Page 159 of 400 FirstFirst ... 59109149157158159160161169209259 ... LastLast
Results 1,581 to 1,590 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #1581
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Recap of Saradha Madam old post

    அன்னமிட்ட கைகளுக்கு
    "அன்னமிட்ட கைகளுக்கு...." (இரு மலர்கள்)

    'மெல்லிசை மன்னரின்' இனிய இசையில் விளைந்த எத்தனையோ அற்புதப் படைப்புகளில் ஒன்றுதான் "இரு மலர்கள்". பாடல்கள் அத்தனையும் இனிமை. அவற்றில் அதிகம் பேசப்படாத ஒன்றைத்தான் இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    உயிருக்குயிராய் காதலித்த காதலி, காரணமே சொல்லாமல் காணாமல் போய் விட, தனக்காகவே காத்திருந்தவளை மணமுடித்து அமைதியாய் வாழ்ந்திருந்த நேரத்தில், பழைய காதலி மீண்டும் தோன்றுகிறாள். அதுவும் தன்னுடைய மகளுக்கே ஆசிரியையாக. தர்ம சங்கடத்தில் கதாநாயகனும் அவனது முன்னாள் காதலியும்.

    திரும்பி நிற்பவள் முன்னாள் காதலி என்ற நினைப்பில் பழைய கதைகளை கணவன் கொட்டிவிட, கேட்டுக்கொண்டிருந்த மனைவிக்கு மாபெரும் அதிர்ச்சி, கணவனின் மனதில் இப்படி ஒரு காயமா என்று. முடிவு...?. கணவனின் நிம்மதியையே பெரிதாக நினைத்த அந்த பேதைப்பெண், (உண்மையில் கணவனின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல்) அவர்களுக்கு இடைஞ்சலாக இல்லாமல் விலகிப்போகும் முடிவெடுக்கிறாள்.

    ஆனால் குழந்தை..?. அவளைப்பிரிய மனமின்றி ஆனாலும் வேறு வழியின்றி அவளைத் தூங்க வைத்து விட்டு வீட்டை விட்டு சென்று விடும் முடிவில் தான் இந்த அருமையான பாடல்.

    கதாநாயகனாக 'நடிகர் திலகம்', முன்னாள் காதலியாக 'நாட்டியப்பேரொளி', மனைவியாக 'புன்னகை அரசி'. போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். மெல்லிசை மன்னரின் இனிய இசையில் வாலியின் பாடல்களில் சப்தமெல்லாம் பூப்பூத்தது.

    இப்படத்தின் மற்ற பாடல்களான 'மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்' மற்றும் 'மன்னிக்க வேண்டுகிறேன்' ஆகிய பாடல்கள் களத்தின் ஜாம்பவான்களால் ஏற்கெனவே அருமையாக அலசப்பட்டு விட்டது.

    'இசையரசி' பி.சுசீலா தனக்குப்போட்டியின்றி தன்னாட்சி செய்து வந்த காலம் அது. எல்.ஆர்.ஈஸ்வரி என்ற அருமையான பாடகி, கவர்ச்சிப்பாடல்களுக்கும் இரண்டாம் நிலை கதாநாயகிகளுக்கும் மட்டுமே என்ற, தமிழ்த்திரைப்படத்தின் (கொடுமையான) எழுதப்படாத விதியினால் ஒதுக்கி வைக்கப்பட, இன்னொரு இசைக்குயில் எஸ்.ஜானகி எப்போதாவது அத்தி பூத்தாற்போல் மட்டுமே பாட அழைக்கப்பட, ஜமுனாராணியும் ஜிக்கியும் முழுதுமாக ஓரம் கட்டப்பட்டிருக்க, வாணி ஜெயராம் அப்போது அறிமுகமே ஆகாமல் இருக்க....... எந்தப்பக்கம் திரும்பினாலும் சுசீலா அம்மாவின் குரலே ஒலித்துக்கொண்டிருக்க, அவரது எல்லாப்பாடல்களுமே நல்லதாக இருந்ததால், நல்லவற்றில் மிக நல்லதாக தேர்ந்தெடுத்து வானொலிகள் ஒலிபரப்ப.......
    .............நல்ல பாடலான இப்பாடல் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.

    அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
    உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
    உள்ளமில்லை மகளே
    தாய்வழி நீ நடக்க தந்தை வழி பேரெடுக்க
    நான் அதைப்பார்த்திருக்க நேரமில்லை மகளே
    நான் அதைப்பார்த்திருக்க நேரமில்லை மகளே
    நேரமில்லை மகளே

    கைவிளக்கை ஏற்றிவைத்தேன் கோயிலுக்காக
    என் தெய்வத்தின்மேல் எனக்கிருக்கும் காதலுக்காக
    வாழ்ந்திருந்தேன் அன்பு என்றும் வளர்வதற்காக
    ஒருதாய் வருவாள் மகளே உன் காவலுக்காக
    தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக

    அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
    உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
    உள்ளமில்லை மகளே

    தாய்க்குலத்தின் மேன்மையெல்லாம் நீசொல்ல வேண்டும்
    என் தலைமகளே உன் பெருமை ஊர்சொல்ல வேண்டும்
    நல்லவர்கள் வாழ்த்துரைக்கும் நாள் வரவேண்டும்
    அதை கண்குளிர காண்பதற்கு நான் வர வேண்டும்
    கண்குளிர காண்பதற்கு நான் வர வேண்டும் .

    அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
    உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
    உள்ளமில்லை மகளே

    தான் பெற்று வளர்த்த குழந்தையைப் பிரிந்து போகிறோமே என்ற ஏக்கம் நெஞ்சைப் பிழிந்தெடுக்க சோகமே உருவாய் கே.ஆர்.விஜயா (சொல்லணுமா, அவருக்கு இந்த மாதிரி ரோல்கள் அல்வா சாப்பிடுவது போல), தன்னுடைய அம்மா எதைப்பற்றிப் பாடுகிறாள் என்று புரியாமல் கட்டிலில் கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டு விழியோரங்களில் கண்ணிருடன் ரோஜாரமணி. (இது குறித்து ரோஜாரமணியுடன் (தற்போது நடிகர் தருணின் அம்மா) சமீபத்தில் 'காமராஜர் அரங்கில்' நான் உரையாடியதை அடுத்த முறை விவரமாகத் தருகிறேன்).

    எப்போது பார்த்தாலும் கண்களில் நீரை வரவழைக்கும் பாடல் இது. எனக்குப்பிடித்த சுசீலா அம்மாவின் மிக நீண்ட பாடல் பட்டியலில் இதுவும் உண்டு.

    Enjoy audio here (song no: 61)
    http://psusheela.org/tam/audio.php?offset=60&ord=song

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1582
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Recap of Saradha Madam Post


    சிவாஜி பற்றி ஸ்ரீதர்
    எனது பதிவுகளைப் படித்து, தங்களது மேலான பின்னூட்டங்களையும், பதிவுகள் சம்மந்தமான கூடுதல் விவரங்களையும் பதித்து வரும் அனைத்து நல் இதயங்களுக்கும் என் நன்றி.

    (முன்பு இதே தளத்தில் பதிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களுக்காக நீக்கப்பட்டிருந்த இப்பதிவு மீண்டும் இடம் பெறுகிறது. ஏற்கெனவே படித்தவர்களுக்கு பழையது, படிக்காதோருக்கு புதியது)

    தமிழ் சினிமா இதழ்களில் முதன்மை வாய்ந்த 'பொம்மை' மாத இதழில் திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் முன்னொருமுறை தன் மனம் திறந்த கருத்துக்களைக் கூறியிருந்தார். அவற்றுள் நடிகர்திலகம் சிவாஜி அவர்களைப்பற்றி தெரிவித்திருந்த கருத்துக்கள் ம்னதைக் கவர்ந்ததால், அப்பகுதி மட்டும் இங்கு இடம் பெறுகிறது. அதே கட்டுரையில் இயக்குனர் ஸ்ரீதர் தனது 'தேன் நிலவு' திரைப்படத்தை காஷ்மீரில் படமாக்க பட்ட கஷ்ட்டங்கள் பற்றிக்கூறியிருந்தது அடுத்த பதிவாக இடம் பெறுகிறது.

    ”எனக்கும் தேவசேனாவுக்கும் திருமணம் நடந்தபோது அதில் சிவாஜி கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. அதற்குக் காரணம் அப்போது (1963) அவர் 'கர்ணன்' படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூரில் இருந்தார். ஆனாலும் தன் குடும்பத்தினர் அனைவரையும் கலந்துகொள்ளச்செய்தார். திருமணச்சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது ஜெய்ப்பூரில் இருந்து ட்ரங்கால், சிவாஜி பேசுகிறார் என்றார்கள். உடனே போனை வாங்கிப்பேசினேன். மறுமுனையில் சிவாஜி எனக்கு மனதார வாழ்த்துச்சொன்னார். அத்துடன் 'நம்ம வீட்டிலிருந்து எல்லோரையும் வரச்சொல்லியிருந்தேனே, வந்திருக்காங்களா?' என்றுகேட்டார். சற்று முன்னர்தான் வி.சி.ஷண்முகம் எனக்கு கைகுலுக்கி வாழ்த்துச் சொல்லியிருந்தது நினைவுக்கு வர, 'ஆமாண்ணே, வந்திருக்காங்க' என்றேன். 'உன் கல்யாணத்தில் கலந்துகொள்ள கமலாவுக்கும் ரொம்ப ஆசை. ஆனா நான் இங்கே அழைச்சிக்கிட்டு வந்திட்டேனே' என்றார். சில நாள் கழித்து அவர் ஜெய்ப்பூரில் இருந்து திரும்பி வந்ததும், அவரது இல்லத்தில் எங்கள் இருவரையும் அழைத்து பெரிய விருந்து கொடுத்தார். புறப்படும்போது கமலா அம்மா ஒரு தங்கச்சங்கிலியை என் மனைவிக்கு அணிவித்தபோது, சிவாஜி 'இதோ பாரும்மா, இதுவும் உனக்கு ஒரு மாமியார் வீடுதான். நீ எப்போ வேணும்னாலும் வரலாம் போகலாம்' என்றவர் என்னைப்பார்த்து, 'இதோ பாரு, இதுவரைக்கும் சதா ஸ்டுடியோ விலேயும் சித்ராலயா ஆஃபீஸ்லேயும் பழியா கிடப்பே. இனிமேலாவது ராத்திரியில் நேரத்கோடு வீட்டுக்கு வந்துசேர். அதுமட்டுமில்லே, காலேஜில படிச்சிக்கிட்டு இருந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டே. அதுக்காக அந்தப்பொண்ணோட படிப்பை நிறுத்திடாதே. தொடர்ந்து படிக்கட்டும்' என்று அட்வைஸ் பண்ணினார். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நல்லா படிக்கணும்ங்கிறது அவர் எண்ணம். அந்த நேரத்தில் அவரோடு விடிவெள்ளி படம் பண்ணியபிறகு படம் எதுவும் பண்ணவில்லை. மற்றவர்களோடுதான் படம் பண்ணிக்கொண்டிருந்தேன்.

    ('காதலிக்க நேரமில்லை... காதலிப்பார் யாருமில்லை....')

    'காதலிக்க நேரமில்லை' படம் பார்த்துவிட்டு சிவாஜி உடனே போன் செய்து பாராட்டினார். 'உன் பேரைச் சொன்னாலே 'அழுமூஞ்சி டைரக்டர்' என்று சொன்னவர்கள் முகத்தில் கரி பூசுகிறமாதிரி படத்தை அருமையா எடுத்திருக்கே. எனக்கும் கூட அது மாதிரி ஒரு பேர் இருக்கு. அதை உடைக்கிற மாதிரி என்னையும் வச்சு ஒரு காமெடி படம் பண்ணேன். சண்முகம் கிட்டே சொல்லி டேட்ஸ் தரச்சொல்றேன்' என்றார். 'அண்ணே, 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற ஒரு காமெடி ஸ்க்ரிப்ட் யோசனை பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்' என்றேன். ஆனால் இடையில் வெண்ணிற ஆடையில் நான் பிஸியாக இருந்ததால், உடனடியாக அவரோடு படம் பண்ண முடியவில்லை. இடையிடையே செட்டில் சந்திக்கும் போதெல்லாம் அதைப்பற்றிக் கேட்பார். 'அண்ணே அந்த ஸ்க்ரிப்டை உங்களுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். பண்ணினால் அதை உங்கள வச்சுதான் பண்ணுவேன். இப்போ நாம ரெண்டுபேருமே பிஸி. கொஞ்சம் பொறுங்கள் பண்ணிடுவோம்' என்றேன். சொன்ன மாதிரியே அந்தக்கதையை அவரை வச்சு பண்ணினேன். கோவை செழியன்தான் தயாரிப்பாளர். 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்ற அந்தக்கதைதான் 'ஊட்டி வரை உறவு' என்ற பெயரோடு படமாக வெளியாகி சக்கைபோடு போட்டது.

    ('பூமாலையில்... ஓர் மல்லிகை...')
    சில பல காரணங்களால் நான் அவரை வைத்து தயாரித்து இயக்கி வந்த ஹீரோ 72' படம் வெளியாவது தள்ளிப் போய்க்கொண்டிருந்தபோதிலும், (பின்னாளில் இப்படம் 'வைர நெஞ்சம்' என்ற பெயர் மாற்றப்பட்டு வெளியானது) எங்களுக்கிடையில் இருந்த நட்பில் விரிசல் விழுந்ததில்லை. 'உரிமைக்குரல்' பட பூஜைக்காக சிவாஜியை சென்று அழைத்தேன். 'பூஜையை சத்யா ஸ்டுடியோவில் வச்சிருக்கே. அண்ணன் (MGR) ஸ்டுடியோ ஆரம்பிச்சு இதுவரைக்கும் ஒருநாள் கூட என்னை அங்கே கூப்பிட்டதில்லை. அப்படியிருக்க இப்போ நான் எப்படி வரமுடியும் சொல்லு. ஆனா, வராவிட்டாலும் என்னுடைய வாழ்த்துக்கள் உனக்கு நிச்சயம் உண்டு' என்று வாழ்த்தினார்”.

    இவ்வாறு இயக்குனர் ஸ்ரீதர் கூறியிருந்தார். (என்ன காரணத்தாலோ நடிகர்திலகத்தை வைத்து அவர் இயக்கிய நெஞ்சிருக்கும் வரை, சிவந்த மண் படங்களைப்பற்றி எதுவும் கூறவில்லை. சொல்ல மறந்துவிட்டாரா அல்லது வேண்டுமென்றே தவிர்த்து விட்டாரா என்பது தெரியவில்லை).

  5. Likes Russellmai liked this post
  6. #1583
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு(சித்தூர்),

    எங்காத்துகாரரும் கச்சேரிக்கு போறார் என்ற ரீதியிலேயே திரிக்கு வந்து போய் கொண்டிருந்தால் எப்படி?ஒரே வீடியோ,cut paste ,re -cap என்று.
    நான்,கார்த்திக்,முரளி,சாரதி ,வாசு(ஒரிஜினல்),ராகவேந்தர் போட்ட பதிவுகளை பார்த்து நமது எதிரணியினர் கூட ஓரளவு தேறி வருகிறார்கள். இங்கு ஸ்க்ரீன் பக்கத்தில் ஈ,,கொசு,எறும்புகள் ஒட்டியிருந்தாலும் ,எங்கள் பதிவுகளை பார்த்து மூன்றறிவாவது பெற்றிருக்குமே?
    நீங்கள் தயவு செய்து ,ஏதாவது சொந்தமாக எழுதுங்கள். எப்படியிருந்தாலும் ரசிக்க காத்திருக்கிறோம். உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.ஆவணங்களாவது ,புகைபடங்களாவது,வாட்டர்மார்க் இல்லாததாக போடுங்களேன்,ப்ளீஸ்.

    நாங்களே முகமற்று இருக்கும் போது ஞான ஒளி போஸ் வேறு!!!???
    Last edited by Gopal.s; 14th September 2014 at 12:57 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #1584
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Gopal,

    Moved your post to Current Affairs section where there is a thread called Women and I feel what you had written would be appropriate there and not here.

    Also fail to understand why such unrelated topics are being brought here to NT thread when there is space for anything under the sun is available in this Hub!

    Regards
    Last edited by Murali Srinivas; 14th September 2014 at 03:13 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #1585
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்திருப்பினும் திராவிட இயக்கங்களால் 'பேரறிஞர்' என்று பெருமைப்படுத்தப்பட்ட 'அண்ணா' என்று பேரன்பின்
    அடையாளமிடப்பட்ட பெருந்தகையாளர் கட்சிகள் காட்சிகள் மாறினாலும் 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று எம் நடிகவேந்தரை மனந்திறந்து வாழ்த்திய 'மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்' கொள்கைப் பண்பாளர் திரு அண்ணாதுரை அவர்களின் பிறந்த தினத்தில் (SEP 15) அன்னாரை நினைவுகூர்வோம்



    மூக்குப்பொடி போடுகின்ற மூளை உள்ள மனிதருக்கு (அறிஞர் அண்ணாவை சிலாகிக்கிறார் நடிகர்திலகம்) வேண்டும் இந்த கைக்குட்டை....
    Last edited by sivajisenthil; 14th September 2014 at 07:25 PM.

  9. Likes Russellmai liked this post
  10. #1586
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    http://i1369.photobucket.com/albums/...ps73cfb1a5.jpg


    கலைக்கடவுள் சிவாஜி என் தெய்வம்.

  11. #1587
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  12. Likes eehaiupehazij liked this post
  13. #1588
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    நடிகர் திலகம் ரசிகர்கள் பங்குபெற்ற நீயா நானா அடுத்தவாரம் 21-ம் தியதி ஒளிபரப்பாகிறது

  14. Thanks Harrietlgy, Russellmai, Gopal.s thanked for this post
    Likes Gopal.s liked this post
  15. #1589
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அண்ணா -

    [/



    திராவிட இயக்கங்களின் அறிவு முகம். பேராசை கொண்ட பாமரர்களை கட்டுக்குள் வைத்து ,நியாயமான ஆட்சியை தர முயன்ற வெளிப்படையான ,நல்ல நிர்வாகி.



    ஆட்சி கைக்கு வந்தால்தான் ,நினைத்ததை சாதிக்கலாம்,என்று பெரியாரிடம் முரண் பட்டு வெளியேறியது, ஆட்சிக்கு வந்ததும் அவர் கனவுகளை நிறைவேற்ற தலை பட்டது ,என்று நான் மதிக்கும் தலைவர்களில் ஒருவர்.



    ஒரு காலகட்டத்தில்,விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேச மூர்த்தி என்ற பாய்ஸ் கம்பெனி சிறுவனை அரவணைத்து,ஆதரவு தந்து, சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜியாக்கி,"பெரியாரால்", சிவாஜி பட்டம் பெற்று சிவாஜி கணேசன் ஆகி, பராசக்தியில் தடங்கல்கள் வந்த போது , கணேசனுக்கு தோள் கொடுத்து நின்ற "God "father . சிவாஜிக்கு இந்திய "Marlon Brando "பட்டம் வழங்கியவர். எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தி இறுதி வரை சிவாஜி ரசிகராக தொடர்ந்தவர்.(ஒரு படம் விட்டதில்லையாம்).125 வது பட விழாவில் ,அவர் சிவாஜியை பற்றி பேசியது பொன்னெழுத்துக்களில் பொரிக்க பட வேண்டியவை.



    நடிகர்திலகம்,படிப்பறிவும்,கலையறிவும் ,இலக்கிய அறிவும்,மொழி பற்றும்,நன்றியுணர்ச்சியும் அற்ற காங்கிரஸ் கும்பலுடன் சேராமல்,neutral ஆகவே இருந்து எல்லோருடனும் ,சம நட்பு பேணி,நடிகராகவே தொடர்ந்திருக்கலாம்.



    எதிர் அணியில் நின்ற போதும் ,தில்லானா மோகனாம்பாள் படத்தில் "நலந்தானா "பாட்டிலும், தெய்வ மகன் படத்தில் தெய்வமே பாட்டில் "அண்ணா"என்று தலை வணங்கி அஞ்சலி செலுத்தி ,தன் குருவை, நடிகர்திலகம் சிறப்பித்தார்.



    இன்று அண்ணாவின் பிறந்த நாள். அவரை வாஞ்சையுடன் நினைவு கூர்வதில் பெருமையடைகிறோம்.
    Last edited by Gopal.s; 15th September 2014 at 03:14 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  16. Thanks joe thanked for this post
    Likes joe liked this post
  17. #1590
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வினோத்,



    எங்களிடமிருந்து கற்றாலும்(நீங்களே சொன்ன படி),குரூக்களை மிஞ்சிய சிஷ்யராகி (எண்ணிக்கையில் மட்டுமே.தரத்தை குறிப்பிடவில்லை) ,10000 பதிவுகள் இட்டதற்கு வாழ்த்துக்கள். இந்த உழைப்பையும், விசுவாசத்தையும் , இன்னும் கொஞ்சம் படிப்பதற்கோ,வேலையிலோ காட்டியிருந்தால் ,உங்களுக்கும் ,குடும்பத்துக்கும்,சமூகத்திற்கும் நற்பயன் தந்திருக்குமே,என்று பெருமூச்சு விடாமல் இருக்க முடியவில்லை. இருந்தாலும் நண்பராக இருப்பதால் ,வருந்தாமல் இருக்கவும் முடியவில்லை.வாழ்த்துக்கள்.



    லோகநாதன் சார், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.



    நம் ஆட்கள் ,இன்னும் உழைக்க கற்க வேண்டும்.இவர்களே ,இவ்வளவு பதிவிட்டால் (பொம்மை படங்கள் தான் என்றாலும்),நம் நடிகர்திலகத்தை பற்றி பதிவிட லட்சம் விஷயங்கள் உள்ளனவே? வாசு,கார்த்திக்,கிருஷ்ணா,ராகவேந்தர் இவர்களுக்கு மீண்டும் விண்ணப்பம்.வாருங்கள்.பங்களிப்பை தொடருங்கள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •