Page 351 of 400 FirstFirst ... 251301341349350351352353361 ... LastLast
Results 3,501 to 3,510 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #3501
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Thanks eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3502
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes kalnayak, Russellmai liked this post
  6. #3503
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Yukesh Babu. It is really the rarest of rare photos...how resourceful you are in keeping such precious gems with you!! It is really a good contribution since this photo can indicate a nostalgia on many unspoken things. However, it could have been better and this exhibit becomes more meaningful if you have added some script as regards the situation and significance to this timeless asset and legend. Kudos to your continued efforts to keep pace between our threads in order to churn out the cream in an optimistic way.

    regards,, senthil
    Last edited by sivajisenthil; 7th January 2015 at 08:19 AM.

  7. #3504
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    பட்டையைக் கிளப்பும் (pk) நடிகர்திலகம்!
    நடிப்பிமையத்தின் நெருங்க முடியாத நடிப்பு சிகரங்கள்(peak)s குறுந்தொடர் PART 2 தெய்வமகன்
    தெய்வமகன் திரைப்படத்தில் நடிகர்திலகம் பட்டையைக் கிளப்பி இமயத்தின் சிகரங்களாக்கிய நடிப்பின் கல்வெட்டுக் காட்சிகள்!!!

    பட்டையை கிளப்புதல் (pk )2 : தெய்வமகன் நடிப்பிமைய சிகரம் (peak) 2 : கஞ்சன்ஜங்கா
    தெய்வமகன் திரைப்படத்திலும் புதியபறவை போலவே ஒவ்வொரு காட்சியும் இதயத் திருட்டே ! ஆனாலும் என் மனதில் என்றும் நீங்காமல் ஒருவிதமான அதிர்ச்சி கலந்த சிகரக்காட்சியாக நான் பதிவு செய்தது மூத்தமகன் கண்ணன் பாச ஏக்கங்களுக்கு வடிகாலாக தனது குடும்பத்தைக் காண சென்று உறக்கத்தில் இருக்கும் அன்னையைப் பார்த்த பிறகு தன்னைப்போல் அல்லாது அழகிய தோற்றத்துடன் இருக்கும் தம்பியுடன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாது விளையாட்டாக அவன் தரும் குத்துக்களை மனநிறைவுடன் மகிழ்வுடன் வாங்கிக் கொண்டு திரும்பும்போது
    ......
    தந்தையே தன்னிலை அறியாது திருடனென்று கருதி யாரும் எதிர்பாரா வண்ணம் மகனையே சுடும் காட்சி ! இன்றுவரை என்னால அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை!! நூறுமுறை பார்த்துப் பார்த்து ரசித்து உருகியபடம்தான் ஆனாலும் ஒவ்வொருமுறை இந்தக்காட்சியைப் பார்க்குபோதும் திரையைக் கிழித்துக் கொண்டு உள்ளே சென்று தந்தையார் சிவாஜியின் கையிலிருக்கும் துப்பாக்கியை 'பறக்காஸ்' ஸ்டைலில் தட்டிவிடத் தோன்றும்!!! இந்தக் காட்சியிலும் மூன்று சிவாஜிகளின் வெவ்வேறு வகைப்பட்ட முத்திரை நடிப்புக்களே (மூத்த மகனின் அதிர்ச்சி மேலோங்கிய உடல் மன வேதனை, இளைய மகனின் 'என்ன நடக்குது இங்கே' பாணியிலான பயம் கலந்த அதிர்வு, தந்தையின் இனம் புரியாத தடுமாற்றம்) இப்படத்தின் சிகரமாகும்.



    பட்டையை கிளப்புதல் (pk )2 : தெய்வமகன் நடிப்பிமைய சிகரம் (peak) 3 : நந்தாதேவி

    குழந்தையைக் கொன்றுவிடு என்று தான் சொன்னதை மறுக்கும் டாக்டர் நண்பனை நோக்கி கையை நீட்டி கண்ணைமூடி காலால் தரையை உதைக்கும் காட்சியில் நம் நெஞ்சில் விழுகிறதே அந்த உதை !

    அதே டாக்டருடன் வாக்குவாதம் செய்யும் வளர்ந்த மூத்தமகன் கண்ணன் ஜீன் (மரபணு) குணம் மாறாது அதே பாணியில் கையை நீட்டி காலால் உதைத்து அதகளம் செய்யும் காட்சியில் நம் மனம் படுகிறதே வதை !!

    உலகின் எந்தவொரு கலைஞருக்கும் கிடைக்காத இவ்வகை நடிப்புப் பாக்கியம் நாம் காணப்பெற்றது பூர்வஜென்ம நற்காரியங்களின் பலனே!! அகில உலகமும் சென்று வந்தாலும் இப்படியொரு நடிகமன்னனை இனி எங்கு காண்போம்?


    இக்காட்சியமைப்புக்கான காணொளி கிடைக்காத காரணத்தால் யூ ட்யூப் சென்று முழுபடத்தையே கண்டுகளித்திட வேண்டுகிறேன் !!!

    The End of Part 2, but NT comes down to foothills to celebrate his evergreen nostalgia on Pudhiya Paravai.
    பழைய பறவை போல ஒன்று பறந்தே வந்திடினும் புதியபறவை நமது நெஞ்சம் மறந்து போய்விடுமா?!
    Last edited by sivajisenthil; 8th January 2015 at 01:44 PM.

  8. #3505
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகம் வெற்றி முழக்கமிடும் தர்மம் எங்கே -

    புதிய வரலாறு படைக்க புறப்பட்டு வருகிறான் புரட்சி வீரன் சேகர்

    தர்மம் எங்கே... சகோதரி சாரதா அவர்களுக்குள் எந்த அளவிற்கு ஆக்கிரமித்திருந்தது என்பதை எடுத்துக் கூறும் பதிவு நம்முடைய நடிகர் திலகம் திரி பாகம் 8 பக்கம் 48ல்

    ...
    சாதனைத் திரைப்படங்களின் முதல் வெளியீட்டு தின நினைவுகளைக் கொண்டாடி வரும் வேளையில், எனக்குப்பிடித்த படங்களில் ஒன்றான 'தர்மம் எங்கே' படம் கண்டு கொள்ளப்படாமல் போய்விடுமோ என்று எண்ணியிருந்த வேளையில், அனைவரும் மிக அற்புதமாக நினைவுகூர்ந்து அப்படம் சம்மந்தப்பட்ட விளம்பரங்களையும், ஸ்டில்களையும் அள்ளி வழங்கி, அப்படம் பற்றித்தெரியாத பலருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. முன்பெல்லாம் தர்மம் எங்கே பற்றி யாரும் இங்கே பேசாதபோதும், நானும் முரளியண்ணாவும் அப்படம் பற்றிய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டேயிருப்போம். அதன் தொடர்ச்சிதான் என் வலைப்பதிவில் இடம் பெற்ற அப்படம் பற்றிய ஆய்வுக்கட்டுரை.
    ...
    சகோதரி சாரதா மேற்காணும் பதிவில் குறிப்பிட்டிருந்த அவர்களுடைய வலைப்பதிவிலிருந்து..



    இப்படத்துக்கு நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மத்தியில் '1972ன் திருஷ்டிப்பொட்டு' என்ற் செல்லப்பெயர் உண்டு. காரணம், 1971 இறுதியில் வெளியான 'பாபு' வில் தொடங்கி 1973ல் முதல் படமான 'பாரதவிலாஸ்' வரையில் நடிகர்திலகத்தின் வெற்றிநடை தொடர்ந்தது (அவற்றில் பாபு, ஞானஒளி பட்டிக்காடா பட்டணமா, தவப்புதல்வன் நான்கும் கருப்பு வெள்ளைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது). அவற்றில், 72 மத்தியில் வந்த 'தர்மம் எங்கே' மட்டுமே வெற்றிவாய்ப்பை இழந்தது. அதற்கு முதற்காரணம் (சிவந்தமண், ராஜராஜ சோழன் போல) இப்படத்துக்கு ஏற்பட்டிருந்த அளவுக்கு மீறிய, அபரிமிதமான எதிர்பார்ப்பு, இரண்டாவது காரணம் ஓட்டை விழுந்த திரைக்கதை இவைகளே.

    கதாநாயகன் படம் முழுவதும் வில்லனுடன் போராடி, இறுதியில் அவனிடமிருந்து ஆட்சியை மீட்பதாக இருந்தால் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால் முரளி அவர்கள் சொன்னது போல, இடைவேளையின்போதே பிரதான வில்லன் நம்பியாரிடமிருந்து ஆட்சியைக்கைப்பற்றி விட, அதோடு வில்லன் நம்பியார் தலைமறைவாகிவிட, அதன்பின்னர் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதில் 'மாப்பிள்ளை - மைத்துனன்' சண்டையில் படம் நகர்கிறது. இவ்வளவு பிரமாண்டமான படத்தை இழுத்துச்செல்ல முத்துராமன் எல்லாம் ஒரு வில்லனா?. நல்ல வேளையாக கிளைமாக்ஸில் மீண்டும் நம்பியார் தோன்ற, கொஞ்சம் விறுவிறுப்பு கூடுகிறது.

    தர்மம் எங்கே பற்றி விரிவாக விளக்கமாக எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. எனக்கு மிகவும் பிடித்த படம். அந்த முயற்சி மட்டும் தள்ளிக்கொண்டே போகிறது. காரணம், காட்சிகள் கோர்வையாக வரவேண்டும். படம் பார்த்து வெகுநாட்கள் ஆகி விட்டதால், காட்சிகளை வரிசையாக நினைவுக்கு கொண்டு வருவதில் சற்று சிரமம். ஆனால் படத்தின் முக்கியமான, விசேஷமான காட்சிகளைப்பற்றி எழுதலாம் என்று எண்ணம். இப்படத்தின் வீடியோ கேஸட், அல்லது CD அல்லது DVD எங்குமே கிடைக்கவில்லை. தியேட்டர்களிலும் வெகுநாட்களாக திரையிடப்படவில்லை.

    இப்படம் பற்றி முன்னொருமுறை என் தந்தையுடன் பேசும்போது அவர் சொன்ன தகவல்கள். (தர்மம் எங்கே வெளியான காலத்தில் தனக்கேற்பட்ட உணர்வுகளை அவரே சொல்கிறார். அவர்து வார்த்தைகளில்.. இதோ)

    "நான் கல்லூரிப்படிப்பை முடித்து வேலையில் சேர்ந்த சமயத்தில் வெளியான படம் இது. நாங்கள் (சிவாஜி ரசிகர்கள்) யாருமே பட்டிக்காடா பட்டணமாவோ அல்லது வசந்த மாளிகையோ இந்த அளவு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் எதிர்பார்த்தது 'தர்மம் எங்கே' படத்தைத்தான். ஆனால் இதற்கு முன் வெளியான பட்டிக்காடா பட்டணமா பெற்ற பெரிய வெற்றியைப்பார்த்து, தர்மம் எங்கே படம் அதையெல்லாம் முறியடிக்கும் சாதனைப்படமாக இருக்கப்போகிறது என்று எதிர்நோக்கினோம். அப்போதைய 'மதிஒளி' பத்திரிகையிலும் தொடர்ந்து அந்தப்படத்தின் செய்திகளும், ஸ்டில்களும் வெளியாகி எங்கள் உற்சாகத்துக்கு தீனி போட்டன.

    நடிகர்திலகத்தின் ரசிகர்கள் எல்லாம் மாலையில் அண்ணாசாலை 'சாந்தி' திரையரங்கின் கார் பார்க்கிங் வளாகத்தில் கூடி அப்போதைக்கு ஓடிக்கொண்டிருக்கும் அவருடைய படங்களைப் பற்றி விவாதிப்போம். இந்த நடைமுறை எங்களுக்குப் பிறகும் பல ஆண்டுகளாக தொடர்ந்தது. அப்போது சாந்தியில் 'பட்டிக்காடா பட்டணமா', பக்கத்தில் தேவி பாரடைஸில் 'ராஜா', அதையடுத்த பிளாசாவில் 'ஞான ஒளி' என்று அனைத்தும் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருக்க, 'தர்மம் எங்கே' படம் பற்றித்தான் எங்களுக்குள் ஒரே பேச்சு. இதனிடையே 'ஓடியன்' திரையரங்கில் (தற்போது 'மெலோடி') தர்மம் எங்கே ஸ்டில்கள் வைக்கப்பட்டு விட்டன என்று அறிந்ததும், நாங்கள் கூடும் ஜாகை ஓடியனுக்கு மாறியது. தினமும் மாலையில் கூடி, அந்தப்படத்தைப் பற்றித்தான் பேச்சு. ரிசர்வேஷன் தொடங்கியபோதே படம் வெளியாகும் நாள் போல கூட்டம். மளமளவென டிக்கட்டுகள் பல நாட்களுக்கு விற்று தீர்ந்தன. அப்போதெல்லாம் முதல் வகுப்புக்கு மட்டுமே ரிசர்வ் செய்யப்படும். மற்ற கிளாஸ் டிக்கட்டுகளை காட்சி நேரத்திலேயே கியூவில் நின்று பெற்றுக்கொள்ள வேண்டும்.

    சனிக்கிழமையன்று படமும் வெளியானது. (நடிகர்திலகத்தின் படங்கள் வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகாது, சனிக்கிழமைகளில்தான் ரிலீஸ் ஆகும்). முதல்நாள் முதல் மேட்னிக்காட்சிக்கு போயிருந்தோம்.ரிலீஸ் தினத்தன்று சீக்கிரமே அரங்குக்கு போனோம். (எங்கள் அலுவலகம் சனிக்கிழமை களில் அரைநாள் மட்டுமே). 'ஓடியன்' அரங்கின் இரண்டு பக்கமும் இரண்டு பெரிய கட்-அவுட்டுகள் வைக்கப் பட்டிருந்தன. அது போக கொடிகள், தோரணங்கள், பல்வேறு மன்றங்களின் பேனர்கள். (அப்போதெல்லாம் இதுபோன்ற திருவிழாக்கள் "அந்த இரண்டு ஜாம்பவான்களின்" படங்களுக்கு மட்டும் தான்). மேட்னி ஷோ துவங்கியது. படம் துவங்கியதிலிருந்து ஆரவாரம், கைதட்டல், விசில் பறந்தன. குறிப்பாக முதல் ஒரு மணிநேரம் படம் டெர்ரிஃபிக். நடிகர்திலகத்தின் படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படமாக இருந்தது. அதற்கேற்றாற்போல சூப்பர் வில்லன் நம்பியார், மற்றும் சூப்பர் ஜோடி ஜெயலலிதா. இடைவேளையின்போதே எல்லோர் மனதிலும் ஒரு எண்ணம்... படம் பெரிய வெற்றிதான் என்று. ரசிகர்கள் மத்தியில் உற்சாக கொண்டாட்டம். இடைவேளையின்போது, 'கேட்'டுக்கு வெளியே நின்ற ரசிகர்கள் படம் எப்படி என்று சைகையால் கேட்க, உள்ளே நின்ற ரசிகர்கள் அனைவரும் கட்டை விரலை உயர்த்திக்காட்ட... தியேட்டருக்கு வெளியே அப்போதே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

    ஆனால் இடைவேளைக்குப்பின்னர், படத்தின் போக்கு அப்படியே மாறிப்போனது. நடிகர்திலகத்தின் கதாபாத்திரத்தை கிட்டத்தட்ட ஒரு வில்லன் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டது திரைக்கதை. ஒரு நல்ல் மக்கள் தலைவனாக காட்டாமல், ஒரு அகம்பாவம் பிடித்தவராக காண்பிக்கப்போக ரசிகர்களின் உற்சாகம் குன்றிப்போனது. பொது மக்களும் இப்படி ஒரு கதையின் போக்கை எதிர்பார்க்கவில்லை. போதாக்குறைக்கு, வில்லன் நம்பியாரையும் தலை மறைவாக்கி விட்டனர். படம் தொய்ந்து போனது. படம் முடிந்து வெளியே வந்தபோது ரசிகர்களின் உற்சாகம் காணாமல் போனது. இதனிடையில் படம் நன்றாக இல்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவ, பத்திரிகை விமர்சனங்களும் காலை வாரிவிட.... சரியாக 48 நாட்களில் 'ஓடியன்' அரங்கில் படம் தூக்கப்பட்டு, ஒரு ஆங்கிலப்படம் திரையிடப்பட்டது".

    .........என் தந்தை 'தர்மம் எங்கே' நினைவுகளில் ஆழ்ந்து போனார்.
    இனி எனது விளக்கம் தொடர்கிறது
    ‘தர்மம் எங்கே’ முழுக்ககதையும் வரிசையாக நினைவுக்கு கொண்டுவர முடியாமல் போனாலும், சில முக்கியமான காட்சிகள் நினைவில் வந்துபோகிறது. அதில் சில....

    படத்தின் முன்பாதியில், நள்ளிரவில் சர்வாதிகாரி நம்பியாரின் ஆட்களால் துரத்தப்பட்டு ஓடி வரும் சிவாஜி, பூட்டியிருக்கும் ஒவ்வொரு வீட்டு கதவாக தட்டி, அடைக்கலம் கேட்டுக் கதற, யாருமே கதவைத் திறக்க மறுக்க, தாகத்தால் ஒருவீட்டின் வாசலில் இருக்கும் மண்பானையை எடுத்து வாயில் கவிழ்ப்பார். அதில் சொட்டு நீரும் இல்லாமல் காலியாக இருக்க, சோர்வுடன் தன் வீட்டுக் கதவு கூட பூட்டியிருப்பது கண்டு, கதவைப்போட்டு அடிப்பார், உள்ளே கதவைத் திறக்கவிடாமல் அவருடைய அம்மாவையும், தங்கையையும் (குமாரி பத்மினி) வீட்டிலுள்ளோர் கையைக் கட்டி வாயைப்பொத்தி அமுக்கிப் பிடித்திருப்பார்கள். அதற்குள் துரத்தி வரும் வீரர்கள் நெருங்கி விட, வேறு வழியின்றி காட்டுக்குள் ஓடிப்போவார். இந்த இடத்தில் திரைக்கதையும், சிவாஜியின் நடிப்பும் நம்மை பதை பதைக்க வைக்கும். (நைட் எஃபெக்டில் சூப்பரான வண்ண ஒளிப்பதிவு கண்களை கொள்ளைகொள்ளும்).

    சர்வாதிகாரி நம்பியார், தன்னை எதிர்ப்பவர்களின் பெயர்களைக் கேட்டு ஒரு ஏட்டில் குறித்து வைத்து, அவர்களைப் பழிவாங்குவார். சிவாஜி பதவிக்கு வந்ததும், தன்னை எதிர்க்கும் ஒருவனின் பெயர்கேட்டு முதன்முதலாக ஏட்டில் குறிக்கப்போகும் சமயம், பின்னணியில் இடியோசை போல நம்பியாரின் சிரிப்பொலி கேட்டு திகைத்து பின்வாங்குவது, திருலோகசந்தரின் டைரக்ஷனைக் காட்டும் நல்ல இடம்.

    படத்தின் கிளைமாக்ஸ், செஞ்சிக்கோட்டையில் படமாக்கியிருப்பார்கள். நம்பியாரும் அவரது ஆட்களும் சுற்றி நின்று துப்பாக்கியால் சுட (நம்பியார் இடைவேளைக்குப்பின்னால் மீண்டும் தோன்றுவது இந்த இடத்தில்தான்) சிவாஜி தன் தங்கையை இழுத்துக்கொண்டு ஒவ்வொரு தூணாக மறைந்து மறைந்து முன்னேறுவதும், இறுதிக்காட்சியில் பாம்புகள் இருக்கும் கொட்டடிக்குள் விழுந்து விடும் நம்பியார் அந்த பாம்புகள் கடித்து இறப்பதும் நல்ல கட்டங்கள். (அவ்வளவு பெரிய, பெரிய பாம்புகள், தன் உடம்பின் மீது ஏறி ஊரும்போது நம்பியார் மரக்கட்டை மாதிரி கிடக்கிறாரே. எவ்வளவு தைரியம் வேண்டும்?. நடிக்க என்று வந்துவிட்டால் எதையெல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது?)

    நம்பியாரிடமிருந்து அதிகாரத்தை நடிகர்திலகம் கைப்பற்றுவதோடு நிறுத்தி 'இடைவேளை' கார்டு போடுவார்கள். இடைவேளை முடிந்து, முதல் பாடல் 'நான்கு காலமும் உனதாக' என்ற பாடல்தான். தலைமைப் பொறுப்பில் அமர்ந்த நாயகனைப் பாராட்டி, ஜெயலலிதாவும் குழுவினரும் பாடி ஆட, அதை சிம்மாசனத்தில் அமர்ந்து நாயகன் ரசிப்பதாக படமாக்கப் பட்டிருக்கும். அதில் நான்கு வித பருவங்களைப்பற்றி ஜெயலலிதா பாடும்போது, அதற்கேற்ப பின்னணி காட்சிகளும் மாறும். ஆனால் பாடல் சுமார் ரகம்தான்.

    'சுதந்திர பூமியில்', 'பள்ளியறைக்குள் வந்த', 'வீரம் என்னும் பாவைதன்னை' பாடல்கள் மனதைக் கவர்ந்த அளவுக்கு இது கவரவில்லை. இவை மூன்றும் மூன்று முத்துக்கள். ஆனால் கண்ணில் காணக்கிடைக்கவில்லை. 'SHIVAJI HITS' என்ற பெயரில் VCD / DVD தயாரிப்பவர்கள் கூட இதுபோன்ற பாடல்களைக் கண்டுகொள்வதில்லை.

    'பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே' பாடல் இரவு நேர சூழ்நிலையில் ('நைட் எஃபெக்ட்'), படகில் நடிகர் திலகமும் கலைச்செல்வியும் பயணிக்கும்போது, சுற்றிலும் வாண வேடிக்கைகள் கண்ணைக்கவரும் (அதற்கு ஏற்றாற்போல அற்புதமான ஒளிப்பதிவும், கலரும்).

    அதுபோல 'சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்' பாடல் அவுட்டோரில் அழகான லொக்கேஷன்களில், மலர்நிறைந்த கூடையை நடிகர்திலகம் முதுகில் சுமந்துகொண்டு, புன்னகை மாறாத முகத்துடன் பாடிவரும் அழகு. (இப்பாடல் முழுக்க அவர் முகத்தில் ஒரு கம்பீரமான புன்னகை தவழும்).

    இரு அருமையான பாடல்களோடு, இன்னொரு நெஞ்சையள்ளும் பாடல்...

    'வீரம் என்னும் பாவைதன்னை கட்டிக்கொள்ளுங்கள்
    வெற்றி என்னும் மாலைதன்னை சூடிக்கொள்ளுங்கள்
    நாலுபக்கம் கூட்டமுண்டு பார்த்துக்கொள்ளுங்கள்
    நாளை என்னும் வார்த்தையுண்டு நம்பிக்கொள்ளுங்கள்'

    நடிகர்திலகம் மாறு வேடத்தில் வந்து, சிறையிலிருந்து தன் கூட்டத்தினரை மீட்டுச்செல்லும் காட்சி இது. (கிடாருக்குள் துப்பாக்கியை ஒளித்து வைத்திருந்து சுடும் உத்தியெல்லாம் அப்போதே பயன்படுத்தப்பட்டு விட்டது).

    'தர்மம் எங்கே' படம் 1972 தொடர் வெற்றிக்கோட்டைத் தொட முடியாமல் போனாலும், தரத்தில் எந்தப்படத்துக்கும் குறைந்தது அல்ல. பட வெளியீட்டின்போது நடந்த பிரமாண்ட 'ஒப்பனிங்' திருவிழாவைப்'பொறுத்தவரை, அந்த ஆண்டின் இரண்டு வெள்ளிவிழாப்படங்களைவிட இது முன்னணியில் இருந்தது என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு படத்தின் ஸ்டில்கள் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அதில் முன்னிலை வகித்தது 'மதி ஒளி' மாதமிருமுறை இதழ்.

    1971 துவக்கத்தில் நடிகர்திலகத்துக்கு இருந்த சற்று தொய்வு நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, ஆளாளுக்கு நடிகர்திலகத்துக்கு சவால் விடத்துவங்கினர். (Imagine, that was Public Election time too, where NT was canvassing for Congress (O), headed by Perundhalaivar Kamaraj) தொய்வு நிலைக்குக் காரனம் அவரது படங்களின் புற்றீசல் போன்ற படையெடுப்பு. 'பாதுகாப்பு' படத்தில் துவங்கி 'பிராப்தம்' வரையில் நான்கு மாதங்களில் ஏழு படங்கள்.

    'சவாலே சமாளி'யின் வெற்றி, கேலி பேசியவர்களை ஓரளவு வாயடைக்க வைத்தது எனினும் 'பாபு'வில் துவங்கி தொடர்ந்து நான்கும் வெற்றி மேல் வெற்றி பெறத்துவங்க.......

    'தர்மம் எங்கே' படத்தில் கையில் வாளுடன் நிற்கும் நடிகர்திலகத்தின் படத்கைப்போட்டு, அதன் கீழே... "நாக்குத்தடுப்பேறி சவால் விட்ட தறுக்கர்கள் எங்கே?" என்ற வாசகத்தையும்...

    நம்பியாருக்கு எதிராக வாளுடன் நிற்கும் நடிகர்திலகத்தின் படத்தைபோட்டு.... "சவால் விட்டவனெல்லாம் சவக்குழிக்குப் போய்விட்டான்.. நீ எம்மாத்திரம்?" என்ற வாசகத்தையும் 'மதி ஒளி' வெளியிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தி, பெரிய எதிர்பார்ப்பைத்தூண்டி விட்டது.
    மேற்காணும் வலைப்பதிவிற்கான இணைப்பு - http://ennangalezuththukkal.blogspot...g-post_20.html
    Last edited by RAGHAVENDRA; 7th January 2015 at 10:13 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #3506
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    dharmam enge ninaivalaigal suprb. In north madras MAHARANI it was screened and the crowds were overflowing traffic came to standstill for some time since the main road was very narrow, first time they have opened the back doors to avoid traffic jam.
    as said because of continues suuessful movies from 71 and poor story vale it has not clicked.
    thanks raghavender for taking me to 1972 july.

  10. #3507
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் திரைவரலாற்றில் திலகமான படம் புதிய பறவையே! scene by scene frame by frame ரசிகர்களின் கரவொலி கேட்டுக்கொண்டே இருக்கும் வண்ணம் தனது நடிப்பு முத்திரைகள் அனைத்தையும் அழுத்தம் திருத்தமாக நடிகர்திலகம் பதித்திட்ட அவர் வாழ்நாள் பெருமைக்காவியம் புதிய பறவையே!!


    அந்த காலகட்டத்தில் இமேஜ் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாது வேறு எவரும் ஏற்று நடித்திட அஞ்சும் கதாநாயகனின் கறுப்புப் பக்கத்தை தனது உயரிய நடிப்பால் உயிர் கொடுத்தார் நடிகர்திலகம். அவர் நடிப்பின் பரிணாம பரிமாணங்கள் பற்றி விளக்கிட ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதான அர்த்தமே புதியபறவை. நிச்சயமாக வேறு எந்தப் படத்திலும் அவருக்கு இத்தனை சவால் இத்தனை Home Work கிடையாது. அருமையான வண்ணப் பதிவில் இனிமையான இசை பாடல்கள் நிறைந்த சூப்பர் சஸ்பென்ஸ் திரைப்படம். இத்திரைப்படத்தில் வழக்கம்போல நமது இதயத்தைக் கொள்ளைகொண்ட கல்வெட்டுக் காட்சிக் கோர்வையையும் அவர் பட்டையைக் கிளப்பிய நடிப்பால் சிகரமாக உயர்ந்த காட்சிகளையும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் தொகுத்தளிக்கிறேன்

  11. #3508
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    பட்டையைக் கிளப்பும் (pk) நடிகர்திலகம்!
    நடிப்பிமையத்தின் நெருங்க முடியாத நடிப்பு சிகரங்கள்(peak)s குறுந்தொடர் PART 3 புதியபறவை
    புதியபறவை திரைப்படத்தில் நடிகர்திலகம் பட்டையைக் கிளப்பி இமயத்தின் சிகரங்களாக்கிய நடிப்பின் கல்வெட்டுக் காட்சிகள்!!!

    பட்டையை கிளப்புதல் (pk ) 3 : புதிய பறவை நடிப்பிமைய சிகரம் (peak) 4 : K10
    கடந்த கால நினைவுகளை அடியோடு ஒதுக்கிவிட்டு பழைய பறவை சௌகாரையும் மனதிலிருந்து தூக்கி விட்டு புதிய பறவை சரோஜாதேவியிடம்இதமான புதிய உறவை உண்டாக்கிட முயலும் போது பழைய பறவை போலவே இன்னுமொரு சௌகார் வந்து நின்று பார்த்த ஞாபகம் இல்லையோ என்று சீண்டும்போது தன் வாழ்வின் கறுப்புப் பக்கம் மனசாட்சியை வறுத்தெடுக்க புதிய சௌகாரை நடிகர்திலகம் எதிர்கொள்ள இயலாமல் சரோஜாவிடம் படும் பாடு .......... அவர் மனநிலை மாற்றங்கள்...... பாடலின் இறுதியில் அவர் அடிக்கும் பஞ்ச்..... நம் இதயத்தில் அல்லவா கன்னக்கோல் போட்டு திருடுகிறார் நடிகர்திலகம்!! அந்த உறைந்த நடிப்பும் நிறைந்த துடிப்பும் மின்னல் அறைந்த கல்வெட்டுக் காட்சியமைப்பே!!

    பார்த்துக்கொண்டிருக்கும் நாமே அவராக மாறி அவர் அனுபவிக்கும் சித்திரவதைகளை நாமும்சீட்டின் நுனிக்கே வந்து அனுபவிக்கும் வண்ணம் தன் நடிப்பைப் பிழிந்தெடுக்கிறார் நடிகர்திலகம்



    பட்டையை கிளப்புதல் (pk ) 3 : புதிய பறவை நடிப்பிமைய சிகரம் (peak) 5 : Kailaash

    காலத்தால் அழியாத புதிய பறவை காவியத்தின் சிகரப்பாடலான பார்த்த ஞாபகம் இன்னொரு சூழலில் நடிகர்திலகத்தின் அட்டகாசமான ஜேம்ஸ் பாண்ட் டக்ஷிடொ கோட்சூட்டில் ஒருகையில் சிகரெட் மறுகையில் மதுக்கோப்பை அனால் பார்வையோ கிளாமர்காட்டும் சௌகாரிடம்.....இருந்த இடத்திலிருந்தே நடிப்பின்சிகரத்தைத் தாண்டுகிறாரே !

    Last edited by sivajisenthil; 8th January 2015 at 08:26 PM.

  12. Thanks Russellmai thanked for this post
    Likes kalnayak liked this post
  13. #3509
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Scene Stealer Sivaaji Ganesan

    ரசிக நெஞ்சங்களை திருடும் உள்ளங்கவர் நடிப்புக் கள்வன் நடிகர்திலகமே

    புதிய நெடுந்தொடர் பகுதி 3 புதியபறவை
    எந்தவொரு காட்சியமைப்பிலும் மனதை திருடி இதயங்களில் நிறைபவர் நடிகர்திலகமே என்பது நியூட்டனின் புவி ஈர்ப்பு விசைக்கும் ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாட்டுக்கும் ஒப்பான நிரூபிக்கப்பட்ட திரைப் புதிராகும்.
    ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் புதையுண்ட ரகசியங்கள் எத்தனையோ நீர்க்குமிழி வாழ்வில் ஏதோ ஒரு சமயம் அந்த ரகசியம் நீர்ப்பரப்புக்கு வந்தே தீரும் என்பது விதி சில ரகசியங்கள் தவறிழைப்பதால் அந்தத் தவறையும் மறைக்க நினைப்பதால் வாழ்வின் கறுப்புப் பக்கங்களாக மாறி அந்த மனிதன் ஒவ்வொரு நொடியும் தனது மனசாட்சியின் குத்தலுக்காளாகிறான் புதிய பறவை திரைப்படத்தில் எப்படிப்பட்ட சதிவலை பின்னப் பட்டு நாயகனின் வாயாலேயே அந்த ரகசியத்தின் பின்னணி வெளிக்கொணரப்பட்டு நீதி வெல்கிறது என்பதே முழுக் கதையின் ஒருவரி வடிவம் உளவியல் ரீதியில் யாராலும் எளிதில் அணுக இயலாத இப்பாத்திரத்தின் நுட்பமான நடிப்பு வெளிப்பாடுகளை நடிகர்திலகம் எவ்வளவு இலகுவாக கையாண்டு இந்த உலகம் சுற்றும்வரை தானே இணையற்ற நடிகமன்னன் என்பதை நிரூபிக்கிறார்!?


    இதயத்திருட்டு 3 : புதிய பறவை க்ளைமாக்ஸ்! கல்வெட்டு: 1

    ஒரு திரைப்படத்தில் சஸ்பென்ஸ் எப்படி நேர்த்தியாக காக்கப்பட வேண்டும் என்பதற்கு ஹிட்ச்காக் படங்களின் தர வரிசையில் அமைந்த சுறுசுறுப்பான விறுவிறுப்பான திரில்லர் புதியபறவை (இதற்கப்புறம் அதேகண்கள், நடுஇரவில்....குறிப்பிடத்தகுந்த படங்கள்) இந்தக் காட்சியை நடிகர்திலகம் போல இதயத்தை திருடி மனங்களில் மின்னலின் கல்வெட்டாக்கிட வேறு எந்த உலகமகா நடிகனாலும் இயலாது.


    என்ன அருமையான நாடகம்...... என்ன அலங்காரமான அமைப்பு.....என்ன அழகான நடிப்பு!!!



    இதயத்திருட்டு 3 புதிய பறவை கல்வெட்டு 2 :

    எங்கே நிம்மதி.....பாடல் வரிகள்...அதிரடி இசைக் கோர்ப்பு.....அற்புதவடிவான நடிப்பு. குழப்பமான சூழலில் நிம்மதி வேண்டி மயக்க நிலையில் நடிகர்திலகம் வெளிப்படுத்தும் கனவுநிலை பாடல் காட்சியமைப்பே எங்கே நிம்மதி Signature Song and Signature Poses of NT





    இதயத்திருட்டு 3 புதிய பறவை / கல்வெட்டு 3 :

    மெல்ல நட...பாடல்....பனியன் போடாமல் வெண்ணிற ஷர்ட் பேன்டில் இதயங்களைக் கவ்வுகிறார் நடிகவேந்தன்



    இதயத்திருட்டு 3 புதிய பறவை கல்வெட்டு 4

    குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது இதுவே புதியபறவை நாயகனின் நிலை தன்னைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் மாயவலையில் நண்பர் யார் விரோதி யார் துரோஹி யார் ,,,ஏதுமறியாமல் பரமபத ஏணியில் ஏறிக்கொண்டே அவ்வப்போதில் கடிவாங்கி கீழே விழுந்து மீண்டும் மீண்டும் மனம் தளராத விக்கிரமாதித்தனின் வேதாளம் போன்ற பாத்திரப்படைப்பை உள்வாங்கி படத்தைத் தாங்கி நிற்கும் நடிகர்திலகம் ராதாவை வெளியேற்ற பணம் கொடுத்து அம்முயற்ச்சியில் தோல்வியுற்று மனம் வெதும்பும் காட்சி......நடிகர்திலகத்தின் நிழலைக்கூட யாரும் தீண்ட முடியாது என்பதை எடுத்துக்காட்டும் அருமையான கல்வெட்டுக் காட்சியமைப்பே!!


    இதயத்திருட்டு 3 புதிய பறவை கல்வெட்டு 5

    ஒவ்வொருமுறை சரோஜாதேவியுடன் ரயில்வே கிராஸிங்கை கடக்கும் போதும் தன்னைத் துரத்திக்கொண்டே இருக்கும் பழைய பறவையின் நினைவுஏற்படுத்தி அலைக்கழிக்கும் ரத்தக் கொதிப்பு காட்சியில் நமக்கு எகிறுகிறது High Blood Pressure!


    When I get appropriate footage of videos for these two scene stealers, I will upload them alongside this posting. Kindly bear with me friends!!


    The End of Part 3 Pudhiya Paravai. But ....... NT comes back On His Majestic Scene Stealing Service in the greatest ever epic filmed in Tamil and the unparalleled rerun record breaker......and my bloodline movie KARNAN!!
    Last edited by sivajisenthil; 8th January 2015 at 08:30 PM.

  14. Thanks Russellmai thanked for this post
  15. #3510
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோவை மாவட்டத்தை சேர்ந்தவரும் நடிகர் திலகத்தின் மூத்த ரசிகரும் சமூக வலை தளமான முகநூலில் active ஆக இயங்கிக் கொண்டிருப்பவரும் தமிழக அரசின் வெகு முக்கியமான துறையில் சிறப்புற பணியாற்றி சிறிது காலத்திற்கு முன்பு பணி ஒய்வு பெற்றவரும் கடந்த சில வருடங்களாக நமது திரியின் மௌன வாசிப்பாளருமான திரு சுவாமி துரை வேலு அவர்கள் நமது மன்றத்திலே இணைந்துள்ளார்கள். அவரை மனமார வரவேற்புதடன் அவரின் அனுபவங்களை நடிகர் திலகம் பற்றிய ரசனைகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    அன்புடன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •