம், அதே 4 மற்றும் 3 காட்சிகளுடன் வெற்றிகரமாக தொடர்ந்தது.

    10-09-82 அன்று பழனியப்பா அரங்கில், தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

    ஒரு வார குறுகிய இடைவெளியில், (புதிய பட வரவின் காரணமாக இருக்கும் என்று கருதுகிறேன்) மீண்டும்

    24-09-82 முதல் உமா அரங்கில், தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

    01-10-82 முதல் தங்கம் அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

    08-10-82 முதல் வீனஸ் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

    ஒரு வார குறுகிய இடைவெளியில், மீண்டும்

    22-10-82 முதல் பிரைட்டன் அரங்கில், தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

    29-10-82 முதல் ஸ்ரீ பத்மநாபா அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

    05-11-82 முதல் காமதேனு அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டு, அதில் 26 காட்சிகள் அரங்கு நிறைந்தது. முன்னரே அரங்க நிர்வாகத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தினால், காமதேனு அரங்கில் 26 காட்சிகள் அரங்கு நிறைந்தும், 2வது வாரம் தொடர முடியாமல் போனது துரதிருஷ்டமே.

    12-11-82 முதல் சன் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

    இந்த சாதனை போதாதென்று, மீண்டும் 3 மாத இடைவெளியில், 1983ம் வருடம், திரையிடப்பட்ட போது, ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது எங்கள் தங்கத்தின் "எங்க வீட்டு பிள்ளை " காவியம்

    04-02-1983 முதல் சென்னை பிரபாத் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

    ஒரு வார குறுகிய இடைவெளியில்
    18-02-83 முதல் சென்னை சரஸ்வதி அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது

    சற்று இடைவெளியில் ,

    08-04-83 சென்னை வெலிங்டன் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

    15-04-83 முதல் சென்னை சயானி அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

    29-04-83 முதல் ஸ்ரீ முருகன் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

    12-08-83 முதல் ஜெயராஜ் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.


    இது போன்ற சாதனைகளை நிகழ்த்த தமிழ் திரையுலகில் மக்கள் திலகத்தால் மட்டும்தான் முடியும் என்ற காரணத்தினால் அவர் " புரட்சி நடிகர் " என்ற மற்றொரு பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டு பின்னர் அது அரசியல் சாதனையால் "புரட்சித் தலைவர் " என்று மாறியது.

    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !


    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்


    குறிப்பு :

    அடுத்து இதே போல் சாதனகைளை ஏற்படுத்திய .... உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன், வேட்டைக்காரன் போன்ற வெற்றிப்படத் தகவல்கள் இடம் பெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்
    .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #42
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    என்றும் வாழும் எங்க வீட்டு பிள்ளை - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., பாகம் 9 நிறைவடைந்து, பாகம் 10 அதி அழகாக தொடங்கியுள்ள நல்ல நேரம் அம்சமாக அமைந்திருக்கிறது...இந்த நல்ல வேளையில் புரட்சி தலைவரின் புகழ் பற்பல ரூபங்களில் இன்னும்... வெளியாக அனைத்து நல்ல இதயங்களும் சேவையாற்ற பணிவன்புடன் அழைப்பதில் பேரு மகிழ்ச்சி...

  4. #43
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி நடிகரின் மகத்தான பெருமை மிகு திரியின் பாகம் 10 - தொடங்கியுள்ள திருவாளர் லோகநாதன் அவர்களின் மடல் வெகு சிறப்பு... மையம் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் எல்லோருக்கும் மக்கள்திலகம் அவர்களின் ரசிகர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்...

  5. #44
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் அகராதியில் புகழ் & வசூல் என்ற சொற்களுக்கு மறு பெயர் மக்கள் திலகம்

  6. Likes Russelllkf liked this post
  7. #45
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    முன்பிருந்தவர் நேற்றில்லை ; நேற்று இருந்தவர்
    இன்றில்லை ; இன்றிருப்பவர் நாளை .............
    ஆட்சியில் இருக்கும் காலம் குறைவாக இருந்தாலும்
    மக்களுக்கு , எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ
    அதைச் செய்வதுதான் என் முதல் வேலை ! "

    சொன்னவர் எங்கள் கடவுள்

    சொன்னதை செய்தும் காட்டினார்

  8. Likes Russelllkf liked this post
  9. #46
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    பாமர மக்கள் தினமும் செல்லும் கோவில்

  10. Likes Russelllkf liked this post
  11. #47
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like




    என் வரிசையில் தொடங்கும் தலைவர் திரை படங்கள்

    1. என் தங்கை

    2. என் கடமை

    3. என் அண்ணன்

  12. #48
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கேப்டனுக்கு உடல்நிலை சரியில்லை அப்பல்லோவில் அனுமதி என்ற செய்தி படித்து துடி துடித்து போனேன்.ஒரு காலத்தில் எங்கள் மக்கள் திலகமும் இதே ஆஸ்பத்திரியில் தானே அனுமதிக்கப்பட்டார்.அன்று மக்கள் ஊனின்றி உறக்கமின்றி தெருவெங்கும் கூட்டமாக அமர்ந்து மக்கள் திலகத்துக்காக பிரார்த்தனை செய்தனரே மந்திரிகளும் எம்.எல்.ஏக்களும் தலைவரை பார்த்து விட்டு அவர் உடல்நிலை பற்றி வெளியில் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருக்கும் மக்களிடம் தலைவரின் உடல்நிலை பற்றி சொல்லிவிட்டு போவார்களே அதுவெல்லாம் நினைவில் வந்தது. இவரும் கருப்பு எம்ஜிஆர் ஆயிற்றே அதே போல மருத்துவமனை பரபரப்பாக இருக்கும்.ஆண்டவனே உன் பாதங்களை பாடல் தெருவில் ஒலிக்கும் மக்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக அமர்ந்து பிரார்த்தனை செய்துக் கொண்டிருப்பார்கள் என்று ஒரு வித அச்ச உணர்வோடு மருத்துவமனை அருகில் சென்றால் வாசலில் நிற்கும் செக்யுரிட்டி கதவை திறந்து வைத்து விட்டு பக்கத்து டீ கடைக்கு டீ குடிக்க போயிருக்கிறார் என்ற செய்தி கேட்ட பின்பு தான் மனதுக்கு அமைதியே வந்தது.அப்பாடா எங்கள் கேப்டனுக்கு பயப்படும் படி ஒன்றும் இல்லை.


    Courtesy net

  13. #49
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தாய் சொல்லைத் தட்டாதே படத்தைத் தயாரிக்க முடிவு செய்ததும், கதையை எம்.ஜி.ஆரிடம் கூறுவதற்காக என்னை அவரிடம் தேவர் அழைத்துச் சென்றார். என்னைப் பார்த்ததும் எடுத்த எடுப்பிலேயே, 'நீங்கள் சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதுகிறீர்கள் அல்லவா?' என்று எம்.ஜி.ஆர். கேட்டார். 'பாசமலர்', 'படித்தால் மட்டும் போதுமா' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருப்பதாக தெரிவித்தேன். 'நீங்கள் சிவாஜி பிலிம்சுக்கு நிரந்தர எழுத்தாளரா?' என்று எம்.ஜி.ஆர். கேட்டார். 'இப்போதைக்கு அப்படித்தான்' என்றேன். 'சிவாஜியை உங்களுக்கு எப்படி தெரியும்?' என்று கேட்டார், எம்.ஜி.ஆர்.
    'ஜெமினி அறிமுகம் செய்து வைத்தார்' என்றேன். 'தாய் சொல்லைத் தட்டாதே படத்துக்கு வசனம் எழுதி முடித்து விட்டீர்களா?' என்று கேட்டார். 'எழுதி முடித்து விட்டேன்' என்றேன். 'படப்பிடிப்புக்கு முன் முடித்துவிடுவது நல்ல வழக்கம்தான்' என்றார், எம்.ஜி.ஆர். புலிக்கு எதிரில் நிற்கும் ஆடு போன்ற நிலையில் நான் இருந்தேன்! எம்.ஜி.ஆர். என்னை சிவாஜியின் ஆள் என்று முடிவு கட்டிவிட்டார் என்று எனக்குத் தெரிந்தது. படத்திலிருந்து விலகிக்கொள்ளலாமா என்று நினைத்தேன். ஆனால், `தாய் சொல்லைத் தட்டாதே' படத்துக்கு முழு வசனமும் எழுதி முடித்துவிட்டதால், என்ன செய்வது என்று தெரியவில்லை.
    இந்த நிலையில் படப்பிடிப்பு ஆரம்பமானது. தாயில்லாத பெண்ணான சரோஜாதேவியின் தந்தை எம்.ஆர்.ராதா. தந்தையற்ற மகனான எம்.ஜி.ஆரின் தாய் கண்ணாம்பா. அவர் கைம்பெண் ஆனதற்கு காரணமே எம்.ஆர்.ராதாதான். இந்த நிலையில், தனது காதல் திருமணத்திற்கு தந்தையின் அனுமதி கிடைத்துவிட்டது என்று சரோஜாதேவி, எம்.ஜி.ஆரிடம் கூறுவது போன்ற காட்சி படமாகியது. 'உங்கம்மாவை எங்க வீட்டுக்கு அனுப்பி, எங்க அப்பாகிட்ட என்னை பெண் கேட்கச் சொல்லுங்க' என்றார், சரோஜாதேவி. 'எங்கப்பா இறந்ததற்கு அப்புறம், எங்க அம்மா எந்த மங்கல காரியத்திலேயும் பங்கெடுக்கிற வழக்கம் இல்லை. பொதுவாக கணவரை இழந்த பெண்களை பார்க்கிறதே அபசகுணம் என்று சொல்வாங்க. ஆனால் நான் விடிந்ததும் முதலில் என் அம்மா முகத்தில்தான் நான் விழிக்கிறேன். அதனால்தான் எனக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கிறது.
    எனக்கு எப்பவும் தாய்தான் தெய்வம். அந்த தாய் சொல்லை தட்டமாட்டேன்' என்பார், எம்.ஜி.ஆர். இந்த வசனத்தை நான் படித்துக் காட்டியதும் எம்.ஜி.ஆர். என்னை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, என் தோளில் தட்டிக்கொடுத்தார். பின்னர், 'தாயை பற்றி நீங்கள் எழுதி இருக்கும் வசனம் வார்த்தைக்கு வார்த்தை எனக்குப் பொருந்துகிறது. இது எனக்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது' என்றார். எம்.ஜி.ஆரைப்பற்றி, தவறான புள்ளிகள் வைத்து என் மனமுற்றத்தில் நான் போட்டிருந்த தவறான கோலம், முற்றிலுமாக அழிந்து போய்விட்டது.
    - திரு.ஆரூர்தாஸ் பதிவிலிருந்து .

  14. #50
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    டாக்டர் சந்திரன் அவர்களே உங்களை போல் எல்லா மருத்துவர்களும் நடந்துகொண்டால் ஏழைகள் நலமாக வாழ்வார்கள்

Page 5 of 401 FirstFirst ... 345671555105 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •