Page 222 of 400 FirstFirst ... 122172212220221222223224232272322 ... LastLast
Results 2,211 to 2,220 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2211
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    The Hindu : 13.10.1952

    The Hindu : 14.10.1952

    திராவிட நாடு : 19.10.1952

    திராவிட நாடு : 26.10.1952

    The Hindu : 24.10.1952

    The Hindu : 26.10.1952
    [/QUOTE]
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2212
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பராசக்தி -
    சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
    பராசக்தி வெளியீட்டின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப் பட்டது. அதனுடைய நிழற்படம் இதே



    [img]http://1.bp.blogspot.com/_rQdqjfXOKY0/SmQ9r2L

    http://mohanramanmuses.blogspot.in/2...day-cover.html
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #2213
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    What is generation gap for a seasoned wood like NT?
    : NT/4G spectrum survival saga 2!!

    பாடிய வாயும் ஆடிய கால்களும் சும்மா இருக்க முடியாதே அதுவே நடிகர்திலகம் என்றால் ...The Thespian proves his edge over anyone else in this world!!

    Not only the 4th Generation actors but also all generations feel proud to share screen space with the one and only global phenomenon, the immortal legend Nadigar Thilagam Sivaji Ganesan! No wonder... any other actor can take on only from the spatial and temporal point at which NT left the acting piece!!!!

    En Asai Rasaave! an actor's penchant till his last breathe!!



    Last edited by sivajisenthil; 17th October 2014 at 08:59 AM.

  5. #2214
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    சிவாஜியின் காதல்கள்- 1
    பராசக்தி- முதற்காதல்.
    டியர் கோபால் சார்,
    அக்டோபர் 17 -நெஞ்சில் நிழலாடும் பராசக்தி நினைவு விளம்பரங்களை மீள்பதிவு செய்தமைக்கு நன்றி.

    மேலும், நடிகர்திலகத்தின் காதல்கள் என்ற தலைப்பில் தொடரை, "பராசக்தி"யிலிருந்து சிறப்பாக ஆரம்பித்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  6. #2215
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    கலையுலகிற்ku ஒரு பொன்நாள். பராசக்தியின் பிறந்த நாள். கணேசரின்

    திரையுலக பயணம் தொடங்கிய நாள்.

  7. #2216
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like




    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  8. Likes Russellmai liked this post
  9. #2217
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    a recap from Saradha Madam old post

    அந்த நாள்
    அந்த நாளில், அதாவது அந்த நாட்களில் (1950) படம் துவங்கும்போது கர்நாடக இசையுடன் அல்லது கர்நாடக இசைப்பாடலுடன் படத்தின் டைட்டில்கள் ஓடும். முடிந்ததும் ஒரு அரசவையில் அரசவை நர்த்தகியின் நடனம் நடைபெறும். அதைத்தொடர்ந்து பாத்திரங்கள் பேசத்துவங்க படம் நகர ஆரம்பிக்கும். இதுதான் அன்றைய நடைமுறை.

    ஆனால் "அந்த நாள்" படத்தின் துவக்கத்தைப்பாருங்கள். படம் துவங்கும்போது ஜாவர் சீதாராமனின் குரலில்

    "இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கிக்கொண்டிருந்தன. எந்த நேரம் என்ன நடைபெறுமோ வென்று எல்லோர் மனதிலும் ஒரு அச்சம் குடிகொண்டிருந்தது. அப்போது ஒருநாள் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில்..."

    இதைப்பேசி முடிக்கும் முன்பாகவே, திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சப்தம், அதைதொடர்ந்து சிவாஜி நெஞ்சைப் பிடித்துக்கொண்டே கேமராவிலிருந்து பின்னோக்கிச்சென்று கீழே விழுவார். கால்களை உதைத்தவாறே உயிரை விடுவார். (ஆம். முதல் காட்சியிலேயே கதாநாயகன் அவுட். அந்த நாளில் நினைத்துப்பார்க்க முடியாத புதுமை). சிவாஜி இறந்ததும், மாடியிலிருந்து கதவொன்று திறக்கும். ஒரு வழுக்கைத்தலை பெரியவர் தட தட வென மாடிப்படிகளில் ஓடி வந்து கேமரா அருகில் வந்ததும் கீழுதட்டை கைகளல் பிடித்தவாரே அங்குமிங்கும் பார்ப்பார். பின்னர் ஓடத்துவங்குவார். டைட்டில்கள் ஓடத்துவங்கும். (ஆம் 'அந்த நாள்'.. அந்த நாளேதான்).


    கொலை எப்படி நடந்தது என்று விசாரிக்க வரும் சி.ஐ.டி.ஜாவர் சீதாராமனிடம், கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும், கொலை எப்படி நடந்திருக்கக் கூடும் என்று அவரவருக்கு தெரிந்த விஷயங்களைக்கொண்டு விவரிக்க, ஒவ்வொன்றும் ஒரு ஃப்ளாஷ்பேக்காக விரியும். ஒவ்வொருவர் சொல்லி முடிக்கும்போதும் சிவாஜி சுடப்பட்டு விழுவார். (படம் முழுவதையும் ஃப்ளாஷ் பேக்கிலேயே சொல்லும் பாணியில் பின்னாளில் வந்த பல புதுமைப்படங்களுக்கு வித்திட்டு வழிகாட்டிய படம் 'அந்த நாள்').

    பெரியவர் பி.டி.சம்பந்தம், சிவாஜியின் தம்பி டி.கே.பாலச்சந்திரன், பாலச்சந்திரனின் மனைவி, நாடோடிப்பாடலை சுவாரஸ்யமாகப்பாடும் சோடாக்கடைக்காரன், குதிரை வண்டிக்காரன்... ஒவ்வொருவரும் எவ்வளவு ஜீவனுள்ள பாத்திரங்கள்..!!. நாட்டுப்பற்று மிகுந்த பண்டரிபாய், கல்லூரி விழாவில் புரட்சிக்கருத்துக்களை சொல்லும் சிவாஜியைக் கண்டு காதல் வசப்படுவது ஒரு அருமையான கவிதை நயம். தன்னுடைய திறமையை தன்னுடைய சொந்த நாட்டு அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்று விரக்தியின் எல்லைக்குப் போய் ஜப்பான் நாட்டு அரசுடன் உறவு வைத்து தன் சொந்த நாட்டுக்கே விரோதியாக மாறும் துடிப்புள்ள எஞ்சினீயர் கதாபாத்திரத்தில் சிவாஜி தூள் கிளப்பியிருப்பார்.

    கேமரா வழியாக கதை சொல்லும் பாணி முதலில் இந்தப்படத்தில்தான் பரீட்சித்துப் பார்க்கப்பட்டிருக்கும் என்பது பலரின் எண்ணம். நான் முன்பு சொன்னது போல அறையைப்பூட்டிக்கொண்டு சிவாஜி போகும்போது அவரோடேயே கேமராவும் போகும். கையிலிருக்கும் சாவிக்கொத்தை மேலும் கீழும் தூக்கிப்போட்டுப் பிடித்தபடி அவர் செல்லும்போது, கேமராவும் சாவியோடு மேலும் கீழும் போகும்.

    அதே போல இறுதிக்காட்சியில், தான் சுடப்படுவதற்கு முன்பாக, சுழல் நாற்காலியில் அமர்ந்த படி மனைவி பணடரிபாயுடன் பேசும்போது கேமரா இவரிடத்தில் அமர்ந்து கொண்டு இவர் பார்வை போகும் திசையெல்லாம் போகும். அறை முழுக்க சுற்றி சுற்றி அலையும்.

    ( 'இருகோடுகள்' படத்தில் கலெக்டர் சௌகார், முதலமைச்சர் அண்ணாவை பேட்டியெடுக்கும் காட்சியில், அண்ணாவின் இருக்கையில் கேமரா அமர்ந்து, அவர் பார்வை போகும் திசைகளில் போவதைக்கண்டுவியந்தேன். அதன் பின்னரே 'அந்தநாள்' பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த உத்தி ஏற்கெனவே (15 ஆண்டுகளுக்கு முன்பே) அந்த நாளில் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டு வியப்பின் எல்லையை அடைந்தேன். (பாலச்சந்தர் என்று பெயர் வைத்தாலே புதுமைகள் செய்யதோன்றுமோ)

    எஸ். பாலச்சந்தர், தானே ஒரு நடிகராக இருந்தும் கூட, சில காட்சிகளில் தானே நடித்துப் போட்டுப் பார்த்தபின், சரிவரவில்லையென்றதும் தூக்கிப்போட்டுவிட்டு ஏ.வி.எம். செட்டியாரின் ஆலோசனையின்படி நடிகர்திலகத்தை கதாநாயகனாகப் போட்டு படத்தை எடுத்தார்.

    படத்தில் பாடல்களே இல்லாததால் இசையமைப்பாளர் என்று தனியாக ஒருவர் கிடையாது. படத்தின் டைட்டிலில் 'பிண்ணனி இசை : ஏ.வி.எம்.இசைக்குழு' என்று மட்டும் காண்பிக்கப்படும்.

    'ஆகா..ஓகோ’ என்று கொண்டாடும் அளவுக்கு இப்படம் வெற்றியடையவில்லை யென்றாலும், தமிழ்த்திரையுலக வரலாற்றில் எந்நாளும் பேசப்படும் படமாக சிறந்த தொழில் நுட்பம், மற்றும் புதிய சிந்தனை அமைந்த படம்தான் "அந்த நாள்".

  10. Likes Russellmai, KCSHEKAR liked this post
  11. #2218
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    a recap from Saradha Madam old post


    பாட்டும் பரதமும்
    கலை, நாட்டியம் இவைபற்றிய சிந்தனையோ, அவற்றில் ஈடுபாடோ இல்லாத, சதா தன் தொழில் பற்றியே சிந்தனையும் செயலுமாக இருக்கும் ஒருவர், நாட்டியமங்கையின் மீது கொண்ட காதலின் காரணமாக அவரே ஒரு நாட்டியக் காரராக மாறி, கடைசிவரை நாட்டியத்துக்கே தன்னை அர்ப்பணித்து விடுவதாக முடியும் கதை.



    தொழிலதிபர் ரவிசங்கர் (நடிகர்திலகம்) சதா தன் தொழில் நிறுவன முன்னேற்றத்திலேயே கவனமாக இருப்பவர். தன் தொழிலைத்தவிர வேறு எதையும் பற்றி சிந்திக்காதவர். அவருக்கு வில்லங்கம் ஒரு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் மூலம் வருகிறது. தங்கள் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு தலைமைதாங்க அழைக்கிறார். அதற்கெல்லாம் தனக்கு நேரமில்லை என மறுக்கும் ரவிசங்கரை கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார். காரணம், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சாமிக்கண்ணு பாணியில் "அது அவங்க அப்பா ஆரம்பிச்சு வச்ச பள்ளிக்கூடம்". ஆகவே மறுக்க முடியவில்லை. நிகழ்ச்சியில், பரதநாட்டியத்தில் புகழ்பெற்ற லலிதா (கலைச்செல்வி ஜெயலலிதா)வின் பரதநாட்டியம் நடக்கிறது. அப்போதும் அவர் மனம் நாட்டியத்தில் செல்லவில்லை. (ஆடிட்டோரியத்தில் தன் அருகே அமர்ந்திருக்கும் அத்தைமகன் விஜயகுமாரிடம், "ஏண்டா, நாமும் இதுபோல நாலு ஆடிட்டோரியம் கட்டி வாடகைக்கு விட்டா தனியாக வருமானம் வருமில்லே?" என்று கேட்க அதற்கு விஜயகுமார் 'மாமா, நாட்டியம் பார்க்க வந்த இடத்திலும் பிஸினஸ் சிந்தனையா?").

    நாட்டியம் முடிந்து விழாவில் ரவிசங்கர் பேசும்போது, 'ஒரு பொண்ணு கையை காலை ஆட்டி நடனம் ஆடிச்சு. எனக்கு அதிலெல்லாம் ஒண்ணும் பெரிசா இஷ்ட்டம் இல்லை. சொல்லப்போனா இந்த நாட்டியம் என்பதெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம்' என்று பேசப்போக, அடுத்துப்பேசும் லலிதா, ரவிசங்கரை ரசிப்புத் தன்மையற்ற மனிதர் என்று குத்திக்காட்ட இவருக்கு மனது ‘சுருக்’
    கென்றாகிறது. வற்புறுத்தி அழைத்து வந்த தலைமை ஆசிரியருக்கோ தர்ம சங்கடமாகப்போகிறது. பின்னர் மேக்கப் அறையில் தனியே சந்திக்கும் ரவி சங்கரிடம், அவரைத் தன் நாட்டியக்கலைக்கு அடிபணிய வைக்கிறேன் என்று சவால் விடுகிறாள் லலிதா. அது அவளால் முடியாது என்று மறுக்கும் ரவி, இன்னொரு முறை லலிதாவின் நாட்டியத்தைக்காணும்போது, கொஞ்சம் கொஞ்சமாக சலனமடைந்து அவள் பால் ஈர்க்கப்பட, வந்தது வினை. லலிதாவின் நாட்டியம் எங்கு நடந்தாலும் ஓடிச்சென்று பார்க்கத்துவங்குகிறார். ஒருமுறை அரங்கத்தின் வாயிலில் ஹவுஸ்புல் போர்டு போடப்பட, மேடையின்மீது வந்து நின்று பார்க்கும், லலிதாவின் தந்தையும் அவரது நாட்டிய குருவுமான மனோகருக்கு அதிர்ச்சி. அரங்கத்தில் ரவிசங்கரைத் தவிர வேறு யாருமில்லை. எல்லா டிக்கட்டுகளையும் அவரே வாங்கிவிட்டிருக்கிறார்.

    ரவிசங்கருக்கு தன்மீதுள்ள அபிமானத்தைப்பார்த்து லலிதாவின் மனமும் மெல்ல மெல்ல ரவியின் பக்கம் ஈர்க்கப்பட, ரவி மீது காதல் வயப்படுகிறார். திருமணத்துக்கு முன்பே நெருங்கிப் பழகிய்தன் விளைவாக லலிதா கருவுறுகிறாள். ரவி லலிதா காதல் மட்டும் லலிதாவின் தந்தைக்குத் தெரியவர, அவர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்புத்தெரிவிப்பதோடு, இனிமேலும் அந்த ஊரில் இருந்தால் ஆபத்து என்று முடிவெடுத்து நாட்டியக்குழுவை வேறு ஊருக்கு கிளப்புகிறார். அவரது எதிர்ப்புக்குக் காரணம், ஏற்கெனவே அவரது தங்கை சுகுமாரியுடன் ஒரு பணக்காரர் பழக்கம் வைத்து பின்னர் ஏமாற்றியது தான். (அந்தப்பணக்காரர் வேறு யாரும் அல்ல, ரவிசங்கரின் தந்தையாக வரும் மேஜர்தான்).

    அப்போது அவரைப்பார்த்து லலிதாவை தனக்கு மணமுடிக்குமாறு கேட்கும் ரவிடம், தன் மகளை மணக்க விரும்புபவனும் நாட்டியக் கலைக்கு மதிப்புக் கொடுத்து நாட்டியம் ஆடத் தெரிந்தவனாகவே இருக்க வேண்டும் என்று சொல்ல, தானும் நாட்டியம் கற்றுக் கொண்டு வந்து அவளை மணப்பதாக சவால் விட்டுப்போகிறார். ஒருநாட்டியப்போட்டியில் தன் அண்ணன் மனோகரின் மகள் லலிதாவை, தன்னிடம் நாட்டியம் பயிலும் ஒரு கத்துக் குட்டியைக் கொண்டு தோற்கடிப்பதாக, அவரது தங்கை சுகுமாரி சவால் விட, அந்தக்கத்துக்குட்டி வேறு யாருமல்ல, ரவிசங்கர்தான். போட்டியின்போது நடனமாடிக்கொண்டே யானையின் உருவம் வரையும் போட்டியில் லலிதா வரையும் யானையின் படத்தில் கண் வைக்கத்தவறிவிட, போட்டியில் லலிதா தோற்று, ரவிசங்கர் வெற்றிபெற, போட்டியின் நிபந்தனையின்படி லலிதாவை ரவிசங்கருக்கு மணம் முடிக்க அவளது தந்தை சம்மதிக்கிறார்.

    இதனிடையே இன்னொரு பக்கம் ரவிசங்கர் - லலிதா காதல் விவகாரம் ரவியின் தந்தை மேஜருக்குத் தெரியவர, அவர் பணக்காரர்களுக்கே உரிய குறுக்குப் புத்தியில் யோசித்து அவர்களைப்பிரிக்க முடிவெடுக்கிறார். அதன்படி, ஒருபக்கம் லலிதா ஓட்டலுக்கு வாடிக்கையாக வரும் பெண்ணென்றும் அதை சோதிக்க வேண்டுமானால் ஓட்டலில் ஒரு நாள் தங்கியிருக்கும்படியும் சொல்லி ரவியைத் தங்க வைக்க, இன்னொருபக்கம் ரவி அழைப்பதாக லலிதாவிடம் சொல்லி வரவழைக்க, லலிதா ஓட்டலுக்கு வரக்கூடிய பெண்ணல்ல என்று உறுதியாக நம்பும் ரவி, கதவைத்தட்டியது யாரென்று திறந்து பார்க்க, அங்கு லலிதா நிற்க...... அவ்வளவுதான், ரவிசங்கரின் நம்பிக்கை உடைந்து சிதறுகிறது. ராதா சொல்ல வரும் காரணத்தை ரவி கேட்கத் தயாராயில்லை. (அப்படி கேட்பதாக இருந்தால், முக்கால்வாசிப்படங்களுக்கு மூணாவது ரீலுக்குப்பிறகு கதையை நகர்த்தவே முடியாது).

    இதனிடையே ரவியின் தங்கைக்கும் விஜயகுமாருக்கும் திருமணம் நடக்கிறது. ரவியிடம் விவரத்தைச்சொல்ல, ரவியின் வீட்டுக்கு அவரைத்தேடி வரும் லலிதா, அங்கு திருமண ஏற்பாடு நடப்பதையறிந்து யாருக்கு திருமணம் என்று அங்குள்ளவரிடம் விசாரிக்க, அழையா விருந்தாளியாக திருமணத்துக்கு வந்த அந்த நபர் 'ரவிக்குத்தான் திருமணம்' என்று தப்பாகச்சொல்ல மனமுடைந்து போன லலிதா, தன் வயிற்றில் ரவியின் குழந்தையை சுமந்திருந்த போதும் ரவியை விட்டு நிரந்தரமாக விலகிப் போகிறாள். ரவி லலிதாவைத் தேடி யலைகிறான். ரவி வீட்டைவிட்டு வெளியேறியதும், அவரது தந்தை மேஜர் மரணமடைகிறார். லலிதாவின் நினைவாக நாட்டியப்பள்ளி நடத்திவரும் ரவியிடம், அவரது தங்கை மகள் (விஜயகுமாரின் மகள்) மாணவியாகச் சேர்கிறாள். லலிதாவைத்தேடியலையும் ஒரே பாடலில் ரவிசங்கருக்கு மளமளவென்று வயதாகிக்கொண்டு போகிறது. அந்தப்பாடலின்போதே சுகுமாரி இறக்கிறார். மனோகர் இறக்கிறார். ரவியின் மாணவியும் வளர்ந்து பெரியவராகிறாள். (அவர்தான் ஸ்ரீப்ரியா).

    வெளிநாட்டிலிருந்து தன் மகனுடன் (இரண்டாவது சிவாஜி) சென்னை வந்திறங்கும் லலிதா (ஜெயலலிதா) ஒரு ஓட்டலில் தங்கியிருக்க, அந்த மேற்கத்திய நடன நிகழ்ச்சி நடத்தும் இளைஞன் தன்னைக்கேலி செய்து விட்டதாக, தன் குருவாகிய ரவியிடம் ஸ்ரீப்ரியா புகார் செய்ய, அதைத்தட்டிக் கேட்கச்செல்லும் இடத்தில் அந்த இளைஞன் தன்னைப்போலவே இருப்பது கண்டு ரவிசங்கர் ஆச்சரியமடைகிறார். அந்த இளைஞனோ இவர் யாரென்று தெரியாமல் போட்டி நடனத்துக்கு அழைக்க, போட்டியில் அந்த இளைஞனை வெல்ல, அப்போது வெளியில் வரும் லலிதாவைக்கண்டு திகைப்பதோடு, அந்த இளைஞன் தன் மகன்தான் என்று அறிய, அனைவரும் ஒன்று சேர்வதோடு படம் நிறைவடைகின்றது.

    படம் முழுவதிலும் ஒருவிதமான சோகம் இழையோடிக்கொண்டே இருப்பது இப்படத்தின் சிறப்பு. எங்கஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி, பட்டிக்காடா பட்டணமா ஆகிய கருப்பு வெள்ளைப் படங்களை எடுத்து பெரும் வெற்றி கண்ட அருண்பிரசாத் மூவீஸார் வண்ணத்தில் எடுத்த படம் இது. நடிகர்திலகத்தை வைத்து அவர்கள் தயாரித்த கடைசிப்படம். இயக்குனர் பி.மாதவன் இயக்கத்தில் நடிகர்திலகம் நடித்த கடைசிப்படமும் இதுவே. இப்படம் சரியாகப்போகததன் விளைவாக நடிகர்திலகத்தைப்பற்றி, பி.மாதவன் சில வார்த்தைகளை வெளியில் விட, அதனால் திரு வி.சி.சண்முகத்துக்கும் இவருக்கும் மனக்கசப்பு ஏற்பட, நடிகர்திலகத்தை விட்டு நிரந்தரமாகப்பிரிந்தார். 1971-ல் படப்பிடிப்பு துவங்கி இவரது இயக்கத்தில் வளர்ந்து வந்த 'சித்ரா பௌர்ணமி' படம் கூட இறுதியில் இவரது உதவியாளர்களான தேவராஜ் - மோகன் இயக்கத்திலேயே முடிக்கப்பட்டு வெளியானது.

    'பாட்டும் பரதமும்' படத்திற்கான பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பள்ளியின் ஆண்டுவிழாவின்போது ஜெயலலிதாவின் அறிமுக நடனத்துக்காக, வாணி ஜெயராம் பாடிய 'மழைக்காலம் வருகின்றது, தேன் மலர்க்கூட்டம் தெரிகின்றது'
    என்ற பாடல். இப்பாடலின்போது உடலமைப்பிலும், உடையமைப்பிலும் கலைச்செல்வி சற்று குண்டாகத்தெரிவார். இந்த நடனத்துக்காக மேடையில் இடுப்பளவு பிரமாண்டமான நடராஜர் சிலை, கண்ணைக்கவரும்.

    இரண்டாவது பாடல், நடிகர்திலகமும் ஜெயலலிதாவும் பாடும் டூயட் பாடல். இதுவரை படம் பிடித்திராத அழகான அவுட்டோரில் எடுக்கப்பட்டிக்கும்.
    'மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
    மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்'
    டி.எம்.எஸ்ஸும், பி.சுசீலாவும் பாடியிருந்தனர். (இப்படியும் கூட பாடல்கள் இருக்கின்றன என்று தொலைக்காட்சிகள் தெரிந்துகொண்டால் நல்லது. 'மயக்கம் என்ன', 'மதன மாளிகையில்' பாடல்களுக்கு நடுவே இவற்றையும் கொஞ்சம் தேடிப்பாருங்கள்).

    மூன்றாவது பாடல், நடிகர்திலகமும், கலைச்செல்வியும் போட்டியிட்டு ஆடும் பாடல்....
    'சிவகாமி ஆடவந்தால் நடராஜன் என்ன செய்வான்
    நடமாடிப்பார்க்கட்டுமே - கண்கள் உறவாடிப் பார்க்கட்டுமே

    தூக்கிய காலை கொஞ்சம் கீழே வைத்தால் இங்கு
    பாக்கியை நான் ஆடுவேன் - அந்த பாக்கியம் நான் காணுவேன்'
    இதுவும் டி.எம்.எஸ்ஸும், சுசீலாவும் பாடிய பாடல்தான். மனதை அள்ளிக்கொண்டு போகும்.

    நான்காவது பாடல், தன்னைவிட்டு மறைந்து போன கதாநாயகியைத்தேடி நடிகர்திலகம் பாடும் 'கற்பனைக்கு மேனி தந்து கால்சலங்கை போட்டுவிட்டேன்' என்ற தொகையறாவோடு துவங்கும்...
    'தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத்தேடு
    தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு'
    என்ற மனதை உருகவைக்கும் பாடல். டி.எம்.எஸ். தனித்துப்பாடியிருப்பார்.
    இப்பாடலின் துவக்கத்தில் இளைஞராக இருக்கும் நடிகர்திலகம், பாட்டினூடே கொஞ்சம் கொஞ்சமாக வயதாகிக்கொண்டே போவார். இதனிடையே கால மாற்றங்களும் காண்பிக்கப்படும். சுகுமாரியின் மரணம், மனோகரின் மரணம் இவற்றை, அவர்களது போட்டோக்களுக்கு மாலை அணிவித்து, காண்பித்துக் கொண்டே போவார்கள்.

    ஐந்தாவது பாடல், இளம்பருவ நினைவுகளோடு இரண்டு மயில்களைப்பார்க்கும் போது, காணாமல் போன காதலியின் நினைவு வாட்ட, அவரது கற்பனையில் இருவரும் மயில்களாகத்தோன்றும்..
    'உலகம் நீயாடும் சோலை
    உறவைத் தாலாட்டும் மாலை'
    இனிய அழகான மெலோடி. பாடலின் இறுதியில் பெண்மயிலை வல்லூறு பறித்துக்கொண்டு செல்லும்போது இயலாமையில் ஆண் மயில் பரிதாபமாகப் பார்ப்பதை நடிகர்திலகம் முகத்தில் காண்பிக்கும்போது நம் விழியோரங்களில் கண்ணீர்.

    (ஏனோ தெரியவில்லை. இப்படத்தில் மணி மணியான பாடல்கள் அமைந்தும் அவை வெளியில் தெரியாமலே போய்விட்டன. மெல்லிசை மன்னரும், அவர்தம் குழுவினரும் இப்படத்தில் உழைத்த உழைப்பு கண்டுகொள்ளாமலே விடப்பட்டது). இவைபோக இரண்டாவது நடிகர்திலகத்துக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் ஓட்டலில் ஒரு பாடலும் உண்டு

    நடிகர்திலகமும், கலைசெல்வியும் ஏற்றிருந்த பாத்திரங்கள் நம் மனதில் பரிதாபத்தை ஏற்படுத்தும் வண்ணம் அழகுற அமைக்கப்பட்டிருந்தன. கூடவே விஜயகுமார், ஸ்ரீப்ரியா, மேஜர் சுந்தர்ராஜன், ஆர்.எஸ்.மனோகர், சுகுமாரி மற்றும் நகைச்சுவை பகுதிக்கு எம்.ஆர்.ஆர்.வாசு, மனோரமா, பகோடா காதர் ஆகியோரும் நடித்திருந்தனர்.

    படம் 1975 டிசம்பர் 6 அன்று வெளியானது. நன்றாக ஓடி பெரும் வெற்றி யடைந்திருக்க வேண்டிய இப்படம், அந்நேரத்தில் நடிகர்திலகத்துக்கு அன்பே ஆருயிரே, டாக்டர் சிவா, வைர நெஞ்சம் போன்ற படங்களால் ஏற்பட்டிருந்த சரிவு நிலை காரணமாகவும், அதைவிட முக்கியமாக பெருந்தலைவர் காமராஜரின் மறைவுக்குப்பின் அரசியலில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் பெரிய வெற்றியைப்பெற முடியாமல் போனது. ஒரு ஆண்டு முன்னர், அல்லது ஓராண்டு கழித்து வெளியாகியிருந்தால் நிச்சயம் பல இடங்களில் நூறு நாட்களைக்கடந்து ஓடி பெரிய வெற்றியடைந்திருக்கும். காரணம், ஒரு வெற்றிப்படத்துக்குரிய அனைத்து அம்சங்களும் நிறைந்த படம் இது.

    'பாட்டும் பரதமும்' திரைப்படம் பற்றிய என்னுடைய கருத்துக்களைப்படித்த அத்தனை அன்பு இதயங்களுக்கும் என் நன்றி.

  12. Likes Russellmai liked this post
  13. #2219
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டும் பரதமும் (கூடுதல் விவரங்கள்)
    'பாட்டும் பரதமும்' பற்றி நண்பர்களின் பின்னூட்டங்கள், அப்படம் வெளியான காலகட்டத்தின் நிகழ்வுகளை விவரிப்பதால், அவை இங்கு தனிப்பதிவாக இடப்பட்டுள்ளன. முதலில் நடிகர்திலகத்தின் தீவிர ரசிகர், அன்புச்சகோதரர் திரு. ராகவேந்தர் அவர்களின் பதிலுரை.....

    அன்புச் சகோதரி சாரதா,என் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்ற உன்னத திரைக்காவியமான பாட்டும் பரதமும் படத்தைப் பற்றிய தங்கள் பதிவு நெஞ்சைத் தொடுகிறது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய My Song is For You என்ற பாடலே நீங்கள் குறிப்பிட்ட ஸ்ரீப்ரியாவுடனான பாடலாகும். பல காட்சிகள் இப்படத்தில் மிக மிக சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக கற்பனைக்கு மேனி தந்து பாடல் அப்போதைய மெல்லிசை மேடைகளில் மிகவும் பிரசித்தம். பல டி.எம்.எஸ். ரசிகர்கள் இப்பாடலை மேடை தவறாமல் பாடியதுண்டு.
    அரசியலால் பாதிக்கப்பட்ட நடிகர் திலகத்தின் படங்களில் இதுவும் ஒன்று. திரையரங்கில் இப்படம் பார்க்க விடாமல் பல இடங்களில் மோதல்கள் நடைபெற்றதுண்டு. இப்படம் வெளியான நேரத்தில் தான் ஒரு விநியோகஸ்தர் நடிகர் திலகத்தை விமர்சித்து சுவரொட்டி வெளியிட்டு பரபரப்பூட்டினார். அது மட்டுமின்றி சாந்தி திரையரங்கிலேயே ரசிகர்களிடையே புகுந்து நடிகர் திலகத்தை தாறுமாறாக விமர்சித்தவர்கள் உண்டு. இந்த நிகழ்ச்சிகளெல்லாம் உள்ளத்தின் அடித்தளத்தில் அப்படியே தங்கி விட்டன. அப்போதும் நான் நடிகர் திலகத்தின் பால் உள்ள பாசமும் பற்றும் மாறாமல் அவரை விட்டுக் கொடு்க்காமல் பேசுவேன். அது மட்டுமன்றி அவர்களிடம் சவாலும் விட்டிருக்கிறேன். உங்களுடைய அரசியலை நம்பி நடிகர் திலகம் இல்லை. அவருடைய படங்களை உங்கள் கட்சியினர் பார்த்துக் கூட இருக்க மாட்டார்கள். சொல்லப் போனால் இனிமேல் தான் அவர் பல சாதனைகளைப் படைக்கப் போகிறார் என்று கூறியிருக்கிறேன் (இவையெல்லாம் உண்மையில் நடந்தது, வெறும் வார்த்தைக்காக கூறியதில்லை.) அதே சாந்தி திரையரங்கில் இன்றும் நாம் கூடுகிறோம். அதே சாந்தியில் இன்றும் நடிகர் திலகத்தின் படம் வெற்றி நடை போட்டிருக்கிறது. ஆனால் அன்று அவரை இழித்தோரும் பழித்தோரும் காணாமல் போயினர். பாட்டும் பரதமும் படம் மட்டுமன்றி அதைத் தொடர்ந்து வந்த உனக்காக நான் படமும் பாதிக்கப் பட்டது. ஆனால் உத்தமன் படம் பெற்ற வெற்றி ஓரளவு மன சாந்தி தந்தது. 1977ல் தீபம் அடைந்த மகத்தான வெற்றி, அதைத் தொடர்ந்து அண்ணன் ஒரு கோயில் மகளிரிடம் பெற்ற அபிமானம், இவையெல்லாம் தாண்டி திரிசூலம் அடைந்த இமாலய வெற்றி என்னுடை கணிப்பை சரியானதாக்கி இன்றளவும் உள்ளத்துள் அந்த சோதனையான நாட்களை எண்ணிப் பார்க்க வைக்கின்றது.

    (இதற்கு நான் அளித்த பதிலுரை)

    சகோதரர் ராகவேந்தர் அவர்களுக்கு....

    'பாட்டும் பரதமும்' ஆய்வுக்கட்டுரைக்கு நீங்கள் அளித்துள்ள பதிலுரையில் பல நிகழ்வுகளைச்சுட்டிக்காட்டி, பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுள்ளீர்கள். அவை என்றென்றும் ரசிகர்கள் நெஞ்சில் மாறாத நினைவுகள் என்பதைவிட ‘ஆறாத வடுக்கள்’ என்பதே பொருத்தம். குறிப்பாக இந்தப்படத்துக்கு எதிராக நடந்த சதிகள் நிறைய. டாக்டர் சிவாவும், வைர நெஞ்சமும் அவர் முடிவெடுக்கும் முன் வெளிவந்து பல நாட்களைக் கடந்து விட்டன. அதுபோல 'உனக்காக நான்' வந்தபோது சூடு சற்று ஆறிப்போய் விட்டிருந்தது. ஆனால் 'பாட்டும் பரதமும்'தான் மிகவும் சிக்கலான தருணத்தில் வெளிவந்து, தாக்குதலில் மாட்டியது. அப்போது அண்ணனுக்கு உறுதுணையாக நின்றது அவரது ரசிகர் கூட்டம்தான். ஆனால் அதிலும் கூட பிளவு ஏற்பட்டிருந்தது.

    தமிழகம் முழுக்க இப்படி சிக்கல் என்றால், திருச்சி - தஞ்சாவூர் விநியோக ஏரியாவில் கூடுதலாக இன்னொரு பிரச்சினை. பிரச்சினை என்பதைவிட சதி, வியாபாரக் காழ்ப்புணர்ச்சி என்பவையே சரியான பதங்களாயிருக்கும்.

    ஏ.வி.எம்.நிறுவனத்தின் பல கிளைகளில் ஒன்று, திருச்சியில் இயங்கி வரும் 'ஏ.வி.எம்.லிமிடட்' என்ற விநியோக நிறுவனம். 'பாட்டும் பரதமும்' பாதித் தயாரிப்பில் இருக்கும்போதே விநியோகஸ்தர்களுக்கான காட்சியைப்பார்த்து விட்டு, அப்படத்தை திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஏரியா உரிமையை வாங்க முயற்சித்தனர். ஆனால் அதைவிட கூடுதல் தொகைக்குக்கேட்ட வேறொரு விநியோகஸ்தருக்கு படம் வழங்கப்பட்டுவிட்டது. இதற்காகவே படம் வெளியாகும் நாளை எதிர்பார்த்து, நடிகர்திலகத்தின் 'தில்லானா மோகனாம்பாள்' படத்திற்கு அந்த ஏரியா உரிமையை A.V.M.Ltd (Trichy) வாங்கி, சுமார் ஏழெட்டு புதிய பிரிண்ட்கள் எடுத்து 'பாட்டும் பரதமும்' படத்தைத் தோற்கடிப்பதற்காக, அதே 1975 டிசம்பர் 6 அன்று திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை ஆகிய நகரங்களில் 'நாட்டியமும் நாதசுரமும்' என்ற தலைப்பை பெரிதாகப்போட்டு அடைப்புக் குறிக்குள் சிறியதாக (தில்லானா மோகனாம்பாள்) என்ற தலைப்பிட்டு பெரிய பெரிய போஸ்ட்டர்கள் அடித்து வெளியிட்டனர். அதுமட்டுமல்லாது திருச்சி 'தினத்தந்தி' பதிப்பிலும், கடைசி பக்கத்தில் முழுப்பக்க 'பாட்டும் பரதமும்' விளம்பரம் வெளியிடப்பட, அதே இதழில் முதற்பக்கத்தில் கால் பக்க விளம்பர மாக, நடிகர்திலகம் நாதசுரம் வாசிக்க, பத்மினி நாட்டியமாடும் போஸுடன், இன்றுமுதல் 'நாட்டியமும் நாதசுரமும்' என்ற தலைப்பிட்டு விளம்பரம் செய்திருந்தனர். அதாவது, புதியபடத்தின் விநியோக உரிமை கிடைக்கவில்லை என்பதற்காக, நடிகர்திலகத்தின் கையை எடுத்தே அவர் கண்ணைக் குத்தினார்கள். அதிலும் பெரிய கொடுமை, பட்டுக்கோட்டையில் 'தில்லானா' படம் திரையிடப்பட்ட 'நீலா' திரையரங்கின் உரிமையாளர் ஒரு காங்கிரஸ் காரராம். (பாட்டும் பரதமும் 'முருகையா' என்ற தியேட்டரில் வெளியானதாம்).

    அதுபோக தமிழகம் முழுவதும் இப்படம் ஓடிய அரங்கின் முன் பா.ராமச்சந்திரன் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸார் கூடி நின்று, 'படம் டப்பா, போகாதீர்கள்' என்று படம் பார்க்க வந்த பொதுமக்களை திசை திருப்பிவிட்டனர். காங்கிரஸ் இணைப்பு மாநாட்டுக்கு முன் எமர்ஜென்ஸியில் தமிழகத்தில் தி.மு.க.ஆட்சி கலைக்கப் பட்டிருந்ததால், அவர்களின் எதிர்ப்பும் நடிகர் திலகத்துக்கு எதிராக அமைந்தது. எதிர்வாதத்தில் ஈடுபட்ட நடிகர் திலகத்தின் ரசிகர்களை அடித்து விரட்டினர். எந்தவித சப்போர்ட்டும் இல்லாத ரசிகர்கள் அடிதாங்க முடியாமல் விரண்டோடினர். சென்னையில் மட்டுமல்ல, மதுரை சினிப்ரியா அரங்கின் முன்னும் தினமும் இதே கலாட்டா நீடித்ததாம். (முரளியண்ணா விவரிப்பார் என்று நம்புகிறேன்). ஆனால் மதுரையில் ரசிகர்படை சற்று பலமானது என்பதால் எதிர்ப்பு அவ்வளவாக எடுபடவில்லை. இருப்பினும் கலாட்டாவுக்குப் பயந்த மக்கள் இப்படம் ஓடிய தியேட்டர்களுக்கு வருவதைத் தவிர்க்கத்துவங்கினர். எதிர்ப்பாளர்களின் எண்ணம் பெருமளவு நிறைவேறியது.

    அந்த நேரத்தில் இப்பட வெளியீட்டைத் தவிர்த்திருந்தால் படம் நிச்சயம் பெரிய வெற்றியடைந்திருக்கும். அதற்கான அனைத்து அம்சங்களும் படத்தில் உள்ளன. இப்படத்துக்காக நடன மேதை கோபிகிருஷ்ணாவிடம் நடிகர்திலகம் குறுகிய காலம் பிரத்தியேகமாக நடனம் கற்றுக்கொண்டார் என்பது கூடுதல் தகவல்.

    நடிகர்திலகத்தின் மற்றொரு தீவிர ரசிகரும் நம் அன்புச் சகோதரருமான மதுரை திரு. முரளி சீனிவாஸ் அவர்கள் அளித்த பதிலுரையில் காணக்கிடக்கும் மேற்கொண்ட தகவல்கள்....

    சாரதா,
    பாட்டும் பரதமும் படத்தை அழகாக எழுதியிருகிறீர்கள். அது உங்களுக்கு கை வந்த கலை. முதல் நாட்டியத்தை பார்க்க வரும் நடிகர் திலகம் அருகில் அமர்ந்திருக்கும் விஜயகுமாரிடம் சொல்லும் வசனம் எனக்கு பிடித்த இடங்களில் ஒன்று. அண்மையில் கூட அந்த வசனத்தை ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.
    பாடல்கள் தேனாறு என்றால் மிகையாகாது. எங்கள் வீட்டில் இந்த படத்தின் எல்.பி. ரெகார்ட் வாங்கி போட்டுக் கேட்டுக் கொண்டே இருந்த நினைவுகள் எல்லாம் இன்றும் பசுமையாக இருக்கின்றன. மாந்தோரண வீதியில் பாடல் கவியரசு கொஞ்சம் இலக்கியமாகவே எழுதியிருப்பார். அதாவது அவரது எளிய நடையை விட்டு விட்டு,உறவு நிலையை கவிஞர் விளக்கும் இரண்டாவது சரணம் இலக்கியம் பேசும்.
    ஆதித்யன் மேனியை மேகங்கள் மூட
    ஆனந்த பூந்தென்றல் மோகனம் பாட
    வசந்தத்தில் பாற்குடம் ஊர்வலம் போக
    வந்து விட்டேன் கண்ணா மணமகளாக
    தெய்வத்தின் தேரெடுத்து தேவியை தேடு பாடல் டி.எம்.எஸ் அற்புதம் காட்டியிருப்பார். அதிலும் அவர் ஹை பிட்சில் போகும்
    ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
    அவள் இல்லையென்றால் நான் வெறும் கூடு
    பாவைக்கு போட்டு வைத்தேன் நான் ஒரு கோடு
    பாடி பறந்ததம்மா இளங்குயில் பேடு
    அப்படியே சிலிர்க்க வைக்கும். கவியரசுவின் தமிழ் விளையாட்டையும் ["மாமழை மேகமொன்று கண்களில் இருப்பு"] இந்த பாடலில் தரிசிக்கலாம்.
    இனி அரசியல் உள்ளே புகுந்த கதை. நீங்கள் சொன்ன நாட்டியமும் நாதஸ்வரமும் எனக்கு புதிய செய்தி. ஆக, தயாரிப்பாளர் விநியோகஸ்தர்களே படத்திற்கு எதிராக செயல்பட்டிருக்கின்றனர்.
    பெருந்தலைவர் மறைந்து இரண்டு மாதங்களே ஆன சூழ்நிலையில் படம் வெளி வந்தது என்றாலும் கூட அந்நேரத்தில் நடிகர் திலகம் தன் அரசியல் முடிவை அறிவிக்கவில்லை. நடிகர் திலகம் இந்திரா காங்கிரஸில் சேரப் போகிறார் என்றும் இல்லையென்றும் செய்திகள் வந்து கொண்டிருந்த நேரம். [அதற்குள் சென்னையில் போஸ்டர் அடித்த செய்திகள் ஆச்சரியமளிக்கின்றன].
    பெரும்பான்மையான ரசிகர்களுக்கு நடிகர் திலகம் ஸ்தாபன காங்கிரஸில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதே அவா. இந்த நேரத்தில் அன்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த பா.ரா. மற்றும் குமரி அனந்தன், தண்டாயுதபாணி போன்றார் ஸ்தாபன காங்கிரஸ் தன் நிலையில் தொடர வேண்டும் என்று நினைத்த போது, நெடுமாறன், தஞ்சை ராமமூர்த்தி, குடந்தை ராமலிங்கம் போன்றவர்கள் இந்திரா காங்கிரஸில் சேர வேண்டும் என்று பிரசாரம் செய்துக் கொண்டிருந்தனர். தங்களுக்கு சாதகமாக இருப்பதற்காக குமரி மாவட்டத்தை சேர்ந்த மகாதேவன் பிள்ளையை தலைவர் போலக் கொண்டு வந்தனர் [இணைப்பு நடந்த பிறகு இவர் கழட்டி விடப்பட்டது வேறு விஷயம்].
    இந்நிலையில் வேறு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். நெடுமாறன் அந்த காலக்கட்டத்தில் தினசரி என்று ஒரு நாளிதழ் நடத்திக் கொண்டிருந்தார். ஏனோ தெரியவில்லை நெடுமாறனுக்கு நடிகர் திலகத்தின் மீதும் அவரது ரசிகர் மன்றத்தின் மீதும் கோவம். அவர்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும் அது கூடாது என்றும் கட்டுரைகள் எழுதினார். இவருக்கு ஒத்து ஊதினார் தஞ்சை ராமமூர்த்தி. இது நடப்பது 1975-ம் ஆண்டு ஜனவரியில். அந்நேரம் நடிகர் திலகம் மொரிஷியஸ் தீவுகளுக்கு சென்றிருந்தார். ரசிகர்கள் கொந்தளித்து பதில் அறிக்கை கொடுக்க காங்கிரசிலும் ஒரு 1972 புரட்சி ஏற்படுமோ என்று யூகங்கள்கிடையில் நடிகர் திலகம் திரும்பி வந்தவுடன் பெருந்தலைவரை சந்திக்க சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுபுள்ளி விழுந்தது. [இன்னும் சொல்லப் போனால் 1972 -ம் ஆண்டு அக்டோபரில் மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கூட நடிகர் திலகமும் ரசிகர்களும் ஓரம் கட்டப்பட்டது நெடுமாறனால்தான் என்ற குற்றசாட்டு கூட உண்டு].
    இப்போது மீண்டும் 1975 நவம்பர், டிசம்பருக்கு வருவோம். நடிகர் திலகத்தை தாக்கி எழுதிய நெடுமாறன் தன் செய்தி தினசரியில் அவரை உயர்த்தி எழுத ஆரம்பித்தனர். பல இடங்களிலும் நடிகர் திலகத்தின் மன்றங்கள் இந்திரா காங்கிரஸில் சேருவதாக தீர்மானங்கள் நிறைவேற்றுவதாகவும் இவர்களே செய்திகள் வெளியிட ஆரம்பித்தார்கள். இதற்கும் ஒரு படி மேலே போய் கேள்வி பதில் பகுதியில் ஒரு ரசிகர் கேள்வி கேட்டதை வெளியிட்டார்கள். எப்படி என்றால்
    கேள்வி: நடிகர் திலகம் இந்திரா காங்கிரஸில் சேர விரும்புகிறாரா?
    பதில்: சேர விரும்புவது மட்டுமல்ல, அதுதான் நாட்டிற்கு நன்மை பயக்கும் என உளமார நம்புகிறார்.
    எந்த நெடுமாறன் நடிகர் திலகத்தை வசை பாடினாரோ அந்த நெடுமாறன் பேச்சை கேட்டு நடிகர் திலகம் நடக்கிறார் என்பதே ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. நடிகர் திலகமும் வாயே திறக்கவில்லை. பேசிய ஒரு கூட்டத்தில் [அன்று அவசர நிலை அமலில் இருந்ததால் பொதுக் கூட்டங்கள் கிடையாது. ஏதோ கல்யாணம் அல்லது ஊழியர் கூட்டம் என நினைவு] ஸ்தாபன காங்கிரஸில் தொடர்ந்து நீடிக்க போவது போல பேசினார்.
    இந்த நேரத்தில் சபரி மலை செல்வதற்காக மாலை போட்டிருந்த அவர் கொல்லம் எக்ஸ்ப்ரஸில் மதுரை வழியாக வந்த போது வெள்ளமென ரசிகர் கூட்டம் அவரை ரயில்வே நிலையத்தில் சந்தித்து தங்கள் உள்ளக்குமுறலை சொன்ன போது உங்கள் விருப்பத்திற்கு மாறாக எந்த முடிவையும் எடுக்க மாட்டேன் என்று உறுதி கூறினார். கூடியிருந்த பத்திரிக்கையாளர்களிடமும் இதையே சொன்னார். அந்த நேரத்தில் ரசிகர்களில் ஒரு பிரிவினர் நடிகர் திலகம் எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு அவர் வழி நடப்பதாக ரத்தக் கையெழுத்து இட்டு மனுக் கொடுத்தனர்.
    இவையெல்லாம் பாட்டும் பரதமும் வருவதற்கு ஒரு பத்து நாட்கள் முன்பு நடந்தது. ஆனால் சபரி மலை சென்று விட்டு வந்த பிறகு அவர் எதுவுமே சொல்லவில்லை என்பதுடன் செய்தி நாளிதழில் வெளியான செய்திகளுக்கு மறுப்பும் கொடுக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு மிகுந்த கோபத்தை கொடுத்தது. அதுவே படம் வெளியான போது அதற்கு வினையாக மாறியது. படம் வெளியான 15 நாட்களில் படப்பிடிப்பில் அவருக்கு காலில் அடிப்பட்டு விட்டது. வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அந்நேரம் [டிசம்பர் கடைசி] டெல்லியிலிருந்து இந்திராவின் சிறப்பு தூதுவராக வந்த மரகதம் சந்திரசேகர் அவர்கள் அன்னை இல்லத்திற்கு தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் விஜயம் செய்து நடிகர் திலகத்தையும், வி.சி.சண்முகம் அவர்களையும் மூளை சலவை செய்து சம்மதிக்க வைத்தார். இவர் வந்ததும் பேசியதும் வெளியில் வராமல் பாதுகாக்கப்பட்டன.[எமர்ஜென்சி வேறு]. தன்னோடு நடிகர் திலகத்தையும் டெல்லி அழைத்து சென்ற மரகதம்மாள் ஜனவரி 1 அன்று இந்திராவிடம் அழைத்து செல்கிறார். அந்த சந்திப்பும் புகைப் படமும் வெளி வரும் போதுதான் அனைவருக்கும் நிலவரம் புரிகிறது. ஏற்கனவே நொண்டிக் கொண்டிருந்த பாட்டும் பரதமும் படம் ரசிகர்களால் அடியோடு கைவிடப் படுகிறது

    ஆனால் பெருந்தலைவரின் மீதும் ஸ்தாபன காங்கிரஸ் மீதும் பெறும் பற்றுக் கொண்ட ரசிகர்கள் தங்களுக்கு படத்தை விட கொள்கையே முக்கியம் என்று முடிவெடுக்க படம் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஒரு ஒன்பது வாரப் படமாக மாறிப் போனது.

    (முரளியண்ணாவின் பதிவுக்கு நான் (சாரதா) அளித்த பதிலுரை)

    தாங்கள் சொல்லும் வரலாற்று நிகழ்வுகள் அசர வைக்கின்றன. மதுரையில் நெடுமாறன் எப்போதுமே நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு எதிராக செயல் பட்டவர். இந்த விஷயத்தில் மட்டும் அவர் தன் நிலையை நியாயப்படுத்திக் கொள்ள நடிகர்திலகத்தை பகடையாக உபயோகப்படுத்தியிருக்கிறார். (அதே நேரம்தான் மதுரை முத்து, தி.மு.கவில் இருந்து அ.தி.மு.க.வுக்கு மாறினார்). மதுரையில் பெரிய அளவில் கலாட்டாக்கள் நடைபெறவில்லை என்ற போதிலும் வரிசையில் நின்ற ரசிகர்கள் மத்தியிலேயே, படம் பார்க்க வந்தவர்கள் போல பேச்சை ஆரம்பித்து, நடிகர்திலகத்தின் மீது வசை பாடத் துவங்கி, அவை கலாட்டாக்களில் முடிந்துள்ளன. போதாக்குறைக்கு, ஸ்தாபன காங்கிரஸின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவரான நெல்லை ஜெபமணி மதுரையில் பேசும்போது, 'இன்னும் அந்தப்படம் (பாட்டும் பரதமும்) தியேட்டரில் ஓடிக்கொண்டிருப்பது ஸ்தாபன காங்கிரஸ்காரர்களின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது" என்று பேசி வன்முறையைத் தூண்டி விட்டுள்ளார். (அதே ஸ்தாபன காங்கிரஸின் வளர்ச்சிக்காகத்தான் நடிகர்திலகம் காலமெல்லாம் பாடுபட்டார் என்ற நன்றியை மறந்தனர்).

  14. #2220
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கண்ணதாசன்.



    குறுகிய கால அரசியல் வேறுபாடுகளால் சிறிது காலம் பிரிந்திருந்த நண்பர்கள் (1954-1959) அதற்கு முன்பும்,பிறகும் பிரிந்து நின்றதேயில்லை. வேறுபாடுகளும் கொண்டதில்லை.சிவாஜி-கண்ணதாசன் உறவு அப்படி பட்டது.சிவாஜியின் பெருந்தன்மை பாகபிரிவினை படத்தில் அவர்களை மீண்டும் சேர்த்தது.



    அவருடைய புத்தகம் ஒன்றில் கண்ணதாசன் குறிப்பிடுவது. தன்னம்பிக்கை ,திறமை இவை மட்டுமே துணையாக கொண்டு, எதிர்ப்பிலேயே வளர்ந்தவர் சிவாஜி .



    அதே போல பல மேடைகளில்,பல முறை சிவாஜி புகழ் பாடி கொண்டே இருந்தார். இது உண்மை புகழ்ச்சி. பணம்,பதவி கொடுத்து வாங்க பட்ட பொய்மையல்ல.



    சிவாஜியை வைத்து ரத்த திலகம்,லட்சுமி கல்யாணம் படங்களை தயாரித்துள்ளார்.



    திரிசூலம் பட வெற்றி விழாவிற்கு ,ஷீல்ட் வாங்க நேரம் கழித்து வந்த கண்ணதாசனை ,செல்லமாக சிவாஜி வாய்யா லேட் கவிஞரே என்று கிண்டல் பண்ணினார்.



    அவர் உண்மையான லேட் கவிஞராகி இன்றோடு 32 வருடங்கள் நிறைவெய்துகிறது.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •