Page 12 of 401 FirstFirst ... 210111213142262112 ... LastLast
Results 111 to 120 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

  1. #111
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #112
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGR Roop View Post


    1. Anandajothi

    2. En Kadamai

    3. Mugarasi

    4. Kannan en kadhalan

    5. Kudieruntha kovil

    மாறுபட்ட தோற்றங்களிலும் மனதை மயக்கும் மக்கள் திலகம் .... வித்தியாசமான பதிவுகள் வழங்கிய திரு. ரூப் குமார் அவர்களுக்கு நன்றி !.

    திரு. வினோத் அவர்களின், சம்பவத்துக்கு ஏற்றாற்போல், " நினைவூட்டலுடன் " கூடிய பதிவுகள் அளிப்பது அருமை.

    உலகத்திலேய அழகான நடிகராம், ஈடு இணையற்ற நம் இதய தெய்வத்தின் படங்களை சிரத்தையுடன் வடிவமைத்து அற்புதமான பதிவுகள் தொடர்ந்து வழங்கி வரும் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    புதுவை கலியபெருமாள் அவர்களின் புதுமைப் பதிவுகள் போற்றத்தக்கது

    திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களின் வேகமான பதிவுகள் தொடர வேண்டும்.

    திரு. யூகேஷ் பாபு அவர்களின் சுறுசுறுப்புடன் கூடிய விறு விறுப்பான பதிவுகள் பாராட்டுக்குரியது.


    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  4. #113
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    என்னுடைய அனுபம் - நேற்று இன்று நாளை - முதல் நாள் முதல் காட்சி.

    12..7. 1974

    வேலூர் - லக்ஷ்மி அரங்கம்

    11.7.1974 இரவு மக்கள் திலகத்தின் ரசிகர்கள் லக்ஷ்மி திரை அரங்கில் ஒன்று கூடி விட்டனர் . அன்றைய இரவே காவல் துறை யினரும் பாது காப்பிற்கு குழுமியிருந்தனர் . ரசிகர்களும் கட்டு கோப்பாக தோரணங்கள் - ஸ்டார் கட்டினார்கள் . அதிமுக கொடிகள் வேலூர் ஆபீஸ் லைன்
    முழுவதும் அலங்கரிக்கப்பட்டு திருவிழா போல் அந்த சாலை காட்சி அளித்தது .

    12.7.1974 அன்று காலை 8 மணியளவில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் வகையில் ஏராளமான பொது மக்களும் ரசிகர்களும் கூடி விட்டதால் காவல் துறையினர் மிகவும் சிரமபட்டு ஒழுங்கு
    படுத்தினார்கள் .

    எம்ஜிஆர் மன்ற சிறப்பு காட்சி காலை 8 மணிக்கு துவங்கியது . ரசிகர்கள் ஆரவாரத்துடன் அரங்கில் உள்ளே படத்தை காண ஆவலுடன் இருந்த நேரத்தில் படம் துவங்கியது .
    மக்கள் திலகம் அறிமுக பாடல் ''பாடும்போது நான் தென்றல் காற்று '' காட்சியில் ரசிகர்கள் தங்களை மறந்து கைதட்டி விசில் அடித்து உற்சாகத்துடன் படம் முழவதும் ஆராவாரத்துடன்
    பார்த்த என்னை போன்றவர்களுக்கு ஒரு இனிய திரு நாள் .

    எல்லா பாடல் காட்சிகளிலும் , அரசியல் நெடி வசனங்கள் பேசும் காட்சிகளிலும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தார்கள் .மக்கள் திலகம் நீக்ரோ டாக்டராக தோன்றும்காட்சிகளில்
    கைதட்டல்கள் அபாரமாக இருந்தது .

    உலகம் சுற்றும் வாலிபனுக்கு பிறகு ரசிகர்கள் தங்களை மறந்து காட்சிக்கு காட்சி பரவசமடைந்து
    ரசித்து பார்த்த படம் .மக்கள் திலகத்தின் அட்டகாசமான நடிப்பு - இனிமையான பாடல்கள் - புதுமையான சண்டை காட்சிகள் என்று விருந்தாக அமைந்தது .

    லக்ஷ்மி அரங்கில் தொடர்ந்து 56 காட்சிகள் நிறைந்தது குறிப்பிடத்தக்கது .

  5. #114
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  6. #115
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் திரி பாகம் 10 மூலம் அன்பர்களுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இத்திரியினில், சாதனைகள் பல படைத்திட்ட பொன்மனசெம்மலை பற்றிய செய்திகளை, எனக்கு தெரிந்த வரை, பதிவிடுகிறேன் என்று தெரிவித்து கொள்கிறேன்.

    என்னை வரவேற்று பதிவுகளிட்ட திரு. வினோத், பேராசிரியர் செல்வகுமார், திரு. ராமமூர்த்தி, திரு. லோகநாதன், திரு. ரவிச்சந்திரன், திரு. புதுவை திரு. கலியபெருமாள், திரு. ரூப்குமார், திரு. யூகேஷ் பாபு ஆகியோருக்கு என் நன்றி !

    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

    அன்புடன் : கலைவேந்தன்

  7. #116
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1966 ஆண்டில் இந்திய திரைப்பட வரலாற்றில் மக்கள் திலகத்தின் மாபெரும் சாதனை .

    9 படங்களில் கதாநாயகனாக நடித்து அத்தனை படங்களிலும்
    பல காதல் கீதங்கள் வெற்றி பெற செய்த சாதனையாளர் எம்ஜிஆர் .

    ராஜாவின் பார்வை ... ராணியின் பக்கம் [அன்பே வா ]

    நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான் ..[அன்பே வா ]


    எனக்கும் உனக்கும் தான் பொருத்தம் ...[ முகராசி ]

    முகத்தை மூடி வைத்து கொண்டு ...............[முகராசி]

    என்னென்ன இன்பங்கள் .................................[முகராசி ]


    பாட்டு வரும் ..உன்னை பார்த்து ......[.நான் ஆண்யிட்டால் ]

    உலகமெங்கும் ஒரே மொழி ----- [நாடோடி]

    அன்றொரு நாள் அதே நிலவில் ....[.நாடோடி]

    திரும்பி வா ஒளியே திரும்பி வா - [நாடோடி]

    சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - [சந்திரோதயம் ]

    எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே - [சந்திரோதயம் ]

    கண் பட்டது கொஞ்சம் கை தொட்டது -[ தாலிபாக்கியம் ]

    உள்ளம் ஒரு கோயில் ... கண்கள் [ தாலிபாக்கியம்]

    இப்படியே இருந்து விட்டால் .......[தாலிபாக்கியம் ]


    ஒரே முறைதான் உன்னோடு பேசி ..[.தனிப்பிறவி ]

    நேரம் நல்ல நேரம் ..கொஞ்சம் நெருங்கி ..[தனிப்பிறவி ]

    கன்னத்தில் என்னடி காயம் ........[தனிப்பிறவி]


    முத்தமோ மோகமோ .. தத்தி வந்த ---[பறக்கும் பாவை]

    நிலவென்னும் ஆடை கொண்டாளோ -[பறக்கும் பாவை]

    கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா - [பறக்கும் பாவை ]

    உன்னைத்தானே .. உன்னைத்தானே ...[பறக்கும் பாவை]

    சக்கர கட்டி ராஜாத்தி உன் மனசை[பெற்றால்தான் பிள்ளையா ]


    மேற்கண்ட 22 காதல் பாடல்களை ஆண் குரலில் பாடகர் திலகம் டி .எம் .சௌந்தராஜன் பாடியது குறிப்பிடத்தக்கது .

    அவருடன் சுசீலா - ஈஸ்வரி இணைந்து பாடினார்கள் .
    கண்ணதாசன் - வாலி பாடல் வரிகளில்
    மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் மற்றும் கே .வி . மகாதேவன் இசையினில்

    மக்கள் திலகம் - சரோஜாதேவி

    மக்கள் திலகம் - ஜெயலலிதா

    மக்கள் திலகம் - பாரதி

    மக்கள் திலகம் - காஞ்சனா

    ஜோடி காதல் பாடல்கள் மிகவும் புகழ் பெற்று இன்றும் எல்லா ஊடகங்களிலும் ஏதாவது மேற்கண்ட பாடல்கள் தினமும் ஒளி பரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது

    1966ல் வந்த 9 படங்களில் இடம் பெற்ற இந்த 22 பாடல் காட்சிகளில் மக்கள் திலகத்தின்

    சிறப்பான உடை அலங்காரம்
    எழிலான தோற்றம்
    சுறுசுறுப்பான நடனம்
    மனதை மயக்கும் காட்சிகள்
    நெஞ்சை அள்ளும் பாடல் வரிகள்
    இனிக்க வைக்கும் முக பாவங்கள்

    என்று படத்திற்கு படம் வித்தியாசமாக மக்கள் திலகம் பாடல் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கும் , மக்களுக்கும் கண்களுக்கு விருந்து படைத்தார் .

    மறக்க முடியாத 1966 ஆண்டு மக்கள் திலகத்தின் திரையுலக
    பாடல்கள் காதல் கீதங்கள் மூலம் மாபெரும் சாதனை நிகழ்த்தினார் நம் மக்கள் திலகம் .

  8. #117
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  9. #118
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


  10. Likes ainefal liked this post
  11. #119
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  12. #120
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    " தம்பி வா , தலைமை ஏற்க வா ; நீ ஆணையிடு !
    நான் கட்டுப்பட்டு நடக்கிறேன் என்று திருச்சி மாநாட்டில்
    கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை பேரறிஞர்
    அண்ணா அவர்கள் உங்களிடம் ஒப்படைத்தார்கள் .

    இன்று அதே நம்பிக்கையோடு நானும் அனைத்திந்திய
    அண்ணா தி.மு.க வின் பொதுச்செயலாளர் பொறுப்பை உங்களிடம்
    ஒப்படைக்கிறேன் . அண்ணா தி.மு.க என்பது நான் பெற்ற பிள்ளை .
    கட்சித் தலைமை , ஆட்சித் தலைமை இரண்டும் ஒருவரிடத்திலேயே
    இருத்தல் கூடாது என்ற எண்ணம் உள்ளவன் நான் . எனவே தான்
    பேரறிஞர் அண்ணா அவர்கள் எந்த உணர்வோடு , எந்த நம்பிக்கையோடு , கட்சிப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்தாரோ ,
    அதே உணர்வோடு , நம்பிக்கையோடு உங்களிடம்
    ஒப்படைக்கிறேன் ."

    ( 1977 ல் , புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சர்
    பொறுப்பேற்ற பின்னர் , நடந்த பொதுக்குழுவில் நாவலரை பொதுச்செயலாளர் ஆக்கி ஆற்றிய உரை )

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •