Page 238 of 400 FirstFirst ... 138188228236237238239240248288338 ... LastLast
Results 2,371 to 2,380 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2371
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    சௌத்ரி தம்பி...நல்ல இருக்கீங்களா...........
    பகலவனின் ஒளிக்கதிர்களைப் போல் பராசக்தி வேந்தன் பெருமைகளை பதிவுகள் மூலம் பறை சாற்றும்
    தங்கள் அன்பால் நலமாக இருக்கிறேன் சூர்யா சார்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2372
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகுல் ராம்,

    இந்த படம் என்றல்ல. நான் எழுதிய அனைத்தையுமே படித்து விட்டு பிறகு சம்பந்த பட்ட படத்தை பார்த்தால்,வித்யாசத்தை உணர்வாய்.இதை Film appreciation என்போம். மேம்போக்கான ரசனையை மீறி மேற்செல்வது.சிவாஜி போன்ற மேதைகளை மேம்போக்காக ரசிப்பதை விட,அதில் தோய வேண்டும்.

    உனக்கு என் வாழ்த்துக்கள்.

    சௌத்ரி,

    உங்களுக்கும் பாஸ்கருக்கும் நன்றி. நான் அவருக்காக 2 script செய்து வைத்திருந்தேன்.நான் திட்டமிட்ட படி,திரை துறையில் நுழைந்திருந்தால்,
    நிச்சயம்,சிவாஜிக்கு மிக மிக சிறந்த படங்கள் இரண்டாவது தந்தே இருப்பேன்.என்ன செய்ய?என் இயல்புக்கும் ,80களில் இருந்த திரைத்துறைக்கும் ஒத்து போயிருக்காது.

    ரவி கிரண்,

    நான் சுயவிரும்பியோ,கவனம் திருப்பியோ அல்ல. நான் வேலை பார்த்தது,வடக்கிந்திய நிறுவனங்களில்.ஒரு வார்த்தை ஹிந்தி பேசாமல்,அந்த நிறுவனங்களின் உச்ச பதவியை அடைந்தேன் என்றால்,சிறிதே சுய விற்பனை பழகியதால். என் இயல்பு முற்றிலும் வேறானது.சுற்றியிருக்கும் புள் பூண்டுகளின் மீது கூட நிஜ மதிப்பு வைத்துள்ளவன் நான். என்னுடன் வாழ்க்கையில்,நிறுவனங்களில் பயணித்த அனைவருக்கும் இது தெரியும்.

    கலை வேந்தன்,

    பாருங்களேன்,இது மாதிரி பட்ட பெயர் வைத்து கொள்ள கூட எனக்கு,அகந்தை போதவில்லை.சொந்த பெயரிலேயே உலவுகிறேன்.எஸ்.வீ சார்பில் ஆஜராவதற்கு வாழ்த்துக்கள்.ஆனால் எஸ்.வீ ,உங்களை விட சீனியர் பதிவாளர்.தன்னைத்தானே கவனித்து கொள்வார்.வாரிசுகளை வாழ்த்துவதற்கு,trend setter யாரென்று எஸ்.வீ யை கேட்டு கொள்ளுங்கள்.(ஒவ்வொரு முறை பள்ளி இறுதி தேர்வுகள் முடிவுகள் வரும் போது உங்கள் திரியை படிக்கவும்)
    Last edited by Gopal.s; 21st October 2014 at 03:14 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #2373
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Today's Dinamalar Tea Kadai Bench :
    சிவாஜிக்கு கிடைக்குமா பாரத ரத்னா?

    ''
    ''பாரதரத்னா விருது கொடுக்கணும்ன்னு, ஜனாதிபதியை சந்திச்சு கோரிக்கை வைக்க திட்டமிட்டிருக்காங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.

    ''இப்ப யாருக்கு... இதையே வச்சு, அரசியல் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டாங்களா...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

    ''அது என்ன விவகாரமோ தெரியலே பா... மத்தியில, ஐ.மு., கூட்டணி அரசு நடக்கும் போது, கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது கொடுக்கணும்ன்னு, கவிஞர் வைரமுத்து கோரிக்கை வச்சாரு... அந்த அரசு செவி சாய்க்கல... ஆனா, மறைந்த முதல்வர் அண்ணாதுரைக்கு பாரத ரத்னா விருது வழங்கணும்ன்னு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும், பிரதமர் மோடிக்கும் கருணாநிதி ஏற்கனவே கோரிக்கை வைச்சிருக்காரு...

    ''இப்ப, மறைந்த நடிகரு சிவாஜிகணேசன் சார்பா கோரிக்கை எழுந்திருக்கு... 'சிவாஜி கணேசன், 300 படங்களுல நடிச்சிருக்காரு... வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற தேசப்பற்று படங்கள்ல நடிச்சு, இந்தியாவின் பெருமையை உலக அளவுல கொண்டு போயிருக்காரு... அவருக்கு பாரத ரத்னா விருது தரணும்'ன்னு சிவாஜி சமூக நலப்பேரவை சார்புல, மத்திய அரசுக்கு கோரிக்கை வைச்சிருக்காங்க.... ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திச்சு வலியுறுத்த, அனுமதி கேட்டு காத்திருக்காங்க பா...'' என, விளக்கினார் அன்வர்பாய்.

    ''தீபாவளிக்கு மைசூர் பாகு செய்யணுமாம்... கடலை பருப்பை மாவா திரிச்சு மாமிக்கு குடுக்கணும்... நாழி ஆயிடுத்து... நான் கிளம்பறேன்...'' எனக் கூறி, குப்பண்ணா கிளம்பினார்.

    மற்றவர்களும் பின் தொடர்ந்தனர்; பெஞ்ச் அமைதியானது!

    Better late than never! Compared to any other actor of this world, NT remains the definitive Dictionary or the Thesaurus of acting for generations hitherto and yet to come. His achievements whereby he brought laurels to our nation are indisputable and his films and characterizations of roles remain national assets for aspiring actors ! The recognition of NT, the heartthrob of millions across the globe who had taken the country sky high by donning roles that are unimaginable for any global star now and then (desrving even a posthumous Life-time achievement OSCAR award in line with global screen legends like Charlie Chaplin), by way of conferring his due Bharat Ratna without any political coatings is the right way of paying tributes from the governmental side.
    We join hands in appreciating KCS for his efforts taken through Sivaji Samooganala Peravai and all other persons directly or indirectly connected with this long pending genuine demand from the hearts of people!!


    Last edited by sivajisenthil; 21st October 2014 at 08:37 AM.

  5. Likes Russellmai liked this post
  6. #2374
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆர்.கே.எஸ்.



    நீங்கள் quote பண்ணியதற்கும்,சௌத்ரி யை விசாரித்திதற்கும் ,என்ன சம்பந்தம்?உங்களுடைய வினோத நடத்தை ,எல்லோர் மனதிலும் குழப்பம் ஏற்படுத்துகிறது.



    ஜோ, என்ன கூற வருகிறார் என்று எனக்கு புரிகிறது.



    நாமே ,நம்மை பற்றிய சந்தேகத்தை தூண்ட வேண்டாமே.



    நமக்குள் நல்லுறவு உள்ளது என்பது நமக்கு மட்டும் தெரிந்தால் போதாது.



    நான் டிசம்பர் வரையே மையம் திரிகளில் இருப்பேன்.பிறகு என்னுடைய சொந்த ப்ளாக் ஒன்று தொடங்கி, பல விஷயங்கள் எழுத உள்ளேன்.



    அதுவரையாவது,புரிகிறதோ இல்லையோ, என்னை எழுத அனுமதித்தால் சந்தோசம்.இல்லையானாலும் ,எனக்கு நஷ்டமில்லை.



    ஒரு பதிவு வந்தால்,மேலே மேலே ஏதாவது போட்டு சமாதி கட்டாமல், ஒரு response கொடுத்து,உரிய முறையில் நடந்தால் மட்டுமே ,நமக்கு நல்லது.



    என் போதாத காலம்,மையம் திரிகளுக்கு நான் 2012 இல் வந்தது. 2008 இல் வந்திருந்தால், அழகாக பங்களித்து விட்டு 2012 இல் ஒதுங்கி கொண்டிருக்கலாம்.



    புரியவில்லை என்று சொல்லும் அளவில் நான் என்ன ஐன்ஸ்டின் கோட்பாட்டையா விவரிக்கிறேன்?நடிப்பு பள்ளி, பாகம் மூன்றில் தொடங்கி பாகம் 9 வரை ,அனைத்து வித நடிப்பு பள்ளிகள்,அது சார்ந்த அவர் படங்கள் என விவரித்து விட்டே தொடர்ந்தேன். ஒவ்வொரு பதிவுக்கும் பின் என்னுடைய பல வருட பரிச்சயம்,படிப்பு, கிட்டத்தட்ட 6 மணிநேர உழைப்பு உள்ளது.



    புரியவில்லை என்று சொல்லி,உங்கள் முகங்களிலே கரி பூசி கொள்கிறீர்கள். மற்றவர்கள்,நம்மை பார்த்து வளர முற்படும் போது ,நாம் தேய்தல் அழகா?



    நீங்கள் தயவு செய்து ,திரும்ப நிதானமாக படித்து (வீடியோ போட்டு பக்கம் நிரப்புவதற்கு பதில்),அது சார்ந்த பதிவுகள் இட்டு,மற்றோருக்கு வழி காட்டுங்கள். இது நீங்கள் ஆரம்பித்த திரி. ஞான ஒளி ,பாபு,கெளரவம்,உத்தம புத்திரன் போன்ற பதிவுகள்,உங்கள் திரிக்குத்தானே பெருமை? பதிவுகளை மதிக்காமல்,வீடியோ போடுவது எந்த வகை நாகரிகம்? moderator எதற்கு இருக்கிறார்கள்?வாசு போன்றவர்கள் ஏன் இங்கு வர தயங்குகிறார்கள் என்று புரிய ஆரம்பித்து விட்டது.எல்லோருக்கும் ராகவேந்தர்,வாசு,கார்த்திக்,சாரதி,முரளி,ஜோ போன்றோருடன் என் நல்லுறவு புரிந்திருக்கும் என்றே கருதுகிறேன்.அவர்கள் சுணக்கத்திற்கு நான் காரணமல்ல.ஆனாலும் வருவார்கள்.



    திருவிளையாடலுக்கு பிறகு புது பதிவு போடவே மனதில்லை.இப்படியா வெறுக்க வைப்பீர்கள்?உங்கள் அரசியல் ஏன் எடுபடவில்லை என்ற காரணம் புரிகிறது.



    இங்கு நான் வர போவதே இல்லையென்றாலும்(december ), நடிகர்திலகமே நான் பூசிக்கும் ஒரே மனித கடவுள்.நான் இறந்த பிறகும்,அடுத்தடுத்த பிறவிகளிலும் ,அவர் பக்தனாக மட்டுமே தொடர்வேன்.



    எனக்கு வரும் PM ,பலர் சொன்ன தகவல் படி மௌன வாசகர்கள் பலர் உள்ளனர்.ஆனாலும் உரத்த வாசகர்கள் உங்கள் போல் உள்ளவர்கள் தொடர்ந்து புரியாத எழுத்தையே தருகிறேன் என்று எழுதி வந்தால்,இதை புதிதாக படிக்க நினைப்போருக்கு தயக்கம் வருமே?



    நீங்கள் முழுக்க படித்ததில்லை என்று சொல்லி விட்டு,தொடர்ந்து இவ்வாறு கூறுவதன் உள்நோக்கம் புரியவில்லை.நான் தொந்தரவேன்றால்,என் தொந்தரவு,நிச்சயமாக இருக்காது.



    நான் பாடு பட்டது பதிவின் தரங்களுக்காக மட்டுமே. தமிழர்களின் பெருமைக்காக மட்டுமே.



    யாரையும் தாக்கி ,தனிப்பட்ட முறையில் நான் சந்தோசம் அடைந்ததில்லை. மாற்று திரி நண்பர்கள் உட்பட. நான் வெறுத்தது பொய்மைகளை,பிம்பங்களை மட்டுமே. அதை ஆராதனை செய்வோரிடம் அனுதாபமே மிஞ்சும்.அதனால் பாதிக்க பட்ட தமிழ் உன்னதங்களை நினைத்தால் உள்ளம் வெம்பும்.சில சமயம் ,கலகலப்பு கருதி,"புரியும் படி" கலாய்த்ததுண்டு (நம் திரி,மாற்றுதிரி,வேற்று திரி).எதுவுமே வஞ்சத்தினால் அல்ல. எனக்கு வஞ்சம் தெரியாது.(தன்னிலை விளக்கமாக எடுத்தாலும் சரி)



    அனைத்து நண்பர்களுக்கும் ,மனம் புண் பட்டிருப்பின் மனபூர்வமான மன்னிப்பை கோருகிறேன்.



    என்னுடைய blog காரம்,மணம்,நிறம்,தரம் குறையாமல்,அனைத்தையும் குதற காத்திருக்கிறது.பல்வேறு பட்ட பிரச்சினைகள்,விஷயங்களுடன்.



    அனைத்து மையம் திரி நண்பர்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.அனைத்து அணி நண்பர்களுக்கும் ,இந்த தீபாவளி இனியதாக அமையட்டும்.
    Last edited by Gopal.s; 21st October 2014 at 09:23 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #2375
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உண்மையாகவே நான் அசந்து போய் நின்றது , தாமஸ்-சிங்கமுத்து இயக்கத்தில் ஜீசஸ் ஆக எம்.ஜி.ஆர் உருவ பொருத்தத்தில். அவ்வளவு பாந்தமாக பொருந்தி போனது. இந்த படம் வராதது ஒரு நஷ்டமே. எம்.ஜி.ஆரின் பாணிக்கு இந்த வேடம் ஒத்து வந்திருக்கும்.



    அதே போல பொன்னியின் செல்வன். தயாரிப்பில் உரிய கவனம் செலுத்த பட்டு ,அடிமை பெண் போல பிரம்மாண்டமாக வந்திருக்கும்.மகேந்திரன் திரைக் கதை வேறு உருவாக்கி இருந்தாராம்.



    இது இரண்டும் உருவாகாதது ,நமக்கு நஷ்டமே.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. Likes Richardsof liked this post
  9. #2376
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  10. #2377
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    To all fellow hubbers and NT Fans in particular wish you all a Happy Diwali.



    Regards

  11. #2378
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy : Saradha Madam


    தங்க சுரங்கம்

    இலக்கணப்படி இப்படத்தின் தலைப்பு 'தங்கச் சுரங்கம்' என்றுதான் இருக்க வேண்டும். தமிழ்ப்படங்களை ஆட்டிவைக்கும் செண்டிமெண்ட் காரணமாக, எட்டெழுத்துக்களில் தலைப்பு அமைந்தால், அதில் வரும் ஒற்றெழுத்தை நீக்கி விட்டு, ஏழு எழுத்துக்களில் தலைப்பு வருவதுபோல செய்வார்கள் (உதாரணம்: கல்யாண பரிசு). ஆனால் இப்படத்தில் ஒற்றெழுத்தான 'ச்'சை நீக்கியபின்னர்தான் எட்டெழுத்துக்களே வருகின்றன. அப்படியிருக்க என்ன காரணத்தால் இலக்கணப்பிழை செய்தார்களென்று தெரியவில்லை.

    ஒரு காலம் இருந்தது. நடிகர்திலகத்தின் சமூகப்படங்களில் வண்ணப்படங்களைக் காண ஏங்கிய நேரம். ஆம் 1964 ல் ஒரு 'புதிய பறவை', 1967 ல் ஒரு 'ஊட்டி வரை உறவு' என்று அத்தி பூத்தாற்போலவே அவரது சமூகப்படங்களில் வண்ணப்படங்களைக் காண முடியும். மற்றபடி நடிகர்திலகத்தின் வண்ணப்படங்கள் என்றால் அது திரு ஏ.பி.என். எடுத்த (திருவிளையாடல், சரஸ்வதிசபதம், கந்தன்கருணை, திருவருட்செல்வர், திருமால்பெருமை போன்ற) புராணப்படங்கள்தான். அந்த வகையில் இப்போதுள்ள நடிகர், நடிகையர் அதிர்ஷ்டம் செய்தவர்கள். திரைப்படங்கள் என்றாலே வண்ணம்தான் என்று முன்னேறிவிட்ட காலம் இது. அப்போதெல்லாம் அப்படியில்லை. எப்போதாவது தான் வண்ணப்படங்கள் வரும். 1964ல் அறிமுகமான ஜெய்சங்கர் கூட கிட்டத்தட்ட பதினைந்துக்குமேல் கருப்பு வெள்ளைப் படங்களில் நடித்த பின்பே முதல் வண்ணப்படமாக 'பட்டணத்தில் பூதம்' படத்தில் நடித்தார். இந்த வகையில் ரவிச்சந்திரன் கொடுத்து வைத்தவர். முதல் படமான 'காதலிக்க நேரமில்லை'யே வண்ணத்தில் அமைந்தது. தொடர்ந்து இதயக் கமலம், நான், மூன்றெழுத்து, உத்தரவின்றி உள்ளே வா, அதே கண்கள் என்று வண்ண நடை போட்டார். மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு படகோட்டி, எங்கவீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, ரகசியபோலீஸ் 115, பறக்கும் பாவை என்று வண்ணத்தில் வந்து கொண்டிருந்தபோது சிவாஜி ரசிகர்கள் வண்ணப்படங்களுக்கு ஏங்கினார்கள் என்பது உண்மை. அவர்களுக்கு தீனி போட்டது ஏ.பி.என்னின் புராணப் படங்கள் மட்டுமே. எம்ஜிஆர் அவர்களை வைத்து வண்ணத்தில் ஒளிவிளக்கு, அன்பேவா படங்களை எடுத்த ஜெமினி வாசன், மற்றும் ஏ.வி.எம் செட்டியார் ஆகியோர் கூட நடிகர்திலகத்தை வைத்து 'மோட்டார் சுந்தரம் பிள்ளை', 'உயர்ந்த மனிதன்' ஆகிய படங்களை கருப்பு வெள்ளையில் எடுத்து சிவாஜி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.

    மற்றபடி நடிகர் திலகத்துக்கு தன் திறமையைக்காட்ட கருப்பு வெள்ளை ஒரு தடையாக இல்லையென்பதோடு அவரது நடிப்புக்கு சவாலாகவும், திறமைக்கு உரைகல்லாகவும் அமைந்தவை யாவும் (பாவ மன்னிப்பு, பாசமலர், பழனி, நவராத்திரி, ராமன் எத்தனை ராமனடி, தெய்வமகன், வியட்நாம் வீடு உள்ளிட்ட) கருப்பு வெள்ளைப் படங்களே. இருந்தாலும் ரசிகர்களுக்கென்று ஒரு ஆசை இருக்கிறதல்லவா?

    எதற்கு இத்தனை பீடிகை போடுகிறாள் என்று உங்களுக்கு தோன்றலாம். ஆம், நடிகர் திலகத்தின் சமூகப்படங்களில் புதியபறவை, ஊட்டிவரைஉறவு படங்களுக்குப்பின் நீண்ட இடைவெளிக்குப்பின்னர் வந்த வண்ணப்படம்தான் "தங்க சுரங்கம்".

    செயற்கைத்தங்கம் உற்பத்தி செய்து, நல்ல தங்கத்தோடு கலந்து விட்டு, நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய மோசடியையும், பாதிப்பையும் ஏற்படுத்தி வரும் சதிகாரக் கும்பலைப் பிடிக்கும் சி.பி.ஐ.அதிகாரி பாத்திரம் நடிகர் திலகத்துக்கு. அதற்கு ஏற்றாற்போல வாகான ஒல்லியான உடலமைப்பு இருந்தது அப்போது அவருக்கு. அதனால் ரோலுக்கு கனகச்சிதமாக பொருந்தினார். கூடவே வசீகரமான சுருள், சுருளான சொந்த தலைமுடி எல்லாம் சேர்ந்து அப்பாத்திரத்துக்கு மெருகூட்டின. (அப்போதைய படங்களில் எல்லாம் சி.ஐ.டி.என்பதுதான் புழக்கத்தில் இருந்ததே தவிர சி.பி.ஐ. என்பது ரொம்ப பேருக்கு வித்தியாசமான வார்த்தையாக இருந்தது. இப்போது, சின்னக் குழந்தைக்கு கூட தெரியும்படியாக சி.பி.ஐ.என்ற வார்த்தை புழக்கத்தில் உள்ளது).

    படம் துவங்கும்போது, இரண்டாம் உலகப்போரின் பிண்ணனியோடு துவங்கும். ஆங்காங்கே பீரங்கித்தாக்குதல்கள், அதை விட மோசமாக போர் விமானங்கள் குண்டு வீசி பர்மாவின் தலைநகரான ரங்கூனை தாக்கிக்கொண்டிருக்கும்போது இந்தியர்கள் கப்பலில் தாய்நாடு திரும்பிக்கொண்டிருப்பர். அப்போது தன்னுடைய சின்னஞ்சிறு மகன் ராஜனுடன், கப்பலில் ஏறப்போகும் காமாட்சியம்மாளை (எஸ்.வரலட்சுமி), கப்பலில் இடம் நிறைந்து விட்டது என்று அதிகாரிகள் தடுக்க, தான் பர்மாவில் இருந்து அழிந்தாலும் பரவாயில்லை, தன் மகன் ராஜன் இந்தியாவில் எங்காவது போய் நலமாக இருக்கட்டும் என்று, தனக்கு முன்னர் ஏறிய டாக்டரிடம் (ஜாவர் சீதாராமன்) மகனை கண்கலங்க ஒப்படைக்கிறார். காட்சிகள் அத்துடன் கட் பண்ணப்பட்டு டைட்டில் ஓடத்துவங்குகிறது.

    'தங்கச் சுரங்கம்' படத்தின் எழுத்தோட்டம் (டைட்டில்) வித்தியாசமாகவும், துடி துடிப்புடனும் செய்யப் பட்டிருந்தது. புதுமையாக செய்ய வேண்டும் என்ற ராமண்ணாவின் துடிப்பு அதில் தெரிந்தது.

    டைட்டில் முடிந்ததும், படம் தற்காலத்துக்கு வந்து விடும். பள்ளிக் குழந்தைகளோடு வந்துகொண்டிருக்கும் வரலட்சுமி எதிரே வரும் பாதிரியாரைக்கண்டு திகைத்து நிற்க பாதிரியாரும் திகைத்து நிற்பார். அந்தப் பாதிரிர்யார் வேறு யாருமல்ல. ரங்கூனில் கப்பலில் ஏறும்போது வரலட்சுமி தன் மகனை ஒப்படைத்தாரே அந்த டாக்டர் ஜாவர் சீதாராமன் தான். காமாட்சியம்மாள் தன் மகனைப்பற்றி ஆவலுடன் விசாரிக்க, அவன் தற்போது குற்றப்பிரிவு இலாக்காவில் உயர்ந்த பதவியில் இருப்பதாக சொல்ல... உடனே காட்சி மாற்றம். டெல்லியிலிருந்து வரும் விமானத்தில் இருந்து டார்க் ப்ரவுன் கலர் ஃபுல் சூட், மற்றும் கறுப்புக்கண்ணாடியுடன் விமானத்திலிருந்து வெளியே வரும் நடிகர் திலகம் அறிமுகம். விமான அதிகாரியிடம் கைகுலுக்கி விட்டு தனக்கே உரிய ஸ்டைலுடன் படிகளில் இறங்கி வருவார்.

    அவரது மேலதிகாரியான மேஜர் சுந்தர்ராஜன், போலித்தங்கம் செய்யும் கும்பலைப் பிடிக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பார். அது பற்றி மேலும் தகவல்களைச் சேகரிக்க சிறிது நாளாகும் என்பதால் தன் ஊருக்குச் சென்று தன்னை வளர்த்த பாதிரியாரைப்பார்த்து வர விரும்புவதாகச் சொல்லி அனுமதி பெற்று ஊருக்கு வருவார். அங்கே பாதிரியார், அவருக்கு மிகப்பெரிய பரிசு தருவதாகச்சொல்லி ராஜனின் (சிவாஜி) அம்மாவை அவருக்கு அறிமுகம் செய்து வைப்பார். இன்ப அதிர்ர்ச்சியில், பாசத்தைக் கொட்ட சிவாஜிக்கும் வரலட்சுமிக்கும் அருமையான கட்டம். போட்டி போட்டுக்கொண்டு நடிப்பார்கள். நாள் முழுக்க பேசிக்கொண்டிருந்து விட்டு இரவில் சிவாஜியைத் தூங்கப்போகச்சொல்லும் அம்மாவிடம் சிவாஜி ஒரு அஸ்திரத்தை தூக்கி வீசுவார்.

    "அம்மா நானும் காலையில் இருந்து பாத்துக்கிட்டு இருக்கேன். மகனைப் பாத்த சந்தோஷத்தில எல்லா விஷயத்தையும் பற்றி விவரமா பேசினீங்க. ஒரு பெண்ணுக்கு மகன் எப்படி முக்கியமோ அதுபோல கணவனும் முக்கியமல்லவா? அப்பாவைப்பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலையே. ஏம்மா?".

    மகனின் இந்தக்கேள்வியில் அதிர்ச்சியில் உறைந்து போவார் வரலட்சுமி. எப்படி சொல்ல முடியும்?. சொல்வது போலவா நடந்து கொண்டார் அவர்?. 'ராஜன், இப்போ என்னை எதுவும் கேட்காதே, சமயம் வரும்போது நானே சொல்றேன்' என்று சமாதானப் படுத்துவார்?. ஆனால் அவர் சொன்ன 'அந்த சமயம்' எவ்வளவு தர்ம சங்கடமான, இக்கட்டான சமயமாக அமையும் என்று அவர் நினைத்தே பார்த்திருக்க மாட்டார்.

    ஆம். எந்த போலித்தங்க கும்பலைப்பிடிக்க சிவாஜி அமர்த்தப்பட்டாரோ, அந்தப்போலித் தங்க கும்பலுக்கு தலைவனே ராஜனின் அப்பா 'மிஸ்டர் பை' (ஓ.ஏ.கே.தேவர்)தான் என்று அறியும்போது வரலட்சுமியே அதிர்ச்சியில் மூழ்கி விடுவார். முன்னதாக தன்னைப் பிடிக்க வந்த சி.பி.ஐ. ஆபீஸர் விட்டுச்சென்ற பர்ஸில் ராஜனின் படமும் தன் மனைவியின் படமும் இருப்பதைப் பார்த்து, அது தன் மகன்தான் என்பதை அறியும் 'பை', பாசத்தையே கேடயமாகக்கொண்டு தப்பிக்க எண்ணி, பர்ஸில் இருந்த விலாசத்தில் வரலட்சுமியை சந்தித்து, கொஞ்சம் கொஞ்சமாக செண்டிமெண்ட் வார்த்தைகள் மூலம் அவரை நிலைகுலையச்செய்து, இறுதியில் தன்னைப்பிடிக்க தன் மகன் போடும் திட்டங்களை தன் மனைவி மூலமாகவே தெரிந்துகொள்ளும் அளவுக்கு தன் மனைவியைப் பக்குவப்படுத்தியிருப்பார். இதையறியாத சி.பி.ஐ ஆபீஸர் ராஜன், மிஸ்டர் பையைப் பிடிக்கப்போகும் திட்டத்தை தன் அம்மாவிடம் சொல்லி விட்டுப்போக, போன இடத்தில் சிவாஜிக்கு தோல்வி. 'மிஸ்டர் பை' தன்னுடைய ஜீப்பில் தனக்கு பதிலாக ஒரு கழுதையை அனுப்பிவைத்து அவமானப்படுத்தியிருப்பார்.

    இதைப்பற்றி ஆலோசிக்கும் மேஜரும் சிவாஜியும், 'நம் இருவரைத்தவிர யாருக்கும் தெரியாத இத்திட்டம் 'பை'க்கு தெரிந்தது எப்படி?. நீங்கள் யாரிடமும் சொன்னீர்களா?' என்று மேஜர் கேட்க இல்லையென்று மறுக்கும் சிவாஜிக்கு சட்டென்று ஒரு பொறிதட்டும். அம்மாவிடம் மட்டும் தானே இதைச்சொன்னோம். 'பை'க்கு தெரிந்தது எப்படி?. சந்தேகம் என்று வந்து விட்டால் யாரையும் சந்தேக வட்டத்தில் இருந்து நீக்க முடியாதே. சிறிது நேரத்தில் திரும்புவதாகச்செல்லும் சிவாஜி நேராக தன் அம்மாவைப் போய்ப்பார்ப்பார். அப்போது நடக்கும் உரையாடல்கள் உணர்ச்சி மயமானவை.

    மகனுடைய கூரிய பார்வையின் உக்கிரத்தை நேருக்கு நேர் சந்திக்க முடியாத தாய், தலையைத் தாழ்த்திக்கொண்டு கடைக்கண்ணால் பார்க்க, மகனின் கேள்விக்கணகள்....

    "அம்மா, நான் பார்க்கும் உத்யோகம் எவ்வளவு பொறுப்பானது, ஆபத்தானதுன்னு உங்களுக்கு தெரியுமில்லே?" அவள் ஆம் என்று தலையாட்டுவாள்.

    "இன்னைக்கு 'பை'யைப் பிடிக்கப்போகும் விஷயத்தை நான் தானே வாய் தவறி உங்களிடம் சொன்னேன்?". அவள் மீண்டும் தலையாட்டல்

    "அதை நீங்க யார்கிட்டேமா சொன்னீங்க?"

    "ராஜன், நான் யார்கிட்டேயும் சொல்லலைப்பா"

    "பொய்.... நீங்க பை கிட்டே சொல்லியிருக்கீங்க...ஏன்...ஏன்.., அதுக்கென்ன அவசியம் வந்தது?. தலைக்கு ஒசந்த மகனை வச்சுகிட்டு அந்த 'பை' கூட ரெண்டாவது வாழ்க்கை வாழறீங்களா அம்மா?"

    (ஒரு மகன் தன் தாயிடம் கேட்கக்கூடாத கேள்வி. ஆனால் தோல்வியின் பாதிப்பு, மனத்திலிருந்து இப்படி கேள்வியாக வெடித்துக் கிளம்ப)

    "அய்யோ ராஜன், அவர்தாண்டா உங்க அப்பா"

    அதிர்ச்சியின் உச்சிக்குப்போவார் நடிகர் திலகம். என்னது அப்பாவா?. நான் பிடிக்கணும்னு கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் அந்த தேசத்துரோகியா என் அப்பா?.

    மகனிடம் விவரத்தைச்சொல்லத் துவங்க, மீண்டும் ஃப்ளாஷ் பேக்கில் ரங்கூனில் நடந்த இரண்டாம் உலகப்போர். இடிபாடுகளில் சிக்கிய காமாட்சியும் கனகசபையும் தப்பிக்கும் சமயம், காமாட்சி மகன் ராஜனை தேடிக்கொண்டிருக்கும்போது கனகசபைக்கு ஒரு பெட்டி நிறைய பணம் கிடைக்க, மனைவியையும் மகனையும் உதாசீனப்படுத்தி விட்டு தான் மட்டும் தப்பித்துப்போய்விட, வேறு வழியிறி மகன் ராஜனுடன் இந்தியா வரும் கப்பலில் காமாட்சி ஏறப்போகும்போதுதான் மகனை டாக்டரிடம் ஒப்படைக்கிறார் (படத்தின் முதல் காட்சியில் வந்தது).

    அதன்பிறகு ராஜன் தன் தாயையே கைது செய்வதும், பாதிரியார் அவரை ஜாமீனில் விடுவித்து அழைத்து வருவதும், தொடர்ந்து 'பை' யைப்பிடிக்க ராஜன் முனைந்து ராஜன் வெற்றி பெறுவதும் சுவாரஸ்யமானவை.

    பாடலும் இசையும்...

    இப்படத்துக்கு மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தன.

    விடுமுறையில் கிராமத்துக்கு வரும் நடிகர் திலகம், தலையில் தொப்பியும் கையில் பெட்டியுமாக பாடிக்கொண்டு வரும் பாடல்

    நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
    இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது
    தென்னாட்டிலே தண்ணீரும் பொன்னீரும் விளையாடுது
    மூன்று தமிழ் ஓங்கும் இடம் எங்கள் நாடு.... ஓய்...

    பொட்டழகும் கட்டழகும்
    பூவழகும் தண்டைக் காலழகும்
    எங்கள் மங்கையரின் கலையல்லவா
    திருமஞ்சள் முக சிலையல்லவா

    நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
    இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

    யானைகட்டி போரடிக்கும் பாண்டி நாட்டிலும்
    பொன்னி வீடுதோறும் தீபம் ஏற்றும் சோழ நாட்டிலும்
    தென்னை இளநீர் சொரியும் சேர நாட்டிலும்
    திருக்கோயில் சிறந்தோங்கும் தொண்டை நாட்டிலும்

    நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
    இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

    மேலை நாடு பரபரப்பில் வாழ்ந்து பார்க்குது
    எங்கள் கீழைநாடு தனி வழியே நடந்து பார்க்குது
    விஞ்ஞானம் அந்த நாட்டில் போரை நாடுது
    எங்கள் மெய்ஞானம் உலகமெங்கும் அமைதி தேடுது

    நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
    இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

    அருமையான பாடல். பாடியவர்.... வேறு யார்? கம்பீரக்குரலோன் டி.எம்.எஸ் அண்ணாதான். ராமமூர்த்தியின் அருமையான இசையில். துரை-அமிர்தத்தின் கண்ணில் ஒத்திக்கொள்ளும் ஒளிப்பதிவு. அழகான ஒல்லியான உடல்வாகுடன் வெள்ளை பேண்ட், சந்தன வண்ண சட்டை, தொப்பி, கையில் சின்ன பெட்டி மற்றும் ஒரு குச்சியுடன் வழக்கமான ஸ்டைல் நடையில் நடிகர் திலகம்... ராமண்ணா.... அற்புதம் அண்ணா...

    பெங்களூரில் இருந்து காரில் வரும்போது, நள்ளிரவில் நடிகர் திலகத்திடமிருந்து தப்பிக்க எண்ணி, சேற்றில் விழுந்துவிடும் பாரதியை கிண்டல் செய்து நடிகர் திலகம் பாடும் "கட்டழகு பாப்பா கண்ணுக்கு... கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு" பாடல் ரசிக்க வைக்கும். பாடலின் துவக்கத்தில் வரும் சிரிப்பில், நடிகர்திலகம் வயிற்றை பிடித்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரிப்பது அவரது முத்திரை.

    ராமண்ணாவுக்கு பாடல் காட்சிகளைப் படமாக்க சுவிட்சர்லாந்து தேவையில்லை. ஆஸ்திரேலியா தேவையில்லை, நயாகரா நீர்வீழ்ச்சி தேவையில்லை. பத்தடிக்கு பத்தடியில் ஒரு இடத்தைக்கொடுத்து விட்டால் போதும். அருமையாக படமாக்கி தந்துவிடுவார்.

    குமரிப்பெண்ணில் ஒரு ரயில் பெட்டிக்குள் 'வருஷத்தைப்பாரு அறுபத்தியாறு'
    நான் படத்தில் சின்னஞ்சிறு ஃபியட் காருக்குள் 'போதுமோ இந்த இடம்'
    மூன்றெழுத்தில் சிறிய பெட்டிக்குள் ரவி-ஜெயாவை வைத்து 'பெட்டியிலே போட்டடைத்த பெட்டைக்கோழி' போன்ற பாடல்களை அருமையாகத் தந்த இயக்குனர் ராமண்ணா 'தங்க சுரங்க'த்திலும் தன்னுடைய சேட்டையை விடவில்லை.

    ஆம். நடிகர்திலகமும் பாரதியும் பாடும் டூயட் பாடலான
    "சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து விளையாடுது"

    பாடலை முழுதும் கிணற்றுக்குள்ளேயே எடுத்திருப்பார். கிணற்றுக்குள் படிக்கட்டில் நின்றுகொண்டும், கயிற்றில் தொங்கிக்கொண்டும் பாடும் அந்தப்பாடல் கண்களுக்கு விருந்து.



    மயக்க ஊசி ஏற்றப்பட்டு நடிகர் திலகத்துக்கு மயக்க ஊசி போட ஏவி விடப்பட்ட்ட பாரதி, நடிகர் திலகத்தை மயக்க பாடும்..
    "உன் நினைவே நதியானால்.. என் உடலே படகானால்
    அந்த நதியினிலே... இந்த படகினிலே.. ஆடு... ஆட வா"

    பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருப்பார். ஊட்டி கார்டனில் எடுக்கப்பட்ட பாடல் இது. அதிகம் பிரபலம் ஆகாத பாடலும் கூட.

    இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். பாரதி மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா. முதலில் நிர்மலா நல்லவராகவும் பாரதி போலித்தங்கக் கும்பலைச் சேர்ந்தவராகவும் தோன்றும். ஆனால் இடையிலேயே பாரதிதான் நல்லவர் என்றும் நிர்மலா மோசடிக்கும்பலைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வரும். போலித்தங்க கும்பலின் தலைவன் 'மிஸ்டர் பை' ஆக (சி.பி.ஐ.ஆபீஸர் ராஜைன் தந்தையாக) ஓ.ஏ.கே. தேவரும், அவரது கையாள் வேலாயுதமாக ஆர்.எஸ்.மனோகரும் நடித்திருப்பார்கள். நகைச்சுவைக்கு நாகேஷ். இவர் அதிகம் பயன்படுத்தப்படவில்லை.

    நடிகர்திலகம், பாரதி, நிர்மலா, ஓ.ஏ.கே.தேவர், மனோகர், மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், எஸ்.வரலட்சுமி, ஜாவர் சீதாராமன், முத்தையா (போலித்தங்க விஞ்ஞானி) ஆகியோர் நடித்திருந்தனர்.

    நடிகர் நடிகையர் தேர்வில் ராமண்ணா கோட்டை விட்டு விட்டாரோ என்று எண்ணத்தூண்டும் அளவுக்கு வீக்னஸ். நடிகர் திலகத்துக்கு பொருத்தமில்லாத ஜோடிகளில் பாரதிக்கு நிச்சயம் இடம் உண்டு. கொஞ்சம் கூட ஒட்டவில்லை. அது மட்டுமல்லாது மெயின் வில்லனாக ஓ.ஏ.கே.தேவரும் ரசிகர்கள் மனத்தில் நிற்கவில்லை. ‘பாரதிக்கு பதிலாக ஜெயலலிதாவும், ஓ.ஏ.கே.தேவருக்கு பதிலாக நம்பியாரும் இடம் பெற்றிருந்தால் படத்தின் ரிஸல்ட்டே வேறு’ என்பது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட விஷயம்.

    இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி, சென்னை துறைமுகத்தில் படமாக்கப்பட்டிருந்தது. அன்றைய காலத்தில் சென்னைக்கும் மலேசியா, சிங்கப்பூருக்கும் இடையே 'ஸ்டேட் ஆப் மெட்ராஸ்' என்ற பயணிகள் கப்பல் சென்று வரும் ('சிதம்பரம்' கப்பலுக்கு முன்பு). இந்தக்கப்பலிலேயே சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.

    'தங்கச்சுரங்கம்' என்றாலே நமக்கு தவறாமல் நினைவுக்கு வருவது, கிளைமாக்ஸில் சர்ச்சில் (மாதாகோயிலில்) நடிகர்திலகத்தின் அற்புத நடிப்பு. சர்ச்சுக்குள் ஆயுதங்கள் எடுத்துப்போக பாதிரியார் தடை விதித்ததால், சர்ச்சுக்குள் ஒளிந்திருக்கும் தந்தையைப் பிடிக்க நிராயுதபாணியாக உள்ளே போகும் நடிகர்திலகத்தை, துப்பாக்கியோடு ஒளிந்திருக்கும் 'மிஸ்டர் பை' இரண்டு கைகளிலும் இரண்டு கால்களிலும் மாறி மாறி சுட, அப்படியே பெஞ்சிலும் தரையிலும் விழுந்து நடிகர் திலகம் துடிக்கும்போது நம் கண்ணில் ரத்தம் வராத குறை. அத்துடன் ஒரு சந்தேகமும் வரும். "காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்ற பேராசையில் நிஜமான துப்பாக்கியால் சுட்டுட்டாங்களோ?"

    "தங்கச்சுரங்கம்" பற்றிய என் இனிய நினைவுகளைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.

  12. Likes Russellmai liked this post
  13. #2379
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Saradha Madam

    அண்ணன் ஒரு கோயில்

    தமிழ்த்திரைப்படங்களில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழக மக்களால், குறிப்பாக தாய்மார்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெரிய வெற்றிகளை ஈட்டியிருக்கின்றன. இவற்றுக்கு சிகரம் வைத்தாற்போன்று நடிகர்திலகமும், நடிகையர்திலகமும் அண்ணன் தங்கையாக நடித்த... (ஸாரி) வாழ்ந்த 'பாசமலர்' திரைக்காவியம் இன்றளவும் தமிழ்ப்படங்களில் அண்ணன் தங்கை பாசப்பிணைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. பாசப்பிணைப்பைக் கிண்டல் செய்யும்போது கூட, 'அடேயப்பா என்னமோ பெரிய பாசமலர் அண்ணன் தங்கை மாதிரியல்லவா உருகுறீங்க?' என்ற சொற்றொடர் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. இதேபோன்று நடிகர்திலகமும், மற்றைய கதாநாயகர்களும் நடித்த, அண்ணன் தங்கை பாசத்தை அச்சாணியாகக்கொண்ட பல படங்களும் வெற்றிக்கனியை ஈட்டியிருக்கின்றன. அந்த வரிசையில் வந்து மாபெரும் வெற்றியடைந்த படம்தான், சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பான 'அண்ணன் ஒரு கோயில்' வண்ணத்திரை ஓவியம்.

    இப்படத்துக்கு இன்னுமோர் சிறப்பும் உண்டு. இப்படம் 1977-ம் ஆண்டின் தீபாவளி வெளியீடாக வந்தது. இதற்கு சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்னர்தான் 1952 தீபாவளியன்று, தமிழ்த்திரையுலகின் புரட்சி கீதமாய், எழுச்சிப்பேரலையாய், சமுதாயக்கருத்துக்களை உள்ளடக்கிய காவியமாய் 'பராசக்தி' வெளிவந்து தமிழ்த்திரை வரலாற்றைத் திருப்பிப்போட்டதுடன், அதுவரை நாடக மேடைகளில் கலக்கி வந்த நடிப்புலகின் நாயகனை வெள்ளித்திரையில் காண வைத்தது. எனவே சரியாக 25 ஆண்டுகளை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்து வெற்றிநடைபோட்ட நடிகர்திலகத்தின் வெள்ளிவிழா காணிக்கையாக வந்த படம்தான் 'அண்ணன் ஒரு கோயில்'.

    படத்தின் துவக்கத்தில், பெரிய மனிதன் போலத்தோற்றம் தரும் ஒருவர், தலையில் தொப்பியும், கண்களில் கண்ணாடியும், முழங்காலுக்கும் கீழே நீண்ட முழுக்கோட்டும் அணிந்து, போலீஸுக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கிறார். யார் அவர்? ஏன் ஓடுகிறார்?. அவர் ஒளிந்திருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கட்டில்லா பயணியாக ஒரு பெண் ஸ்டேஷன் மாஸ்ட்டரிடம் ஒப்படைக்கப்படுகிறாள். ஸ்டேஷன் மாஸ்டரின் பேத்திக்கு உடல்நலக்குறைவு என்று செய்தி வர, அந்தப்பெண்ணையும் அழைத்துப்போகும்போது, இவரும் கூடவே செல்ல, அந்தக்குழந்தைக்கு வைத்தியம் செய்யும்போது இவர் ஒரு டாக்டரென்று தெரிகிறது. அவருடைய கையெழுத்தைப்பார்த்ததும், அந்தப்பெண்ணுக்கு இவர் யாரென்பது பற்றி சந்தேகம் எழ, சந்தேகத்தைப் போக்கிக்கொள்ள அவரிடமே கேட்கும்போது அவர்தான் தன்னை மணக்கவிருந்த, சூரக்கோட்டை சின்னையா மன்றாயர் மகன் டாக்டர் ரமேஷ் என்பது தெளிவாக, தான்தான் அவரை மணக்கவிருக்கும் முரளிப்பாளையம் சேதுபதியின் மகள் ஜானகி என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறாள்.. (மணக்கவிருந்தவர் என்றால் எப்படி? பெற்றோர் நிச்சயித்த திருமணமா?. அப்படியானால் இருவரும் காதல் கடிதங்கள் எழுதிக்கொண்டது எப்படி?. காதல் திருமணம் என்றால், இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதுமே தெரிந்துகொள்ளாமல் போனது எப்படி?. என்பதற்கான விவரம் இல்லை).

    தான் ஏன் இப்படி போலீஸ்கண்ணில் மாட்டாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பதை அவர் விளக்க, ப்ளாஷ்பேக் விரிகிறது....

    பெற்றோரின் மறைவுக்குப்பின் தன் ஒரே தங்கை லட்சுமி (சுமித்ரா)வுக்கு தாயாக, தந்தையாக, ஏன் அவளுக்கு உலகமே தானாக வாழ்ந்துவந்தவர் டாக்டர் ரமேஷ் (நடிகர்திலகம்). அவருக்கு நல்ல நண்பனாக, மற்றும் உதவியாளராக டாக்டர் ஆனந்த் (ஜெய்கணேஷ்), மற்றும் பொல்லா நண்பனாக ரவி(மோகன்பாபு) மற்றும் அவனுக்கும் ஒரு நண்பன் (பிரேம் ஆனந்த்). அமைதியாக, அழகாக சென்று கொண்டிருந்த ரமேஷ், லட்சுமி வாழ்க்கையில் நாகம் புகுந்தது போல ரவியின் கழுகுப்பார்வை லட்சுமியின்மீது விழுகிறது.

    தனது பிறந்தநாளன்று, டாக்டர் ஆனந்த் தபேலா வாசிக்க, சிதார் இசைத்தவாறு பாடும் லட்சுமியை வைத்தகண் வாங்காமல் பார்க்கும் ரவி, பாரவையாலேயே அவளை விழுங்குகிறான். பின்னொருமுறை ரவி, டாக்டர் ரமேஷைச்சந்தித்து, தான் லட்சுமியை விரும்புவதாகவும் அவளைத் தனக்கு மணமுடித்து வைக்குமாறும் கேட்க, அனைத்து தீய பழக்கங்களுக்கும் புகலிடமாக இருக்கும் அவனுக்கு தன் தங்கையை மணமுடிப்பதைவிட பாழுங்கிணற்றில் அவளைத்தள்ளுவது மேல் என்று நினைக்கும் ரமேஷ், திருமணத்துக்கு மறுக்க, வாக்குவாதம் முற்றிய நிலையில், தங்கை லட்சுமியைக்குறித்து கேவலமாக பேசும் ரவியை கன்னத்தில் அறைந்து விரட்டி விடுகிறார். அடிபட்ட பாம்பாக அலையும் ரவி, ஒரே கல்லில் இரண்டுமாங்காயாக, தான் விரும்பிய லட்சுமியை தகாத முறையில் அனுபவிக்கவும், தன்னை அவமானப்படுத்திய டாக்டர் ரமேஷைப் பழிதீர்க்கவும் சமயம் பார்த்திருக்கிறான். அந்தநாளும் வந்தது...

    தன் தங்கையின் திருமணம் பற்றி, தனக்கு உறுதுணையாக இருந்து வரும் அப்பத்தாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, யாரிடமிருந்தோ ஒரு போன் வருகிறது, டாக்டர் ரமேஷின் தங்கை லட்சுமியை, ரவி தன்னுடைய கெஸ்ட் அவுஸுக்கு கடத்திச்சென்று, சீரழிக்க முயல்கிறான் என்று. (போன் செய்தவர் யாரென்பது கிளைமாக்ஸில் தெரியவருகிறது). காரில் பறந்துசெல்லும் ரமேஷ், காரோடு ரவியின் கெஸ்ட் அவுஸ் கண்ணாடிக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய, அதற்குள் லட்சுமி சீரழிக்கப்பட்டுவிடுகிறாள். கோபாவேசமாக ரமேஷ் ரவியைத்தாக்க, சண்டையின் முடிவில் ரவி துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கிறான்.

    ஆனால், தனக்கு நேர்ந்த கொடுமையான சம்பவத்தினால் லட்சுமியின் புத்தி பேதலித்துப்போய், அண்ணன் ரமேஷையே யார் என்று கேட்க, ரமேஷின் மனம் நொறுங்கிப்போகிறது. நடந்த விஷயங்கள் வெளியே தெரிந்தால் தன் குடும்ப மானம், தங்கையின் எதிர்காலம் எல்லாம் பாழாகிவிடுமென்று எண்ணும் ரமேஷ், தனக்கு மிக மிக நம்பிக்கையான நண்பன் டாக்டர் ஆனந்தின் பொறுப்பில் தங்கையை ஒப்படைத்துவிட்டு போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாகிறார். அப்படி போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து ஓடும்போதுதான், தனக்கு மனைவியாக வரவிருந்த ஜானகியை (சுஜாதா) சந்திக்கிறார். ப்ளாஷ்பேக் முடிகிறது....

    காட்டில் சுற்றியலையும்போது, ஒரு மரத்தடி சாமியின் கழுத்தில் கிடந்த மஞ்சள்கயிற்றை எடுத்து ஜானகிக்கு ரமேஷ் தாலி கட்டிய மறுநிமிடம், போலீஸ் அவர்களை சுற்றி வளைக்கிறது. ரமேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். கணவனை எப்படியும் விடுதலை செய்வது என்ற வைராக்கியத்துடன் வக்கீல் மேஜரிடம் போக, அவரோ இந்த வழக்குக்கான காரண காரியங்களை கோர்ட்டில் சொல்லி, ரமேஷ் கொலை செய்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று நிரூபித்தால் மட்டுமே ரமேஷை விடுவிக்க முடியும் என்று கூற, சம்பவத்துக்கு ஒரே சாட்சியான லட்சுமியை கோர்ட்டில் பேச வைப்பது ஒன்றே ரமேஷைக்காப்பாற்றும் வழியென்ற எண்ணத்துடன் டாக்டர் ஆனந்தை சந்தித்து, தான் ரமேஷின் மனைவி ஜானகியென்று அறிமுகப்படுத்திக் கொள்ள, 'என்னது, ரமேஷுக்கு திருமணம் ஆகிவிட்டதா?' என்று ஆனந்துக்கு அதிர்ச்சி.

    ஆனால் தன் கழுத்தில் தாலியேறிய அடுத்த நிமிடமே, ரமேஷ் கையில் விலங்கேறிய சோகத்தை விவரித்த ஜானகி, தற்போது லட்சுமியைக் கொண்டு நடந்த அசம்பாவிதத்தைக் கோர்ட்டில் சொல்ல வைத்தால் மட்டுமே ரமேஷைக்காப்பாற்ற ஒரே வழியென்று சொல்ல, ஆனந்த் மறுத்துவிடுகிறார். காரணம், லட்சுமி தற்போது பழைய நினைவுகளை அறவே நினைவுக்கு கொண்டுவர முடியாத நிலையில் இருப்பதும், தன் உயிருக்கே ஆபத்து வந்தாலும் இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாதென்று ரமேஷ் வாங்கிய சத்தியமும்தான். ஆனால் ஜானகியோ என்னவிலை கொடுத்தாகிலும் தன் கணவனை விடுத்லை செய்வேன் என்று ஆனந்திடம் சூளுரைத்துப்போகிறாள்.

    ஜானகி போன சிறிது நேரத்தில், ‘RAPE’ என்ற பெயரில் ஒரு ஆங்கிலத் திரைப்பட விளம்பரம் ஆனந்தின் கண்ணில் பட, லட்சுமிக்கு பழைய நினைவு திரும்ப இப்படம் உதவக்கூடும் என்ற எண்ணத்தில் லட்சுமியை அழைத்துப்போகிறார். திரையில், தன் வாழ்க்கையில் நடந்து கொடுமையான சம்பவம் நடப்பதைப்பார்க்கும் லட்சுமியின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கருப்பு சம்பவம் நினைவுக்கு வர ஒரு கட்டத்தில் கத்திக்கதறி மூர்ச்சையாகிறாள்.

    மயக்கம் தெளிந்து எழுந்ததும், தன் அருகே ஆனந்த் அமர்ந்திருப்பதையும், தன் கழுத்தில் தாலி இருப்பதையும் அறிந்து திடுக்கிடுகிறாள். ஆம், அவளுக்கு பழைய நினைவு திரும்பி விட்டது. ஆனந்த் மெல்ல மெல்ல அவளுக்கு நேர்ந்த கொடுமையையும், அதைத்தொடர்ந்து நடந்த ரவியின் கொலையின் காரணமாக அவளது அண்ணன் ரமேஷ் சிறையில் இருப்பதையும், விசாரணை நடந்து வருவதையும் எடுத்துச்சொல்ல, தனக்கு எல்லாமாக இருந்த தன் அண்ணனைக் காப்பாற்ற லட்சுமி, ஆனந்துடன் கோர்ட்டுக்குக் கிளம்புகிறாள்.

    குற்றவாளிக்கூன்டில் நிற்கும் ரமேஷ், லட்சுமியைப்பார்த்து அதிர்ச்சியடைந்து, அவளை அழைத்து வந்ததற்காக ஆனந்தைக் கடிந்துகொள்ள, அவளோ தனக்கு நேர்ந்த கொடுமைபற்றி ஆனந்தே பொருட்படுத்தாமல், தன்னை மனைவியாக ஏற்றுக்கொண்டிருக்கும்போது தனக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை, அண்ணனை காப்பாற்றுவதே தன் ஒரே எண்ணம் என்று கூற, இதனிடையே ஜானகி தன் வக்கீலிடம், இதோ இந்தப்பெண்தான் ரமேஷின் தங்கை, அவரைக்காப்பாற்றக் கிடைத்த ஒரே சாட்சி என்று சொல்ல, வக்கீல் மேஜர், லட்சுமியை பிரதான சாட்சியாக கூண்டில் நிறுத்துகிறார்.

    தனக்கு நேர்ந்த கொடுமையை கோர்ட்டில் சொல்லியழும் லட்சுமி, இந்தக்கொலை தன் அண்ணன் செய்யவில்லை என்றும் தானே செய்ததாகவும் கூறினாலும், அரசுத்தரப்பு வழக்கறிஞர், இது எதிர்த்தரப்பு வக்கீலால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று மறுக்கிறார். அப்போது கோர்ட்டுக்குள் வரும் ரவியின் நண்பன் பிரேம் ஆனந்த் (கோர்ட் காட்சியின்போது நடிகர் பிரேம் ஆனந்துக்குப் போடப்பட்டிருக்கும் மேக்-அப் மிகவும் அற்புதம். தெய்வமகன் நடிகதிலகத்தின் மேக்-அப்பை நினைவுபடுத்தும்), லட்சுமி சொல்வது முழுக்க உண்மையென்றும், லட்சுமியை தானும் ரவியும்தான் கடத்திச்சென்றதாகவும், அவளை யார் முதலில் அடைவது என்ற சர்ச்சையில், ரவி தன் தலையில் பாட்டிலால் அடித்துக்கீழே தள்ளிவிட்டு லட்சுமியின் கற்பைச்சூறையாட முயலும்போது, தானே ரமேஷுக்கு போன் செய்ததாகவும், பின்னர் ரமேஷ் வந்து ரவியுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, புத்தி சுவாதீனமில்லாத நிலையில் லட்சுமியே ரவியைச்சுட்டதாகவும், தங்கையின் மானத்தைக்காப்பாற்ற ரமேஷ் கொலைப்பழியை தான் ஏற்றுக்கொண்டு நிற்பதாகவும் சாட்சி சொல்ல, ரமேஷ் விடுதலை செய்யப்படுகிறார்.

    தொடக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாகச்செல்லும் இப்படத்தின் துவக்கத்தில் வரும் ரயில்நிலையக்காட்சிகள் ரொம்பவே அருமையாக சஸ்பென்ஸ் நிறைந்ததாக இருக்கும். இரவுநேரத்தில், டாக்டர் ரமேஷ் ஒரு அறையில் ஒளிந்துகொண்டிருக்க, ரயில் வரும்நேரம் ஒரு பெண் (ஸ்வர்ணா) பாடிக்கொண்டே, ரயில் நிலையத்தில் இங்குமங்குமாக ஓடி யாரையோ தேடும் காட்சிகள் அருமையான துவக்கமாக இருக்கும். அந்தப்பெண்ணும் ரவியாக வரும் மோகன் பாபுவால் ஏமாற்றப்பட்ட பெண். அவள் ஏமாந்ததன் விளைவாக உருவானதுதான் ஸ்டேஷன் மாஸ்டரின் பேத்தி.

    கதையின் போக்கு ரொம்பவே சீரியஸாக அமைந்துவிட்டதால், 'காமெடி ட்ராக்' தனியாக சேர்க்கப்பட்டிருக்கும். ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டராக (கௌரவத்தோற்றத்தில்) தேங்காய் சீனிவாசனும், கான்ஸ்டபிளாக ஏ.கருணாநிதியும், பாயிண்ட்மேனாக சுருளியும், கொள்ளைக்காரியாக மனோரமாவும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்கள். டாக்டர் ரமேஷைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு சன்மானம் தரப்படும் என்ற காவல்துறை விளம்பரத்தை வைத்துக்கொண்டு சுருளி அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது. அதுபோல, அப்பாவிப்பெண் போல வந்து போலியான கதைசொல்லி ஏமாற்றி கொள்ளையடித்துப்போகும் மனோரமாவும், அவளை மடக்கிப்பிடிக்கும் தேங்காயும் கூட நன்றாகவே சிரிக்கவைப்பார்கள்.

    இதற்கு முன் நிறைகுடம், சிவந்தமண், எங்கமாமா, சுமதி என் சுந்தரி என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக நடிகர்திலகத்தின் படங்களில் நடித்து வந்த தேங்காய் சீனிவாசன், சுமதி என் சுந்தரி (14.04.1971) க்குப்பிறகு, கிட்டத்தட்ட ஆறரை ஆண்டுகள் நடிகர்திலகத்துடன் சேர்ந்து நடிக்கவில்லை. இதுகுறித்து தேங்காய் கூட பல்வேறு பத்திரிகைப் பேட்டிகளில் குறைசொல்லி வந்தார். இவர் மாற்றுமுகாம் அபிமானி என்பதால் நடிக்கவில்லை என்று சொல்லவும் முடியாது. ஏனென்றால் இவரைவிட மாற்றுமுகாம் அபிமானிகளான வில்லன் நடிகர் கே.கண்ணன், ராமதாஸ் போன்றவர்கள் நடிகர்திலகத்துடன் அதிகமான படங்களில் நடித்து வந்தனர்.

    காரணம் என்னவாக இருந்தபோதிலும், மிக நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகர்திலகத்தின் 'மறப்போம், மன்னிப்போம்' கொள்கையின் காரணமாக, நடிகர்திலகத்தின் சொந்தப்படமான இப்படத்தில் நடித்தாலும் நடித்தார், இதிலிருந்து தேங்காய் இல்லாத நடிகர்திலகத்தின் படங்களே இல்லையென்று சொல்லுமளவுக்கு வரிசையாக அத்தனை படங்களிலும் இடம்பெறத் துவங்கினார். அதிலும் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் சொந்தப்படங்களான திரிசூலத்துக்காக காஷ்மீருக்கும், ரத்தபாசத்துக்காக ஐரோப்பிய நாடுகளுக்கும் தேங்காய் அழைத்துச்செல்லப்பட்டார். அத்துடன் பைலட் பிரேம்நாத் படத்துக்காக இலங்கைக்கும், இமயம் படத்துக்காக நேபாளத்துக்கும் சென்று வந்தார். (இவர் நடித்த "மற்றவர்கள்" படங்களில் சென்னையில் வைத்தே இவர் ரோல்களை முடித்து விடுவார்கள் என்பது வேறு விஷயம்).

    படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருக்க, மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட். முதல் பாடல், ரயில் நிலையத்தில், கைவிட்டுப்போன காதலனைத் தேடியலையும் ஸ்வர்ணாவுக்காக, வாணி ஜெயராம் பாடிய 'குங்குமக்கோலங்கள் கோயில் கொண்டாள கோதை நாயகன் வருவானடி' என்ற மனதை மயக்கும் பாடல். இரவுக்காட்சிக்கேற்ற திகிலூட்டும் இசையுடன் கலந்து தந்திருப்பார்.

    அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்துப்பின்னப்பட்ட கதையாயிற்றே அதனால் பாசமலரில் இடம்பெற்ற 'மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்' பாடலைப்போல அமைந்த பாடல், 'மல்லிகை முல்லை பொன்மணி கிள்ளை, அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை' என்ற மிக அருமையான பாடல். தங்கையின் வருங்கால வாழ்க்கையைப்பற்றி அண்ணன் கனவுகாண, அவனது கனவில் அவள் மதுரை மீனாட்சியாக, கோதையாக, ஆண்டாளாக, சீதையாக வடிவெடுத்து வருகிறாள். பாடல், இசை மட்டுமல்ல, இவற்றைத்தூக்கி நிறுத்தும் ஒளிப்பதிவும் அற்புதம்.

    தன்னுடைய பிறந்தநாளன்று, கையில் சிதார் மீட்டியவாறு சுமித்ரா பாடும், 'அண்ணன் ஒரு கோயிலென்றால் தங்கை ஒரு தீபமன்றோ' இசைக்குயில் பி.சுசீலாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. தங்கை அண்ணன் மீது கொண்ட பாசப்பிணைப்பை விவரிக்கும் ஒரு வரி.....
    'கண்ணன் மொழி கீதையென்று கற்றவர்கள் சொன்னதுண்டு
    அந்த மொழி எனக்கெதற்கு அண்ணன் மொழி கீதையன்றோ
    அதன் பேர் பாசமன்றோ'

    இதே பாடலை, சுயநினைவற்று இருக்கும் சுமித்ராவின் நினைவு திரும்புவதற்காக திரைக்குப்பின்னால் இருந்து ஜெய்கணேஷ் பாடுவார். அவருக்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார்.

    நடிகர்திலகமும் சுஜாதாவும் காட்டுக்குள் போலீஸுக்கு மறைந்து திரிந்து கொண்டிருக்கும்போது, போலீஸ் ஜீப் வந்துவிட, அவர்கள் கண்களில் படாமல் இருக்க மரக்கட்டைகள் அடுக்கப்பட்ட இடைவெளிக்குள் நுழைந்துகொள்ள, அங்கே இருவரும் காதல் வயப்படும்போது, பின்னணியில் அசரீரியாக ஒலிக்கும் பாடல் 'நாலுபக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு... காதல், இன்பக்காதல்'. எஸ்.பி.பி.யும், வாணிஜெயராமும் பாடியிருந்தனர்.

    நடிகர்திலகத்தின் வீடாகக் காண்பிக்கப்படும் இடம் ஊட்டியிலுள்ள அரண்மனையின் உட்புறம். இப்படத்துக்காக அக்கட்டிடத்தின் உட்பகுதி புதுப்பிக்கப்பட்டு படமாக்கப்பட்டது. படத்தின் ஒளிப்பதிவை பழம்பெரும் ஒளிப்பதிவு மேதை ஜி.ஆர்.நாதன் செய்திருக்க, நடிகர்திலகத்தின் வெற்றிப்பட இயக்குனர்களில் ஒருவரான கே.விஜயன் இயக்கியிருந்தார்.

    இப்படத்துக்கு முதலில் வைக்கப்பட்டிருந்த பெயர் 'எங்க வீட்டு தங்க லட்சுமி'. படம் உருவாகிக்கொண்டிருந்தபோது, இப்படத்தின் பெயர் 50 களில் ஏ.நாகேஸ்வரராவ் நடித்து பெரும்வெற்றிபெற்ற 'எங்கவீட்டு மகாலட்சுமி' பெயர் போல இருக்கிறது என்றும், மிகவும் பழங்கால டைட்டில் போல இருக்கிறதென்றும் பலரும் அபிப்பிராயம் சொல்ல, படத்தின் பெயரை மாற்றுவதென்று முடிவு செய்து என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது, நடிகர்திலகத்தின் ரசிகர்கள் அனைவரும் அவரை பாசத்தோடு 'அண்ணன்' என்று அழைப்பதாலும், படத்தின் கதையும் அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக்கொண்டதாலும், 'அண்ணன் ஒரு கோயில்' என்று வைக்கலாம் என்று முடிவு செய்தபோது அனைவராலும் இந்த டைட்டில் வரவேற்கப்பட்டது.

    1977-ம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த 'அண்ணன் ஒரு கோயில்', நடிகர்திலகத்துக்கு வெள்ளிவிழா ஆண்டின் நிறைவுப்படமாகவும் அமைந்து மாபெரும் வெற்றியை அவருக்குப் பரிசாக அளித்தது. கீழ்க்கண்ட அரங்குகளில் 100 நாட்களைக்கடந்து வெற்றிநடைபோட்டது.

    சென்னை - சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி
    மதுரை - நியூ சினிமா
    கோவை - கீதாலயா
    திருச்சி - பிரபாத்
    சேலம் - சாந்தி
    தஞ்சை -அருள்
    குடந்தை - செல்வம் (நூர்மஹால்).


    (Nadigar Thilagam presents the '114 th Day' Shield to the Singer Mrs. Vani Jayaram, on the Victory Day Function)

    வெற்றிகரமாக 100 நாட்களைக்கடந்து ஓடிக்கொண்டிருக்கும்போது, இந்த ஆண்டின் வெள்ளிவிழாப்படமாக இப்படம் அமையும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். கதாநாயகன் என்றால் வில்லன் வேண்டுமல்லவா?. எனவேதான் கதாநாயகனின் சொந்தப்படத்தை தடுக்க வில்லனின் சொந்தப்படம் வந்தது. ஆம், அண்ணன் ஒரு கோயில் வெற்றிகரமாக 114 நாட்களைக்கடந்தபோது, 115 வதுநாளன்று பாலாஜியின் 'தியாகம்' படம் இதே திரையரங்குகளில் ரிலீஸாவதாக செய்தி வந்தது. (இதற்கிடையே 'அந்தமான் காதலி' வேறு திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது). வெகுண்டுபோன ரசிகர்கள் பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால் அவரோ, தான் படத்தை விநியோகஸ்தரிடம் விற்றுவிட்டதாகவும், விநியோக விஷயத்தில் தலையிட முடியாதென்றும் கழன்றுகொண்டார்.

    சாந்தி தியேட்டருக்கு வந்த சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் மேனேஜர் மோகன்தாஸை ரசிகர்கள் சுற்றிவளைத்து, சாந்தியில் மட்டுமாவது அண்ணன் ஒரு கோயில் தொடர்ந்து ஓடி வெள்ளிவிழாவைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்று கேட்க, அவரும் ஏற்கெனவே புக் பண்ணியதை மாற்ற முடியாதென்றும், சாந்திக்கு பக்கத்து அரங்குகளான அண்ணா தியேட்டர் அல்லது பிளாஸாவுக்கு கண்டிப்பாக மாற்றப்படும் என்றும் சொல்லி அகன்றுபோனார். ஆனால் அவரது வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 'அண்ணன் ஒரு கோயில்' 114-ம் நாள் விழாவோடு மாற்றப்பட்டு, 'தியாகம்' திரையிடப்பட்டது.

    'அண்ணன் ஒரு கோயில்' படத்தைப்பற்றிய என் கருத்துக்களைப் படித்த அனைத்து அன்பு இதயங்களுக்கும் என் நன்றி.

  14. Likes Russellmai liked this post
  15. #2380
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    அண்ணன் ஒரு கோயில்-2
    காட்சியமைப்புகளில் ஒளிப்பதிவு சிறப்பாகவும், துல்லியமாகவும் இருந்தது. ஒளிப்பதிவு மேதை ஜி.ஆர்.நாதன் கருப்புவெள்ளைப் படங்களிலேயே வித்தைகள் காட்டுவார். (உதாரணம்: வானம்பாடியில் இடம்பெற்ற 'ஏட்டில் எழுதிவைத்தேன்' பாடல் காட்சி, மற்றும் லட்சுமி கல்யாணத்தில் 'பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்' பாடல் காட்சி). வண்ணப்படமான இதில் சொல்லவே வேண்டாம். பின்னியெடுத்திருப்பார். குறிப்பாக ரயில்வே ஸ்டேஷனில் எடுக்கப்பட்ட இரவுக்காட்சிகள். மற்றும் மல்லிகை முல்லை பாடல் காட்சி.



    நடிகர்திலகத்தின் 'பெர்பார்மென்ஸ்'

    ** 'மல்லிகை முல்லை' பாடலின்போது அவர் தரும் கனிவான பார்வைப்பறிமாற்றங்கள், தங்கையின் கையைப்பிடித்துக்கொண்டு, பாடிக்கொண்டே ஸ்டைலாக நடந்துவரும் அழகு, கற்பனையில் தன்னைச்சுற்றி ஓடிவரும் மருமகப்பிள்ளைகளை ஆசீர்வாதம் பண்ணும்போது உண்மையான தாய்மாமனின் உணர்ச்சிப்பெருக்கு...

    ** தன்னைச்சுற்றிலும் போலீஸ் தேடல் இருந்தும், தான் வந்துதான் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருக்கும் ஒரு பெற்றோருக்காக, வார்டுபாய் போல வேடமிட்டு ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக்கொண்டு வந்து, ஆபரேஷன் முடிந்ததும், ஸ்ட்ரெசருக்குக் கீழே ஒளிந்துகொண்டே வெளியேறும்போது காட்டும் கடமையுணர்ச்சி...

    ** தங்கைக்கு நேர்ந்த சோகத்தை, தன் வருங்கால மனைவியிடம் சொல்லும்போது காட்டும் உணர்ச்சிப்பிரவாகம்....

    ** 'அண்ணன் ஒரு கோயிலென்றால்' பாடலின்போது, தன்னைப்பற்றிப்பாடும் தங்கையின் வார்த்தைகளால் கண்கள் கலங்க, அதை தங்கை பார்த்துவிடாமல் மறைக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள்...

    ** நண்பன் ஆனந்தின் கஸ்டடியில் இருக்கும் தங்கையைக் காண வந்திருக்கும்போது, சுய நினைவின்றி கிடக்கும் தங்கையைப்பார்த்து ஆனந்திடம் அவளது கடந்தகால சூட்டிகையைப்பற்றிக்கூறும்போது ஏற்படும் ஆதங்கம். 'டாக்டர், இப்படி ஒரு இடத்துல படுத்துக்கிடவளா இவ?. என்ன ஆட்டம், என்ன ஓட்டம், என்ன பேச்சு, என்ன சிரிப்பு'.... பேசிக்கொண்டிருக்கும்போதே குரல் உடைந்து கதறும் பாசப்பெருக்கு....

    ** கோர்ட்டில் கூண்டில் நிற்கும்போது, எதார்த்தமாக சுற்றிலும் பார்க்கும்போது, அங்கே தன் தங்கை வந்து நிற்பதைப் பார்த்து முகத்தில் காட்டும் அதிர்ச்சி. அரசுத்தரப்பு வக்கீல் வேண்டுமென்றே தன்மீது கொலைக்குற்றம் சுமத்தி அதற்காக ஜோடிக்கப்பட்ட காரணத்தையும் கூறும்போது, மறுபேச்சுப்பேசாமல் அவற்றை ஒப்புகொள்ளும்போது ஏற்படும் பரிதாபம்....

    ** கொலைசெய்யப்பட்டவனின் நண்பன் கோர்ட்டில் வந்து, நடந்த சம்பவங்களை விளக்கும்போது, 'இவன்தான் தனக்கு போன் செய்தவனா?' என்று முகத்தில் காட்டும் ஆச்சரியம்....

    இவரது உணர்ச்சி வேகத்துக்கு ஈடுகொடுத்து நடித்ததன்மூலம் டெம்போ குறையாமல் படத்தை எடுத்துச்செல்ல பெரும் பங்காற்றிய சுமித்ரா, ஜெய்கணேஷ், சுஜாதா. அவற்றைப் பன்மடங்காகப் பெருக்க துணை நிற்கும் மெல்லிசை மன்னரின் பின்னணி இசை... எல்லாம் இணைந்து படத்தை எங்கோ கொண்டு சென்றன.

    இயக்குனர் கே.விஜயன், என்.வி.ராமசாமியின் 'புது வெள்ளம்', 'மதன மாளிகை' படங்களை இயக்கியிருந்தபோதிலும் அவர் பளிச்சென்று தெரிய ஆரம்பித்தது 'ரோஜாவின் ராஜா'வில் துவங்கி, 'தீபம்' படத்திலிருந்துதான். தீபம், அண்ணன் ஒரு கோயில், தியாகம், திரிசூலம் என்று வெற்றிப்பட இயக்குனராக வலம் வந்தவர், என்ன காரணத்தாலோ 'ரத்தபாசம்' படப்பிடிப்பின்போது திரு வி.சி.சண்முகத்துடன் பிணக்கு ஏற்பட்டு பிரிந்தார். பிரிந்த கையோடு இதுபோன்ற சில 'அதிரடி(???)' பேட்டிகளும் கொடுத்தார். கூடவே 'தூரத்து இடி முழக்கம்' என்ற அருமையான தலைப்புடன் (நடிகர்திலகம் அல்லாத) ஒரு படத்தையும் இயக்கினார். நடிகர்திலகத்தின் எதிர்ப்பு பத்திரிகைகள் வரிந்து கட்டிக்கொண்டு, அந்தப்படத்தைப்பற்றிய செய்திகள் தந்து விளம்பரப்படுத்தின. ஆனால் பாவம், இடிமுழக்கம் வெறும் 'கேப்' சத்தம் போல ஆகிப்போனது. ஆதரவு தருவதுபோல ஏற்றிவிட்டவர்கள் எல்லாம் அவரைவிட்டு ஓடிப்போயினர்.

    பாலாஜியாவது தொடர்ந்து ஆதரவு தருவார் என்று அவர் எதிர்பார்த்திருந்தபோது, யதார்த்தமாக சுஜாதா சினி ஆர்ட்ஸில் ப்ரொடக்ஷன் மேனேஜராக இருந்த ஆர்.கிருஷ்ணமூர்த்தியை இயக்குனராகப்போட்டு 'பில்லா' படத்தை தயாரிக்க, பில்லா பெரிய வெற்றியடைந்து கிருஷ்ணமூர்த்திக்கு நட்சத்திர இயக்குனர் அந்தஸ்தை வழங்கியது. செண்டிமெண்ட் பிரியரான பாலாஜி தொடர்ந்து தன் படங்களை ஆர்.கே. தலையில் கட்டினார். சில ஆண்டுகள் கழித்து, ஒருநாள் ஸ்டுடியோ செட்டில் நடிகர்திலகத்தை கே.விஜயன் வலியச்சென்று சந்தித்து நலம் விசாரிக்க, பழைய நண்பனைப்பார்த்து, 'என்ன விஜயா இப்போ என்ன பண்றே?' என்று கேட்க, விஜயன் சோர்ந்த முகத்துடன் பதிலேதும் சொல்லாமல் நிற்க, நிலைமையைப்புரிந்துகொண்ட நடிகர்திலகம், 'சரி, இனிமேல் என் படங்களை நீ டைரக்ட் பண்ணு' என்று ஆசி வழங்கி, விஜயனுக்கு மறுவாழ்வளித்தார். 'பந்தம்' படம் மூலம் அவர்களின் பந்தம் புதுப்பிக்கப்பட்டது.

    இச்சம்பவத்தை நினைவுகூர்வது போல, 'பந்தம்' படத்தில் ஒரு காட்சி அமைத்திருப்பார் விஜயன். தன்னுடைய முன்னாள் டிரைவரை சர்ச்சில் சந்திக்கும் நடிகர் திலகம், 'என்ன டேவிட் எப்படியிருக்கே?' என்று கேட்க, வறுமையில் வாடும் டிரைவர் அழத்துவங்க, சட்டென்று கோட் பாக்கெட்டிலிருந்த கார் சாவியை அவரிடம் கொடுத்து 'வண்டியை எடு' என்பார். இந்தக்காட்சியில் நடித்து முடித்த நடிகர்திலகம், 'என்ன விஜயா, இந்த சீன் நம்ம ரெண்டு பேர் சமந்தப்பட்ட விஷய்ம் மாதிரி இருக்கே' என்றாராம் - (கே.விஜயன் முன்னொருமுறை தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த நேர்காணலில் சொன்னது).

    சில மாதங்களுக்கு முன், ஜெயா டிவி 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சுமித்ரா, கண்டிப்பாக 'அண்ணன் ஒரு கோயில்' படத்தைப்பற்றிக் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்தேன். அதுபோலவே, ஒருநாள் எபிசோட் முழுக்க இப்படத்துக்கு மட்டுமே ஒதுக்கி, ரொம்ப பெருமையாகப் பேசினார். நடிகர் திலகத்தை 'ஓகோ'வென்று புகழ்ந்தார். இன்னொரு ஆச்சரியம், நடிகர் திலகத்துடன் நடித்த 'ஜஸ்டிஸ் கோபிநாத்' படத்தைப்பற்றியும் (ஜோடி சூப்பர் ஸ்டார்) குறிப்பிட்டார். பாவம் இயக்குனர் பெயரை மறந்து விட்டு, சற்று யோசித்து 'யாரோ ரங்கநாத் என்பவர் இயக்கினார்' என்றார். (படத்தை இயக்கியவர் டி.யோகானந்த் என்ற பழம்பெரும் இயக்குனர்).

    நடிகர் பிரேம் ஆனந்த், நடிகர்திலகத்தின் சிறந்த அபிமானியாகவும், மிகச்சிறந்த ரசிகராகவும், எந்நாளும் நடிகர்திலகத்துடன் ஒட்டியே இருந்து வந்தவர். அதனால் அன்றைய நாட்களில் நடிகர்திலகத்தின் படங்களில் அவருக்கு ஏதாவது ஒரு ரோல் கண்டிப்பாக இருக்கும். அதுவும் பைலட் பிரேம்நாத் படத்தில், கதாநாயகி ஷ்ரீதேவிக்கு ஜோடியாக, நடிகர்திலகத்தின் மாப்பிள்ளையாக பிரதான ரோல் ஒன்றில் நடித்தார்.
    ஜெய்கணேஷைப்பொறுத்தவரை, எனது சிறு வயதில் அவரை நேரிலேயே சந்தித்துப் பேசியிருக்கிறேன். மிட்லண்ட் தியேட்டரில் 'எமனுக்கு எமன்' படத்தின் மேட்னிக்காட்சிக்கு வந்திருந்தவரை (அப்போதைய இளவயது ஜெய்கணேஷை இமேஜின் பண்ணிக்குங்க) இடைவேளையில் வராண்டாவில் நாங்கள் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம். ரொம்ப அழகாக செயற்கைத்தனமில்லாமல் பேசினார். வெள்ளை ஜிப்பாவும் குர்தாவும் அணிந்திருந்தார். அப்போது சுற்றி நின்ற ரசிகர்கள், அவர்மீது கலர்ப்பொடிகளைத்தூவி கிண்டல் செய்ய, அங்கிருந்து தப்பிக்க மடமடவென்று மாடிக்குப்போய் ஆபரேட்டர் அறைக்குள் புகுந்துகொண்டவர், மீண்டும் காட்சி துவங்கியதும்தான் தியேட்டருக்குள் வந்தார்.
    பிற்காலத்தில் நல்ல குணசித்திர நடிகராக, குறிப்பாக நகைச்சுவைக்காட்சிகளில் திறம்பட நடித்தவர் ஜெய்கணேஷ். பான்பராக் போடும் பழக்கம் காரணமாக கன்னத்தில் புற்றுநோயால் குழிபறிக்கப்பட்டு வெகுசீக்கிரமாகவே நம்மைவிட்டும் மறைந்து போனார்.
    நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இதயங்களில் ஜெய்கணேஷ், பிரேம் ஆனந்த் இருவருக்கும் என்றென்றும் நிரந்தர இடம் உண்டு.



    நகைச்சுவைக்காட்சிகளும், அரங்கில் சிரிப்பலையை பரவ விட்டன, சுருளியின் 'கிளி கத்துற ஊரெல்லாம் கிளியனூரா', 'எல்லோரும் பீடி மட்டும்தான்யா வாங்குவாங்க, யாரும் தீப்பெட்டி வாங்குறதில்லை. தீப்பெட்டி என்னய்யா தீப்பெட்டி. இவர் மட்டும் கிடைச்சிட்டாருன்னா ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையே வச்சிடுவேன்' போன்ற வசனங்களூம், மனோரமாவின் ஒரு மாதிரியான அழுகை மற்றும் 'எவர்சில்வர் பாத்திரத்திலேயே சமையலா? அப்போ மொத்த வியாபாரிதான்' என்று தேங்காயை கலாய்ப்பதுமான இடங்களும், காட்டில் யானை துரத்தும்போது, யானைகளைப் பிடிப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் சுருளியும் கருணாநிதியும் விழுந்து அலறுவதும், அதை மேட்டில் நின்று யானை பார்க்கும் இடமும் கலகலப்பான இடங்கள்.

    ஒரு வெற்றிப்படத்துக்கான அனைத்து அம்சங்களும் நிறைந்த இப்படம் வெற்றிபெற்றதில் வியப்பில்லை, வெற்றிவாய்ப்பை இழந்திருந்தால்தான் அது வியப்பு மற்றும் வேதனை அளித்திருக்கும். தமிழ் ரசிகர்கள் அந்த அளவுக்கு விடவில்லை.

  16. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •