Page 350 of 400 FirstFirst ... 250300340348349350351352360 ... LastLast
Results 3,491 to 3,500 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #3491
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    TAMIL NEWS STORIES
    Home > More Tamil News
    Vikram Prabhu - the Uthama Puthiran connect !
    Vikram Prabhu - the Uthama Puthiran !
    Jan 04, 2015
    Distributors Gopuram Films' first production venture, Vellaikaara Durai, starring Vikram Prabhu and Sridivya in the lead roles, has turned out to be a profitable venture.

    Happy with the result, the company's Anbu Chezhian announced that he would be producing more movies under the Gopuram Films banner!

    Meanwhile, it is to be noted that the Pulinagam chain that Vikram Prabhu sports in the movie is the same one used by his grandfather, Nadigar Thilagam Sivaji Ganesan in the movie Uthama Puthiran.

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3492
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    I request the moderator to take the initiative to bring all the verteran hubbers of NT's

    thread to contribute as usual especially Mr Neyveli Vasudevan to propagate the glory of

    the acting god.

  5. #3493
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    பட்டையைக் கிளப்பும் (pk) நடிகர்திலகம்!
    நடிப்பிமையத்தின் நெருங்க முடியாத நடிப்பு சிகரங்கள்(peak)s குறுந்தொடர்


    PART 1 :

    பாசமலர் என்றாலே தூங்கும்போதும் நம் எண்ணங்களை ஆக்கிரமிப்பது 'கைவீசம்மா கைவீசு...' Signature காட்சியமைப்பே!! அதை என் பார்வையில் ஒரு Scene Stealer என்று மட்டுமே எடுத்துக்கொள்ள இயலவில்லை. அதையும் தாண்டி நடிகர்திலகம் கொடிநாட்டிய நடிப்புச் சிகரங்களில் ஒன்றாகாவே மனதில் பதிந்திருக்கிறது.

    இது ஒரு உளவியல் ரீதியான சகோதர பாசத்தின் அற்புத வெளியீட்டுக் குறியீடு.கண்கள் ஊனமுற்ற நிலையில் மனக்கண்ணில் அவருக்குத் தோன்றும் இளமைக் கால கல்வெட்டு நினைவை எவ்வளவு அற்புதமான உடல்மொழி பாவனைகளுடன் வெளிக்கொணர்ந்து பார்ப்பவர் மனதை வசியநிலைக்கு உட்படுத்தி தனக்கே உரித்தான உளவியல் அணுகுமுறையில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். இக்காட்சி நடிப்பின் இமயமாக நமது மனங்களில் வீற்றிருக்கும் அவரது நெருங்க முடியாத நடிப்புச் சிகரங்களில் எவரெஸ்ட் போன்ற முதன்மையான சிகரமே
    பட்டை கிளப்பல்(pk)1: பாசமலர்
    நடிப்பிமைய சிகரம் (peak) 1 எவரெஸ்ட்



    புதியபறவையின் பல காட்சியமைப்புக்கள் தெய்வமகனில் கோபமும் ஆத்திரமும் அறிவுக்கண்ணை மறைக்கும்போது தந்தை சிவாஜியும் மூத்தமகன் சிவாஜியும் ஒரேமாதிரி கையை நீட்டி தரையைக் காலால் உதைப்பது ...இவையெல்லாம் எனது அடுத்த தலைப்பான நடிப்பிமையத்தின் நெருங்க முடியாத நடிப்பு சிகரங்கள் (peak)s என்னும் குறுந்தொடரில் வகைப்படுத்தியுள்ளேன்.

    இந்தக்காட்சிகள் பட்டையைக் கிளப்பும் (pk) நடிகர்திலகம் என்ற கருத்துக் கோர்வையில் இப்போதுள்ள நெடுந்தொடரின் ஒவ்வொரு முடிவிலும் ஒரு குறுந்தொடராக வரும்.
    அமீர்கானின் (pk) அர்த்தம் பரபரப்பைக் கிண்டுபவர் என்பதே !!
    Last edited by sivajisenthil; 7th January 2015 at 01:49 PM.

  6. #3494
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை மாநில துணைத்தலைவர் திரு.துரைராஜ் 65-வது பிறந்தநாள் விழா - புத்தாண்டு விழா - ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - 01-01-2015 அன்று சென்னை தண்டையார்பேட்டையில் சிறப்பாக நடைபெற்றது. வசந்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி பற்றிய செய்தி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes RAGHAVENDRA liked this post
  8. #3495
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. #3496
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள்தலைவர் சிவாஜி யின் தர்மம் எங்கே டிரைலர்




    எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.

  10. #3497
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகம் வெற்றி முழக்கமிடும் தர்மம் எங்கே -

    புதிய வரலாறு படைக்க புறப்பட்டு வருகிறான் புரட்சி வீரன் சேகர்



    புறப்படுங்கள் ... மக்கள் தலைவரின் புகழ்க்கொடியை புவியெங்கும் பரப்புவோம்...

    முன்னோட்டம் 1

    கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களின் பார்வையில்..

    " நான் முறைப்படிதான் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கேன்.. என்னை யாராலும் தடுக்க முடியாது. நான் மறுபடியும் வந்து தான் தீருவேன்"

    .... ஆஹா... என்ன தீர்க்கதரிசனமான வரிகள்... இந்தக் காலத்திற்கு மிகப் பொருந்துகிறதே வசனம்...

    கலைச்செல்விக்கே இப்படி யென்றால் தலைவருக்கு...

    இதோ கலைச்செல்வியே கூறுகிறார் கேளுங்கள்...

    "பெருந்தலைவரே... தங்கள் நேர்மைதான் எங்கள் வழி..தங்கள் நெஞ்சுறுதி தான் எங்கள் பலம்.. "

    சிகரம் வைக்கும் வசனம்...

    "இப்பதான் என்னை எல்லோரும் கவனிக்க ஆரம்பிச்சிருக்கீங்க "

    ... இந்தப் படத்தின் வசனம் யார்...

    பாலமுருகனா ... இல்லை...
    ஏ.எல். நாராயணனா ... இல்லை..
    வியட்நாம் வீடு சுந்தரமா... இல்லை..

    பின் யார்...

    சரி பின்னர் பார்ப்போம்...

    முதல் வெளியீட்டின் போது மதுரையில் வரவேற்பு எப்படி...

    இதோ முரளி சார் சொல்கிறார்... படியுங்கள்..

    ...
    சேகரின் அந்த ஸ்டைலிஷ் பாடலுக்கு நன்றி. நடிகர் திலகத்தின் எந்த பாடலை பார்த்தாலும் அந்த பாடல் அல்லது காட்சி இடம் பெற்ற படத்தை முதன் முதலில் பார்த்தபோது நடந்தது நினைவுக்கு வரும் என்ற போதிலும் அந்த வகையில் தர்மம் எங்கே படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. தர்மம் எங்கே என்று கேட்டவுடன் உடன் நினைவுக்கு வருவது பல விஷயங்கள்.

    முதலில் ஜூலை 1 அன்று வருவதாக இருந்து பின்னர் 15 -ந் தேதி மாறியது, படம் வெளியான அன்று மதுரை ஸ்ரீதேவி அரங்க வளாகமே மக்கள் வெள்ளத்தில் மிதந்தது, கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காட்சிகள் எல்லாம் வெகு சீக்கிரமாக தொடங்கியது, கூட்டத்தை பார்த்துவிட்டு இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை 5 காட்சிகளாக மாற்றியது, எக்ஸ்ட்ரா காட்சி திரையிட்டும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாமல் போனது, நான் சென்றிருந்த இரண்டாம் நாள் ஞாயிறு மாலைக் காட்சிக்கு அந்த அரங்கம் அமைந்திருந்த ஒர்க் ஷாப் ரோடே வாகன போக்குவரத்து போக முடியாமல் ஸ்தம்பித்து போனது, போலீசார் நடத்திய லத்தி சார்ஜ், அடிப்பட்டு காலில் ரத்தம் வழிந்து ஓடும் போதும் வரிசையில் மீண்டும் நின்று டிக்கெட் வாங்குவதற்கு முயற்சி செய்த மனிதன், தொடர் வெற்றிகளால் பூரிப்படைந்து அரங்கத்திற்கு வெளியே ஆரவாரிக்கும் ரசிகர்கள், அந்த நேரத்தில் 70 நாட்களை கடந்து புதிய வசூல் சாதனை படைத்துக் கொண்டிருந்த பட்டிக்காடா பட்டணமாவின் வசூல் விவரங்களை குறிப்பிட்டு ரசிகர்கள் அடித்திருந்த கையால் தொட்டாலே கொதிக்கும் அனல் வாசகங்கள் அடங்கிய நோட்டிஸ்கள், எப்படியோ உள்ளே நுழைந்து டிக்கெட் வாங்கியது, சுதந்திர பூமியில் பாடலின் அறிமுக காட்சி முதல் தர்மம் எங்கே என்று கேட்டவர்களுக்கு தர்மம் இங்கே என்று பதில் கொடுத்திருக்கிறார் என்று முத்துராமன் பேசும் இறுதிக் காட்சி வரை நிலவிய தியேட்டரின் internal atmosphere, இவற்றையெல்லாம் விவரிக்க வார்த்தைகளே சிக்கவில்லை என்பதுதான் உண்மை.
    15th July 2011, 01:16 AM - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாகம் 8ல்...

    இன்று இருக்கும் எதிர்பார்ப்பில் இது மீண்டும் நிகழ்ந்தால் வியப்பில்லை..

    காரணம்... படம் அப்படி...

    முன்னோட்டம்... அட்டகாசம் சுந்தரராஜன் சார்.. இதன் பின்னணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த நன்றி. தனிப்பட்ட முறையிலும் நடிகர் திலகம் இணைய தளத்தைப் பற்றிக் குறிப்பிட்டமைக்காக மீண்டும் நன்றி.

    தொடரும்....
    Last edited by RAGHAVENDRA; 6th January 2015 at 01:30 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes Russellmai, KCSHEKAR, eehaiupehazij liked this post
  12. #3498
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திரு ஒய்.ஜீ.மஹேந்திரா அவர்களின் நான் சுவாசிக்கும் சிவாஜி நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழின் நிழற்படங்கள்..





    நமது திரி நண்பர்கள் அனைவரும் பங்கு கொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes Russellmai liked this post
  14. #3499
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Scene Stealer Sivaaji Ganesan

    ரசிக நெஞ்சங்களை திருடும் உள்ளங்கவர் நடிப்புக் கள்வன் நடிகர்திலகமே

    புதிய நெடுந்தொடர் பகுதி 2 தெய்வமகன்
    எந்தவொரு காட்சியமைப்பிலும் மனதை திருடி இதயங்களில் நிறைபவர் நடிகர்திலகமே என்பது நியூட்டனின் புவி ஈர்ப்பு விசைக்கும் ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாட்டுக்கும் ஒப்பான நிரூபிக்கப்பட்ட திரைப் புதிராகும்.


    தெய்வமகன் (1969)

    நடிகர்திலகத்தின்முப்பரிமாணத்தையும் முழுமையாக வெளிக்கொணர்ந்த திரைக்காவியம். தன்னைப்போலவே குரூபியாகப் பிறந்து விட்ட தலைச்சன் பிள்ளையை வாழ்க்கையில் தனது தோற்றக்குறைபாட்டால் தான் அனுபவித்த சித்திரவதைகளை சந்தித்த சோதனைகளை பட்ட அவமானங்களை அவனும் அனுபவிக்கக் கூடாதே என்னும் அரைவேக்காடான எண்ணத்தால் அக்குழந்தையை கொன்றே விட எண்ணும் பரிதாபமான குற்ற உணர்வுகளால் நித்தமும் அலைக்கழிக்கப்படும் ஒரு மனித ஜீவனை இந்த அளவு உலகின் எந்த ஒரு ஆஸ்கார் மகுடம் தரித்த நடிகனும் வெளிப்படுத்தியதில்லை.

    ஒரே நடிகன் மூன்று வெவ்வேறு குணாதிசயங்களாக திசுப்பெருக்கம் செய்து மூன்று பாத்திரங்களையுமே மூன்று சிவாஜிகள் நடித்திருக்கிறார்கள் என்று பார்ப்பவர் அதிசயிக்கும் வண்ணம் நடித்துக் காட்டிய நிகழ்வும் அதுவரை இல்லை அதற்குப் பின்னரும் இல்லை தந்தை சிவாஜியின் மெய்சிலிர்க்க வைக்கும் வேதனை முகபாவனைகள் மூத்த மகன் சிவாஜியின் தாழ்வுமனப்பான்மையுடன் தன்னிரக்கம் நிறைந்த மனத்துடிப்பை அவரே வேறுபடுத்தியிருக்கும் கற்பனைத்திறன் இளையமகனின் அழகிய தோற்றமும் பணக்காரப்பிள்ளையின் பவிசுகளும் ........ இந்த சாதாரண கறுப்புவெள்ளைக் காவியம் உண்டுபண்ணிய அசாதாரணமான நடிப்புப் பிரளயத்தை வர்ணிக்க வார்த்தைகளேது?


    இதயத்திருட்டு 2 வென்றவர் தந்தையே / கல்வெட்டு 1

    குற்ற உணர்ச்சிகளின் மொத்த உருவமானாலும் உழைப்பின் மூலம் தான் உருவாக்கிய தொழில் சாம்ராஜ்யத்தை இன்னும் விளையாட்டுத்தனம் அகலாத இளைய மகன் கட்டிக் காப்பானா இல்லை அழித்து விடுவானா என்ற கவலையில் ஆழ்ந்து குழம்பிக்கிடக்கும்போது தான் முற்றிலும் மனதிலிருந்து எடுத்துவிட்ட மூத்த மகன் குத்துக்கல்லாக முன்னே வந்து நின்று குத்திஎடுக்கும்போது தந்தையின் உணர்ச்சி சிதறல்கள் எப்படியிருக்கும்? இரும்புப் பெட்டியே போதும் இதயம் தேவையில்லை என்று உணர்ச்சிப் பிழம்பாக மூத்த மகன் வறுத்து எடுக்கும்போது கூத்திலே கோமாளி போல இளைய மகனும் உள்ளே நுழைந்து தந்தையின் காசோலையை கைப்பற்றுவதிலேயே குறியாக இருந்தால் அந்தத் தந்தை மனம் என்ன பாடு படும்? பணம் யாருக்கு உரிமையாக போய் சேர வேண்டுமோ அவனே தம்பிக்கு அது போய்ச் சேரும்போது காட்டும் நெகிழ்வான மகிழ்வு ....தந்தையின் மனசாட்சி ஆற்றாமை.....இளையமகனின் பொறுப்பில்லாத்தனம்.....இவை அத்தனையும் ஒரே காட்சியில் கண்டிட நடிப்பு விஸ்வரூபமெடுத்த நடிப்பின் இறைவனே உன் ரசிகனாக இருப்பதே என் கண்களும் இதயமும் செய்த புண்ணியம்!!




    இதயத்திருட்டு 2 / கல்வெட்டு 2

    தன்னைப் பெற்று ஒதுக்கியவர்கள் இருக்குமிடம் தெரிந்து பாசப் பரிதவிப்புடன் அவர்களைப்பார்க்க செல்லும் மகன் அன்னையைப் பார்த்து மகிழும் தெய்வமகன் ........தம்பியின் அழகு வதனத்தைப் பார்த்துப் பூரிக்கும் அண்ணன் ....ஆனால் தந்தையைப் பார்க்க நேரும்போது பெறுவது அந்த அவசரப் புத்திக்காரரிடமிருந்து துப்பாக்கிக் குண்டையே! தன்னைக் கொல்லாது வளர்த்திட்ட தெய்வமான டாக்டரிடம் தனது குடும்பத்தை பார்த்துவிட்ட மகிழ்வையும் தந்தையின் பரிசையும்என்ன ஒரு நடிப்பு ஜாலத்துடன் பகிர்ந்து நமது உள்ளங்களைக் கொள்ளை கொள்கிறார் !!


    Last edited by sivajisenthil; 8th January 2015 at 02:04 PM.

  15. Likes kalnayak liked this post
  16. #3500
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகம் வெற்றி முழக்கமிடும் தர்மம் எங்கே -

    புதிய வரலாறு படைக்க புறப்பட்டு வருகிறான் புரட்சி வீரன் சேகர்



    தர்மம் எங்கே படத்தைப் பற்றி கலைச்செல்வி ஜெயலலிதா என்ன கூற விரும்புகிறார்?
    "தர்மம் எங்கே" ஒரு நல்ல படம் - பிரம்மாண்டமான தயாரிப்பு. இப்படம் மகத்தான வெற்றி பெற ரசிகர்கள் பேராதரவு தரவேண்டுமென வேண்டி முடிக்கிறேன்

    முழுதும் படிக்க இதோ இந்நிழற்படம்... ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து



    ... தொடரும்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •