Page 289 of 400 FirstFirst ... 189239279287288289290291299339389 ... LastLast
Results 2,881 to 2,890 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2881
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கூத்தாடி என்று கலைஞர்களை அழைத்த திராவிட கழக உரிமையாளர் EVR அவர்கள் , புதுமுக நடிகரிடம் சரண் ! -

    கணேசன் இனி சிவாஜி கணேசன் என்று பட்டபெயர் சூடினார் EVR அவர்கள்

    கூத்தாடி என்று அழைக்கும் முறையை முற்றிலுமாக மாற்றிய உண்மை தமிழன் சிவாஜி கணேசன் அவர்கள் !

    பெரியாரை தனது உயர்ந்த நடிப்பால் ஆட்கொண்ட நடிகர் திலகம். பெரியார் தலைமை வகித்த "களம் கண்ட கவிஞன் " !


  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2882
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் நடிப்பு விஞ்ஞான ரீதியான நடிப்பு - EVR அவர்கள் பெருமிதம்.

    அப்படிப்பட்ட EVR அவர்கள் புகழ்ந்த நடிப்பை தான், சில, இன்னும் ஏழுஜென்மம் எடுத்தாலும் நடிப்பு என்றால் என்ன என்று தெரியாதவர்கள் "OVERACTING" என்று காழ்புணர்ச்சியில் அன்றும் இன்றும் புலம்புகின்றது !

    அறிவு என்ற ஒன்று இருந்தால் தானே விஞ்ஞானம், மெய்ஞானம் பற்றி அறிவதற்கு !


    Last edited by RavikiranSurya; 16th November 2014 at 03:45 PM.

  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  6. #2883
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Muktha Ravi s/o Mr. Muktha Srinivasan in Facebook

    படம் : தவப்புதல்வன்
    பாடல் " இசை கேட்டால் புவி அசைதாண்டும் "

    இந்த பாட்டு 5 நிமிடம் .. தான்சேன் பற்றிய கதை தான்சேன் என்பவர் அகபர் காலத்தில் அரசவை
    கவிஞர்- இசையால் நோய் குண படுத்தகூடிய ஆற்றல் இருந்தது

    அப்பா இந்த பாட்டை நடிகர் தில்கமிடம் போட்டு காண்பித்தார் 2 முறை கேட்டார். இது Expression
    based song .என்பதால் விஷயத்துக்கு வரேன் :

    அப்பா இந்தட்சனம் saigal தான்சேன் படம் பார்க்க சொல்லி calcutta விலிருந்து print வரவைக்க ஏற்பாடு பண்றேன் ன்னார்

    நடிகர் திலகம் " ஆன் ஹான்- போ போ- மாட்டவே மாட்டேன் 'ன்னுட்டார் என் மனதில் நான் உருவக படுத்தின தான்சேன் பிரகாரம் தான் நடிப்பேன் ..

    படம் ரிலீஸ் பாட்டு hit .. பாட்டில் பல இடங்களஇல் claps

    2 வருடம் கழித்து டெல்லியில் தான்சேன் வறை படம் பார்த்தால் அப்படியே தாடியோட நடிகர் திலகம்
    ஆச்சர்யம் இன்னும் அகலலை

    நான் panvel il பொழுது போகாம தான்சேன் படம் பார்த்தேன் saigal மட்டும் follow பண்ணி இருந்தால் அதுவும்
    curve மீசை பாட்டு காமெடியா போயிருக்கும்

  7. Thanks eehaiupehazij thanked for this post
  8. #2884
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. #2885
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    As usual good response for the screening of Navaratri at Russian Cultural Centre. NT attracts new audiences at every screening and

    today function was graced by the daughter of the cameraman Mr W V Subbarao Smt Revathy Krishnamurthy. A small memento given

    to her by Kavaithalaya Krishnan followed by fluent speech by Smt Revathy. A wonderful evening to be remembered forever.



    Regards

  10. Likes Russellmai liked this post
  11. #2886
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    எப்படி ஒரு சாந்தமான மனிதன் சந்தற்பதிர்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு உடனே அதற்குரிய வேகமான நடவடிக்கைகளை
    துவங்குகின்றான். இதற்கு விடை நேற்று பார்த்த நவராத்திரி படத்தில் நடிகர்திலகம் சாந்த சொருபியான மருத்தவர் கருணாகரன் பாத்திரத்தில்
    வரும்போது சூழ்நிலைkerpa தன்னை மாற்றிகொள்கிறார் என்பதை தனது
    நடிப்பின் முலம் தெரிவித்து நம்மை ஆச்சரியபடுதுகிறார். சாவித்திரி காணாமல் போன விளம்பரத்தை வாசித்து கொண்டு இருக்கும்போது அவர் அங்கிருந்து கிளம்பியது அறிந்து தனது உதவியாளரிடம் கூறும்
    அந்த வேகமான நடிப்பு இன்றுவரை திரைஉலகம் பார்க்காதது. இன்றுமட்டும் அல்ல எப்போதும் பார்க்க முடியாது.

  12. Likes Subramaniam Ramajayam liked this post
  13. #2887
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெமினிகணேசனின் நினைவலைகள் !
    Glimpses of and Nostalgia on Gemini Ganesan :

    இன்று (நவம்பர் 17) காதல் மன்னர் ஜெமினிகணேசனின் பிறந்தநாள்

    எண்ணிய வண்ணம் கண்ணியமான காதலுக்கு புண்ணியம் தேடி மின்னிக் கொண்டிருக்கும் மன்னருக்கு இதயத்தில் உதயமாகும் பிறந்தநாள் நினைவு கூறுதல் மன ஆறுதலே!

    நடிகர்திலகத்துடன் இணைந்து காலத்தையும் வென்று கல்வெட்டுக்களாக நின்று நிலைத்திட்ட காவியங்களில் தனித்துவம் பெற்ற நடிப்பால் மலைக்க வைத்த காதல் வித்தகருக்கு திரி சார்ந்த நினைவஞ்சலிகள் !

    நடிகர்திலகத்துடன் நீடித்த நட்பும் ஒருவகை கலைக்காதலே!


    (நடிகர்திலகத்தின் நடிப்பு மகுடத்தில் வைரமாக ஒளிர்பவருக்கு நடிகர் திலகத்தின் திரிசார்ந்த பிறந்ததின நினைவு கூறல் )

    by சிவாஜிசெந்தில்

    காதலைப் பொறுத்தவரை காலையும் நீயே மாலையும் நீயே மன்னவா !



    ஜெமினிகணேசனின் திரைக்காதல் பொற்காலமே என்றும் வசந்த காலம்



    இயற்கையே பெண்ணுருவேடுத்து துணையாக ஏங்க வைத்த காதல் கள்வன் யாரோ? கள்வனுக்கும் என்ன பேரோ ?



    ஆயிரம் நினைவு ஆயிரம் கனவுகளை காதல் களத்தில் விதைத்திட்டவரே !


  14. #2888
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெமினிகணேசனின் நினைவலைகள் !
    Glimpses of and Nostalgia on Gemini Ganesan :

    இன்று (நவம்பர் 17) காதல் மன்னர் ஜெமினிகணேசனின் பிறந்தநாள்

    கர்ணன் திரைக்காவியத்தில் என் டி ராமாராவ் கிருஷ்ணராக வந்து கீதை சார்ந்து உபதேசிக்கும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலுக்கு அடுத்து அதே தொனியில் திருவருட்செல்வரில் நடிகர்திலகத்திற்கு ஜெமினியின் சிவவடிவில் அதே சீர்காழியின் உருகும் குரல்வளத்தில் ஒரு மறக்கமுடியாத பாடல்



    வாழ்வியல் வெற்றி தோல்வி இரவும் பகலுமாக மாறிமாறி வரும் வையகக்கோட்பாடே ! வந்த துன்பங்களைக் கண்டு அஞ்சி ஓடிடாமல் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வென்றிட நீங்கள் வகுத்த தத்துவ பாடல் வழிகாட்டிகள்!






  15. Likes Russellmai liked this post
  16. #2889
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    RKS,
    .
    நமக்கு [இங்கே நமக்கு என்பது உங்களையும் என்னையும் குறிக்கும்] பல நேரங்களில் பல்வேறு தகவல்கள் கிடைத்திருக்கின்றன, இப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக சென்னை திரையரங்குகளில் என்ன நடக்கிறது, மதுரையில் என்ன நடக்கிறது, கோவையில் எப்படி நடக்கிறது? திருச்சியில் நடப்பது மற்றும் சேலத்தில் என்ன நடந்தது போன்ற பல்வேறு விஷயங்களை நாம் அறிவோம். அதை பற்றிய விவரங்களை நாம் ஒருபோதும் இங்கே எழுதி பகிர்ந்துக் கொண்டதில்லை. காரணங்கள் இரண்டு. ஒன்று எவர் மனமும் புண்பட வேண்டாம் என்ற எண்ணம். இரண்டாவது நம் மீது அரங்க உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்த நண்பர்கள் வைத்திருக்கக் கூடிய நம்பிக்கை. அதை குலைக்கும் விதத்தில் நாம் நடந்துக் கொள்ளக் கூடாது என்ற சுயகட்டுப்பாடு. படங்கள் வெளியீடு, மறு வெளியீடு விஷயங்களிலே இந்தளவிற்கு கட்டுப்பாடாக இருக்கும் நாம் திரைப்பட துறையில் இருக்கும் சிலரை பற்றி அல்லது அவர்கள் தொடர்புடைய செய்திகள் பற்றி எந்தளவிற்கு கவனமாக இருக்க வேண்டும் என்பது நான் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

    It is not for public consumption என்ற புரிதலின் அடிப்படையில் off the record -ஆக சொல்லப்படும் செய்திகள் ஒரு public discussion forum-ல் பதிவு செய்யப்படுவது சரியா? இதை விடவும் sensational ஆன செய்திகள் எனக்கு முன்பும் கிடைத்திருக்கிறது. இப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதை நான் ஒருபோதும் public forum-ல் பகிர்ந்துக் கொண்டதில்லை. எனவே நான் இப்போது சொன்ன அடிப்படையில் நீங்கள் எழுதிய சில வரிகளை நீக்கியுள்ளேன். புரிந்துக் கொண்டு ஒத்துழைப்பீர்கள் என்ற நம்பிக்கையில்

    அன்புடன்

  17. #2890
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ஜோ,

    கமல் ரஜினி மட்டுமல்ல நடிகர் திலகத்தின் அடுத்த தலைமுறை நடிகர்கள் இளைய தலைமுறை நடிகர்கள் உட்பட எவரையும் சிவாஜி பொருட்டு திட்டுவதோ தரம் தாழ்த்தவோ வேண்டாம் என்ற உங்கள் கருத்தில் உடன்படுகின்றேன். அதன் காரணமாக அந்த நடிகர்களின் இளைய தலைமுறை ரசிகர்கள் நடிகர் திலகத்தை தெரிந்து கொள்ள, புரிந்துக் கொள்ள, ரசிக்கக்கூடிய வாய்ப்புகள் தடைபட கூடும் என்ற உங்கள் அவதானிப்பிலும் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில் இங்கே இருக்கும் சிவாஜி ரசிகர்கள் பக்கம் பக்கமாக எழுதுவதை விட அவர்கள் (கமல் ரஜினியை சொல்லுகிறீர்கள்) சொல்லும் ஒரு வார்த்தைக்கு அதிக சக்தி உண்டு என்ற வரி இங்கே பலரின் மனதை புண்படுத்தியிருக்கிறது. கமல் ரஜினி, சிவாஜியைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்வார்கள். ஆனால் அவர்கள் குறிப்பிடும் அந்த சிவாஜியின் மேன்மையை இளைய தலைமுறை புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் யாரேனும் அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் அல்லவா? அதை யார் செய்வார்கள்? இங்கேயிருக்கும் நாலு பேர் தங்களுக்குள் சிலாகித்துக் கொள்வதனால் சிவாஜி புகழ் பரவாது என்ற வாதமும் சற்றே இலக்கு தவறியதோ என்று தோன்றுகிறது. காரணம் அந்த நாலு பேர் இங்கே பேசுவதைத்தானே நீங்கள் குறிப்பிடும் இளைய தலைமுறையும் சரி மற்றவர்களும் சரி படிக்கின்றனர். அப்படியென்றால் அதுதானே அடிப்படை!

    உங்கள் நோக்கத்தையும் உங்கள் சிவாஜி பற்றையும் நான் அறிவேன். நான் குறிப்பிட்ட அந்த வரிகளின் tone மட்டுமே நெருடல். உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.

    அன்புடன்

  18. Likes joe liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •