Page 298 of 400 FirstFirst ... 198248288296297298299300308348398 ... LastLast
Results 2,971 to 2,980 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2971
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like

  2. Likes Russellmai, eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2972
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like

  5. Likes Russellmai, eehaiupehazij liked this post
  6. #2973
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அண்மையில் நம்முடைய நடிகர் திலகம் ரசிகர்கள் ஒரு 4, 5 பேர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இருவர் சென்னைவாசிகள். மற்ற இருவர் வெளியூர்வாசிகள். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் ஒவ்வொருவரும் ஒரு professional. ஒருவர் வழக்கறிஞர். ஒருவர் வங்கி அதிகாரி ஒருவர் பட்டய கணக்காளர் [பேசாமல் chartered accountant எழுதியிருக்கலாமோ?] ஒருவர் பத்திரிக்கையாளர். சிலர் அலைபேசி மூலமாகவும் சிலர் நேரில் சந்தித்தபோதும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் நமது Forum இணைப்பு லிங்க் கொடுத்தேன். சிலர் முன்பே படித்திருக்கிறார்கள்.

    நேற்றும் இன்றும் அதில் இரண்டு பேர் பேசினார்கள். திரியில் நிகழும் சில விரும்பத்தகாத விஷயங்களைப் பற்றி கூறி ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்டார்கள். அதில் ஒருவர் உண்மையிலே கவலையளிக்கக் கூடிய விஷயமாக இதைப் பேசினார். நான் அவர்களிடம் நீங்கள் நினைப்பது போல் பெரிய சண்டை ஒன்றுமில்லை என்று விளக்கினேன். அதில் ஒருவர் சமாதானம் அடையவில்லை.

    எதற்கு கூறுகிறேன் என்றால் சமூகத்தில் பல்வேறு உயர்நிலை பதவி வகிப்பவர்கள் நமது ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இது போன்ற விவாதக் களங்கள் நடிகர் திலகத்திற்காக இயங்கி கொண்டிருக்கின்றன என்று கேள்விப்படும் போது மிகுந்த ஆர்வத்துடன் அதை பார்வையிட முடிந்தால் பங்கு கொள்ள வருகிறார்கள். அவர்களுக்கு நாம் கொடுக்கும் ஷாக் இருக்கிறதே அது அவர்களை அவர்களின் ஆர்வத்தை அப்படியே நீர்த்துப் போக வைத்து விடுகிறது.

    இவர்களும் இவர்களைப் போன்றவர்களும் [நமது நண்பர் சுந்தர பாண்டியன் (sss) கூட ஒரு மருத்துவ நண்பரை அழைத்திருக்கிறேன் என்று சொல்லியிருந்தார்) நமது திரிக்கு வருகை புரியும்போது பங்கு கொள்ளும்போது திரியின் வலிமை கூடும் என்பது நான் சொல்லாமலே அனைவருக்கும் புரியக் கூடியதுதான். இது நடிகர் திலகம் தவிர வேறு யாருக்கும் கிடைக்காத பேறு.

    இதையெல்லாம் எண்ணிப் பார்த்து பதிவுகள் அமைவது அனைவரின் கைகளில்தான் இருக்கிறது.

    அன்புடன்

  7. Thanks eehaiupehazij, sss thanked for this post
    Likes Russellmai, Harrietlgy, eehaiupehazij, sss liked this post
  8. #2974
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வெள்ளிகிழமை நவம்பர் 14 முதல் நெல்லை மாநகர் சென்ட்ரல் திரையரங்கில் நடிக மன்னனின் வெள்ளை ரோஜா வெளியாகி வெற்றிகரமாக ஒரு வாரத்தை நிறைவு செய்தது. நெல்லையில் கடுமையான மழை. அந்த மழையிலும் ஒரோரு காட்சிக்கும் கணிசமான மக்கள் வந்திருந்து படத்தை கண்டு களித்திருக்கிறார்கள்.

    இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால் நீதி 9 நாட்கள் இப்போது வெள்ளை ரோஜா 7 நாட்கள். அதாவது ஒரு மாதத்தில் (30 நாட்களில்) 16 நாட்கள் நடிகர் திலகத்தின் படங்களே அந்த சென்ட்ரல் திரையரங்கில் ஓடியிருக்கின்றன. நடிகர் திலகத்தின் படங்கள் ஓடாது என்ற கணிப்புகள், ஜோசியங்கள், செயற்கை தடைகள் அனைத்தையும் தாண்டி இது நிகழ்கிறது. அதுவும் சாதாரணமாக ஓடவில்லை. இந்த இரண்டு படங்களுமே மறு வெளியீட்டு படங்களில் அதிக வசூலும் பெற்றிருக்கிறது. இன்றைய அன்றைய படங்களை விட அதிக வசூல் என்பது ஒரு போனஸ். இரண்டு படங்களையும் வெளியிட்ட விநியோகஸ்தரிடம் தியேட்டர் அதிபர் அடுத்த மாதம் மற்றொரு சிவாஜி படத்தை எங்கள் அரங்கில் திரையிடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருப்பது எக்ஸ்ட்ரா போனஸ் செய்தி.

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்

  9. Likes Russellmai liked this post
  10. #2975
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  12. #2976
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks to Mr Neyveli Vasudevan

    மெய் சிலிர்க்க வைத்த மெய்யான நடிகர்.

    தந்தை என்பது தெரியாமல் தங்கம் கடத்தும் தொழிலின் தலைவர் ஸ்பையைப் பிடிக்கப் போராடுகிறான் சிபிஐ அதிகாரி ராஜன். ஒவ்வொரு முறையும் ஸ்பையைப் பிடிக்க முயலும் போதெல்லாம் ராஜனின் திட்டங்கள் தோல்வியுறுகின்றன. ஸ்பை சாமர்த்தியமாக ஒவ்வொரு முறையும் ராஜனிடமிருந்து தப்பித்து விடுகிறான். யாரோ ராஜனுடைய திட்டங்களை ஸ்பைக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி விடுகிறார்கள். யார் அது?! குழம்புகிறான் ராஜன். அப்படி யாரும் இருப்பதாக அவன் நினைவுக்கு எட்டிய வரையில் வரவில்லை. ஆனால் அவன் தன்னுடைய தொழில் ரகசியங்களை தான் தாயிடம் மட்டுமே கூறுவான். இறுதியாக ஸ்பையை பிடிக்க இருக்கும் திட்டத்தை ராஜன் தன் தாயிடம் தெரியப்படுத்தி இருந்தான். இதிலும் ஸ்பை எஸ்கேப். இப்போது வருகிறது சந்தேகம் ராஜனுக்கு.

    தாயிடம் கோபமும் வருத்தமும் கலந்த நிலையில் வருகிறான் ராஜன். அவன் முகத்தைக் கண்டே அவன் தாய் அவன் உள்ளத்தைப் புரிந்து கொண்டு விடுகிறாள். தன் கணவனான ஸ்பையைக் காப்பாற்ற ராஜனின் திட்டங்களை ஸ்பையிடம் சொல்லி ஸ்பையை தப்பிக்க வைப்பவளே அவள்தானே! மேலும் தன் கணவனைப் பற்றி ராஜனிடம் அவள் மூச்' விட்டதில்லை. அப்படி சொன்னால் ராஜன் தன் தந்தையை அரெஸ்ட் செய்து விடுவானே!

    மகனின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் தவிக்கிறாள் தாய். போன காரியம் வெற்றியடையாமல் திரும்பி வந்ததை மகனின் முகம் காட்டுகிறது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு போன காரியம் வெற்றியடந்ததா என்று மேலுக்குக் கேட்கிறாள். ராஜன் வெற்றியடைந்து விட்டதாக ஜாடை செய்கிறான் வேண்டுமென்றே! பதறுகிறாள் தாய். தன் கணவன் தன் மகனிடம் பிடிபட்டு விட்டானோ என்று ஒருகணம் ஸ்தம்பித்துப் போகிறாள். அந்தக் கணமே தன் தாயின் முக பிரதிபலிப்புகளின் மூலம் தன் திட்டங்களுடைய தோல்விகளுக்கெல்லாம் அவள்தான் காரணம் என்று கண்டுபிடித்து விடுகிறான் ராஜன்.

    எரிமலையாய் வெடிக்கிறான் ராஜன். தன் தாய் யாரோ ஒருவனைக் காப்பாற்ற தன்னை ஏன் பலிகடா ஆக்கினாள் என்று குமுறுகிறான். வார்த்தைகளால் அவளைக் கொல்கிறான். தன் தாய் இரண்டாவதொரு வாழ்க்கை வேறொருவனிடம் வாழ்கிறாள் என்று அவளிடமே கேட்டு அவளைத் துடிக்க வைக்கிறான். அப்போதுதான் அந்தத் தாய் மகன் தேடும் அந்த ஸ்பைதான் அவனின் தந்தை என்ற உண்மையை வெளிப்படுத்துகிறாள். அதிர்ச்சியில் சிலையாய் உறைகிறான் ராஜன். தன் தாய் குற்றமற்றவள் என உணருகிறான். அதே சமயம் ஒரு பயங்கரக் குற்றவாளியைத் தப்பிக்க வைத்த குற்றவாளியாய் தன் தாயைப் பார்க்கிறான். சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பாச பந்தங்களை அறுத்து, தாயென்றும் பாராமல் அவளைக் கைது செய்கிறான். வேதனையின் விளிம்புக்கே செல்கிறான்.

    தாயாக எஸ்.வரலஷ்மி. தந்தையாக O.A.K.தேவர்.

    சிபிஐ அதிகாரி ராஜனாக நம் நடிகர் திலகம்.

    கேட்கவும் வேண்டுமோ! அற்புதமான சில நிமிடக் காட்சிகள்.

    ஸ்பையைப் பிடிக்கும் முயற்சியில் தோல்வியுற்று, தன் தாயின் மேல் சந்தேகப்பட்டு வீட்டுக்கு வரும் நடிகர் திலகம் எதுவுமே பேசாமல் தடுமாறும் தன் தாயைப் பார்க்கும் அந்தப் பார்வை...தன் தோல்விகளுக்கு அவள்தான் காரணமோ என்ற சந்தேகப் பார்வை... தன் தாய் குற்றவாளியா இல்லையா என்று ஊர்ஜிதம் செய்து கொள்ளத் துடிக்கும் அந்தக் கண்கள்... தன்னிடம் காபி கொடுக்கும் அவளின் கை நடுங்குவதைக் கவனித்து தீர்க்கமாக அவளையே ஆழமாக ஊடுருவிப் பார்க்கும் அழுத்தமான அமைதிப் பார்வை...

    "போன காரியம் வெற்றியா முடிஞ்சுதாப்பா?" என்று கேட்கும் வரலஷ்மியிடம் மெளனமாக "முடிந்தது" என்பது போல தலையாட்டும் பாவம்..."அவுங்களைப் புடிச்சிட்டியா?" என்று தாய் கேட்க "ஆமாம்" என்பதற்கான ஆழமான தலையசைவு... "அவுங்க இப்ப ஜெயில்லதான் இருக்காங்களா" என்பவளிடம் அதற்கும் "ஆமாம்" என்று வசனமில்லாமலேயே பொய்யாக உணர்த்தும் அற்புதம்...

    தன் கணவன் தன் பிள்ளையிடம் மாட்டிக் கொண்டானே என்று அவள் அழும் போது வெடிக்க ஆரம்பிப்பார். தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு அவள்தான் காரணம் என்று கதறுவார். "அந்த ஸ்பைக்கும் உங்களுக்கும் என்ன உறவு?" என்று கேட்டு "இரண்டாவது வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கீங்களா அம்மா?" என்று அவமானத்தால் கூனிக் குறுகிப் போவார். பின் அந்த ஸ்பைதான் ராஜனின் அப்பா என்று விளக்கியவுடன் அப்படியே சிலையாகி விடுவார். பின் அவள் தன்னுடைய பிளாஷ்பேக்கை சொல்லி தன் கணவனும் ராஜனின் தந்தையுமான ஸ்பை எப்படி தேசத்துரோகி ஆனான் என்று விளக்கும் போது சோபாவில் அண்ணாந்து சாய்ந்தபடியே வெறித்து நோக்கியபடி இருப்பார். எதையும் பேசவே மாட்டார்.

    தாயைக் கைது செய்யுமுன் அவளைப் பார்க்க முடியாமல் கண்கலங்கும் காட்சி



    பின் மேலதிகாரியிடம் பெர்மிஷன் வாங்கிக் கொண்டு வந்து தாயை அரெஸ்ட் செய்வார். காவல் அதிகாரிகள் தன் கண்முன்னமேயே தன் தாயை அரெஸ்ட் செய்யும் போது கண்களில் குளமாய் தண்ணீர் தேங்கி நிற்கும். கோட் தோள்களில் சுமக்கப்பட்டிருக்கும். நேராக நிற்க மாட்டார். கதவில் சாய்ந்தபடி நிற்பார். நிற்பதில் ஒரு தொய்வு தெரியும். தன் தாய் கள்ளமற்றவள் என்ற திருப்தியைத் தாண்டி தன் தாய் ஒரு தேசத் துரோகியை தப்பிக்க வைத்தவள் என்ற ஆத்திரம் மேலோங்கி இருக்கும். அவமானத்தால் அசிங்கப்பட்டு நிற்பது போல நிற்பார். அதே சமயம் தன் தாயைத் தவிர யாருமில்லாத தான் எப்படி இனித் தனியாக வாழ முடியும்? என்ற ஏக்கம் அந்த நிற்கும் பாவனையில் பிரதிபலிக்கும். தன் தாய் தன் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் தன் தாயைப் பார்க்க முடியாமல் (பிடிக்காமல்) வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொள்வார். காவலர்கள் தன் தாயை கைது செய்து அழைத்துச் சென்றவுடன் தன் தாயை நானே கைது செய்து விட்டேனே என்ற குற்ற உணர்வில் கோபமும், வேதனையும் கொப்பளிக்க, உணர்ச்சிப் பிரவாகம் வெள்ளமாய்ப் பொங்க, யாரிடமும் சொல்லித் தேறுதல் படுத்திக் கொள்ளக் கூடிய சூழ்நிலை கூட இல்லாமல் சோபாவில் அமர்ந்து கண்களைக் கைகளால் மூடியபடியே, கால்களைத் துடிக்க வைத்தபடியே துவள்வார். மௌனமும், ஆர்ப்பாட்டமுமாய் நெஞ்சு விம்ம அழுவார். அது அமைதியான அழுகையா... ஆர்ப்பாட்டமான அழுகையா என்று அந்த ஆண்டவனுக்கே தெரியாது. அப்படி ஒரு அற்புதம் கலந்த அழுகைக் கலவை அது.

    தாயை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு தன்னந்தனியே துடிக்கும் அற்புத சீன்



    மிக மிக வித்தியாசமான காட்சி. அற்புதத்திலும் அற்புதம். என் மனதை விட்டு இமைப் பொழுதும் நீங்காத காட்சி. ஆண்டவன் படைப்பின் அற்புதங்களில் அற்புதமான அண்ணனின் அற்புத நடிப்பில் நான் மெய் மறந்த, மெய் சிலிர்த்த காட்சி. நிலை மறந்த காட்சி.

    படம்: தங்கச் சுரங்கம்.

  13. Likes Russellmai liked this post
  14. #2977
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks to Mr Neyveli Vasudevan


    Film: Anjal Petti 520

    ஸ்ஸ்....யப்பா... வெயில் ஆரம்பிச்சுடுச்சா... தாங்க முடியல்ல... கொஞ்சம் தண்ணி குடு....

    என்னடா ஒரே டயர்டா வர்ற?

    இல்லப்பா...ஆபீஸ்ல ஒரே வேலை. இந்த ஜெனரல் மானேஜேர் ரொம்பத்தான் வேலை வாங்குறாரு...

    பொழப்பாச்சேப்பா... பொறுத்துத்தான் ஆகணும்...

    அது சரி! உனக்கென்னப்பா ... ஜாலி கேஸ். சினிமா, டிராமான்னு உம்பொழுது ஓடுது... வாத்தியார் வேலை... ஸ்கூல் விட்டா உனக்கு வேற வேலைவெட்டி இல்ல... என்னை மாதிரியா? பிரமோஷனும் கெடைக்க மாட்டேங்குது....ம்...நானும் மாஞ்சி மாஞ்சிதான் வேலை செய்யுறேன்...எப்பதான் கெடைக்குமோ?...

    என்னடா!... அஞ்சல் பெட்டி 520 படத்தில சிவாஜி அலுத்துக்குற மாதிரி அலுத்துக்குற?

    அதானே பார்த்தேன்... என்னடா இன்னும் எலி எட்டு முழ வேட்டி கட்டலேயேன்னு? சிவாஜியைப் பத்தி பேசலைன்னா உனக்கு தூக்கம் வராதே!

    என்னடா பண்றது?...ரத்தத்தில ஊறிப் போச்சே! டெய்லி அவரு படம் பாக்கலேன்னா எனக்குத் தூக்கம் வராதே!

    சரி! சரி! என்னவோ அஞ்சல் பெட்டி 520... அது இதுன்னு சொன்னியே...சிவாஜி நடிச்ச படம்தானே அது? லேசா ஞாபகம் இருக்கு...

    ஆமாம்... ஆமாம்... நேத்து மறுபடியும் ஒருதடவ DVD யில போட்டுப் பார்த்தேன்...சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாப் போச்சு...

    அப்படியா... வழக்கமா சிவாஜியோட படம் சோகமாத்தானே இருக்கும்?... நீ என்னவோ புதுசா சொல்ற!...

    ரொம்பப் பேரு அப்படிதான் நெனச்சுகிட்டு இருக்கீங்க... அப்படியெல்லாம் இல்ல... நல்ல காமெடிப் படங்கள்லயும் அவர் நடிச்சிருக்கார்.

    எனக்குத் தெரிஞ்சு ஒன்னு ரெண்டு படம் அப்படி இருந்திருக்கு... ம்... கலாட்டா கல்யாணம் மட்டும் பார்த்திருக்கேன். செம காமெடி... வேற என்னென்ன சிவாஜி படம் காமெடியா இருக்கும்?

    மடையா... பலே பாண்டியாவை மறந்துட்டியே?

    அட... ஆமாமில்ல...சூப்பராசே அது...அப்புறம்?

    கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, ராஜா ராணி, கோட்டீஸ்வரன், சபாஷ் மீனா, மூன்று தெய்வங்கள், சுமதி என் சுந்தரி, அன்பே ஆருயிரே, எமனுக்கு எமன்...இப்படி நிறைய இருக்கு.... அதுல ஒண்ணுதான் அஞ்சல் பெட்டி 520..

    சரி! டிவிடி கொடு... நைட்டு வீட்டுல பார்த்துட்டு நாளைக்கு கொடுத்திடறேன்.

    ஃப்ரீயாக் கொடுத்தா ஃபெனாயிலக் கூட குடிச்சிடுவியே! ஓசி கிராக்கி...

    கிண்டலடிக்காதே! உங்க ஆளு படம்ப்பா...பார்த்தா உனக்குத்தானே பெருமை!

    இப்படியே பேசிக் கவுத்துடு... இப்படி ஓசியிலே வாங்கிப் பார்த்தா DVD எப்படி சேல்ஸ் ஆகும்?... இன்னைக்குத் தரேன்... இனிமேலாவது காசு கொடுத்து வாங்கிப் பாரு....

    (அடுத்த நாள் மாலை)

    வாடா... வாடா...என்ன ஆச்சர்யமா இருக்கு!...எப்பவும் மூஞ்ச தொங்கப் போட்டுகிட்டு வருவே! இன்னைக்கு வாயெல்லாம் பல்லா இருக்கு!...

    பின்ன என்னப்பா... நீ பாட்டுக்கு அஞ்சல் பெட்டி 520 DVD யைக் கொடுத்து பாக்கச் சொல்லிட்டே...

    (இடைமறித்து)

    எலேய்... நீ DVD ஐ வாங்கிட்டுப் போயிட்டு நான் கொடுத்தேன்னு சொல்லுற....

    சரி... சரி.. விடு... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. நைட்டு போட்டுப் பார்த்தேனா...வயிறு புண்ணாப் போச்சுப்பா...சிரிப்பை இன்னும் அடக்க முடியல்ல..
    ஆபீஸ்ல வேலை செய்யும் போது கூட உங்க ஆளு, நாகேஷ், தேங்காய் அடிக்கிற கூத்தை நெனச்சு நெனச்சு ...யப்பா... முடியல்ல...வயிறு நோகுது...

    இப்ப என்ன சொல்ற... எங்க ஆளு காமெடியைப் பத்தி?

    கேக்கணுமா! அவரு ஒரு மகா மெகா நடிகருப்பா... நீயெல்லாம் அவரு மேல ஏன் பைத்தியமா இருக்கேன்னு இப்பத்தான் புரியுது... மனுஷன் காமெடியில கலக்குறார்...

    என்னைக்குமே எங்க ஆளுக்கு எங்க அத்தனை பேரு காலரையும் தூக்கி விட்டுக் கொள்ளச் செய்துதான் பழக்கம்... சரி படத்து கதை பிடிச்சிருக்கா?....

    வித்தியாசமான கதைதாம்பா.. மேஜரோட கம்பெனியில பொறுப்பான பதவியிலே வேலை செய்யிறாரு உங்க ஆளு... போஸ்ட் ஆபீஸ்ல வேலை செய்யிற சரோஜாதேவியோட லவ் வேற...மேஜர் ஆபீசுல வேலை செய்யிற ஜெனெரல் மேனஜர் திடீர்னு இறந்து போயிட்றதுனாலே அந்த GM போஸ்ட்ட மேஜர் தனக்குத் தான் தருவாருன்னு அபார நம்பிக்கை வச்சிருக்கார் சிவாஜி... மேஜரும் அந்தப் பதவி சிவாஜிக்குன்னுதான் தீர்மானம் பண்ணி வைக்கிறாரு... ஹீரோயினோட அப்பா தங்கவேலு ஒரு பணப் பைத்தியம்... தன் மகள் சிவாஜியைக் காதலிப்பதை முதல்ல ஒத்துக்குற அவர் சிவாஜியை விட அதிக சம்பளம் வாங்குற தன்னுடைய மருமகனான வில்லன் நம்பியாருக்கு சரோஜாதேவியை கல்யாணம் பண்ணிக் கொடுக்க மனசு மாறிடறாரு .... ஏன்னா சிவாஜியை விட நம்பியார் அதிக சம்பளம் வாங்குறாருன்னு. சிவாஜிக்கோ பிரமோஷன் கெடைச்சா நம்பியாரை விட கூட சம்பளம் கெடைக்கும்.. சிவாஜி ஆவலா காத்திருக்க அவரு எதிர்பார்த்த GM பதவி திடீர்னு அவருக்கு கெடைக்காம போயிடுது... ஏன் கிடைக்கலேன்னு
    காரணமும் தெரியல்ல அவருக்கு...

    ஆனா நடந்த விஷயமே வேற... தனக்கு வர வேண்டிய ஒரு கடன் பாக்கிக்காக மேஜர் GM பதவியை தன் கம்பெனியில வேலை செய்யிற ராமாதாசுக்கு தர்றதா ஒரு பொய்யச் சொல்லி, நைஸா டிரிக் பண்ணி, ராமதாஸ் அப்பாவிடம் தனக்கு வர வேண்டிய கடனை வசூல் செஞ்சிக்கிட்டு அப்புறமா GM பதவி ராமதாசுக்கு இல்ல... சிவாஜிக்குதான்னு சொல்லி கையை விரிச்சுடராரு

    இது தெரியாத சிவாஜிக்கு மேஜர் மேல செம கோபம் வந்துடுது. மேஜர் இப்படி தன்னை பழிவாங்கிட்டாரேன்னு பயங்கரமா ஃபீல் பண்றாரு சிவாஜி... அவரு கோவத்துக்கு தூபம் போட்டு அவரை மேலும் உசுப்பேத்தி விட்டுடுறாங்க அவரு சிநேகிதங்க நாகேஷும், தேங்காய் சீனிவாசனும். திடுதிப்புன்னு கோபத்துல மேஜரை நல்லா கன்னா பின்னான்னு வசவு பாடி ஒரு லெட்டரை எழுதி அதை மேஜருக்கு போஸ்ட் வேறு பண்ணித் தொலைச்சிடறாங்க.... லெட்டரப் போஸ்ட் பண்ணிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தா மேஜர் சிவாஜியை GM போஸ்ட்டை ஏத்துக்கச் சொல்லி தந்தி அனுப்பிச்சிருக்காரு...

    எலேய்! என்கிட்டியே கதை உடுறியா?

    அட இருப்பா... இன்ட்ரெஸ்டா கதை சொல்லிக்கிட்டு இருக்கேன் குறுக்க நீ வேற?.... இம்...எங்க விட்டேன்?... சிவாஜியை GM போஸ்ட்டை ஏத்துக்கச் சொல்லி தந்தி அனுப்பிச்சிருக்காரு மேஜரு . எப்படி இருக்கும் சிவாஜிக்கு! சும்மா பேயறஞ்சா மாதிரி ஆயிடுறாரு.. அப்பத்தான் அந்த ஐடியாவை சிவாஜிக்கு கொடுக்கிறாரு நாகேஷ்.. எப்படியாவது அந்த லெட்டரை மேஜர் கையில் கிடைக்காம செஞ்சுட்டா!? ...

    அப்புறமென்ன... ஜிவ்வுன்னு சும்மா ராக்கெட் மாதிரி போகுது கதை... அந்த லெட்டரை எப்படியாவது கைப்பற்றனமுன்னு சிவாஜி குரூப் பல முயற்சிகள் செய்யுது.... ஆனா எல்லாத்துலேயும் தோல்விதான் கிடைக்குது... ஆனா நம்ம வயிற்றை புண்ணாக்குறதுல இந்த டீம் முழு வெற்றி அடையுது...

    கடைசியில லெட்டர் மேஜர் கையிலேயும் கிடச்சுடுது....என்ன ஆகப் போகுதோ என்று நெஞ்சு திகில் படம் பார்ப்பதைப் போல டக்கு டக்குன்னு அடிச்சிக்க...
    கடைசியில பார்த்தா.. அந்த லெட்டர்ல மேஜரை திட்டி எதுவுமே இல்ல... என்னடா இதுன்னு சிவாஜி முழிக்க லெட்டரை எழுதின தேங்காய் சிவாஜி, நாகேஷுக்குத் தெரியாமல் அந்த லெட்டரை மேஜரைத் திட்டாமல் நல்லவிதமாகவே மரியாதையுடன் எழுதி இருப்பது தெரிய வருகிறது. இறுதியில் எல்லாம் சுபமங்களமாக முடிய ஹீரோயினைக் கரம் பிடிக்கிறார் உங்க ஹீரோ...

    சரிடா!... சரிடா!... நீ படம் பார்த்துட்டேன்னு ஒத்துக்கிறேன். கதையில ஒரு சிலதை விட்டுட்டியே!

    ஒ.... வில்லன் நம்பியார் கதையை விட்டதை சொல்றியா... அது ஒண்ணும் அவ்வளவு பிரமாதம் இல்ல .. விறுவிறுப்பு மசாலாவுக்காக நம்பியார் போலி பால் பவுடர் டின் தயாரிக்கும் வில்லனா வந்து, காதலிலும், தொழிலிலும் சிவாஜிக்குப் போட்டியா வந்து, தொல்லைகள் கொடுத்து வில்லத்தனங்கள் செய்து இறுதியில் சிவாஜியிடம் "டிஷ்யூம்... டிஷ்யூம்" வாங்கி கைதாகிறார். அவ்வளவே.

    பரவாயில்லடா.. நீ கூட சுருக்கமா கதை சொல்லக் கத்துகிட்டியே!

    பின்னே... நீ கூட நெட்டுல உங்க ஹப்போ திரியோ என்னவோ காட்டுவியே... அதுல வாசுதேவன்னு ஒருத்தர் சிவாஜியைப் பத்தி எழுதுவாருன்னு சொல்லுவியே அவுரு மாதிரி விலாவாரியா சொல்ல எனக்குத் தெரியாதுப்பா... ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்...

    எலேய்! என்ன நக்கலா?... சரி எங்க ஆளு நடிப்பு எப்படி?

    பைத்தியம்... கரும்பு இனிக்குமான்னு கேக்குற....கிளப்புறாருய்யா காமெடியில உங்க ஆளு... சும்மா மன்மதன் கணக்கா அழகுன்னா அழகு... சொந்த ஹேர் ஸ்டைலா அது?

    ஆமாம்...எப்படி இருக்காரு பாத்தியா? நான் மட்டும் பொண்ணப் பொறந்திருந்தா அவரத்தான் கட்டி இருப்பேன். அழகன்டா...

    சும்மா காலேஜ் படிக்கிற பையனாட்டம் சிக்குன்னு இருக்கிறார் உங்க ஆளு.... சரோஜாதேவியை ஏமாற்ற பொய் மூக்கை போட்டுக் கொண்டு கலாய்க்குறதிலேயும் சரி...மேஜர் மேல வைத்திருக்கிற மரியாதையிலேயும் சரி... GM போஸ்ட் கிடைக்கிலேன்னு சட்டுன்னு சாதா சராசரி மனுஷாளைப் போல கோபப்படுறதிலேயும் சரி... போஸ்ட் பண்ண லெட்டரை எடுக்க முடியாமல் தோல்வியடையும் போதும் சரி... மேஜர் நல்லவர் என்று தெரிந்து தான் செய்த தவறை நினைத்து வருந்தும் போதும் சரி...வில்லன் வலையில் சிக்கி இறுதியில் கோர்ட்டில் கலக்கும் போதும் சரி...கோர்ட் சீனுன்னாலே உங்க ஆளுதாம்ப்பா...ரொம்ப இயல்பா நகைச்சுவையா செஞ்சிருக்கார். ஆனா எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது அவரோட அழகும், இளமையும்...அது ஒன்னே போதும்...

    உனக்கு சரோஜாதேவின்னா ரொம்பப் பிடிக்குமே.... இதில எப்படி?

    நடிப்பு OK. ஆனா தோற்றத்தில கொஞ்சம் முற்றிப் போய் தெரியிறாங்க...உங்க ஆளுக்கு அக்கா மாதிரி இருக்காங்க... இருந்தாலும் பரவாயில்லை... சமாளிச்சுடறாங்க...

    மத்தவங்களைப் பத்தி சொல்லேன்..

    நாகேஷ், மனோரமா, தேங்காய், வி.கே.ஆர், வெண்ணிற ஆடை மூர்த்தி, சுருளி, தங்கவேலு என்று ஒரே நகைச்சுவைப் பட்டாளம்... வெடிச் சிரிப்புக்கு பஞ்சமே இல்லை... அதுவும் நாகேஷ் டிரெயினில் லெட்டர் பார்சலை எடுக்க முடியாமல் விட்டுவிட்டு நிற்கும் சைக்கிளில் தன்னை மறந்து நான் மதுரைக்குப் போறேன் என்று பெடல் பண்ணுவது பக்கா சிரிப்பு. நம்பியார் வழக்கம் போல முறுக்குகிறார். மேஜர் அருமை. உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்னு நெனச்சேன்... காலில்லாத போலீஸா ஒருத்தரு நம்ம ஊர்ல நைட்டுல சுத்துற கூர்க்கா கணக்கா வந்து துப்பறியிறாரே! அவரு யாருப்பா...

    அவரா... அவரு பேரு முத்தையா... இந்தப் படத்தில்தான் அறிமுகம். இந்தப் படத்துல நடிச்சி பாப்புலர் ஆனதாலே அவருக்கு 'அஞ்சல் பெட்டி' முத்தையான்னே பேரு நெலைச்சிடுச்சி...

    இதெல்லாம் விவரமா தெரிஞ்சி வச்சிருப்பியே! டைரக்டர் கூட புதுசோ?

    ஆமாம்... டி என்.பாலு அப்படின்னு ஒருத்தர். டி.ஆர். ராமண்ணா தெரியுமில்லே... அவருகிட்ட அசிஸ்டென்டா இருந்தவரு...

    உங்காளுக்கு ரொம்பத் துணிச்சல்தாம்பா... ஒரு புது இயக்குனர் படத்துல தைரியமா துணிஞ்சி நடிச்சிருக்காரே. அதுவும் காமெடி ரோல்ல..

    ஏன் சிவாஜியே சொல்லியிருக்காரே ஒரு புது இயக்குனர் இந்தப்படத்தின் மூலம் கிடைச்சாருன்னு... உனக்கு ஒன்னு தெரியுமா... எங்காளுக்கு காமெடி படங்களில் நடிக்கிறது ரொம்பப் பிடிக்குமாம். அதனால்தான் கலாட்டா கல்யாணம் சுமதி என் சுந்தரி படங்களையும் தன் மகன் ராம்குமார் பெயரிலே எடுத்திருக்கார். மியூசிக் நல்லாயிருக்கில்லே?

    யாரு நம்ம எம்.எஸ்.வி தானே?

    நாசமாப் போச்சு... பழைய சிவாஜி படம்னா கண்ண மூடிக்கிட்டு எம்.எஸ்.வி ன்னு உளற வேண்டியது....R. கோவர்த்தனன் அப்படின்னு ஒருத்தர்தான் இப்படத்துக்கு இசையமைப்பாளர். எனக்கு டி .எம்.எஸ், எல்.ஆர்.ஈஸ்வரி ரெண்டு பேரும் பாடிய 'பத்துப் பதினாறு முத்தம் முத்தம்' பாட்டு ரொம்பப் பிடிக்கும். உனக்கு...

    எனக்கு சுசீலா அழகாகப் பாடியிருக்கும் "திருமகள் என் வீட்டைத் தேடி வந்தாள்" பிடிச்சிருக்கு...அப்புறம் இன்னொரு மேட்டர்.

    தம்பி! நீ எங்க வரேன்னு புரியுது... நீ வழியறதைப் பார்த்தாலே புரியுதே...ஆதி மனிதன் பாட்டைப் பத்திதானே சொல்ல வர?

    ஹி.ஹி...ஆமாம்... இந்த விஜயலலிதா டான்ஸ் கொஞ்சம் ஓவர்தாம்பா. இருந்தாலும் ரெண்டு தடவை பார்த்துட்டேன்பா..சும்மா ஈஸ்வரி பாடிக் கலக்குது சாமியோவ்.

    நீ திருந்தவே மாட்டே! மேல போ...

    ஒளிப்பதிவு சில இடங்கள்லே பளிச். சில இடங்கள்லே சொதப்புது... சில இடங்கள்லே குரலும் காட்சியும் மேச் ஆகல்லே... நம்பியார் காட்சிகள் இழுவையாத் தெரியுது. எது எப்படியோ...உங்காளுக்கு இது வித்தியாசமான படமா எனக்குப் படுது.

    பணம், நான் சொல்லும் ரகசியம் படங்களில பேயாய் பணத்துக்கு தங்கவேலு அலைவாரே அதே ரோலை இதில் செஞ்சிருக்கார் பல வருஷங்களுக்கு அப்புறம்... முழுக்க முழுக்க காமெடி படம்கிறதனாலே சில தப்பையெல்லாம் மன்னிச்சுடலாம். மொத்தத்தில படம் எப்படின்னு சொல்லு...

    உன்கிட்ட படம் சுமார்னு சொல்லக் கூட பயமாய் இருக்கே! உங்காளு படம்கிறதனாலே எதனாச்சும் சொன்னா என் பட்டையை உரிச்சுடுவியே!

    என்ன செய்றது? சிவாஜின்னா உயிரு எனக்கு. அப்படியே பழகிப் போச்சு! சரி! சரியான விமர்சனத்தை சொல்லுடா....

    எனக்குப் பிடிச்சிருக்குப்பா... மனம் விட்டு சிரிக்கலாம்...ரசிக்கலாம். ஆஹாவுமில்லை...ஓஹோவுமில்லை..மோசமுமில்லை.. காமெடிதான் பிரதானம்... நாள் முச்சூடும் உழைக்கிற எனக்கு பார்க்க ஜாலியா இருக்குப்பா... வேற என்ன படம் வச்சிருக்க? ஹ...வர்ர்ட்டா..

    ம்...ஓசியில படம் பார்த்தா ஜாலியாத் தான் இருக்கும். DVD யைக் கொடு. நெட்டுல எங்க ஆளுங்க எல்லாரும் பார்க்கணும்...மொவனே போயிட்டு வா...அடுத்த படத்தையாவது காசு கொடுத்து வாங்கிப் பாரு.

  15. Likes Russellmai liked this post
  16. #2978
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks to Mr Neyveli Vasudevan

    பொதுவாகவே எல்லோரும் ஏன் நமது ரசிகர்களும் கூட ஏதோ இருநூறு படங்களுக்கு மேல் வந்த தலைவரின் படங்கள் சுமார் ரகம் தான். இருநூறோடு அவர் நிப்பாட்டி இருக்கலாம் என்று கூறுவார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. பழைய படங்களின் தரத்தை புதிய படங்களில் காண முடியாது என்பது வேறு விஷயம். அதற்காக பழைய படங்களின் தரத்தை அப்படியே புதிய படங்களில் எதிர்பார்க்காமல் அதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளலாமே! நான் குறிப்பிடுவது இப்போது வரும் புதுப் படங்களை அல்ல. இருநூறுக்கு மேல் வந்த தலைவரின் திரைப்படங்களைப் பற்றி.

    திரிசூலத்திற்குப் பிறகும் பல நல்ல படங்கள், வெற்றிப்படங்கள் வந்திருக்கின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை. இது என்னுடைய சொந்தக் கருத்து.

    திரிசூலத்திற்கு அடுத்து 201- ஆவது படமாக வந்த 'கவரிமான்' ஒரு அற்புதமான படம் என்று எல்லோராலுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. தலைவர் கூட இயக்குனர் திரு S.P.முத்துராமன் அவர்களிடம் "செதுக்கி செதுக்கி அழகான சிற்பமாய் இப்படத்தை வடித்திருக்கிறாய். ஜனங்கள் ரசிப்பார்களா?" என்று கேட்டாராம். அந்தப் படத்தை தரக் குறைவாக யாருமே விமர்சித்ததே இல்லை. அதற்கு முன்னால் வந்த திரிசூலத்தின் விஸ்வரூப வெற்றியினால் கவரிமான் பாதிக்கப்பட்டதே தவிர நல்ல படம் என்ற பெயரை அது இழக்கவே இழக்காது. மிகப் பெரிய வெற்றி அடையாவிட்டாலும் அது தோல்விப்படமல்ல. (பம்மலாரின் 'கவரிமான்' பதிவின் குறிப்பில் இதனை கவனித்திருப்பீர்கள்).

    'நல்லதொரு குடும்பம்' அனைவரும் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஒரு நல்ல படம். நல்ல வெற்றியைப் பெற்ற படமும் கூட. எங்கள் கடலூரில் 40- நாட்களுக்கு மேல் ஓடி நல்ல வசூலை அள்ளித் தந்தது அப்படம்.

    'இமயம்' தோல்விப் படமென்றால் கூட இப்போது பாருங்கள். very intersting -ஆன தலைவரின் நடிப்பு முத்திரைகளைத் தன்னகத்தே கொண்ட படம்.

    'நான் வாழ வைப்பேன்' நல்ல வெற்றிப்படம். ரஜினிக்கு மறுவாழ்வு தந்த படம். நம் தலைவரும் அருமையாகப் பண்ணியிருப்பார்.(முக்கியமாகத் தலைவலி வரும் காட்சிகளில்)

    'ரிஷிமூலம்' அனைவராலும் பாராட்டுப் பெற்று வெற்றியடைந்த படம்.

    'எமனுக்கு எமன்' ஜாலியாகப் போகும் படம். சிரிப்புக்கு 100% உத்திரவாதம்.

    'சத்திய சுந்தரம்' எதிர்பாராத பிரம்மாண்ட வெற்றியை அளித்த கலகலப்பான குடும்பப்படம். குவியல் குவியலாக தாய்மார்கள் இப்படத்தைக் கண்டு களித்தார்கள். நல்ல குடும்பப் படமாக குறிப்பாக பெண்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தது.

    இதே வரிசைகளில் கல்தூண், கீழ்வானம் சிவக்கும், வா கண்ணா வா, வசூலில் அட்டகாசம் செய்த சங்கிலி (பொதுவாக இரவுக்காட்சிகள் 9.30 அல்லது 10.00 மணிக்குத் துவங்கும். ஆனால் சங்கிலி கதையே வேறு. கடலூரில் இரவு பதினோரு மணிக்குள் இரவுக்காட்சி முடிந்துவிடும். இந்தப் படம் மட்டுமே அந்தப் பெயரைத் தட்டிச் சென்றது. அப்படி ஒரு கூட்டம் இப்படத்திற்கு. ஷோ கணக்கெல்லாம் கிடையாது. படம் விட்ட ஐந்தே நிமிடங்களில் அரங்கு நிறைந்து விடும். இப்படி பேயக்கூட்டத்துடன் எங்கள் ஊரிலும் ஓடி வசூலை வாரி அள்ளினார் 'சங்கிலி').

    தீவிர வசூல் வேட்டியாடிய தீர்ப்பு, அற்புத நடிப்பைக் கொண்ட தியாகி, கேஷுவல் நடிப்பில் மனதை உருக்கிய துணை, மறுபடியும் பிராமணராக நடிப்புக் கொடி நாட்டிய பரிட்சைக்கு நேரமாச்சு, படித்ததின் பயனை மறந்து, காதலில் உழன்று, கடமையை மறந்து, பிறந்த கிராமத்தையே உதாசீனப்படுத்தும் தன் தம்பியை வித்தியாசமான அணுகுமுறையில் திருத்தி, கிராமத்து மக்களுக்கு மருத்துவ சேவை புரிய வைக்கும் கிராமத்தானாக நடித்து, நல்ல மெசேஜை சொல்லிய ஊரும் உறவும், வெள்ளி விழாக் கண்ட நீதிபதி, கேலி செய்தோரின் வாயை அடைத்து வசூலில் பின்னியெடுத்த மசாலாக் கலவை சந்திப்பு, மிருதங்க வித்வான்களே மெய் சிலிர்த்துப் பாராட்டிய மிருதங்கச் சக்கரவர்த்தி, வெள்ளை மனம் கொண்ட பாதராகவும், கர்ஜனை புரியும் போலீஸ் அதிகாரியாகவும் இரு மாறுபட்ட வேடங்களில் கலக்கிய வெள்ளை ரோஜா, திரும்பவும் போலீஸ் அதிகாரியாக மிரட்டிய திருப்பம், வசூலிலும், நடிப்பிலும் வரலாறு படைத்த வாழ்க்கை, மழலையின் மேல் பாசம் வைத்து மலைக்க வைத்த நடிப்பைப் பகிர்ந்து கொண்ட பந்தம், முக்காலமும் தலைவர் புகழ் பாடிக்கொண்டிருக்கும் முதல் மரியாதை, விசுவாமித்திரரை வியக்கும் வகையில் நடிப்பால் நமக்குக் காட்டிய ராஜரிஷி, அண்ணனின் அன்புப் பாசத்தை தம்பிகளிடம் கண்களிலேயே பிரதிபலித்த படிக்காதவன்,

    இயக்குனர் வேடத்தில் இதயத்தை வருடிய சாதனை,

    படுத்துக் கொண்டே நடிப்பில் ஜெயித்த மருமகள்,

    ஸ்டைலிலும், நடிப்பிலும் ஜமாய்த்த ஜல்லிக் கட்டு,

    தேவர்களும் மயங்கும் நடிப்பைக் கொண்ட தேவர் மகன்,

    மகள் விதவையான சோகத்தை நேரிடையாகக் கண்டு அனுபவித்து சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகும் பசும்பொன்,

    ஜாலியான அறுபது வயது இளைஞனாக யூத்களுடன் கும்மாளமிட்ட ஒன்ஸ்மோர்,

    மோகன்லாலுடன் இணைந்து மோகன நடிப்பை வழங்கிய, மலையாளத் தமிழ் பேசிய ஒரு யாத்ராமொழி,

    கடைசி வரையிலும் கரகாட்டம் ஆடி களேபரம் செய்த என் ஆச ராசாவே,

    காதலர்களை இணையவைக்கும் முதியவராக இளையவர்களுக்கு ஈடு கொடுத்த பூப்பறிக்க வருகிறோம்

    என்று தன் திறமை இறுதி வரை குறைந்ததல்ல என்று அவர் வாழ்நாள் முழுதும் தன் திறமையைக் காட்டினார் என்றுதான் கூற வேண்டும்.

    அவருடைய முன்னாள் படங்களோடு இருநூறுக்கும் மேல் வந்த படங்களை ஒப்பிடுவதே தவறு. பின்னாட்களில் அவர் படங்கள் வேஸ்ட் என்பது தவறு என்பதும் என் தாழ்மையான கருத்து. பின்னாட்களிலும் மிகச் சிறந்த படங்களை அவர் தந்திருக்கிறார். நல்ல வித்தியாசமான நடிப்பையும் நமக்கு வழங்கி விட்டுத்தான் போய் இருக்கிறார். சில படங்கள் அவர் பெயரைக் கெடுத்திருக்கலாம். அவரும் அதற்குக் காரணமாய் இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் சிறப்பாகவும், வெற்றியுடனும் செய்யக் கூடியவர்கள் யாரும் இல்லை. ஏற்றத் தாழ்வுகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள், வெற்றி தோல்விகள் எல்லோருக்கும் உண்டு. இருநூறுக்கு முன்னாலும் அவருடைய மோசமான படங்கள் இருக்கின்றன. தோல்விப்படங்களும் இருந்திருக்கின்றன. எதையும் எதனுடனும் ஒப்பிடாமல் பார்ப்பது தான் ஒரு சரியான விமர்சனமாக இருக்க முடியும் என்பது என் கருத்து.

    வெற்றி தோல்விகளை அவரும் எதிர்கொண்டே ஆக வேண்டும். நாம் எதிர்பார்த்த அளவுக்கு படங்களின் தரங்கள் இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் ஒரு இடத்திலாவது அவர் எல்லோரையும் வாயைப் பிளக்க வைத்து விடுவார். மறுபடியும் சொல்கிறேன். பின்னாட்களிலும் அவர் நல்ல படங்கள் பல கொடுத்திருக்கிறார். பிற படங்களில் இல்லாத நடிப்பையும் அளித்திருக்கிறார். அதனால் தான் இத்திரியில் நான் உறுப்பினரானவுடன் தாங்கள் மனதிலுள்ள எண்ணம் எனக்கும் இருந்ததினால் என்னுடைய முதல் ஆய்வுப் படமாக பின்னாளில் வெளியான 'கருடா சௌக்கியமா' படத்தை ஆய்வு செய்ய எடுத்துக் கொண்டேன்.

    சற்று நீண்ட பதிவாகி விட்டது. பொறுமையுடன் படித்ததற்கு மிக்க நன்றி. அவர் விண்ணில் தெய்வமாக வாழ்ந்தாலும் மண்ணில் இருந்த போது அவரும் மனிதர் தான். ஆசாபாசங்களுக்கு உட்பட்டவர்தான், விருப்பு வெறுப்புகள் அவருக்கும் உண்டு. அவர் அப்போது கடவுள் இல்லை. எல்லாவற்றிலுமே நூறு சதவிகிதம் வெற்றியை எவரும் கொடுத்து விட முடியாது.

    இப்படி ஒரு பதிவை நெடுநாட்களாகவே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். அது தங்களால் இன்று நிறைவேறிற்று. அதற்காகவும் தங்களுக்கு என் அன்பு நன்றிகள்.

  17. Thanks kalnayak thanked for this post
    Likes Russellmai, Harrietlgy liked this post
  18. #2979
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Female singers who helped glorify NT's movies and his stardom!! : பட்டத்துராணி L.R. ஈஸ்வரி!

    Part 2 :L. R. Easwari
    : The magnetic tone that defied gravity in NT movies!

    நடிகர்திலகத்தின் புகழ்மகுடத்தில் மின்னும் பாடகியர் ரத்தினம் ! :: திரை கானங்களின் சண்டமாருதம் L.R. ஈஸ்வரி!
    பி சுசீலாவின் மலயமாருதக் குரலினிமைக்கு மாற்றுக்குறையாத சண்டமாருதம் ! பாசமலரின் வாராயோ தோழி வாராயோ, சிவந்தமண்ணில் பட்டத்துராணி, வசந்தமாளிகையில் குடிமகனே பாரதவிலாசில் மின்மினிப்பூச்சிகள் கெளரவம் அதிசய உலகம்.....நடிகர்திலகத்தின் காவியங்களில் மறுக்க முடியாத இடம் பெற்றவர். கிளப் பாடகியாக ரசிக நெஞ்சங்களின் நித்திரை கெடுத்தாலும் அம்மன் பக்திப்பாடல்களில் முத்திரை பதித்தவர். பிற படப்பாடல்களில் மனதில் நீங்கா இடம் பெற்றவை பளிங்கினால் ஒரு மாளிகை (வல்லவன் ஒருவன்), காதோடுதான் நான் பேசுவேன் (வெள்ளிவிழா)..... இலந்தப்பயம்.... (பணமா பாசமா).....

    இவர் மணிக்குரலில் ரசிக்கப்பட்ட Top 10 நடிகர்திலகப் படப்பாடல் வரிசை! (என் தனிப்பட்ட ரசனைப்படி....உங்கள் ரசனை மாறுபடலாம்)

    1. எல்ஆர் ஈசுவரியை பட்டத்து ராணியாக புகழின் உச்சியில் இருத்திய சாட்டையடிப் பாடல் நடிகர்திலகத்தின் மாபெரும் வெற்றிப்படமான சிவந்தமண்ணில் !
    One of the major ingredients for a successful turn out of Sivandhamann is this challenging song justified by LR Easwari's high pitch bewitching modulations with aplomb and we salute her mighty contributions in our NT films as a part of team work! unforgettable song sequence in the history of Tamil Cinema honoured by the screen space graced by NT with Kaanjanaa, Nambiar ....alongside LRE's song under MSV's enchanting music throughout!



    2. எல் ஆர் ஈசுவரியின் பாடல் வரிகளில் பொதிந்த இலை மறை காய்மறை( முக) அர்த்தங்களில் நாணி முகம் சிவக்கும் நடிகர்திலகம்! ஆட்டத்தைப் பார்க்காமல் பாடலையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கருமமே கண்ணாக காரியம் பார்க்கும் காதல் மன்னர் !



    3. Gowravam Sivaji's majestic body language!
    ஈசுவரியின் குரல் கவர்ச்சி ஜெயகுமாரியின் நடன கவர்ச்சி......இதெல்லாம் எம் மன்னவரின் உடல்மொழிக் கவர்ச்சிக்கு முன் எம்மாத்திரம்?!



    4. Enga maamaa : bewitching tone of LRE ! Perfect Coat suit ஸ்டைலில் அசத்தும் Slimmo Slim நடிகர்திலகம் !

    Last edited by sivajisenthil; 22nd November 2014 at 09:02 AM.

  19. Thanks kalnayak thanked for this post
    Likes Russellmai liked this post
  20. #2980
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    தொடர்ச்சி.......

    நடிகர்திலகத்தின் புகழ்மகுடத்தில் மின்னும் பாடகியர் ரத்தினம் ! :: திரை கானங்களின் சண்டமாருதம் L.R. ஈஸ்வரி!


    5. Bharatha Vilas! மின்மினிப் பூச்சிகள் நடிகர்திலகத்தின் கண்களில் பறக்கும்... .சகுந்தலா உடலை வளைத்து ஆடுவதை யார் ரசித்தார் மன்னவனே! நீங்கள் நளினமாக தலையாட்டுவதைத்தானே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தோம் !!



    6. Thavappudhalvan! காதல் ..சந்நியாசிகள் ! Amazing lip synchronization to the english lines of this song by NT!!



    7. வசந்த மாளிகை..... ஈசுவரியின் குரலோ பளிங்கினால் ஒரு மாளிகை !!



    8. Desi version of James Bond/Matt Helm (The Silencers) NT with Bharathi!
    ஈசுவரியின் குரலே ஒரு தங்கச்சுரங்கம்தான்



    9. சித்ரா பவுர்ணமி காலம் உண்டு நேரமுண்டு ... காலநேரமின்றி உங்களை ரசிக்கிறோம் நடிக மன்னரே



    10.எதிரொலி : உங்க நல்ல மனசுக்கொரு குறையுமில்லே ..... நடிகர்திலகமே!



    NT comes back to honour S. Janaki's contributions
    Last edited by sivajisenthil; 22nd November 2014 at 07:51 AM.

  21. Thanks kalnayak thanked for this post
    Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •