Page 342 of 400 FirstFirst ... 242292332340341342343344352392 ... LastLast
Results 3,411 to 3,420 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #3411
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஒரு படைப்பாளிக்கு மிகச் சிறந்த பரிசு, ரசிகர்கள் தரும் ஊக்கமே..

    என்ற கருத்தை நிரூபிக்கும் வகையில் நம் நண்பர் கோபு சார் (Gopu1954) அவர்கள் நம்மையெல்லாம் ஊக்குவித்து வந்துள்ளார். மிக அதிகபட்சமாக ஊக்கம் தரும் இணைப்பைச் சொடுக்கி ... கிட்டத்தட்ட 3000 ... மிகச் சிறந்த ஊக்குவிப்பாளராகத் திகழும் கோபு எ கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு நம் அனைவர் சார்பிலும் உளமார்ந்த நன்றிகள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3412
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    ஒரு படைப்பாளிக்கு மிகச் சிறந்த பரிசு, ரசிகர்கள் தரும் ஊக்கமே..

    என்ற கருத்தை நிரூபிக்கும் வகையில் நம் நண்பர் கோபு சார் (Gopu1954) அவர்கள் நம்மையெல்லாம் ஊக்குவித்து வந்துள்ளார். மிக அதிகபட்சமாக ஊக்கம் தரும் இணைப்பைச் சொடுக்கி ... கிட்டத்தட்ட 3000 ... மிகச் சிறந்த ஊக்குவிப்பாளராகத் திகழும் கோபு எ கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு நம் அனைவர் சார்பிலும் உளமார்ந்த நன்றிகள்.
    சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவையே பின்புலத்தில் ஒரு ஆக்கபூர்வமான ஊக்குவிப்பாளராக இருந்து இத்திரியின் பதிவர்களுக்கு எவ்வித பாரபட்சமுமின்றி
    அலைகடலின் தோணி போல் விளங்கும் திருவாளர்கள் கோபு மற்றும் நண்பர் கல்நாயக் நன்றிக்குரியவர்கள். முன்புல பதிவர்களாகவும் நடிகர்திலகத்தின் புகழ் பரப்பிட அன்பு ராகவேந்தர் அவர்களைப் பின்பற்றி வேண்டிக்கொள்கிறேன்.
    செந்தில்

  5. Likes RAGHAVENDRA liked this post
  6. #3413
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Paying tributes to the departed soul in person is a mark of respect.
    No doubt.
    But there is a habit of spreading amongst the community and society to project negative notions on those who could not make it for the reasons best known to them or unavoidable.
    This should be stopped. Because a person is not able to make it to visit in person, it should not be deemed that he is not honest.

    Let this arrogant approach stop from at least now.

    இறைவனடி சேர்ந்தவர்க்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவது மனிதாபிமானமும் மரியாதையாகும். இதில் கருத்து வேறுபாடில்லை.
    ஆனால் அவ்வாறு நேரில் தவிர்க்க இயலாத காரணங்களால் செல்ல முடியாதவர்களைப் பற்றி கருத்துக்களைக் கூறுவதும் தவறாக சித்தரிப்பதும் கூட மனிதாபிமானதற்றதாகும்.
    சமீப காலங்களில் இந்தப் போக்கு நம் மக்களிடையே பரவி வருவது வருத்தத்திற்குரியது. அவரவர் தம் மனதில் தோன்றிய காரணங்களையெல்லாம் கற்பித்துக் கூறுவதும் நடக்கலாம்.
    இந்தப் போக்கை மனிதன் கைவிட வேண்டும்.
    சில சமயங்களில் சிலர் வராமல் இருந்தால் கூட நல்லது என அந்த வீட்டில் உள்ளவர்கள் நினைக்கும் அளவிற்கும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
    குறிப்பாக பிரபலங்களின் இறுதி நேரங்களில் மற்ற பிரபலங்கள் வரும் போது அந்த சூழ்நிலயைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் இவர்களை சூழ்ந்து கொண்டு அன்புத் தொல்லை தருவது முழுதும் மனிதாபிமானமற்ற செயலாகும்.
    அப்படிப்பட்ட நேரங்களில் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் வராமல் இருப்பதே மேல் என அவர்களுக்கும் தோன்றலாம்.
    மனிதன் மாற வேண்டும். மரணத்தைப் புனிதமாக்க வேண்டும்.
    Last edited by RAGHAVENDRA; 25th December 2014 at 12:07 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks eehaiupehazij thanked for this post
  8. #3414
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Part 3 of NT's original stunt scenes!!

    அள்ளஅள்ள குறையாத நடிப்பின் அமுதசுரபி நடிகர்திலகமே!!

    சண்டை சாகசக் காட்சிகளில் நடிகர்திலகத்தின் ஒரிஜினாலிட்டி! (No stunt doubles!) Risk and Rusk


    Risk and Rusk Part 3 : Flight/Train Fights and Helicopter Chase !

    சண்டைக்காட்சிகளில் சாகசங்களில் தானே நடிக்க வேண்டிய சூழலில் பின்வாங்காது முன் நின்று நடிகர்திலகமும் ரிஸ்க் எல்லாம் தனக்கும் ரஸ்க்கே என்று அவர் நிரூபித்த சில சண்டை/சாகச காட்சிகள்
    நடிப்புக்கு இலக்கணம் வகுத்து இக்கணம் வரை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாத நடிப்பின் இமயமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் நடிகர்திலகம் நடிப்பில் தொடாத கோணமோ காட்டாத நுட்பமோ புரட்டாத பக்கமோ எதுவுமில்லை. சண்டைக்காட்சிகளும் நடன நெளிவு சுளிவுகள் சார்ந்த ஒருவகை நடிப்பே (Action Choreography) ஆனாலும் தான் பங்குபெறும் சண்டைக் காட்சிகள் வெறும் உடல்பலத்தையோ கதாநாயகனின் வீரதீர சாகசங்களையோ வெளிப்படுத்தாது புத்திசாலித்தனம் உள்ளடங்கிய நம்பகத்தன்மை மிக்க சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் குறைந்திடாத வண்ணம் ரசிகர்களுக்கு ரசனைத்தீனி போடும்வண்ணம் அமைய வேண்டும் என்ற கோணத்திலும் சிந்தித்தார் நடிகர்திலகம்

    அதன் விளைவே அவரது உடல் எடை குறைந்து எழிலான தோற்றப் பொலிவில் அருமையான சண்டைக்காட்சிகளை தந்திட்ட தங்கசுரங்கம், சொர்க்கம், ராஜா, என்தம்பி,
    திருடன், எங்கமாமா மற்றும் சிவந்த மண் திரைப்படங்கள்.

    என்னதான் உடல்பலம் மிக்க கதாநாயகன் எனினும் ஒரே சமயத்தில் பத்துபேரை அடிப்பதும் அந்தர்பல்டிகளும் நம்பகத்தன்மை அற்றவையே. நடிகர்திலகமும் சண்டைக்காட்சிகளில் தனது தனித்துவத்தைக் காண்பிக்க முயற்சித்தார்.அந்தவகையில் இயக்குனர் ஸ்ரீதர் ஸ்டண்ட்மாஸ்டர் ஷியாம் சுந்தருடன் இசைந்து அந்தக் காலகட்டத்தில் புகழின் உச்சியில் உலகையே ஆட்கொண்ட ஜேம்ஸ்பாண்ட் நாயகர் ஷான் கானரியின் கோல்டு பிங்கர், ப்ரம் ரஷ்யா வித் லவ் ஆகிய படங்களின் சண்டைக் காட்சியமைப்புக்களை தழுவி சிவந்தமண்ணில் அமைத்த சண்டைக்காட்சிகள் நடிகர்திலகத்தின் எண்ணங்களுக்கும் ஆற்றலுக்கும் பொருத்தமாக அமைந்தன, (க்ளைமேக்ஸ் ராட்சத பலூன் சண்டை சற்று சறுக்கலான சொதப்பலே !!)

    சிவந்தமண் ஹெலிகாப்டர் துரத்தல் ரஷ்யா வித் லவ் படத்தையும் விமானத்தில் தேங்காய் சீனிவாசனுடன் போடும் சண்டை கோல்டுபிங்கர் படத்தையும் ஆதாரமாக
    கொண்டவையே! அதேபோல் சொர்க்கம் படத்தின் ரயில்பெட்டி சண்டை ரஷ்யா வித் லவ் படத்தில் கானரி ராபர்ட் ஷாவுடன் போடும் சண்டையின் நகலே!!

    Risk 3 Rusk 1 : Sivandha mann Vs Goldfinger

    Flight fight!!





    Risk 3 Rusk 2 Sivandha Mann Vs From Russia With Love

    Helicopter chase! Stay thrilled with NT's original participation in the chase scene, comparable to Sean Connery's James Bond action!!





    Sorgam train fight Vs. James Bond fights





    The End of Part 3. But....NT promptly returns his dues with interest to wrestler Dharaasingh's brother Randhaawa in Raja Vs Sean Connery's James Bond fight with a Sumo wrestler in You Only Live Twice!!
    Last edited by sivajisenthil; 26th December 2014 at 01:18 PM.

  9. #3415
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Part 4 of NT's original stunt scenes!!

    அள்ளஅள்ள குறையாத நடிப்பின் அமுதசுரபி நடிகர்திலகமே!!

    சண்டை சாகசக் காட்சிகளில் நடிகர்திலகத்தின் ஒரிஜினாலிட்டி! (No stunt doubles!) Risk and Rusk


    Risk and Rusk Part 4 : Fighting with wrestler!
    தொழில்முறை குத்துசண்டை வீரர்கள் படிப்படியான பயிற்சிகளின் மூலம் உடலை முறுக்காக வைத்திருப்பார்கள் நமது கதாநாயகர்கள் அதெல்லாம் அலட்டிக்கொள்ளாது
    சண்டைக்காட்சிகளில் அந்த வீரரையே பந்தாடி விடுவார்கள் ஆனால் கானரியும் கணேசனும் ரியலிஸ்டிக்காக அவர்களுடன் மோதும்போது அடிகொடுப்பதை விட அடிவாங்குவதே அதிகம்!! ஆனாலும் தைரியம் தன்னம்பிக்கை இழக்காமல் சில presence of mind உத்திகளால் அவர்களைக் கவிழ்ப்பர். இதுதானே ஒரிஜினாலிட்டி!!

    தங்கசுரங்கம் திரைப்படத்தில் நடிகர்திலகம் ஸ்லிம் ஆக துப்பறிவாளருக்குரிய நடை உடை பாவனை நேர்த்திகளை rough and tough James Bond Sean Connery பாணியுடன் கொஞ்சம் செண்டிமெண்டும் கலந்து வித்தியாசப்படுத்தியிருப்பார். விறுவிறுப்பான திரைக்கதை நகர்வில் நடிகர்திலகத்தின் சண்டை சாகசங்களை ரசிக்கும்போது செண்டிமெண்டுகள் கொஞ்சம் தடைக்கல்லே ! டீன் மார்டின் நடித்த சைலென்சர்ஸ் மற்றும் கானரியின் பாண்ட் படங்களின் கலவையாக ஜனரஞ்சக இயக்குனர் ராமண்ணா செண்டிமெண்டை ஒதுக்கியிருந்தால் இந்தவகை பாத்திரங்களிலும் நடிகர்திலகம் தொடர்ந்திருக்க முடியும். ராஜா திரைப்படத்திலும் அழகிய தோற்றத்தில் சண்டைக்காட்சிகளில் ரசிகர்களின் பசி ருசி அறிந்து தனது தனித்துவத்தை பதித்திருந்தார் நடிக மேதை.

    நடிகர்திலகத்தின் ராஜா Vs Sean Connery's You Only Live Twice
    நடிகர்திலகத்தின் தங்கசுரங்கம் Vs Sean Connery's Goldfinger
    Risk 4 Rusk 1 Raja Vs You Only Live Twice

    NT fights with Wrestler Dharasingh's brother wrestler Randhaawa in Raja! Unusual energy from NT through his brisk action movements!!



    Sean Connery fights with a Sumo wrestler!You only Live Twice!! Enjoy the cool 'cheers' after the fight!!



    Risk 4 Rusk 2 Thangasurangam Vs Goldfinger

    Thangasurangam (Story base from Dean Martin's Silencers) is out and out a 'James Bond' type film but with unfortunate mixing of some unwarranted sentiments as the speed breaker! In this film also NT fights with a wrestler henchman



    Sean Connery's most famous 'Goldfinger' fight with a henchman within a gold depository!!



    The End of Part 4. But....NT makes an 'about turn' to thrill us with his original skills in stylish fencing and sword fights both alone and on a horse!!
    Last edited by sivajisenthil; 28th December 2014 at 08:41 AM.

  10. Likes KCSHEKAR, RAGHAVENDRA, Russellmai liked this post
  11. #3416
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.

    கடந்த பதிவின் இறுதி பகுதி


    இனி தவப்புதல்வன் பற்றிய என் நினைவலைகளை அடுத்த பதிவில் பகிர்ந்துக் கொள்கிறேன்.

    இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

    அந்த நாள் ஞாபகம்

    தவப்புதல்வன் - முக்தா பிலிம்ஸ் தயாரிப்பு. முக்தா ஸ்ரீனிவாசன் அதிகமாக பள்ளிப்படிப்பு படிக்காதவர். சிறு வயதிலேயே குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு போக நேர்ந்தவர். ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு அந்த இயக்கத்திலே இருந்தவர். பின் காங்கிரசின் தேசிய நீரோட்டத்தில் இணைந்தவர். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனதில் வேலை பார்த்து பின் எஸ். பாலச்சந்தர் போன்றவர்களிடம் assistant இயக்குனராக அந்த நாள் போன்ற படங்களில் பணியாற்றி முதன் முதலாக முதலாளி படத்தை இயக்கினார். பின் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களான நினைவில் நின்றவள், தேன் மழை, போன்றவற்றை இயக்கிய பிறகு நடிகர் திலகத்திடம் வந்து சேர்ந்தார். முதலில் நிறை குடம் அதன் பிறகு அருணோதயம். இதற்கு இடையில் ஜெய்சங்கரை வைத்து பொம்மலாட்டம், ஆயிரம் பொய் போன்ற படங்களையும் எடுத்தார். மிக மிக சாதாரண நிலைமையிலிருந்து முன்னேறி வந்தவர் என்பதால் படத்தயாரிப்பில் மிக கண்டிப்பாக இருப்பார் என்ற பெயர் இவருக்குண்டு. அனைத்து விஷயங்களையும் முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்றார் போல் பட்ஜெட் போட்டு படத்தை சிக்கனமாக முடிக்கக் கூடியவர் என்ற பெயர் இவருக்கு திரையுலகில் உண்டு. இவரும் இவரது மூத்த சகோதரர் முக்தா ராமசாமியும் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் எந்த சூழலிலும் சரியாக பிரதி மாதம் 1-ந் தேதி சம்பளம் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

    இவர்களின் கட்டுப்பாடான இந்த நடைமுறைதான் விசி சண்முகத்தை கவர்ந்தது என்று சொல்லுவார்கள். ஒரு முறை பிலிமாலயா மாத இதழில் ஜீனியஸ் கேள்வி பதிலில் சிவாஜியை வைத்து படமெடுக்க என்ன தகுதி வேண்டும் என்ற கேள்விக்கு "ஒன்று பாலாஜியை போல் இருக்க வேண்டும். இல்லை முக்தா ஸ்ரீநிவாசன் போல் நடக்க வேண்டும்" என்று பதில் சொல்லியிருந்தார்கள்.

    முதலில் சொன்னது போல் முக்தா நடிகர் திலகத்தை வைத்து எடுத்த இரண்டாவது படமான அருணோதயம் 1971 மார்ச் 5-ந் தேதி வெளியானது. மிக சரியாக இந்திய பாராளுமன்றத்திற்கும் தமிழக சட்டமன்றத்திற்கும் பொது தேர்தல் நடைபெற்ற நேரத்தில் வெளியானதால் அது பெற வேண்டிய வெற்றியை பெறவில்லை. அது மட்டுமல்லாமல் அந்த 1971 ஜனவரி 14 முதல் ஏப்ரல் 14 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் நடிகர் திலகத்தின் 6 படங்கள் வெளியான தகவலை பார்த்தோம். 90 நாட்களில் இரு துருவம், தங்கைக்காக, அருணோதயம், குலமா குணமா பிராப்தம் சுமதி என் சுந்தரி என்று ஆறு படங்கள் ரிலீஸ் ஆன நிலையிலும் பெருவாரியான ஊர்களில் 8 வாரங்களை கடந்து ஓடிய அருணோதயம் வர்த்தக ரீதியான வெற்றியை பெற்றது. உடனே தனது அடுத்த படத்திற்கு date வாங்கிவிட்டார் முக்தா.

    முக்தா எடுத்த ஆரம்ப கால நடிகர் திலகம் படங்களிலெல்லாம் ஒரு நோயை அடிப்படையாக கொண்ட நாயகன் அல்லது நாயகியை முன்னிறுத்தி கதை சொல்லியிருப்பார்கள். எனவே தவப்புதல்வன் படத்திற்கும் அப்படி ஒரு நோயை அடிப்படையாக வைத்து கதையை எழுதியிருந்தார் தூயவன். மாலைக் கண் நோய் என்று தமிழில் சொல்லப்படும் Night Blindness தான் இங்கு மெயின் விஷயம். தன் குடும்பத்தில் பாரம்பரியமாக வரும் இந்த நோய் தன் ஒரே மகனுக்கும் வந்துவிடக் கூடாது என தவிக்கும் தாய், தனக்கு ஏற்கனவே அந்த நோய் வந்துவிட்டது என்று தெரிந்தால் தாய் அதை தாங்க மாட்டாள் என்பதனால் தாயிடம் மறைக்கும் மகன், டாக்டராக பணிபுரியும் நாயகனின் முறைப்பெண், நாயகனின் சொத்திற்கு ஆசைப்பட்டு அவனின் இந்த நோயைப் பற்றியும் தெரிந்துக் கொண்டு அவனை பிளாக்மெயில் செய்யும் மற்றொரு பெண் என்று சுவையாக பின்னப்பட்டிருந்த கதை.

    படம் வெளிவருவதற்கு முன் முழு கதையும் தெரியாது என்ற போதிலும் படத்தைப் பற்றிய ஒரு outline பல பத்திரிக்கைகள் மூலமாக ரசிகர்களுக்கு தெரிந்திருந்தது. அன்றைய நாளில் நடிகர் திலகத்தை வைத்து ஆரம்பிக்கப்படும் புதிய படங்கள் அனைத்தும் வண்ணப் படங்களாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இந்த படம் கருப்பு வெள்ளையில் தயாரிக்கப்படுவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த போதிலும் அன்றைய நாட்களில் பத்திரிக்கைகளில் வெளிவந்த நடிகர் திலகத்தின் ஸ்டில்ஸ் அட்டகாசமாக இருந்தது. பல ஸ்டில்களில் ஜிப்பா அணிந்து காட்சியளித்த நடிகர் திலகம் நிச்சயமாக திராவிட மன்மதனாகவே தோன்றினார். பெரிய எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும் கூட ஒரு நம்பிக்கை இருந்தது.

    சென்ற பதிவில் பார்த்தது போல் இந்த படம் 1972 ஆகஸ்ட் 26-ந் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு வெளிவரும் நேரம்தான் நடிகர் திலகத்தின் அன்னையார் ராஜாமணி அம்மையார் ஆகஸ்ட் 24 அன்று காலமானார்.என்பதையும் பார்த்தோம். இதன் காரணமாக படம் வெளிவருவதில் ஏதேனும் சிக்கல் இருக்குமா என்று ஒரு சில ரசிகர்களுக்கு ஐயம் ஏற்பட்டபோதிலும் தொழில் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதில் வெகு தெளிவாக இருந்த நடிகர் திலகமும் விசி சண்முகமும் படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிடுமாறு சொல்லிவிட்டார்கள். அதன்படி 1972 ஆகஸ்ட் 26-ந் தேதி சனிக்கிழமை தவப்புதல்வன் வெளியானது.

    மதுரையில் சிந்தாமணியில் ரிலீஸ். ஒரு கால கட்டத்தில் தொடர்ந்து நடிகர் திலகத்தின் வெற்றிப் படங்களான காத்தவராயன், பாகப்பிரிவினை, விடிவெள்ளி, பாசமலர், புதிய பறவை, தில்லானா என்று தொடர்ந்து வெளியான சிந்தாமணியில் நடுவில் ஒரு சின்ன இடைவெளி விழுந்தது. 1968 ஜூலையில் வெளியாகி 132 நாட்கள் ஓடிய தில்லானாவிற்கு பிறகு சிந்தாமணியில் வெளியான நடிகர் திலகத்தின் படம் என்றால் அது தவப்புதல்வன்தான். இடையில் 1971 ஜூலையில் நடிகர் திலகத்தின் தேனும் பாலும் வெளியானது என்ற போதிலும் அது நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த காரணத்தினால் அதை பற்றிய ஒரு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆகவே வெகு நாட்களுக்கு பிறகு சிந்தாமணியில் வெளியாகும் நடிகர் திலகம் படம் என்ற பெருமையையும் தவப்புதல்வன் பெற்றது.

    ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும். அந்த 1972-ம் வருடத்தில் தொடர்ந்து நடிகர் திலகத்தின் நான்கு படங்கள் சனிக்கிழமையன்றே வெளியானது. 1972 மார்ச் 11 சனியன்று ஞான ஒளி, மே 6 சனிக்கிழமை பட்டிக்காடா பட்டணமா, ஜூலை 15 சனிக்கிழமை தர்மம் எங்கே, ஆகஸ்ட் 26 சனிக்கிழமை தவப்புதல்வன் என்று வெளியானது. என் நினைவிற்கு எட்டியவரை வேறு எந்த வருடத்திலும் இது போல் தொடர்ந்து சனிக்கிழமைகளில் நடிகர் திலகத்தின் நான்கு படங்கள் வெளியானதாக தெரியவில்லை.

    (தொடரும்)

    அன்புடன்

  12. #3417
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Box Office Manan | Sivaji Ganesan:

  13. Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  14. #3418
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    “உன்னைக் கரம் பிடித்தேன்
    வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
    பொன்னை மணந்ததனால் சபையில்
    சபையில் புகழும் வளர்ந்ததடி ..”
    கண்ணதாசனின் இந்த வரிகள் , நிஜ வாழ்வில் சிவாஜியின் மனைவி கமலா அம்மாளுக்கு என்ன அருமையாகப் பொருந்துகிறது...!
    1952-ல் , 24 வயது சிவாஜியை ,கரம் பிடித்த போது கமலா அம்மாவின் வயது 14 தானாம் ..!
    சிவாஜியின் வாழ்க்கை ஒளிமயம் ஆனதும் , சபையில் அவருக்குப் புகழ் வளர்ந்ததும் கமலா அம்மாவைக் கல்யாணம் செய்த பிறகுதான்...!
    சினிமாவில் தான் பேசும் ஒரு வார்த்தைக்கு ஓராயிரம் அர்த்தங்கள் கொடுக்கும் சிவாஜி , தன் நிஜ வாழ்க்கையில் பேசிய சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் தவித்திருக்கிறார் கமலா அம்மா...
    சிவாஜி இறப்பதற்கு சிலகாலம் முன் , அவரது மனைவி கமலா அம்மாள் தங்கள் குடும்ப நண்பர் ஆரூர்தாசிடம் இப்படிச் சொன்னாராம்...
    “இப்போல்லாம் 'கமலா! ஜாக்கிரதையா இருப்பியா.... ஜாக்கிரதையா இருப்பியா' ன்னு மாமா அடிக்கடி என்னைக் கேக்குறாரு.... ஏன் அப்படி கேக்குறார்னு எனக்குப் புரியலே... முந்தியெல்லாம் இப்படிக் கேக்கமாட்டாரு.... அது ஒண்ணுதான் எனக்குக் கவலையா இருக்கு... மத்தபடி எதுவும் இல்லே”
    ..இப்படிச் சொல்லிவிட்டு கலங்கிய கண்களை முந்தானையால் துடைத்துக் கொண்டாராம் கமலா அம்மா...
    அவர் இதைச் சொல்லும்போது சிவாஜியும் உடன் இருந்தாராம்...அவர் கண்களும் கூட கலங்கி இருந்தனவாம்..!
    இது நடந்த சில நாட்களில் ,சிவாஜியின் வாழ்வு முடிந்து போனது...!
    அப்போதுதான் கமலா அம்மாவுக்கு ,தன் கணவன் கேட்ட..” “கமலா! ஜாக்கிரதையா இருப்பியா..?” என்ற கேள்விக்கு அர்த்தம் புரிந்ததாம்...!
    இதைப் படிக்கும்போது ,நண்பரின் பதிவு நினைவுக்கு வந்தது...!
    # “ஒரு கணவன் , மனைவிக்கு கொடுக்கும் மிகப் பெரிய தண்டனை ..முதலில் இறந்து போவதுதான்..!”
    “காலச் சுமை தாங்கி போலே
    மார்பில் எனை தாங்கி
    வீழும் கண்ணீர் துடைப்பாய்
    அதில் என் விம்மல் தணியுமடி...”


    courtesy net

  15. Likes kalnayak, Russellmai liked this post
  16. #3419
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Part 5 of NT's original stunt scenes!!

    அள்ளஅள்ள குறையாத நடிப்பின் அமுதசுரபி நடிகர்திலகமே!!


    சண்டை சாகசக் காட்சிகளில் நடிகர்திலகத்தின் ஒரிஜினாலிட்டி! (No stunt doubles!) Risk and Rusk 5 Thangasurangam Vs Diamonds Are Forever /Thunderball


    ஒரு துப்பறிவாளருக்கு சொந்த வாழ்க்கையின் விருப்புவெறுப்புக்களை விட கவனம் முழுவதும் கண் இமைக்கும் நேரத்தில் கூட தனக்களிக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவதிலேயே இருக்க வேண்டும் என்பதை அழகாக எடுத்துக் காட்டிய ஜேம்ஸ் பாண்ட் ஷான் கானரியின் சண்டை சாகச முறைகளில் ஈர்க்கப்பட்ட
    நடிகர்திலகம் தங்கசுரங்கம் படத்தில் நேர்த்தியான முறையில் நம் மண்ணின் தன்மைக்கேற்ப சில மாறுதல்களுடன் அதை வெளிப்படுத்தியிருப்பார் பெண்ணே ஆயினும் அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்பது போல சிலசமயம் துப்பறிவாளர்கள் உண்மையை வரவழைக்க சிறு துன்பங்களை பெண்டிருக்கு இழைத்தே ஆகவேண்டிய சூழலில் இருப்பர்

    தங்கசுரங்கம் படத்திலும் ஷான் கானரியின் அணுகுமுறையை கைக்கொண்டு தண்டர்பால் டயமண்ட்ஸ் ஆர் பாரெவெர் படங்களின் பாணியில் உண்மையை வரவழைக்க கதாநாயகி பாரதியை சிறிது துன்புறுத்தி பிறகு தனது சண்டைத் திறமையை வெளிப்படுத்துவார் நடிகர்திலகம்

    Get thrilled by the approaches of Sean Connery / Sivaji Ganesan in their spy duty!!





    Last edited by sivajisenthil; 28th December 2014 at 08:50 AM.

  17. Likes kalnayak, Russellmai, KCSHEKAR liked this post
  18. #3420
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    யுகேஷ் பாபு சார்
    கமலா அம்மாள் பற்றிய தங்கள் பதிவிற்கு நன்றி.
    நடிகர் திலகம் ஜாக்கிரதையாக இரு என்று சொன்னாலும் அதற்கு அவசியமில்லாமல், கணவனை இழந்த துயரைத் தவிர வேறு துயர் ஏதும் அறியாமல் தான் கமலா அம்மையார் வாழ்ந்தார். நடிகர் திலகத்திற்குப் பின்னும் கமலா அம்மாவிற்குப் பின்னும் இன்று வரை அன்னை இல்லத்தில் அவர்கள் விட்டுச் சென்ற பணிகள் தொடர்ந்து கொண்டு தானுள்ளன.
    நடிகர் திலகத்தைப் பற்றிய நிழற்படங்கள் செய்திகள் என தாங்கள் இங்கு பகிர்ந்து கொள்வதற்கு மீண்டும் என் உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. Thanks J.Radhakrishnan thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •