Page 226 of 400 FirstFirst ... 126176216224225226227228236276326 ... LastLast
Results 2,251 to 2,260 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2251
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என்னுடைய விருப்ப படங்களில் முக்கிய ஒன்றான கெளரவம் 25/10/2014 அன்று 41 ஆண்டு நிறைவு செய்கிறது. அடுத்த வாரம் விருந்தினர்,வேலை,தீபாவளி என்று கடக்க இருப்பதால், இன்றே அந்த பணியை மேற்கொள்ளுகிறேன்.

    கெளரவம்-1973

    கருணை கொலை,போர் குற்றம் என்பது போல சட்ட தர்மம் என்பதும் வினோத வழக்கு தொடராகவே எனக்கு படும்.கெளரவம் படத்தில் மேலெழுந்த வாரியாக இல்லாமல் பல அழுத்தமான விஷயங்கள் அருமையாக விவாதத்திற்குள்ளாகும் படி கதையுடன் பொருந்தி இடம் பெற்றுள்ளது இன்று வரை என்னை வியப்புக்குள்ளாக்கிறது .

    ஒரு வக்கீலின் தார்மீக பொறுப்பு,தர்ம நியாயங்கள் எது வரை செல்லலாம்? அல்லது இருட்டறையில் தர்க்க வாதம் என்ற விளக்கை ஏற்றுவதுடன் அவன் பணி முடிகிறதா?அவன் கொண்ட தொழில் சட்ட அறிவையும்,தர்க்க வாத குயுக்தி திறமையை அடிப்படையாக கொண்டது மட்டுமே.மதம்,ஆன்மிகம் சார்ந்த தர்ம நியாயங்களுக்கு அவன் பொறுப்பல்ல என்றால் ,அறிஞர்கள் கூடி விவாதிக்கும் ஒரு பட்டி மன்றமாக,நீதிபதி ஒரு பட்டி மன்ற நடுவர் என்ற வகையில் சுருங்கி விடாதா?அதை மீறிய ஒரு தொழில் தர்மம் வக்கீலுக்கு உள்ளதா?

    நீதிபதி ஸ்தானம் என்பது ஒருவன் விதியை தீர்மானிக்கும் கடவுளுக்கு சமமானது.அந்த பதவிக்கு அரசியல்,சிபாரிசு என்று நுழைந்து ,சட்ட வாயிலையே நீர்க்க செய்தால் ,தகுதியுள்ள திறமையாளன் என்ன மனநிலை அடைவான்?

    தன் தொழில் திறமை மீது அசைக்க முடியாத இறுமாப்பு கொண்டவன் ,அதை நேர்வழி செருக்காக(Constructive Arrogance) மாற்றாமல்,தோல்வியை மரணத்துக்கு சமமாக்குவது எந்த வகை தன்னம்பிக்கையில் சேரும்?

    தன்னை எடுத்து வளர்த்து போதித்து ஆளாக்கிய ஒரு தந்தை மற்றும் ஆசானுக்கு மகன் செலுத்த வேண்டிய கடன்,சமுதாய கடனுக்கு கீழே வைக்க பட வேண்டிய ஒன்றா?

    திருந்தி வாழ நினைக்கும் ஒரு தடம் புரண்ட மனிதன்,தப்பித்த குற்றங்களுக்காக,நிரபராதி நிலையில் தவறான தண்டனையை பெறுதல் ஒரு கவிதை ஞாய தீர்வாகுமா?

    ஒரு நேர்மையான கலை படத்துக்குரிய அம்சங்களுடன் வியாபார நுணுக்கங்களையும் நன்கு சேர்த்து செய்த படங்கள் வியட்நாம் வீடு,கெளரவம் போன்ற படங்களாகும்.நடிகர்திலகம்-சுந்தரம் இணைவு நமக்களித்த கலை கொடைகளாகும்.

    இரண்டிலுமே பிராமண பாத்திரங்களானாலும்,பிரமிக்க வைக்கும் வேறுபாடு கதாபாத்திர இயல்புகள்,பிரச்சினையின் தன்மைகள் இவற்றுக்கு மேலாய் நடிகர்திலகத்தின் கூடு விட்டு கூடு மாறும் பாத்திர அணுகல்,புரிதல் என்று விரியும்.
    ரஜினிகாந்த் செல்வந்தன்.பத்மநாபன் நடுத்தரன்.ரஜினிகாந்த் ஒழுக்க நெறிகளை பற்றி கவலை படாத ,உயர் ரக வெற்றியில் மிதக்கும் ஒரு தொழில் தேர்ச்சி பெற்ற நாத்திகன்.பத்மநாபன் ஒழுக்க அறநெறியில் ஊறிய ஒரு உத்தியோக மேலாளன்.ரஜினி காந்திற்கு மகனுடன் பிணக்கு கர்வம் சம்பத்த பட்டது.பத்மனாபனுக்கோ மகன்/மகள் நெறி வழுவல் சம்பத்த பட்டது.
    ரஜினிகாந்தின் பிரச்சினைகள் எதிர்பார்ப்பில் கட்ட பட்டது.பத்மநாபனின் பிரச்சினைகள் அடிப்படை தேவைகளில் கட்டமைக்க பட்டது.இருவரும் ஒரே இனத்தை சார்ந்தாலும் ,இரு வேறு துருவங்கள்.நடிகர்திலகத்தின் பாத்திர வார்ப்பில் இதனை விரிவாக ஆராய்வோம்.இப்போது சிறிதே கதை களம் புகுவோம்.

    ரஜினிகாந்த்(வெற்றியின் மிதப்பில் உள்ள செல்வந்த கிரிமினல் லாயர்,உல்லாச விரும்பி ),மனைவி செல்லா,வளர்ப்பு மகன் கண்ணன்(குலநெறிமுரைகளில் திளைக்கும் அம்மா பிள்ளை .பெரியப்பா பெரியம்மாவை உலகமாய் கொண்டு வளர்ந்து வரும் லாயர்) என்று பிரச்சினையே புகாத குடும்பம்.

    ரஜினிகாந்த் ,தனக்குரிய அங்கீகாரம்(ஜட்ஜ் பதவி)வழங்க படாததால் கோபமுற்று ,குற்றவாளி என்று உறுதி செய்ய பட்டு தண்டனை விளிம்பில் நிற்போரை தன் வாத திறமையால் விடுவிக்கும் முறையில்,இந்த முறையற்ற அமைக்கெதிரான கோபத்தை வஞ்சமாக தீர்க்கும் முயற்சியில் கிடைத்த கருவி மோகன்தாஸ்.

    மோகன்தாஸ் என்பவன் ஒரு பணக்கார மைனெர் பெண்ணை கடத்தி ,அவள் வாழ்வை சீரழித்து ,அவள் மரணத்திற்கு காரணமானவன்.ஆனாலும் ரஜினிகாந்தின் வாத திறமையால் விடுதலை பெற்று ,திருந்தி ,தான் காதலிக்கும் நடன பெண்ணை மணந்து வாழ திட்டமிடும் போது,எதிர்பாராத அவளின் தற்செயல் மரணத்திற்கு குற்றம் சாட்ட பட்டு தண்டிக்க படுபவன்.

    மற்றோரின் பார்வைக்கு அதர்மமாக படும் ரஜினிகாந்த் செயலை எதிர்க்க சக வக்கீல் மற்றும் நண்பர்கள் கண்ணனை பப்ளிக் ப்ராசிகியூட்டர் ஆக்கி ,ரஜினிகாந்திற்கு எதிராக தர்மத்தின் பக்கம் நிற்க வேண்டுகிறார்கள்.கண்ணன் பெரியப்பா மனதை மாற்ற இயலாமல்,அவருக்கெதிராக நீதி மன்றத்தில் நிற்க வேண்டிய சூழலில் ,வீட்டை விட்டு வெளியேற்ற பட்டு ,வழக்கில் வென்று,பெரியப்பாவை நிரந்தரமாக தோற்கிறான்.

    நடிகர்திலகத்தால் மட்டுமே இந்த பாத்திரத்தை பண்ண முடியும் என்ற வகையே இதில் வரும் ரஜினிகாந்த் பாத்திரம்.prestige பத்மநாபனுக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நாராயணசாமி போல இதில் வரும் ரஜினிகாந்துக்கு டி.வீ.எஸ்.கிருஷ்ணா என்ற தொழிலதிபர்,கோவிந்த் சுவாமிநாதன் என்ற வக்கீல்,மற்றும் மோகன் ராமின் தந்தை வீ.பீ ராமன் என்ற மூவர் கூட்டணியில் இந்த பாத்திரத்தை வடிவமைத்தார் நடிகர்திலகம்.

    குணசித்திர ஒருங்கமைவு,பேசும் பாணி,சிறு சிறு பாத்திர இயல்புகள்,ஸ்டைல்,பாமர மக்களையும் ,படித்தவர்களையும் ஒருங்கே ஈர்த்த பாத்திரம். ஆங்கில வசனங்கள் பாத்திர படைப்புக்கேற்ப அள்ளி தெறிக்க பட்டிருந்தாலும் ,பீ,சி சென்டர்களையும் வெற்றிகரமாக ஈர்த்த பெருமை இந்த படத்துக்குண்டு.

    இதில் ரஜினிகாந்த் பாத்திரம், உலவும் ரோல் மாடல்களை கொண்டு சிவாஜியின் கற்பனை திறனால் meisner முறை நடிப்பில் ,ஆஸ்கார் வைல்ட் பாணி சுதந்திர கற்பனை வளம் கொண்ட செழுமையான ஒன்று.

    கண்ணன் பாத்திரமோ ,இயல்பு பாணி கொண்ட stanislavsky கூறுகள் அதிகம் கொண்டது.எப்போதுமே ஒரு பாத்திரத்தை ஓங்க வைக்க நடிகர்திலகம் கையாளும் அற்புத உத்தி இதுவாகும்.

    An actor should have strange & Rare temperament to convert his own disposition on an imaginative level which was beyond the reach of hampering elements and demands of real life .

    Doing justice to the character - என்பதைப் பற்றியே நாம் அதிகம் பேசுகிறோம். அதற்கும் நியாயமான காரணங்கள் உண்டு. மேம்போக்கான அபிப்ராயம் உள்ளவர்களுக்கு அதைப் புரிய வைக்க, அணுக இலகுவாக்க, பார்வை விரிவடைய சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய விஷயம்.

    அதே சமயத்தில், இதைத் தாண்டி 'இந்த நடிப்பை வெளிப்படுத்த வாகாக ஒரு பாத்திரம் தேவை' - என்ற வகையையும் நாம் சொல்லவேண்டும். End-product என்று பார்த்தால் 'பாத்திரத்துக்குக் கச்சிதமான நடிப்பு' என்ற சட்டகத்திலிருந்து பிரித்து சொல்லமுடியாதபடிக்கு இருக்கலாம். ஆனால் இந்த பாத்திரமே நடிப்புக்காக வார்க்கப்பட்டது என்பதை உணர்ந்து சுவைக்கும் துய்ப்பே தனி!

    நடிகனின் வேலையே கவிஞன் மனதை பார்வையாளர்களிடம் பழுதில்லாமல் கொண்டு சேர்ப்பதே. ஒரு நடிப்பையோ ,நடிகனையோ,புற காரணிகளை,நடைமுறை உதாரணங்களை கொண்டு அளவிடவோ ,அடக்கவோ கூடாது.அவர்கள் எந்த ஒரு வாழும் மனிதனிலும் வேறு பட்டு மாறு பட்டவர்கள்.சமூகத்துக்கு, மகிழ்ச்சி கொடுப்பதுடன் சமூகம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிப்பவர்கள்.அவர்கள் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவர்களின் தேவைகளை,அழகியலை,வெளிப்பாட்டை அவர்களே தீர்மானித்து,கதாபாத்திரம் என்ற முகமூடி வாயிலாக தங்களை வெளி காட்டுவார்கள்.சமூகத்தின் பார்வையை(அழகியல்,இயற்கையை ரசிப்பது உட்பட)கலைதான் தீர்மானிக்கிறது.realism உம் கலையும் எந்த காலத்திலும் இணைய முடியாது.ஒரு கலைஞனின் உள்ளுணர்வு சார்ந்து அவன் பார்வையில் interpret பண்ண படுவதே அழகுணர்ச்சி மிகு கலையாகும்.

    Strasberg&Stanislavsky focused on the Sense Memory technique using events in one’s past as a way of emotionalizing, Meisner developed his technique using Stanislavski’s revised method. Rather than delving exclusively into one’s past memories as a source of emotion, one could more effectively summon up the character’s thoughts and feelings through the concentrated use of the imagination and the belief in the given circumstances of the text. Meisner defined acting as doing things truthfully under imaginary circumstances and his technique is still known for its depth, reliability and balanced approach.

    நாம் ஏற்கெனெவே நடிப்பு பள்ளிகளை விரிவாக இந்தியாவின் ஒரே உலக அதிசயம் தொடரில் அலசி விட்டதால் இங்கு கோடி காட்டி விட்டு , நடிகர்திலகத்தின் பாத்திர அணுகலை,அது சார்ந்த என்னுடைய ரசனை துயிப்பை இனி விரிவாக அலசுவேன்.

    ரஜினிகாந்த என்ற கதாபாத்திரத்தை புரிந்தால்,நடிகர்திலகம் எந்த அளவு கவனம் செலுத்தி அதனை செதுக்கியுள்ளார் என்று புரிந்து கொள்ளலாம்.

    ரஜினி காந்த் எந்த ஒரு தொடர் வெற்றி பெற்ற திறமைசாலிகளையும் போல ,கடவுளை நம்பியாக வேண்டிய அவசியமில்லாதவர். சில நடத்தை முறைகளால் ,மேலை நாகரிகமானவர் என்று காட்டி கொண்டாலும் ,கீறி பார்த்தால் அக்ரகாரம் எட்டி பார்ப்பதை புன் முறுவலுடன் தொடரலாம்.
    பல சுவாரஸ்யங்கள் பட திரைகதையிலேயே உண்டு.குடிக்க ரஷ்யன் வோட்கா தேடும் மனிதன் ,கட்டி கொள்வதோ கடமுடா பட்டி பக்தையை.
    மகன் அம்மா புள்ளை என்று கேலி செய்தாலும், மகனிடம் எதிர்பார்ப்பது ,கோடு தாண்டா conservative mentality யைத்தான்.மகன் காதலிக்கும் போது அவர் அடையும் அதிர்ச்சி, அடக்கி வைக்க முற்படும் அதிகாரம்,தன் கருத்தை எதிர்க்கவே உரிமையில்லை என்று அவர் பண்ணும் ஆகத்தியம் .அதே போல தன் பெருமை பற்றி மனைவியிடம் செல்லமாக அலசும் சற்றே அக்ரகார நேர்த்தி. முதல் தோல்வி(justice post )அவர் ரத்தத்தை சூடாக்கி ,எல்லை மீறி தன் திறமையை நிலை நாட்டுவதில் முடிந்தாலும் ,தாங்க முடியாத எதிர்பார்ப்பு நிறைந்த வர போகும் தோல்வி ,திலகம் வேண்டும் அளவு sentiment ஆக்கி விடுவது,மதில் மேல் பூனையான விளிம்பு நிலை மனிதரை குறிக்கிறது.

    கண்ணனிடமோ ,குழப்பமே இல்லாத confimist .ஆனால் பெரியம்மாவை
    புரிந்த அளவு பெரியப்பாவை புரியாதவனோ என்ற குழப்பம் அவ்வப்போது.ஆனால் தர்மம்-அதர்ம போரில் இழு படுவது ஒரு வித moral preaching தந்த குழப்ப நிலையே.

    இப்போது படத்தை பார்த்தால் புரியும் ,எத்தனை ஆழமாக நடிகர்திலகத்தின் புரிதல் உள்ளது என்பது.ஒரு வக்கீலின் அதீத உடல் மொழி (கர்வம் நிறைந்த தன்னம்பிக்கை. ,தான் நினைப்பது சொல்வது மட்டுமே சரி என்று உணர்த்த அலையும் தொழில் சார்ந்த aggression )முதல்,அழுத்தி பேசி மற்றவரை ஆக்ரமிக்கும் வசன முறை.கிண்டல்,கேலி,துச்சம்,அகந்தை,என்ற எடுத்தெறிதல் என்று அவர் பண்ணும் அதகளம்,இந்த பாத்திரங்களுக்குதானே இவர் பிறந்து வந்தார் என்ற மலைப்பையே அளிக்கும்.

    ரஜனி காந்த் பாத்திரத்தை விட்டு விட்டு கண்ணனை மட்டும் பார்த்தாலும்,ஒரு சாத்திர முறையில்,சட்டதிட்டங்களுடன் வளர்க்க பட்ட ஒரு ஆசார குல பிள்ளையை அவர் நடித்து காட்டும் நேர்த்தி.அப்பப்பா....

    கவுரவத்தில் எதை எடுப்பது ,எதை விடுவது?

    ரஜனிகாந்த் ,கண்ணனிடமும்,செல்லாவிடமும் பேசும் ஆத்திக அடாவடி காட்சியா,கண்ணன் காதல் தெரிந்து கண்டிக்கும் காட்சியா,செந்தாமரையிடம் பேசி விட்டு உன் friend மொகத்திலே ஈயாடல பாத்தொயோ காட்சியா,மைலாபுர்லே எல்லாரும் என்னடி பேசிக்கிறா என்ற வம்பு காட்சியா, மோகனதாசிடம் போடா சொல்லும் அலட்சிய காட்சியா,monotony தவிர்க்க வீட்டிலேயே அமைக்க பட்ட கோர்ட் காட்சியா,கண்ணனிடம் confront பண்ணும் காட்சியா(curt ),தன்னுடைய பழைய கோட் வாங்க வரும் கண்ணனிடம் அவர் மாடியிலிருந்து பேசும் காட்சியா,கடைசியில் நம்பிக்கை தளரும் காட்சிகளா என்று படம் முழுதும் விருந்து.

    நடிகர்திலகம் படங்களில் நான் எப்போதுமே முதல் பத்துகளில் நடிப்பு,படம் இரண்டுக்குமாக நான் தேர்ந்தெடுக்கும் அதிசயம்.
    Last edited by Gopal.s; 18th October 2014 at 02:35 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Likes KCSHEKAR, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2252
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by gopal,s. View Post
    இன்று என் இளைய மகனின் பிறந்த நாள். தெய்வ மகன் விஜய் ஞாபகார்த்தமாக,விஜயதசமி அன்று பிறந்த குழந்தைக்கு விஜய் என்றே பெயரிட்டோம்.தெய்வ மகன் விஜய் போன்றே அழகானவன்.செல்லம்.

    தங்க தட்டுடன் பிறந்த குழந்தை .இரு வேலையாட்கள்,இரு ஓட்டுனர்கள் என ,உலக பள்ளியில் ,பல நாட்டு பிள்ளைகளுடன் பயின்றாலும் ,20 வயதிற்குள் 23 நாடுகளை பார்த்து விட்டாலும்,அடிப்படை மறக்காத அற்புத குழந்தை.


    அவனுக்கு எனது, பெருமை நிறைந்த வாழ்த்துக்கள்.குடியின் value based education ,humility ,true philanthrophy ,மாண்புகள்,மனிதம்,சுற்று சூழல் காப்பு,எளிமை, குடும்ப இணைப்பு அனைத்தும் உன்னால் சங்கிலி தொடர் போல ,வாழையடி வாழையாய் தொடர்ந்து ,மனிதம் தழைக்க உதவட்டும்.
    அருமை நண்பர் கோபால் அவர்களே

    என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள் !

    முதற்க்கண் தங்கள் இளைய மகனுக்கு எனது இதயம் கனிந்த பிறந்த நாள் நல வாழ்த்துக்கள்.

    அந்த ஒற்றுமை என்னவென்றால்.

    என்னுடைய உறவினர்கள் என்னை அழைப்பது குமார் என்ற பெயரில். ஆனால் எனது தந்தையார், தாயார் மற்றும் மனைவி வீட்டார் , மற்றும் என்னுடைய நண்பர்கள் என்னை அழைக்கும் பெயர் "கண்ணன்" என்பதாகும்.

    குணமும் கிட்டத்தட்ட தெய்வமகன் "கண்ணன்" போன்றதே ...inferiority complex ஒன்றை தவிர.

    அந்த வகையில் தங்களுடைய இளையமகன் எனது சஹோதரனே, ரத்த சம்பந்தம் இல்லையென்றாலும் !!

    தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று வாழும் தங்களுடைய இளையமகனும் என்ன சஹோதரனும் ஆகிய விஜய் நம்முடைய தலைவர் கலை அவதாரம் நடிகர் திலகம் அவர்கள் ஆசியுடன், ஆல் போல் தழைத்து வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    Rks

  5. #2253
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    டியர் இராகவேந்தர் சார்,
    ஆறாயிரம் பதிவுகளைக் கடந்தமைக்கு அடியேனின் நல்வாழ்த்துக்கள்.
    அன்புடன் கோபு.

  6. #2254
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    CONGRATULATIONS RAGHAVENDRAN SIR

    6,000 60,000 AAGA Vaazhthukkal !

    Ungal Pani Sirandha Pani

    RKS

  7. #2255
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர் ராகவேந்தர். யாரையும் புண்படுத்தாத கண்ணோட்டமும் பண்பட்ட தன்மையும் மென்மையும் மேன்மையும் நிறைந்த 6000 பதிவுகளின் நாயக நண்பருக்கு இத்திரியின் மாதிரிப்பதிவருக்கு நடிகர்திலகத்தின் கோடானுகோடி புகழார்வலர்களில் ஒருவனாக என் வாழ்த்துக்கள்.

    This song best suits most of your traits!

    Last edited by sivajisenthil; 18th October 2014 at 12:50 PM.

  8. #2256
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Congrats Mr. Ragavendra sir for your 6000 posts.

  9. #2257
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    Dear raghavendra sir,
    congratulations for your 6000 valuable posts
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  10. #2258
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Dear Mr. Raghavender,

    Congratulations on 6000 posts!

    Regards,

    R. Parthasarathy

  11. #2259
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Dear Mr. Gopal,

    Kindly convey my wishes to your son for very happy birthday.

    Wishing him many more happy returns of the day,

    Regards,

    R. Parthasarathy

  12. #2260
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Location
    The Gambia
    Posts
    0
    Post Thanks / Like
    Best wishes and congrats for crossing 6000 posts and pray our ALMIGHTY TO GIVEE ENOUGH STRENGTH TO ACHIEVE 60000 POSTS IN THIS THREAD. - N.V.Raghavan

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •