Page 272 of 401 FirstFirst ... 172222262270271272273274282322372 ... LastLast
Results 2,711 to 2,720 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

  1. #2711
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    Victory-m.g.r

    1974ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் '' படம் மதுரையில் 200 நாட்கள் - நெல்லைநகரில் வெள்ளி விழா ஓடியது . உரிமைக்குரல் -மக்கள் திலகத்தின் கடைசி வெள்ளி விழா படம் .


    மக்கள் திலகம் மறைவிற்கு பின்னர் சென்னை - சரவணா அரங்கில் எம்ஜிஆர் வாரம் தொடர்ந்து 15 வாரங்கள் திரையிடப்பட்டு 105 நாட்கள் ஓடியது .


    தூத்துக்குடி - சத்யா அரங்கில் 100 வாரங்கள் தொடர்ந்து மக்கள் திலகத்தின் பல படங்கள் வெளிவந்துசாதனை புரிந்தது .


    2014ல் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - டிஜிடல் மாற்றத்துடன் வெளிவந்து சென்னை நகரில் வெள்ளி விழா காண்பது உண்மையிலே வரலாற்று சாதனை .ஆயிரத்தில் ஒருவன் - வெள்ளி விழா வெற்றிக்கு காரணமான அனைத்து எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் -உறுப்பினர்கள் மற்றும் திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் - திரை அரங்கு உரிமையாளர்கள் - பாராட்டுக்குரிவர்கள் .
    எம்ஜிஆர் என்றால் சாதனை . சாதனை என்றால் எம்ஜிஆர் . மீண்டும் உறுதியாகியுள்ளது .

  2. Likes ainefal liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2712
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    THANKS RAMAMOORTHI SIR

  5. #2713
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    CHENNAI - PARAGON THEATER- MAKKAL THILAGAM MGR FANS WITH MGR MAGAZINE.1970

  6. #2714
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  7. #2715
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    ஏற்கனவே பல பத்திரிகைகளில் இந்த புகைப்படம் வெளிவந்திருந்தாலும் மீண்டும் இன்றைய தமிழ் ஹிந்து தினசரி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது


  8. #2716
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-
    அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.



  9. #2717
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இயக்குனர், தயாரிப்பாளர், கதையாசிரியர் என பன்முகம் கொண்டவர் வி.சி.குகநாதன், எம்ஜிஆரால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர் , திரைப்படத்தின் இசையை வெளியிட்டுப் பேசினார்.

    “நான் பள்ளியில் படித்த காலத்தில் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகனாக இருந்தேன். ஒரு முறை அவருடைய படங்களைப் பார்த்து அவருக்கு கடிதம் எழுதினேன். தங்களைப் பார்க்க எனக்கு அனுமதி அளித்து நேரம் தருமாறு கேட்டிருந்தேன்.
    அதற்கு அவருடைய உதவியாளர் பதிலளித்தார். நீங்கள் நேரில் வரவேண்டாம், உங்கள் ஊருக்கு அவர் வரும் போது நீங்கள் சந்திக்கலாம் என்றார்.

    ஆனால், அவரைச் சந்திக்கும் நாட்கள் எனக்கு உடனே கிடைத்தது. பள்ளிப் படிப்பு முடிந்து பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த போது, ஒரு விழாவிற்கு அவரை அழைத்து வர சந்தர்ப்பம் கிடைத்தது.

    அந்த விழா முடிந்ததும், அவரிடம் எனக்கு நடிக்கும் ஆசை உள்ளது, வாய்ப்பு கிடைக்குமா என கேட்கலாம் என்றிருந்தேன். ஆனால், அவரை நேரில் பார்த்ததும், அவருடைய அழகுடன் என்னை ஒப்பிட்டுப் பார்த்து, அந்த ஆசையையே அறவே வெறுத்தேன்.

    அவர் படிப்பைத் தவிர வேறு என்ன தெரியும் என்று என்னிடம் கேட்ட போது, கதை எழுதுவேன் என்றேன். உடனே, அவருக்கு ஒரு கதை எழுதித் தருமாறு கேட்டார்.

    சில நாட்கள் கழித்து, அவரிடம் போய் ஒரு கதை சொன்னேன். ஆனால், அந்த கதை பெண்களை மையப்படுத்திய கதை. எனக்காக நீ கதை எழுத வேண்டுமென்றால் இப்படியா எழுதுவாய் என்றார். நானும் சில நாட்கள் சந்தர்ப்பம் கேட்டு, நான்கு நாட்கள் கழித்து வேறு ஒரு கதையுடன் சென்றேன்.

    அந்த கதைதான் ‘புதிய பூமி’ திரைப்படமாக வெளிவந்தது. என்னை முதன் முதலாக திரையுலகில் ஒரு கதாசிரியராக அறிமுகப்படுத்தியது அவர்தான்.

    அதன் பின் ஒரு நாள் என்னை சந்திக்க தயாரிப்பாளர் கோவை செழியனை, எம்ஜிஆர் அவர்கள் அனுப்பி வைத்தார். அவர் நேராக வகுப்பறைக்கு வந்து பேராசிரியடம், உங்களைப் பார்க்கத்தான் நான் வந்தேன் என்றார். அவரோ என்னையா என்று கேட்டார். நீங்கள்தானே வி.சி.குகநாதன் என்றார். அவரோ, நானில்லை, குகநாதன் இந்த வகுப்பின் மாணவன் , என்று என்னை அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தார்.

    கோவை செழியன் அவர்களுக்கு மிகவும் ஆச்சரியம். ஒரு கல்லூரி மாணவரைப் பார்க்க எம்ஜிஆர் நம்மை அனுப்பி இருக்கிறாரே
    என்று.அவருக்கு நான் சொன்ன கதைகளில் ஒன்றுதான் பின்னர் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘குமரிக்கோட்டம்’ திரைப்படம்.எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட நான் அதன் பின் பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட கதைகளை திரைப்படங்களுக்காக எழுதியிருக்கிறேன்.

    ஒருவரிடத்தில் உள்ள திறமையை, அத்துடன் நிறுத்திக் கொள்ள வைக்காமல், அவர் மேலும் வளர்வதற்கு வாய்ப்புத் தரும் ஒரே மனிதர் எம்ஜிஆர் அவர்கள்.அவர் ஏற்றி வைத்த விளக்குதான் இன்று வரை என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது, ” என்றார்.

  10. #2718
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    1974ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் '' படம் மதுரையில் 200 நாட்கள் - நெல்லைநகரில் வெள்ளி விழா ஓடியது . உரிமைக்குரல் -மக்கள் திலகத்தின் கடைசி வெள்ளி விழா படம் .


    மக்கள் திலகம் மறைவிற்கு பின்னர் சென்னை - சரவணா அரங்கில் எம்ஜிஆர் வாரம் தொடர்ந்து 15 வாரங்கள் திரையிடப்பட்டு 105 நாட்கள் ஓடியது .


    தூத்துக்குடி - சத்யா அரங்கில் 100 வாரங்கள் தொடர்ந்து மக்கள் திலகத்தின் பல படங்கள் வெளிவந்துசாதனை புரிந்தது .


    2014ல் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - டிஜிடல் மாற்றத்துடன் வெளிவந்து சென்னை நகரில் வெள்ளி விழா காண்பது உண்மையிலே வரலாற்று சாதனை .ஆயிரத்தில் ஒருவன் - வெள்ளி விழா வெற்றிக்கு காரணமான அனைத்து எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் -உறுப்பினர்கள் மற்றும் திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் - திரை அரங்கு உரிமையாளர்கள் - பாராட்டுக்குரிவர்கள் .
    எம்ஜிஆர் என்றால் சாதனை . சாதனை என்றால் எம்ஜிஆர் . மீண்டும் உறுதியாகியுள்ளது .


    காலம்தோறும் பாடம் கூறும் மாறுதல் இங்கே தேவை
    ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை
    இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும்
    எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே என்னை ஆளும்
    Last edited by saileshbasu; 29th August 2014 at 02:15 PM.

  11. #2719
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னையில் restored, digitized அயிரத்தில் ஒருவன் வெளிவந்து சுமார் 150 நாட்களை கடந்து இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. சத்யம் திரையரங்கில் முதல் தடவை பார்த்த போது பாதி அரங்கு நிறம்பியிருந்தது. போன வாரம் மறுபடியும் போன போது (கொஞ்சம் சிறிய அரங்கு, ஆனாலும்) ஹவுஸ் ஃபுல். சத்தியமா எதிர்பார்க்கவேயில்லை..


    .49 ஆண்டுகளுக்கு முன் 1965-ல் வெளிவந்த படம்., இன்னும் ஹவுஸ்ஃபுல் என்றால் நிச்சயம் ஹிஸ்டரி தான். படம் முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கின்றது. 35mm-ஐ 70mm-ஆ மாற்றும் போது வெகு சில இடங்களில் பல்லிளித்தாலும் அதெல்லாம் குறையே அல்ல. மேலும், படத்தின் பின்னனி இசை முழுவதும் திரும்ப ரீ-ரெக்கார்டிங் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டலில் கேட்பது இன்னும் இனிமை.

    படம் எப்படினு எல்லாம் சொல்ல வேண்டியதில்லை. பழைய படமாச்சே, அதுவும் எம்.ஜி.ஆர். காலத்திய படம். போர் அடிக்கும் என்று இளசுகள் நினைத்தால் மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்காக சொல்லவேண்டுமென்றால் இது ஒரு ஆங்கில படத்தின் தழுவல்.

    வாத்தியாருக்கே உண்டான ஹீரோயிஸம் இருந்தாலும், அவர் நேரடியாக அரசியலுக்குள் நுழைந்த பிறகு வந்த படங்களில் உள்ள ஹீரோயிஸத்தை விட, இப்பொழுது விரல் சுத்துற பசங்க பன்ற ஹீரோயிஸத்த விட ரொம்ப குறைவு. சில இடங்களில் பஞ்ச் தான்.

    "மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?" என்று நம்பியார் கண்ணை உருட்டி ஆக்ரோஷத்துடன் கேட்க, வாத்தியார் கூலாக சொல்வது, "ஹூம். சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்". செம பஞ்ச்.

    அந்த கால எம்ஜிஆர் படங்கள் திரையில் வந்தால் எத்தனை குதூகலம் இருக்கும், ரசிகர்களின் ரியாக்*ஷன் எப்படி இருக்கும் என்ற நமக்கு தெரியாது. தெரிந்து கொள்ள, ஒன்று அந்த காலத்தில் இருந்திருக்க வேண்டும், அல்லது அப்பொழுதைய பழைய வீடியோக்கள் ஏதாச்சும் இருந்திருக்க வேண்டும். இரண்டும் இல்லை. ஆனால், இப்போது கிடைத்திருப்பது ஒரு விதத்தில் பாக்கியம். அந்த கால ரசிகர்கள் இப்பொழுது படத்தை பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம்.

    சுமார் 10 வருடங்களுக்கு முன் என் ஊரில் அலிபாபாவும் 40 திருடர்களும் திரையிட்டிருந்தார்கள். சும்மா ஒரு சேஞ்சுக்கு அந்த படம் போனேன். தியேட்டர் ஹவுஸ்ஃபுல். செம கூட்டம். படம் ஆரம்பித்தவுடன் ஒருத்தர் கை நிறைய கற்பூரம் கொண்டு வந்து ஸ்க்ரீன் முன் வைத்து கொழுத்தி விட தியேட்டர்காரங்க அலரிட்டாங்க.

    சத்யம் போன்ற தியேட்டருக்கெ வராதவர்களே குடும்பத்தோடு வந்து பார்க்கின்றனர். நான் பார்க்கும் போது, முதல் வரிசையில் (100 ரூ டிக்கெட்) ஒரு பாட்டி ஒவ்வொரு சீனுக்கும் சிரித்து சிரித்து பார்த்துக் கொண்டிருந்தார். அவரோட சிரிப்பு பின்னிருக்கையில் இருந்து படம் பார்த்த எனக்கே கேட்டது.



    இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அந்த கால ரசிகர்களின் ரசனை உண்மையில் நம் காலத்தை விட மேம்பட்டது. இந்த கால இளசுகளால் புரிந்து கொள்ள சிரமமா இருக்கும் வசனங்களையெல்லாம், வசனம் வரும் முன்னே கைதட்டி ஆரவாரம் செய்துகொண்டிருந்தனர்.

    வாத்தியார் படங்களில் வந்த கத்தி சண்டைகள் பெரும்பாலும் நிஜமானவை. இந்த படம் வந்த காலகட்டங்களில் டூப் .வந்தாலும், எங்கும் டூப் இருப்பது போல் தெரியவில்லை, அதற்கான தேவையும் இல்லை.

    இதையெல்லாம் விட எனக்குகைன்னொரு தடவை படம் பார்க்க வைத்தது, படத்தில் பாடல்கள். 7 பாடல்கள். அத்தனையும் முத்துக்கள். படம் டைட்டிலில் ஒரு பக்கம் வாலியும் இன்னொரு பக்கம் கண்ணதாசன் படம். கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருந்தது.

    டிஜிட்டல் வெர்ஷனில் தியேட்டரில் பாடல்களை கேட்கும் போது சுத்தமாக உறுத்தவில்லை. இன்னும் சொல்லப் போனால் பழைய பாடல்களுக்கே உரிய இசை கொஞ்சம்+வார்த்தைகள் தெளிவு.

    ஜெ-வின் இன்ட்ரோ பாடல் 'பருவம் எனது பாடல்' முதல் கடைசி பாடலான 'அதோ அந்த பறாவை போல' வரை சூப்பர் சூப்பர் சூப்பர்ஜி.

    இரண்டு பாடல்களை குறிப்பிட வேண்டும்.

    1. 'உன்னை நான் சந்தித்தேன்' என்று சட்டென்று சுசீலா குரலில் இன்ட்ரோ இசை இல்லாமல் பாடல் வரி ஆரம்பிப்பது நச்.

    2. 7 பாடல்களில் எனக்கு கடைசியா சுமாரா பிடித்த பாடல் 'நானமோ' பெரும்பாலும் கேட்க மாட்டேன். ஆனால், இங்கே கேட்கும் போது, முதல் 5 செகன்ட் ஒரு வாத்தியம் வந்து நிறக; 'சடாரென்று' டெம்பொவை ஏத்தும் அடுத்த பத்து செகன்ட், அதுவும் 'தியேட்டரில்' கேட்கும் போது, ரியலி வொன்டர்புல். கேட்டு பாருங்க.

    இந்த படம் நிச்சயம் அந்த கால ஜாம்பவான்களின் மெகா கூட்டணி. எம்ஜிஆர்+ஜெ+நம்பியார்+நாகேஷ்+கண்ணதாசன்+வாலி+டிஎமெஸ ்+சுசீலா+விசு ராமு+பந்துலு. வேறென்ன வேண்டும்?

    நிச்சயம் மறக்க முடியாத அனுபவம். ட்ரை பன்னி பாருங்க. உங்க 120 ரூ கண்டிப்பா வொர்த். வேறென்ன சொல்ல...?

    courtesy- net

  12. #2720
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    HISTRORY RETURNED....

    COURTESY - THE HINDU - TODAY

    MGR’s 1965 classic Aayirathil Oruvan, directed by B.R. Panthulu and released earlier this year in a digitally-enhanced format, will soon be celebrating its silver jubilee as the film closes in on the 175 day of its theatrical run in a couple of screens in the city.

    The silver jubilee celebrations promise to be a bonanza for MGR fans with a gala event to be organised at Kamarajar Arangam on Monday.

    Leading actors and filmmakers such as Sarath Kumar, Sathyaraj, P. Vasu and Vikraman, who have declared themselves die-hard fans of Puratchi Thalaivar are slated to attend the event.

    G. Chockalingam of Divya Films, who restored the film in a digital format, thanked all the active fan associations of MGR for making the silver jubilee possible.

    In keeping with an old tradition of sorts, fans of MGR have ensured that the film has matched and even surpassed the record set by Sivaji Ganesan’s Karnan, which too was digitally restored a few years ago.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •