Page 276 of 400 FirstFirst ... 176226266274275276277278286326376 ... LastLast
Results 2,751 to 2,760 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2751
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    கோபால்,

    யாரும் அணுகாத கோணங்களில் நடிகர்திலகத்தின் ஆற்றலை, திறமையை, உழைப்பை தாங்கள் அணுகும் விதம் எப்போதுமே மலைப்பைத் தரக்கூடியது. இப்போது இந்த ஆரம்பமும் அப்படியே.

    நடிகர்திலகத்திடம் காணப்பட்ட மிகப்பெரிய சிறப்பு என நான் கருதி வியப்பது என்னவெனில், தன் உழைப்புக்கும் திறமைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்காவிடினும் அதனால் விரக்தி அடைந்து சோர்ந்து விடாமல், அடுத்து சிறந்தது, அதையடுத்து அதைவிட சிறந்தது என்று தந்துகொண்டே இருந்த தளரா உள்ளம்தான். அது எல்லோருக்கும் வாய்த்து விடாது

    அந்த அதிசய கலைஞனைப் பற்றிய உங்கள் தொடர் நிச்சயம் அதிசயிக்கத்தக்க வகையிலேயே அமையும் என எதிர்பார்த்து வரவேற்கிறேன்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2752
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by gopal,s. View Post
    நடிகர்திலகம்- கலை மரபின் நீட்சி -திசை மரபின் எழுச்சி.- பகுதி-1[/size]
    (இங்கே உள்ள அங்கத்தினர்களிடம் நான் எதிர்பார்த்த எண்ண எழுச்சி இருக்குமா என்பது சந்தேகம்). முகம் தெரியா பல அறிவு ஜீவிகள் (pm )இருக்கும் தைரியத்தில் துவங்குகிறேன்.
    டியர் கோபால் சார்,
    தலைப்பே இது அறிவு ஜீவிகளுக்கானது என்று சொல்கிறது. எனக்கு அறிவுஜீவித்தனமான எழுத்துக்களோ, பேச்சுக்களோ வராது என்றாலும், கண்ணதாசன், வாலி போன்றோரின் கவிதைகளையும், பெர்னாட்ஷா, ஷேக்ஸ்பியர் போன்றோரின் எழுத்துக்களையும் ரசிப்பதற்குத் தெரியும் என்ற அளவில் என்னைப்போன்ற பலரும் தங்களின் எழுத்துக்களை ரசித்துக்கொண்டிருக்கிறோம் என்பதைமட்டும் அறியவும். நடிகர்திலகம் என்றாலே high class -ஐ முதலில் கவரக்கூடியவர் என்றால், பார்ப்பவர்கள் அத்தனைபேரும் கலையின் அத்தனை நுணுக்கங்களையும் அறிந்தவர்கள் அல்ல என்றாலும், அந்தக் கலையை அணு அணுவாக ரசிக்கத் தெரிந்தவர்கள். கலை மரபு, திசை மரபு இரண்டையும் தங்களின் எழுத்தில், ஆய்வில் ரசிக்க ஆவலாக இருக்கிறோம்.
    Quote Originally Posted by gopal,s. View Post
    இதனால் மொழி-சார் கலைகளில் ,அற்புதம் நிகழ்த்தும் படைப்பாளிகள்,மற்றும் படைப்புகளின் உள்வட்டம் வாழும் காலங்களில் சுருங்கியே நிற்கும்.ஆனால் பிற்காலத்தில் சிலாகிக்க பட்டு அமரத்துவம் பெறும்.
    நடிகர்திலகத்தைப் பொறுத்தவரை, அவர் காலம், மதம், இனம், மொழி இவற்றிற்கு அப்பாற்பட்ட கலைஞன். அதனைப்பற்றி தங்களுடைய விரிவான ஆய்வில், தொடரில் விரிவாக அலசுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  4. #2753
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கலை வேந்தன்,

    நாங்கள் ஒப்பு கொண்டு ஓஹோ என்று அவர்(நடிகர்திலகம்) படங்கள் ஓடி கொண்டிருந்த போது ,தாமரை மணாளன் போன்ற எதிர் அணி அல்லக்கைகளுக்கு எங்கிருந்து ஆணை வந்து எழுதினர் என்று எங்களுக்கு தெரியும்.புரியும்.

    அப்படி பார்க்க போனால் உங்கள் தலைவரின் வலது கை ஆர்.எம்.வீரப்பன் ,உங்கள் தலைவருக்கு வயது தெரிய ஆரிம்பித்து,சதை போட்டு முதுமை வந்ததை குறிப்பிட்ட போது (படகோட்டி காலம் குறிப்பிட்டார்),அந்த கால கட்டத்தில் நடிப்பதை நிறுத்தவா நிறுத்தினார்? இது ஆர்.எம்.வீரப்பனே பத்திரிகையில் எழுதியுள்ள விஷயம்.

    ஆர்.எம்.வீரப்பன் அவர்களே உங்கள் தலைவரை முரண் பாடுகளின் மூட்டை என்று விவரித்துள்ளார்.இதயக்கனி படத்தில் அருவருக்க தக்க காட்சிகளை தானே விரும்பி கேட்டு நடித்து விட்டு (நான் கூறவில்லை.ஆர்.எம்.வீரப்பன் கூற்று),பிறகு படம் ஓடி முடித்த பிறகு,மாணவர்கள் இதை பார்க்க கூடாது என்ற அறிவுரை.வேறு.

    உங்களுக்கு எந்த இனிப்பு வேண்டுமென்றாலும் நடிகர்திலகம் ஸ்டால் இல் பெறலாம். கெட்டு போன ,அசல் நெய்யில் செய்யாத பண்டங்களை சாப்பிட்டு உடம்பை கெடுத்து கொள்ள வேண்டாம் என்று உங்கள் உடல் மேல் அக்கறையுள்ள சகோதர ஸ்தானத்தில் அறிவுரை கூறுகிறோம். .

    ஒன்று தெரியுமா, முரளி எழுத்தை பார்த்துத்தான் ,நான் திரிக்கே வந்து எழுத ஆரம்பித்தேன். தமிழ்,ஆங்கிலம் இரண்டிலும் சம புலமை கொண்ட சமநிலையாளர். அவர் பொய் தகவல் அளித்ததே இல்லை. அவரையே நீங்கள் உசுப்பி விட்டீர்கள்.

    உங்களுக்கு இவ்வளவு ஞானம் உள்ளதற்கு ,ரசனை மேம்பாடு காணுவது மிக மிக அவசியம். தேவர் படங்களில் நீங்கள் உட்கார்ந்திருப்பதை என்னால் கனவிலும் நினைக்க முடியவில்லை.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #2754
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    //நான் இப்போது, நாடக திரை கலையில் பெரும் மாற்றத்தை நடிப்பு கலையில் நிகழ்த்தி காலத்தை வென்று நிற்கும் சிவாஜி என்ற அற்புத கலைஞன் ,அதனை மரபின் நீட்சியுடன்,திசைகளின் புது வரவின் எழுச்சியை இணைத்து சாதித்த அதிசயத்தை விஸ்தாரமாக எழுத உள்ளேன்.//
    அன்புள்ள கோபால் சார்..

    நலமா..

    உங்கள் புதியதொடருக்கு எனது வரவேற்ப+கைதட்டல்+விஸில்.. நைஸ்..

    என்ன ஒன்றே ஒன்று.. ரொம்பக் கடின நடைத் தமிழ்.. கொஞ்சம் உம்மென்று எழுதுவது போல் தோன்றுகிறது.. ரிலாக்ஸாக எழுதுங்கள்.. நகைச்சுவையையும் கூட்டிக் கொண்டு எழுதுங்கள்.. உங்களால் முடியும்.. ஃபார் எக்ஸாம்பிள் மேல் கண்ட வரி.. மரபின் நீட்சியுடன் புரிகிறது.. திசைகளின் புதுவரவின் எழுச்சி என்பது மூன்று தடவை படித்த பின் புரிகிற மாதிரி இருக்கிறது..ஆனால் புரியவில்லை கிட்டத் தட்ட நவீன இலக்கிய சாயல்.. அது வேண்டாமே

    ந.இ என்றவுடன் உங்களின் பாடல்கள் தொகுப்பு இன் மதுரகானங்கள்.. மாலை சென்று கேட்கிறேன்..அந்தப் பாடல்கள் உங்களைக்கவர்ந்தவையா சாரு நிவேதிதாவையா.. (எனக்கு நவீன இலக்கியங்கள், நவீன இலக்கியவாதிகள், டி.வி சீரியல்கள் என்றாலே அலர்ஜி தான்..!)

    மற்ற்வை அப்புறம்

    அன்புடன்
    சி.க.. (வாசக தோஷ ஷந்தவ்யஹ...)

    சி.க,

    உங்கள் பிரதிவினை பதிவுக்கு நன்றி(PM ). ஆனால் எல்லாவற்றையும் relaxed ஆக நகைச் சுவை தெளித்து எழுதினால் சொல்ல வரும் கருத்து
    நீர்த்து விடும் அபாயம் உண்டு.

    நவீன இலக்கிய சாயல் இல்லை. அதுவேதான்.தமிழில் பிறமொழிகளில் இருந்து வரும் பலே ,பேஷ்,சாவி என்ற சொற்களுக்கு திசை சொற்கள் என்று இலக்கியம் குறிப்பது,அந்நிய மண்ணிலிருந்து வரும் கலைகளை திசை கலைகள் என்று நான் குறிப்பிட ஏதுவாகிறது.

    என் முன்னாள் கட்டுரைகளில் ஆங்கில ஆதிக்கம் அதிகம் என்ற குற்றசாட்டு தவிர்க்கவே ,நான் சிறிது தமிழில் கடின நடையை பின் பற்ற வேண்டி உள்ளது. கவலை படாதீர்கள் போக போக பழகி விடும்.

    மற்ற படி நான் குறிப்பிட்ட சிலரின் feedback மிக அவசியம்.(கலை,உங்களையும் சேர்த்தே)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #2755
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Gopal sir,
    Very good start. Congratulations. I salute your Tamil writing style.

  7. #2756
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் திரைப்பேராண்மை! : அந்த நாள் (1954)

    Andha naal : The Rashomon effect?!


    The Rashomon effect is contradictory interpretations of the same event by different people. The phrase derives from the movie Rashomon, where four witnesses' accounts of a rape and murder are all different.

    Our infamous Tamil film, (known for a Tamil movie without any song for the first time in the history of Tamil Cinema), Andha Naal (That Day) starring Nadigar thilagam Sivaji Ganesan in the lead is believed to have been inspired by the Akiro Kurosawa film, Rashomon. However, in contrast to Rashomon, the film's climax provides a solution to the murder using an Indian proverb (கொலையும் செய்வாள் பத்தினி (தூக்கு தூக்கி ஞாபகம் வருகிறதா)) as a vital clue!


    பாடல்களே இல்லாமல் வித்தியாசமான திரில்லர் வகைப் படமாக வெளிவந்து தமிழ்த் திரையுலகின் பெருமையை உயர்த்திட்ட குறிஞ்சி மலர் நடிகர்திலகத்தின் திரைப்பயணத்திலும் நடிப்புப் பரிணாம பரிமாண ங்களிலும் மாபெரும் எழுச்சியை உண்டாக்கி உலகளவில் உச்ச நடிப்பைத் தர தன்னாலும் முடியும் என்று நிரூபித்த சாதனைப் படம். வெளிநாட்டுப் படங்கள் தமிழில் தயாரிக்கப்பட்டால் தானே பொருத்தமான அழுத்தமான நடிப்பு முத்திரையை பதிக்க வல்லவர் என்பதை மீண்டும் புதியபறவை மூலமும், ஒதெல்லோ, சாக்ரடீஸ், சீசர், அலெக்சாண்டர் பாத்திரங்களின் மூலமும் நிரூபித்தார். தேச பக்தியை மையக்கருவாக கொண்ட படத்தில் சூழல் காரணமாக விரக்தி உச்சம்கொண்ட குரூர மனநிலையை அற்புதமாக வடித்திருந்தார்! படத்தின்முதல் காட்சியிலேயே ரிஸ்க் எடுத்து குண்டடிபட்டு சுருண்டு விழுந்து மரிக்கும் அவஸ்தையை ரசிகர்கள் பதறும் வண்ணம் உயிர்கொடுத்து நடித்திட அவராலேயே இயலும்!

    பின்னாளிலும் பொம்மை, நடுஇரவில் போன்ற திரில்லர் வகைப்படங்களுக்கு பெயர் பெற்ற வீணை எஸ் பாலச்சந்தர் ஏவிஎம் தயாரிப்பில் துணிச்சலுடன் பாடல்களை தவிர்த்து இயக்கிய முன்னோடி திரைக்காவியம் அந்த நாள் !



    Last edited by sivajisenthil; 10th November 2014 at 08:56 PM.

  8. #2757
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் திரைப்பேராண்மை! : அந்த நாள் (1954)

    Some vital background and synopsis upon comparison with Rashomon:

    Rashomon : Synopsis

    One of legendary director Akira Kurosawa's most acclaimed films, Rashomon features an innovative narrative structure, brilliant acting, and a thoughtful exploration of reality versus perception.
    This landmark film is a brilliant exploration of truth and human weakness. It opens with a priest, a woodcutter, and a peasant taking refuge from a downpour beneath a ruined gate in 12th-century Japan. The priest and the woodcutter, each looking stricken, discuss the trial of a notorious bandit for rape and murder. As the retelling of the trial unfolds, the participants in the crime -- the bandit (Toshiro Mifune), the rape victim (Machiko Kyo), and the murdered man (Masayuki Mori) -- tell their plausible though completely incompatible versions of the story. In the bandit's version, he and the man wage a spirited duel after the rape, resulting in the man's death. In the woman's testimony, she is spurned by her husband after being raped. Hysterical with grief, she kills him. In the man's version, speaking through the lips of a medium, the bandit beseeches the woman after the rape to go away with him. She insists that the bandit kill her husband first, which angers the bandit. He spurns her and leaves. The man kills himself. Seized with guilt, the woodcutter admits to the shocked priest and the commoner that he too witnessed the crime. His version is equally feasible, although his veracity is questioned when it is revealed that he stole a dagger from the crime scene. Just as all seems bleak and hopeless, a baby appears behind the gate. The commoner seizes the moment and steals the child's clothes, while the woodcutter redeems himself and humanity in the eyes of the troubled priest, by adopting the infant. ~ Jonathan Crow, Rovi (by courtesy : Rotten Tomaoes)

    Andha Naal : Synopsis

    Andha Naal (English: That Day) is a 1954 Indian Tamil crime mystery film produced by A. V. Meiyappan and directed bySundaram Balachander. It is the first film noir in Tamil cinema, and the first Tamil film to be made without songs, dance and stunt scenes. It was thematically inspired by Akira Kurosawa's Rashômon (1950) and adapted from Anthony Asquith's The Woman in Question (1950). The story, which is set during in the milieu of the South-East Asian theatre of World War II, is about the murder of a radio engineer Rajan (Sivaji Ganesan); the suspects are Rajan's wife Usha (Pandari Bai), the neighbour Chinnaiah Pillai (P. D. Sambandam), Rajan's brother Pattabi (T. K. Balachandran), Rajan's sister-in-law Hema (Menaka), and Rajan's mistress Ambujam (Suryakala). Each one's account of the incident points to a new suspect.
    Before the casting of Ganesan, S. V. Sahasranamam and N. Viswanathan were chosen for the lead role but were later dismissed because they were unconvincing to the filmmakers. The story and dialogue were written by Javar Seetharaman, who also played a prominent role as an investigation officer in the film. Cinematography was handled by Maruti Rao and the background score was composed by AVM's own music troupe, "Saraswathy Stores Orchestra". The film's length of 12,500 feet (3,800 m) was shorter than most contemporaneous Tamil films.

    Andha Naal was released on 13 April 1954. It was a critical success and was awarded the "Best Film Award" by the Madras Filmfans' Association and a Certificate of Merit for Second Best Feature Film in Tamil at the 2nd National Film Awards in 1955. Despite being a commercial average during its release, the film has acquired a cult status over the years and is regarded as a milestone in Tamil cinema. In 2013, Andha Naal was included in CNN-IBN's list of the "100 greatest Indian films of all time".

    The main theme of Andha Naal is patriotism. It tells how unemployment and desolation of youngsters will lead to them becoming traitors. If a country does not appreciate talented young men for their efforts, they could turn against the nation. Rajan, a talented young man turns into a traitor as he does not get any support in any form from his country which fails to recognise his efforts. A dejected Rajan goes to Japan where his talents are well recognised. He becomes Japan's secret agent in order to betray his own nation

    Reference courtesy : Rotten Tomato, You Tube, IMDb andWikipedia
    Last edited by sivajisenthil; 10th November 2014 at 10:07 PM.

  9. #2758
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கோபால் சார்

    "முதல் என்பது தொடக்கம்...
    முடிவென்பது அடக்கம்...
    விடை என்பது விளக்கம்...
    விதி என்பது என்ன..."


    தங்களுடைய தொடக்கத்தில் மேலே உள்ள அத்தனையும் அடங்கி விட்டது... இதற்கு மேல் தாங்கள் எவ்வளவு எழுதினாலும் போனஸ் தான்...

    தாங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சந்தர்ப்பங்கள் மனிதனைத் தூண்டுவது இந்த தீர்மானத்தை நோக்கிச் செல்லத்தான்...

    ஆனால் அந்த சந்தர்ப்பங்களை உருவாக்குவது அந்த மனிதன் தான் என்பதை ஏனோ உணர மறுக்கிறார்கள்..

    இந்த பகுத்தறிவைத் தான் பெரியார் மக்களிடம் எடுத்துச் சொன்னார்.

    எந்த ஒரு கலையும் எக்காலத்திலும் முழுமை கண்டதில்லை. நாளும் வளரும், தேயும்,தேய்ந்து வளரும்,மாறும்,புதுப்பிக்கும், எல்லா திசையிலும் உள்ள அம்சங்கள் கவர்ந்து புதுமை காணும்,விஞ்ஞானத்தின் கூறுகளால் அக-புற மாறுதல்கள் எய்தும் ,மனித வாழ்க்கையின் வளர்ச்சிகளால் புற மாறுதல்கள் காணும்,இயல்பு கொண்டது.எந்த புள்ளியிலும் தொடங்கி,எங்கும் முடிவெய்துவதல்ல. அதே போல முழுதும் ஓர் இரவில் மாற்றம் காண்பதல்ல. ஒரு மனிதர்,ஒரு நிகழ்வு,என்று இதனை நிகழ்த்தி விட முடியாது. இது ஒரு பிரத்யேக குழு சார்ந்த எண்ண எழுச்சி,பொழுது போக்கு,கலாச்சாரம்,நுண்ணரசியல்,அயல் நுழைவுகளை அங்கீகரிக்கும் போக்கு இவை சார்ந்து குறுகிய வட்டத்தில் நிகழ்பவை. மொழி சாரா கலைகள் நீட்சி பெரும் கூறுகள் ,அங்கீகாரம் பெரும் சாத்தியங்கள் அதிகம்.(ஓவியம்,சிற்பங்கள் போன்றவை).மொழி சார் கலைகளோ பிரத்யேக குழுவின் அங்கீகாரம் வேண்டுபவை.
    மொழி சார் கலைகளின் நீட்சி ஒரு அளவுகோலுக்குள் அடங்குவதில்லை.. ஆற்று மணல் திட்டுக்களாய் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும். இந்தத் திட்டுக்கள் அளவு குறைவானாலும் அதிகமானாலும் அளந்து பயனுமில்லை..

    மொழி சாராத ஒரு கலையென்பது விதிமுறைகளைக் கடந்தது... அளவுகோலுக்கு அப்பாற்பட்டது.. இனம் மொழி என்ற எந்த பாகுபாட்டையும் உடைத்தெறிய வல்லது.. இந்த சுதந்திரம் எந்த கலைஞனின் ஆளுமைக்கு கட்டுப்படுகிறதோ.. அவன் காலத்தைக் கடந்து நிற்கிறான்...

    இதில் மனிதனின் அறிவின் நீட்சியை,புதுமை வேகத்தை புது திசையில் செலுத்தும் உயர்-ரக கலை முயற்சிகள், மற்ற பொதுமை சார் கற்பனை வளமற்ற கீழ்மை கலைகளால் நசுக்க பட்டு,புரிந்து கொள்ள படாமல் அல்லது வாழும் காலத்தில் அங்கீகாரம் பெறாமல்,காலத்தை மீறி நிற்கும் தன்மை பெறும். இதனை நிகழ்த்தும் அற்புத கலைஞர்கள் மற்றும் கிரியா ஊக்கிகள் , வாழும் காலத்தில் கீழ்நிலை மனிதர்களின் நுண்ணரசியல்,கீழ்தர வியாபார தந்திரம் இவற்றால் பாதிக்க பட்டு துன்புறுதல், காலம் தோறும் நாம் காணும் நிகழ்வுகள்.

    இதனால் மொழி-சார் கலைகளில் ,அற்புதம் நிகழ்த்தும் படைப்பாளிகள்,மற்றும் படைப்புகளின் உள்வட்டம் வாழும் காலங்களில் சுருங்கியே நிற்கும்.ஆனால் பிற்காலத்தில் சிலாகிக்க பட்டு அமரத்துவம் பெறும்.
    இது அந்தந்த காலத்தில் அந்தந்த கலைகளின் தாக்கத்தைப் பொறுத்தது. அவற்றின் உட்பொருளைப் பொறுத்தது.. அது சொல்லப் படும் விதம், சொல்லப் படும் உள்ளடக்கம் ஆகியவற்றைப் பொறுத்தது..

    இதனை செலுத்தி,மக்களை ஒரு படி மேற்செலுத்தி செல்லும் கலைஞர்கள்,காலத்தை மீறி நிற்பார்கள்.நினைக்க படுவார்கள்.அறிச்டோபானஸ் ,இப்சென்,லியனார்டோ டா வின்சி ,வாத்ஸ்யாயன் ,மாக்கிய வில் ,ஷேக்ஸ்பியர்,கம்பன்,சாத்தர்,விட்டோரியோ டிசிகா,பிகாசோ,மொசார்ட் ,சிவாஜி கணேசன் போன்ற மேதைகள் ,தான் வாழும் காலத்தை மீறி ,கலைகளை முன்னெடுத்து சென்ற பிறவி மேதைகள்.
    Absolutely...

    கலைகளின் கூறுகள் மாறி கொண்டே இருக்கும். ஓவியர்களின் நிகழ் பட வரைவு(மனிதர்,சுற்று பொருட்கள்),இயற்கை காட்சிகள், புகை பட கலையினால் தேய்வு கண்ட போது ,ஓவியன் தன்னை pointilism ,sur realism ,impressionism ,expressionism ,cubism என்று தன்னை புதுப்பித்து மாற்றம் கண்டு ஜீவித்தது.performing arts என நிகழ் கலைகளோ , கூத்து,பண் ,நாடகம்,திரைப்படம் என வெவ்வேறு வடிவெடுத்து ,அக-புற மாற்றங்கள்,சாத்திய கூறுகள் சார் வடிவ அக-புற மாற்றங்கள்,வியாபார வீச்சுக்கள் சார்ந்த பொருட்புழக்கம்,அந்தந்த கால மக்களின் அறிவு நிலை,எண்ண எழுச்சிகள்,மாற்றம் தேடும் விழைவு, அரசியல்-கலாச்சார நிகழ்வுகள்,வாழ்வு நிலை மாற்றங்கள் இவை சார்ந்து தன்னை இறுக்கி,நெகிழ்த்தி,மாற்றி,நிலையாமையே நிலையாய் கொண்டு மாற்றமே மாற்ற இயலா விழைவாய் கொண்டு , உயிர்பித்து வாழ்வதுமல்லாமல், மற்ற மாற்று கலைகளுடன் போராடி வெல்ல வேண்டிய அவசியமும்,அவசரமும் கொண்டது.

    இதனை நிகழ்த்தி காட்டுவோரையே ,சமுகம்,பெருமையுடன் நினைவு கூற கடன் பட்டது. நான் இப்போது, நாடக திரை கலையில் பெரும் மாற்றத்தை நடிப்பு கலையில் நிகழ்த்தி காலத்தை வென்று நிற்கும் சிவாஜி என்ற அற்புத கலைஞன் ,அதனை மரபின் நீட்சியுடன்,திசைகளின் புது வரவின் எழுச்சியை இணைத்து சாதித்த அதிசயத்தை விஸ்தாரமாக எழுத உள்ளேன்.
    காத்திருக்கிறோம்...
    Last edited by RAGHAVENDRA; 10th November 2014 at 10:17 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #2759
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசுதேவன்,
    தங்களுடைய மன வருத்தம் நிச்சயம் எளிதில் ஆறுதலுக்கடங்கக் கூடியதல்ல. நிழற்படங்கள் கடந்த கால வரலாற்றின் சான்றுகள். இவற்றை அந்நாட்களில் நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போனது பின்னாட்களில் நிச்சயம் நம்மையே கடிந்து கொள்ளக் கூடியவை. அந்த அடிப்படையில் தங்களுடைய மன வருத்தம் புரிந்து கொள்ளக் கூடியதே.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Thanks JamesFague thanked for this post
  12. #2760
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கோபால்
    நடிகர் திலகத்தை சந்தித்த அனுபவங்கள் ஒவ்வொரு ரசிகருக்கும் மிகவும் மெய்சிலிர்க்கக் கூடியவை. என்றென்றும் எண்ணி எண்ணி மனம் பூரிக்க வைப்பவை. எந்த வித கருத்துப் பரிமாற்றங்களானாலும் இது போன்ற அனுபவங்கள் நினைவிற்கு வரும் பொழுது மனதிற்குப் பட்டதை எழுதுவது தவிர்க்க இயலாது. அது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் மகிழ்வூட்டக் கூடியது. அந்த வகையில் இடையில் வரக்கூடிய மற்ற பதிவுகளையும் நாம் மனமுவந்து வரவேற்போம். ஆனால் அதே சமயம் முடிந்த வரையில் இந்த பதிவகள் ஒரு விவாதத்தின் முடிவில் கிடைக்கக் கூடிய இடைவெளியில் இடம் பெற்றால் இன்னும் நன்றாக இருக்கும். இதனை நம் நண்பர்கள் உணர்ந்தால் நம்முடைய திரியின் பங்களிப்பார்களின் எண்ணிக்கை மட்டுமின்றி ஆர்வமும் கூடும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •