Page 326 of 400 FirstFirst ... 226276316324325326327328336376 ... LastLast
Results 3,251 to 3,260 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #3251
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan - Definition of Style - 3

    கடலில் படகு அல்லது கப்பல் கவிழ்ந்து அதிலிருந்து உயிர் பிழைத்து தனியே கரையில் அலைகளால் ஒதுக்கித் தள்ளப்படும் மனிதன் Castaway எனப்படுவான் என அகராதி சொல்கிறது. அவ்வாறு வாழ்க்கை அலைகளால் ஒதுக்கித்தள்ளப்படும் மனிதனின் மனநிலையில் ஒரு Castaway யாக உணர்கிறான். குறிப்பாக இலக்கின்றி சுற்றித் திரிந்தவன் வாழ்க்கையில் திடீரென தென்றலாய் மலர்ந்த ஒரு காதல் உணர்வு அவனுள் ஒரு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்த அதைப் பற்றிக் கொண்டு கரையேற முயலும் போது அந்தக் காதல் எனும் படகு கவிழ்ந்து அவனை மூழ்கடித்து கரையில் தனியே தள்ளி விடுவதாக உணரும் போது அதைப் பாடல் மூலம் வெளிப்படுத்துகிறான். ஆனால் அந்தப் படகு கவிழவில்லை, அவன் காதலும் தோல்வியடையவில்லை, ஆனால் அவன் ஒதுக்கித் தள்ளப்படுவதற்கு அவனையும் அறியாமல் அவனே காரணமாயிருக்கிறான் என்பதாக அவன் காதலி உணர்ந்து அவனை சற்றே ஒதுக்கி வைக்கிறாள்.

    இந்த மாதிரியான சூழலில் வரும் இப்பாடலில் புதுமையான காட்சியமைப்பில் நடிகர் திலகம் மிகவும் அனாயாசமாக நடித்திருப்பது அவருடைய ஆளுமையைக் காட்டுகிறது. பாடலின் துவக்கத்தில் அவர் கைககளைக் கட்டும் போதே அந்தப் பாத்திரத்தின் மனோநிலையை பிரதிபலிக்கும் ஸ்டைல் துவங்குகிறது. தன்மேல் தவறில்லை என ஆணித்தரமாக நம்பும் அந்தக் கதாபாத்திரம் இதனை உறுதிப்படுத்தும் விதமாகத் தன் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த வரிகளில் கவியரசரின் புலமையும் பாடகர் திலகத்தின் குரல் வளமையும் இளையராஜாவின் படைப்பில் மிளிர்கின்றன. இவர்கள் கூட்டணியில் மேலும் பல பாடல்கள் வந்திருக்கக் கூடாதா என்கிற ஏக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.

    இவர்கள் அனைவரது கூட்டணியில் உருவான அந்த அற்புதமான படைப்பைத் தூக்கி நிறுத்துவது நடிகர் திலகத்தின் ஸ்டைல், வழக்கம் போல.

    இரண்டு கைகளையும் பாக்கெட்டில் வைத்து நடப்பதை முன்பொரு பாட்டில் பார்த்தோம். அதே ஸ்டைல் இப்பாடலில் வேறு விதமாக வெளிப்படுவதைப் பாருங்கள். கைகள் முழுதும் பாக்கெட்டில் நுழையாமல் விளிம்பைப் பிடித்துக் கொண்டு மிக இயல்பாக தன் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக நிற்பதைப் பாருங்கள்.

    நிற்பதில் கூட ஆயிரம் அர்த்தங்களைத் தரும் உலகப் பெரும் நடிகர், நடிகர் திலகம் மட்டுமே என்பதை நிரூபிக்கும் தோற்றம்

    பாடல் முழுதும் நின்று கொண்டே அந்தப் பாத்திரத்தின் உணர்வுகளைப் பிரதிபலித்திருக்கும் விதம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் இவரை மிஞ்ச யாராலும் முடியாது என்பதற்கு அத்தாட்சி.

    இப்பாத்திரத்தின் உடல் மொழியில் குறிப்பிடத்தக்க விஷயம் தோள்களைச் சிலுப்பும் முறையை நடிகர் திலகம் பிரயோகிக்கவில்லை என்பதே. பாத்திரத்தின் தன்மையறியாமல் பணக்காரன் ஏழை என யாராக இருந்தாலும் தோளை சிலுப்பிக் கொள்ளும் நடிகர்கள் இதைப் பார்க்க வேண்டும். இப்பாடலில் பல இடங்களில் இந்த உடல் மொழிக்கு வாய்ப்புள்ளது. வேறு யாராவது நடித்திருந்தால் பாடலில் பல முறை இரு தோள்களையும் சிலுப்பியிருப்பார்கள். ஆனால் ஒரு கடற்கரையோர கிராமத்து இளைஞனின் illiterate தன்மையைக் கருத்தில் கொண்டு இப்பாடலில் நடிகர் திலகம் மிகவும் எச்சரிக்கையாக அவ்வுணர்வைத் தவிர்த்திருப்பார்.

    இவையெல்லாம் அவர் ஒருவர் மட்டுமே கொண்டுவரக் கூடிய ஸ்டைல்..

    ஸ்டைல் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் நடிகர் திலகம்..



    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3252
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முரளி, கோபால்
    நீலவானம் ... உங்கள் இருவரின் கருத்துரைகளும் அட்டகாசம். .. சூப்பர்... இதெல்லாம் சம்ப்ரதாயமான வார்த்தைகள்..
    அதற்கு மேலே ஏதேனும் இருந்தால்.. அது தங்களுக்குடைய எழுத்துக்களுக்குப் பொருந்தும்..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. Likes Subramaniam Ramajayam liked this post
  5. #3253
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    செந்தில்
    தங்களுடைய தொடர் மிகவும் அருமையாக உள்ளது. ஒவ்வொரு பதிவும் வாசு சாரின் தொடரான நடிகர் திலகத்தின் கதாநாயகியர் தொடரை நினைவூட்டினாலும் தங்கள் பாணியில் அதை அணுகும் முறை பாராட்டத்தக்கது.
    ஒரு வேண்டுகோள்... நடிகர் திலகத்துடன் அவர்கள் பங்கேற்றதை மட்டுமே பகிர்ந்து கொள்ள இயலுமா..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. Thanks eehaiupehazij thanked for this post
  7. #3254
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    செந்தில்
    தங்களுடைய தொடர் மிகவும் அருமையாக உள்ளது. ஒவ்வொரு பதிவும் வாசு சாரின் தொடரான நடிகர் திலகத்தின் கதாநாயகியர் தொடரை நினைவூட்டினாலும் தங்கள் பாணியில் அதை அணுகும் முறை பாராட்டத்தக்கது.
    ஒரு வேண்டுகோள்... நடிகர் திலகத்துடன் அவர்கள் பங்கேற்றதை மட்டுமே பகிர்ந்து கொள்ள இயலுமா..
    செந்தில்,



    நானும் அதையே சொல்ல நினைத்தேன். சுவையான விருந்தை சாப்பிடும் போது ஒரு கல் அக படும் உணர்வு ஏற்பாடுகிறது. நீங்கள் நடிகர்திலகம் பதிவுடன் பிற நடிகர்களை இணைத்து பதிவிடும் போது .



    சமீப காலத்தில், மனதுக்கு பிடித்ததை ,இசைந்ததை இந்த திரியில் பதிவிடுவதை விடுத்து,புகழ்ச்சிக்கு மயங்குதல், வேண்டாத விஷயங்களில் நட்பு என்ற பசப்புரையில் இணைதல் என்ற போக்கு தென் பட ஆரம்பித்துள்ளது.
    Last edited by Murali Srinivas; 16th December 2014 at 12:07 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. Thanks eehaiupehazij thanked for this post
  9. #3255
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கலை வேந்தன்,



    நீங்கள் எழுதிய பதிவுகளில் ,மற்றோரை புகழும் போது , தொழில் முறை எழுத்தர்களாக இல்லாதவர்களின் எழுதும் திறமையை சிலாகித்துள்ளீர்கள் . மிக்க நன்றி. ஆனால் நீங்கள் அந்த பதிவை எழுதிய விதம்,ஆழ்ந்து படிக்கும் போது ,என் மனதில் ஒரு சந்தேகம் எழுகிறது.நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இருக்கலாமோ என்று.



    உங்களின் பழைய எழுதும் முறைக்கும், தற்போதைய எழுத்துக்களுக்கும் நிறைய வித்யாசம் தெரிகிறது.(நீரும் நெருப்பும் அளவு). என்னை பொறுத்த வரை தொழில் தர்மத்தில் நமது தனி பட்ட மன மாச்சர்யங்கள்,விருப்பு-வெறுப்பு தவிர்த்து உண்மைகள் மட்டுமே அணுக பட வேண்டும். இவற்றை தாங்கள் கடை பிடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.(என் சந்தேகம் உண்மையாக இருக்கும் பட்சம்).மற்ற படி வாசு போல,கிருஷ்ணா போல நீங்கள் நடிகர்திலகம் சம்பத்த பட்ட விஷயங்களையும் ,இங்கும்,மதுர கானத்திலும் அளிக்கலாமே?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #3256
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    nt rises back to view his flamboyant flora !

    நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!


    கதாநாயகரின் கதாநாயகியர்

    ஆவாரம்பூ மலர்மாலை 17 மஞ்சுளா

    மரத்தில் பூத்துக் குலுங்கும் மயில்கொன்றை போலவே செடியில் மலர்ந்து மனதை ரம்மியமாக்கும் மருத்துவ குணங்கள் நிரம்பப் பெற்ற மஞ்சள் மலரான ஆவாரம்பூவே மஞ்சுளா அவர்கள் சாந்தி நிலையம் திரைக்காவியத்தில் கண்ணாடி அணிந்து சிரித்துக் கொண்டே நடிப்பில் சமாளித்த சிறுமி ரிக்ஷாக்காரனில் கவர்ச்சிப் பதுமையான கதாநாயகியாக ஏற்றமடைந்து நடிகர்திலகத்துடன் நடிக்கத் தொடங்கிய பின்னரே நடிப்பில் மெருகு கூடிவந்தது. டாக்டர் சிவா, மன்னவன் வந்தானடி உத்தமன் அவன்தான் மனிதன் எங்கள் தங்க ராஜா நடிகர்திலகத்திற்கு பெருமை சேர்த்தார். நன்றிகள் !

    The debut film song sequence for Manjula from GG starrer Shanthi Nilayam!(Thanks giving song)



    The Signature song for Manjula from Dr Sivaa!



    The Significant song sequences with NT from Engal Thanga Raja!! Fast paced ...





    From Avanthaan Manithan with NT : showing some sort of maturity in her acting and expressions!

    Last edited by sivajisenthil; 11th December 2014 at 12:49 PM.

  11. Likes sivaa, Russellmai, kalnayak liked this post
  12. #3257
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    nt rises back to view his flamboyant flora !

    நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!


    கதாநாயகரின் கதாநாயகியர்

    மகிழம்பூ மலர்மாலை 18 ஜி வரலக்ஷ்மி

    நான் பெற்ற செல்வம் படத்தில் இளமைத்துடிப்புடன் நடிகர்திலகத்துடன் பூவாமர்மும் பூத்ததே..என்று ஆடிப்பாடி நம் மனங்களில் மகிழ்ச்சி அலைகளைமுகிழ வைத்த மகிழம்பூவே ஜி வரலக்ஷ்மி அவர்கள் பின் ஹரிச்சந்திரா திரைக்காவியத்தில் இதயங்களை பிழிந்த நடிப்பை நடிகர்திலகத்துடன் வழங்கியவருக்கு
    வணக்கங்கள் !!

    Signature song with NT



    From Harichandra with NT



    Last edited by sivajisenthil; 11th December 2014 at 06:33 PM.

  13. Likes sivaa, KCSHEKAR, Russellmai, kalnayak liked this post
  14. #3258
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like

  15. Likes sivaa, KCSHEKAR, Russellmai, eehaiupehazij liked this post
  16. #3259
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    காகா ராதாக்ருஷ்ணன் நடிகர்திலகத்துடன் ! Thanks SSS for this invaluable uploading of an indelible photo !!

  17. Thanks sss thanked for this post
  18. #3260
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    nt rises back to view his flamboyant flora !

    நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!


    கதாநாயகரின் கதாநாயகியர்

    முல்லைப்பூ மலர்மாலை 19 S. வரலக்ஷ்மி

    சிரிக்கும்போது முல்லை மலர்க்கட்டு வரிசையை நினைவு படுத்துபவர் நடிகையும் சிறந்த பாடகியுமான வரலட்சுமி. வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜசோழன் தங்கசுரங்கம் மற்றும் தாய் திரைப்படங்கள் நடிகர்திலகத்துக்குப் பெருமை சேர்த்திட்ட காவியங்கள். பணமா பாசமா, பூவா தலையா படங்களிலும் தனித் திறமை காட்டினார். வளமான குரலால் நடிகர்திலகம் படங்களில் மறக்க முடியாத பாடல்களையும் தந்திட்ட முல்லைமலர் வரலட்சுமிக்கு நன்றிகள்

    Signature song in Kandhan Karunai with NT



    Significant song in Raja Raja Chozhan with NT!



    Thanks giving song sequence in VPKB with NT!

    Last edited by sivajisenthil; 11th December 2014 at 09:25 PM.

  19. Likes sivaa, KCSHEKAR, Russellmai, kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •