Page 229 of 400 FirstFirst ... 129179219227228229230231239279329 ... LastLast
Results 2,281 to 2,290 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2281
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கிட்டத்தட்ட 1300 பேர் தினம் வரும் திரியில், ஆழ்ந்து போட படும் பதிவுகளுக்கு ,உடன்-எதிர் வினைகள் கூட இல்லையே?ராகவேந்தர் சொன்ன படி,தரமான பதிவுகள் போட தயார்.நமக்கு ஸ்டாக் தீரவில்லை.
    ஆனால் ராகவேந்தர் ,முரளி போன்றவர்களே எதிர்வினை புரிவதில்லையே?

    பாபு,கெளரவம் இவற்றிற்கு ஒரு வினைகளும் இல்லையென்றால் ,என்னதான் எழுதுவது என்ற ஆயாசமே மேலிடுகிறது.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2282
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    எதிர்வினை பற்றி எதிர்பார்க்காமல்
    பதிவுகளை தொடருங்கள் கோபால்

  4. #2283
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மாற்று அணியினரின்
    தனிமனித தாக்குதல் அனாகரீகமானது
    வன்மையாக கண்டிக்கத்தக்கது

  5. #2284
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாழ்த்துக்களைக் கூறிய அன்பு நண்பர்கள் ராமச்சந்திரன், மதுரை சந்திரசேகர் மற்றும் சிவா தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #2285
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உங்களாலே முடியலன்னா விட்டுடுங்கள் பாஸ். உங்களுக்கு எழுத வராது. நீங்க வெறும் காமெடி பீஸ்.
    அணைத்து சென்றவர்களின் கதி,பெற்ற லாபங்கள் உலகத்துக்கே தெரியும்.
    Last edited by Gopal.s; 19th October 2014 at 09:06 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #2286
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ......
    .realism உம் கலையும் எந்த காலத்திலும் இணைய முடியாது.ஒரு கலைஞனின் உள்ளுணர்வு சார்ந்து அவன் பார்வையில் interpret பண்ண படுவதே அழகுணர்ச்சி மிகு கலையாகும்.
    ....
    இந்த அடிப்படையைத் தாங்கள் கூறியிருப்பது மிகச்சரியான அணுகுமுறை.. இந்த அடிப்படை ஒவ்வொரு நடிகனுக்கும் உள்ளது. குறிப்பாக தெற்காசிய நாடுகளின் கலாச்சாரங்கள் கலையை இந்த அடிப்படையைத் தான் அமைத்துக் கொண்டுள்ளன. மேற்கத்தியக் கலாச்சாரத்திற்கு இந்த அடிப்படை ஒவ்வாது.

    இதனை சரியான முறையில் புரிந்து கொண்டால் மிகை... என்ற வார்த்தைக்கே இடமிருக்காது...

    தங்களை அறிவுஜீவி எனக் கூறிக்கொள்ளும் அரைகுறை மேதாவிகள் தான் மேம்போக்காக இந்த மாதிரி மிகை என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள்.

    பாத்திரங்கள் நடிப்புக்காக உருவாக்குவது என்பதற்கு முன்னுதாரணம் நடிகர் திலகம் அவர்கள் தான். அவருடைய வருகைக்குப் பிறகு தான் கலையை வெளிப்படுத்துவதற்கான கருவியாக நடிப்பு பயன்பட்டது போக கருவியைப் பயன்படுத்துவதற்காக கலை உருவாக்கப் பட்டது ... என்கின்ற (reciprocation or vice-versa or reflection ... எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்... ) அணுகுமுறை சினிமாவில் உருவானது..

    இதற்குக் காரணமும் உண்டு. நடிகர் திலகத்தைப் பொறுத்தவரையில் இந்த கான்செப்ட் மக்கள் மீது திணிக்கப்படவில்லை. மாறாக அவர்களை பிரதிபலிப்பதற்காகவே இந்த கான்செப்ட் வடிவமைக்கப்பட்டது. சராசரி மனிதர்களின் நடுவில் வாழக் கூடிய பல்வேறு குணாதிசயங்களை சித்தரிக்க படைப்பாளிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஒரு உருவம் தேவைப்பட்டது. அந்த உருவத்தை அமைக்கக் கூடிய வாய்ப்பினை சினிமா ஏற்படுத்தியது. அந்த சினிமா அவர்களுக்கு அறிமுகப்படுத்திய கருவி தான் நடிகர் திலகத்தின் நடிப்பு என்கின்ற உன்னதமான விஷயம். இந்த விஷயத்தை வைத்து இந்த மாதிரி மனிதர்களை ஏன் சித்தரிக்கக் கூடாது, சமூகத்தில் இந்த மாதிரி பாத்திரங்கள் இருக்கின்றன, மக்களே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்று எடுத்துரைப்பதற்கு ஒரு சரியான கருவி தேவைப்பட்டது.. அதற்கு படைப்பாளிகளின் நெஞ்சில் உடனே நடிகர் திலகம் தோன்றியதால் உருவானது தான் நடிப்பின் புதிய பரிமாணம்..

    ஒரு வகையில் பார்த்தால் இதற்கு முழு முதற் காரணம் அந்த படைப்பாளிகள் தான்..

    இதற்கு உதாரணமாக நடிகர் திலகத்தின் பல பாத்திரங்களைச் சொல்லலாம்..

    தலையாயதாக கண் முன் நிற்பது..

    சமூகப் படங்களில் அந்த நாள், திரும்பிப் பார், பாகப் பிரிவினை, முதல் மரியாதை போன்றவை..

    இதே பாத்திரங்களை சற்றே மேலும் கற்பனையூட்டி ராஜா ராணி காலத்தியதாக சித்தரித்து தான் தூக்குத்தூக்கி சுந்தராங்கதன் பாத்திரம்

    இன்றைய சமூகத்தில் இந்த சுந்தராங்கதன் பாத்திரம் பெருமளவில் நிலவி வருவதற்கு நாள் தோறும் நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளே சாட்சி..

    கௌரவம் கோபாலின் கட்டுரை எந்த அளவிற்கு ஆழமான ஆய்விற்கு வழி வகுக்கிறது ....

    நன்றி கோபால்..
    Last edited by RAGHAVENDRA; 19th October 2014 at 10:40 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #2287
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகவேந்தர்,

    உங்கள் மீள் பங்களிப்பு ,மகிழ்ச்சியளிக்கிறது. வாசுவும்,முரளியும் திரும்ப வந்து பங்களிக்க,பங்கேற்க ஆரம்பித்தால் ,நாம் பல அதிசயங்கள் .நிகழ்த்தலாம்.

    மாற்று அணி நண்பர்களே,

    வாருங்கள்.வாழ்த்துங்கள். நட்பு நாடுங்கள். மகிழ்ச்சி .வரவேற்கிறோம்.ஆனால் இங்கு வந்து, அங்கு வந்து அதை செய்யுங்கள்,இதை செய்யுங்கள் என்ற வேண்டுகோள் ..
    அது நாகரிகம் அல்ல. நாம் எல்லோருமே matured adults .எதை செய்வது,எப்போது செய்வது என்பது புரிந்தவர்கள்.

    எல்லா திரி நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்,

    மாற்று கொள்கை அல்லது பிடிப்பு கொண்ட திரிக்குள் நுழையும் போது ,foot note நீக்கி விட்டு வரவும் அல்லது செல்லவும்.மாற்றார் வீட்டில் நுழையும் போது ,செருப்பு கழட்டி விட்டு நுழைவது போன்ற நாகரிகம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #2288
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    உங்களாலே முடியலன்னா விட்டுடுங்கள் பாஸ். உங்களுக்கு எழுத வராது. நீங்க வெறும் காமெடி பீஸ்.
    அணைத்து சென்றவர்களின் கதி,பெற்ற லாபங்கள் உலகத்துக்கே தெரியும்.

  10. #2289
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கோபால்
    அவரவர் கொள்கையை அவரவர் மாற்றிக் கொள்ள முடியாது. Signature என்பதை தங்களைப் பற்றியோ அல்லது தங்கள் கருத்துக்களைப் பற்றியோ ஒரு அடையாளமாக அமைத்துக் கொள்வது. ஒவ்வொரு பதிவிற்கும் மாற்றிக் கொள்ளக் கூடிய விஷயமல்ல என்பதும் தங்களுக்குத் தெரியும். அவர்கள் கூறுகின்ற கருத்துக்கு நாம் உடன் படவில்லை யென்றாலோ அல்லது அவர்கள் நம் கருத்துக்கு உடன் பட வில்லையென்றாலோ அதற்காக நாம் கோபித்துக் கொண்டு வராதே அல்லது நிபந்தனையுடன் வா எனச் சொல்வதற்கான இடம் இதுவல்ல.
    அனைவரும் நண்பர்களே..

    கருத்துப் பரிமாற்றங்களை வரவேற்போம்.. முரண்பட்ட கருத்துக்கள் வருவது இயல்பு. ஆனால் அவை பரிமாறிக்கொள்ளப்படும் விதம் தான் வித்தியாசப்படுகிறது.

    மேலே கூறப்பட்ட எதுவுமே தங்களுக்குத் தெரியாத விஷயமல்ல.

    இரு கரம் நீட்டி வரவேற்போம்

    நடிகர் திலகத்தின் மேன்மையைப் புரிய வைப்போம்..

    தமிழ்த் தாயின் ஈடற்ற தவப்புதல்வனின் அருமைகளையும் பெருமைகளையும் கொண்டு சேர்ப்பதில் நம்முடைய பங்கை அளிப்பதில் பேருவகை கொள்வோம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2290
    Member Regular Hubber
    Join Date
    May 2011
    Location
    Dubai, UAE
    Posts
    34
    Post Thanks / Like
    Dear Raghavendra Sir,

    Congratulations on your 6000 post and for the untiring work.

    Anand

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •