Page 188 of 401 FirstFirst ... 88138178186187188189190198238288 ... LastLast
Results 1,871 to 1,880 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

  1. #1871
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1872
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  4. #1873
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  5. #1874
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    Courtesy: Movieland Magazine, Malaysia
    Tmt. Sheela, Johor Bahru, Malaysia

  6. #1875
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு சிவா - திரு கோபால் : எனக்கு பதில் தந்த உங்கள் இருவருக்கும் அன்பு வணக்கம் !

    எம்ஜிஆர் - சிவாஜி இருவரும் சாதனையாளர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை, எங்கள் பார்வையில்.

    வசூல் பற்றிய புள்ளி விவரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான் முதலிடம் என்பதை நாங்கள்சொல்கிறோம். எம்ஜிஆர் என்றுமே வசூலில் சக்கரவர்த்தி, என நாடும் ஏடுகளும் போற்றியுள்ளார்கள். இதனை உறுதிபடுத்தும் விதத்தில் அந்த காலத்தில் வெளியான "பொம்மை" மற்றும் "பேசும் படம்" முதலான
    பத்திரிகைளில் செய்திகள் பிரசுரமாயின.

    நீங்கள் உங்கள் தரப்பு வாதத்தை கூறினீர்கள் . சரி கடந்த காலத்தில் உங்கள் நண்பர்கள் பதிவில் தவறான தகவல்கள் இருந்ததை நீங்கள் ஒப்பு கொள்கிறீர்களா ?

    1. பராசக்தி - அதிக நாட்கள் ஓடியதற்கு எந்த ஆதாரமும் இல்லை .

    2. இரும்பு திரை - வெள்ளிவிழா - எந்த ஆதாரமும் இல்லை .

    3. நூறு நாட்கள் ஓடாத பல படங்களை 100 நாட்கள் ஓடியதாக பட்டியல் போட்டு உள்ளார்கள் . உதாரணத்துக்கு சில .... (நீதி - ராஜ ராஜ சோழன் - திருடன் -
    விளையாட்டு பிள்ளை -ராஜபார்ட் ரங்கதுரை.) இது போன்று பல படங்களை குறிப்பிட முடியும்.

    4. எம்.ஜி.ஆர். சிவாஜிக்கு ஒரு போட்டியே இல்லை என்று உங்கள் நண்பர் ஒருவர் கூறியுள்ளார். நாங்களும் அதைத்தானே கூறி வருகிறோம். எம். ஜி. ஆர். என்ற மாபெரும் மக்கள் சக்தி படைத்த நடிகர் எவருடனும் ஒப்பிட முடியாதவர் என்பதே உண்மை. ஏன் என்றால், திரு., சிவாஜி கணேசன் அவர்கள் நடிக்க வருவதற்கு முன்பே மக்கள் திலகம் தமிழ் திரையுலகில் நுழைந்து ஒரு கலக்கு கலக்கியதுமில்லாமல், அவருக்கு முன்பே "மதுரை வீரன்" வெள்ளிவிழா படத்தினை தமிழ் திரையுலகிற்கு அளித்தவர். பின்பு, ஜெமினி கணேசன் நடிப்பில் " கல்யாண பரிசு" வெள்ளி விழா கொண்டாடியது. அதற்கு பிறகுதான் "பாகப்பிரிவினை" வெள்ளி விழா கொண்டாடியது.

    5. பராசக்திக்கு பிறகு மனோகரா - வீரபாண்டிய கட்ட பொம்மன் - பாகப்பிரிவினை - பாசமலர் - பாவமன்னிப்பு - ஆலயமணி - படித்தால் மட்டும் போதுமா - நவராத்திரி - கைகொடுத்த தெய்வம் - திருவிளையாடல் - சரஸ்வதி சபதம், போன்ற படங்கள் வெற்றி பெற்றதை நாங்களும் அறிவோம் . ஆனால் உடனுக்குடன் எங்கள் நாயகன் எம்ஜிஆர் படங்கள் வந்து வசூலிலும், ஓட்டத்திலும் உங்கள படங்களின் சாதனைகளை வென்றதை மறுக்க முடியுமா ?

    6. 1965 முதல் 1977 வரை - 13 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். - சிவாஜி படங்களின் வசூல் - சாதனைகள் ஒப்பீடு செய்தால் எங்கள் எம்.ஜி.ஆர். எல்லா விதத்திலும் முதலிடம் பெற்று இருந்தார் என்பது உங்கள் மனசாட்சிக்கு நன்கு தெரியும்.

    இரவு பகலாக பல படங்களில் சிவாஜி நடித்தார் . போதிய இடைவெளி இன்றி படங்களை வெளியிட்டார் .என்று நீங்கள் சொல்லலாம் . 1971ம் ஆண்டில் மட்டும் திரு. சிவாஜிகணேசன் அவர்களுக்கு 7 தோல்வி படங்கள் . சென்னை சாந்தி மற்றும் திருச்சி -பிரபாத், இரண்டும் உங்கள் திரை அரங்கம் என்பதை
    சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

    புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே !

    எவர் கிரீன் ஹீரோ - matinee idol என்று அழைக்கப்பட்டவர் - எங்கள் எம்.ஜி.ஆர். ஒருவரே !

    திரு. சிவாஜி கணேசன், சிறந்த நடிகர்களில் ஒருவர் என நாங்கள் மறுத்தது கிடையாது. ஏன் என்றால் .நாங்கள் ஏற்றுகொண்ட தலைவன் எம். ஜி. ஆர்.
    அவர்களே பல முறை இதனை கூறி இருக்கிறார். மேலும், திரு. சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த " தில்லானா மோகனாம்பாள் " திரைப்படத்தை அயல் நாட்டு
    கலைஞர்கள் மற்றும் மற்றும் குழுவினர் தமிழகம் வந்த போது அவர்களுக்கு திரையிட்டு காண்பித்த பெருந்தன்மை எங்கள் கலைவேந்தனுக்கு உண்டு. சில
    சாதனைகள் செய்து உள்ளார் .நம்புகிறோம் .

    தமிழகத்தின் 7 அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படம் :"எங்கள் வீட்டு பிள்ளை" புரட்சித் தலைவர் எம். ஜி.ஆர். அவர்கள் 1977ம் ஆண்டில்,
    திரையுலகை விட்டு விலகும் வரை இந்த சாதனை முறியடிக்கப்பட வில்லை. அவ்வாறே 25 அரங்குகளில் (தமிழகம், கர்நாடகம், இலங்கை உட்பட) 100 நாட்கள் ஓடிய கலைவேந்தனின் காவியம் "உலகம் சுற்றும் வாலிபன்" சாதனையும் முறியடிக்கப்படவில்லை.

    சென்னை மாநகரில் குளிர் சாதன வசதி பொருந்திய சாந்தி அரங்கில் வெளியிடப்பட்ட பல படங்களின் அதிக நாட்கள் வசூலை மிக குறுகிய நாட்களிலேயே
    எங்கள் மக்கள் திலகத்தின் "ரிக்ஷாக்காரன்" படம் முறியடித்தது. அதே போன்று அந்த காலத்தில், சென்னை "சத்யம்" அரங்கில் வெளியான அனைத்து
    படங்களின் வசூலையும், புரட்சித்தலைவரின் "இதயக்கனி" திரைப்படம் முறியடித்து ஒரு புதிய சகாப்தத்தை படைத்தது.

    இவ்வளவு ஏன் ? திரு. சிவாஜி கணேசன் அவர்களை வைத்து பல படங்களை தயாரித்த திரு. முக்தா சீனிவாசனே, பல நடிகர்களின் பல வெற்றிப்படங்களை, மக்கள் திலகத்தின் சாதாரண படங்களே புறந்தள்ளிவிட்டதை "இதயக்கனி" வெற்றி விழாவில் குறிப்பிட்டு பேசி உள்ளார். இத்தனைக்கும், அவர் ஒரு கரை கண்ட மூத்த சினிமா தயாரிப்பாளர். (புரட்சித் தலைவர் அவர்களை வைத்து எந்த படமும் தயாரிக்காதவர் என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது)

    எங்கள் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் நடிக்க வந்த காலம் தொட்டு எதிர்ப்பிலேயே வளர்ந்தவர். அவருக்கு, ஆதரவான - சாதகமான சூழ்நிலைகள்
    என்று பார்த்தல் சொற்ப வருடங்களே ! (1967 - 1971 வரை) அரசியலில் அவர் தி.மு.க. வை சார்ந்திருந்த காரணத்தால் அன்றைய ஆளும் காங்கிரஸ் ஆட்சியின் தொந்தரவுகளும் இருந்தன. தொடர்ந்து, 1972ம் ஆண்டு முதல் 1976 வரை அவர் சந்திந்த இன்னல்களும், கொடுமைகளும் என்னென்று சொல்வது) (நேற்று-இன்று-நாளை மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் இந்த இரு படங்களையும் அவர் வெளியிடுவதற்கு அவர் பட்ட பாடு இருக்கிறதே ... அப்பப்பா சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. வேறு எந்த நடிகராக இருந்திருந்தால், நமக்கு திரையுலகமும் வேண்டாம், அரசியலும் வேண்டாம் என்று அந்தர் பல்டி அடித்து ஓடியிருப்பார்கள் அல்லது சரணாகதி அடைந்திருப்பார்கள். இதில் பாராட்ட வேண்டிய அம்சம் என்னவென்றால் இந்த இரண்டு படங்களும் அன்றைய ஆட்சியாளர்களின் அடக்கு முறையை எதிர்த்து வெற்றிக் கொடி நாட்டியது. )

    1972ம் ஆண்டு புரட்சித் தலைவர் கட்சி ஆரம்பித்த போது, நடிகர் திரு. சிவாஜி கணேசன் அவர்கள் நடிகர் சங்க தலைவராக இருந்தார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக திரு. ஏ. எல். சீனிவாசன் அவர்கள் இருந்தார். அவரது காலத்து நடிகர்கள் பலரும், சக நடிகர் ஒருவர் கட்சி ஆரம்பித்துள்ளாரே என்று அவரை ஆதரிக்கவோ அல்லது குறைந்த பட்சம் ஒரு வாழ்த்து அல்லது பாராட்டி ஓர் அறிக்கையோ விட முன் வராதது துரதிர்ஷ்டமே. அன்றைய ஆட்சியாளர்களை தனி ஒருவராக, ரசிகர்களின் ஆதரவை மட்டுமே நம்பி, எதிர் கொண்டார் எங்கள் தங்கம் எம். ஜி. ஆர். இந்த நிலைமை வேறு ஏதாவது ஒரு நடிகருக்கு ஏற்பட்டிருக்குமாயின், முதல் ஆதரவுக்குரல் எங்கள் புரட்சி தலைவரிடமிருந்து தான் வந்திருக்கும்.

    ஆனால், திரு. சிவாஜி கணேசன் அவர்களுக்கு இது போன்ற எந்த நெருக்கடியும் எந்த காலத்திலும் இருந்ததில்லை. அரசியல் ஆதிக்கவாதிகளின் எதிர்ப்பையே சமாளித்து, மீறி தமிழ் திரையுலகில் வெற்றி பெற்றவர் எங்கள் எம். ஜி. ஆர். என்பதை நாட்டு மக்கள் நன்கறிவர்.

    நான் சிவாஜி கணேசன் அவர்கள் மடியில் தவழ்ந்தவன் என்று இன்று பெருமையுடன் கூறிக்கொள்ளும் திரு. கமலஹாசன் அவர்கள் தனது "ராஜ பார்வை" 100 வது நாள் விழாவில், முதல்வராக இருந்த எங்கள் புரட்சித் தலைவரை சிறப்பு விருந்தினராக அழைத்தார். அவ்விழாவில் உரையாற்றிய எங்கள் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள், " நானும், தம்பி கணேசனும் ஒன்றிலிருந்து நூறு வரை வந்து விட்டோம். எனவே, திரு. கமலஹாசன் அவர்கள் 101லிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்று" இதயந்திறந்து கூறினார். அந்த மேடையில் விழாவில் அழைக்கப்படாத திரு. சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை, தமிழக முதல்வராக இருந்த எங்கள் புரட்சித்தலைவருக்கு.

    எங்கள் புரட்சித்தலைவர் அவர்கள் எதற்கும் அஞ்சியது கிடையாது. எதிரிகளுக்கு தோல்வியை பரிசளித்தே பழக்கப்பட்டவர்.
    முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகி விடவும் முடியாது.

    உங்களைப் போன்றோர் ஏற்றுக் கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ள மறுத்தாலும் சரி, இதுதான் உண்மை. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி. ஆர். சாதனைகள் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டியது. .

    உங்கள் அபிமான நடிகரின் சாதனைகளை நீங்கள் பதிவிட்டுக் கொள்ளுங்கள். எங்கள் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் சாதனைகளை தெரிவிக்கும் போது அதில் குறுக்கீடு செய்வது, விதண்டா வாதம் புரிவது போன்றவைகளால் தான் கருத்து வேறுபாடுகள் எழுகின்றன. எனவே இத்துடன் முடித்துக் கொள்வது நலம் என்று கருதுகிறேன்.

    தொடரலாம் என்று நீங்கள் கருதினால் நானும் பழைய விவகாரங்களை எல்லாம் ஆதாரத்துடன் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். அதற்கு வாய்ப்பு வழங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

    அடங்கொப்புரானே சத்தியமாய் எம். ஜி. ஆர். வசூல் சக்கரவர்த்தி தான். இதை ஒப்புக் கொள்ள மறுத்தாலும் அவர் தான் என்றும் வசூல் சக்கரவர்த்தி !




    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும் .

    கலைவேந்தன்

  7. #1876
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த வார குமுதம் இதழில் வெளியான செய்தி


  8. #1877
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


    நடிகர் ஸ்ரீகாந்த் தயாரிப்பாளராக உயர்ந்திருக்கிறார் . ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் நல்லவர்களும் இருக்கிறார்கள் , கெட்டவர்களும் இருக்கிறார்கள் . நமக்குள் இருக்கும் நம்பியார் வெளியேறினால் எல்லோரும் எம்.ஜி.ஆர்தான் , திரையுலகில் மட்டுமல்ல பொது மக்களிடத்திலும் நல்லவராக பெயர் எடுத்தவர் எம்.ஜி.ஆர் என்கிறார் இவர் .

    11.8.2014 தேதியிட்ட முதல் ஓசை தினசரியில் பிரசுரம் ஆன செய்தி

  9. #1878
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


    செய்தி- தகவல் உதவி:மதுரை திரு. தமிழ் நேசன்

  10. #1879
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    20/03/2011 தேதியிட்ட செய்தி -நகர் முரசு -மதுரை




    செய்தி- தகவல் உதவி:மதுரை திரு. தமிழ் நேசன்

  11. #1880
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    செய்தி- தகவல் உதவி:மதுரை திரு. தமிழ் நேசன்


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •