Page 291 of 400 FirstFirst ... 191241281289290291292293301341391 ... LastLast
Results 2,901 to 2,910 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2901
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிப்புத் திமிங்கிலத்தின் 'Close-up' encounters of the second kind!

    Part 2 : Raman Eththanai Ramanadi ராமன் எத்தனை ராமனடி(1970)

    ராமன் எத்தனை ராமனடி என்ன ஒரு பொருத்தமான அடை மொழி நம் நவரச ராமருக்கு சாப்பாட்டு ராமனாக வெகுளித்தனம்....ஆனால் கேலிப்பொருளாக
    அடிபட்டு அவமானப்பட்டு தனது மனதிலும் மொட்டுவிட்ட காதல் வேகத்தில் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற விதத்தில் அவர் முகத்தில் மின்னலடிக்கும்
    உணர்ச்சிக்குவியல்கள் .... கலைமகள் கடாச்சத்தில் நடிகர்திலகமாக உருமாறி திரும்ப வரும்போது வெளிப்படுத்தும் கட்டுப்பாடான முகபாவங்கள்.......இப்படம் நடிப்பு கஜராஜனின் பசிக்குக் கிடைத்த கரும்புக்காடு!

    உலகிலேயே ஒரு நடிகரின் நடிப்பில் தேனில் விழுந்த வண்டுபோல மந்திரித்து விட்ட கோழி போல மனம் மயங்கி அவர் சிரிக்கும்போது நாமும் சிரித்து
    அவர் அழும்போது நாமும் அழுது.......நம்மை ஆட்கொண்ட நடிப்புத் திறமையை ஆஸ்கார் பெற்ற நடிகர் யாரிடமும் நம்மால் உணர்வுபூர்வமாக ஒன்ற இயலவில்லையே ! வாழ்ந்த போது மதிக்கத் தவறியதை அவர் அமரத்துவம் அடைந்த பிறகாவது அஞ்சலியாகவேனும் அளித்திருக்கலாமே !!









    Last edited by sivajisenthil; 18th November 2014 at 09:18 PM.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2902
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  6. #2903
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    முரளி சார்,
    மேலும் சில எண்ணங்களை பகிர்ந்து கொள்வதாக சொன்னீர்கள் ..காத்திருக்கிறேன் .

  7. #2904
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    முரளி சார் ,
    நேருக்கு நேர் நெஞ்சுக்கு எதிரே பெயர் சொல்லி அழைத்து பேசாது கிசுகிசு பாணியில் எழுதும் பட்டாக்கத்தி போன்றவர்களுடன் பதிலுக்கு பதில் என நிற்க மாட்டேன் .நீங்கள் மேலும் சொல்ல வேண்டியதை சொன்ன பிறகு எதிர்வினை புரியுங்கள் என சொன்னதால் காத்திருக்கிறேன் .. இனிமேல் பாவ புண்ணியமெல்லாம் பார்க்கப்போவதில்லை ,, நிச்சயம் என் எதிர்வினை வரும் .
    Last edited by joe; 18th November 2014 at 10:43 PM.

  8. Likes kalnayak liked this post
  9. #2905
    Junior Member Junior Hubber AREGU's Avatar
    Join Date
    Nov 2007
    Location
    TRICHY
    Posts
    19
    Post Thanks / Like
    நம்பியாரிடம் பெண்கேட்டு சிவாஜி செல்லும் காட்சியில் பார்க்கும் நமக்கே அடிவயிறு `பகீர்` என்றிருக்கும்.. நாயகனின் அப்பாவித்தன கதாபாத்திரச் சித்தரிப்பின் வன்மை அது..
    எல்லோர் நடிப்பும் பிடிக்கும்.. சிவாஜி மட்டுமே விருப்பம்..!

  10. Thanks eehaiupehazij thanked for this post
  11. #2906
    Junior Member Junior Hubber AREGU's Avatar
    Join Date
    Nov 2007
    Location
    TRICHY
    Posts
    19
    Post Thanks / Like
    முகநூல் சக்கைபோடு போடும் இக்காலகட்டத்தில், இதுபோன்ற கருத்துக்களங்களை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லக்கூடிய கடமை நமக்கு இருக்கிறது. அது நமக்கிடையேயான புரிந்துணர்வின்மையால், பாதித்துவிடலாகாது.

    இதற்கு அனைவர் ஆதரவும் தேவை.. அதற்கு ஒற்றுமை தேவை.. நாம் தேவையற்று பதியும், ஒரு புள்ளிக்குக்கூட மற்றவர் மனதை முறித்துப்போடும் வலு உண்டு என்பதை உணர்ந்து, வருங்காலத்தில் நடந்துகொள்வோமாக..

    நன்றி வணக்கம்.
    எல்லோர் நடிப்பும் பிடிக்கும்.. சிவாஜி மட்டுமே விருப்பம்..!

  12. Likes eehaiupehazij liked this post
  13. #2907
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    இனி ராகவேந்தர் சார் பதிவிட்ட விஷயத்திற்கு வருகிறேன். நடிகர் திலகம் திரியில் நடிகர் திலகம் விமர்சிக்கப்படுகிறார் என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் அதனாலேயே அவரும் நெய்வேலி வாசு அவர்களும் நடிகர் திலகம் திரியில் பங்கு பெறுவதில்லை என்றும் சொல்லியிருந்தார். சிவாஜி எதிர்ப்பு பதிவுகள் இடம் பெறுவதனால் திரியிலிருந்து விலகி நிற்க போவதாகவும் சொல்லியிருந்தார்.

    ஒரு நாள் பொறுத்துப் பார்க்கிறேன். அவரின் signature மாறியிருக்கிறது. நடிகர் திலகம் திரி என்பது யார் வேண்டுமானாலும் அவரை விமர்சிக்கலாம். யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்ற வாக்கியத்தை அமைத்திருக்கிறார். நடிகர் திலகம் பற்றிய திரிகள் அடங்கிய இந்த forum- திற்கு நான் மாடரேட்டர் எனும்போது இந்த விமர்சனம் என் மீது வைக்கப்பட்டதாகவே உணர்கிறேன்.

    சில விஷயங்களை யோசித்து பார்க்கிறேன்.

    ராகவேந்தர் சார் மூத்த ரசிகர். சிறு வயது முதல் சிவாஜி ஈடுபாடு கொண்டு வளர்ந்தவர். சிவாஜி மன்றத்தை நடத்தியவர். சாந்தி திரையரங்க சிவாஜி ரசிகர் கூட்டத்தில் முக்கியமானவர். நடிகர் திலகத்தின் படப் பட்டியலை அந்த திரையரங்கில் நிறுவதற்கு முக்கிய பங்காற்றியவர். நடிகர் திலகம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற அரசியல் இயக்கம் கண்டபோது களப் பணியாற்றியவர். அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்றவர். 1989 தேர்தலில் கடுமையாக உழைத்தவர். அவர் பெயரால் இணையதளம் வைத்து நடத்துபவர்.

    வாசு அவர்களோ சிவாஜி பக்தர். நடிகர் திலகத்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்றவர். கடலூர் பாண்டி போன்ற இடங்களுக்கு நடிகர் திலகம் வரும்போதெல்லாம் அவரோடு பயணிக்கும் வாய்ப்பு பெற்றவர். நடிகர் திலகம் மற்றும் பிரபு மன்றங்களின் பொறுப்பில் இருந்தவர்.

    இவர்கள் மட்டுமல்ல

    வட சென்னை வட்டார மன்ற செயல் வீரர், நடிகர் திலகம் சார்ந்திருந்த அரசியல் இயக்கத்தின் தலைவி பற்றி தவறாக பேசிய தமிழக மந்திரிக்கு எதிராக போராட்டம் நடத்தி காவல்துறையினால் கைது செய்யப்பட்டு பின் நடிகர் திலகமே நேரில் வந்து ஜாமீன் கொடுத்து மீட்ட களப்பணியாளர் கார்த்திக்

    இள வயது முதல் விருகம்பாக்கம் வட்டார சிவாஜி மன்ற செயல் வீரராக களப்பணியாற்றிய, நடிகர் திலகத்தை நேரில் சந்தித்து உரையாடி இவரும் இவர் இளைய சகோதரரும் வேலை பார்த்த அலுவலகத்தின் விஷயங்கள் வரை பல விஷயங்களை பேசக்கூடிய பார்த்தசாரதி.

    நெல்லை நகர சிவாஜி மன்ற செயல் வீரராக ஸ்தாபன காங்கிரஸ் கட்சிக்காக 1977 சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பணியாற்றிய ஆற்றல் படைத்த கிருஷ்ணாஜி

    நடிகர் திலகத்தின் உதவியாளராக அரசியல் வாழ்க்கையை தொடங்கி இன்று அவர் பெயரால் ஒரு பெரும் சமூக நல இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கும் சந்திரசேகர்

    நடிகர் திலகம் பெயரால் நடக்கும் அனைத்து நற்பணிகளுக்கும் யார் வந்து என்ன கேட்டாலும் உடனே அள்ளி தரும் மதுரை சந்திரசேகர் (VCS)

    வயதில் குறைந்தவராக இருந்தாலும் நடிகர் திலகத்தின் புகழ் கொடியை பறக்க விடும் பொருட்டு அவர் பூவுலகில் இருந்து மறைந்த பிறகும் அவருக்காக ஒரு மாத இதழ் நடத்தியவரும் நடிகர் திலகத்தின் சாதனைகளை ஆவணப்படுத்தியவருமான சுவாமிநாதன்.

    [இந்த மன்றத்திலே உள்ளவர்களை மட்டுமே குறித்திருக்கிறேன்]

    இவர்களையெல்லாம் அளவு கோலாக வைத்துப் பார்த்தால் நான் எல்லாம் சிவாஜி ரசிகனாக கூட qualify ஆக மாட்டேன். மன்றம் வைத்ததில்லை, அதில் உறுப்பினராக கூட இருந்ததில்லை, அரசியல் களப்பணியாற்றியதில்லை. அவரை நேரில் சந்தித்து பேசவோ பழகவோ செய்ததில்லை. தமிழகத்தில் இருந்த, இருக்கின்ற லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். இந்த திரியில் பங்களிப்பு செய்ததை தவிர்த்து விட்டு பார்த்தால் நான் நடிகர் திலகத்திற்காக ஒன்றுமே செய்ததில்லை. NT FAnS அமைப்பு கூட கூட்டு முயற்சிதான்.

    இது அவையடக்கமோ அல்லது சுய இரக்கமோ அல்லது அனுதாபம் தேடும் முயற்சியோ அல்ல. உண்மையிலும் உண்மை. இந்த ஹப்பில் மாடரேட்டர் பதவிகூட நான் இந்த மன்றத்தில் மூத்த உறுப்பினன் என்ற முறையில்தான் வந்தடைந்தது.

    இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் இது பப்ளிக் forum. என் தனிப்பட்ட சொத்தல்ல. எவருடைய சொத்தாகவும் இதை கருத முடியாது. இங்கே சிவாஜியைப் பற்றி விமர்சனம் வருகிறது என்றால் அதை எதிர்கொண்டு, சொல்லப்பட்ட விமர்சனம் எப்படி தவறானது என்பதை விளக்க அனைத்து ரசிகர்களுக்கும் உரிமை இருக்கிறது. நான் மட்டும்தான் அதை எதிர்க்க வேண்டும் என்பதில்லை. அதிலும் தவறான விமர்சனம் வருகிறது என்று தன் ஆதங்கத்தை பதிவு செய்திருக்கும் ராகவேந்தர் சாருக்கும் அந்த பொறுப்பு இருக்கிறது.அதே போன்ற கருத்தை பதிவு செய்திருக்கும் எந்த நபருக்கும் அதே உரிமை இருக்கிறது.

    நடிகர் திலகம் பற்றிய திரியில் அவரை அனைவரும் பாராட்டினால்தான் நானும் பதிவிடுவேன். மாறாக அவரை விமர்சித்து பதிவு வந்தால் நான் விலகி விடுவேன் என்பது சரியான நிலைப்பாடா என்பதை கொஞ்சம் யோசியுங்கள். நடிகர் திலகத்தை பற்றி எவரேனும் தவறாக எழுதும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள வேண்டிய கடமை இப்போது குறைபட்டுக் கொள்ளும் அனைவருக்கும் இல்லையா? அதிலும் நான் முன்பே குறிப்பிட்டது போல் நடிகர் திலகத்திற்காக பல்வேறு வகையில் உழைப்பை சிந்தியவர்களுக்கு இல்லையா?

    பதிவர்களை அவமானப்படுத்தி விட்டனர் என்ற ஒரு குற்றசாட்டை முன் வைக்கின்றனர். யார் அப்படி செய்தது? யாரை அப்படி சொன்னார்கள்? கமல் ரஜினி பற்றி ஜோ எழுதிய பதிவுதான் காரணம் என்றால் அதை குறிப்பிடலாமே. வேறு ஏதேனும் இருந்தால் அதையும் சொல்லலாமே.

    சரி நான் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். சிவாஜியை விமர்சனம் செய்கிறார்கள். அதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொன்னால் அந்த நிலைப்பாட்டை அனைத்து நேரங்களிலும் எடுப்பதுதானே முறை? அப்படியிருந்தால்தானே அது சரியான stand? இல்லை இந்த நிலைப்பாடு ஒரு சில உறுப்பினர்களுக்கு எதிராக மட்டும்தானா? ஏன் கேட்கிறேன் என்றால் இங்கே அப்படி பார்க்க முடியவில்லையே?

    நடிகர் திலகத்தின் படம் பற்றி ஒரு விமர்சன கருத்து வந்தால் ஆவேசப்படும் நாம் நடிகர் திலகம் பற்றிய மோசமான முற்றிலும் உண்மைக்கு புறம்பான விமர்சனம் இந்த திரியில் மாற்று முகாம் ரசிகர்களால் பதிவு செய்யப்பட்டபோது யாருமே வாயையே திறக்கவிலையே சார்? நானும் கோபாலும் மட்டும்தானே அதை எதிர் கொண்டோம்! [இதில் RKS அவர்களை நான் சேர்க்கவில்லை. காரணம் நடிகர் திலகம் பற்றி எந்த பதிவு வந்தாலும் அதற்கு எதிர் வினையாற்றுபவர். அவர் பலம் பலவீனம் இரண்டுமே அதுதான்]

    ராஜ ராஜ சோழன் பற்றி கோபால் தன் கருத்தை பதிந்தபோது பொங்கியெழுந்த நாம் அதே ராஜ ராஜ சோழன் பற்றிய முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவலை இந்த திரியில் மாற்று முகம் நண்பர் ஒருவர் பதிந்தபோது அதை எதிர்க்க யாருமே வரவில்லையே. இன்று சிவாஜிக்காக எதையும் செய்வேன் என்று வாள் சுழற்றும் பட்டாக்கத்திகளை விடுங்கள். இதுவும் இது போன்ற நடிகர் திலகத்தை தாக்கும் பல பதிவுகள் வந்த போது ஒரு பிச்சுவா கத்தி கூட உறையை விட்டு வெளியே வரவில்லையே! அது என்ன நியாயம்? ஒரு வேளை வேறு சில நடிகர்களின் ரசிகர்கள் அல்லது எங்களுடன் அரசியல் வேறுபாடு கொண்டவர்கள் ஏதாவ்து சொன்னால்தான் நாங்கள் அதை எதிர்போம். எம்ஜிஆர் ரசிகர்கள் சிவாஜியை குறை சொன்னால் நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம் என்பதுதான் சரியா?

    பதிவுகளைப் பொறுத்தவரை இரண்டு வகை உண்டு. opinion based posting மற்றும் fact based posting. முதல் வகையில்பட்ட பதிவு என்பது ஒரு படம் அல்லது அதில் நடித்த நடிகர் பற்றிய தங்கள் கருத்தை பதிவு செய்வது. இரண்டாவது ஒரு உண்மையை அடிப்படையாக கொண்டு எழுதப்படுவது. ராஜ ராஜ சோழன் படம் பற்றிய கருத்து முதல் வகையில்படும். ராஜ ராஜ சோழன் 98 நாட்கள் ஓடியது என்பது இரண்டாம் வகையில்படும். இங்கே முதல் வகையில் படும் விமர்சனம் நேர்மையாக எழுதப்பட்டிருந்தால் அதை அனுமதிக்கலாம். அதே நேரத்தில் விஷமத்தனமான நோக்கத்துடன் எழுதபட்டிருந்தால் அதை எதிர் கொண்டு நம்முடைய பதிலை முன் வைக்கலாம். பதிவு வரம்பு மீறியதாக இருப்பின் அதை நீக்குவதற்கு முயற்சிக்கலாம். நான் மாடரேட்டர் ஆக பணியாற்றிய இந்த ஆறு மாதக் காலத்தில் இந்த பாணியைத்தான் கையாண்டேன். அதில் சிலருக்கு திருப்தியில்லை என்றால் நான் என்ன சொல்வது?

    என்னை விட அனுபவத்திலும் சிவாஜி புகழ் பாடுவதிலும் முன்னோடிகளுமானவர்களுக்கு அறிவுரை கூறுவதற்கு நான் தகுதியானவில்லை. என்னைப் பொறுத்தவரை நடிகர் திலகம் பற்றிய பல்வேறு விஷயங்கள் பதிவு செய்யப்படுவதிலும், அவரைப் பற்றிய வெளிவராத சுவையான செய்திகளை இங்கே பகிர்ந்துக் கொள்ளவும், அவரின் நடிப்பு சாம்ராஜ்ஜியத்தையும் திரையுலக பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் பதிவு செய்யவும் இந்த தளத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். நடிகர் திலகம் பற்றிய தவறான விஷமத்தனமான பதிவுகளுக்கு நான் என்றுமே துணை போனதுமில்லை. போகப் போவதுமில்லை.

    என்னுடைய தனிப்பட்ட நான் வேறு. இந்த திரியில் இயங்கும் நான் வேறு. இங்கே நான் என்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில்லை. இந்த திரியைப் பொறுத்தவரை நானா? நடிகர் திலகமா? என்றால் என்றென்றும் நடிகர் திலகம்தான். நான் முன்பே ஒரு முறை சொன்னது போல் என்னை யார் என்ன சொன்னாலும் அதை பொருட்படுத்தாமல் இங்கே பதிவிடுவேன். இயற்கை என்னை அனுமதிக்கும் வரை. அதற்காக என்னை போலவே அனைவரும் இருக்க வேண்டும் என்று நான் சொல்வது எந்த விதத்திலும் சரியாக இருக்காது.

    இங்கே பதிவிடுவது என்பது ஒரு கடமைக்கு செய்வது போன்றதில்லை. இதன் மூலம் கிடைப்பது மன திருப்தி மற்றும் சந்தோசம். அந்த நிறைவிற்காகவே பதிவிடுகிறேன். இது ஒரு பயணம். அதில் என்னிடம் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பாதையில் எப்படி பயணப்படுகிறேன் என்று பாருங்கள்.

    என்னை பல வருடங்களாக தெரிந்தவர்களுக்கு இதற்கு மேல் நான் என்ன சொல்வது?

    அன்புடன்

  14. Likes kalnayak, Harrietlgy, KCSHEKAR liked this post
  15. #2908
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    பட்டாக்கத்தி என்ற பெயரில் பதிவிடும் நண்பருக்கு,

    நான் முன்பே ஒரு முறை கூறியிருக்கிறேன். இங்கே வருவதற்கு வேஷம் தேவையில்லை. ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்கிறீர்கள். முதலில் கிருபா பிறகு ஒய்வு பெற்ற தமிழாசிரியர் ராம் தாஸ் இப்போது பட்டாக்கத்தி. யார் எப்படி இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை நடிகர் திலகம் திரியில் நான் உண்மையை நேர்மையை விரும்பவன். அதை முழுமையாக கடை பிடிக்க வேண்டும் என்று முயல்பவன். எனவேதான் உங்கள் பதிவுகளுக்கு நான் பதிலளிக்கவில்லை. [இந்த லட்சணத்தில் நீங்கள் ஆதிராம் அவர்களை கிண்டல் செய்கிறீர்கள்].

    இப்போதும் உங்கள் பதிவிற்கு பதிலளிக்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் என் செய்கைகளுக்கு பல தவறான உள்நோக்கங்கள் கற்பித்து நீங்கள் எழுதியுள்ள பதிவிற்கு விளக்கம் சொல்லவில்லையென்றால் சிலரேனும் அதை நம்பக்கூடும் என்ற காரணத்தினால் இதை எழுதுகிறேன்.

    யார் நிர்பந்தத்திற்கும் பயந்து வளைந்து கொடுப்பவன் அல்ல நான். பதிவுகளில் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடும் எனக்கில்லை. நான் நெருங்கி பழகும் கோபாலின் பதிவுகளையே அது முறையற்றதாக அமையும்போது நீக்க தயங்கியதில்லை. உங்களுக்கு நண்பர் ஜோ அவர்களை பிடிக்கவில்லையென்ற காரணத்திற்காக எது வேண்டுமானாலும் எழுதுவீர்கள் அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டும், அப்படிதானே! மற்றொன்றையும் இங்கே கூற வேண்டும். ஜோ என் நண்பர்தான். என்னை விட பல வயது இளையவராக இருப்பினும் [நண்பர் சுவாமிநாதனைப் போலவே ஜோ அவர்களும் 1972-ம் வருட சந்ததி] நண்பரே. அதே நேரத்தில் நாங்கள் இருவரும் அரசியலில் தீவிர கருத்து வேறுபாடு கொண்டவர்கள். திராவிடமும் தேசியமும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த உரையாடல்களை எல்லாம் நேரமிருந்தால் அரசியல் திரியில் போய் படித்துப் பாருங்கள். சூடு பறந்த அந்த நேரத்திலும் எங்கள் கண்ணியத்தை விட்டு விலகியதில்லை. இதை இங்கே பதிவு செய்ய காரணம் திரியின் புதிய வாசகர்கள் இங்கே நான் ஒரு ஒருதலைபட்சமாக நடந்துக் கொண்டதாக நினைத்து விடக் கூடாது என்றுதான்.

    நடிகர் திலகத்தை தாக்கி எழுதப்பட்ட பதிவுகளை நான் நீக்கவில்லை என்று சொல்லி அதற்கு உதாரணமாக ராஜா என்ற ராஜாராமின் பதிவுகளை ஜாடையாக சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள் [இங்கேயும் நேரிடையாக இல்லாமல் ஜாடையாக]. நான் மாடரேட்டராக ஆன பிறகு நண்பர் ராஜாராம் எப்போதெல்லாம் வரம்பு மீறி எழுதியிருக்கிறாரோ அப்போதெல்லாம் அதை நான் நீக்கியிருக்கிறேன் என்பதனை திரியினில் தொடர்ந்து வருபவர்கள் அறிவார்கள்.

    நண்பரே முகமூடியை கழட்டி விட்டு நடிகர் திலகத்தின் நல்ல ரசிகராக இங்கே வருகை தாருங்கள். நல்ல பதிவுகளை தாருங்கள். இல்லை இப்படிதான் இருப்பேன் என்று நீங்கள் முடிவு கட்டியிருந்தால் அப்புறம் நான் என்ன சொல்வது?

    அன்புடன்

  16. Likes kalnayak, KCSHEKAR liked this post
  17. #2909
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முரளி சார்
    தங்களிடம் நான் எதிர்பார்த்த மாதிரி தான் பதிவு வந்திருக்கிறது. உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக ஒருவர் நடிகர் திலகத்தைப் பற்றி விமர்சனம் செய்திருக்கிறார். அதற்கு விளக்கமே தேவையில்லை. யாரும் விளக்காமலா நண்பர்களின் மனம் புண்பட்டிருக்கிறது.

    மாற்றுத்திரியினர் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். இதற்கு என்னுடைய நிலைப்பாட்டை நான் முன்பே கூறியிருக்கிறேன். வசூல் விவரங்களில் எனக்கு நம்பிக்கையில்லை என்பதை நான் பலமுறை விளக்கியிருக்கிறேன். அந்தக் காலத்து வசூல் விவரங்கள் பெரும்பாலும் ரசிகர் மன்றங்களின் நோட்டீஸ் அடிப்படையில் தான் தகவல்கள் பரிமாரிக் கொள்ளப்படும். மிக அபூர்வமாகவே விநியோகஸ்தர்கள் அல்லது படம் சம்பந்த்ப்பட்டவர்கள் வசூல் விவரங்களை விளம்பரங்களில் வெளியிட்டுள்ளார்கள். அந்நாளைய வசூல் விவரங்களை இக்காலத்தில் நிரூபிக்க முடியாது. அதற்கு சம்பந்தப்பட்ட அரசாங்க துரைகளின் ஒத்துழைப்புடன் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். இது நடைமுறையில் மிகவும் கஷ்டமான ஒன்று. இந்த அடிப்படையில் தான் நான் இந்த விஷயங்களில் தலையிடுவதில்லை. அதே போல நூறு நாட்கள் வெள்ளி விழா போன்ற சாதனைகளை யாராவது ஒருவர் சுட்டிக்காட்டினால் போதும். ஒரே விஷயத்தை பலரும் எழுத வேண்டியதில்லை.

    மாற்றுத்திரியினர் தகவல் பிழை தந்தாலும் எனக்கு நினைவு தெரிந்து நம்முடைய திரியில் நடிகர் திலகத்தைத் தரம் தாழ்த்தி அவர்கள் ஒரு போதும் எழுதியதில்லை. இன்று வரை அங்கிருக்கும் ஒவ்வொருவருமே தகவல் அடிப்படையில் தான் விவாதங்களை வைக்கிறார்களே தவிர நடிகர் திலகத்தை கீழ்த்தரமாக விமர்சித்ததில்லை. நடிகர் திலகத்தின் புகழைக் கொச்சைப்படுத்தியதில்லை.

    இதை செய்வது இங்கிருக்கும் நண்பர்கள் தான். மாற்று முகாம் நண்பர்கள் பட வசூல் சாதனை விவரங்களைப் பற்றி எழுதும் போது தங்களுக்கு ஏற்படும் நியாயமான கோப உணர்வு நம்முடைய திரியிலேயே நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு அவரையே விமர்சிக்கும் போது ஏன் வருவதில்லை என்று நான் கேட்கலாமல்லவா. தாங்கள் வரிசையாக குறிப்பிட்டுள்ள மற்றும் மற்ற நண்பர்கள் மனம் புண்பட்டதை விட ஒரு நபரின் விமர்சனம் தங்களுக்கு நியாயமாக படுகிறதா. அந்த பதிவு அப்படியே இருப்பதிலேயே தங்களுடைய நிலைப்பாட்டின் மேல் ஒரு ஐயத்தினை ஏற்படுத்தக்கூடிய வாயப்புள்ளதைத் தாங்கள் ஏற்க மறுக்கிறீர்களா.

    நான் கேட்கிறேன். ஏன் சார் நடிகர் திலகத்தை விமர்சிக்க வேண்டும். அதற்கு என்ன அவசியம் இப்போது. இதனால் நண்பர்கள் அடையக்கூடிய லாபம் என்ன. தாங்களும் அதற்கு ஏன் துணை போக வேண்டும்.

    உலக மகா கலைஞனை விமர்சித்து இதனால் தாங்கள் நேர்மையானவர்கள் என்று தண்டோரா போட்டு ஆஸ்கார் விருது பெறப்போகிறார்களா... ஒரு நடிகன் என்றால் அனைத்து தரப்பு பாத்திரங்களையும் ஏற்று நடிக்க வேண்டும். அதைத் தான் நடிகர் திலகம் செய்தார். இதில் அவரை விமர்சிப்பதற்கு என்ன தேவை. முடிந்தால் பாராட்டுங்கள். இல்லையேல் ஒதுங்கி நில்லுங்கள். நடிகர் திலகத்தின் திரியிலேயே வந்து அவரையே விமர்சிப்பார்களாம். அதற்கு அனைவரும் அமைதியாக இருக்க வேண்டுமாம். இது என்ன சார் நியாயம்.

    நடிகர் திலகத்தை விமர்சிப்பதை நாம் எதிர்கொள்ள வேண்டுமாம். அப்படி எதிர்கொண்டு பதில் போட்டால் அந்த பதில் பதிவு அ்ப்படியே இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. எழுதுபவர்கள் எழுதிவிட்டுப்போய் விடுவார்கள். அவர்களுக்கு நாம் பதில் சொன்னால் நமக்கு தான் அறிவுரை. ஒரு பதிவிற்கு பட்டாக்கத்தி என்ற ஒரு பதிய பதிவர் பதில் போட்டார். அவர் யாரோ எவரோ.. அது உண்மையான நபரோ அல்லது போலியோ.. ஆனால் அவர் எழுதிய பதிவில் இருந்த ஒவ்வொரு வரியும் நம் ஒவ்வொரு ரசிகரின் உள்ளத்தையும் பிரதிபலிக்கிறது அல்லவா. அந்தப் பதிவு நீக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நடிகர் திலகத்தைப் பற்றிய விமர்சனம் மட்டும் அப்படியே இருக்கிறது.

    மாடரேட்டர் என்பது நடுநிலையக இருக்க வேண்டியது தான். அது கருத்துப் பரிமாற்றங்களில் கண்ணியத்தைத் தாண்டும் போது தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    நடிகர் திலகத்தை விமர்சிக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன் என்பது என் நிலைப்பாடு. அப்படி தொடர்ந்தால் அந்த விமர்சனங்களுக்கு நானும் உடந்தை என்பதாகத் தான் என் மனதிற்கு படும். இந்த நிலைப்பாட்டில் எந்தத் தவறுமில்லை.

    என் மனசாட்சியைப் பொறுத்தவரையில் நடிகர் திலகத்தை நான் தெய்வமாக வழிபடுகிறேன். இங்கிருந்து தான் அதை செய்யவேண்டும் என்பதில்லை. இங்கு நேர்மை இருப்பதாக என்றைக்கு என் மனதுக்கு படுகிறதோ அப்போது நான் மீண்டும் வருகிறேன். மற்றபடி நான் நடிகர் திலகம் ஃபாரமில் நான் தொடங்கிய மற்ற திரிகளில் குறிப்பாக படப்பட்டியல் திரியில் முடிந்த வரையில் விரைவாக முடித்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாக முற்றிலும் விலகி விடுகிறேன்.

    யார் வேண்டுமானாலும் மனம் போன போக்கில் நடிகர் திலகத்தை விமர்சனம் செய்து கொள்ளுங்கள். பேப்பரில் விமர்சனம் வந்தால் மட்டும் ஓடிப்போய் பத்திரிகைகளுக்கு பதிலறிக்கை கொடுத்து விட்டு இங்கு அமைதியாக இருக்கும் நண்பர்கள் உள்பட பலருக்கும் இதுவரை எனக்கு ஒத்துழைப்பு தந்தமைக்காக என் உளப்பூர்வமாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்னுடைய இந்தப் பதிவு கூட இங்கிருக்குமோ என்ற நம்பிக்கையில்லை. இருந்தாலும் இருக்கும் வரை படிக்கக் கூடிய ஒரு சிலராவது என் நிலைப்பாட்டைப் புரிந்து கொண்டால் அதுவே போதும்.

    மாற்றுத் திரி நண்பர்கள் கூட செய்யாத விமர்சனங்கள் இங்கே இடம் பெறுகின்றன. இதையெல்லாம் அந்த ஆண்டவன் தான் கேட்க வேண்டும்...

    நம்மைப் பொறுத்தவரையில் நடிகர் திலகமே தெய்வம்... அவர் பணியில் தொடர்ந்து சிறப்பாக ஈடுபட அவருடைய ஆசியை வேண்டிக் கொள்கிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  18. Thanks Russellisf thanked for this post
    Likes Russellisf liked this post
  19. #2910
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    சிவாஜியின் புகழை பரப்புவதும் அதை இன்றைய தலைமுறைக்கு கடத்துவதும் தான் நோக்கமென்றால் கமல்ஹாசனை திட்டுவதால் அது நடந்து விடாது . சிவாஜி என்றால் பிரபுவின் அப்பா , விக்ரம் பிரபுவின் தாத்தா என புரிந்து வைத்துக்கொண்டிருக்கும் இன்றைய தலைமுறைக்கு .. தான் கொடுக்கும் பேட்டிகளிலெல்லாம் , தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலெல்லாம் சிவாஜி தான் என் வானத்து சூரியன் , சிவாஜி தான் என் குரு , சிவாஜி தான் என் தந்தை என தொடர்ந்து பதிவு செய்து வருபவர் கமல் . கமல்ஹாசன் என்ற இன்றைய தலைமுறை மேதமையை நேரடியாக தெரிந்து வைத்திருக்கின்ற இன்றைய தலைமுறையின் பலர் கமல்ஹாசன் இப்படிச் சொல்வதாலேயே சிவாஜி பால் ஆர்வம் கொண்டு அறியமுற்பட்டு சிவாஜியை இன்னும் அதிகமாக புரிந்து கொள்ள முனைவதை கண்கூடாக கண்டிருக்கிறேன் . ஒரு பெரிய சிறப்பு என்னவென்றால் இன்றைய தலைமுறை அறிந்த மாபெரும் நடிகர்கள் கமல் , ரஜினி இருவருமே சிவாஜி ரசிகர்களாக இருப்பது .. கமல் அளவுக்கு ரஜினி அடிக்கடி சிவாஜி பற்றி பேசவில்லையெனினும் தானும் சிவாஜியின் வழி வந்தவன் , அவர் ரசிகன் என ரஜினியும் பல முறை தெளிவாக பதிந்திருக்கிறார். எனவே கமல் , ரஜினி போன்றவர்கள் நம் சக நடிகர் திலகம் ரசிகர்கள் .. நாம் பக்கம் பக்கமாக எழுதுவதை விட அவர்களின் ஒரு வார்த்தை ஏற்படுத்தும் தாக்கம் அதிகம் ..அவர்களின் வாக்குமூலங்கள் மூலம் நடிகர்திலகத்தின் பெருமையை அறிந்து தெரிந்து கொள்ள முற்படுவோர் பலர் .. அவர்களை இன்னும் நம் பக்கம் ஈர்ப்பது தான் அழகே தவிர கமல்ஹாசனையும் , ரஜினிகாந்தையும் சிவாஜியின் பொருட்டு குறை சொல்வதால் இம்மியும் சிவாஜியின் புகழுக்கு எற்றம் வந்து விடாது என்பதை நாம் உணர்வது நலம் .
    ராகவேந்தர் சார்,

    என் பதிவை நீங்கள் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் உங்கள் பதிவை நான் எதிர்பார்க்கவில்லை. சார், மீண்டும் மீண்டும் நடிகர் திலகத்தை விமர்சித்தார் என்ற குற்றசாட்டை சொல்லுகிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் ஜோ எழுதிய பதிவை மேலே தந்துள்ளேன். இதில் நடிகர் திலகம் எங்கு விமர்சிக்கப்படுகிறார் என்று நீங்கள் சுட்டிக் காட்டினால் நலம். என் சிற்றவிற்கு எட்டவில்லை. இங்கேயுள்ள உறுப்பினர்களை விமர்சனம் செய்தார் என்று சொல்லுங்கள். ஒப்புக் கொள்கிறேன். அதற்கான என் எதிர் வினையையும் ஏற்கனவே பதிந்து விட்டேன்.

    மாற்றுத் திரி நண்பர்களுடன் உங்களை சண்டை போட சொல்லவில்லை. ஏன் எனக்கும் கூட அவர்கள் நண்பர்களே. ஆனால் அதற்காக அவர்கள் நடிகர் திலகத்தை தரம் தாழ்ந்து விமர்சிக்கவில்லை என்று சொன்னால் உண்மை மறைக்கப்படுகிறது என்று அர்த்தம். அதை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. நிழல் அண்ணன் கைவிட்டார், பாண்டிச்சேரியில் காசு கொடுத்து செவாலியே பட்டம் வாங்கபப்ட்டது, சாதி பெயரை சொல்லி கூப்பிடுவார், தியாகம் படத்திற்கு டாஸ்மாக் கடையில் இலவசமாக டிக்கெட் கொடுத்தார்கள், நாலு பக்கம் வேடருண்டு பாடல் காட்சியில் இப்படி இப்படி செய்வார், சோகபார்ட் சொங்கிதுரை போன்றவை எல்லாம் மாற்றுதிரியினர் முன் வைத்த தரமான விமர்சனங்கள் என்று நீங்கள் சொன்னால் அதற்கு மேல் நான் உங்களிடம் பேசுவதற்கு ஒன்றுமேயில்லை. இவ்வளவு ஏன் நீங்கள் சாந்தி திரையரங்கில் முன்னெடுத்து நிறுவிய நடிகர் திலகத்தின் படப் பட்டியலில் நூறு நாட்கள் படங்களைப் பற்றி பொய்யான தகவல்களை தந்திருக்கிறீர்கள் என்ற விமர்சனமும் உங்களுக்கு ஏற்புடையதுதான் போலும்.

    நடிகர் திலகத்தை மாற்று முகாமினர் கூட விமர்சிக்காத அளவிற்கு நம் திரியில் விமர்சிக்கப்பட்டார் என்று சொல்கிறீர்களே அவை எது என்று சொன்னால் நல்லது.

    சார், நான் மீண்டும் சொல்கிறேன். இந்த திரியை பொறுத்தவரை தனிப்பட்ட நம்மை விட நடிகர் திலகத்தை முன்னிறுத்துவோம். அதுவே என வேண்டுகோள்.

    அன்புடன்
    Last edited by Murali Srinivas; 23rd November 2014 at 12:22 AM.

  20. Likes kalnayak, Harrietlgy, KCSHEKAR liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •