Page 266 of 401 FirstFirst ... 166216256264265266267268276316366 ... LastLast
Results 2,651 to 2,660 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

  1. #2651
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2652
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2653
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்:
    எம்ஜிஆர், தந்த கடிகாரம்: நல்ல ஓவியர் இவர் வரைந்த பாரதியாரின் ஓவியத்தை பார்த்து, "என் அப்பாவைப் பார்த்தது போலிருக்கிறது என, பாரதியாரின் மகள் வியந்ததுண்டு நிறைய நாடகங்கள் எழுதியுள்ளார் இலக்கியவாதியும் கூட. இந்த தலைமுறைக்கேற்ப மகாபாரதத்தை "பாண்டவர் பூமி யாக, ராமாயணத்தை "அவதாரபுருஷனாக, புதுக்கவிதையாக மாற்றித் தந்தவர் "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே பாட்டெழுதியவர், வாலி ஆனால் இசையமைப்பாளர் விஸ்வநாதன், "எனக்காக கண்ணதாசன் எழுதியது என்று தன்னை மறந்து சொன்னாராம். "கற்பகம் படத்தின் "மன்னவனே அழலாமா அத்தை மடி மெத்தையடி பக்கத்து வீட்டு பருவமச்சான் பாடல்கள், வெற்றியைத் தந்தது. டிஎம்எஸ்,க்காக ஒரு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பிய பாடல் தான், "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்.

    கலங்கரை விளக்கம் படத்திற்கு, எம்எஸ்விஸ்வநாதன் மெட்டு அமைத்திருந்தார் அப்போது எம்ஜிஆர், வாலியிடம், "15 நிமிடத்திற்குள் இந்த மெட்டுக்கு பாட்டு எழுதினால், என் கைக்கடிகாரத்தை தருகிறேன் என்றார் சொன்ன நேரத்திற்குள், "காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்றெழுதியதும், எம்ஜிஆர், கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார். மூன்று முறை அவரை சந்தித்துள்ளேன் சமீபத்தில் கூட சென்னைக்கு சென்று, குடும்பத்துடன் ஆசீர்வாதம் வாங்கினேன்

  5. #2654
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    விஸ்வநாதன் ராமமூர்த்தியிடம் வந்து சேர்ந்தது வாலியின் அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும். தெய்வத்தாய்க்கு அடுத்து அதே 1964-ல் வாலி தம்மை ஒரு முழுமையான கவிஞராக நிரூபித்த படம் படகோட்டி. படகோட்டியின் அத்தனைப் பாடல்களுக்கும் சொந்தக்காரர் வாலிதான். வாலியின் மிகவும் சிறந்த பாடலாகப் பேசப்படும் ‘தரைமேல் பிறக்கவைத்தான்’ பாடலும் ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ பாடலும் படகோட்டியில்தான் வந்தன. அதிலும் ‘தரைமேல் பிறக்கவைத்தான்’ தனித்து நின்றது. இது வெறுமனே சினிமாவுக்கான ஒரு பாடல் என்பதைத்தாண்டி தினமும் கடலில் மீன்பிடிக்கச் சென்றுவரும் ஒரு மீனவனின் உடலுக்குள் புகுந்து அவனுடைய உதிரமாய் உணர்வுகளாய் வெளிவந்த ஒரு பாடலாகத்தான் இந்தப் பாடலைச் சொல்லவேண்டும். இந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களும் வாலியை இன்னமும் பல படிகளுக்கு மேலே உயர்த்தின. பி.சுசீலாவின் குரலில் ‘என்னை எடுத்து தன்னைக்கொடுத்து போனவன் போனாண்டி’ பாடல், மனதின் ஏக்கங்களைக் கடல் அலைகள் போல் வாரி வாரி அடித்தது. ‘அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம்’ பாடலும் சற்றே கொண்டாட்ட லாகிரியுடன் இசைக்கப்பட்டிருந்தது.


    ஆனால் படகோட்டி படத்தின் பாடல்கள் டிஎம்சௌந்தரராஜனுக்கானவை. ‘தரைமேல் பிறக்கவைத்தான்’ தொடங்கி ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ மற்றும் ‘நானொரு குழந்தை நீயொரு குழந்தை’ ஆகிய பாடல்கள் கிறங்கடித்தன (இப்போதும் எனக்கு மிகவும் பிடித்த பத்து பாடல்களை வரிசைப்படுத்தினால் தவறாமல் இடம்பெறும் பாடல், ‘நானொரு குழந்தை நீயொரு குழந்தை’). ‘கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்’ பாடலில் கொண்டாட்டத்தையும் குதூகலத்தையும் தம்முடைய அற்புதக் குரலில் அனாயாசமாகக் கொண்டுவந்திருப்பார் டிஎம்எஸ். ‘தொட்டால் பூ மலரும்’, ‘பாட்டுக்குப் பாட்டெடுத்து’ ஆகிய இரண்டு பாடல்கள் டிஎம்எஸ்ஸூம் பி.சுசீலாவும் சேர்ந்து மறக்கமுடியாத பாடல்களாகச் செய்திருந்தனர்.
    படகோட்டிக்கு அடுத்து வாலி ஸ்கோர் செய்தது ‘எங்க வீட்டுப் பிள்ளை’யில்தான். அதற்கும் முன்னதாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கண்ணதாசன் மற்ற பாடல்களை எழுதியிருக்க வாலியின் “பருவம் எனது பாடல்” பாடலும், “ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை” பாடலும் புகழ்பெற்றன. அடுத்து வந்த படம்தான் எங்க வீட்டுப் பிள்ளை. 1965-ல் வந்த இந்தப் படம்தான் வாலியை இன்றுவரை நினைக்கும் அளவுக்குத் தூக்கி நிறுத்தியது.

    அதுவரை வசூல் மன்னனாகவும், மக்களை வசீகரிக்கிற நடிகராகவும் மட்டுமே விளங்கிய

    எம்ஜிஆர் என்ற அந்த மனிதர் அரசியல் அந்தஸ்து பெறவும் அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களின் குறைகள் யாவும் தீர்க்கப்பட்டு சுபிட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்கவும், மனதுக்கு உகந்தவராக இருந்த ஒருவரை மக்கள் தலைவராக மாற்றவும் முதன் முதலாக வெற்றிகரமாக ஊன்றப்பட்ட விதையாக வாலியின் ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ பாடல் இந்தப் படத்தில்தான் இடம் பெற்றது.

    courtesy - net

  6. #2655
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. #2656
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆரின் கலங்கரை விளக்கம் படத்தில் ‘என்னை மறந்ததேன் தென்றலே’, ‘பொன்னெழில் பூத்தது புதுவானில்’ ஆகிய புகழ்பெற்ற பாடல்கள் பஞ்சு அருணாசலம் இயற்றியவை. வாலி எழுதிய ‘நான் காற்று வாங்கப்போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்’, ‘என்ன உறவோ என்ன பிரிவோ’, ‘பல்லவன் பல்லவி பாடட்டுமே’ மூன்று பாடல்களும் இசை ரசிகர்களைக் கொண்டாடவைத்த பாடல்கள். இந்த இடத்தில் இன்னொரு தகவலையும் சொல்லவேண்டும். விஸ்வநாதன் ராமமூர்த்தி பிரிந்ததாகச் சொல்லப்பட்ட ‘ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்’ படத்திற்கு அடுத்து உடனடியாய் வந்த படங்கள் குழந்தையும் தெய்வமும், கலங்கரை விளக்கம், நீலவானம், நீ………………. ஆகியன. அதனால் இந்தப் படங்கள் இருவரும் சேர்ந்து இசையமைத்து வெளியாகாமல் இருந்து பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதனால் விஸ்வநாதன் பெயரில் வந்தன என்றும் சொல்லப்படுவதுண்டு. அதுபற்றிய விளக்கத்தை எம்எஸ்வியோ அல்லது ராமமூர்த்தியோ இதுவரை சொன்னதில்லை. ஆனால் கலங்கரை விளக்கம், குழந்தையும் தெய்வமும் பாடல்களை வைத்துப் பார்க்கும்போது இருவரும் சேர்ந்து இசையமைத்த படங்களே என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.
    எது எப்படியோ, எம்எஸ்வி முழுக்க முழுக்க ‘தனியாக’ இசையமைத்து வெளிவந்த படம் ‘அன்பே வா’தான் என்று சிலர் சொல்வார்கள். (தொடரும்)

  8. #2657
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் தொண்டன் .... பொன்மனச்செம்மல்!!!

    அதிமுக பேரியக்கம் கோட்டையில் கோலோச்ச துவங்கிய காலம், புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் முதன்முறையாக முதல்வராக முடிசூட்டிய நேரம்...,
    தன் உற்ற நண்பன், சென்னை முருகன் திரையரங்க உரிமையாளர் பரமசிவமுதலியார், உடல்நலம் விசாரிக்க முதல்வர் மக்கள்திலகம் காரில் செல்கிறார்... முதல்வரின் கார் ஓட்டுனர் கவனக்குறைவால் பிரதான வீதியிலிருந்து விலகி தங்கசாலை மேம்பாலத்திலிருந்து கார் இடப்புறச் சாலையில் பயனிக்கிறது..., முன் சென்ற பாதுகாப்பு வாகனம் வலப்புறம் திரும்பி சென்றதை கவனிக்கவில்லை முதல்வரின் கார் ஓட்டுநர்..

    முதல்வரின் கார் எந்த தடையுமின்றி செல்கிறது, இளையமுதலி தெரு சந்திப்பு, அந்த தெரு முழுவதும் ஆங்காங்கே குண்டும் குழியும் சேரும் சகதியுமாய் நிரம்பி வழிகிறது.
    முதல்வரின் கார் ஒட்டம் ஒரிடத்தில் தடைபடுகிறது, ஒரு சகதிக்குழியில் வலப்புற பின்சக்கரம் சிக்கிக்கொள்கிறது... ஓட்டுநர் செய்வதறியாது திகைக்கிறார்.
    பொன்மனச்செம்மல் காரை விட்டு இறங்குகிறார். அவ்வளவுதான் ரோஜா மலரை சுற்றி மொய்க்கும் தேனீக்களாய் மக்கள் கூட்டம் சூழ்ந்து கொள்கிறது.

    பட்டப்பகலில் பூரணசந்திரனை பார்த்து மக்கள் குதூகலிக்கிறார்கள்.
    புரட்சித்தலைவர் வாழ்க, வாழ்க் கோஷம் விண்ணதிருகிறது..
    மக்கள் அப்படியே சொக்கிபோய் நிற்கின்றனர்...
    உற்சாகமாக கையசைக்கிறார் பொன்மனச்செம்மல்..
    பார்க்கிறார்கள், பார்க்கிறார்கள் பார்த்துக்கொண்டே இருக்கின்றனர் மக்கள்..

    ஓட்டுநர் செய்வதறியாது தவிக்கிறார், சுழ்நிலையை புரிந்துக்கொண்ட சிலர் முயற்சியால் கார் நகர்த்தி வைக்கப்படுகிறது. காரில் ஏறி கையசைத்து கிளம்புகையில் பொன்மனச்செம்மல் முகத்தில் ஒரு வாட்டம், முகம் மாறுபடுகிறது..

    அப்போதைய நிகழ்ச்சிகள் முடிந்ததும் நேராக அலுவலகம் செல்கிறார், துறை அதிகாரிகள் உடனடியாக கூட உத்தரவு இடுகிறார்.
    காலையில் கார் சிக்கிய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு ஐசரி வேலனையும் அழைக்கிறார்.

    அன்றைய கட்டத்தில் சென்னையில் அதிமுக வென்ற ஒரே தொகுதி ராதாகிருஷ்னன் நகர் தொகுதி, அதிமுக வின் செல்லபிள்ளை அந்த தொகுதி, அதன் பிரதிநிதி நடுங்கிக்கொண்டே முதல்வர் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    முதல்வர் ஐசரிவேலனிடம் சென்னையில் இப்படி ஒரு பின்தங்கிய இடமா, சீரழிந்த சாலையா?? என் கவனத்துக்கு ஏன் இதுநாள் வரை கொண்டுவரவில்லை என்று கடிந்துகொள்கிறார்.
    என்ன செய்வீங்களோ தெரியாது அந்த தெரு உடனடியாக சீர் செய்யனும், அந்த பகுதி மேம்படனும் என்று உத்தரவு பிறப்பிக்கிறார்.

    மக்கள் பகலில் தோன்றிய சந்திர தரிசனத்தை கண்டு மெய்மறந்துதான் நின்றனர். மக்கள்திலகத்தை பார்த்தனர், பார்த்தனர், பார்த்துக்கொண்டே இருந்தனர்...
    கோரிக்கை எதையும் வைக்கவில்லை, வைக்கவும் மனமில்லை அவர்களுக்கு..
    ஆனால் தெய்வம் மக்களின் வரவேற்பை மட்டும் கவனிக்கவில்லை, அந்த பகுதியின் சுகாதார சீர்கேட்டைதான் உற்று நோக்கியது.அதற்கு தீர்வுகாணவேண்டும் தீர்க்கமான எண்ணம்தான் அந்த நேரத்தில் பொன்மனச்செம்மலின் மனதில் தோன்றியது..
    இவர்தான் மக்கள் தலைவன், மக்கள் திலகம்.



    courtesy net

  9. #2658
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எங்க வீட்டுப் பிள்ளை படத்திற்கு அடுத்து எம்ஜிஆர் படங்களுக்கு வாலிதான் என்று அமைந்துவிடுகிறது.

    அடுத்து வருகிறது ‘பணம் படைத்தவன்.’ இதில் மொத்தம் ஏழு பாடல்கள். ஏழு பாடல்களில் ஆறு பாடல்கள் பட்டையைக் கிளப்புகின்றன. முக்கியமானவை இரண்டு பாடல்கள். ஒன்று – ‘கண்போன போக்கிலே கால்போகலாமா’, இரண்டாவது ‘தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை’. இந்த இரண்டு பாடல்களையும் கண்ணதாசன்தான் எழுதினார் என்றே இன்னமும் லட்சக்கணக்கானோர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இல்லை இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவர் வாலி.

    அதிலும் ‘தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்’ என்ற ஒற்றை வரியில் காதலனின் பிரிவு நுட்பத்தைச் சொல்லும் இடத்தில் வாலி மிக உயரத்தில் நிற்கிறார் என்பதை உரத்துச் சொல்லவேண்டியிருக்கிறது.

    கண்போனபோக்கிலே கால்போகலாமா என்பதும் வாலியின் பெயர் சொல்லும் மிகச்சிறப்பான பாடல்களில் ஒன்று. இந்தப் படத்தின் மற்ற பாடல்கள்…………’அந்த மாப்பிள்ளே காதலிச்சான் கையப் புடிச்சான்’, ‘பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்’, ‘மாணிக்கத்தொட்டில் இங்கிருக்க’, அடுத்தது ‘எனக்கொரு மகன் பிறப்பான்’……………….இதில் எனக்கொரு மகன் பிறப்பான் பாடல் எம்ஜிஆரின் எதிர்ப்பாளர்களால் பரிகாசத்துக்கும் கேலிக்கும் ஆளான பாடல் என்பதையும் குறிப்பிடவேண்டும். எம்ஜிஆருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாததை வைத்து அவருக்கு எதிரணியில் இருந்தவர்கள் இந்தப் பாடலைச் சொல்லி எம்ஜிஆரின் ரசிகர்களைச் சீண்டுவதும் பதிலுக்கு எம்ஜிஆர் ரசிகர்கள் ஆவேசமாகச் சீறுவதும், அங்கங்கே சண்டைகளும் கைகலப்புகளும் நிகழவும் காரணமாயிருந்திருக்கின்றன. மீண்டும் சொல்கிறேன், பாடல்களின் ‘தாக்கம்’ அப்போதெல்லாம் எந்தளவுக்கு இருந்தது என்பதைக் குறிப்பிடுவதற்காகத்தான் இதையெல்லாம் இங்கே சொல்லவேண்டியிருக்கிறது.

  10. #2659
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post
    ஒரிஜினல் நரசிம்ம பல்லவர் இவ்வளவு அழகாக இருப்பாரா என்று தெரியவில்லை

    அனைவரும் மயங்கும் பேரழகும், பிரகாசமும் கொண்ட நம் பொன்மனச்செம்மல் அழகின் ஓரம் எவரும் வர வாய்ப்பே இல்லை.

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  11. #2660
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •